தலைவனின் வேங்குழலாகினள் மாது

தலைவனின் வேங்குழலாகினள் மாது

தலைவனின் வேங்குழலாகினள் மாது

தலைவனின் வேங்குழலாகினள் மாது

தலைவனின் வேங்குழலாகினள் மாது

தலைவனின் வேங்குழலாகினள் மாது

தலைவனின் வேங்குழலாகினள் மாது

தலைவனின் வேங்குழலாகினள் மாது

வேங்குழல் -4


  திருமணத்திலிருந்து மணமகள் காணாமல் போனது முதல் அப்சரா மணமகள் ஆனது வரை அறிந்து கொண்ட சொரூபனின் குடும்பம் கொதித்து எழுந்தது…

தங்களை ஏமாற்றிய கனகவேல் மீது வழக்கு தொடர்ந்தனர்… அத்தோடு விடுவார்களா அவரை அமைச்சர் பதவியில் இருந்தும் தூக்கி இருந்தனர் அதற்குப் பின்புலம் மேகநாதன் என்பதில் துளியும் ஐயமில்லை…

 திருமணம் முடிந்த கையோடு விடயத்தை வெளியே பரவ விடாமல் காதும் காதும் வைத்தது போல் மணமக்களை அழைத்துக் கொண்டு ஊட்டியில் உள்ள தங்கள் மாளிகைக்கு அழைத்து வந்திருந்தனர் துரையின் குடும்பம்…

 அப்சராவை தவிர அனைவரும் வெகு தீவிரமாக விவாதத்தில் ஈடுபட்டு இருந்தனர்…அவள் அங்கு ஒரு பார்வையாளராக மட்டுமே நிற்க வைக்கப்பட்டாள்… 

” எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்திருந்தால் இந்த மாதிரி ஆள் மாறாட்டம் பண்ணி இருப்பாங்க.. அவங்கள சும்மாவே விடக்கூடாது…!” என சிவரஞ்சனி ஒருபுறம்

 ” சும்மா விட போவதில்லை ஆனால் என் பேரனுக்கு அவங்க பதில் சொல்லியே ஆகணும்…!!” சித்ரகலா…

 “அவங்களை என்கிட்ட விடுங்க நான் அவங்கள பார்த்துக்கிறேன்… இப்போ அடுத்து நடக்க வேண்டியது என்ன…?? அதைப் பத்தி பேசுவோம் வெளியில் நிற்கின்ற இந்த பெண்ணை என்ன பண்றது…?? என சொரூபன் அருகில் நின்ற அப்சராவை காண்பித்து கேட்டார் மேகநாதன்…

 “அவளை என்ன பண்றதுன்னு கேட்டா… அடிச்சி துரத்தி விடுங்க… ரோட்ல போற நாயை கோபுரத்துல உட்கார வைக்க முடியுமா…??” என அப்சராவை பார்த்து ஆத்திரமாக கூறினார் சிவரஞ்சனி…

” அப்ப இந்த கல்யாணம் தாலி இதெல்லாம்…??” சித்ரகலா தயக்கமாக இழுத்தார்…

” அஞ்சோ பத்தோ கொடுத்து அடித்து விரட்டி விடுங்க சொரூபனுக்கு வேற ஒரு நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைக்கலாம்…!!” என சிவரஞ்சனி கூற…

“ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்… யாரை கேட்டு நீங்க எல்லாம் முடிவு பண்றீங்க… இது என் வாழ்க்கை அங்க நிக்கிறவள் என் பொண்டாட்டி… நான் தான் முடிவு பண்ணனும் அவ என் வாழ்க்கைக்குள் இருக்கனுமா…?? வேணாமா…? என வெகுண்டான் சொரூபன் 

 “என்ன சொல்ற சொரூபன் உன் நல்லதுக்காக தான பேசிட்டு இருக்கோம் அவள் ஒரு ஏமாற்றுக்கார பொண்ணு அவளை நம்பி எப்படி உன் பொறுப்புகளை கொடுக்கிறது… பணத்துக்கு ஆசைப்பட்டு நாளைக்கு அந்த ஏமாற்றுக்கார கழுதை உன்னை ஏதாவது பண்ணிட்டா நாங்க என்ன பண்ண…??” சிவரஞ்சனி விடுவதாக இல்லை…

 “மைன்ட் யுவர் வேர்ட்ஸ்…?? அவள் யாரோ இல்லை என் காதலி முன்னாள் உயிருக்குயிரான காதலி இன்னாள் காதல் மனைவி… அவளை நான் தான் வர சொன்னேன் போதுமா… இனி யாரும் அவளைப் பத்தி தப்பா பேசக்கூடாது…!!” என கோவமாக கூறிய சொரூபன் தன் விசை நாற்காலியை இயக்க…

” இத்தனை நாள் இல்லாமல் இப்போ திடீர்னு இந்த காதலி எங்க இருந்து முளைத்தாள்…?? சுத்தி இருக்கிறவங்க எல்லாம் முட்டாளாக்கிறியா சொரூபன்…?? “

 “எனக்கு ஆக்சிடெண்ட் ஆனது பற்றி அவளுக்கு தெரியாது… நானும் சொல்லவில்லை… கால் முடமான என்ன அவள் கட்டிக்க சம்மதிக்க மாட்டாளோனு நானே நினைச்சுகிட்டு அவளை ஒதுகினேன் அது மட்டும் அல்ல இந்த கால் இல்லாதவனை எந்த பெண் தன் கட்டிக்க சம்மதிப்பாள்… அதனாலதான் எனக்கு கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன் நீங்க தான் பிடிவாதமாக பிடித்து அந்த மஞ்சரி தலையில் என்னை கட்ட பார்த்தீங்க… ஆனா அவ சுதாரித்து எங்கே ஓடிப் போயிட்டாள்… ஆனா என் காதலி எனக்கு திருமணம் செய்தியைக் கேட்டு அவங்க வீட்டை எதிர்த்து ஓடி வந்து இருக்காள்… அவளுக்கு என் காதல் மட்டும் போதுமாம்… என்னோட முடம் அவள் கண்ணுக்கு குறையாத தெரியவில்லையாம் அப்படிப்பட்டவளை பற்றி நீங்க எப்படி தப்பா பேசலாம்…??”

 “அண்ட் மோர் ஓவர்… என்னோட சொந்த விஷயத்தில் தலையிட யாருக்கு அனுமதி இல்லை…!!” என நறுக்குத் தெரித்தார் போல் கூறியவன் அங்கு சமைந்து நின்ற அப்சராவை அழைத்து கொண்டு அவன் அறைக்கு சென்றான்…

” இது எப்படி உன் சொந்த விஷயம் ஆகும்…?? “என கேட்க முனைந்த சிவரஞ்சனியை தடுத்தார் மேகநாதன்…

” என்னங்க அவன் இப்படி பேசிட்டு போறான்… நீங்கள் கேட்க மாட்டேங்கிற என்னையும் தடுக்கிறீர்கள்…?? ” என சிவரஞ்சனி அங்கலாய்ப்புடன் கேட்க…

” விடு ரஞ்சுமா… அவனை பற்றி தான் தெரியுமே… எப்படியோ அவன் நம்ம கூடவே இருந்தா அதுவே போதும்… இப்போதைக்கு அவன் சந்தோஷம் தான் நமக்கு முக்கியம்…!!”என அந்நிகழ்வை அத்தோடு விட்டுவிடும் படி கூறி விட்டு சென்றுவிட்டார் மேகநாதன்

ஆனால் சிவரஞ்சனி அத்தோடு விட்டாரா…?? என்பது தான் பெரிய கேள்வி குறி…

 வான்டட்டாக சென்று தலையைக் கொடுத்தது போல் அப்சராவை தன் காதல் மனைவி என்று அனைவரின் முன் கூறி விட்ட சொரூபன்… வினையை வலிய இழுத்துக் கொண்டமோ… என யோசிக்கலனான்(வேற என்ன விதி வலியது அம்புட்டு தான் ) 

 ஆளாளுக்கு அவரவர் வேலையை பார்க்க சென்று விட எங்கு செல்வது என தெரியாமல் அப்சரா கைகளை பிசைந்து கொண்டு நின்றாள்… தப்பிக்கலாமா என வாசல் பக்கம் எட்டி பார்க்க அங்கோ கடோத்கஜன் அண்ணன் தம்பி போல் நாலு பவுன்சர்கள் கையை கட்டிக்கொண்டு இவளை தான் பார்த்து கொண்டு இருந்தனர்…

“ஆஹா உள்ள இருந்தா இவங்க நம்மள காலி பண்ணிடுவாங்க போல வெளியே போனா அவங்க நசுக்கிடுவாங்க போல இப்போ என்ன செய்ய கர்த்தாவே…!!”என தவித்த படி நின்று கொண்டு இருந்த சமையம் அவள் அருகில் வந்த ரியான்…

“மேடம் சொரூபன் சார் ரூம் லெப்ட் போய் ரைட் திரும்பினா வந்திரும் போங்க இங்க நிக்காதீங்க…!!”என அவன் என்னவோ சாதாரணமாக தான் சொன்னான் ஆனால் அப்சராவிற்கு தான் அது மிரட்டும் தோணியில் கேட்டு தொலைத்தது…

அதில் அரண்டவள் பதறி அடித்து கொண்டு எது வலது எது இடது என தெரியாமல் ஓட தொடங்கினாள்…

ஆக சிறந்த அந்த மாளிகையின் தங்க முலாம் பூசப்பட்ட அறையின் வாயில் முன் மூச்சிரைக்க வந்து நின்றாள் அப்சரா…

“ஹரே பகவான் உன்னை அப்படி என்ன நான் பெருசா கேட்டேன்னு இப்படி மாட்டி விட்டு இருக்க… நேத்து நைட்ல இருந்து ஓடிக்கிட்டே தான் இருக்கேன் இன்னும் யாரெல்லாம் என்ன விரட்ட போறாங்களோ முடிலடா முருகேசா…!!” என துவண்ட தன் கமல பாதங்களை சிரமம் கொண்டு எட்டு வைத்தவள் அதற்கு மேல் முடியாமல் அந்த கதவின் மேல் சாய்ந்து நின்றாள்… அந்த நிம்மதி கூட நினைக்காமல் அறையின் தானாகவே திறந்து கொண்டது மாய ஜால அறை…

அதுவரை கதவில் அநாயசமாக நின்று இருந்தவள் பொத் என்று கீழே விழ போக சரியாக தன் சேய்மைக் கட்டுப்பாடு கொண்ட சக்கர நற்காலியில் வெளியே வந்த சொரூபன் கைகளில் தஞ்சம் அடைந்தாள் நங்கை

தன் மீது மலர் மாலையாக விழுந்த அப்சராவை கோவம் சுடர் விடும் விழிகளில் ஏறிட்டவன் உடனே முகத்தை அலட்சிய பாவனைக்கு தத்து எடுத்துக் கொண்டவன் 

“வருக வருக மஹாராணி இல்லை திருட்டு ராணி சொல்லணுமோ…?? முதலிரவுக்கு பக்கவா தயாராகி வந்துட்ட போல சும்மா சொல்லக்கூடாதுடி திருட்டு காசுல நல்லா உடம்ப வளத்து வச்சிருக்க அதுவும் எல்லாம் கும்ன்னு இருக்குடி…!”என மலங்க மலங்க விழித்தபடி மடியில் கிடந்தவளின் வெண்ணை இடையை இடது கையால் வலிக்க வலிக்க கொய்த படி கேட்டு வைத்தான்…

“ஸ்ஸ்ஹா…!!” என அப்சராவின் முகம் வலியில் தவித்தது…களிறின் இறுகிய பிடியில் இருந்து விடுபட போராடினாள் மாது…

“என்ன ஆரம்பிக்கலாமா…??” என புருவம் உயர்த்தி சொரூபன் கேட்ட தினுசில் விதிர் விதிர்த்துப் போனாள் காரிகை …

 காட்டு மூங்கில் குழல் ஆகிய மாயம் என்னவோ…??

செல்லோஸ் அடுத்த எபி வர லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட்டு வைங்க 💖💖😍😍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *