உயிர் கோர்த்து வாழ வா

This entry is part 8 of 28 in the series உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா – 11

கணேஷின் மேல் மனம் சாய்ந்தாலும் அதை பற்றி அடுத்த கட்டத்திற்கு யோசிக்கவே பயந்தாள் பாவை. ஏதோ ஒன்று மனதை அடைத்த மாதிரி இருந்தது. அதனாலே தான் வேறு யாரையாவது பார்க்கலாம் என்று நினைத்தாள்.

ஆனால் கணேஷ் புகுந்த கொண்ட மனது வேறு யாரையும் பற்றி யோசிக்க கூட விடவில்லை. எப்போதும் பலரை சைட் அடித்து விளையாட்டாக பேச தான் செய்தாள். ஆனால் முன்பு போல் அதை ஒரு ஜாலி மன நிலையில் செய்ய வரவில்லை. முன்பு யாராவது அழகாக இருப்பதாக தோன்றினால், இவன் நமக்கு சரியா வருவானா என்ற எண்ணம் வரும்? யோசித்து பார்ப்பாள். ஆனால் இப்போது வேறு ஒருவனை தன் வாழ்வில் சரியாக வருவானா என்று யோசிக்க கூட மனம் வரவில்லை அவளுக்கு.

அவள் மனம் கணேஷிலே நின்று விட்டது. ஏன், எப்படி, எப்போது நடந்தது என்று கேட்டால் பாவைக்கு தெரியாது. ஆனால் அவனை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு வேறு யாரையும் பற்றி அவளால் சிந்திக்க கூட முடியவில்லை.

அச்சோ, அந்த கோல் கப்பா கிட்ட போய் லவ்வுறேனு சொன்னா என்னை வவ்னு கடிச்சுடுவாறே! தெய்வமே எத்தனை ஆபர் கொடுத்தேன் உனக்கு இப்படி எல்லாத்தையும் ரீஜெக்ட் பண்ணி என்னை இப்படி கவுத்திட்டியே!

நான் அப்படி என்ன ஆசைப்பட்டேன்? சின்னதா ஒரு லவ் மேரேஜ்! அவ்ளோ தானே!! ஆனா நீ கோர்த்து விட்டு இருக்கே பாரு ஒரு ஆளு, அவர் நினைக்கிறது பேசுறது எதுவுமே எனக்கு ஒழுங்கா புரியாது! அவர் கிட்ட நான் என்னத்தை பேசி…. லவ் பண்ணி…. புலம்பி தள்ளினாள் பாவை.

கிளினிக்கில் ஓய்வு நேரத்தில் அமர்ந்து புலம்பி கொண்டிருந்தவளை தூரத்தில் இருந்து பார்த்த அருண், எப்போதும் ஓய்வு நேரத்தில் சுடோகு விளையாடுவாள் பாவை. அதை பத்தி தான் தனியா புலம்புகிறாள் என்று நினைத்து,

“யூ கேன் டு பாவை. நல்லா யோசி, யூ கேன் கிராக் இட்” என்று உற்சாகப்படுத்தினான்.

“ஆமா ஆமா டெபனட்லி ஹீ வில் கிராக் மை ஹெட்!” என்று மேலும் புலம்பினாள். மனதுக்குள் கோல் கப்பா எப்படி உங்க கிட்ட வந்து என் மனசை சொல்லுவேன்! மறுகினாள் பாவை.

இரண்டு வாரம் சென்றிருக்க, இப்போதெல்லாம் கணேஷும் படியை தான் பயன் படுத்துகிறான். நாளில் ஒரு முறையாவது பாவையை பார்த்து விடுவான் கணேஷ். ஆனாலும் அந்த காலை வேளையில் அவளை பார்த்தால் அவனுக்கு ஒரு தனி உற்சாகம். அதை கொஞ்சம் கூட முகத்தில் காட்டிவிட மாட்டான்.

ஆனால் பாவை மட்டும் சிரித்த முகமாக அவனுக்கு விஷ் பண்ண வேண்டும். அவன் தான் சரியாக கவனிப்பது இல்லயே என்று அவள் கொஞ்சம் அசால்ட்டாக விஷ் செய்தால் ஒரு நிமிடம் நின்று அவள் முகம் பார்ப்பான்.

அசடு வழிந்து மறுபடி விஷ் செய்வாள். அவன் முகத்தில் என்ன இருக்கிறது என்று புரியாமல் குழம்பி கிடக்கிறாள் அவள்.

அன்று ஒரு எமெர்ஜென்சி ஆப்ரேஷன். ஹெல்மெட் போடாமல் பைக்கில் அதி வேகம் சென்ற ஒருவனுக்கு பலத்த அடி. கை கால் மட்டுமில்லாமல், முகம் தாடை என்று எல்லா பாகமும் பலத்த அடி வாங்கி இருக்க, டெண்டல் சர்ஜனும் தேவைப்பட நவீன் வந்து இருந்தான். கணேஷுக்கு தெரிந்தவன் தான்.

நரம்பு சம்பந்தமான ஒப்பீனியன் கேட்க விஜயும் இருந்தான் அன்று. அதிகாலையில் நடந்த சர்ஜரி என்பதால் அவர்கள் காலையில் பாவை வேலைக்கு வரும் நேரம் தான் கிளம்பி கொண்டு இருந்தார்கள்.

அனைவரும் பார்க்கிங்கில் நின்றிருந்தார்கள். விஜய், இவர்களை கவனிக்காமல் செல்லும் பாவையை அழைத்தான். அருகில் நவீன் இருப்பதால் பாவை என்று குரல் கொடுத்தான்.

விஜயயை கண்டதும் மலர்ந்த முகத்துடன் வந்தாள் பாவை.

“குட் மார்னிங் அண்ணா!”

“குட் மார்னிங் சார்!”

நவீன் யார் என்று தெரியாததால் தலையை லேசாக அசைத்து அவனை பார்த்து சிரித்தாள் பாவை.

“குட் மார்னிங் சிஸ்டர். அதிதி நீ கொடுத்த டால் கீ செய்யின் காட்டி டெய்லி ஒரு தடவையாவது உன்னை கேட்கிறா. வீட்டுக்கு வாம்மா. சுனிதாவும் உன்கிட்ட பேசுறேன்னு சொல்லி இருக்கா!” என்றான்.

“கண்டிப்பா அண்ணா” என்றவளிடம் நவீனை அறிமுகப்படுத்தலாம் என்று எண்ணி அவன் பக்கம் கணேஷ் பார்க்க,

நவீன் அவளை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான். நவீனுக்கு பெண் பார்த்து கொண்டிருக்கிறார்கள். பார்த்தவுடனேயே அவனுக்கு பாவையை மிகவும் பிடித்தது. அவன் கற்பனை செய்து வைத்திருந்த பெண்ணை போல் அவள் இருக்க, அவளிடம் பேச பரபரத்தது மனது. விஜய்யை அண்ணன் என்று வேறு சொல்லியதால் கொஞ்சம் அடக்கி வாசித்தான்.

அதுவரை புன்னகை முகமாக விஜய் பாவையிடம் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்த கணேஷ், கடு கடு வென்று ஆனான்.

யாரையும் யாரும் தெரிஞ்சுக்க வேண்டாம் என்று நினைத்தவன், அழுத்தமான குரலில், “யூ கேன் கோ பாவை! உங்களுக்கு பேஷண்ட் வர டைம் ஆச்சே!” எனவும்,

ஏன் இப்படி உறுமுறார் காலையிலே? என்ன ஆச்சு இந்த மனுஷனுக்கு என்று நினைத்தாலும் “எஸ் ஸார்! வரேன் அண்ணா” என்று சொல்லிவிட்டு மரியாதைக்காக நவீனிடம் தலையசைத்து விட்டு சென்றாள்.

பாவையை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தாலும், கணேஷின் குணம் தெரிந்தவன், கொஞ்சம் யோசித்தான். பிறகு வந்து அவளை பார்த்து நேராகவே கேட்டு விடுவோம் என்று நினைத்துக் கொண்டு அவனும் விடைபெற்றான்.

“நல்லா தானே டா இருந்தே! இப்போ எதுக்கு டா இவ்ளோ கோபமா இருக்கு உன் மூஞ்சி! அந்த பிள்ளை பாவம் ஒன்னும் புரியாம முழிச்சிட்டு போகுது!” என்று குறைபட்டான் விஜய்.

“வெட்டி அரட்டை அடிக்க அவளுக்கு பிடிக்கும். விட்டா நாள் பூரா அவ பேசிக்கிட்டே இருப்பா! உனக்கு வேலை இல்லயா? நேரத்திற்கு நீ கிளம்பு” என்றான்.

“டேய்! ஒரு பத்து நிமிசத்தில என்ன டா ஆக போகுது? நீ ஒரு மார்க்கமா தான் டா இருக்கே! சரி நீ எப்போ போய் கீர்த்தியை பார்க்க போறே? அந்த பொண்ணு வெய்ட் பண்ணுது டா!”

நண்பனின் மரியாதைக்காக போக வேண்டும் என்று தெரிந்தவன், “ஓக்கே நாளைக்கு சாட்டர்டே தானே, ஈவினிங் போய் பார்க்கிறேன். நீ அந்த பொண்ணு நம்பர் கொடு” என்றான் பெரிய மனது பண்ணி.

ரிசல்ட் முன்பே என்னவாக இருக்கும் என்று தெரியும் அதுவும் இப்போது இன்னும் நிச்சயமாக தெரியும் என்பதால் வேறு ஒன்றும் சொல்லாமல், ஓக்கே டா, பை! என்று கிளம்பினான் விஜய்.

அவன் கிளம்பியதும், பாவை மேல் தப்பு இல்லை என்றாலும் ஒருத்தன் இப்படி பார்க்கிறான் அது கூட தெரியலை அவளுக்கு என்று கரித்துக் கொட்டியபடி நடந்தான் கணேஷ்.

சனிக்கிழமை மாலை, எக்ஸ்பிரஸ் அவன்யூவில் சுத்திக் கொண்டிருந்தார்கள் ராஜியும் பாவையும். அந்த புட் கோர்ட்டில் நன்றாக மொக்கி விட்டு, விண்டோ ஷாப்பிங் செய்துக் கொண்டும், சுத்தி வரும் ஜோடிகளை கமெண்ட் அடித்து பொழுதை போக்கி கொண்டிருந்தார்கள்.

சுற்றி வந்து கொண்டிருக்கும் போது சட்டென்று பாவையின் கண்கள் கூர்மை பெற்றது. கணேஷ் போலவே இருக்கே என்று உன்னிப்பாக பார்த்தாள். கூட ஒரு பெண். கணேஷ் தான் என்று உறுதியானதும் பாவை என்ன மாதிரி உணர்கிறாள் என்று அவளால் சொல்ல முடியவில்லை.

இது நாள் வரை அவனுக்கு கல்யாணம் ஆகவில்லை என்று தெரியுமே தவிர, ஏன் என்று தெரியாது. ஐம்புவுக்கும் தெரியாது. அவள் மனது அவனை நினைக்கிறது என்று தெரிந்தாலும், குழப்பத்தில் அதை பற்றி பெரிதாக யோசிக்காமல் தான் இருந்தாள் பாவை.

ஆனால் இன்று அவனை வேறொரு பெண்ணுடன் பார்த்த பின், அவள் நெஞ்சை கவ்வும் ஏமாற்றம் அவன் மேல் அவள் எவவளவு உறுதியான அன்பை வைத்து இருந்து இருக்கிறாள் என்று அவளுக்கு புரிய வைத்தது. விளையாட்டகவே இருந்ததால் தன் மனதை முழுதாக அவள் ஆராய வில்லை. இன்று சூழ்நிலை அவளுக்கு அதை உறுத்தியது.

பேசிக்கொண்டிருந்தவள் அமைதியாகி விட,

“என்னடி ஆச்சு?” என்று கேட்ட படி பக்கவாட்டில் திரும்பி பாவையை பார்த்தவள் கண் கலங்கி நின்றிருந்தவளை பார்த்து அதிர்ச்சி ஆனாள்.

“ஹே! என்ன அழுற? ஏன்?” என்று அவளை உலுக்க, கணேஷின் புறம் கை காட்டினாள் பாவை.

அவனும் அந்த பெண்ணும் அங்கிருக்கும் ஒரு கடிகார கடையில் நுழைந்து கொண்டிருந்தனர்.

“அட இன்னைக்கு சார் நீ சொல்ற மாதிரி சுண்ணாம்பு சுவர் மாதிரியே இருக்கார்! ஆனா அதுக்கு உனக்கு ஏன் கண்ணு வேர்க்குது? ஒரு வேளை ஓவர் பளிச் இங்க வரை கண்ணை கூசிரிச்சா?” என்று ஹாப் வெயிட் ஷர்டும் ப்ளூ ஜீன்ஸும் அணித்திருந்தவனை ஓட்டினாள் ராஜி.

“ஹேய் நான் அவரை என்ன வேணா சொல்லுவேன், நீ சொல்லக் கூடாது!” என்று அவளை போலவே தன் மனதை ராஜியிடம் சொன்னாள் பாவை.

ஒரு முழு நிமிடம் அமைதியாக இருந்தாள் ராஜி. பாவை சொன்னது புரியவே சற்று நேரம் ஆனது. புரிந்த பின் கோபமாக “அடி வாங்கிடுவ பாவை, விளையாடாத! எல்லாத்திலையும் மாதிரி இதிலையும் உன் சேட்டையை காட்டுனே, கொன்றுவேன் ராஸ்கல்!” என்றாள்.

“நான் அழுதுருக்கேனு நீ சொல்லி தான் எனக்கு தெரியுமே! கொஞ்ச முன்னாடி வரை கூட நான் அவர் விஷயத்தில சீரியசா இருக்கேனு எனக்கு தெரியாது டி. ஆனா அவர் கூட இன்னொரு பொண்ணை பார்த்த அப்புறம் எனக்கு வந்த ஏமாற்றம், இது வரைக்கும் எதுக்குமே நான் பீல் பண்ணது இல்லை டி!”

“இப்போ கூட எனக்கு இல்லயா அவருங்கிற ஏமாற்றம், அய்யோ அந்த பொண்ணை லவ் பண்றாரோ, இல்லை அவர் பியான்சியோ அப்படிங்கிற பயம் எல்லாம் தாங்கிக்க முடியாத அளவு , ரொம்ப என் கட்டுப்பாட்டை மீறினதா இருக்கு டி! என்னால அவரை விட்டுக் கொடுக்க முடியாது டி” என்று கண்ணில் இருந்து கண்ணீர் வழிய சொன்ன தோழியை புதிதாக பார்த்தாள் ராஜி.

ஐந்து வருடமாக தெரியும் பாவையை ராஜிக்கு. அவ்வளவு சுலபத்தில் அழ மாட்டாள். இப்படி அழுகிறாளே என்று வருத்தமாக இருந்தது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *