இரகசிய மோக கனாவில்
அத்தியாயம் 30
குருமாதாவும் சூர்யபிரபாகரனும் பேசியதை கேட்ட பூவிழியாழுக்கு அழுகையாக வந்தது.
“தாய்கிழவி உன்னை காப்பாத்தி இருக்கவே கூடாது. அப்படியே விட்டுருக்கணும். இப்ப என்னையவே இங்கிருந்து பார்சல் பண்ணப் பார்க்குறயில்ல. அந்த ராணா பையனுக்கும் நான் வேண்டாமா? எப்படியெல்லாம் சோப்புப் போட்டான். அது எல்லாம் அந்த ஒரு ராத்திரிக்கு மட்டும் தானா? இதுக்கு தான் அவசர அவசரமா யாருக்கும் தெரியாம என்னைய கல்யாணம் பண்ணானா? அந்த மதிவாணன் மேல இருக்குற கோபத்தை என் மேல காட்டிட்டானா? அய்யோ கடவுளே! எனக்கு இப்பவே என்னோட அம்மா, அப்பா, ராஜமாதாவைப் பார்க்கணும். எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல.” என்று புலம்பிய படியே அங்கிருக்கும் ஆற்றங்கரையோரம் வந்து அமர்ந்து கொண்டவள், நேரே வானத்தை நோக்கி தன் இரு கைகளையும் உயர்த்தி,
“ஓ காட்! என்னைய என்னோட உலகத்துக்கே திருப்பி அனுப்பிடுங்களேன். எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல. இங்க நான் நானாவே இருக்க முடியல. எல்லாமே போலி; வெளி வேஷம். இங்க யாருக்குமே என்னைய பிடிக்கல. அட்லீஸ்ட் என்னோட ராஜமாதாவையாவது இங்க அனுப்பி வை.” என்றவள் கத்திக் கொண்டிருக்கும் போது, உடை முழுவதும் நனைந்தபடி
“ஆருக்குட்டி!” என்றபடியே அவளது தோளில் ஒரு கை விழுந்ததும்,
“போச்சு! போச்சு! பேய்! ரத்தக்காட்டேரி! டேய் ராணா! பூச்சாண்டி வந்துருக்காடா.” என்று கண்களை மூடிக் கொண்டு கத்தியவளின் தோளில் பட்டென ஒரு அடி விழவே அங்கிருந்து துள்ளி குதித்து விலகினாள் பூவிழியாழ்.
“யாருடி பேய்? யாருடி ரத்தக்காட்டேரி? நீ தான்டி பூச்சாண்டி. உனக்காக அந்த ராக்கிப் பையகிட்ட சண்டை போட்டுட்டு வந்தேன் பாரு. நீ இதுவும் சொல்வ? இன்னமும் சொல்ல?” என்று கூறிய வேலுநாச்சியாரை மெல்ல தொட்டும் பார்த்தவள், அவர் தன்னுடைய பாட்டி தான் என்பதை உணர்ந்ததும்,
“ராஜாமாதா!” என்று கதறியடி அவரை அணைத்துக் கொண்டாள் பூவிழியாழ்.
“ராஜமாதா! எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல. இப்பவே என்னைய இங்கிருந்து கூட்டிட்டு போ. ப்ளீஸ்.”
“ஏய் நிறுத்து! இது என்ன சின்னப்புள்ளத் தனமா இருக்கு. அதுவும் இல்லாம இங்க என்ன பாய்ண்ட் டூ பாய்ண்ட் பஸ்ஸா விடுறாங்க?! இங்க ஏறி அங்க இறங்குறதுக்கு. நானே என்னைய பெட்டிக்குள்ள தூக்கிப் போட்டு பார்சலா இங்க அனுப்பி விட்டுட்டானேன்னு கடுப்புல இருக்கேன். நீ வேற திரும்பப் போகணும்னு குதிக்குற. இனிமே நீயும் நானும் திரும்பி நம்ம உலகத்துக்கு போக முடியாது. வாழ்வோ சாவோ இங்க தான். ஆமா! இது என்னடி வேஷம்? இந்த மாதிரி ட்ரெஸ் போட்டுருக்க?”
“அதெல்லாம் பெரிய கதை. அப்புறமா சொல்றேன். கொஞ்ச நேரம் இப்படி உட்காரு. நான் போய் உனக்கு போட்டுக்க ஏதாவது ட்ரெஸ் இருக்கான்னு யார்கிட்ட இருந்தாவது சுட்டுட்டு வர்றேன்.”
“அடியேய்! அப்போ நீ இங்க திருடியாவா இருக்க? அய்யோ! ராஜபரம்பரைல பிறந்து வளர்ந்த பொண்ணு இப்போ திருடியா மாறிட்டாளே?! என் பேத்தியை நான் இப்படியா பார்க்கணும்?! அடக்கடவுளே! உனக்கு கொஞ்சம் கூட இரக்கமே இல்லயா?”
“நீ மங்குனி அமைச்சர் என்பதை நிமிடத்திற்கு ஒருமுறை நிரூபித்துக் காண்பிக்கின்றாய்.”
“????”
“என்னப்பார்க்குற? இங்க இப்படி சுத்தத்தமிழ்ல தான் பேசியாகணும். அதனால உன் திருவாயை கொஞ்ச நேரம் மூடிட்டு உட்காரு. நான் ட்ரெஸ்ஸோட வர்றேன். இங்கிருந்து எங்கயும் எந்திரிச்சு போயிடாத. அப்புறம் புள்ளப்புடிக்குற பூச்சாண்டின்னு ஜெயில்ல தூக்கிப் போட்டுட்டு வாங்க.” என்று வேலுநாச்சியாரிடம் பல முறை கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள் பூவிழியாழ். அருகே இருந்த வீட்டில் இருந்து உடுத்தும் உடைகளை திருடிக் கொண்டு வந்து வேலுநாச்சியாருக்கு கொடுத்து அணிந்து கொள்ள செய்தவள், நடந்த அனைத்தையும் அவரிடம் பகிர்ந்து கொள்ள, தானும் ராக்கியைப் பற்றியும் அங்கு நடந்ததைப் பற்றியும் பூவிழியாழிடம் கூறினார்.
“ஓ! இவ்வளோ நடந்துருக்கா? நார்மலா உன்னைய பார்த்த உடனே கொன்னுடணும்னு தான் நினைச்சேன்.”
“ஏன்டி? ஏன் இந்த கொலைவெறி?”
“பின்ன? சும்மா இருந்தவளை காலச்சக்கரப் பெட்டிக்கிட்ட கூட்டிட்டு போனதே நீதானே?! அப்போ நான் இங்க வந்து மாட்டிகிட்டதுக்கு காரணம் யாரு? இப்போ திரும்பிப் போக இருந்த ஒரே வழியையும் மொத்தமா ஊத்தி மூடியது யாரு? நீதானே?!”
“நான் ஏதோ அறியாத புள்ள நாலு விஷயத்தை அறிஞ்சுக்கட்டும்னு தான் உன்னைய கூட்டிட்டு வந்து காண்பிச்சேன். நீ அந்த பெட்டிக்குள்ள ஏறிப்படுப்பன்னு நான் என்ன கனவா கண்டேன்?”
“ராஜமாதா! ரொம்ப அதிகமா பேசுற. அப்புறம் மூச்சு முட்டிக்கப் போகுது.”
“என் மூச்சு எப்படிடி முட்டிக்கும்?”
“என் புருஷன் மாவீரன் ரணவீரன் தெரியும்ல?! காத்தே வராத இடத்துல அடைக்கச் சொல்லிடுவேன்.”
“ஏய் என்ன?! இந்த வேலுநாச்சியாரையே மிரட்டுறியா?”
“அய்யோ! ராஜமாதா! கொஞ்ச நேரம் வாயமூடுறீங்களா? நானே உங்களை எப்படி அந்த கூட்டத்துக்குள்ள கூட்டிட்டு போறதுன்னு யோசிச்சுட்டுருக்கேன். சும்மா ஓட்டப் பானைக்குள்ள நண்டு விட்ட மாதிரி நொய்யி நொய்யின்னு பேசிட்டுருக்கீங்க. இங்க நாம் ரெண்டு பேரு மட்டும் தான் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருந்துக்கணும். புரியுதா?”
“அப்படின்னா என்னைய உன்கூட கூட்டிட்டு போயிடுவ தான்யா?!”
“வேற வழி?! ம்ம்ம்.. ஐடியா. நாளைக்கு அந்த தாய்கிழவி சூர்யநமஸ்காரம் பண்ண எப்படியும் இங்க தான் வரும். அப்போ.. சரியா அது பின்னால் இருந்து நான் அதை தண்ணிக்குள்ள தள்ளிவிட்டுர்றேன். நீ பாய்ஞ்சு அதை காப்பாத்தி மாதிரி தடுத்து பிடிச்சுக்கோ. அதோட உயிரை காப்பத்துனதுக்காக உன்னைய அந்த கூட்டத்தில சேர்த்துக்குவாங்க. அந்த கூட்டத்தில சேர்த்தா போதும், மீதியை நான் பார்த்துக்குறேன்.”
“ஏன்டி பாய்ஞ்சு வந்து காப்பாத்த நான் என்ன இளவட்டமாடி. என்னால என் காலை தூக்கி நடக்கவே அரை நாள் ஆகும். இதுல அந்த கிழவியை நான் காப்பாத்தணுமா?”
“நான் ப்ளானை சொல்லிட்டேன் செய்யுறதும் செய்யாததும் உன் இஷ்டம்.”
“எல்லாம் சரி தான். இன்னைக்கு நைட் நான் எங்க தங்குறது. நீ வேற பாதி ட்ரெஸ் தான் கொடுத்துருக்க. உன்னைய மாதிரி முழுசா போட்டுக்குற மாதிரி ஏதாவது ட்ரெஸ் இருந்தா, கொடேன்.”
“ராஜமாதாஆஆஆ.. இது ஆம்பளைங்க போடுற ட்ரெஸ். நான் இப்போ சிப்பாய் வேஷத்துல இருக்கேன். என்னைய ரொம்ப தொந்தரவு பண்ணாம, அதோ தெரியுது பாரு?! அந்த சத்திரத்துல தங்கிக்கோ. நாளைக்கு காலைல அஞ்சு மணிக்கெல்லாம் நீ வந்துடணும். நான் உனக்கு சாப்பிட ஏதாவது ஏற்பாடு பண்ணி கொண்டு வந்து தர்றேன்.”
“ராஜக்குட்டி! என்னம்மா ப்ளான் போடுது?! குட்டிம்மா நீ நல்லாருக்கியாடி?! அந்த மாவீரன் உன்னைய நல்லாப் பார்த்துக்குறானா?” என்ற வேலுநாச்சியாரின் கேள்வியை கேட்டதும் அவளின் விழிகளில் நீர் கோர்த்துக் கொண்டது. அதனை அவருக்கு தெரியாமல் மறைந்தவள்,
“இது தான் வாழ்க்கைன்னு ஆகிடுச்சு. இது மேல் அவன் என்னைய நல்லாப் பார்த்துகிட்டாலும், இல்லேன்னாலும் நான் இங்க தானே வாழ்ந்தாகணும்? என்னால முடிஞ்ச வரைக்கும் போராடுவேன் ராஜமாதா. ஆனா உனக்கெதுவும் ஆகவிடமாட்டேன். எனக்குன்னு நீயாவது கூட இரு ப்ளீஸ்..” என்று கூற,
“என் தங்கம்! கலங்காதடி! உன்னைய இப்படி பேச வைச்சதுக்காகவே அந்த கிழவியை உண்டில்லைன்னு பண்ணிடுறேன். இந்த வேலுநாச்சி நினைச்சா, நினைச்சதை செஞ்சு முடிப்பா. நீ கலங்காதடா. பாட்டி எப்பவும் உன் நிழலா உன் கூடவே இருப்பேன்.” என்று தன் பேத்தியை ஆறுதலாக அணைத்துக் கொண்டார் வேலுநாச்சியார். மாலை நேரம் தாண்டி இரவு நெருங்கும் நேரத்தில் தன் பாட்டியை மண்டபத்தில் தங்க வைத்துவிட்டு குருமாதாவின் குடிலுக்கு வந்தவள் ஈட்டியை நீட்டி பிடித்தபடி காவலுக்கு நின்று கொண்டாள். இரவின் குளிரில் உடல் நடுங்கியபடி நின்றிருந்தவளை பின்னிருந்து ஏதோ ஒரு உருவம், அவளது வாயை துணியால் அடைத்து, துண்டாக மடித்து தன் தோள்களில் போட்டுக் கொண்டு அங்கிருந்து சென்றது. சற்று தூரத்திலேயே தன் வாயில் அடைந்திருந்த துணியை எடுத்துவிட்ட பூவிழியாழ்,
“யோவ் பேமானி! இறக்கிவிடுயா. என் புருஷே யாருன்னு தெரியுமா? இறக்கிவிடுயா. அப்பால ரொம்ப வருத்தப்படுவ. அந்த மனுஷனுக்கு மட்டும் நீ என்னைய இப்புடி இஷ்துக்கின்னு போறது தெரிஞ்சது? மவனே உன் நெஞ்சாங்கூட்டுல இருக்குற மஞ்சாசோத்தை எடுத்துடுவாரு. இறக்கிவிடுயா. அடேய் இறக்கிவிடுடா. குள்ளநரிப்பயலே!” என்று கத்தியவளை சற்று தூரத்தில் வந்த மரத்தின் கீழ் நிற்க வைத்த அந்த உருவத்தைப் பார்த்ததும் வாயடைத்துப் போய் நின்றிருந்தாள் பூவிழியாழ்.
“யோவ் ராணா! என்னைய எதுக்குயா இப்படி தூக்கிட்டு வர்ற? சொந்த பொண்டாட்டியை இப்படித்தான் திருட்டுத்தனமா தூக்கிட்டு வருவியா?”
“சொந்த மனைவி நல்ல பெண்ணாக அரண்மனையில் இருந்தால் நான் ஏன் இவ்வாறு தூக்கிக் கொண்டு போகப் போகிறேன். கள்ளனாக வந்து படைவீரனாக வேடமிட்டு நிற்கும் மனைவியை இப்படி தான் தூக்கிச் செல்ல தோன்றுகிறது.” என்றவன் மேற்கொண்டு அவளை பேசவிடாது அவளது இதழ்களை கவ்வி கொண்டான். அவனிடமிருந்து திமிறிக் கொண்டு விலகியவள்,
“ஏன்யா உதட்டை இப்படி கடிச்சு வைக்குற? ஸ்ஸ்ஸ்ஸ்.. யப்பா.. எப்படி வலிக்குது தெரியுமா? இப்படி காஞ்ச மாடு கம்புல புகுந்த மாதிரி அவசரப்படுவீங்க?” என்று அவனைப் பற்றி அவனிடமே புகார் அளித்தவனை மீண்டும் தன்னை நோக்கி இழுத்து அணைத்தவன்,
“சற்று நேரம் அமைதியாக வா. நமது குடிலுக்கு சென்றதும் நீ எப்படி வேண்டுமானாலும் பேசு. நீ என்ன பேசினாலும் நான் கேட்டுக் கொள்கிறேன்.” என்றவாறே அவளை தன் தோளில் போட்டுக் கொண்டு தனது குடிலுக்கு சென்றான். அங்கு வந்த அடுத்த நொடி அவனிடமிருந்து குதித்து இறங்கியவள்,
“இங்க எதுக்கு என்னைய தூக்கிட்டு வந்தீங்க? ஆமா! போருக்கு போறேன்னு வெற்றிவேல்! வீரவேல்னு கிளம்பிப் போறீங்க தானே? எப்ப போர் முடிஞ்சுது? ம்ம் சொல்லுங்க?!” என்றவாறே சுற்றி முற்றி எதையோ தேட, அவளருகில் சென்று அவளது கைப்பிடித்து தன்னை நோக்கி திருப்பியவன்,
“இப்போது எதற்காக குனிந்து எதையோ தேடுகிறாய்?” என்றவனின் கையை உதறினாள் பூவிழியாழ்.
“ம்ம்ம்.. இல்ல இங்க ஏதாவது கட்டை இருக்குமான்னு பார்க்குறேன்.”
“எதற்காக?”
“இதற்காக..” என்றவள் கட்டையை எடுத்து அவனது காலுக்கடியில் வீசத் தொடங்கினாள் பூவிழியாழ்.
“அடிப்பாவி சண்டாலி! கட்டிய கணவனை உருட்டுக்கட்டையால் அடிக்க வருகிறாயே?! நீயெல்லாம் ஒரு தர்மபத்தினியா?! உலகமே என்னைக் கண்டு அச்சம் கொள்ளும் அசாதாரண சூரன் நான். என்னையவே அடிக்க வருகின்றாயே?!” என்றவன் எளிதாக அவளது கையில் இருந்த கட்டையை வாங்கி தூரப்போட்டான். அவளது முகத்தை தன் கைகளில் ஏந்திக் கொண்டான்.
“இப்போது சொல் உன் மனதில் என்ன குழப்பம் நிலவுகிறது?”
“நீயும் மத்த ராஜாக்கள் மாதிரி பல பொண்ணுங்களை கல்யாணம் பண்ணிக்குவியா? அப்போ உனக்கு நான் வேண்டாமா?”
“நீ எனக்கு வேண்டாம் என்று நினைத்திருந்தால் உன்னைத் தேடி இந்த அர்த்த ராத்திரியில் வந்திருப்பேனா? இன்று தான் போர் முடிந்ததென அறிவிக்க நேர்ந்தது. வெற்றியினை உன்னுடன் சேர்ந்து கொண்டாடவென நினைத்திருக்கும் போது, என் தேவதை என் கண்முன்னே வந்து நிற்கிறாய். ஆனால் அதே நேரம் வெகு நாட்களுக்கு பிறகு குருமாதாவும் சூர்யாவும் திரும்பி வந்திருக்கிறார்கள். வந்த உடனே அவர்கள் கூறுவதை என்னால் மறுக்க முடியவில்லை. இருப்பினும் இந்த மாவீரன் ரணவீரன் உனக்கொரு வாக்களிக்கின்றேன். உன்னைத் தவிர வேறு எந்த பெண்ணிற்கும் என் மனதிலும் வாழ்க்கையிலும் இடமில்லை. என் வாழ்வில் ஒரு திருமணம் தான்; ஒரு மனைவி தான். என் மேல் நம்பிக்கை கொள்ளடி பெண்ணே?!”
“க்கும்.. எப்படி நம்பசொல்றீங்க? அந்த குருமாதா பேசுனது எல்லாத்தையும் தான் நான் கேட்டேனே?! நீங்க என் அப்பாவ பழிவாங்கத்தானே என்னைய கல்யாணம் பண்ணிகிட்டீங்க?! எனக்கு தெரியும். அப்போ உங்ளுக்கு என் மேல லவ்வே இல்ல..”
“சித்தம் கலங்கிவிட்டதா உனக்கு?! உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது பேரரசர் பாண்டிய மன்னர். நானாக உன்னைத் தேடி வரவில்லை.” என்றவன் கூறியதும்,
“ஆஆஆஆ.. ஆஆஆஆ..” என்று அழுகத் தொடங்கியவளின் வாயோடு வாய் வைத்து இதழ் பொருத்தியவன்,
“உன்னை பழிவாங்கவென்று திருமணம் செய்திருந்ததால் என் வெறுப்பை உன்னிடம் காட்டியிருக்கமாட்டனேனா? நீயாக எதையும் நினைத்துக் கொள்ளாதே!” என்றவனின் இரும்புக்கரங்கள் அவளை சுற்றி வளைக்க, வெட்கத்தில் மூச்சு முட்டியது. அவளை அங்கம் அங்கமாக ரசிக்கத் தொடங்கினான். அவளது எதிர்ப்புகள் அத்தனையையும் தன் கரங்களால் தடுத்து நிறுத்தியவன், அவளது கண், காது, மூக்கு, வாய், உதடு மற்றும் கொடி இடை அனைத்திலும் பாரபட்சம் முத்தமழை பொழிந்தான்.
“அதென்ன கோபம் வந்தால் மட்டும் மரியாதை வருகின்றது. மற்ற நேரம் எல்லாம் உன்னுடைய மரியாதை காற்று வாங்க போயிற்றோ?!” என்று அவளிடம் பேசிக்கொண்டே பெண்ணவளின் உடலை வீணையென மீட்ட, அவன் கொடுத்த சுகவேதனை தாங்காது, மங்கையவள் தோடி ராகம் பாடினாள். மன்னவன் வெளிப்படையாக தன் மோகத்தை காட்ட, மங்கையவள் அம்மோகத்தில் மூழ்கித் தான் போனாள். போர்களத்தில் பலநாட்களை கழித்தவன் முன்னே பொற்குவியலாக கிடந்த பெண்ணழகை, எங்கேயும் எதிலும் கிடைக்காத இன்பத்தை தன் மனைவியிடம் தேடினான். அவளது செவ்வரி ஓடிய கண்களும் கூரான நாசிகளும், குறுகிய உடுக்கை போன்ற இடையும் ரணவீரனை இரவெல்லாம் தூங்க விடாமல் மேலும் மேலும் அவளை நாடச் செய்தது. களைத்து கலைந்த ஓவியமாக ரணவீரனின் மார்பின் மேல் தலைசாய்த்து தூங்கிக் கொண்டிருக்கும் பூவிழியாழின் மணவாளன் மற்றொரு மங்கையை மனைவியாக கைப்பிடிப்பானா? இல்லை குருமாதாவின் வார்த்தையை மீறுவானா? மலருக்கு மலர் தாவும் வண்டென மாறுவானா?
