இரகசிய மோக கனாவில்

This entry is part 13 of 14 in the series இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

அத்தியாயம் 35

“அரசே! என்னதிது? பூவிழி என்ன தான் உங்கள் மகளாக இங்கு வந்திருந்தாலும் என்னுடைய  சாம்ராஜ்யத்தின் மகாராணி. அவளுக்கு இவ்வாறு உங்கள் அரண்மனையில் மதிப்பளிப்பீர்கள் என்று தெரிந்திருந்தால், அவளை இங்கு அனுப்பியிருக்கவே மாட்டேன். வீட்டில் உள்ளவர்களை மே சமமாக நடத்தத் தெரியாத தாங்கள் எவ்வாறு ஒரு நாட்டையே சமமாக நிர்வகிப்பீர்கள்?!” என்று ரணவீரன் மதிவாணனைப் பார்த்து கேட்க, தேனிசையை முறைத்துக் கொண்டே ரணவீரனின் கையைப் பிடித்து கொண்ட மதிவாணன்,

“மன்னித்துவிடுங்கள் அரசே! இது ஏதோ எதிர்பாராத விதமாக நடந்த நிகழ்வு. இதை பெரிது படுத்தி விடாதீர். இனி இது போல் நிகழாது பார்த்துக் கொள்கிறேன்.” என்று கூற, மதிவாணனின் கையில் இருந்து தன் கையை உருவிக் கொண்ட ரணவீரன்,

“என்ன இன்னொருமுறை நிகழாது பார்த்துக் கொள்வீரா? இம்முறை நடந்ததற்காக தங்கள் மீதும் தங்கள் குடும்பத்தினர் மீதும் பாண்டிய மாமன்னரிடம் குற்றம் பதிவிட முடியும். ஆனால் அதை மயக்கத்தில் இருக்கின்றாளே என் விழி?! அவள் தான் முடிவு செய்ய வேண்டும்.” என்றவன், அங்கு அப்போது தான் வைத்துக் கொண்டிருந்த கருணாகர பாண்டியனைப் பார்த்து,

“ஊருக்கு நல்லது செய்து வாங்கிய நற்பெயரை, உங்களது திருமதியார் ஒரு நிமிடத்தில் குலைத்துவிடுவார். என்றும் அவரவர் இடத்தில் இருந்தால் தான் மதிப்பு. மாமன் வீடே ஆனாலும் அத்திப்பூ தந்தாள் போல் வருகை தர வேண்டும். தங்களுக்கு தொல்லையாக இருக்கிறதென்று இங்கே அனுப்பினீர்கள் என்றால் அது சரியாகுமா? கட்டிய மனைவிக்கு சற்று நேரம் ஒதுக்கி அறிவுரை வழங்குங்கள். இல்லையெனில் சகளை என்றும் பார்க்க மாட்டேன். விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும.” என்று பூங்கொடியின் புறம் கூட திரும்பாது தன் மனைவியைத் தேடிச் சென்றான் ரணவீரன். அங்கு மயக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட பூவிழியாழின் அருகே அமர்ந்து கொண்டவன், அவளது கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டான். 

“விழி! என்ன கோபமாக இருந்தாலும் என்னிடம் கொட்டிவிடு. இந்த மாதிரி நேரத்தில் கோபத்தை உனக்குள் அடக்கிக் கொள்ளாதே. அது உனக்கும் நம் குழந்தைக்கும் ஆகாது.” என்றவன் கூறியதும் அவனது கைக்குள் இருந்த தனது கையை வெடுக்கென்று எடுத்துக் கொண்டவள், அவனைப் பார்க்கப் பிடிக்காது தன் முகத்தை திருப்பிக் கொண்டாள். அவள் முகத்தை பிடித்து மீண்டும் தன்னை நோக்கி திருப்பியவன்,

“என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்? அதற்காக என்னை விட்டு வந்து விடுவாயா? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இங்கு வந்துவிட்டாயே? இது தான் நீ என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையா? அவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறட்டுமே? எத்தனை ஆதாரங்களை காட்டினாலும் உனக்கு என் மீது நம்பிக்கை இருந்திருக்க வேண்டாமா? நான் வரும்வரை காத்திருந்திருக்க வேண்டாமா? மல்லி சொல்லித் தான் நடந்தவை அனைத்தும் எனக்கு தெரிய வந்தது. உன் மீது எத்தவறும் இல்லையென நிரூபித்துவிட்டு வர சற்று தாமதமாகிவிட்டது. மன்னிவிடு கண்ணம்மா!” என்றபடியே அவளது இதழில் முத்தமிட செல்ல, தன் முகத்தை திருப்பிக் கொண்டாள் பூவிழியாழ். 

“இன்னும் உனக்கு என் மீதான கோபம் குறைவில்லையென்றால் எனக்கு எந்த தண்டனை வேண்டுமானாலும் கொடு; ஆனால் அதை நம் வீட்டில் என் அருகில் இருந்து கூடு. இது நம் வீடல்ல. இங்கிருந்தால் நமக்கு மதிப்பும் இல்லை.” என்றவாறே அவளது வயிற்றில் கை வைத்து வருட, அவளது மேனி சிலிர்த்தடங்கியது. 

“மன்னித்து விடு விழி! ஒரு முறையல்ல ஓராயிரம் முறை? லட்சம் முறை கேட்கின்றேன். ஆனால் என்னுடன் வந்துவிடு விழி.” என்றவன் கூற, எழுந்தமர்ந்தவள்,

“மல்லி! மல்லி!” என்று சத்தமிட,

“அதுவரை வெளியே நின்றிருந்த மல்லி வேகமாக உள்ளே ஓடி வந்தாள்.

“இளவரசியாரே!” என்று தன் முன்னே வந்து நின்றிருந்தவளிடம்,

“நாளை காலைல நம்ம அரண்மனைக்கு போகணும். எல்லாத்தையும் எடுத்து வை‌. அப்புறம் இன்னைக்கு நான் என்னோட அம்மா ரூம்ல தான் தூக்கம் போறேன். யாரும் என்னைய டிஸ்டர்ப் பண்ணக்கூடாது.” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர முயன்ற பூவிழியாழை தன் கையில் ஏந்திக் கொண்டான் ரணவீரன். 

“வைத்தியர் உன்னை கவனயாக பார்த்துக்கொள்ள கூறியிருக்கின்றார். நீ நடந்தால் என் பிள்ளைக்கு வலிக்குமே?!”

“அப்போ உங்க புள்ளைக்கு வலிக்கக்கூடாது. அதுக்காக என்னைய உப்பு மூட்டை தூக்கிட்டே திரிவீங்க. அப்படி தானே?! இறங்கி விடுமா என்னைய. இறங்கி விடுன்னு சொல்றேன்ல. இவர் புள்ளி நல்லாருக்கணும்னா நான் நல்லாருக்கணும். அதுக்காக தூக்குவாறாம். ப்ராடு, எரும, கெடா இறக்கிவிடுன்னு சொல்றேன்லலல.. விடுடா தடிமாஆஆஆ.” 

அதற்கு மேல்‌ வந்த வார்த்தைகள் யாவும் ரணவீரனின் முரட்டு இதழ்களுக்கு பலியாகின. அவளது இதழ்களை இறுக்கி அணைத்துக் கொண்டு, இதழ்களில் இருந்த மொத்த தேனையும் உறிஞ்சி எடுத்து விடுபவன் போல் சுவைத்துக் கொண்டிருந்தவனை பலமாக தள்ளியவள், அவனை தூணோடு தூணாக நிற்க வைத்து, அவனின் இருபுறமும் கை ஊன்றி அணைகட்டியவள்,

“இப்ப எதுக்கு இவ்வளோ எமோஷனல் ஆகுறீங்க? எனக்கும் நம்ம பையனுக்கும் எதுவும் ஆகாது. அப்படி ஆகத்தான் விட்டுடுவீங்களா? ஆனா எனக்கு ஒரே ஒரு சந்தேகம்.” என்னவளின் இடையோடு கையிட்டு தன் உயரத்திற்கு தூக்கியவன், அவளது மூக்கோடு மூக்கு உரசியபடியே,

“கேள்..” என்று கூற,

“இப்படி கொஞ்சிட்டு இருந்தீங்கன்னா எங்க கேட்க? கொஞ்சம் தள்ளி நில்லுங்க.” என்று அவனை விட்டு விலகியவளை தூக்கிக்கொண்டு கட்டிலில் அமர்ந்தவன், அவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டான். அவனின் தோள்களை சுற்றி கையிட்டுக் கொண்டவள்,

“நான் உங்களுக்கு கொடுத்த மோதிரம் அந்த வைதேகி கைக்கு எப்படி போச்சு?” என்று முகம் வாட் கேட்டவளின் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தியவன், 

“போர்களத்தின் போது விரலில் ஏற்பட்ட காயத்தினால் அந்த மோதிரத்தை கலட்டி பத்திரமாக வைத்திருந்தேன். சிறிது நாட்களுக்கு முன்பு அம்மோதிரத்தை காணவில்லை. என்னிடம் இருந்து எப்படி எடுத்தார்கள் என்று கூட தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் நான் கவனமாக இருந்திருக்க வேண்டும் தான். ஆனால் எனக்கு இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று முன்பே தெரிந்திருந்தால் மிகவும் பத்திரமாக, என் உயிரை விட மேலாக பாதுகாத்திருப்பேன். அதற்காக என்னை மன்னித்து விடு கண்ணம்மா.” என்றவனின் தோளில் சாய்ந்தவள், கேவிக் கேவி அழுக ஆரம்பித்தாள். 

“நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா? நான்.. இங்க இருக்கேன்னா அதுக்கு காரணமே நீங்க தான். உங்க மேல நான் வைச்சுருக்குற காதல் தான் காரணம். நீங்களே என்னைய வேணாம்னு சொல்றீங்கன்னு சொன்னப்போ நிஜமாவே செத்துடலாம்னு இருந்துச்சு. ஆனா நான் சாகுறதுக்கு முன்னாடி உங்களையும் என்னோட சேர்த்து கூட்டிட்டு போகணும் முடிவுபண்ணியிருந்தேன். அதெப்படி உங்களை சும்மாவிடலாம்ற கோபம் தான் உங்களுக்காக வெயிட் பண்ண வைச்சுது.” என்று கூறி முடித்தவளின் கன்னத்தை வலிக்காமல் கடித்து சுவைத்தவன்,

 “ஆப்பிள் மாதிரி இருக்கின்றன, உன் கன்னங்கள்.” என்று கூற, ரணவீரனின் மார்பு முடிச்சுருளை நீவியவாறே 

“ஓகே ஓகே! அவர் யாரு? ம்ம் ஹஹஹ பாண்டிய மாமன்னர், அவரை பார்த்துட்டீங்களா?” என்று கேட்க,

“அந்த கவலையெல்லாம் உனக்கெதற்கு? என் மகாராணிக்கு என்னைத் தவிர வேறு எந்த நினைப்பும் இருக்கக்கூடாது.” என்றவன், அவளது கழுத்து வளைவை இதழ்களால் கவ்வி சுவைத்தவாறே இன்னும் சற்று கீழிறங்க,

“இப்போ நான் அங்க வந்தா குருமாதா கோபப்படமாட்டாங்களா?”  என்று கேட்டவளிள் இடையை சுற்றி கையிட்டவன், அவளது கன்னத்தோடு கன்னம் உரசி, அவளது‌ நெற்றியோடு நெற்றியை முட்ட வைத்து, நேருக்கு நேராக அவளது விழிகளைப் பார்த்து,

“நீ என் உயிர்; நீயில்லையேல் இந்த ரணவீரனின் வாழ்வில் உயிர்ப்பில்லை. குருமாதாவின் மரியாதை இருக்கின்றது தான். அதற்காக உன்னை விட்டுக்கொடுக்க மாட்டேன். நீ தான் எனக்கு எல்லாம். நீ அங்கு அரண்மனையில் இல்லையென்று தெரிந்ததும், என்னிடம் உயிரே இல்லை. நீ எனக்குள் ஊனாய் உயிராய் நிறைந்துவிட்டாய் கண்ணம்மா.” என்றவனின் முகம் முழுவதும் முத்தமழை பொழிந்தவள்,

“நீங்க பேரரசை பார்க்கப் போனீங்கன்னா? நான் சொல்ற ஐடியாவை அவங்கக்கிட்ட சொல்றீங்களா?” என்று கூற, அவளது தேன் மழையில் நனைந்தவன்,

“இது போல் கூறினார் என்றால் என்னால் எவ்வாறு மீன் இயலும். நீ கூற விழைவதை கூறு.” என்றவனின் காதில்‌ சில அறிவுரைகளை கூறினாள் பூவிழியாழ். அதனை கேட்டவனின் புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்ந்தன. 

“இதெல்லாம் உனக்கு எவ்வாறு தெரியும்?”

“நான் எதிர்காலத்துல இருந்து தானே வந்துருக்கேன். போங்க பாஸ்! நான் சொன்னதை செஞ்சு முடிங்க.” என்றவள் அவனிடமிருந்து விலகி வெளியே செல்ல முயல, 

“எங்கு செல்கிறாய்?” என்றவன் கேட்க,

“சாப்பிடத் தான். பசிக்குதே.” என்றவளை மீண்டும் தன் கையில் ஏந்திக் கொண்டு, சாப்பிடும் அறையை நோக்கிச் சென்றான். அங்கு பெண்கள் அனைவரும் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருக்க, பூவிழியாழை அங்கே அமர வைத்தவன், தன் கையால் அவளுக்கு உணவு பரிமாறியதோடல்லாமல் ஊட்டிவிட்டதைக் கண்ட பூங்கொடிக்கும் தேனிசைக்கும் வயிறெரிந்தன. ரணவீரனின் கையால் வழங்கிய உணவை  சிறுசிட்டென இதழ் குவித்து வாங்கியவளின் இதழ் மீது படிந்து உணவுத்துண்டுகளை எடுத்து தன் வாயில் வைத்து சுவைத்தவனைப் பார்த்தவளின் கன்னங்கள் செம்மை நிறத்தை தத்தெடுத்தன. 

“என்னப்பண்றீங்க எல்லோரும் பார்க்குறாங்க?” என்ற பூவிழியாழின் கன்னத்தை உரசிய காதோர முடிக்கற்றையை காதோரமாக ஒதுக்கிவிட்டவாறே,

“ஏன்? என் மனைவிக்கு தானே சேவைகள் செய்கின்றேன்?! இதில் அவர்கள் பார்க்க என்ன இருக்கின்றது?” என்று கேட்டவன் அவள் வயிறு முட்ட சாப்பிடும் வரை தன் பணியை செவ்வனே செய்து முடித்துவிட்டு, மல்லியின் பொறுப்பில் தன் மனைவியை ஒப்படைத்தவன், பேரரசரை காணச் சென்றான். பேரரசரை பார்த்துவிட்டு திரும்பி வந்தவன், கண்ட காட்சியில் அவனது ரத்தம் உதிரமே போனது. ரணவீரன் உறைந்து போய் நிற்கும் அளவிற்கு அவனது மனைவி என்ன செய்தாளோ? 

 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *