உயிர் கோர்த்து வாழ வா
உயிர் கோர்த்து வாழ வா – 9
“கணேஷ்!” தூரத்தில் இருந்தே அழைத்தான் விஜய்.
நண்பனை பற்றி அறிந்தவன் அவனை சங்கடப்படுத்த விரும்பாமல் குரல் கொடுத்தான். எதிலிருந்தோ விடு பெற்றவன் போல பட்டென்று விலகி நின்றான் கணேஷ். அப்போது தான் சுற்றுப்புறம் நினைவுக்கு வந்தது.
வாட் தி ஹெல் ஐயம் டுயிங்? இரண்டு கைகளாலும் முகத்தை தடவி தலையை பிடித்தவன், தன்னை கொஞ்சம் சமாளித்துக் கொண்டு,
“ஹாய் டா!” என்றான் விஜயிடம்.
அதே அழைப்பில், பாவையும் கசமுசவென சத்தம் போட்ட மனதையும் மூளையையும் ஒரு நிலைக்கு கொண்டு வந்து இருந்தாள்.
அவர்கள் அருகில் வந்த விஜய், பாவையை பார்த்து ஓ! வாட்ச் பொண்ணா என்றான்.
சார்! என் பேர் பாவை! பூம்பாவை. எவ்ளோ அழகான பேர் வைச்சு இருக்கார் எங்க அப்பா! நீங்க ஏன் சார் இப்படி ஒரு பட்டபேர் வைக்கிறீங்க என்று படப்படத்தாள்.
பட்டாசு பேச்சு தானே பாவை ஸ்பெஷல். புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் கணேஷ்.
ஷப்பா! ஒரு வார்த்தை சொன்னதுக்கு இவ்ளோ பேசுறியே மா!! ஈசி ஈசி…. உன் பேரை வைச்சு கூப்பிடலாம்னு பார்த்தா, பூவுக்கும் உனக்கும் சம்பந்தமே இல்லயே மா! பேசாம உன்னை பூகம்பம்னு கூப்பிடவா, ரொம்ப பொருத்தமா இருக்கும்!
நான் சொல்றது கரெக்ட் தானே டா என்று கணேஷை வேறு கேட்க, கையை கட்டிக் கொண்டு விஜய் பேசுவதை பாவையை பார்த்தபடி கேட்டுக் கொண்டிருந்தவன் தலையை நன்றாக ஆட்டி அவளை இன்னும் வெறுப்பேத்தினான்.
என்ன தான் ஜாலியானவள் என்றாலும் இன்று ஏனோ அவளால் இந்த கிண்டலை ஏற்க முடியவில்லை. ஏற்கனவே கணேஷும் அவளை கிண்டல் செய்ததால் அவர்களை முறைக்க முயன்று தோற்று மெலிதாக என்றாலும் கண் கலங்கி விட்டது பாவைக்கு.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு சட்டென்று அவள் முகம் மாறியது புரிய, விஜய் முன் பெரிதாக ரியாக்ட் பண்ண விரும்பாமல், அவன் கவனத்தை கவராமல் அவள் கையை தொட்டு அழக் கூடாது என்பது போல தலையை மெதுவாக அசைத்து காட்டினான்.
இவனை கவனிப்பதையே வேலையா செய்துக் கொண்டிருந்தவன், போக்கு காட்டவே கவனிக்காதது போல் நின்றான். கணேஷ் செய்த சைகையை பார்த்த விஜய், இவ்ளோ தூரம் வந்திருச்சா என்று நினைத்துக் கொண்டான்.
ஜம்பு வர, பாவை அவனுடன் கிளம்பினாள். அவர்கள் இருவரும் விடைபெற்றுக் கொண்டு செல்வதையே பார்த்து இருந்தான் கணேஷ்.
“என்னடா இப்படி பார்க்கிற அந்த பொண்ணை?” என்ன தான் நினைக்கிறான் என்று தெரிந்துக் கொள்ள கேட்டான் விஜய்.
“அவ கூட இருந்தா நல்லா டைம் பாஸ் ஆகும் டா. கொஞ்சம் டென்ஷன் பண்ணா போது அவளை நல்லா என்டர்டெயின் பண்ணுவா நம்மளை!” என்றான் நண்பனிடம்.
“உனக்கு பிடிச்சு இருக்கா அவளை?” அவன் சொன்ன விதத்தில் அவன் குரலில் இருந்த குழைவில் அவனை கண்டு கொண்டான் விஜய்.
“டேய்! இடியட்! அவ எவ்ளோ சின்ன பொண்ணு தெரியுமா? சிக்ஸ் மன்த் பேக் தான் காலேஜ் முடிச்சு இருக்கா! நம்மளை விட பத்து வயசு சின்ன பொண்ணு.”
“அதெல்லம் ஓக்கே டா! ஆனா நீ வேற யாருக்கிட்டயும் இப்படி பழகினது இல்லை. கொஞ்சம் யோசிச்சு பாரு” எனவும் செம கோவம் வந்து விட்டது கணேஷுக்கு.
“டேய்! அடி வாங்கிடாத என்கிட்ட. நான் ஏதாவது பொண்ணு கிட்ட பழகினாலே வேற அர்த்தம் தானா? நான் அன்னைக்கே சொன்ன மாதிரி ஷி இஸ் வெரி டேலேண்ட்ட் அண்ட் ஹாம்லெஸ். நிறைய பொண்ணுங்க மாதிரி நான் பேசின உடனே வழியலை அவ. நிறைய இம்மெச்சுர் அதனால் அவ கிட்ட கொஞ்சம் வம்பு பண்ண எனக்கு பிடிக்கும். அதனால சின்ன பொண்ணுனு கொஞ்சம் ஜாஸ்தி பேசினேன். இதுக்கு நீ இப்படி ஒரு அர்த்தம் கொண்டு வர” என்று விளாசி தள்ளினான் கணேஷ்.
நாம தான் தப்பா நினைச்சுட்டோமோ என்று குழம்பி போனான் விஜய்.( ரீடெர்சும் தானே) ஆனா இதையெல்லாம் வேறு எந்த பெண்ணிடமும் உணரவில்லை அவன் என்று அவனுக்கு யார் சொல்வது? இப்போதைக்கு வாயை மூடிக் கொள்வோம் என்று அமைதியானான் விஜய்.
கடுகடுவென நின்றிருந்தான் கணேஷ்.
“சரி டா, ஸாரி டா!” என்று கை எடுத்து கும்பிட்டு அவனை மலை இறக்கி, வா கிளம்பலாம் என்கிற போது, பாவையும் ஜம்புவும் திரும்பி வந்தார்கள். “ரொம்ப மழை பாய்!”
ஓ! ஜம்புவின் பைக்கில் போக முடியாது என்று புரிந்துக் கொண்டவன், “என் காரை எடுத்திட்டு போங்க” என்றான்.
“கார்ல கூட போக முடியாது பாய். ஹெவி மழை. கண்டிப்பா ட்ராபிக் மோசம் ஆய்டும். ரொம்ப லேட் ஆக போகுது.” என்றான் ஜம்பு.
“நான் பத்து மணிக்குள்ள ஹாஸ்டல் போகணும் இல்லனா நாளைக்கு தான் போலாம்!” என்றாள் பாவை.
ஓ! யோசனையாக நின்றார்கள். அதற்குள் விஜய், என் வீடு இங்க பக்கத்தில தான். இன்னைக்கு நைட் மூணு பேரும் அங்கேயே ஸ்டே பண்ணிக்கலாமே எனவும் இல்லை…. என்று இழுத்தாள் பாவை.
விஜயை ரொம்ப தெரியாது, அவன் கூப்பிட்டாலும் அவளுக்கு தெரியாதவர்கள் வீட்டுக்கு எப்படி செல்வது என்று சங்கோஜமாக இருந்தது.
கணேஷின் முகம் பார்க்க, கல்லை போல் இறுகி கிடந்தது. இவ்ளோ நேரம் நல்லா தானே இருந்தார். இப்போ என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்கார் என்று யோசிக்கும் போது தான் திரும்பி வந்ததில் இருந்து அவன் இவள் முகம் பார்க்கவே இல்லை என்று உணர்ந்தாள்.
நாம என்ன பண்ணோம். திரும்ப எதுக்கு என் மேல் கோபம் என்று குழம்பி நின்றவளை அழைத்த விஜய், என் வைப் லைன்ல இருக்கா பேசு மா என்று அவனின் செல்லை கொடுத்தான்.
“ஹலோ!” தயக்கத்துடன் பேசினாள் பாவை.
“ஹாய் நான் சுனிதா! கணேஷோட பிரண்ட் தான். எங்க வீட்டில் ஒரு குட்டி பாப்பா கூட இருக்கு. பயப்படாம வாங்க. ரொம்ப யோசிக்காதீங்க. ஓக்கே!” என்று அவளை சம்மதிக்க வைத்தாள்.
என்ன பூ….பூம் போலாமா என்றான் சிரிப்புடன் விஜய்.
கணேஷ் ஒன்றும் பேசாமல் நிற்க, ஒரு வேளை அவன் பிரண்ட் வீட்டிற்கு தான் வருவது பிடிக்கவில்லையோ என்று கவலைப்பட்டாள். அவளின் கவலையான முகத்தை உதாசீனப்படுத்த முடியாமல், எனி ப்ரோப்ளேம்? ஹாஸ்டலுக்கு இன்போர்ம் பண்ணனுமா? என்றான் கணேஷ்.
அவன் பேசியவுடன் வெளிச்சம் வந்தது போல் தெளிவானது அவள் முகம். ஒன்னுமில்லை என்று தலையை ஆட்டினாள் பாவை. நான் வார்டனுக்கு போன் பண்ணி சொல்லிட்டு வரேன் என்று நகர்ந்தாள்.
இதையெல்லாம் பார்த்த விஜய்க்கு ஒரே குஷி. அய்யோ சுனிதா பக்கத்தில் இல்லயே இந்த கெமிஸ்ட்ரியை பார்க்க என்று வருத்தப்பட்டான். அவளிடம் போய் சொல்ல பரபரத்த மனதை கஷ்டப்பட்டு கன்ட்ரோல் செய்துக் கொண்டான்.
லூசு பையன் அவன் மனசுல இருக்கிறது கூட புரியலை என்று கணேஷை திட்டிக் கொண்டான். நிச்சயம் இது காதல் தான் என்று காதல் திருமணம் செய்த விஜய்க்கு புரிந்தது. ஆனால் கணேஷ் சொன்னது போல் கொஞ்சம் சின்ன பெண் என்றும் நினைத்தான்.
அவள் பேசி விட்டு வந்தவுடன் அனைவரும் கிளம்பினார்கள்.
விஜய் வீட்டுக்கு சென்றவுடன், மூன்று வயது அதிதி கணேஷிடம் ஓடி வந்தது.
“வாங்க வாங்க” என்று அழைத்தபடி வந்த சுனிதா, “போன்ல நான் பேசினதை வைச்சு யாரோ வராங்கனு தெரிஞ்சுகிட்டு தூங்கவே இல்ல” என்றாள் விஜயிடம்.
“ஆமா, உங்க ரெண்டு பேர் மூஞ்சியை மட்டும் எவ்ளோ நாள் பார்க்கிறது . போர் அடிச்சு இருக்கும் அத்து குட்டிக்கு” என்றான் அவளை தூக்கி கொஞ்சினான் கணேஷ்.
“அவ்ளோ அக்கறை இருக்கிற மாமா அடிக்கடி வரணும்! நீ பேசாத”
அவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்த பாவைக்கு அவர்கள் நெருக்கம் புரிந்தது.
சரி நம்ம சண்டையை அப்புறம் வைச்சுக்கலாம், இது தான் பூம்பாவை என்று இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தான்.
மாமா ரெப்ரெஷ் பண்ணிட்டு வரேன் என்று அதிதியை இறக்கி விட்டு அவன் ரெஸ்ட் ரூம் போகவும், என்கிட்ட வரியா என்று அதிதியை அழைத்தாள் பாவை.
சுனிதாவிடம் கண்ணை காட்டி உள்ளே அழைத்து சென்ற விஜய், அவங்க ரெண்டு பேரையும் நல்லா கவனி. அப்பறம் சொல்றேன் ஏன்னு என்றான்.
ஜம்புவும் பாவையும் மட்டும் அங்கே அமர்ந்து இருக்க, “ஏண்டா ஜம்பு அவளை லவ் பண்றனா?”
தலையில் அடித்து கொண்டான் விஜய். “அவன் லவ் பண்ணா நான் ஏண்டி செல்லம் உன்கிட்ட ரகசியமா சொல்ல போறேன்! காலேஜ்ல இருந்த மாதிரியே இன்னும் இருக்கே என்று அவள் கன்னத்தில் முத்தம் வைத்தவன், நம்ம கணேஷையும் அந்த பொண்ணையும்.”
“ஹான்! என்ன சொல்ற விஜய்? நிஜமாவா?” கண் கலங்கி விட்டது சுனிதாவுக்கு.
“ஷ்ஷ்…. அமைதி. எல்லாம் அப்புறம் சொல்றேன்! எதையாவது சேஞ்சு சொதப்பிடாதா! நான் ஆல்ரெடி கொஞ்சம் சொதப்பிட்டேன். ஓக்கே.” என்று வெளியே சென்றார்கள்.
இவர்கள் நன்றாக சாப்பிட்டு வந்ததால், வேண்டாம் என்று சொல்லி விட கணேஷ் மட்டும் உண்டான் சுனிதா. எவ்ளோ நாள் ஆச்சு நீ வந்து என்று சிம்பிளாக டக்கென்று ஒரு பொடி தோசை, ஒரு ஆனியன் ஊத்தப்பம் என்று அவனுக்கு பிடித்தது செய்துக் கொடுத்தாள்.
அடிக்கடி பாவையும் பார்வை கணேஷை வட்டமிடுவதை சுனிதா கவனித்தாள். வீட்டில் வெகு இயல்பாக இருக்கும் கணேஷை பாராமல் பார்த்து ரசித்தாள் பாவை.
நம்ம ஆளு பெயருக்கு ஏற்றார் போல், கல்லு பிள்ளையார் போல் இருந்தான். விஜயையும் சுனிதாவையும் பற்றி தெரியதா அவனுக்கு. அதனால் ரொம்ப உஷராக இருந்தான். அதுவே அவர்களுக்கு அவனை காட்டிக் கொடுத்தது. நம்பிக்கையையும் கொடுத்தது. இவன் ஏன் இவ்ளோ கான்ஷியஸா இருக்கான்!
மனதில் ஒன்றும் இல்லை என்றால் இயல்பாக பேசி பழகி இருக்கலாமே!
