இரகசிய மோக கனாவில்

This entry is part 14 of 14 in the series இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

இரகசிய மோக கனாவில்

அத்தியாயம் 36

“பூவிழி என்ன செய்கிறாய் நீ? உன்னை தான் படுக்கையை விட்டு எழுந்து கொள்ளவே கூடாது என்று கூறியிருக்கின்றேனே?! அதையும் மீறி எதற்காக இவ்வாறு நடந்து கொள்கிறார்?

“அம்மா நிஜமாவே முடியலம்மா. படுத்தே கிடந்தா ஏதோ நோயாளி மாதிரி இருக்கு. கொஞ்ச நேரம் அப்படியே காலார நடந்துட்டு வரட்டா?”

” ம்ஹூம் உன் பேச்சும் செயலும் எதுவும் எனக்கு புரியவில்லை. நீ எனது விழியா என்றே எனக்கு சந்தேகமாக உள்ளது.” என்று படுக்கையில் இருந்து மெல்ல நடப்பதற்கான எழுந்தவளைப் பார்த்து கோசலை கூற,

“க்கும் இது தான் உங்க டக்கா?! கதை பாதிக்கு மேல முடியவே போகுது. இப்பத்தான் உங்களுக்கு என் மேல சந்தேகமே வருது.’ என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் பூவிழியாழ். அவளது பேச்சற்ற நிலையைப் பார்த்த கோசலை, 

” பூவிழி என்னவாயிற்றம்மா? ஏன் ஏதோ போல் இருக்கின்றாய்? நான் பகட்டிற்காக தான் அவ்வாறு கூறினேன். நீ எனது பூவிழியாழ் தான். மனதில் எதையும் நினைத்துக் குழம்பி கொள்ளாதே. இதோ பழங்கள் இருக்கின்றன. இதை சாப்பிட்டால் வேங்கையென குழந்தை பெறுவாய்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறியவரை  பெருமூச்சுடன் பார்த்தாள் பூவிழியாழ். கோசலை இப்பக்கம் சென்றதும் அப்பக்கமாக பூவிழியாழின் அறைக்குள் நுழைந்தாள் மல்லி. 

“இளவரசியாரே! இதோ பாருங்கள்! உங்களுக்கு பிடிக்குமென சிறு நெல்லிக்காய் எடுத்து வந்திருக்கிறேன்.” என்று சிறு நெல்லிக்காயில் உப்பு, மிளகாய்த்தூள் போட்டு கொண்டு வந்து பூவிழியாழின் கையில் கொடுத்தாள் மல்லி. அதனை ஆசையோடு எடுத்து வாயில் வைத்து சுவைத்தவளின் நாக்கிற்கு அப்போது தான் சுரணை வந்தது போல் இருந்தது. 

“மல்லி சூப்பராயிருக்கு. ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்.. ” என்று ராகமிட்டு சுவைத்தவள்,

“ஏய் மல்லி! எனக்கு மாவடு சாப்பிடணும் போல இருக்கு. அதை செய்ய சொல்லேன்.” என்று கூற,

“இங்கே தாங்கள் சாப்பிட கேட்கும் எதுவும் தரக்கூடாதென்று அந்த பூங்கொடியும் அவளுடைய அம்மாவும் சமையலறையிலயே அமர்ந்திருக்கின்றனர். இங்கு தாங்கள் ஆசைப்பட்ட எதையும் சாப்பிட முடியாது இளவரசி! ஆனாலும் நான் எப்படியாவது செய்து எடுத்து வருகிறேன்.” என்றபடியே அங்கிருந்து ஓடி முயன்ற மல்லியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் வெளியே ஓடினாள். 

“இப்போது நாம் எங்கு செல்கிறோம் இளவரசியாரே?”

“அரண்மனையை விட்டு வெளியே போகப் போறோம். கடைத்தெருவில விதவிதமா சாப்பாடு வைச்சுருப்பாங்கல்ல.”

“அய்யோ இளவரசியாரே! அப்படி வாங்க வேண்டுமென்றால் தங்களிடம் பொற்காசுகள் இருக்க வேண்டும். இருக்கின்றனவா?”

“பொற்காசுகள் இல்லை. ஆனால் இதோ பார்! இது இருக்கின்றதே!” என்று கூறிய பூவிழியாழ், தன் கையில் இருந்த ராஜமுத்திரையை காண்பிக்க, 

“நீங்கள் பலே ஆளு தான் இளவரசி! எல்லாவற்றையும் முன்னேயே தயார் செய்து வைத்திருக்கின்றீர்கள். ம்ம்ம் எல்லாம் சரிதான். ஆனால் இங்கிருக்கும் காவலர்களைத் தாண்டி எவ்வாறு செல்வது?” என்று கேட்ட மல்லிடம், 

“வழக்கம் போல தான்..” என்று கூறி சிரித்த பூவிழியாழை பயத்துடன் பார்த்தாள் மல்லி.

“அய்யோ இளவரசியாரே! வேண்டாம்.. வேண்டாம்.. முன்பாவது தாங்கள் தனியாளாக இருந்தீர்கள். ஆனால் இப்போது இருவராக இருக்கிறீர்கள். வைத்தியர் வேறு தங்களை ஓய்வெடுக்க சொல்லிச் சென்றிருக்கிறார்; மாமன்னர் தங்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறிச் சென்றிருக்கிறார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் தாங்கள் இப்படியெல்லாம் செய்தால் என்னை சிறைசேதம் செய்து விடுவார்கள். வேண்டாம் இளவரசியாரே! நான் இதற்கு சம்மதிக்க மாட்டேன்.” என்ற மல்லியை அதட்டி உருட்டி அரண்மனை சுவற்றின் கீழே அமர வைத்த பூவிழியாழ், மல்லியின் தோளில் கால் வைத்து ஏற, பூவிழியாழை மெல்ல தூக்க முயன்றாள் மல்லி. 

“இளவரசியாரே! இப்பொழுதெல்லாம் தங்களை என்னால் இப்படி தூக்க முடியவில்லை. தாங்கள் எடை கூடிவிட்டீர்கள்.”

“பேச்சை குறை. இன்னும் கொஞ்சம் மேலத் தூக்கு.” என்று மல்லியிடம் கூறிய பூவிழியாழ், அரண்மனையின் மதில் சுவற்றில் ஏறி வெளியே செல்ல முயன்று கொண்டிருக்க, அவளைத் தாங்கி நின்றிருந்த மல்லியின் முன்னாள் ரணவீரன் அவர்களை நோக்கி நடந்து வருவது தெரிந்ததும், பயத்தில் பூவிழியாழை நழுவவிட்டாள். 

“ஆஆஆஆஆ அம்மா..” என்று கத்தியவாறு கீழே விழ இருந்தவளை தனது இரும்பு கரத்தினால் சுற்றி வளைத்து தன்னோடு இறுக்கிக் கொண்டான் ரணவீரன். 

“நல்ல வேளை கீழே விழுந்திருந்தா சிதறு தேங்கா தான். தாங்க் யூ பாஸ்.” என்று கூறியவளை தன் பற்கள் நறநறக்க முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ரணவீரன். கோபத்தில் அவளை அறைந்து விடுவோமோ என்ற பயத்தில் தன் கைகளை மடக்கி இறுக்கிக் கொண்டான். 

“என்ன செய்கிறாய் விழி? சரியான நேரத்தில் நான்  மட்டும் வரவில்லை என்றால்? நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. உன்னை..” என்றவன் அவளின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றவனை தடுத்து நிறுத்தியவள்,

“எனக்கு மட்டும் இப்படியெல்லாம் சர்க்கஸ் பண்ணணும்னு ஆசையா? இங்க இருக்கவே பிடிக்கல. நாம நம்ம அரண்மனைக்கு எப்பப் போறோம்?” என்று கூறி அவன் முகத்தை பார்க்க,

“இன்னும் சில நொடிகளில் கிளம்பத் தயாராக இரு. நாம் நமது அரண்மனைக்கு செல்லப் போகின்றோம். ” என்று கூறியவன், அவளோடு மல்லியையும் வேலுநாச்சியாரையும் கூட்டிக்கொண்டு தனது அரண்மனைக்கு திரும்பிச் சென்றான். ரணவீரனின் வாரிசு பூவிழியாழின் வயிற்றில் வளர்வதை அறிந்த குருமாதா, அவளது வழியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அதுவுமில்லாமல் குருமாதாவிடம் பேசுவதையே நிறுத்தியிருந்தான் ரணவீரன். தன் கணவனிடம் ஓயாது பேசிக் கொண்டே இருக்கும் பூவிழியாழைப் பார்க்கும் போதெல்லாம், ‘இவள் வாய் ஓய்வே எடுக்காதா?’ என்று கேட்கத் துடிக்கும் தனது மனதை அடக்கிக் கொண்டார்‌. பூவிழியாழின் பாதம் தரையில் நடக்காது அவளை கங்காருக்குட்டி போல் தூக்கிக் கொண்டே திரிந்தான். அவள் பேசும் கிள்ளை மொழியின் அர்த்தம் புரியாவிட்டாலும் அவளது முகத்தை பார்த்துக் கொண்டே அமர்ந்திருப்பான். ஐந்தாம் மாதத்தின் போது மருந்து கொடுக்கும் விழாவை சிறப்பாக நடத்தி முடித்திருந்தான் ரணவீரன். அன்று மிகவும் சோர்ந்து போய் காணப்பட்டாள் பூவிழியாழ். கட்டிலில் அமர்ந்து இருந்தவளின் காலுக்கருகில் அமர்ந்த ரணவீரன், தன் கையில் வைத்திருந்த மூலிகை எண்ணெய்யை அவளின் காலில் ஊற்றி மிதமாக பிடித்துவிட ஆரம்பித்தான். 

“ம்ம்ம்.. வாவ் ராணா! அப்படித்தான்.. அங்கதான் நல்லா பிடிச்சு விடு.. மசாஜ் பண்ணுறதுக்கு உனக்கு அவர்டே கொடுக்கலாம். ஆமா! இதெல்லாம் எங்கக்கத்துக்கிட்ட?” என்றவளின் முகத்தை தன்னை நோக்கி திருப்பியவன்,

“நான் உனக்கு மட்டும் சொந்தமானவன்; எனது சேவைகளும் உனக்கு மட்டுமே சொந்தமானது.” என்று கூற, அவனது நெற்றியோடு தனது நெற்றியை முட்ட வைத்தவள்,

“உன்னைய எனக்கு கொடுத்த காலச்கக்கரத்துக்கு ரொம்ப கடமை பட்டுருக்கேன். எங்க உலகத்துல இருந்து இந்த வந்தப்போ ரொம்ப பயந்தேன். அங்க இருந்த சூழ்நிலை வேற; இங்க இருக்குற சூழ்நிலை வேற. அங்க இருக்குற பீட்சா, பர்கர், சிக்கன் ரோல் இதையெல்லாம் ரொம்ப மிஸ் பண்ணேன். உங்களுக்கு தெரியுமா? மொபைல் இல்லாம ஒரு நிமிஷம் கூட இருந்ததில்ல. ஆனா இப்போ?” என்றவள் அவனது கழுத்தோடு தன் கைகளை மாலையாக கோர்த்தவள்,

“ஆனா இப்போ? அதெல்லாம் எதுக்குன்னு தோணுது? உங்களை விட்டு ஒரு நிமிஷங்கூட என்னால் இருக்க முடியல. என்னைய விட்டு எங்கயும் போக மாட்டீங்க தானே?” என்று ஏக்கமாக கேட்டவளின்  முன்னே தட்டு ஒன்றை நீட்டினான் ரணவீரன். 

“என்னதிது?”

“திறந்து தான் பாரேன்.” என்றதும் மூடியிருந்த தட்டை நீக்கிப் பார்த்தவளின் விழிகள் விரிந்தன. 

“பீட்ட்ட்சாஆஆஆ?”

“ஓ! இதற்கு பெயர் தான் பீட்சாவா? எனக்கு இதனுடைய பெயரெல்லாம் தெரியாது. உன்னுடைய ராஜமாதாவிடம் உனக்கும் பிடித்ததை செய்யச் சொன்னேன். அவர் தான் இதனை தயாரித்து என்னிடம் கொடுத்தார். ஆனால் இதன் பெயர் பீட்சா என்று எனக்கு தெரியாது. இந்தா சாப்பிடு.” என்றவன் அவளது வாயில் ஊட்டிவிட,

“ம்ம்ம்.. ம்ம்ம்ம்ம்ம்.. யம்மிஇஇஇ..” என்றவாறே அதனை தன் வாயில் வாங்கிக் கொண்டாள் பூவிழியாழ். அவளது வாயினோரம் ஒட்டிக் கொண்டிருந்த சிறு துளி மிச்சத்தை அமிர்தமென வாயோடு வாய் வைத்து சுவைக்கலானான். 

“ம்ம்ம்.. நிஜமாகவே மிகவும் சுவையாக இருக்கின்றது.” என்று கூறியவனை வெட்கம் மின்ன பார்த்தாள் பூவிழியாழ்.  சட்டென ஏதோ ஞாபகம் வரவே, பூவிழியாழின் வயிற்றில் தன் காதை வைத்துப் பார்த்தான் ரணவீரன். அதனைக் கண்டவள்,

“என்னப் பண்றீங்க?” என்று கேட்க,

“நம்ம குழந்தையிடைய சத்தம் கேட்கின்றதா என்று பார்க்கின்றேன்.” என்று கூறி மீண்டும் அவளது வயிற்றில் தன் காதை வைத்து கேட்க, அவனுக்கு எந்த அசைவும் தெரியவில்லை. தன்னை நோக்கி நிமிர்ந்தவனைப் பார்த்த பூவிழியாழ்,

“ஏதாவது தெரிஞ்சுதா?” என்று கேட்க, இல்லையென்று தன் உதட்டை பிதுக்கினான் ரணவீரன். 

“ம்ஹூம் ஒரு அசைவும் தெரியவில்லை. நான் நினைக்கிறேன், இது எனக்கு முதல் அனுபவம் அல்லவா?! அதனால் தான் சரியாக கணிக்க இயலவில்லை என்று. அடுத்த முறை நம் மகள் என்ன கூறுகின்றாளென மிகவும் சரியான கணித்து கூறுவேன்.” 

“அடுத்த முறைன்னா?”

“அடுத்த முறை யென்றால், அடுத்த குழந்தைக்கு என்று பொருள்.”

“என்னது இன்னோன்னா? இதுக்கே ராத்திரி தூங்கி முடியமாட்டேங்குது. கை காலெல்லாம் வலி; அதுவுமில்லாம வாந்தி; நினைச்ச மாதிரி படுக்க முடியுதா? இல்ல சாப்பிடத் தான் முடியுதா? இந்த ஒன்னே நமக்கு போதும்டா சாமி. இனிமே இன்னோன்னு சொல்லிட்டு பக்கத்துல வந்தீங்க. அவ்ளோ தான்.”

“ஒன்றிற்கே இப்படி அழுகின்றாயே?! நான் மொத்தம் பத்தென்று கணக்கு செய்து வைத்திருக்கின்றேனே. என் கனவில் மண்ணள்ளி போட்டுவிடாதே.”

“என்னது பத்தா? போயா யோவ்! கொலைகேஸ்ல உள்ளம் போகப் பாரு. என்னை விட்டுடு டா.” என்றவளை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்து சமாதானப்படுத்தினான் ரணவீரன். ஒரு நல்ல நாளில் பூவிழியாழுக்கு பிரசவவலி ஏற்பட, அவளை விட அதிகமான வலியை உணர்ந்தான் ரணவீரன். அறையின் உள்ளே அவள் அலறிய குரலைக் கேட்டு வெளியே நடைபயின்று கொண்டிருந்தவனின் காதில், “டேய் ராணாஆஆஆஆஆ!” என்று பூவிழியாழ் அழைப்பது கேட்கவே பதறிப்போய் கதவின் அருகில் சென்று, “விழிம்மா.. நான் இங்கதான் கண்ணம்மா இருக்கின்றேன்”  என்று கத்தினான். அவன் குரலை கேட்டதும், 

“வெளியே நின்று என்னடா பண்ற? உள்ள வா. வலி தாங்க முடியலடா. இது எல்லாத்துக்கும் நீ தான் காரணம். இப்ப நீ உள்ள வரப்போறியா? இல்லையா?” என்றவள் கத்தியதைத் தொடர்ந்து அனைவரின் எதிர்ப்பையும் மீறி அவளிருந்த அறைக்குள் சென்றான் ரணவீரன். அங்கே படுக்கையில் கிழிந்த நாறாக கதறிக் கொண்டிருந்தவளைப் பார்த்ததும் ரணவீணனின் மூச்சே நின்று போனது. இவ்வளவு நாளும், அவளுடன் கூடிய நாட்களில் இருந்த காதலை விட இப்போது தனது வாரிசிற்காக துடித்துக் கொண்டிப்பதை பார்த்ததும் இன்னும் அதிகமாக காதலிக்க தொடங்கியிருந்தான். அவளின் அருகில் சென்றவன், 

“ஒன்றும் இல்லை கண்ணம்மா. இங்கே பார். நான் வந்து விட்டேன் அல்லவா?! உனக்கு எதுவும் ஆகவிடமாட்டேன்.” என்று கூறியவனின் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள் பூவிழியாழ். ரணவீரன் அளித்த தைரியத்தில் அழகான ஆண்குழந்தையை பெற்றெடுத்தாள் பூவிழியாழ். எக்காலத்தில் இருந்தாலும், ரணவீரனுடன் மட்டுமே தன் பேத்தியின் வாழ்க்கை அழகாக செல்லும் உணர்ந்து கொண்டார் வேலுநாச்சியார். தன் மனைவியோடு சேர்த்து மகனையும் உயிராக பார்த்துக் கொண்டான் ரணவீரன். 

******************************************************

“ஆஆஆஆஆ அம்மா.. நாதாஆஆஆஆ..” என்று ஆருஷா அலற, அவளது கையைப் பிடித்தபடியே நின்றிருந்த ராக்கி, 

“அவ்ளோ தான் பேபி. இன்னும் கொஞ்சம் புஸ் பண்ணு பேபி. அவ்ளோ தான்டா. ப்ளீஸ் புஸ் பேபி..” என்று மருத்துவமனையில் பிரசவவலி வந்து துடித்துக் கொண்டிருந்தவளுக்கு ஆறுதல் அளித்தபடி அவளது நெற்றி வேர்வையை துடைத்துக் கொண்டிருந்தான் ராக்கி. ஊரே கண்டு நடுங்கும் ராக்கியை நான்காக மடக்கி தனக்குள் புதைத்துக் கொண்டிருந்தாள் ஆருஷா. அதிர்ந்து கூடப் பேசாதவளின் விழிப்பார்வைக்கு பெட்டிப் பாம்பாய் மாறியிருந்தான். அவள் வாய் திறந்து பேச வேண்டாம்; விழிப்பார்வையிலேயே அனைத்தையும் செய்து முடிப்பான். அப்படிப்பட்டவனுடைய மனைவிக்கு பிரசவவலி என்றால் சும்மாவா இருப்பான்? அந்த மருத்துவமனையையே உண்டில்லையென்று ஆக்கிவிட்டான். 

“பேபி.. நம்ம பேபி வந்துட்டா..” என்று தன் தேவதைப்பெண்ணை முதன்முதலில் கையில் வாங்கியவனின் கைகள் நடுங்கி கண்ணில் இருந்து அவனையுமறியாமல் நீர் வழிந்தது. பல உயிர்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்றவனுக்கு, ஒரு உயிரின் மதிப்பென்ன என்பதை சத்தமில்லாது சொல்லிக் கொடுத்தாள் அவனது சீமந்த புத்திரி. 

“ஹேய் பேபி! இங்கப்பாரேன். இவளோட குட்டி காலும் கையும் என்னைய மாதிரியே இருக்கு. அப்புறம் இந்த முகம், உதடு அப்படியே உன்னையே உறிச்சு வைச்சுருக்கா. பிடிவாதத்துல உதட்டை குவிக்கும் போது அப்படியே என்னைய மாதிரி இருக்கப்பாரேன்.” என்று ஆவலாக தன் மகளின் மேனியை, அவளுக்கு வலிக்குமோவென மயிலிறகால் வருவது போல் வருடிக் கொண்டே ஆருஷாவின் அருகே அமர்ந்தவன், அவளது நெற்றியில் மென்முத்தமிட்டு, “தாங்க்ஸ் டி பொண்டாட்டி. நீ கொடுத்த பரிசுலயே ரொம்ப ரொம்ப பிடிச்ச பரிசு இது தான்டி.” என்று கூற, தான் இவ்வுலகில் எதையோ சாதித்து விட்டது போல் உணர்ந்தாள் ஆருஷா. அனுராகா மற்றும் சின்னாவின் வாழ்க்கையோடு ராக்கி மற்றும் ஆருஷாவின் வாழ்க்கையும் தெளிந்த நீரோடை போல் ஓடத் தொடங்கியது. 

காலத்தால் பிரிந்தவர்கள் காலத்தால் பிரிக்க முடியாத உறவை அடைந்தனர். காதல் காலம் கடந்து கூட செல்லும். குரங்காக இருந்தவனை மனிதனாக மாற்றியதும் இக்காதல் தான். காதலுக்கு நேரங்காலம் எதுவும் கிடையாது. அதற்கு எந்த வரைமுறையும் கிடையாது. 

 *****************************************************

“அவ்வளவு தான் கதை முடிஞ்சுது. இதை எடிட் பண்ணி நாளைக்கு மதியத்துக்குள்ள நம்ம விஜிமாக்கு அனுப்பணும். ஏடிஎம் வாசகர்களுக்கு என் கதை பிடிக்குமா? கதை நல்லாருக்கா?”  என்றபடியே எழுந்த பாரதியின் கையைப் பிடித்து இழுத்து தன் அருகில் அமர்த்தினான் சான்ட்டி.

“ம்ம்ம் கதை ரொம்ப  நல்லாருக்குன்னு சொல்ல தான் ஆசை. ஆனா சுமார் தான்.” என்றவனை துரத்திக் கொண்டு ஓடினாள் பாரதி. 

“அடேய் சுமார் மூஞ்சி குமாரு! எவ்வளவு கஷ்டப்பட்டு பல தடைகளை எகிறி குதிச்சு எழுதி, உனக்கு படிச்சு காண்பிச்சா? கிண்டலா பண்ற? மவனே! இனிமே பாரு! மோருன்னு ஹாஸ்டல் பக்கம் வந்த உனக்கு சங்கு தாண்டி.” என்று பாரதி சான்ட்டியை திரும்பியும் பார்க்காது நடந்து செல்ல அவள் பின்னோடே ஓடினான் அவளது தோழன் சான்ட்டி. 

 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *