இரகசிய மோக கனாவில்

This entry is part 7 of 14 in the series இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

அத்தியாயம் 29

“போர் வீரன் போல் வேடமிட்டு எங்கு செல்கிறோம் இளவரசியாரே?!”

“என் மாமனைப் பார்க்க தான். அந்த ஆளு போர்னு போயி ரெண்டு வாரம் ஆச்சு. ஒரு போன் இல்ல; மெசேஜ் இல்ல. அவன் மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்கான்? நிஜமாவே போருக்கு தான் போயிருக்கானா? இல்ல சைட்ல ஏதாவது சின்ன வீடு கண்டா வைச்சுருக்கானா? எதுவுமே தெரியமாட்டேங்குது. அதான் ஒரு எட்டு போயி பார்த்ததுட்டு வரலாம்னு போறோம்.”

“என்னது போர்களத்துக்கு போகின்றோமா?  அது என்ன கலையரங்கமா நாம் சென்று பார்வையிட, ரத்த பூமி; சவங்கள் இரைந்து கிடக்கும் நரகம். எங்கு திரும்பிலும் சாவின் ஓலங்களே நிறைந்திருக்கும். அங்கெல்லாம் தாங்கள் செல்லக்கூடாது. மன்னருக்கு தெரிந்தால் என்னை பழியிட்டு விடுவார். சொன்னால் கேளுங்கள் இளவரசியாரே! மன்னர் வரும் வரை அவருக்காக இறைவனிடம் பூஜை செய்து காத்திருங்கள். சொல்வதை கேளுங்கள்.”

“ஹூக்கும்.. என் காது; கேட்காது. சீக்கிரம்.. சீக்கிரம்.. கிளம்பு மல்லி.”

“ஆனால் இளவரசியாரே!”

“இந்த ஆன்னா ஆவன்னா எல்லாம் இங்க வேண்டாம். ஒழுங்கு மரியாதையா எங்கூட வா.” என்ற பூவிழியாழ், மல்லியை போர்க்களத்திற்கு  இழுத்துக் கொண்டு சென்றாள். போர்களத்தில் மறுநாள் நடைபெறப் போகும் போருக்கு முன்னேற்பாடாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர் போர்வீரர்கள்.  அவர்களோடு இவர்களும் நின்று கொள்ள, சட்டென அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அங்கு வீரர்களோடு வீரனாக வரிசையில் நின்றிருந்தவளுக்கு முன்னே என்ன நடக்கின்றது என்பது தெரியாததினால் எம்பி எம்பி குதிக்க ஆரம்பித்தாள். இதனைக் கண்ட மல்லியின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. 

“ஆத்தி! இளவரசியாரே! என்ன செய்கின்றீர்கள்? இவ்வாறு குதித்து அட்டகாசம் செய்தால் நாம் யாரென்று அனைவருக்கும் தெரிந்து விடும். சற்று நேரம் அமைதியாக நில்லுங்கள்.” என்ற மல்லி, பூவிழியாழின் கையைப் பிடித்து அழுத்த, இவள் குதித்த குதியில் இவளை அடையாளம் கண்டு கொண்டான் ரணவீரன். 

“இவள் எதற்காக இங்கு வந்திருக்கின்றாள்? இவளை என்ன செய்வதென்றே தெரியவில்லையே!” என்று ரணவீரன் புலம்ப,

“மாவீரரின் குருமாதா வாழ்க! வாழ்க! மாவீரர்! அசராய சூரர் சூர்ய பிரபாகரன் வாழ்க! வாழ்க!” என்று படைவீரர்கள் கோஷமிட, முதிய வயதில் ஒரு பெண்மணி கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருக்க, அவருக்கு மிக அருகில் ரணவீரனின் ஜாடையில்  இளவயது ஆண்மகன் ஒருவன் நடந்து வந்து கொண்டிருந்தான். அதனைக் கண்ட பூவிழியாழ் தன் அருகே இருந்த மல்லியின் கையைப் பிடித்து இழுத்து அவளது  காதுக்குள்,

“ஆமா யாரிந்த பெரிசு? அதுக்கு எதுக்கு இவ்வளோ பெரிய பில்டப்பு? அந்தம்மாவைப் பார்த்ததும் எதுக்கு இந்த ஸ்ட்ரிக்ட் ஆபிசர் அட்டேண்சன்ல நிக்குறாரு? அந்த வொல்ட் லேடிக்கு பின்னாடி வர்ற அந்த பையன் யாரு?”

“தாங்கள் இவ்வளவு கேள்விகளை ஒரே நேரத்தில் கேட்டால், நான் எவ்வாறு பதில் கூற இயலும்?”

“இப்ப சொல்லப் போறியா? இல்ல அந்த ஹல்க்கிட்டயே போயி கேட்டுட்டு வரவா?” என்றபடி முன்னே செல்ல முயன்ற பூவிழியாழின் கையைப் பிடித்து தடுத்து நிறுத்திய மல்லி,

“சொல்கிறேன்! சொல்கிறேன்! என்னை தூக்கியில் தொங்கவிட்டு வேடிக்கைப் பார்க்க, எவ்வளவு ஆர்வம் தங்களுக்கு? அந்த வயதான பெண்மணி தான் நம் மாவீரரின் குருமாதா ஆவார். அவருக்கு பின்னால் கம்பீரமாக நடந்து வருபவர் தான் மாவீரரின் தமையன் சூர்யபிரபாகரன்.” என்று கூற,

“ஓ! இவங்க ரெண்டு பேரும் அவரோட சொந்தமா?” என்று தன் கண்களை ஆச்சரியமாக விரித்தாள் பூவிழியாழ்.

“ஆம் இளவரசியாரே! மாவீரரையும் அவரது தமயனையும் சிறு வயதில் இருந்தே வளர்த்து வந்தவர். இவர் பேச்சுக்கு மாவீரர் எப்போதும் எதிர்பேச்சு பேசவேமாட்டார்.” என்று மல்லி கூற,

“ஓ! அப்படிப்பட்டவர் எதுக்கு எங்க கல்யாணத்துக்கு வரல?!” என்று தன் நாடியில் ஒற்றை விரலைத் தட்டி யோசிக்க,

“அது வந்து.. அது வந்து.. தங்களது தந்தை மதிவாணனுக்கும் குருமாதாவிற்கும் சிறு சண்டை ஒன்று ஏற்பட்டது. அதனால் தான் தங்களை அவருக்கு பிடிக்காது போய் விட்டது.” என்று கூற,

“அப்படி என்ன சண்டை? குருமாதாவின் மகளான இசைவாணியை மன்னருக்கு நான்காவது மனைவியாக திருமணம் முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாம். திருமணத்தின் போது மன்னரைப் பிடிக்காது இந்நாட்டு தளபதியோடு விவாகம் செய்து கொண்டார். தன்னை அவமானப்படுத்திய குற்றத்திற்காக மதிவாணன் இந்நாட்டின் போர் தொடுக்க எண்ணினார். அப்போது பாண்டிய மாமன்னர் தலையிட்டு இப்பிரச்சனையை தீர்த்து வைத்தார். இப்போதும் பாண்டிய மாமன்னரின் ஆணைக்காக தான் தங்களை இக்குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டுள்ளார். இல்லையெனில் தங்களது தந்தை இக்குடும்பத்திற்கு கொடுத்த தொல்லைகளுக்காக தங்களை என்ன வேண்டுமானாலும் செய்திருப்பார்கள்.” என்று வருத்தத்துடன் கூறிய மல்லியை சிறு யோசனையுடன் பார்த்த பூவிழியாழ்,

“அப்போ அதுனால தான் மைனரு நான் முதமுதலா இங்க வந்தப்போ என்னைய கூட்டிட்டு போகாம அவ்ளோ தூரம் நடக்க வைச்சாரோ? டேய் ராணா! உனக்கு அந்த கிழவி ரொம்ப முக்கியமா போயிடுச்சு இல்ல. உன்னையே நம்பி ஒரு ஜுவனை அனுப்பி விட்டுருக்காங்களே! அது வந்து சேர்ந்துச்சா? இல்லையா? உனக்கு எதுவுமே தோணலைல?! இப்போ என்னமோ எனக்காக உருகி வழியுற மாதிரி சீனாப் போடுற? இரு டா! உன்னை என்னப் பண்ணுறேன்னு பாரு.” என்று முணுமுணுத்தவளை பயத்துடன் பார்த்த மல்லி,

“என்ன செய்யப் போகிறீர்கள் இளவரசியாரே?! விபரீதமாக எதுவும் செய்து விடாதீர்கள்! சற்று நேரம் அமைதி காத்திருங்கள் இளவரசியாரே!” என்று கெஞ்சினாள். 

“ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா? என் பேச்சை நானே கேட்கமாட்டேன். என்னப் பண்ணப் போறேன்னு பொறுத்திருந்து பார்.” என்ற பூவிழியாழ், மெல்ல நடந்து முன்னே செல்ல, 

‘அய்யகோ! முடிந்தது. இன்றோடு எனது வாழ்நாளும் முடிந்து போவிடும் போல?!’ என்று மனதுக்குள் புலம்பியவாறே பூவிழியாழின் பின்னோடு சென்றாள் மல்லி. குருமாதாவிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டிருந்த ரணவீரன், தங்களின் அருகில் வந்து கொண்டிருந்தவளை பார்த்ததும்,

‘இவள் எதற்காக இங்கு வருகிறாள்?’ என்று எண்ணமிட்டு முடிப்பதற்குள்ளாக, குருமாதாவின் அருகே வந்து கொண்டிருந்த விஷம் வாய்ந்த தேளை தன் கையில் வைத்திருந்த ஈட்டியினால் கொன்றாள். அவள் குருமாதாவை நோக்கி ஈட்டியை தூக்கவும் முதலில் பயந்து போன குருமாதா, ஒரு அடி பின்னால் சென்றார். ஆனால் போர் வீரனாக வேடமிட்டிருக்கும் பூவிழியாழ் தன் உயிரை காப்பாற்றியிருக்கின்றாள் என்பதை அறிந்ததும் நிம்மதியுற்றார். 

“மிக்க நன்றி வீரனே! நீ எனது உயிரை காப்பாற்றியுள்ளாய். இதற்காக உனக்கு என்ன உபயம் வேண்டுமானாலும் என்னிடம் கேட்கலாம். கேள்! உனக்கு என்ன வேண்டும்?” என்று குருமாதா கேட்ட மறுநொடி, ரணவீரனை நோக்கி தன் கையை நீட்டினாள் பூவிழியாழ். அவள் இவ்வாறு செய்வாள் என்று சிறிதும் எதிர்பாராது திகைத்துப்போய் நின்றிருந்த ரணவீரனுக்கோ அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை. தனது வெண்புருவங்களை சுருக்கி பூவிழியாழை போர்வீரனாய் நினைத்துப் பார்த்த குருமாதா,

“நீ என்ன சொல்ல வருகிறாய் என்று எனக்கு எதுவும் புரியவில்லையே?!” என்று கேட்க,

 “இவர் எனக்கு சரியாகவே உணவிடவில்லை. அதனால் எனக்கு சுவையான அறுசுவை உணவு வேண்டும்.” என்று குருமாதாவைப் பார்த்து கூறிய பூவிழியாழ், தனக்கு எதிரே நின்றிருந்த ரணவீரனைப் பார்த்து கண்சிமிட்டினாள். 

“ஓ! கவலை வேண்டாம்! யாரங்கே?” என்று அழைக்க, சில போர்வீரர்கள் வந்து நின்றனர். அவர்களை நோக்கி திரும்பிய குருமாதா,

“இன்று இவனுக்கு அறுசுவை உணவு வழங்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்.” என்று கூறியவர், ரணவீரனை நோக்கி திரும்பினார்.

“நான் நம் நாட்டிற்கு திரும்பி வந்த நேரம் நீ மீண்டும் வெற்றி வாகை சூடியிருக்கிறாய். அதனை நினைக்கும் போது என் உள்ளம் பூரிக்கின்றது ரணவீரா!” என்று ரணவீரனை அவர் அணைத்துக் கொள்ள, அவருக்கு பின்புறமாக, நேர் எதிரே முறைத்தப்படி நின்றிருந்த பூவிழியாழைப் பார்த்தான் ரணவீரன்.  

‘இவள் எதற்காக இவ்வளவு உக்கிரமாக நிற்கிறாள்?’ என்று நினைத்த ரணவீரன், பூவிழியாழைப் பார்த்து தன் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்க, அம்மாயக்கண்ணனின் குறும்பில் அவளது இதயத்தின் தாளம் சற்றுத் தப்பித்தான் போனது. 

‘எப்படி பார்க்குறான் பாரு? ஒன்னுமே தெரியாதவன் மாதிரி! தனியா மாட்டுடி! உன் கண்ணுமுழியை நோண்டி கைல கொடுக்குறேன்.’ என்று தன் மனதுக்குள் கருவிக்கொண்டாள் பூவிழியாழ். 

“ரணவீரா! யாரிந்த வீரன்? இவனது பெயர் என்ன? பார்க்க மிகவும் மெலிவாக இருக்கும் எவ்வாறு போர்வீரனாக தேர்ந்தெடுத்தாய்?” என்று குருமாதா தனது கேள்விக்கணைகளை அவனை நோக்கி தொடுக்க, 

‘கிழவி! உன்னைய அந்த தேள்கிட்ட இருந்து காப்பாத்தி இருக்கக் கூடாது. போட்டு தள்ளட்டும்னு விட்டுருக்கணும். உன்னையே போய் காப்பாத்துனேன் பாரு?! என்னைய பிஞ்ச செருப்பாலயே அடிக்கணும்.” என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் வெளியே சிரித்தவாறு நின்றிருந்தாள் பூவிழியாழ்.

“இவன் பெயர் பூவரசன். நம் அரண்மனையில் முக்கிய பாதுகாவலனாக இருக்கின்றான். பார்க்கத் தான் மெலிவாக இருப்பான்; ஆனால் பிற விஷயங்களில் மிகவும்  பொருத்தமானவன்.” என்று பூவிழியாழை மேலிருந்து கீழாக அளவிட்டவாறே கூறியவனைப் பார்த்தவளின் மேனி செவ்வரளியாக மலர்ந்தது. இவை யாவையும் கவனிக்காமல் ரணவீரனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த குருமாதா,

“அப்படியென்றால் இவன் எனக்கும் சிறப்பு பாதுகாவலனாக இருக்கட்டும். இன்றிலிருந்து இவன் என்னுடனேயே இருப்பான்.” என்ற குருமாதா, பூவிழியாழை தன்னுடன் அழைத்துக் கொண்டு தனது குடிலுக்கு சென்றார். அவருடன் சென்றாலும் ரணவீரனைத் திரும்பி திரும்பி பரிதாபமாக பார்த்தபடி பலியாடாக அவருடன் சென்றாள் பூவிழியாழ். குடிலுக்குள் சென்றதும்,

“வீரனே! நீ இக்குடிலுக்கு வெளியே நின்று யாரும் வராமல் பார்த்துக் கொள். என் அனுமதியின்றி யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம்.” என்று உத்தரவிட்டார் குருமாதா. குடிலுக்கு வெளியே இரவின் குளிரில் நின்று கொண்டிருந்த பூவிழியாழ்,

“அடியேய் லூசுக்கிழவி! இப்படி என்னை தனியா கொசுக்கடில நிக்க விட்டுட்டியே! நீயெல்லாம் நல்லாருப்பியா?!” என்று புலம்பியவாறே நின்று கொண்டிருந்தாள். அப்போது உள்ளே சூர்யபிரபாகரனும் குருமாதாவும் பேசிக் கொண்டிருந்த விஷயங்கள் அவளது காதினில் விழுந்தன. 

“குருமாதா! இவ்வளவு நாள் அந்த மதிவாணனின் மகள் இங்கிருப்பதை விரும்பாமல் தானே நாம் வடக்குப் பகுதியில் தனித்திருந்தோம். இப்போது எதற்காக திடீரென இங்கு வந்திருக்கின்றோம்?”

“எல்லையை விரிவுபடுத்தவென ரணவீரன் தொடுத்த போரில் மன்னன் கரிகாலன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு அவரது புதல்வி வைதேகியை நம் ரணவீனனுக்கு மணமுடித்து வைக்க முடிவு செய்துள்ளதாக ஒற்றன் மூலம் அறிந்து கொண்டேன்.  ஆனால் நம் ரணவீரனோ அந்த மாயக்காரி பூவிழியாழின் வலையில் வீழ்ந்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன். எங்கே அவன் இச்சம்பந்தத்தை வேண்டாம் என்று கூறிவிடுவானோ என்ற பயத்தில் தான் உடனே கிளம்பி வந்து விட்டேன். இத்திருமணம் மட்டும் நடக்காது போனால் பாண்டிய மாமன்னரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். மன்னர்கள் பல மனைவிகளுடன் வாழ்வது ஒன்றும் புதிதில்லையே. முதலில் ரணவீரனின் சம்மதத்தை பெற்றுவிட்டால் போதும்; பிறகு அம்மாயக்காரியை ரணவீரனின் மனதில் இருந்து மட்டுமல்ல அவனது நாட்டில் இருந்தே அப்புறப்படுத்துவது எளிதாகிவிடும். இதற்கு உனது துணையும் எனக்கு வேண்டும் பிரபாகரா!” 

“நிச்சயமாக குருமாதா! தங்களை துச்சமாக நினைத்த மதிவாணனுக்கு அதே மரியாதையை திருப்பி செலுத்த வேண்டும். அதற்காக எப்போதும் நான் உங்களுக்கு துணையிருப்பேன்.” என்று பிரபாகரன் குருமாதாவின் திட்டத்திற்கு உறுதியளிக்க, வெளியே போர்வீரனாக நின்று அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த பூவிழியாழின் மனதில் இடி இறங்கியதை போல் இருந்தது.

ரணவீரன் பூவிழியாழை தனித்து தவிக்கவிடுவானா? வைதேகியை தனது மனைவியாக்கிக் கொள்வானா?

 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *