உயிர் கோர்த்து வாழ வா
உயிர் கோர்த்து வாழ வா – 17
பேசும் மொழி மறந்து போனது போல் அதிர்ந்து நின்ற பாவையை கண்ட கணேஷ் கொஞ்சம் சுயம் பெற்று, அவள் அருகில் வந்தான்.
“பாவை….” அதட்டலாக அழைத்து பார்த்தான்.
இன்னும் சிலை போலவே நின்றாள் பாவை. அவள் மூளையில் அவன் சொன்னதே திரும்ப திரும்ப ஓடிக்கொண்டிருந்தது. அவன் பேசிய வார்த்தைகளை அவ்வளவு சுலபமாக கடந்து வர முடியவில்லை. அதனால் அவள் கவனம் நிகழ் காலத்துக்கு வரவே இல்லை.
பொறுமை இழந்த கணேஷ் பாவை என்று அவளை உலுக்கினான். அவன் உலுக்கிய உலுக்கில் சுரணை பெற்று அவனை பார்க்கவும், மீண்டும் அவன் பேசியதே நினைவுக்கு வர அழுதாள் பாவை.
அதே நேரம், கீழே கணேஷ் இல்லை என்றதும் தனியா கூட்டிட்டு போய் என்ன சொல்றானோ தெரியலையே என்று வேகமாக இவன் அறைக்கு வந்த விஜய் கண்டது அழும் பாவையை உலுக்கும் கணேஷை தான். பார்த்ததும் பதறியவன் வேகமாக வந்து பாவையை தன் பக்கம் இழுத்தான்.
அப்போது தான் இருவருமே அவனை கவனித்தார்கள்.
விஜயை கண்டதும் முகம் கன்றி விட்டது பாவைக்கு. என்னவென்று கேட்டால் எப்படி சொல்வாள் கணேஷ் பேசியதை. மிகவும் சங்கடமான சூழ்நிலையால் அவனை நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் நின்றாள்.
“நீ எங்கே டா இங்கே?” என்றான் கணேஷ்
அவனுக்கு பதில் சொல்லாமல், பாவையின் மனநிலையை புரிந்துக் கொண்ட விஜய், “இந்த ரூம் தாண்டி இந்த விஷயம் வெளியே போகாது மா! நிஜமா தான் உன்னை தங்கைனு சொன்னேன்” என்றதும் அவளுக்கு இன்னும் அழுகை பொங்கியது.
அவள் ரொம்ப அழுததும் கணேஷுக்கு கோபம் மீண்டும் ஏறியது. “இப்போ எதுக்கு இப்படி பொங்கி பொங்கி அழற? இன்னும் ஹாஸ்பிடல் முழுக்க எனக்கு கொடுமைக்காரன்னு பேர் வாங்கி கொடுக்கவா? நீ என்ன வேணா பண்ணலாம்! ஆனால் நான் கேள்வி கேட்க கூடாது, அப்படித்தானே?” என்றான்.
“கணேஷ், அவ ஒரு தப்பும் பண்ணலை. என்ன பேசினியோ தெரியலை! அதோட போதும் டா! கம் டு யூர் சென்ஸ்” என்றான் காட்டமாக.
“உனக்கு தெரியாது டா புல்லா இவளை பத்தி!”
எனக்கு எல்லாம் தெரியும், நீ பொறுமையா உட்கார்ந்து யோசி! இப்போ ஆத்திரத்தில் உனக்கு ஒண்ணுமே புரியலை. நான் பாவையை கூட்டிட்டு வெளியே போறேன் என்று வேகமாக அவள் கையை பிடித்து அழைத்து சென்றான்.
தலையை குனிந்தவாரு விஜயின் பின் செல்லும் பாவையை பார்த்த கணேஷை கோபம், ஏமாற்றம், ஆதங்கம் என எல்லா உணர்வுகளும் போட்டு படுத்தியது. அவளை மற்ற ஸ்டாப்கள் போல் சாதரணமாக ப்ரண்ட்லியாக நடத்த முடியவில்லையே! அவளின் சின்ன சின்ன செய்கை கூட அளவுக்கு அதிகமாக தன்னை பாதிக்கிறதே என்று யோசிக்க ஆரம்பித்தான் கணேஷ்.
அப்படி யோசிக்கும் போது தான், அவன் அவளிடம் சறுக்கிவிட்டதை உணர்ந்தான். ஓ மை காட்! பாவையை நான் விரும்புறேனா? இல்லைனா இன்னைக்கு யாரோ ஒருத்தனுக்கு ஸ்ட்ரெச் பண்ண போறதை என்னால ஏன் தாங்கிக்க முடியலை! அங்க தானே ஆரம்பம் கோபம்! அவ்ளோ பொஸஸிவ்நெஸ்ஸா அவள் மேல! ஆனா மறுபடியும் நானா? லவ் வா? அதுவும் என்னை விட ரொம்ப சின்ன பொண்ணு மேல?
இதெல்லாம் எனக்கு தேவையில்லாத பிரச்சனை! அவ செய்றதுக்கு எல்லாம் ரியாக்ட் செஞ்சு தான் இப்படி பையத்தியக்காரன் மாதிரி இருக்கேன்! வேண்டாம் கணேஷ் உனக்கு இந்த வேலையே என்று நினைத்தான். அவ ஏதாவது செஞ்சு உனக்கு பேய் பிடிக்க வைச்சுருவா! உனக்கு ஏண்டா இத்தனை வருஷம் இல்லாம இப்போ போய் அதுவும் அந்த கேடி மேல பீலிங் என்று நொந்து போனான்.
காரில் அழைத்து செல்லும் போது அருணை அழைத்து, கணேஷிடம் சொல்லிவிட்டு பாவையை தான் கூட்டி செல்வதாக சொன்னான் விஜய்.
உன் கிட்ட கொஞ்சம் பேசணும் மா, நம்ம வீட்டுக்கு போலாம். சுனிதா இருக்க மாட்டா. டோன்ட் ஒர்ரி. அதிதியை அவங்க அம்மா வீட்டுல விட்டு இருக்கோம் ரெண்டு நாளைக்கு என்றான்.
ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தவன், “ஸாரி மா! என்னால தான் கணேஷ் அவ்ளோ கோபப்பட்டுட்டான். நான் நவீன் பேசினதை சொல்லி இருக்கவே கூடாது” என்றான்.
வரும் போதே தன்னை கொஞ்சம் சமாளித்துக் கொண்டவள், “அது மட்டும் பிரச்சனை இல்லை அண்ணா! அவருக்கு என்னை பிடிக்கவே இல்லை. நான் என்ன செஞ்சாலும் கோபம் தான்” என்றாள் சோகமாக.
“ஹாஹாஹா, அவனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கிறது தான் பிரச்சனையே பூகம்பம். ஆனால் அது அவனுக்கு சரியா புரியலை. நீ சின்ன பொண்ணுனு அதை உன் மேல் இருக்க அக்கறையா மட்டும் நினைக்கிறான்! புரிஞ்சா உன்னை விட்டு விலகிடுவான்” என்றவனை ஆச்சரயமாக பார்த்தாள் பாவை.
“என்ன அண்ணா சொல்றீங்க?” அவனுக்கு அவளை பிடிக்குமா? அவளால் நம்பவே முடியவில்லை.
“நான் சொல்றதுக்கு முன்னாடி, இன்னைக்கு என்ன சொன்னான்னு எனக்கு சொல்ல முடியுமா? ரொம்ப பெர்சனல்னா வேண்டாம். எனக்கு அவன் பேசினது தெரிஞ்சா இன்னும் கொஞ்சம் அவனை புரிஞ்சுக்க முடியும்!” பாவையிடம் அவள் கணேஷை பற்றி என்ன நினைக்கிறாள் என்று நேராக கேட்க தயக்கமாக இருந்தது விஜய்க்கு.
“அது…. நீங்க என்னை தப்பா நினைக்கமாட்டீங்களே? என்று கேட்டவள், சொல்ல வேண்டியதை மட்டும் சொன்னாள். நான் அவரை விரும்புறேன் அண்ணா! ஆனா அவருக்கு என் மேல் கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லை. என்னென்னவோ சொல்லிட்டார்.”
“ம்ம்…. தேங்க்ஸ் மா. என்னை நம்பி உன் மனசை சொன்னதுக்கு. ரொம்ப சந்தோஷம். உங்க ரெண்டு பேருக்கும் இடையே இருக்க இந்த வயசு வித்தியாசம் உனக்கு ஓக்கே வா? நாளைக்கு வீட்டுல ஏதாவது சொன்னாங்கனு மாறிட மாட்டியே? அவனை இன்னொரு பொண்ணு ஏமாத்த நானே விட மாட்டேன்! நீ அவன் மேல இருக்க அன்பில் ஷுயர்னா சொல்லு நான் ஹெல்ப் பண்றேன் கொஞ்சம் டௌட் இருந்தாலும் அவனை விட்ரு மா! அவன் பாவம்.”
“நான் கொஞ்சம் ஜாலி டைப் தான். ஆனால் அதுக்காக, இன்னொருத்தர் வாழ்க்கையில் விளையாடுற அளவு மோசமான பொண்ணு இல்லை அண்ணா! நவீன்க்கு நான் எந்த ஹோப்பும் கொடுக்கலை அண்ணா. என்னை நம்புங்க” என்றாள்.
“அது எனக்கும் தெரியும் மா! நவீனும் நீ ஒத்துக்கலை சொல்லி தான் பேச சொன்னான். ஆனா கணேஷ் விஷயத்தில் உனக்கு செகண்ட் தாட்டோ, சின்ன டௌட்டோ இருந்தா கூட வேண்டாம். அதை தான் சொல்றேன். உண்மையில் நீ சின்ன பொண்ணு தான், இன்னைக்கு அவன் மேல் வெறும் ஈர்ப்பா கூட இருக்கலாம். அழகா இருக்கான், டலேண்ட் வேற! ஆனால் லைப்னு வரும் போது, பொறுமை, அட்ஜஸ்ட்மெண்ட் நிறைய வேணும். அதனால தான் திரும்ப திரும்ப அதையே கேட்கிறேன்.”
“இந்த விஷயத்தில் நீங்க என்னை நம்பி தான் ஆகணும் அண்ணா! வேணா ராஜி கிட்ட கேளுங்க. நான் எவ்வளவு சின்சியரா அவரை விரும்புறேன்னு! அவருக்கு லவ் பெயிலரா அண்ணா? அவங்க நினைப்பில் தான் கல்யாணம் பண்ணிக்காம இருக்காங்களா?” அவன் இன்னொரு பொண்ணை விரும்பி இருக்கிறான் என்பதை அவன் மேல் காதல் கொண்ட மனது ஏற்க முடியாமல் தவித்தது.
“அதை லவ்னே நான் சொல்ல மாட்டேன். அவளை அவன் நினைக்கிறதில்லை இப்போ! ஆனா ஏமாத்துட்டோம் அப்படிங்கிற விஷயம் தான் அவனை கொல்லுது. உன்கிட்ட அதை பத்தி பேச தான் அழைச்சிட்டு வந்தேன். அப்போ தான் உன்னால அவனை இன்னும் புரிஞ்சுக்க முடியும்! அவனை உன் லவ் ஏத்துக்க வைக்கிறது எவ்ளோ கஷ்டம்னு தெரியும்! ஸோ நீ அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கலாம்.”
நான், கணேஷ், சுனிதா எல்லாரும் ஒரே செட்! சுனிதா சென்னை தான். நானும் கணேஷும் ஹாஸ்டல். பர்ஸ்ட் இயர்ல குரூப் ஒர்க் ஒன்னு செஞ்ச அப்போ பிரண்ட் ஆகிட்டோம். அப்புறம் கடைசி வரை நாங்க தான். நிறைய நல்ல பிரண்ட்ஸ் இருக்காங்க. ஆனா க்ளோஸ் னா நாங்க தான். நந்தினியும் எங்க செட் தான். ஆனா செகண்ட் இயர்ல வேற காலேஜ்ல இருந்து வந்து சேர்ந்தா. அப்போ அவ சொன்ன காரணம் எல்லாம் பொய்னு எங்களுக்கு அப்புறமா தான் தெரிஞ்சுது. அங்கேயும் ஏதோ பையனை ஏமாத்தி, அவன் தற்கொலை பண்ணிக்க ட்ரை பண்ணதால அங்க இருக்க முடியாம தான் வேற காலேஜ் வந்து இருக்கா.
ரொம்ப ரொம்ப அழகா இருப்பா நந்தினி. சத்தமா கூட பேசமாட்டா. பார்க்கும் போதே ரொம்ப சாப்ட் நேச்சர்னு சொல்ற மாதிரி தான் இருப்பா! ஆனா என்ன தான் செய்வாளோ தெரியாது, அவ ஒரு பையனை டார்கெட் பண்ணிட்டா, அந்த பையனே வந்து இவ கிட்ட ப்ரோபோஸ் பண்ற மாதிரி செஞ்சுடுவா! பலே கில்லாடி. எங்களுக்கு இதெல்லாம் அந்த வயசிலே புரியலை. அப்புறம் தான் தெரிஞ்சுது புரிஞ்சுது.
எனக்கும் அவளுக்கும் ஏனோ ஆரம்பித்தில் இருந்தே ஆகாது. நான் கொஞ்சம் எல்லாரையும் கிண்டல் அடிச்சு பேசுவேன்! அது எல்லாமே ஹாம்லெஸ் தான். ஆனா அதையே அவளால் தங்கிக்க முடியாது. உடனே கண்ணை கசக்கிருவா. உடனே எல்லாரும் என்னை வில்லன் போல் பார்ப்பாங்க. என்னை பிடிக்காதவங்க அவளுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. அப்படி கொஞ்சம் ஆள் சேர்த்து வைச்சுக்குவா. அவளுக்கு எப்போதும் அவ தான் எங்கேயும் முதன்மையா இருக்கணும்னு ஆசை. ஓ! நந்தினியா! தெரியுமே செகண்ட் இயர்! சூப்பர் பொண்ணு! எப்படி பேமஸ் ஆக இருக்கணும்!
கணேஷ் தான் கிளாஸ் டாப்பர் எப்போதும். அவன் எல்லார்கிட்டயும் ஓரளவிற்கு பழகுவான். ப்ரொபஸ்ஸோர் மத்தியில் நல்ல பேர் அவனுக்கு. நந்தினி ஏனோ அவன் மேல் கண் வைச்சுட்டா. அந்த வருஷ கடைசியில் எக்ஸாம்ஸ் நடந்தது அப்போ நந்தினியா போய் கணேஷ் கிட்ட பேசினா.
“ஹாய், உங்களுக்கு வைவா முடிஞ்சுதா?”
“ஹாய், யா இப்போ தான் ஜஸ்ட்.”
“என்ன கேட்டாங்க? எனக்கு ரொம்ப பயமா இருக்கு! பாருங்களேன் என் கை எப்படி ஜில்லனு இருக்குனு” என்று அவனை தொட்டு காட்டினாள்.
“இவ்ளோ ஏன் பேனிக் ஆகுறே! ஈசி யா! தெரிஞ்சதை தைரியமா சொல்லு!” என்றான் கணேஷ்.
“நான் உள்ளே போற வரை எனக்கு கொஞ்சம் ரிவிசின் மாதிரி சொல்றீங்களா ப்ளீஸ்?”
ஷுயர்! கம் என்று அவள் அருகில் அமர்ந்து அவளுக்கு முக்கியமான் பாயிண்ட்ஸ் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான் கணேஷ். பின் அதுவே வழக்கம் போல் ஆனது. எல்லா பரிட்சைக்கும் பின் அடுத்த வருஷம் ஆரம்பித்த பின்னும் அவள் கணேஷுடனே இருக்க ஆரம்பித்தாள். வேறு வழியில்லாமல் விஜயும் சுனிதாவும் அவளுடன் பழகுவார்கள். அவ்வப்போது விஜயுடன் முட்டிக் கொள்ளும் நந்தினிக்கு.
ஒரு நாள் கணேஷை லைப்ரரிக்கு அழைத்து சென்று விட்டாள் நந்தினி.
“விஜய், எனக்கு நந்தினியை பிடிக்கவே இல்லை டா. அவ கணேஷ் கிட்ட மட்டும் வேற மாதிரி கொஞ்சி கொஞ்சி ரொம்ப இன்னொசென்ட மாதிரி பேசுறா டா. கேட்கவே எரிச்சலா இருக்கு!” என்றாள் சுனிதா.
“எனக்கும் தான் தெரியுது! அவ சரியில்லைன்னு. ஆனா நான் சொன்னா கணேஷ், நீ கிண்டல் பண்றதால தான் அவ அப்படி உன்கிட்ட ஒரு மாதிரி இருக்கா. ஷி இஸ் குட் அப்படிங்கிறான். இது ப்ரண்டஷிப்போட நின்னுட்டா ஓக்கே” என்றான் விஜய் கவலையாக.
அவளை அப்போது அந்த வயதில், ஜஸ்ட் செல்பிஷ், நாட் குட் கேரக்டர் என்று மட்டுமே நினைத்தார்கள் இருவரும் ஆனால் அவள் மிகவும் மோசமான நடத்தை கொண்டவள் என்று அவர்கள் யாருமே அறியவில்லை. அந்த அளவிற்கு தன் குழந்தை தனமான முகத்தை வைத்து அனைவரையும் ஏமாற்றினாள் நந்தினி. யாராவது அவளை கண்டு கொண்டு சொன்னால் கூட, சே! அந்த பொண்ணா அப்படி எல்லாம் செய்யாது! எவ்ளோ நல்ல பொண்ணு தெரியுமா? என்பார்கள். அது ஒரு சிலருக்கு இருக்கும் முக ராசி.
மூன்றாவது வருடத்தின் பாதியில், அவர்கள் வகுப்பு மாணவன் ஒருவனின் தந்தை இறந்துவிட்டார். அவன் ஸ்காலர்ஷிப்பில் படிக்கும் மாணவன். அவன் வீட்டில் அவ்வளவு வசதி இல்லை. நண்பர்கள் எல்லாம் ஓரளவிற்கு பணம் புரட்டி கொடுக்கும் போது, நந்தினி தன் இரண்டு தங்க வளையலையும், செயினையும் அடமானம் வைத்ததாக கூறி பணம் கொடுத்தாள்.
விஜய் கூட ஆச்சரயப்பட்டான்! இவள் அவ்ளோ நல்லவாளா என்று! ஆனால் அப்போது அவர்கள் யோசிக்காத ஒரு விஷயம், ஒரு கல்லூரி மாணவிக்கு அதுவும் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவிக்கு அடமானம் வைக்கும் கடை எல்லாம் எப்படி தெரியும்? அங்கே போவதற்கு வேலை என்ன என்று.
பணம் கொடுத்தது மட்டுமில்லாமல் அவர்கள் வீட்டில் காரியம் முடிந்து இருந்த வேலை எல்லாம் செய்தாள் நந்தினி. மற்ற பெண்கள் எல்லாம் சக மாணவனுக்கு என்று வந்தார்கள் அவ்வளவு தான். இவள் ஏன் இவ்ளோ செய்கிறாள் என்று அந்த மாணவனுக்கே ஆச்சர்யம் தான். அவனுடன் அவள் பேசியதே இல்லை.
அவள் அடமானம் வைத்ததாக சொல்லி விட்டு அவள் பழகும் இன்னொரு பையனிடம் இருந்து வாங்கி கணேஷிடம் நல்ல பெயர் வாங்கவே பணம் கொடுத்தாள். என்ன செய்தும் கணேஷை அவளிடம் இழுக்க முடியவில்லை அவளால். அவன் கண்களை மட்டுமே பார்த்து பழகினான். இவள் அவனை தொட்டு பேசினாலும் அவன் செய்ய மாட்டான். கல்லூரியில் ஓரளவிற்கு பிரபலமாக இருக்கும் அவனை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்பது அவளுக்கு ஒரு கிறுக்கு. புகழ் ஆசை அதிகம் அவளுக்கு.
பணம் கொடுத்த பையன் கூட கேட்டான், அவன் என்ன அவ்ளோ ஒர்த்தா? அவனுக்காக போய் யாரோ வீட்டில் எல்லாம் பெருக்கிறே?
இப்போதைக்கு எனக்கு தெரிஞ்சு அவன் சரியான டேலண்ட். சீனியர் ஸ்டுடெண்ஸ், ப்ரொபெஸோர் எல்லார்க்கும் அவனை பிடிக்குது. நம்மளை சுத்தி யாரு பெஸ்ட்டோ அவங்களுக்கு நான் முக்கியமான ஆளா இருக்கணும். அப்போ தான் என்னை எல்லாரும் உயர்வா பார்ப்பாங்க! அதுக்கு நான் என்ன வேணா செய்வேன்!
