இரகசிய மோக கனாவில்
அத்தியாயம் 7
“இப்ப எதுக்கு என்னைய பட்டுவேட்டி சட்டைல வரச்சொல்லிருக்க? திரும்பவும் எனக்கு பொண்ணு ஏதாவது பார்த்து வைச்சுருக்கியா?”
“ஆமாண்டா! ஒருத்திக் கூடவே இன்னும் குடும்பம் நடத்த ஆரம்பிக்கல. இதுல இன்னோன்னு வேறயா உனக்கு?”
“அய்யா கெப்பாசிட்டி அப்படி. எத்தனை வேணாலும் மெயிண்டெயின் பண்ணிக்கலாம்.” என்று ராக்கி பேசிக் கொண்டிருக்க, அவன் வாங்கிக் கொடுத்த பட்டுப்புடவை கட்டி நகைகளை அணிந்து கொண்டு கோவிலில் குழுவிருக்கும் அம்மனைப் போல் மாடியில் இருந்து இறங்கி வந்த ஆருஷாவைப் பார்த்த ராக்கி, இமைக்க மறந்தான்.
‘எப்பா என்ன அழகு? வெண்ணெயில் குழைத்து செய்த உடலோ? சும்மா வழுவழுன்னு இருக்கு.’ என்றெண்ணியவனை விட்டு சற்று தூரத்தில் தள்ளி நின்று கொண்டாள் ஆருஷா.
“அங்கேயே ஏன்மா நிக்குற? இங்க வா! இப்படி வந்து கிருஷ்ணா பக்கத்துல நில்லு.” என்று மரகதவல்லி கூற, அவளோ வேலுநாச்சியாரை பார்த்தாள். அவளது முகபாவங்களை வைத்து கண்டிபிடித்து விட்டான்.
‘ஓஹோ! இந்த கிழவி தான் என்னைய பத்தி ஏதோ சொல்லிருக்கு. அதான் தூரமா நிக்குறாளா? க்கும் இவ பெரிய உலக அழகி?! இவ வந்து பக்கத்துல நிக்கலன்னு தான் நாங்க இங்க உருண்டு உருண்டு அழுகுறோம் பாரு?!’ என்று தனக்குள் முணுமுணுத்து கொண்டவன், சண்டைக்கு கஞ்சி போட்டது போல் விரைப்பாக நின்று கொண்டான்.
“எப்பா ஃபோட்டோகிராஃபர் இங்க வாப்பா. இவங்க தான் பொண்ணு மாப்ள. இப்போ ஏதோ சூட் சொல்லுவாங்களே?! ஹஹ அவுட்டோர் சூட். அதை கொஞ்சம் நல்லா எடுத்துக் கொடுப்பா. நாளைக்கு காலம் பூரா வைச்சுப் பார்க்கப் போறது. நல்லா நெருக்கமா வைச்சு எடுத்துக் கொடு.” என்று புகைப்படக்கலைஞரிடம் கூறிய மரகதவல்லியை கொலைவெறியோடு பார்த்தான் ராக்கி.
“இதோ ஆரம்பிச்சுட்டான்ல. இன்னைக்கு கிழவி டெட்பாடி கன்ஃபார்ம்” என்று வாயிற்குள் முணுமுணுத்து கொண்டார் வேலுநாச்சியார்.
“அப்படியே ரெண்டு பேரும் பக்கத்துல வாங்க. உங்க வொய்ஃப்பை அணைச்சு நில்லுங்க சார். ” என்று புகைப்படகலைஞர் கூறியதும், தன்னை விட்டு பத்தடி தள்ளி நிற்பவளின் கையைப் பிடித்து இழுத்து, தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்தவன், அவளது இடையோடு கையிட்டு இறுக்கியதும், அவனது கையணைப்பில் இருந்த ஆருஷாவிற்கு மூச்சு நின்று போனது போல் இருந்தது. ராக்கி இறுக்கி அணைத்ததும் நிமிர்ந்து அவனது கண்களை பார்த்தவளின், விழிகளின் கண்ணிமையில் கரைந்து போனான் ராக்கி. இன்னும் இன்னுமென ஆளை உள்ளே இழுக்கும் புதைகுழியென அவளது விழிமொழியில் தொலைந்து போனான் ராக்கி.
“பர்ஃபெக்ட்” என்ற புகைப்படகலைஞரின் குரலில் இருவரும் விலகி நின்றனர்.
“சார் அடுத்ததா நீங்க உங்க வொய்ஃபை அப்படியே கைல ஏந்திட்டு நிக்குற மாதிரி போஸ் வேணும் சார்.” என்று கூறியதும், ஆருஷாவை திரும்பிப் பார்த்தவன் பார்வைக்கு பத்தடி தள்ளி நின்று தரிசனம் கொடுத்தாள் ஆருஷா.
“இவளை?” என்றவன், அவளருகில் சென்று தனது இரு கைகளில் அவளை அல்வா துண்டாக தூக்கியவனைப் பார்த்த வேலுநாச்சியார்,
“பொண்டாட்டிய அழகா பூமாதிரி தூக்குன்னா, டபுள்யூ டபுள்யூல ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்கு தூக்குற மாதிரி தூக்குறான்.” என்றவரை முறைத்துப் பார்த்தான் ராக்கி.
“அய்யய்யோ பயபுள்ள காதுல விழுந்துடுச்சு போலவே, நாச்சி அவன் உன்னைய பிச்சி போடுறதுக்குள்ள இங்கிருந்து ஓடிடு..” என்று முணங்கிக் கொண்டே அங்கிருந்து சென்றார் வேலுநாச்சியார்.
“சார் அப்புறம் இப்படி சுத்தி, இப்படி இழுத்து அணைக்குற மாதிரி போஸ்.” என்று புகைப்படகலைஞர் கூறியதும் போல் செய்ய முனைந்தவனின் போக்கிற்கு வரமறுத்தாள் ஆருஷா. இதனைப் பார்த்த புகைப்படகலைஞர்,
“அப்படியில்லை சார்; இது பாருங்க இப்படி.” என்று ஆருஷாவின் கைபிடிக்க போக, மேல் மாடியிலிருந்து தோட்டத்தில் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேலுநாச்சியார்,
“போச்சு போச்சு! கட்டதுறைக்கு கட்டம் சரியில்ல. எலி ஏன் வாண்டட்டா போயி பொறில சிக்குதுன்னு தெரியலையே?! பாவம். யார் பெத்த பிள்ளையோ? அநியாயமா சாகப் போகுது.” என்று அவர் கூறி முடிக்கும் முன் அந்த புகைப்படகலைஞர் அடி வாங்கிக் கீழே கிடந்தான்.
“யார் பொண்டாட்டி மேல கை வைக்கப் போற? ஷி இஸ் மைன்.” என்றவன் தன்னருகில் இழுந்தவளின் கைப் பிடித்து இழுத்து சுத்தி விட்டவன், சுத்தியவளின் இடையை வளைத்து பிடித்து இறுக்கிக் கொண்டான்.
“வலிக்கிறது அய்யனே!”
“வலிச்சா பொறுத்துக்கோ. அப்புறம் இந்த அய்யனே! அன்பரே! சொல்லிட்டுத் திரிஞ்ச” என்றவன் அவளது இதழ்களை சிறைப்பிடிக்க வர, அவனிடமிருந்து சட்டென விலகினாள். அவளது நினைவில் வேலுநாச்சியார் கூறிய மாயஜாலக்காரன் என்ற வார்த்தை அச்சமயம்
ஞாபகத்தில் வந்து போனது. ராக்கியை தன்னால் இயன்ற மட்டும் தள்ளியவள், அங்கிருந்து ஓட முயற்சித்தவளின் கையைப் பிடித்து வன்மையாக பின்புறமாக மடக்கினான்.
“யார்கிட்ட முகம் திருப்புற? நான் ராக்கி டி. ஊரே என்னைப் பார்த்து நடுங்குது. நீ முகம் திருப்புற. ரெடியா இருந்துக்கோ. இன்னைக்கு நைட் நீ எப்படி முகம் திருப்புறேன்னு பார்க்குறேன்.” என்றவனை மிரளப் பார்த்தாள் ஆருஷா.
இவையனைத்தையும் மேலிருந்து கீழாக பார்த்துக் கொண்டிருந்த வேலுநாச்சியார், “ஊருக்கே பருப்பா இருந்தாலும் வீட்டுக்குத் தொடப்பக்கட்ட தான்டா” என்ற பஞ்சடித்துவிட்டு சென்றார். திடீரென ராக்கிக்கு கைபேசியில் அழைப்பு வரவே, அங்கிருந்து உடனே கிளம்பி சென்று விட்டான். சென்னையின் எல்லையை தாண்டி ஏதேனும் உள்ளே வர வேண்டும் என்றாலோ வெளியே செல்ல வேண்டும் என்றாலோ அது ராக்கிக்கு தெரியாமல் நடக்காது. ஆதலால் தான் அவனைத் தேடி வந்திருந்தான் விராட் மல்கோத்ரா. தொடக்கத்தில் இவனிடம் இருந்து வேலை செய்த ராக்கி, பிறகு தனக்கென சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டான். ஊருக்கு அவன் செய்யும் தொழில் தோல் பதனிடுதல் மற்றும் மீன்களை ஏற்றுமதி செய்வதாகும். உண்மையில் அவன் செய்யும் தொழிலை கட்டுபிடிக்கவோ, அதனை நிரூபிக்கவோ இன்னும் எவரும் பிறக்கவில்லை.
துறைமுகத்திற்குள் நுழைந்ததும் வழக்கமாக தான் எடுக்கும் படகை எடுத்துக் கொண்டு நடுக்கடலில் தனக்கிருந்த கப்பலை நோக்கிச் சென்றான் ராக்கி அலைஸ் ராதாகிருஷ்ணன்.
“வணக்கம்! வணக்கம்! ராக்கி பாய்! எப்படி இருக்கீங்க?”
“எனக்கென்ன ரொம்ப நல்லாருக்கேன். வந்த விஷயத்தை சொன்னா நல்லாருக்கும்.”
“அது அது வந்து ராக்கி பாய்.. நீங்க எடுத்துட்டு வந்துருக்கீங்களே ஒரு பொக்கிஷப் பெட்டி. அது நம்மளுக்கு வேணும். அதுக்கு எவ்ளோ வேணாலும் டீல் பேசிக்கலாம்.”
“எந்த பெட்டியப் பத்தி பேசுறீங்க? ம்ம்.. எனக்கு எதுவும் ஞாபகம் வரமாட்டேங்குதே. ஹேய் சின்னா!”
“மாப்ள!”
“உனக்கு அந்த பெட்டியப் பத்தி எதுவும் தெரியுமா?”
“எனக்கும் தெரியலையே மாப்ள. விராட்ஜி அந்த மாதிரி கனவு கினவு கண்டுருப்பாரோ?!
“யாருக்குத் தெரியும்? பார்த்தீங்களா விராட் ஜி! கடல்லயே இல்லையாம்; இல்லாத ஒன்னை கேட்டா நான் எங்க போறது? அடுத்த தடவை நல்லா விசாரிச்சுட்டு வாங்க.”
“ராக்கி! என்னைய பத்தி உனக்கு எதுவும் தெரியாது. உன்னோட எல்லை இந்த தமிழ்நாடு வரைக்கும் மட்டும் தான். ஆனா எனக்கு ஆல் ஓவர் இந்தியாவுல தெரியாத ஆளே இல்ல.”
“விட்டா, பிரதமருக்கு பக்கத்து வீட்டுக்கார்னு சொல்வீங்க போல?! ஹேய் சின்னா! நாம யாருன்னு சாருக்கு கொஞ்சம் டெமோ காண்பி.” என்று ராக்கி கூறிய மறுநிமிடம் விராட் மல்கோத்ராவின் ஆட்களை சுட்டு, அவர்களை கல்லில் கட்டி கடலில் தூக்கி வீசினர். கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்திருக்க, மல்கோத்ராவின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து அழுத்தினான் ராக்கி.
“யார்கிட்ட வந்து யாரு சீனைப் போடுறது? என்னமோ ஆல் ஓவர் இந்தியால ஆள் இருக்குன்னு சொன்ன?! உனக்கு ஒரு நிமிஷம் டைம் தர்றேன். இந்த என்னோட ஃபோன், யாரை வேணாலும் கூப்பிடு. நான் இங்க தான் இருப்பேன். முடிஞ்சா என்னையத் தாண்டி போய் பாரு.” என்றவனின் கண்ணில் அனல் தெறித்தது. அவன் கையில் இருந்த கைப்பேசியை எடுத்து மல்கோத்ரா அழைத்த அத்தனை இடங்களிலும் ஒரே பதில் வந்தது, “சாரி ராங் நம்பர்.” என்று. பயத்தில் முகம் வெளிற அந்த கைப்பேசியை ராக்கியிடம் நீட்டிய விராட் மல்கோத்ராவை பார்த்த ராக்கி,
“அச்சச்சோ! யாருமே போனை எடுக்கலையா? இப்ப என்னப் பண்ணப் போறீங்க? உங்களைப் பார்த்தாலும் பாவமாத் தான் இருக்கு.” என்றவன் ஆக்ரோஷமாக மல்கோத்ராவின் அருகே வந்து,
“ஆனா இது என்னோட கோட்டை. இங்க எது பேசுறதுனாலும் என்னோட பர்மிஷனோட தான் பேசணும். இந்த ஒரு தடவை உன்னை மன்னிச்சுவிடுறேன். இதே மாதிரி ஏதாவது பெட்டி வேணும், ஆட்டுக்குட்டி வேணும்னு வந்த?” என்று சீறியவன், சட்டென சிரித்துக் கொண்டே அவரின் உடையை சரிசெய்தபடியே,
“உன்னோட விதிய நான் எழுதுற மாதிரி பண்ணிடாத. உயிர் முக்கியம். போனா வராது.” என்றவரை அனுப்பி வைத்தான்.
“மாப்ள, இவனை அப்படியே அனுப்பிட்டியே?! அடிபட்ட பாம்பை கொல்லாம விடக்கூடாது; அப்படி விட்டா நம்மள திரும்பி வந்து கொத்தத்தான் பார்க்கும்.”
“பயப்படுறியா சின்னா?!”
“அதுக்கில்ல முன்னாடியாவது நீ தனியா இருந்த. இப்போ உன்னை நம்பி என் தங்கச்சி இருக்கா. எது செய்றதா இருந்தாலும் பார்த்து செய்யி மாப்ள.”
“டேய் மச்சி! வீரனுக்கு சாவுக்குறது ஒருநாள் தான் வரும். பயந்தவனுக்கு தினம் தினம் சாவு தான். நான் வீரன் டா. இவ்ளோ பெரிய சாம்ராஜ்யத்தை கட்டியாளுற எனக்கு, உன் தங்கச்சி; அதான் என் பொண்டாட்டிய பார்த்துக்க தெரியாதா? பார்த்துக்கலாம்.” என்றவனை உள்ளே கவலையிருந்தாலும் வெளியே சிரித்த முகத்துடன் நின்றிருந்தான் சின்னா. அங்கிருந்து தன் இடத்திற்கு வந்த விராட் மல்கோத்ரா, அடிபட்ட புலியைப் போல அங்கும் இங்கும் நடந்தான்.
“எனக்கே உயிர் பயம் காட்டுறானா? டேய்!” என்று தன் அடியாளை அழைக்க,
“ஹா பேம் சாப்!” என்றவன் வந்து நிற்க,
“அவனோட வீக்னெஸ் என்னடா? எங்க அடிச்சா அவனுக்கு வலிக்கும்? அவன் என்னோட உயிரை எடுத்துருக்கலாம்; ஆனா அவன் தொட்டது என்னோட ஈகோவை. இந்த விராட் மல்கோத்ரா பேரைக் கேட்ட கருவுல இருக்குற குழந்தை கூட அசையாது. அப்படிப்பட்ட என்னைய ஒரு பொடிப்பையன் இங்க.. இங்க.. நெத்தில கன்னை வைச்சு மிரட்டிட்டான். என் மேல மத்தவங்களுக்கு இருந்த பயம் போச்சு. என்னைய பார்த்தா பயந்து கையக்கட்டி நிக்குறவனெல்லாம் இப்போ எகத்தாளமா சிரிக்குறனுங்க. அதுக்கு காரணமான ராக்கியை ஏதாவது செய்யணும். அவன் உயிரோட இருக்கணும், ஆனா அவனுக்கு உயிர்வலின்னா என்னன்னு காட்டணும்.”
“பேம் சாப்! அவனுக்கு இப்ப தான் புதுசா கல்யாணம் ஆகிருக்குங்க. அதுவும் காதல் கல்யாணமாம். அவன் பொண்டாட்டிய அவன் கண்ணு முன்னாடியே கொன்னுட்டோம்னா, ஜென்மத்துக்கும் அதுல இருந்து அவனால எந்திரிக்க முடியாதுங்க. உசுரு இருந்தும் நடைப்பிணமுங்க.”
“சூப்பர் டா. இது எனக்கு புடிச்சுருக்கு. ஆனாப் பாரு, பொண்டாட்டியை மட்டும் கொன்னா, நல்லாருக்காதே; கூடவே புள்ளயையும் சேர்த்து பரலோகம் அனுப்பி வைச்சா? எப்படி இருக்கும்? சோகத்திலேயே பெரிய சோகம், புத்திர சோகம் காற்று சொல்லுவாங்க. ஒரு அடி அடிச்சாலும் மரண அடியா அடிக்கணும்; திரும்பி எந்திரிச்சு வரமுடியாத அளவுக்கு அடிக்கணும். ஓங்கி அடிச்சு சாய்க்க அவன் யானையில்லடா; பொறி வைச்சு காத்திருந்து பிடிக்க வேண்டிய சிங்கம். பொறி வையி; என்னைக்காவது நம்மக்கிட்ட மாட்டுவான்.” என்ற விராட் மல்கோத்ராவின் முகம் பயங்கரமாக மாறியிருந்தது.
“காலன் காலமேறி வருவதற்குள், தன் கன்னிகையின் மனம் களவாடுவானா கரிகாலன்?”
