MMVA

This entry is part 6 of 13 in the series MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

மோகம் 36:


இரண்டு மாதங்களுக்கு பிறகு…


அந்த பிரபலமான கல்யாண மண்டபம் மக்கள் கூட்டங்களால் நிரம்பி வழிந்தது.


மித்ரனிற்கு கை முழுமையாக குணமடைந்திருந்தது.


இதற்கிடையில் பல நிகழ்வுகள் நடந்து முடிந்திருந்தன.


விக்கி  ஒரு நாள் மித்ரனை அழைத்து “மச்சான் ரமேஷ் இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சாச்சாம் டா அவன் பெங்களூரில் தான் இவ்வளவு நாள் இருந்துருக்கான்…”


” நான் நம்ம ஆட்களிடம் இங்க இழுத்துட்டு வர சொல்லிருக்கேன் இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம குடோன்ல இருப்பாங்க..” என்று கூறினான்.


“சரிடா மச்சி அவன் வந்ததும் என்னை வந்து அழைச்சிட்டுப்போ” என்றான்.


அங்கு ரமேஷோ பயத்தில் என்ன செய்வது எது செய்வது என்று தெரியாமல் தெரு தெருவாக ஓடிக் கொண்டிருந்தான்.


மித்ரனுக்கு ஆக்ஸிடண்ட் ஆன மறு தினத்தில் இருந்த நிவேதாவின் தொடர்பு அறுந்து போனது.


எவ்வளவு முயன்றும் அவளைத் தொடர்புக்கொள்ள முடியவில்லை. பிறகு தன் நண்பன் லாரி டிரைவருக்கு அழைத்தான் .


அவனும் இவன் போனை எடுக்கவில்லை என்றதும் அவன் வீட்டில் சென்று விசாரித்தான்.


அதற்கு அவன் மனைவி யாரோ நான்கு ஐந்து பேர் வந்து அழைத்துச் சென்றதாக கூறினாள்.


இவன் பயத்துடன் அன்று பெங்களூர் ஒடி வந்தவன் தான் இரண்டு மாதங்கள் யார் கண்ணிலும் படாமல் இருந்தான்.


ஆனால் கையில் இருந்த பணம் காலி ஆகிவிட்டதும் எ.டி.எம்மில் பணம் எடுத்துக்கொண்டு வந்தான்.


விக்கி இவன் அக்கவுண்டில் இருந்து பணம் எடுக்கப்பட்ட செய்தி வந்ததும் அந்த எ.டி.எம்.இருந்த இடத்தை வைத்து தான் அவனை கண்டுபிடித்தனர்.


விக்கி அவன் அக்கவுணடை பார்க்கும் போது தான் தெரிந்தது அவன் அக்கவுண்டில் இருபது லட்சம் ஒரு அக்கவுண்டில் இருந்து டிரான்ஸ்பர் ஆகியிருந்தது.


அந்த அக்கவுண்ட் யாருடையது என்று பார்த்தவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனே மித்ரனிடம் கூறினான். “மச்சி நிவேதா ரமேஷ்க்கு இருபது லட்சம் பணம் அனுப்பி இருக்காடா “என்றதும் அதை கேட்டு அதிர்ந்தவன் உடனே விஸ்வநாதனை அழைத்தான்.


“மாமா நிவேதா எங்கே “என கேட்டதும் சிறிது நேரம் மவுனமாக இருந்தவர் “அப்படின்னு யாரையும் எனக்கு தெரியாது மித்ரா… யாரை பற்றியும் என்னிடம் கேட்காதே” என்று வைத்துவிட்டார்.


உடனே விக்கிக்கு அழைத்து வர சொன்னவன் அவனுடன் விஸ்வநாதனின் அலுவலகத்திற்கு சென்றான்.


அனுமதி இல்லாமல் தன் அறைக்குள் வந்தவனை கண்டு அவன் வரவை எதிர்ப்பார்த்தது போல் அமைதியாக இருக்கையைக் காட்டி அமர சொன்னார்.


இருக்கையில் அமர்ந்து அவரைக் கூர்மையுடன் பார்த்தான் “என்ன மாமா உங்க மகள் மேல் ரொம்ப பாசம் போல ” என்று நக்கலாக வினவினான்.


தலைகுனிந்து சிறிது நேரம் அமர்ந்திருந்தவர் அன்று நிவேதா கூறியதையும் பின் நடந்ததையும் கூறினார். அன்று மித்ரனைப் பார்த்து விட்டு இரவு வீட்டுக்கு வந்தவர் நிவேதாவிடம் சென்று “இன்னும் ஒரு மணி நேரத்துல உனக்கு ப்ளைட் கிளம்பு ” என்றதும் அதிர்ந்தவள் “நான் ஏன் கிளம்பனும் நான் எங்கேயும் போகமாட்டேன்” என்று கத்தினாள்.


விட்டார் ஒரு அறை கன்னத்தில் “பளார்” என்று சத்தம் கேட்கவும் வெளியே வந்த அவர் மனைவி ”ஏங்க பிள்ளையை அடிக்கிறீங்க” என்று தடுத்தவரைத் தன் இடுப்பில் இருந்த பெல்டை அவிழ்த்து விலாசி விட்டார்.


ஆத்திரம் தீரும் மட்டும் இருவரையும் அடித்து வெளுத்தார். இருவர் கத்தின கதறலுக்கும் அவர் செவி சாய்க்கவில்லை .


பின் சிறிது நேரம் கழித்து அவர்களை விட்டவர் தன் மனைவியை நோக்கி ”பிள்ளைய வளர்த்து  வச்சிருக்கா பாரு அடுத்தவன் உயிர எடுக்குற அளவுக்கு ”


“அப்படி என்ன வன்மம் ஏன் நம்மகிட்ட இல்லாத பணமா பணத்துக்காக அவன கல்யாணம் பண்ணனும் அதும் ஏற்கனவே கல்யாணம் ஆனவன உனக்கு உடம்பு கூசல …”என்று மனைவியில் ஆரம்பித்தவர் மகளிடம் முடித்தார்.


“இன்னும் ஒரு மணி நேரம் தான் டைம் அதுக்குள்ள டிராலிய பேக் பண்ணி கிளம்பிருக்கனும் …அப்படி பண்ணலன்னா உன் அம்மா தெருவுல தான் நிற்கனும் ”


“உங்க அம்மா நினைச்சிருந்தா எப்பொழுதோ உன்னை திருத்திருக்கலாம் ஆனால் அவளும் உன்கூட சேர்ந்து கொண்டு நீ பண்றதுக்கெல்லாம் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டுறா”.


“பணம் இருந்த தெனாவெட்டுல தானே இரண்டு பேரும் இப்படி அடுத்தவன் குடும்பத்தை நோண்டுனீங்க ”


“நீங்க இனி ஒவ்வொரு நாளும்  வேலை செஞ்சாதான் சாப்பாடு உன்னை அமெரிக்கா அனுப்பிவைக்குறது கூத்தடிக்க இல்லை தனியா இருந்து உன் செலவு எல்லாவற்றையும் நீ தான் பார்த்துக்கனும் சாப்பாட்டுக்குக் கூட பணம் அனுப்ப மாட்டேன்”.


“நீ அங்க என்ன வேலை செய்வியோ அதை பற்றி எனக்கு கவலை இல்லை உன்னை இப்போ அமெரிக்கா அனுப்புறதே நீ உயிரோட இருக்கனும்..”


” கண்டிப்பா மித்ரன் கண்டுபிடிச்சுடுவான் அதுக்கப்புறம் உன்னை என்னால கூட காப்பாற்ற முடியாது”


” உங்க இரண்டு பேருக்கும் ரெண்டே ஆப்ஷன் தான் ஒன்னு நீ அமெரிக்கா கிளம்பனும் இல்லை இப்போவே இந்த நிமிஷமே வீட்டைவிட்டு கிளம்புங்க ” என்று உறுமியதும் இருவரும் என்ன செய்வது என்று முழித்தனர்.


தன் மனைவியை நோக்கி திரும்பியவர் “உன்னை சும்மா விடுவேன்னு நினைக்காதா எல்லாத்துக்கும் காரணமே நீ தான் இனி இந்த வீட்டுல எந்த வேலைக்காரங்களும் வேலை செய்ய வரமாட்டாங்க வீட்டு வேலையில் இருந்து தோட்டத்து வேலை வரைக்கும் எல்லாம் நீ தான் செய்யனும் “என்றதும் ஜந்துக்கு  வயிற்றில் பயபந்து உருண்டது.

இதை அனைத்தையும் மித்ரனிடம் கூறியவர்” அவங்க இரண்டுபேரும் பண்ணினதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் மித்ரா அவங்களை மன்னிச்சிருபா “.


“இந்த முடிவுக் கூட என்னோட சுயநலம் தான் காரணம் எனக்கு இருக்குறது ஒரே பொண்ணு அதனால் தான் இப்படி பண்ணினேன்”.


“உன்னால் இப்போ கூட அவளைக்கண்டுப் பிடிக்க முடியும் எனக்காக அவளை விட்டுடு மித்ரா “என்று கையைப் பிடித்து மன்றாடினார்.


அவன் அவர் கையைத் தட்டிக் கொடுத்து விட்டு விக்கியுடன் கிளம்பி வந்துவிட்டான்.


அவர்கள் வரும் வழியில் விக்கிக்கு கால்வர எழுத்து பேசியவன் “அந்த நாய அங்கேயே புதைச்சிடுங்க இல்லைனா அனாதைன்னு சொல்லிடுங்க “என்று கூறிவிட்டு அனைத்தான்.


“கூட்டிட்டு வரும் போது தப்பி ஓடிருக்கான் மச்சி… ஓடும்போது சைடுல வந்த லாரிய பார்க்கலை போல ஆளு அவுட் ஸ்பாட்லையே … அதான் கால் பண்ணி சொல்றாங்க…” என்றதும் சிரித்தவன்


“கடவுளே தண்டனைக் குடுத்துட்டார் போல எத்தனை பெண்களை ஏமாற்றி இருப்பான் அதான் அவங்க சாபம் எல்லாம் ஒன்னா சேர்ந்து கொண்டுட்டு போயிடுச்சு ” என்றவன் இனி எந்த பிரச்சனையும் இல்லை என்று நினைத்தான்.


ஆனால் மதுவே முட்டாள் தனமாக யோசித்து தன்னையும் வதைப்பாள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. 


இன்று….


மணமகன் அறையில் இருந்து கொண்டு மித்ரன் மதுவுக்கு அழைத்து அந்த அறைக்கு வர சொன்னான்.


இவள் வந்ததும் விக்கி வேட்டி சட்டையில் புது மாப்பிள்ளைக்குரிய அத்தனை கம்பீரத்துடனும் அமர்ந்திருந்தான்.


பக்கத்திலே மித்ரன் இவள் வந்ததும் சிரித்துக்கொண்டே “மது இங்க வாயேன்” என்றவன் அவள் அருகில் வந்ததும் அவள் கையை எடுத்து தன் இடுப்பில் வைத்தான்.


அவன் இப்படி செய்வான் என்று அவளுக்கு எப்படி தெரியும் விக்கி ஆவென்று வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருக்க இவள் வெடுக்கென கையை எடுத்துக்கொண்டு மித்ரனைக் கண்டு முறைத்தாள்.


அவள் கையை பட்டென்று எடுத்ததும் “மது வேட்டி அவிழ்ந்துடுமோன்னு பயமா இருக்குடி” என்று ஒன்னும் தெரியாதவன் போல் கூறினான்.


விக்கி உடனே “டேய் வேண்டாம்”


உடனே மித்ரன் அவனைப் பார்த்து “மச்சான் நீ இப்ப தான் எல்.கே.ஜி. நான் பி. கச்.டியே முடிச்சிட்டேன் அதனால நீ சின்ன பையன் இதெல்லாம் கண்டுக்ககூடாது நாங்க சீனியர் கொஞ்சம் அப்படி இப்படிதான் இருப்போம் அதனால அந்த பக்கமா திரும்பிப்பியாம் “என்று கண்ணடித்தவன்.


மதியிடம் திரும்பி அவளிடம் நெருங்கி இழைந்துக்கொண்டே ” கட்டி விடு டி ” என்றான்.


மது தன் தலையில் அடித்துக் கொண்டவள் அவனுக்கு கட்டி விட்டு விக்கி பக்கம் திரும்பாமல் அறையை விட்டு ஓடி விட்டாள்.


இவனை பார்த்து முறைத்துக் கொண்டிருந்த விக்கியை “என்னடா மச்சான் கல்யாண மாப்பிள்ளை கலையே உன் முகத்துல இல்லை” என்று கிண்டலடித்தான்.


அவன் முதுகில் இரண்டு அடிபோட்ட விக்கி “ஏன்டா சொல்லமாட்ட நீங்க இப்போதான் கல்யாணம் பண்ணின மாதிரி அஜால்குஜாலா இருக்கீங்க” என்றதும் “மச்சி அஞ்சு மாதம் தான்டா ஆயிருக்கு” என்றவன் “அதுலையும் நாலு மாதம் ஒன்னுமே பண்ணலை “என்றவனைப் பார்த்து “போதும் நம்பிட்டேன் “என்றான் கடுப்பாக .


“மச்சான் பிலீவ் மீ டா “என்றதும்” நீ நாலு மாதம் சும்மா இருந்த.. இதை நான் நம்பனும் போடா அதுக்கு வேற ஆளைப் பாரு…” என்றவன் இன்னும் இந்த ஐயர் கூப்பிட மாட்டேங்கிறார் என்று புலம்பியதும் அவருக்கு கேட்டதோ என்னவோ உடனே அழைத்தார்.

அமோகமாக கல்யாணம் முடிந்து பாலும் பழமும் கொடுத்து மணமக்களைப் பெண் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். மதுவும் மித்ரனும் அவர்களுடன் வந்தனர்.


அப்பொழுது மது தன் வீட்டிற்கு வரவும் மித்ரனும் வந்தான் முற்றத்தில்தான் அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர்.


சிறிது நேரத்தில் மித்ரன் மதுவை அழைத்தான் கிளம்பலாம் என்று மது கீழே தலையைக் குனிந்து கொண்டு ” நான் வரலை அத்தான்” என்றதும் அவள் இங்கு தங்க விரும்புகிறாள் என்று நினைத்துக்கொண்டு “இன்னொரு நாள்.. இந்த வாரக் கடைசியில் வரலாம்டா” என்றதும் “இல்லை அத்தான் நான் வரலை நிரந்தரமா நான் இங்கேயே இருக்கேன் “என்றதும் ஒன்றும் புரியாமல் ” என்ன மது சொல்ற” என்று கேட்டான்.


“நான் இனி அங்க வரலை அத்தான் நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கோங்க … அத்தான் நான் உங்ககூட இருந்தா எங்க அம்மாக்கு ஆனது போல் உங்களுக்கும் ஆயிடுமோன்னு பயமா இருக்கு நான் வரமாட்டேன் நீங்க வேற கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா இருங்க …” என்றதும் விட்டானே ஒரு அறை.


முதலில் ஒன்றும் புரியவில்லை கன்னம் திகுதிகுவென  எரியவே அவன் தன்னை அடித்தான் என்றே தெரிந்தது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *