உயிர் கோர்த்து வாழ வா

This entry is part 5 of 28 in the series உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா

உயிர் கோர்த்து வாழ வா – 8

ஒரு பெய்ஜ் கலர் ஷார்ட்ஸ், ஸ்கை ப்ளூ கலர் டி ஷர்ட் என படு காஷுவலாக நின்றவனை கண் எடுக்காமல் பார்த்தாள் பாவை. அவனை கண்டு பலமாக துடித்தது அவள் இதயம்.

இந்த மனுஷனை யாரு இவ்ளோ அழகா இருக்க சொன்னா? கடவுளே கண்டிப்பா இந்த சுண்ணாம்பு சுவரில் முட்டி முட்டி என் தலை ரத்தகளரி ஆகணும்னு ஆசைப்படுறியா? வேணாம் தெய்வமே! உனக்கு நூறு தேங்காய் உடைக்கிறேன் என்னை காப்பாத்தேன்!! சீரியசாக கடவுளிடம் டீல் பேசிக் கொண்டிருந்தாள் பாவை!

“ஹாப்பி பர்த்டே ராஜி!” விஷ் பண்ணியவன் இருவரின் உடையையும் கை காட்டி, “உனக்கு மட்டும் தானே பர்த் டே?” என்றான் வேண்டுமென்றே நக்கலாக.

பாவையின் தொடையில் கிள்ளியவள், வேகமாக அவளிடம் உன் ஜொள்ளு வடியிற வாயை மூடுடிடி என்று பல்லை கடித்தாள்.

பின் அவனிடம், தேங்க் யூ ஸார்! ஹி ஹி சும்மா சார். ரொம்ப நாள் ஆசை, சேம் ட்ரெஸ்! கிடைச்சுது வாங்கிட்டோம்! பெஸ்ட் பிரண்ட்ஸ் சார்! என்றாள் சிரித்துக் கொண்டே ராஜி.

அதற்குள் சுதாரித்த பாவை, நல்ல பிள்ளை போல் அவனிடம் இருந்து பார்வையை அகற்றி கொண்டு அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

“நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம் சார்! ப்ளீஸ் ஜாயின் அஸ் சார்!” என்றாள் ராஜி ஒரு ஹோஸ்ட்டாக.

“நோ நோ! நான் இங்கே ஒரு பிரண்டை மீட் பண்ண வந்தேன், ஐ காட் டு கோ! யூ கைஸ் கேரி ஆன்” என்று மறுத்தான் கணேஷ்.

அடப்பாவி என்றது மனசாட்சி. வீட்டில், நிலை கொள்ளாமல் இருந்தவன் அவர்கள் என்ஜாய் செய்வார்கள் , நீ போய் பார் என்று குரலை என்ன செய்வது என்று புரியாமல் கிளம்பி வந்தவன் பேசும் பேச்சை பாரேன் என்று வாயை பிளந்தது அது.

“அட்லீஸ்ட் ஒரு ஜூஸ் ஸார்” என்று ராஜி கெஞ்சுவது போல் சொல்லவும், ஓக்கே என்றவாறு அருணுக்கு அருகில் பாவையின் எதிரில் அமர்ந்தான் கணேஷ்.

நேராய் அவன் அமர்ந்து இருந்ததால் வேறு வழியில்லாமல் “ஹாய் சார்!” என்றாள் பாவை. அப்போதும் அவன் கண்களை அவளால் முழுமையாக சந்திக்க முடியவில்லை. அரைகுறையாக பார்த்து சொல்லிவிட்டு குனிந்து விட்டாள்.

அவள் முகத்தையே பார்த்திருந்தவனுக்கு, அவள் தன்னை ஒழுங்காக பார்க்கவில்லை, அவள் கண்கள் உடனே தாழ்ந்து விட்டது என்றதும் சுறுசுறுவென கோபம் வந்தது. (வேலை மெனக்கெட்டு உனக்காக தான் வந்து இருக்கான், நீ என்ன மா இப்படி பண்றே!)

அந்த கோபத்தை அப்படியே அவளிடம் காட்டினான். “என்ன பாவை, யாரு பர்த்டே வந்தாலும் இப்படி தான் சேர்ந்து கொண்டாடிக்கிறதா? புது ட்ரெஸ் அண்ட் பீஸ்ட்( feast). ஆர்கனைஸ் வேற பண்ணி இருக்கே. ட்ரீட் மிஸ் ஆய்டாம பார்த்துக்கவா என்று சிரித்துக் கொண்டே அவளை மட்டம் தட்டினான்.

அனைவரும் ஜாலியாக எடுத்துக் கொண்டு சிரித்தார்கள்.

கொழுப்பை பாரேன் இவருக்கு! என்னை சாப்பாட்டுக்கு அலையிறவனு சொல்றார் என்று கோவம் வர, அவனை திட்ட முடியாததால் ஆத்திரம் அடங்காமல், நிமிர்ந்து நன்றாக அவனை பார்த்து முறைத்தாள். என்ன வேணா பண்ணிக்கட்டும். எனக்கு பயம் இல்லை. சீனியர்னா என்ன வேணா பேசுவாரா என்று கொதித்தாள் உள்ளுக்குள்.

அவள் நன்றாக அவனை பார்த்து முறைக்கவும், அவனும் அவள் முகத்தை நன்றாக பார்த்தான். பிரீ ஹேரில் , முகத்தில் லேசான ஒப்பனையில் மிளிர்ந்த முகத்தை ரசித்தான் கணேஷ். லிப் க்ளாஸில் பளபளத்த இதழை கண்டவன் தன் இதழை நாவால் ஈரப்படுத்திக்கொண்டான். (பார்த்துக்க ராஜா! இதுக்கு தானே அவளை நக்கல் அடிச்சே) அவளின் கோபம் அவனுக்கு குளு குளு வென்றது. புது ரத்தம் பாய்ந்தது போல் உற்சாகமானான். இவளிடம் கிடைக்கும் இந்த மனநிலை தான் கணேஷை பாவையை தேட சொல்கிறது.

அவளை பேச வைக்க, “சொல்லு பாவை!” என்றான்.

மீண்டும் அனைவரும் சிரிக்கவும்,

தோழிக்காக ராஜி “இதெல்லாம் என்ன ஸார் ட்ரீட்? அவ பர்த் டேக்கு எப்போதும் பெரிய ட்ரீட் கொடுப்பா சார்” என்றாள்.

“ஓ! ரியலி? எனக்கு இன்வைட் உண்டா பாவை? நானும் அந்த பெரிய ட்ரீட்னு என்னனு பார்க்கணுமே” என்றான்.

“அதுக்கு இன்னும் நிறைய நாள் இருக்கு ஸார்!” என்றாள் விட்டேத்தியாக!

“பரவாயில்லை! ஒன் திங்க், அவள் தட்டில் இருந்த சிக்கன், பிஷ் எல்லாம் காட்டி நான் இதெல்லாம் சாப்பிட மாட்டேன். ப்யூர் வெஜ். டோன்ட் பர்கெட்” என்றான்.

“ஓ! நான் ப்யூர் நான்- வெஜ் ஸார்!” என்றாள் மூக்கை சுருக்கியபடி.

மனதிற்குள் அச்சோ, வெஜ்ஜா, நம்மளால ஒரு நாள் கூட சாப்பிட முடியாதே! எப்படி செட் ஆகும் என்று நினைத்து பின், ஆமா மேடம் நீங்க எப்போ சரி சொல்லுவீங்கனு தான் இந்த பானி பூரி காத்துக்கிட்டு இருக்கார்! போடி போக்கத்தவளே என்று தன்னையே திட்டிக் கொண்டாள்.

அவளின் கோபத்தோடு கூடிய பாவனையை பார்த்து ஹாஹா என்று சத்தமாக சிரித்தான் கணேஷ். அதே நேரம் அவனுக்கு அழைப்பு வர, அதே சிரிப்புடன் அட்டெண்ட் செய்தான் அந்த காலை.

அந்த பக்கம் இருந்த விஜய், “எவ்ளோ நாள் ஆச்சு டா நீ இப்படி சிரிச்சு! எங்க டா இருக்க? கீர்த்தியோடவா? என்றான் ஆர்வமாக.

“இல்லை, இங்க அருண் அண்ட் டீம் கூட” என்று ஹோட்டல் பேர் சொல்ல, அது அவன் வீட்டருகே என்பதால்,

“அங்கேயே இரு நான் வரேன்” என்றான் விஜய்.

அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட, நசிகா கிளம்பினாள். அவளை விடுவதாக சொல்லி ராஜி தன் தந்தைக்கு அழைக்கும் முன், அருண் நாம வேணா போய் விடலாமா? அப்புறம் உன்னை உங்க வீட்டுல ட்ராப் பண்றேன் என்றான்.

ஜம்பு உடனே ஓக்கே நான் பாவையை ட்ராப் பண்றேன் என சொல்ல, ராஜியும் பாவையும் நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டார்கள். ராஜி தன் தந்தையிடம் சொல்லி விட்டு அவர்களுடன் சென்றாள்.

அவள் சென்றபின் இவர்கள் மூவரும் நின்று பேசிக்கொண்டு இருந்தார்கள். ஜம்புவிற்கு அழைப்பு வர. அவன் போனை எடுத்துக் கொண்டு ஓரமாக சென்றான்.

தனியாக கணேஷுடன் நின்ற பாவைக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவனை பார்க்கவும் முடியாமல், பேசவும் முடியாமல் தடுமாறினாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் கணேஷ். அவள் தடுமாற்றம் தெரிய இவன் உற்சாகமானான். அவளுடன் வம்பு வளர்க்க அவனுக்கு விருப்பம் வந்தது.

“நான் ஸ்டாப்பா பேசுவேனு ஜம்பு சொல்லுவான்! இப்போ ஏன் அமைதியா இருக்க? சே சம்திங்” என்றான் அவளையே பார்த்தபடி கணேஷ். ஏனோ அவன் மனம் அமைதியாகவும் உற்சாகமாகவும் இருந்தது. அது அவனுக்கு பிடித்தது.

இவர் ஏன் ஒரு மாதிரியா பார்க்கிறார்? அவளால் அவன் பார்வையை புரிந்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் சஜகமாகவும் இருக்க முடியவில்லை. அதோடு தனியாக நிற்கும் தைரியத்தில்,

உங்க கிட்ட நான் பேச மாட்டேன் சார்! நீங்க என்னை ரொம்ப கிண்டல் பண்ணிட்டீங்க என்றாள் சலுகையாக.

“ஹாஹா, ஐ வாஸ் ஜஸ்ட் கிட்டிங்!” என்றான் சமாளிப்பாக.

“யாரு நீங்க? போங்காட்டம் ஆடாதீங்க ஸார்! உங்களை எனக்கு நல்லா தெரியும், ஏதோ கோபம் உங்களுக்கு அதான் என்னை கடிக்கிறீங்க! இன்னைக்கு மட்டுமில்லை எப்போதும். போங்க சார்” என்று முகத்தை தூக்கியவளை பார்த்து மறுபடியும் அடக்கமாட்டாமல் சிரித்தான் கணேஷ்.

அவன் சிரிப்பதை பார்த்து முறைத்தாள் பாவை. அதில் இன்னும் சிரித்தவன், அவளிடம் கொஞ்சம் நெருங்கி சென்று, குனிந்து காதுக்குள்

“என்னை உனக்கு நல்லா தெரியுமா? என்ன தெரியும்?” என்றான் குழைந்த குரலில்.

அவன் மூச்சுக்காற்று மேல் பட சிலிர்த்து அடங்கினாள். குரலில் இருந்த மாற்றத்தில் திடுக்கிட்டு அவனை பார்த்தாள் பாவை. அவள் பார்த்தவுடன் அவள் கண்ணோடு கண் கலக்க விட்டான் கணேஷ்.

இருக்கும் இடம், எதுவும் ஞாபகம் வரவில்லை கணேஷுக்கு. பாவை மட்டுமே அவன் கருத்தை நிறைத்து இருந்தாள்.

அந்த கண்ணில் என்ன உணர்வு என்று புரியாவிட்டாலும் அவளால் அவனிடம் இருந்து மீள முடியாமல் நின்றாள்.

இவர்கள் நிற்கும் கோலத்தை ஆச்சர்யமாக பார்த்தபடி வந்தான் விஜய். அந்த பொண்ணுகிட்ட இவ்ளோ க்ளோஸா நிக்கிறான்! கணேஷ் தானா அது என்று ஒரு நிமிடம் சந்தேகம் வந்து விட்டது விஜய்க்கு.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *