MMVA

This entry is part 11 of 13 in the series MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

மோகம் 1: 

சென்னை போகும் வழியில் பயணித்து கொண்டிருந்த காரில் யாரும் பேசும் நிலைமையில் இல்லை. 

பதுமையென அமர்ந்திருந்தவள் தன்  பக்கத்தில் ராஜகுமாரன் போல்  அமர்ந்திருந்தவனை கண்டு யார் இவன், வந்தான் கல்யாணம் பண்ணினான் ,இப்போ எங்கேயோ கூட்டிட்டு போறான். 

யார் இவன் அப்பாவும் எதுவும் சொல்லல  சித்தி யும் அமைதியா தானே இருந்தாங்க (அமைதியாவா…. உன் புருஷன் அந்த அடங்கபிடாரிய அடக்கி வச்சிருந்தான்). 

இவன் என் புருஷனா!!இனிமே இவன் கூடத்தான் இருக்கனுமா ,இவன் என்ன செய்ய காத்திருக்கானோ தெரியலயே. 

ராணி சொன்னதெல்லாம் உண்மையா இருக்குமோ என்று இன்று காலையில் நடந்ததை நினைத்து பார்த்தாள்.

தன் வீட்டிற்கு வருகை தந்திருக்கும் அந்த இரு இளைஞர்களை தன் வீட்டு முற்றத்தில் அமர வைத்திருந்தார். அவர்களே வந்த விஷயத்தை கூறட்டும் என்று அமைதி காத்தார்.

 வந்தவர்களில் ஒருவன் முக இறுக்கத்துடனும் மற்றொருவன் ஏதோ சொல்ல வருவதும் பின்பு தயங்குவதுமாக இருந்தான்.இவர்கள் இப்பொழுது பேச்சை தொடங்க மாட்டார்கள் என்பதால் தானே பேச ஆரம்பித்தார், “என்ன தம்பி யாரு நீங்க என்னை எதற்கு பார்க்க வந்துருக்கீங்க “என்றார் அவர் ராமர் .

சார் நாங்க சென்னையில் இருந்து வந்திருக்கிறோம்.  என் பெயர் விக்னேஷ் பக்கத்தில் அமர்ந்திருந்தவனை காட்டி இவன் என் நண்பன் பெயர் மித்ரேஷ்வரன் சென்னையில் சொந்தமாக பைனான்ஸ் கம்பேனி வச்சு நடத்திட்டு வரான்.

“சரி தம்பி ,என்ன எதுக்கு பார்க்க வந்துருக்கீங்க “

“என் நண்பனுக்கு உங்க பெண்ணை கேட்டு வந்துருக்கோம்”. 

இவர் ஏதோ பேச வரவும் உள்ளே இருந்து இவர்கள் பேசிக்கொண்டிருந்தை கேட்டுக்கொண்டிருந்த சிவகாமி (ராமரின் மனைவி) வெளியே வந்து வாயெல்லாம் பல்லாக “வாங்க தம்பி உங்க அம்மா அப்பா வரலையா “என்று  மித்ரனை பார்த்து கேட்டாள். 

அவர் வந்ததும் பல்லை கடித்தவனை விக்கி  அவன் கையை அழுத்தி பிடித்து அமைதிபடுத்தினான். ஏய் நான்தான் பேசிட்டு இருக்கேனே நீ ஏன் இப்போ வெளியே வந்தாய்  என்றார். 

அவர் பேசியதை அவள் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. “என் பெண்ணை எங்கு பார்த்தீர்கள் நீங்க உங்க அப்பா அம்மாவை கூட்டிட்டு வந்து இருக்கலாமே”.

 “அவர்களும் வந்திருந்தால் இன்றே பரிசம் போட்டிருக்கலாம் “என்று அவள் மட்டும் பேசிக் கொண்டே சென்றாள்.இவள் பேசுவதை கேட்டு கோபமடைந்த ராமர் “ஏய் யாரு என்னன்னு விசாரிக்காம நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போற” என்றார். 

இல்லங்க இந்த தம்பியை நான் முன்பே நம்ம ஊரில் பார்த்துருக்கேன்.நம்ம ஊரில் படம் எடுத்தாங்கள்ள அப்போ இந்த தம்பியை பார்த்திருக்கேன் என்று மித்ரனை சுட்டி காட்டினாள்.

இவர்கள் பேச்சை அங்கு அமர்ந்திருந்தவனால் கேட்க முடியவில்லை போல அவன் தன் தொண்டையை செருமியவன் சிவகாமியை பார்த்து “உங்க பெண்ணை சொல்லவில்லை, ராமரை காண்பித்து இவருடைய பெண்ணை தான் நான் மணந்து கொள்ள போகிறேன்” என்றான்.

சிவகாமி அதிர்ச்சியாய் அவனை பார்த்து  “அவளையா அவள் இந்த வீட்டு சம்பலமில்லா வேலைக்காரி அவளை கட்டி கொடுக்க முடியாது. வேண்டுமென்றால் என் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள் “என்றாள்.

மித்ரனோ தன் கோபத்தை கைகளை மடக்கி கட்டுக்குள் கொண்டுவந்தவன் ஒரு முடிவுடன் அவளை பார்த்தபடி இருந்தான்.
சிவகாமி மனதிற்குள் அய்யோ பார்த்தாலே பணக்காரன் போல் இருக்கிறான். 

கண்டிப்பாக கோடி கணக்கில் சொத்து இருக்கும் போல வெளியே நிக்குற வண்டியை பார்த்தாலே தெரியலையா கண்டிப்பா இவன நம்ம பெண்ணுக்கு கட்டி வைத்தால் என் மக ராணி மாதிரி இருப்பா. ஆனா இவன் என் தலையில் மண்ணல்லி கொட்டுறான் அந்த பிச்சைக்காரிய போய் கட்டுறேனு சொல்றான் கூருகெட்டவன். 

இவன விட கூடாது என்று மனதில் நினைத்தவர் இவன் கிட்ட பேசி எப்படியாவது என் பெண்ணை கட்டிக்க வைக்கணும். 
எதோ இவனிடம் கூற வந்த சிவகாமியிடம் கை நீட்டி அவரை தடுத்தவன் தன் முழு உயரத்துக்கு எழுந்து நின்றவன். 

ராமரிடம் சென்று” உங்க மகள் மதுமதியை தான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் அதை நீங்களே நினைத்தாலும் தடுக்க முடியாது “என்று பிற்பாதியை சிவகாமியை பார்த்து சொன்னான்.
பின்பு ராமரிடம் திரும்பி” நீங்க உங்க பெண்ணை நல்லா பார்த்துக் கொண்டதை விட, நான் நன்றாக பார்த்துக் கொள்வேன் “என்று நல்லா என்ற வார்த்தையை அழுத்தி சொன்னான். 

அவன் அப்படி சொல்லவும் ராமர் முகம் வேதனையை தத்தெடுத்து கொண்டது.
சிவகாமி ஆங்காராமாக “முடியாது முடியவே முடியாது அந்த பிச்சைக்காரிக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைய நான் விட மாட்டேன் என்றவரை விக்கியும் மித்ரனும் அற்பபுழுவை பார்ப்பது போல் பார்த்தனர். 

பின்பு மித்ரன் இது வேலைக்காகாது என்று நினைத்து கொண்டு தான் கொண்டு வந்த பெட்டியில் இருந்து ஒரு பத்திரத்தை எடுத்து சிவகாமியின் முன்பு நீட்டி,” இது நீங்க இருக்குற இந்த வீடு ,உங்களுக்கு இருக்குற நிலத்தை வச்சு என்கிட்ட ஒரு கோடி பணம் வாங்கினதுக்கான பத்திரம் இது” என்றான்.

அவன் சொல்வதை கேட்டு அதிர்ந்த சிவகாமி “நான் உன்கிட்ட பணமே வாங்க வில்லை யாருகிட்ட பொய் சொல்ற ” என்றாள்.

மோகம் 2 :

அதிர்ந்து நின்ற சிவகாமியைப் பார்த்த மித்ரன் சிரித்து கொண்டே ,”நீங்க தான் இந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்துருகீங்க, நீங்களே பாருங்க “பத்திரத்தை அவளிடம் நீட்டி “இது உங்க கையெழுத்துதானே “என்று கேட்டான். 

சிவகாமி  அதை அதிர்ச்சியுடன் பார்த்து ஆம் என தலையசைக்க அவளைப் பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டே தன் தாடையை தடவியவாறு ரெண்டே ஆப்ஷன்தான் என்று சொல்லி ஒன்னு பணம் இல்லையென்றால் மதுமதியை கட்டி கொடுங்கள் என்றான்.
 
சிவகாமி ஏதோ சொல்ல வாயெடுக்க அவள் பேச இடம் கொடுக்காமல் “முடியாது என்றால் இதோ நிற்கிறானே என் நண்பன் காவல் அதிகாரி தான் இவனிடம் நான் ஒரு கம்பிலைன்ட் எழுதி குடுத்தா போதும் மொத்த குடும்பத்துக்கும் களி தான் எப்படி வசதி”.” உங்க பெண்ணை கல்யாணம் பண்ணி குடுத்தா இந்த பத்திரத்தை கல்யாணம் முடிந்த அடுத்த நிமிஷம்  கிழுச்சி போட்டுறுவென்” என்றான்.

சிவகாமிக்கு இப்பொழுது அவள் இருந்த வீடும் தன் நிலமும் கைக்கு வந்தால் போதும் என்று நினைத்து கொண்டு சரி என்றாள். இதை எல்லாம் பார்வையாளர்களாக மட்டுமே ராமர் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு தன் மகள் இந்த இடத்தை விட்டு வேறு எங்காவது சென்று நன்றாக இருந்தால் போதும் என்று நினைத்தார். 

ஆனால் ராஜகுமாரன் போல் ஒருவன் வந்து தன் பெண்ணை கேட்டதும் அவருக்கு சம்மதம் தான், இருந்தாலும் வாயை திறக்க வில்லை. ஏனென்றால் இது வரைக்கும் தான் இருந்தும் தன் மகளுக்கு எதுவும் செய்தது இல்லை .

தன் மனைவியே அவனை கண்டதாக சொல்லவும் கண்டிப்பாக நம்பிகையானவனாக தான் இருப்பான் என்று தன் பெண்ணை அவன் அழைத்து செல்லட்டும் என்று ஒன்றும் சொல்லாமல் நின்றார்.

பின்பு தான் சிவகாமி கத்தவும் அவன் அவளை சொத்தை வைத்து மடக்கியதும் பார்த்து கொண்டு நின்றாரே ஒழிய எதும் பேச வில்லை. ஏனெனில் சொத்து மொத்தமும் தன் மனைவி பெயரில் தான் எழுதி வைத்திருந்தார் 

( அவராக எழுத வில்லை குடி போதயில் சிவகாமி தன் பெயருக்கு மாற்றி எழுதி கையெழுத்து வாங்கி கொண்டார்).

அப்பொழுது தான் வயலில் வேலை செய்து களைப்புடன் வீட்டிற்க்கு வந்த மதியை பார்த்து “ஏய் புடவை கட்டிட்டு வா…..உனக்கு கல்யாணம் போய் ரெடி ஆகு “என்று வெறுப்புடன் சொன்னாள்.

சிவகாமிக்கு இப்பொழுது தன் பெயரில் இருக்கிற சொத்துதான் கண்ணுக்கு தெரிந்தது அதை எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என்று அவர் யோசித்துக்கொண்டிருந்தார்.

தன் சிற்றன்னை சொன்னதை கேட்டு அதிர்ந்தவள் கண்கள் குளமாக தன் தந்தையை பார்த்தாள். அவரும் அவள் அருகில் வந்து ,”இன்றோடு உன் கஷ்ட காலம் முடிந்து விட்டது மதி போய் புடவை கட்டிட்டு வா ,நான் பக்கத்து வீட்டுக்கு போய் ராணியை போய் கூட்டிட்டு வரேன்…. உனக்கு உதவி பண்ணுவா, நீ உன் அறைக்கு போ மா என்று விட்டு சென்றார்.

அவள் வந்ததில் இருந்து அவளையே வைத்த கண் வாங்காமல் மித்ரன் பார்த்து கொண்டிருந்தான். அவள் கண் கலங்கவும் அவள் கண்ணீரை துடைக்க அவன் கைகள் பரபரத்தது. தன்னை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

ராணி வரவும் தன் நண்பனுக்கு கண்களால் எதுவோ சொல்ல அவன் தாங்கள் வந்த வண்டியை நோக்கி சென்று அதில் இருந்த ஒரு பையை எடுத்துக்கொண்டு வந்து ராணி யிடம் கொடுத்தான்.

ராணி உள்ளே அவளை தயார்படுத்திக்கொண்டே இங்கு நடந்ததை அவளிடம் ராமர் சொல்ல சொன்னதாக அனைத்தையும் கூறினாள்.பின்பு சிறிது நேரம் கழித்து மதியை வெளியே அழைத்து வந்தாள் ராணி. 

பச்சை பட்டு கட்டி தங்க ஆபரணங்கள் அளவாக அணிந்து அழகே உருவாக நின்றவளை கண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.

சிவகாமி அய்யோ எவ்ளோ நகை , இந்த பட்டு புடவைய பார்த்தா பத்தாயிரம் இருக்கும் போல இவளுக்கு வந்த வாழ்க்கைய பார்த்தியா கடவுளே என்று மனதுக்குள் பொருமி கொண்டிருந்தாள். 

ராமர் தன் மகளை கண்டு இனிமேலாவது உனக்கு எல்லாமே நல்லதா நடக்ககட்டும்.
மித்ரன் அவளை பார்த்ததும் எழுந்து நின்றவன் உணர்ச்சி வசபட்டதில்  கரகரத்த தன் குரலை செறுமியவன் “போலாமா” என்றவுடன் தான் அவனை நிமிர்ந்து பார்த்தாள் மதுமதி.

அவளை அழைத்து சென்று சாமியரையில் நிறுத்தி தன் சட்டை பையில் இருந்த தாலி கோர்திருந்த மஞ்சள் கயிற்றை அவள் கழுத்தில் கட்டி தன் பாதியாக ஏற்றுக் கொண்டான்.

ராமர் காலில் மட்டும் விழுந்து வணங்கியவன் சிவகாமி காலில் விழப்போன மதியை தன்னுடன் சேர்த்து போலாமா என்றவன் பின்பு யாரையும் கண்டு கொள்ளவில்லை. 

சிவகாமி அவன் செய்த செயலில் முகம் கறுத்து நின்றார். 

அவன் காரில் மதியை ஏறுமாரு சொல்லி அவள் அமர்ந்ததும் , அங்கு நின்றவர்களிடம் வந்து ” இனி யாரும் மதியை தேடிக்கிட்டு சொந்தம் கொண்டாடி வரக்கூடாது” என்று சிவாகமியை பார்த்துக் கூறினான். ராமரை பார்த்து “உங்களுக்கு பார்க்கணும்னு தோணுச்சுனா என்கிட்ட சொல்லிட்டு வந்து பாருங்க”. 

அவன் வண்டியில் ஏறிக்கொண்டு தன் நண்பனை வண்டியை கிளப்ப சொன்னான்.
சில்லென்ற காற்று தன் முகத்தில் வந்து மோதவும் நினைவுக்கு வந்தவள் அங்கு ஏதோ பேசுவதை என்னவென்று கவனித்தாள். 

விக்கி மித்ரனிடம் “மச்சான் ,நீ என்னை போலீஸ்னு சொன்னதும் அந்த பொம்பளை மூஞ்சு பேயறைந்தது போல ஆயிடுச்சுடா “என்று இருவரும் பேசி சிரித்தார்கள். 
இதை கேட்டவளுக்கு பக்கென்று இருந்தது.

மோகம் 3 :

அய்யோ கடவுளே என்ற இவள் குரலில் சிரித்தவர்கள் இவள் பக்கம் திரும்பினர்.
மித்ரன் அவளை பார்த்து ,”என்ன வேணும் “என்றான்.

அவள் அவனை பயத்துடன் பார்க்கவும் முறைத்தான். 

எதுக்கு இப்படிமுறைச்சு பாக்குறாங்க எற்கனவே பயமா இருக்கு இதுல இவர் வேற முறைச்சு முறைச்சு பாக்குறார். 

விக்கி அவள்பால் இரக்கம் கொண்டு ” நீங்க பயத்துடன் பார்த்தால் இன்னும் முறைச்சுதான் பார்ப்பான், அதனால் எப்பொழுதும் போல நார்மலாஇருங்க”. 

யாரு என்னன்னு ஒன்னுமே தெரியாம நான் எப்படி நிம்மதியா இருக்க முடியும் என்று மனதோடு பேசியவள் விக்கியைப் பார்த்து சிநேகமாக சிரித்தாள்.

அதை பார்த்த மித்ரன் அவளது சிரித்த முகத்தை தன் மனதில் பதிந்து கொண்டான்.”அண்ணா” என்று விக்கியை அழைத்தாள் அவள் அழைத்ததும், “என்னையா அண்ணனு கூப்பிட்ட ” என்றான் அவள் ஆமென தலையாட்டியதும் ,மித்ரன் விக்கியிடம் “ஏன் அவ என்ன அண்ணானு கூப்புடுவானு நினைச்சியா “என்றான். 

“ஆமாம் மச்சான் அப்படி மட்டும் நினைச்சு பாரேன் “என்றதும் மித்ரனின் முகம் வெலக்கெண்ணெய் குடித்தது போல் ஆனது. அவன் முகம் போனப் போக்கய் பார்த்துவாய் விட்டு சிரித்தாள்.

அதை விக்கி கனிவுடன் பார்த்தான் என்றால் மித்ரனோ காதலுடன் பார்த்தான்.அவன் பார்வை தன்னை எதுவோ செய்ய  தன் பார்வையை விக்கி பக்கம் திருப்பி அவனிடம் , “நீங்க போலீஸ் இல்லையா அண்ணா “என்றாள்.

அவன் இல்லை என்று தலையாட்டியதும்  பயத்துடன் விக்கியைப் பார்த்தாள். “உன் சித்தியை மிரட்டி வைக்கத்தான் அப்படி சொன்னான்”.

பின்பு சிறிது நேரம் கழித்து ஒரு ஹோட்டலில் சாப்பிட இறங்கினார்கள் மித்ரன் விக்கியிடம் தனியாக குடும்பத்தினர் அமர்ந்து சாப்பிடும்படி ஒரு அறையை புக் செய்ய சொன்னான்.

அவன் முன்னே செல்ல மித்ரன் மதி இறங்க கை நீட்டினான் அவளும் அவன் கையை பிடித்து இறங்கிவிட்டு சிறிது நேரம் நடந்தவள் அனைவரும் அவளையே பார்ப்பதுபோல தோணவே அவள் பிடித்திருந்த அவன் கையை பதட்டத்தில் அழுத்தில் பிடித்துக் கொண்டு அவனோடு ஒட்டி நடந்தாள்.

அவள் இதுவரை அவள் வீடு வயல் இது மட்டும்தான் அவளுக்கு தெரியும் வெளியே இதுவரை அவள் வந்ததில்லை.அவள் தோழி ராணி உடன் சந்தைக்கு வாராவாரம் காய்கறி விற்க செல்வாள். அதனால் அவளுக்கு இதெல்லாம் புதுமையாக இருக்க ஆர்வமாக பார்த்துக்கொண்டுவந்தாள். 
ஆனால் ஒருவன் தன்னை ஆர்வமாக பார்ப்பதை அவள் அறியவில்லை.
மித்ரனோ தன்னை ஒட்டி வருபவளையே பார்த்துக்கொண்டுவந்தான். விக்கி இவர்களை நோக்கி வரவும் தங்களுக்காக ஒதுக்கியிருந்த அறையை அடைந்தனர். 

அங்கிருந்த சேரை நகர்த்தி அவள் அமர வசதி செய்து அவளிடம் , “மது இங்க உட்கார்” என்றான்.அங்கிருந்த சுவற்றில் இருந்த பெய்ன்டிங் ஒன்றை பார்த்துக்கொண்டிருந்தவள் தன்னை மது என்று அழைத்தவனை கண்டு என்ன என்று தன் புருவத்தை ஏற்றி இறக்கினாள்.

அந்த பாவத்தில் மித்ரன் சொக்கிபோனான் .அதனை பார்த்த விக்கி அய்யோ என்று நினைத்துக் கொண்டு மதியை அழைத்து இருக்கையில் அமருமாறு சொல்லிவிட்டு ,மித்ரனிடம் சென்று “மச்சான் உன் டைட்டானிக் கப்பல இங்க ஓட்டாதா வீட்டுல வச்சு ஓட்டுடா” என்றான்.

விக்கியைப் பார்த்து அசடு வழிந்தவன் , “சரி விடுடா “என்று விட்டு இருக்கையில் இருவரும் அமர்ந்தனர். “மது உனக்கு சாப்பிட என்ன வேணும் “என்று கேட்டவனை வேற்றுகிரகவாசி போல பார்த்தாள் , மீண்டும்”சொல்லுடா “என்றான். அவள் விழிப்பதை பார்த்து விக்கி மித்ரனிடம் “மச்சான் நீயே ஏதாவது ஆர்டர் பண்ணுடா “என்றான்.

அவன் பேரரிடம் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி ,நாண், சிக்கன் டிக்கா மசாலா ,லாலிபாப் என நிறைய வகையான உணவுகளை ஆர்டர் செய்தான்.

அடுத்த பதினைந்து நிமிடத்தில் மித்ரன் ஆர்டர் பண்ணிய அனைத்து உணவுகளும் கொண்டுவந்து வைத்தனர். 

மதி அனைத்து உணவுகளையும் கண்டு “இவ்வளவா , புதுசு புதுசா இருக்கு … நான் நீராகாரம்தான் அதிகம் சாப்பிடுவேன் அப்போதான் வயல்ல வேலை செய்யுமுடியும்” என்றாள்.இவள் சாதாரணமாகத்தான் சொன்னாள் ஆனால் கேட்ட மற்ற இருவருக்கும் தான் ஒரு மாதிரி ஆகிப்போனது.
அவள் பேசிக்கொண்டே அப்பொழுதுதான் இருவரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்து “சாப்பிடலாம் வாங்க, எனக்கு பசிக்கிது “என்றாள்.

மித்ரன் எதுவோ கோபமாக சொல்ல வந்தவன் பின்பு தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.
பின்பு மதிக்கு பிளேட் எடுத்து வைத்து அதில்  பிரியாணி ,நாண் , சிக்கன் டிக்கா, லாலிபாப் என அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக பரிமாறினான்.

அவன் பறிமாறுவதை கண்டு கண்  கலங்கியவளை அவள் இடதுக்கையை இழுத்து தன் கைகளுக்குள் வைத்து ஆறுதலாக அழுத்திக்கொடுத்தவன், “சாப்பிடு “என்றான்.

பின்பு மித்ரனும் விக்கியும் ஏதோ சிரித்துக்கொண்டே சாப்பிட மதி மித்ரனை பற்றிதான் யோசித்துக் கொண்டிருந்தாள்.

மித்ரனை பார்த்துக்கொண்டே எனக்கு இறங்க கைலாம் குடுத்து உதவி பண்ணினாரு ,அப்புறம் இப்போ எனக்கு சாப்பாடுலாம் பரிமாறினாரு ,கொஞ்சமே கொஞ்சம் நல்லவருதான்போல என்று நினைத்துக்கொண்டிருந்தாள்.

அப்பொழுது மித்ரனுக்கு புரையேற தன்னிச்சையாக அவன் தலையில் கை வைத்து தட்டி அவனிடம் தண்ணீரைக் குடுத்தாள்.அவன் தன்னையே பார்க்க ”சாப்பிடுங்க “என்று விட்டு தன் சாப்பாட்டில் கவனமானாள்.

பின்பு மூவரும் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினர். காரில் ஏறி அமர்ந்ததும் விக்கி வண்டியை எடுத்தான். சிறிது நேர பயணத்திற்கு பிறகு மித்ரன் தூக்கத்தில் ஜன்னல் ஓரமாக சாயப் போனவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டு அவள் தலைமேல் தன் தலையை வைத்துக்கொண்டான்.

மோகம் 4:

ஆறு மணி நேரப்பயணத்திற்கு பிறகு ஒரு வீட்டின் வாசலில் கார் நின்றது. விக்கி முதலில் வீட்டினுள் சென்று விட்டான்.

மித்ரன் தன் தோளில் சாய்ந்து தூங்கியவளை எழுப்பினான். இருவரும் வண்டியிலிருந்து இறங்க தன் வீட்டாருடன் விக்கி வெளியே வந்தான்.

ஐம்பதுகளில் இருந்த ஒரு பெண்மணி ஆரத்தித் தட்டுடன் நின்றிருந்தார்.அவர்கள் இருவரையும் நெருங்கி ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் செல்லுமாறு கூறினார். விக்கி இருவரையும் உள்ளே அழைத்து சென்றதும் ,”வலதுகால் எடுத்து வச்சு வாங்கக்கா” என்று ஒரு குரல் கேட்கவும் மதி நிமிர்ந்து பார்த்தாள்.

அங்கே ஒரு சின்ன பெண் மதியைப் பார்த்து சிநேகமாக புன்னகைத்தவாறு அவள் கையை வந்து பற்றிக்கொண்டாள். வலதுகாலை எடுத்து வைத்து வந்தவளைப் பார்த்து விக்கி தன் குடும்பத்தாரை அறிமுகப்படுத்தினான். 

ஆரத்தி எடுத்தப்பெண்மணியை சுட்டிக்காட்டி “இவங்க தான் என் அம்மா நிர்மளா ,இவரு அப்பா ஜானகிராமன் ,இது என் தங்கை அபிநயா “என்று அறிமுகப்படுத்தினான்.

அவர்கள் கூறியதும் மதி மித்ரன் இருவரும் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். நிர்மளா மதியின் தலையில் கை வைத்து “நல்லா இருமா ,எங்க மித்ரன நல்லா பார்த்துக்கனும் சரியா “என்றார். அவருக்கு சம்மதாக தலையை ஆட்டினாள்.

அப்பொழுது ,”ஒரு பெரியமனுஷியை கண்டுகொள்ளாமல் அங்கென்ன பேச்சு வேண்டி கிடக்கு “என்று அபிநயா கூறினாள். அதை கேட்டு சிரித்துக்கொண்டே மித்ரன் அளருகில் வந்து “வாலு “என்று அவள் தலையில் கைவைத்து ஆட்டினான்.

பின்பு மதியை அழைத்து பூஜை அறையில் விளக்கேற்ற சொல்லி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் கழித்து மித்ரன் நிர்மலாவிடம் கிளம்புவதாக கூறினான். “கொஞ்சம் நேரம் இருந்துட்டு போகலாம் மித்தேஷ்”. உடனே அபிநயா “அப்படி எல்லாம் உடனே அனுப்ப முடியாது….. வேணும்னா மதி அக்காவ இங்க விட்டுட்டுப் போங்க “என்று மித்ரனிடம் கூறினாள். 

அதை கேட்டு அதிர்ந்த மித்ரன், ” அம்மா பரதேவதை உனக்கு எந்த விஷயத்துல விளையாடனும்னு தெரியாதா… “.”ஆமாம் ஆமாம் கூட்டிட்டு வந்த அன்னைக்கே இப்படி பிரிக்கிறியே …..மித்ரன் தாங்க மாட்டான் “.”அவன் பொண்டாட்டி பாட்டு பாட வேண்டாமா “என்றான் விக்கி .

“அது என்ன அண்ணா பொண்டாட்டி பாட்டு ” என்று அபிநயா ேகட்க “அதான் அபி சிம்பு கூட பாடிட்டு ஆடுவாரே …. 

ஏ… வாடி வாடி வாடி வாடி
கியூட் பொண்டாட்டி…
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன்
நீ இல்லாட்டி………..”.
என்று பாடிகாட்டினான். 
அதை கேட்டு அனைவரும் சிரித்தனர். 

“டேய் வேண்டாம் ,அப்புறம் உன் குயின்க்கு கால் பண்ணி சொல்லிடுவேன்” என்று சொன்னதும் அதற்கு மேல் பேசாமல் வாயை கப்பென்று மூடிக்கொண்டான்.”மச்சான், நோ” என்று தன் வாயில் கையை வைத்து தலையை ஆட்டினான் பாவமாக. அதை கண்டு மித்ரன் கெத்தாக “அது அந்த பயம் இருக்கட்டும் “என்றான்.

அவர்களை விசித்திரமாக பார்த்த அபிநயாவிடம் இருவரும் அசடு வழிய சிரித்து வைத்தனர். பின்பு இருவரும் அங்கிருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டு ,மித்ரன் மதி காரில் ஏறுவதற்காக கதவை திறந்து வைத்துக் கொண்டு நின்றான். மதி அனைவரிடமும் போய்ட்டு வருவதாக கூறி விட்டு மித்ரன் நின்ற இடத்திற்கு சென்று அவனைப் பார்க்கவும், ” ஏறு” என்றான். அவள் அமர்ந்ததும் கதவை சாற்றி விட்டு பின்பு இவன் டிரைவர் இருக்கையில் அமர்ந்து காரை ஸ்டார்ட் பண்ணினான்.

அவர்களிடம் கையை ஆட்டி சிரித்த முகத்துடன் போய்ட்டு வருவதாகக் கூறினாள். மித்ரனும் அவர்களிடம் சொல்லிக் கொண்டு விக்கியிடம் “நாளைக்கு காலைில் ராயப்பேட்டை ஆபிஸ்க்கு வந்துடு மச்சான் “என்று சொல்லி தலையசைத்து விட்டு கிளம்பினான்.
“மதி மித்ரனிடம், ” இப்போ எங்க போறோம் “என்றாள்.

“மேடம் சொன்னாதான் வருவீங்களோ “.
 
“இல்லை” என்று தலையாட்டியதும் 

“கேட்டதுக்கு பதில் “அவன் அவளை பார்க்கவும். 
“அதான் தலையாட்டினேனே”

“தலையாட்டினா எனக்கெப்படி தெரியும், நான் தான் வண்டி ஓட்டிட்டு இருக்கேன்ல”
இப்பொழுதும் ஆமென தலையாட்டியவள் பின்பு தன் நாக்கைக் கடித்து கொண்டு, ”மன்னிச்சிடுங்க…. இனிமே மாத்திக்கிறேன்”.
அவள் நாக்கைக் கடித்ததும் ,மித்ரன் அவள் பாவனையில் சொக்கில் போனான் …..
உடனே வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்.
அவன் திடீரென்று வண்டியை நிறுத்தவும் பயந்தவள் , “என்னங்க ஆச்சு “என்கவும் தான் “ஒன்னுமில்லை” என்று தலையசைத்தான்.

 பின்பு வண்டியை எடுத்தவன் , “இப்போ நம்ம வீட்டுக்கு தான் போறோம்”. “நாம போய் இப்போ நின்னா….. உங்க அப்பா அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்களா???.
 ஒருகணம் தன் உடல் இறுக தான் பற்றியிருந்த ஸ்டீயரிங்கை அழுந்த பற்றியவன் ……பின்பு உணர்ச்சியற்ற குரலில் , “யாரும் எதுவும் என்னை கேட்க முடியாது “, பின்பு வேதனையுடன் “என்னை யாரும் எதுவும் கேட்கவும் மாட்டாங்க “என்றான்.

மோகம் 5 :
அவன் வேதனையை கண்டு மதிக்கு அவனை அனணத்து தேற்றிட கைகள் பரபரத்தது. 

பின்பு தன் எண்ணம் போகும் போக்கைக் கண்டு அதிர்ச்சியடைந்தவள் ,அய்யோ…. நான் என்ன இப்படி யோசிக்கிறேன்…. இவன் யாரு என்னன்னு தெரியாது, என்னை பணத்துக்கு ஈடாக தானே கல்யாணம் செய்து கொண்டு வந்திருக்கிறான். 

அவள் மனசாட்சியோ, பின்ன உன்னை கூட்டிட்டுப் போய் குடும்பமா நடத்துவான்…. அவன் எவ்ளோ அழகா இருக்கான். நீ அவன் கால்தூசிக்கு பெற மாட்ட…. நீ கொஞ்சம் அடக்கியே வாசி என்று சொல்லிவிட்டு சென்றது. 

அவர் வீட்டுக்கு, வேலைக்கு ஆள் குறையுது போல அதான் என்னைக் கூட்டிட்டு போறார் என்று தன்னை தானே கிண்டல் செய்து கொண்டாள்.

அவனை திரும்பி பார்த்தவள் கோபம் வேற வரும் போல மூஞ்ச உர்ருன்னு வச்சிருக்கார்…. ஆனால் சிரிச்சா அழகா இருக்கார் என்று மனசாட்சி அவளுக்கு கூறியது.

அவன் இறுக்கமாக அமர்ந்திருக்கவும் அதை மாற்ற அவனிடம் பேச்சை அவளே ஆரம்பித்தாள் ,”இப்போ நாம போனது விக்கி அண்ணா வீடா….. அவங்க வீட்டுல இருக்குற எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க இல்லங்க ” என்றாள். 

அவர்களைப் பற்றி பேசியதும் முகம் கனிந்தவன், ” ஹம்ம ….. ரொம்ப நல்லவங்க, எனக்கு அவர்களை ரொம்ப பிடிக்கும் ….எதாவது தனியா இருக்குற மாதிரி ஃபீல் பண்ணினா….  அவங்க வீட்டுக்குப் போய்டுவேன்….. விக்கிக்கு என்னெல்லாம் செய்றாங்களோ எனக்கும் சேத்து தான் பண்ணுவாங்க….. நாங்க இரண்டு பேரும் சின்ன வயசுல இருந்து ப்ரண்ட்ஸ் என்றான்.

இருவரும் இவ்வாறு பேசிக் கொண்டு இருக்க மித்ரனின் வீடும் வர வண்டியை நிறுத்திவிட்டு சாவியை அங்கிருந்த செக்யூரிட்டியிடம் தூக்கிப் போட்டவன் மதி இறங்க கார் கதவை திறந்து விட்டான்.
அவள் இறங்கி மித்ரனின் வீட்டைப் பார்த்தவள் அசந்தே போனாள். 

இதுவரை இந்த மாதிரி வீடுகளை சினிமாக்களில் தான் பார்த்திருக்கிறாள்.அவள் இமை சிமிட்டாமல் வீட்டையே பார்ப்பதைக் கண்டு ,”மதி வா உள்ளே போகலாம், உனக்கு பிறகு வீட்டை சுற்றி காட்டுறேன்.. இப்போ உள்ளே போகலாம் “என்று அவள் பக்கமாக தன் கையை நீட்டினான்.

அவன் நீட்டிய கையைப் பற்றி கொண்டு உள்ளே செல்ல ,அங்கே மித்ரனைப் போல வயதான ஒருவரும் ஒரு வயதான பெண்மணியும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததுமே மித்ரனின் அப்பா அம்மா என்று தெரிந்து கொண்டாள்.

இவர்களைக் கண்டு அதிர்ச்சியுடன் எழுந்தவர்கள் மித்ரன் அருகே வந்து,  “யாரு இந்த பொண்ணு “என்றார். அவரை அலட்ச்சியத்துடன் ஏறிட்டவன், ” இவள் மதுமதி மித்ரேஷ்வரன் ….என்னோட
மனைவி “என்று தன் பெற்றோரிடம் அறிமுகப்படுத்தியவன் மதி கையை பிடித்து தன் அறைக்கு அழைத்து சென்றான். அவர்களைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டே பலியாடு போல் அவன் பின்னே சென்றாள்.

அவன் வீட்டைப் பார்த்தே பயந்திருந்தவள் மித்ரன் அவன் அப்பாவிடம் அலட்ச்சியமாக பேசவும் இவங்க யாருக்கும் பயப்பட மாட்டாங்க போல, கடவுளே எனக்கு பயமா இருக்கு என் கூடவே இருங்க அம்மா என் கூடவே
 இருமா என்று மனதில் வேண்டிக் கொண்டே சென்றாள்.

உன் சித்திக் கிட்டயே இவ்ளோ நாள் இருந்துட்ட இவன் எம்மாத்திரம் பிஸ்கோத்து என்று அவள் மனசாட்சி கவுண்டர் குடுத்தது. ஏய் சித்தியவே மடக்கி என்ன கல்யாணம் பண்ணிட்டு வந்துருக்காரு அதை யோசிச்சுேசு என்று தன் மனசாட்சியை அடக்கியவள் அவன் பின்னோடு சென்றாள்.

அறைக்கு வந்தவுடன் தன் கட்டிலில் சென்று தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தான். அவனை பார்க்கவே பயமாக இருந்தது, அய்யோ இவரு வேற கோபமா இருக்கார் போல இப்போ நான் என்ன பண்றது என்று நின்று கொண்டிருந்தாள். 

பின்பு அவன் நிமிரவே இல்லை என்பதால் அவன் முன்னால் சென்று அவனை நெருங்கி , “என்….. என்னங்க …”என்று அழைத்தாள் பயத்தில் வெறும் காற்று தான் வந்தது.

அப்பொழுதும் நிமிரவில்லை என்றதும் ,அவன் தோளில் கை வைத்து “என்னங்க என்ன ஆச்சு ……ஏன் இப்படி உட்காந்துருக்கீங்க “என்றதும் தான் அவள் இடுப்பைக் கட்டிக் கொண்டு அவள் வயிற்றில் முகம் புதைத்து கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தான்.

அவன் திடீரென்று தன்னை அணைக்கவும் திடுக்கிட்டவள் அதில் விரசம் இல்லாமல் ஒரு தாயை குழந்தை எப்படி அணைத்திருக்குமோ அப்படி இருக்கவும் இவளுள் இருந்த தாய்மை உணர்வு தலை தூக்க இயல்பாய் அவன் சிகையை தன் கைகள் கொண்டு கோதி குடுத்தாள்.

சிறிது நேரத்தில் தன்னை சமன் செய்து கொண்டு அவளிடம் இருந்து பிரிந்தான். பின்பு அவளிடம் கீழே இருந்தவர்களைப் பற்றி கூறினான் …அவன் அப்பா ராதாகிருஷ்ணன்  என்றும் அம்மா சுலோச்சனா என்றும் தனக்கு ஒரு தம்பி இருப்பதாகவும் அவன் பெயர் மித்ரநந்தன் லண்டன் – ல படிச்சிட்டு இருக்கிறான் என்று கூறினான்.

பின்பு அவளிடம் “இங்கேயே இரு…. உனக்கு போட்டுக்க டிரெஸ் இல்லல்ல… நான் போய் வாங்கிட்டு வரேன் “என்று கிளம்பினான் .”அய்யோ ஆமாம் துணியை எப்படி மறந்தோம் ….எடுத்துட்டு வந்துருக்கலாம்” என்று வாய்விட்டு புலம்பவும்  அதை கேட்டவன்” எது அந்த கிழிஞ்ச தாவணி பாவாடையா” என்றான் கோபமாக . 

அவள்  இப்போ நம்ம என்ன சொல்லிட்டோம்னு இப்படி கோபப்படுறார் என்று திருத்திருடுவன விழித்தாள். அந்த பார்வையில் மயங்கியவன் (அட நீ வேற ஏன்டா அடிக்கடி அவ பார்வையில மயங்குற ஷ்.) 

பின்பு கனிவுடன் பார்த்து ,”ரூம்லயே இரு நான் கொஞ்ச நேரத்தில
 வந்துடுவேன் ….கதவை யாரு தட்டினாலும் திறக்கக் கூடாது நான் போனதும் லாக் பண்ணிக்கோ புரியுதா…..ஹம்ம்”.
அவள் தலையாட்டியவும் முறைத்தான்.

இவன் ஏன் இப்போ முறைக்கிறான் நம்ம என்ன பண்ணினோம்….. ஆவுனா முறைக்கிறான் எப்போ பார்த்தாலும் என்று நினைத்தவள் தான் தலையாட்டியதற்கு தான் என்பதை புரிந்து கொண்டு ”மன்னிச்சிருங்க “என்று காதைப் பிடித்து மன்னிப்பு கேட்டவள், ” நான் கதவைத் திறக்க மாட்டேன்” என்றதும் கிளம்பினான்.

இவங்க நல்லவங்களா …கெட்டவங்களா..
ஒன்னும் புரியலையே சில நேரம் நல்லா பேசுறாங்க சில ேநரம் கோபப்படுறாங்க என்று நினைத்துக் கொண்டே கதவை மூடிவிட்டு வந்தவள், அப்பொழுதுதான் அந்த அறையைப் பார்த்தாள் தன் வீட்டின் ஹாலை விட பெரிய அறையாக இருந்தது .

அங்கு சுவற்றில் இருந்த புகைப்படத்தில் மித்ரனும் அவன் பக்கத்தில் அவனைப் போலவே மற்றொருவன் தாடி மீசை இல்லாமல் இருந்தான். ஓ இவங்க தான் அந்த லண்டன் – ல படிக்கிற தம்பியா என்று விட்டு அந்த அறையில் வேறென்னவெல்லாம் இருக்கென்று பார்த்தாள் டேபிள் கம்ப்யூட்டர் பின்பு 
கபோர்ட் இருந்தது .அதை திறந்து பார்த்தவள் மித்ரன் உடைகள் இருந்ததைப் பார்த்தாள்.

பின்பு  பக்கத்தில் ஒரு கதவு போல் இருந்தது அதை திருந்ததும் அது பால்கனி அங்கு ஊஞ்சல் ஒன்று இருந்தது. பின்பு அறைக்குள் வந்தவள் பட்டுப்புடவை கசகசவென்று இருந்ததினால் குளிக்கலாம் என்று எண்ணி நகைகளைக் கழட்டி அங்குள்ள டேபிளில் வைத்தாள்.
நல்லவன் என்று நினைத்தவள் அவன் செய்த செய்கையில் ச்சீ ச்சீ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் அப்படி என்ன நடந்திருக்கும்…….

மோகம் 6 :
பின்பு அங்குள்ள குளியலறையைத் திறந்து பார்த்தாள் அதுவே பெருசாக தான் இருந்தது. ஒரு பெருமூச்சு விட்டு தன் சேலையை கலைந்துவிட்டு தான் பார்த்தாள் அங்கு பக்கெட் எதுவும் இல்லாமல் ஷவர் மட்டும் இருக்க, எதுவுமே இல்லாம எப்படி குளிக்கிறது என்று நினைத்துக் கொண்டு சுவற்றில் இருந்த குமிழியை திருகியதும் ,ஷவரில் இருந்து தண்ணீர் இவள் மேல் எதிர்ப்பாராத விதமாக கொட்ட பயந்துவிட்டாள். பின்புதான் ஓ….. இதை திறந்தா மேல இருந்து தண்ணீர் வரும் போல என்று அதை முன்பு திருகியதற்கு எதிர்திசையில் திருகினாள் தண்ணீர் நின்றுவிட்டது.

எப்படி எல்லாம் பய்ப்பு இருக்கு என்று அதிசயப்பட்டவள் தன்மீது இருந்த மற்ற ஆடைகளையும் கலைந்துவிட்டு ஷவரை திருகி தண்ணீரில் நின்றாள்.பின்பு சோப்பு இல்லையே என்ன பண்றது என்று அந்த இடத்தை சுற்றி பார்த்தாள். 

பக்கத்தில் உள்ள ஷெல்பில் ஷாம்ப்பு, சோப்பு என அனைத்தும் இருந்தது.
அதை எடுக்க கையை நீட்டியவள் தயங்கி இது அவரோட சோப்பு தானே திட்டு வாறோ (நீ போட்டு குளிச்சனு தெரிஞ்சா அதை கரைச்சிட்டுதான் மறு வேலை பார்ப்பான்) பரவால்ல வேற வாங்கிக்க சொல்லலாம் என்று நினைத்துக்கொண்டு குளித்து முடித்தாள்.

பின்பு அங்கிருந்த துண்டில் ஒன்றை எடுத்து தலையில் கட்டிக்கொண்டவள் பின்பு இன்னொரு துண்டை நெஞ்சில் முடிந்து கொண்டு வெளியே வந்தாள்.
அய்யோ துண்டோட எப்படி அவரு முன்னாடி நிக்குறது என்று நினைத்துக் கொண்டிருந்தவள் கண்ணில் கபோர்ட் பட்டது. 

கபோர்ட் அருகில் சென்றவள் அதை திறந்து மித்ரனின் சட்டை ஒன்றை எடுத்தாள்.எதுக்கு என்னோட டிரெஸ் எடுத்துப்போட்டேனு திட்டுவாங்களோ……

 (இல்ல இப்போ வந்து கொஞ்சுற கொஞ்சுல நீ அப்படியே ஸ்டன் ஆயி நிக்க போற பாரு) திட்டினா வாங்கிக்கலாம் என்று நினைத்தவள் அவன் சட்டையை போட ஆரம்பித்தாள்.

அவன் சட்டை அவளுக்கு லொடலொடவென லூசாக இருந்தது. பட்டன் அனைத்தையும் போட்டவள் தன்னை கண்ணாடியில் பார்த்தவளுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டுவந்தது.

நெஞ்சில் இருந்த துண்டை இறக்கி இடுப்பில் கட்டிக்கொண்டே ,”அவரோடு டிரெஸ்ல சோலக் காட்டு பொம்மை போலவே இருக்க மதி “என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டிருந்தவள் “யாரோட டிரெஸ்ல சோலக் காட்டு பொம்மை போல இருக்க” என்ற குரலில் தூக்கிவாரிப் போட திரும்பிப்பார்த்தவள் துண்டை நழுவவிட்டிருந்தாள்.

மித்ரன் அறை கதவை திறந்து உள்ளே வந்து மூடுகையில் இவள் பேசுவதை கேட்டு மித்ரன் “யாரோட டிரெஸ் “என்று கேட்டு திரும்பியவனுக்கும் அவள் வெறும் தன் மேல் சட்டையுடன் நிற்பாள் என்று 
நினைக்கவில்லை.

கதவை மூடிவிட்டு திரும்பி பார்த்தவனுக்கு அதற்குமேல் பொருமை இல்லை திகைத்து நின்றவளை அப்படியே தன் கைகளில் அள்ளிக்கொண்டான்.

அவன் சட்டை அவள் உடலை தொடைவரைதான் மூடியிருந்தது. இந்த கோலத்தில் அவளை  சத்தியமாக மித்ரன் எதிர்ப்பார்க்கவில்லை .
அதுவும் அவள் மென்மைகள் உள்ளாடை எதுவும் அணியாமல் துருத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து பித்தம் தலைக்கேறி  உடனே கைகளில் இருந்த பைகளை வீசியவன் அவள் தொடையூடு கையிட்டு அலேக்காக தன் உயரத்துக்கு அவளைத் தூக்கி அவள் இதழை சிறைப்பிடித்திருந்தான்.

மது அவன் குரல் கேட்டதும் தூக்கிவாரிப் போட திரும்பிபார்த்தவள் அய்யோ திட்டப் போறான் என்று நினைத்துக் கொண்டிருந்தவள் அவன் வந்து தன்னை அனைத்து தூக்கவும் பயந்தவள் அவன் தன் இதழை அழுத்தமாக கடித்து சப்பவும் அதிர்ந்து தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

நேரம் போக போக இதழ் முத்தம் நீண்டுகொண்டே சென்றது. இவளுக்கு மூச்சு முட்ட தன் கைகளை அவன் நெஞ்சில் பதித்து தள்ளினாள். அவள் உதட்டில் இருந்து பிரிந்தவன் அவளுக்கு மூச்சு விடக்கூட இடம்கொடாமல் அவளை இன்னும் மேலே தூக்கி அவள் நெஞ்சு தன்  முகத்திற்கு நேராக வருமாறு தூக்கிப் பிடித்தவன் தன் முகத்தை அவள் கோபுர அழகில் புதைத்திருந்தான்.

வேகவேகமாக மூச்சை இழுத்து விட்டவள் இந்த தாக்குதலை தாங்கமுடியாமல்  துள்ளினாள்.அவள் ” ஹா…. விடுங்க….” என்றதும் சட்டையின் ஊடாக துருத்திக்கொண்டிருந்த திராட்சையை சட்டையோடே பற்களால் கடித்து இழுத்தான்.

அவன்  பற்களால் கடித்து இழுத்ததும் வலியும் இன்பமும் ஒருசேர அவளை தாக்க ” ஹா….ஹா……ம்ம்.. “முனகியவள் “அத்தான் விடுங்க ,அத்தான் வலிக்குது “.

அவள் அத்தான் என்று அழைத்ததும், அவள் முனகலும் அவனை வேறொரு உலகத்திற்கு அழைத்து சென்றது அதற்கு மேல் பொருக்க முடியாமல் அவளை அப்படியே கட்டிலில் கிடத்தி ,அவள் போட்டிருந்த சட்டையின் பட்டனை கழட்டினான் .

இவள் தடுக்கவும் அவள் கைகளை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் வேகமாக இரண்டு பட்டனை கழட்டி மேலே தெரிந்த சதைக் குவியலை எச்சில் தெறிக்க கவ்வி சுவைத்தான் , கைகள் கொண்டு பிசைந்தான், நாவால் ஈரப்படுத்தி கடித்து திரும்ப சுவைத்தான். 

மேலும் முன்னேற போக அவன் கைப்பேசி அழைத்தது.
“ச்சே “என்று எழுந்தவன் தன் கைப்பேசியை எடுத்து யாரென்று பார்க்காமல் காதில் வைத்து “என்ன “என்று உறுமினான். 

என்ன சொல்லப்பட்டதோ கேட்டு விட்டு “வரேன்” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி  அனைத்து விட்டான். திரும்பியவன் அங்கு கட்டிலில்தான் விட்டு சென்ற நிலையிலேயே படுத்திருந்தவளைக் கண்டு அவளை நெருங்கினான்.

மித்ரன் தன்மேல் இருந்து எழுந்தும் அவளால் அவன் காட்டிய உலகத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை.தன் உணர்ச்சிகளைத் தாங்கமுடியாமல் கண்களை இறுக மூடி தன் பற்களால் உதட்டை கடித்துக்கொண்டு கைகளால் மெத்தை விரிப்பை இறுக்கிப் பற்றியிருந்தவளின் அருகில் வந்தவன் அவள்தொடையில் தன் விரல்கள் கொண்டு வருடி ,அவள் அருகில் படுத்து அவளைத் தன்பக்கம் திருப்பி அவள் மார்பில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு சிறிது நேரம் இருந்தவன்…. அவள் இதழை ஒருகையால் வருடிக் கொண்டே அவளை அழைத்தான்.
“மது”
“ஹம்ம்”
“மதுக்குட்டி “என்று அவளின் ஒரு பக்க திராட்சையை பற்களால் லேசாக கடித்து இழுத்தான்.

 “ஹா….ஹம்ம்….ஹா…..” என்று அனத்தி அவன் முகத்தை தன் நெஞ்ேசாடு அழுத்திக்கொண்டாள்.

“மது “என்று கன்னம் தட்டி , ” எழுந்து சாரி கட்டுடா ,கீழே கூப்பிடுறாங்க “என்றதும் தெளிந்தவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் அவன் கொடுத்த பையை வாங்கிகொண்டு குளியறைக்குள் புகுந்து கொண்டாள்.

மோகம் 7:
மித்ரன் குடுத்த பையை தன் நெஞ்சோடு அணைக்க அங்கு ஏற்பட்ட வலியில் அவள் கணவன் கொடுத்த முத்தமும், மொத்தமும் நியாபகம் வந்து அவளை கிறங்கடித்தது. 

எனக்கு ஏன் இப்படி தோணுது…..இவங்க கூட இனி சேரக்கூடாது. என்னென்னமோ பண்றாங்க என்று நினைத்துக்கொண்டே உடைமாற்றி கொண்டு வந்தாள். ஆனால் மதி ஒரு விஷயம் மறந்துபோனாள் அவன் தன்னை பணத்திற்காக கட்டிக்கொண்டுவந்தான் என்று பாவையவள் மறந்துவிட்டாள். ஒருவேளை மித்ரன் மறக்கடித்துவிட்டானோ??

அங்கு சிவகாமியோ கடுகடுவென்று முகத்தை வைத்துக்கொண்டிருந்தார்.
அப்பொழுது அவரது மகள் ஹாஸ்டலில் இருந்து லீவுக்காக வந்திருந்தாள், அவள் பெயர் வான்மதி. “அம்மா ஏன் ஏதோ உன் தலைமேலே இடி விழுந்த மாறி உட்காந்துருக்க…..நீ இப்படி இருக்க மாட்டியே….. அடுத்தவங்க தலையில எப்போ கல்லை தூக்கி போடலாம் என்றுதானே பார்த்துட்டு இருப்ப….. இப்போ என்ன இப்படி இருக்க” என்று வான் மதி கேட்டுக்கொண்டிருக்கும்  போதே அந்த பக்கமாக சென்ற ராணி காலையில் நடந்த அனைத்தையும் கூறினாள். 

வான்மதியிடம் அனைத்தையும் கூறிக்கொண்டே ,”எப்படியோ மதி நல்லார்ந்தா போதும் “என்று ராணி சொல்லவும் ,சிவகாமி ஆங்காரமாக எழுந்து “அவ எப்படி நல்லாருக்கானு நானும் பாக்குறேன்….நாளைக்கே சென்னைக்கு போய் அவளை என்ன பண்ணுறேனு பாருங்க “என்று கத்தினாள்.

“ஏன் மா, நீ திருந்தவே மாட்டியா….. அக்கா எப்படியோ உன் தொல்லையில் இருந்து தப்பிச்சுடுச்சுனு இப்போதான் சந்தோஷப் பட்டேன்….. அதுக்குள்ள அங்க போறேன்னு சொல்ற” என்று திட்டினாள்.

வான்மதி சிவகாமியைப் போல் இல்லாமல் மதியிடம் பாசமாக இருப்பாள் .அவளுக்கு வாங்கி குடுக்கிற திண்பண்டத்தில் மதிக்கும் குடுப்பாள்.

ராணி வானுவிடம் , “உங்க அம்மா இந்த ஜென்மத்துல திருந்தாது, திருத்தவும் முடியாது…….உன் அம்மா எதாவது கோல்மால் பண்ணும்னு தெரிஞ்சுதான் அந்த நல்ல மனுசன் பத்திரத்தைக் கிழிச்சிப் போடாம கையோட எடுத்துட்டு போய்டாரு “என்றாள்.

வான்மதி , “சூப்பர் மாமா நல்லவராகவும் ,அறிவாலியாவும் இருக்கார்” என்று சிவகாமியை பார்த்து நக்கலாக கூறினாள்.

அதை கண்டு சிவகாமி மதியைப் பொருமி தள்ளினார். “அவ இங்க இருக்கிறத விட்டுட்டு எவனோ வந்தான் கல்யாணம் பண்ணினான்னு அவன் கூடவே போய்ட்டா” என்று இவர் தான் கல்யாணத்திற்கு தயாராக சொன்னார் என்பதை அக்கணம் மறந்து விட்டார் போல .

(அய்யோ சிவகாமி உனக்கு பிபி தான் இருக்குன்னு நினைச்சேன் அம்னீஷியா வேற இருக்கா)

வான்மதி சிவகாமியைப் பார்த்து,”மா அக்கா என்னமோ காதலிச்சு கல்யாணம் பண்ணின மாதிரி சொல்ற ,உன் சொத்து எல்லாத்தையும் அக்கா தான் காப்பாற்றி கொடுத்துருக்கா…. இல்லனா இந்த நேரம் நம்ம நடுத் தெருவுல தான் நிக்கனும்…. அதை மனசுல வச்சு பேசு”.

இங்கு புடவையை மாற்றி வெளியே வந்தவள் அவனை பார்க்க முடியாமல் தயங்கி நின்றாள்.மித்ரன் அவள் குனிந்த தலையுடன் தன்னை பார்க்காமல் நிற்கவும் “மதி இப்படி நீ என்னை பார்க்காம இருந்தா தண்டனை கிடைக்கும்….. என்னை நிமிர்ந்து பாரு” என்றான். அப்பொழுதும் அவள் நிமிராமல் இருக்கவும் அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கீழுதட்டை பல்பட கடித்து இழுத்து சப்பினான். 

அவள் நிமிர்ந்து பார்க்கவும் “குட்” என்றவன் அவள் கட்டியிருந்த சாரியில் உள்ள ஸ்டிக்கர் எடுக்காமல் இருக்கவும் அதை எடுத்துக் கிழித்துப்போட்டான்.
அதை கண்டதும் தான் அவன் பத்திரத்தை கிழிக்கவில்லை என்று நியாபகம் வந்தது. 

“ஏங்க ” என்று அழைத்து ,” பத்திரத்தை நீங்க கிழிக்கவே இல்லை” என்றாள். 

“உன் சித்தியைப் பற்றி தெரியாதா அதனால்தான் கிழிக்காம வச்சிருக்கேன்”.

“அவங்கிட்ட குடுத்துடுங்க பாவம்…. நிம்மதியில்லாம இருப்பாங்க “என்றதும் அவனுக்கு வந்ததே கோவம் “அவங்களுக்கு நீ பாவம் வேற பாக்குறியா…. அவங்க உனக்கு….” ஏதோ கோபமாக கூறவந்தவன் வாயை மூடிக்கொண்டான்.

ஒரு பையை எடுத்து அவளிடம் “இந்தா மொபைல் நான் வெளியே இருக்கும்போது உனக்கு எதாவது தேவைப்பட்டா என்னை கூப்பிடு ….இதுல என் நம்பரும் ,விக்கி நம்பரும் சேவ் பண்ணி வச்சுருக்கேன் “என்றான்.

“எனக்கு மொபைல் பத்தி எதுவும் தெரியாது”.

” சரி நான் வந்து சொல்லி தரேன்….இப்போ வா கீழே போகலாம் “என்றவன் அவளை அழைத்து சென்றான்.

அவன் வந்து சோபாவில் அமர்ந்து அவளையும் தன் பக்கத்தில் அமர்த்தி கொண்டான்.

பின் தன் வீட்டுவேலைக்காரன் முத்துவை அழைத்து ,”அண்ணா,உங்க பெரிய அய்யாக்கிட்ட சொல்லுங்க நாங்க வந்துட்டோம்னு …”என்று அவனை அனுப்பிவைத்தான்.

கொஞ்சம் நேரம் முன்பு மித்ரனின் அப்பாதான் அவனுக்கு அழைத்திருந்தார். பின்பு ராதாகிருஷ்ணன்னும் சுலோச்சனாவும் வந்தனர்.

மித்ரன் அவர்களைக் கண்டுக்கொள்ளாமல் அலட்சியமாக கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தான்.அவர்கள் இருவரின் பார்வையும் எதையோ மித்ரனிடம் வேண்டியது. பின்பு கிருஷ்ணன் சுலோச்சனாவிடம் பேசுமாறு கண்ணை காட்டினார்.

“கண்ணா கல்யாணம் தான் யாருக்கும் தெரியாம நடந்துச்சு …..அதனால ஒரு நல்ல நாளா பார்த்து எல்லாருக்கும் பத்திர்க்கை குடுத்து கல்யாணம் பண்ணிக்கோபா …… நாங்களும் உன் கல்யாணத்தை பார்த்த மாதிரி இருக்கும்….. எல்லோருக்கும் தெரியபடுத்தின மாதிரியும் இருக்கும் “என்றார்.

அவன் ஏதோ ஜோக்கை கேட்டதுபோல் சிரித்தவன் , “வாவ் !! வாட் அ ஜோக்??பிள்ளையோட வளர்ச்சியையே பார்க்காதவர்கள் ….. கல்யாணத்தை பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்” என்று அவர்களை நக்கல் செய்தவன் பின்பு ஏதோ சொல்ல வந்தவன் கையை அழுத்தி பிடித்த மதி இரைஞ்சுதலாக அவனை பார்த்தாள்.

பின்பு தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன் , “சரி உங்க இஷ்டம்போல பண்ணுங்க “என்றதும் பெரியவர்கள் சந்தோஷமடைந்தனர். அவ்ளோதான் பேச்சு என்பதுபோல் மித்ரன் எழுந்து கொண்டான் ,அவன் எழுந்ததும் மதியும் எழுந்தாள். அவன் அவளை அழைத்து தங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு அழைத்து சென்றான்.

மதிக்கு ஒன்று மட்டும் நன்றாக விளங்கியது இவரோட அப்பா அம்மா ஏதோ பண்ணிருக்காங்க அதனால் அவங்க மேல இவர் கோவமா இருக்கார் போல. ஏன்தான் இவரு கோவப்படுறாரோ என்று நினைத்தவள் அவன் கதையைக் கேட்டு இவளே அவன் அப்பா அம்மாவிடம் ஏன் என்னோட புருஷனுக்கு இவ்ளோ கஷ்டத்தை கொடுத்தீங்க என்று சண்டைக்கு போக  போவதை இவள் அறியவில்லை…………

மோகம் 8 :
“மதுக்குட்டி ,என்ன யோசிக்கிறீங்க “என்று அவள் காது மடலை தன் அதரங்கள் உரச மென்மையாக கேட்டான். 

தன் நினைவில் இருந்து வெளிவந்தவள், “ஏன் உங்க அப்பா அம்மாட்டா பேசமாட்டுறீங்க …..அவங்களும் உங்களை பாவமா பாக்குறாங்க…… வயசான காலத்துல நாம தானே அவங்கள பாத்துக்கணும் ……ஏன் நீங்க பேசமாட்றீங்க….”அவள் பேச பேச கோபத்தில் அவன் முகம் சிவந்தது.

அவன் முகத்தை பார்த்ததும் அய்யோ கோவப்படுத்திட்டோமோ என்று நினைத்தவள் அவனை நெருங்கி அவன் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து, ” நான் எதாவது தப்பா கேட்டுடேனா “என்றாள்.

அவள் கைகளை உதறியவன் “ஆமா ….. தப்பாதான் கேட்ட அவங்கள பத்தி  பேசாத ” என்று கத்தினான்.

அவன் கத்தியதும் இவள் பயந்து இரண்டடி தள்ளி நின்று கொண்டாள் .இவள் அவன் கோபமாக இருக்கிறான் என்று அங்கிருந்த கல் பென்ச்சில் சென்று அமர்ந்தாள்.மித்ரன் சிறிது நேரம் தனியே நின்றவன் இவளை தேட அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தான்.

அவன் வந்ததும் இவள் முகத்தை வேறு பக்கம் திருப்பி அமர்ந்து கொண்டாள். “ஓ…..கோபமா மதுக்குட்டி உங்களுக்கு ……. கோபம் கூட வருமா……”என்று நினைத்துக் கொண்டு “மது “என்று அழைத்தான்.

உரிமை உள்ள இடத்தில்தான் நமது இன்பம் ,துன்பம் ,கோபம் என அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவோம்.அதை மித்ரன் உணர்ந்துவிட்டான், ஏனெனில் தன்னை உரிமையுடன் கண்டிக்க ,அவனை நேசிக்க, அவனிடம் கோபப்பட ,அவனுக்கு அனைத்துமாக அவன் மதுக்குட்டி வந்துவிட்டாள் ….

இனி வேறென்ன வேண்டும் தன் வாழ்வில் என்று நினைத்துக்  கொண்டு உல்லாசமாக விசில் அடித்துக்கொண்டே மதுவின் அருகில் அமர்ந்தவன் அவள் தோளில் சாய்ந்தான்.

அவன் தோளில் சாயவும் அவள் நகர்ந்து அமர்ந்தாள் .அவன் அதற்கு அவள் மடியில்  தலை வைத்து கொண்டான்.
“எழுந்திரிங்க”.

“என்ன மதுக்குட்டிக்கு கோபமா”.

“ஏன் நீங்க கோபப்படலையா”.

“அது ஏதோ வேண்டாத நினைவுகள்….. கொஞ்சம் கோபம் வந்துடுச்சு”.

அவள் தன் வாய் மேல் கையை வைத்து “அது உங்களுக்கு கொஞ்சம் கோபமா….. அப்படியே முகம்லாம் சிவப்பா மாறி… நான் பயந்துட்டேன்”.

“நீ தான் நான் எது செஞ்சாலும் பயப்படுற…… அதுக்கு நான் என்ன பண்றது “என்று கேட்டுக் கொண்டே தனக்கு அருகே இருந்து அவள் முந்தானையை விலக்கி அந்த இடைவெளியில் தன் தலையை நுழைத்து தன் முகத்தோடு முந்தானையை இழுத்து மூடினான்.

அவள் வயற்றில் கடித்து முத்தமிட்டு ஜாக்கெட்டின் ஹீக்கை கழற்றி உள்ளே இருந்த திராட்சையை வெளியே இழுத்து… பாதிதான் தெரிந்தது அந்த சதையை கடித்து சப்பினான்.

அவன் முந்தானையை விலக்கியதுமே அவள் உடல் நடுங்க ” ஏங்க என்னங்க இப்படி பண்றிங்க நாம வெளிய இருக்கோம்ங்க……யாராவது வந்துரபோறாங்க….. எழுந்துறிங்க ….. ஆ…..கடிக்காதிங்க கூசுது…. நான் இனிமே எதும் பேச மாட்டேங்க….. வெளிய……ஹா…..விடுங்க என்று கெஞ்சியவளிடம் “அப்போ நான் சொல்றத செய்றேனு சொல்லு” என்றவன் அவள் “சரி “என்றதும் தான் எழுந்தான்.

அவன் எழுந்ததும் கொக்கியைப் போட்டவள் ,உணர்ச்சியின் பிடியில் நடுங்கிக்  கொண்டிருந்தவளை அணைத்து “அப்பா அம்மாவ பத்தி என்கிட்ட கேட்காத ப்ளீஸ் …..நானே உன்கிட்ட சொல்றேன் சரியா…. என்றதும் “ஹம்ம் “என்றதும் “சரிவா சும்மா ஒரு ரவுண்ட் நடந்துட்டு வரலாம்”.

அப்பொழுதே என்னவென்று சொல்லியிருந்தால் பின்னால் பிரச்சனை வந்திருக்காதோ!!!!!

அந்த தோட்டம் வெறும் புற்தரையாக மட்டுமே இருந்தது ஒரு ஓரத்தில் செடி வைக்கும் தொட்டிகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது .அதை பார்த்து மித்ரனிடம் “ஏன் ஒரு செடியும் வைக்காம வெறுமென விட்டுருக்கீங்க”.
 
“அது ஒருநாள் கோவத்துல நான் தூக்கிப் போட்டு உடைச்சிட்டேன் …..அதிலிருந்த இங்க எதுவும் வளர்க்க வில்லை…..”

“நான் உங்களை ஒன்னு கேட்க வா”.

“ஹம்ம் ஓன்னு என்ன ஓராயிரம் கேளு…. இல்லை என்னையே கூட கேளு அடியேன் எதுவும் தர தயார்”.

“நான் இங்க பூஞ்செடி வைக்க வா” என்று பயத்துடன்  கேட்டாள்.

அவள் நெற்றியில் தன் நெற்றியால் முட்டியவன்” உனக்கு என்ன தோணுதோ செய்”.

“ரொம்ப நன்றிங்க” என்று குதூகலமானாள்.

அவன் ஒரு புருவத்தை மட்டும் தூக்கி சிரிக்கவும்
 “அழகா இருக்கீங்க ” 

“உண்மையாவா”

அவன் அப்படி கேட்டதும் ….அவள் வெளியே சொல்லிட்டோம் போல “அய்யோ “என்று மனதில் அலறியவள் திட்ட போறாரு போல என்று நினைத்துக்கொண்டு தலையை ஆட்டினாள்.

அவன் தலையில் தன் கையை வைத்து ஆட்டியவன்” வா உள்ள போகலாம்” என்று அழைத்து சென்றான்.

இருவரும் உள்ளே வந்ததும் மதியை சுலோச்சனா அழைத்தார்.
“மதி இங்க கொஞ்சம் வந்துட்டு போமா”
அவள் மித்ரனை பார்க்கவும் அவன் தலையசைத்ததும் தனது அத்தையிடம் சென்று
“சொல்லுங்க அத்தை”.
அவர் ஏதோ அவள் காதில் சொல்ல சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினாள்.

என்னவாக இருக்கும்??
மித்ரன் அதை கேட்டு என்ன செய்வான் கோபப்படுவானா???இல்லை கொஞ்சுவானா ???
(இவன் இரண்டுமே செய்வானே பார்ப்போம்)

மோகம் 9:
இருவரும் அறைக்கு வந்ததும் மித்ரன் மதுவிடம் ,
 “உங்க அத்தை என்ன சொன்னாங்க…”

“நீங்க தான் அவங்கிட்ட பேசமாட்டிங்கல்ல…..அப்புறம் ஏன் அதை கேக்குறீங்க…”

“உனக்கு பேசக்கூட தெரியுமா…..”

“ஓ….. இப்போ உங்ககிட்ட நல்லாதானே பேசிட்டு இருக்கேன்….”

“ஹம்ம்….. இந்த பேசுற வாயை என்ன பண்ணலாம் “என்று தன்னை நெருங்கி வந்தவனின் நெஞ்சில் கைவைத்து தள்ளி
“எதுவும் பண்ண வேண்டாம் ……பண்ண கூடாதாம் …….அதைதான் அத்தை சொன்னாங்க….”
 
“என்ன புரியல…. என்ன சொன்னாங்க……”

“கல்யாணம் முடிஞ்சதும் சடங்கு வச்சிக்கலாம்னு சொன்னாங்க…..”

“சடங்கா….”

“அதாங்க இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி பண்ணுனீங்களே….. அதுதான்” என்று மெத்தையைக் காட்டி கூற
அப்பொழுதுதான் அவனுக்கு புரிந்தது.
“ஓ எதும் இனி பண்ண மாட்டேங்கிற தைரியத்துல தான் அம்மணி பேசுறீங்களா…..” என்று மனதில் நினைத்துக் கொண்டவன் அவளிடம் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு “அச்சோ நான் இப்போ என்ன பண்ணுவேன் ……உன்னை பக்கத்துல வச்சுக்கிட்டு சும்மாவும் இருக்க   முடியாதே ….” என்று பாவமாக கூறினான்.

அதை உண்மை என்று நம்பியவள் ”சரிவிடுங்க இன்னும் கொஞ்ச நாள் தானே” என்று அவன் வருந்துவது தாங்க முடியாமல் அவனிடம் சொன்னாள்.

(எலிதானே வந்து வலையில் சிக்கிடுச்சு)

அவள் அப்படி சொன்னதும் மித்ரன் அடக்க மாட்டாமல் சிரித்து விட்டான்.
“ஹாஹாஹா……  யு ஆர் சோ ஸ்வீட்….” அவன் திடீரென்று சிரிக்கவும் என்ன ஏதென்று அவள் அறியும் முன்னே அவளை தூக்கி ” உங்க அத்தை சொன்னா நான் கேட்டுருவேனா “என்று சிரித்தான்.

அவன் சிரித்தது அவளுக்கு வில்லன் சிரிப்பு போலவே இருக்க அதை அவனிடம் வாய்விட்டும் சொல்லிவிட்டாள் அவன் அதை கேட்டு இன்னும் வெடித்து சிரித்தான். 

மித்ரன் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக உணர்ந்தான்.பின்பு இப்படி அப்பாவி அவனுக்கு மாட்டிடுச்சே…….
அவளது அப்பாவிதனம் இன்னும் அவனை அவள்பால் ஈர்த்தது.

“இறக்கி விடுங்க….”

“முடியாது….”

 “ப்ளீஸ்ங்க…. இறக்கிவிடுங்க……”

“அப்போ என்னை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூப்பிட்டல்ல….. அப்படி கூப்பிடு…..”

“எப்படி கூப்பிட்டேன்…”

“அத்தான்னு கூப்பிட்டல்ல….. அப்படி கூப்பிடு….. அப்போதான் இறக்கிவிடுவேன்…..”

“அத்தான் இறக்கிவிடுங்க…… “

“இன்னும் சத்தமா …… எனக்கு காது கேட்கலை…..”

“அத்தான் ……அத்தான்ன்ன்…… இறக்கிவிடுங்க அத்தான்ன்ன்ன் ……..” என்று கத்தினாள்.

பின்பு இறக்கி விட்டவன் அப்படியே விட்டால் அது மித்ரன் இல்லையே அவளை அப்படியே மெத்தையில் சாய்த்து அதிரடியாய் அவள் உணரும் முன்பே அவள் சேலையை உருவி தூர போட்டவன் அவள் பாவாடையை சுருட்டியவன் அங்கு கண்ட காட்ச்சியில் மொத்த உணர்வும் வடிய அந்த இடத்தை வருடிக் கொடுத்தான்.

அவள் கெண்டைக்கால் சதையில் சூடு வைத்தற்கான தடத்தைப் பார்த்து தான் ஸ்தம்பித்து நின்றான்.

“மதி என்ன இது….இது எப்படி ஆச்சு….. “

“அது…அது……அது வந்து வண்டி சைலன்ஸர்ல சுட்டுக்கிட்டேன்…… “

அவன் பார்த்தப்பர்வையே அவள் ெசான்னதை நம்பவில்லை என்று கூறியது.

“இப்போ சொல்ல போறியா      இல்லையா ……” என்றான் சற்று கோபத்துடன்.

பயத்துடன் அவனை பார்த்துக்கொண்டே “அது சின்ன வயசுல வான்மதிக் கிட்ட நான் திண்பண்டம் வாங்கி சாப்ட்டத சித்தி பார்த்து கரண்டிய அடுப்புல வச்சு சூடு வச்சுட்டாங்க……. நான் வானுக்கிட்ட கேட்கல….. அவதான் எனக்கு சாப்டுக்கானு சொல்லிகொடுத்தா…..” என்று சொல்லிக்கொண்டே  அவனை பார்த்தவள், அவன் கண்கள் கலங்கவும் “எனக்கு இப்போ வலிக்கலைங்க” என்றாள்.

அவளை இறுக்கி அணைத்துக்கொண்டு  “இப்போ வலிக்கல……ஆனால் அப்போ வலிச்சிருக்கும்ல……”

அவன் அப்படி கேட்கவும் அவள் அழுதுக் கொண்டே “ரொம்ப வலிச்சுது …..ரொம்ப எரிஞ்சுது ….ரொம்ப ….”திடீரென்று அவள் “அப்போவே நீங்க வந்து என்னை கூட்டிட்டு போயிருக்கலாம்ல ……”என்றாள்.

“எனக்கு அப்போவே தெரிஞ்சிருந்தா எப்படியாவது கூட்டிட்டு வந்துருப்பேன்டா….”

பின்பு அவளை நீங்கி இப்பொழுது அவளுக்கு எரிவது போல் அந்த வடுமேல் ஊதிவிட்டான் …..எச்சில் தெறிக்க முத்தமிட்டான். 

மதி அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள் தனக்காக அவன் கண்ணீர் சிந்தியதைப் பார்த்து அவன் மேல் ஏதோ ஓர் உணர்வு அவளை தாக்கியது.

எனக்காக கண்ணீர் விடக் கூட ஒருத்தர் இருக்கார் என்று மனதில் சந்தோஷமாக நினைத்துக்கொண்டாள். பின் அவனை இழுத்துக் கட்டிக்கொண்டாள் ஒரு முடிவுடன். 

இனி நீங்கதான் என் புருஷன் ….எனக்கு உங்களை பிடிச்சுருக்கு …….நீங்க என்னை இனி வேலைக்காரியா இருக்க சொன்னா கூட சந்தோஷமா இருப்பேன்…..என்று தன் மனதோடு பேசியவள் அவனை எவ்ளோ முடியுமோ இறுக்கித் தன்னோடு கட்டிக்கொண்டாள்.

மித்ரன் கைப்பேசி அழைக்க அவளை நீங்கி யாரென்று பார்த்தான். அவன் தம்பி மித்ரநந்தன் தான் அழைத்திருந்தான். தினமும் கூகுள் டுவோவில் வீடியோ காலிங் போட்டு பேசுவார்கள்.

மதியிடம் “மது தம்பி கால் பண்றான் சாரி கட்டுடா நாம பேசலாம்” சரி என்று தலையாட்டி புடவையை எடுத்துக் கொண்டு குளியறைக்குள் புகுந்து கொண்டாள்.

“சிவகாமி இதுக்கு நீங்க கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும் …… சின்ன பொண்ணுன்னு கூட பார்க்காம….. கைகளை மடக்கி கண்களை மூடியவன் என் மது வலியில் எப்படி துடிச்சிருப்பா….. அந்த வலியை நீங்க உணரனும் நான் உங்களை உணர வைப்பேன்…… ” என்று மனதோடு பேசியவன் கதவு திறக்கும் சத்ததில் தன்னிலை அடைந்தான்.

(சிவகாமி உஉஉஉ சங்குதான் டி உனக்கு).

மோகம் 10:
“ஹாய் அண்ணா….ஹாய் அண்ணி…. என்று இவர்களைப் பார்த்து கைப்பேசி திரையில் இருந்த மித்ரநந்தன் இருவரையும் கண்டு ஆர்ப்பரித்தான். 

மது அவனை பார்த்து புன்னகைக்கவும், மித்ரன் 
“எப்படி நந்துபோகுது படிப்புலாம் …..” 

“அண்ணா, நீ வேற எப்போ ஒரு வருஷம் முடியும்னு இருக்கு…… எனக்கு அங்க இருக்கனும்னு தோணுது…..”

 (ஹிஹி இப்போ வரணும்னு தோணுது….. ஆனா நான் உன்னை திரும்ப லண்டன்க்கே அனுப்ப ஆள் ரெடி பண்ணிட்டிருக்கேன்….அடுத்த கதையின் ஹீரோ இவன்தான்)

“இன்னும் ஒரு வருஷந்தானே….. முடிச்சிட்டுவாடா…..”

” சரி அண்ணி எங்க….. “

“அவ ஷைடைப் டா…..”

“அப்புறம் பேசுவா……நீ சாப்டியா ….. ” 

“இனிமே தான் நீங்க….”

“இனிதான் சாப்டனும்….. ஒகே டா டேக் கேர் பாய்…..”
  “ஒகேணா பாய்…….”

மித்ரன் மதியிடம் “ஏன்டா பாதியில எழுந்து போய்ட்ட…… என்னாச்சு….”

“அது……அது….. “

“ம்….. சொல்லு…..”

திரையில் அவனும் அவளும் தெரிந்தபோது அவன் ராஜகுமாரன் போல் அத்தனை அழகாகவும் அவனுக்கு பக்கதில் முகம் கருத்து எலிக்குட்டிபோல் அமர்ந்திருந்தவளுக்கு தான் அவனுக்கு பொருத்தமில்லை என்று நினைத்துக்கொண்டு விலகி அமர்ந்தாள்.

“அது கூச்சமா இருந்துச்சுங்க….. அதான் தள்ளி வந்துட்டேன்…..”

“ஹம்ம் சரி சாப்பிடலாமா…..”

“வாங்க போலாம்….”

“எங்க..?”

“சாப்பிட….”

“நான் முத்து அண்ணாவ இங்கேயே எடுத்துவர சொல்றேன்….. கீழே போகவேண்டாம்…..”

அவன் ஏன் அப்படி சொல்கிறான் என்று புரிந்தது. அவனை நெருங்கி அமர்ந்தவள் “வாங்க கீழே போய் சாப்பிடலாம் ….. ” 

அவன் முறைக்கவும் கண்களை சுருக்கி “ப்ளீஸ் எனக்காக….” என்கவும்

” சரி வா……” 

கீழே இருவரும் இறங்கவும் அதை பார்த்து சந்தோஷமடைந்த சுலோச்சனா
 “வா மித்ரா….. வா மதி…..” என்று அமர வைத்து அவர் பரிமாற செல்ல மித்ரன் ஏதோ பேச போக அவன் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டு ” பிளீஸ் “என்று கண்களால் கெஞ்சினாள்.

பின்பு ராதாகிருஷ்ணனும் வந்தவர் சாப்பிட அமர்ந்தார். மதி எழுந்து” நீங்க உட்காருங்க அத்தை….. நான் எல்லாருக்கும் பரிமாருறேன்……”

“இல்லமா…. நீ அமர்ந்து சாப்பிடு நான் பரிமாருறேன்…..”

பின்பு சுலோச்சனா பரிமாற அனைவரும் உண்டனர். அப்பொழுது மதி “மாமா…. நீங்க அத்தான் மாதிரியே அழகா இருக்கீங்க …..”என்று மித்ரனை காட்டி கூறினாள்.

அதை கேட்டு இருவருக்கும் புரையேற அவரவர் கணவனுக்கு தலையில் தட்டி தண்ணீர் குடுத்தனர்.

மித்ரன் முறைத்தான் அவளை பார்த்து நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி முறைக்கிறார்.

கிருஷ்ணன் சிரித்துக்கொண்டே “உங்க அத்தான் மாதிரி இல்லமா……அவன் தான் என்னை மாதிரி இருக்கான் …..”என்றார் கெத்தாக.

“என்ன சனா….” அப்படி தானே என்கவும் அவர் அந்த வயதிலும் வெட்கப்பட்டார்.

மூவரும் சாப்பிட்டதும் சுலோச்சனாவை அமரவைத்து பரிமாறி விட்டு தான் மதி தங்கள் அறைக்கு வந்தாள்.

வந்தவள் ஷாக் ஆனதோடு இல்லாமல் “என்னங்க நீங்க சின்னப்புள்ளைங்க போடுற கால்சட்டைய போட்டுருக்கீங்க…..”

வெறும் ஷாட்ஸ் உடன் நின்றவனை பார்த்து அவள் அப்படி கேட்டதும் பக்கென்று சிரித்தவன் ” நான் தூங்கும்போது இப்படிதான் தூங்குவேன்…”

“அய்ய என்னங்க சின்னபுள்ளை போல பண்றீங்க…..”

“ஹேய் இதுக்கே இப்படி சொல்ற …… இனிமேல் இந்த ஷாட்ஸ் கூட இல்லாமதான் தூங்கப்போறேன்…..”

“என்னாது……” என்று அதிர்ச்சியடைந்தவள் “ச்சீ ச்சி” என்கவும் 

“என்னடி ச்சீ….” என்று அவளை நெங்கினான்.

அவள் உதட்டை பிடித்து ” இந்த வாய் என்னவெல்லாம் பேசுது ……அவர்கிட்ட போய் அப்படி சொல்ற …..அவர் மகன் அவரை போல தானே இருப்பேன்…… ஏன் நாளைக்கே நமக்கு மகன் மகள் பிறந்தா கூட என்னை போலதான் இருப்பாங்க…..”

மதிக்கு மகன் மகள் என்றதுமே அவள் இந்த உலகில் இல்லை நமக்கும் குழந்தை வந்தா அதும் அத்தான் போலவே அழகா இருந்தா சூப்பரா இருக்கும்ல என்று நினைத்துக்கொண்டிருந்தவள் தன் நெஞ்சில் ஏதோ முட்ட நினைவுக்கு வந்தாள்.

மித்ரன் அவள் சேலையை உருவி அவள் வெரும் ஜாக்கெட் பாவாடையோடு நிற்க அவள் தனங்களில் முகத்தை அழுத்தி முட்டினான்.அவன்  தலையை தன் மார்போடு அழுத்தியவள் 

“அத்தான் …… நாளைக்கே நமக்கு பாப்பா வந்துருமா……” என்றாள் 

அவன் பட்டென சிரித்து “நாளைக்கே லாம் வராதுடா ……இன்னும் பத்து மாசம் கழிச்சு வரும் ” என்றான்.

ஒரு பையை கொடுத்து “இந்த நைட் டிரெஸ் போட்டுட்டு வா…..நான் மொபைல் எப்படினு கத்து தரேன்……”

” அதான் இந்த புடவை இருக்கே …..”

“இது போட்டுட்டு வா ஃபிரியா தூங்கலாம்…..”
 வாங்கிட்டு போனவள் குளியலறையில் இருந்து கொண்டே 
“இது என்னங்க இப்படி இருக்கு …… “

“நீ போட்டுட்டு வா….. நான் எப்படி இருக்குன்னு சொல்றேன்……”

அவள் வந்ததும் அவளை பார்த்து விசில் அடித்தவன் “இந்த நைட் டிரெஸ்ல சூப்பரா இருக்க மதுக்குட்டி……”

“அத்தான் நல்லாவே இல்லை……. இந்த துணி சல்லையா இருக்கு…… குட்டியா இருக்கு …….கொஞ்சம் இறக்கம் வச்சு தச்சுருக்க கூடாது….”

“இந்த டிரெஸ் இப்படிதான் இருக்கும்….” என்று அவளை அழைத்து மெத்தை தலைமாட்டில் சாய்ந்து கொண்டு தன்னோடு அணைத்து கொண்டு மொபைலை எடுத்து அவளுக்கு எப்படி இயக்க வேண்டும் ,எதாவது தேவையானது வேண்டுமென்றால் ஆர்டர் பண்ணி வாங்கிக் கொள்ளலாம் …வீட்டிற்கே வந்து தருவார்கள் என்றதும் 

“ஓ…..வீட்டுக்கே வந்து தருவாங்களா!!!!” 
என்று ஆர்ச்சர்யத்துடன் கண்களை விரித்துக் கேட்டவளை “ஆமாம்” என்று அவளை இறுக்கி அனைத்து கண்களில்  முத்தமிட்டான்.

“இதெல்லாம் பண்ண கூடாதுன்னு சொன்னாங்க….. “

“உங்க அத்தை மெயின் மேட்டர்தான் செய்ய கூடாதுன்னு சொன்னாங்க……. இதெல்லாம் செய்யலாம்……”
என்று சொல்லி அவள் உதட்டை தன் உதட்டால் சிறைபிடித்தான் .

அவனிடம் இருந்து தன்னை பிரித்தவள் மூச்சு வாங்க” மிது அத்தான்….. நீங்க கடிக்குறீங்க……” 

அவள் மிது என்று தன்னை கூப்பிட்டதும்  “இப்ப என்ன சொன்ன….”

 “என்ன சொன்னேன்…..”

 “இப்போ என்ன ஒரு பேரு சொல்லி கூப்பிட்டியே…….”
அவன் நெஞ்சில் தன் முகத்தை மறைத்துக்கொண்டு “மிது அத்தான் …….” என்றாள்.

மதுக்குட்டி என்று அவளை நிமிர்த்தி அவள் நெஞ்சில் புதைந்தான் அவள் தனங்களில் தன் தலையால் முட்டினான் என்ன ஆச்சர்யம் அவளுக்கு அது வலிக்கவில்லை கண்கள் சொக்க அவன் தலையை தன் நெஞ்சோடு அணைத்தவளுக்கு சுகம் சுகம் மட்டுமே.

மித்ரன் மதுவிடம், ” மதுக்குட்டி….. எனக்கு திராட்சை வேணும்……”

” இருங்க எடுத்துட்டு வரேன்…..”
எழுந்தவளை இறுக்கி அனைத்தவன் “இங்கதான் இருக்கு……” 

“இங்க இல்லைங்க…… கீழே இருக்கு……”

 “இல்லடி….. இங்க உன்கிட்ட தான் இருக்கு……” என்று அவள் தனங்களை அழுத்தினான்.

“போங்க….. அதெல்லாம் வேண்டாம் …..” என்று சிணுங்கினாள்.

அதுவே அவனுக்கு அழைப்பு விடுப்பதுபோல் தான் இருந்தது.
அதற்கு மேல் அவனால் பொருக்க முடியவில்லை பரபரவென்று அவள் நைட் டிரெஸின் நாடாவை அவிழ்த்து ஒரு பக்க திராட்சையை கடித்தான்… இழுத்தான்…. அவன் ஒவ்வொரு செயலுக்கும் அவள் துள்ளினாள்…. தவித்தாள் …..துடித்தாள்…… அவசரமாக பற்களால் இழுத்து கடித்தவன் அவள் நெஞ்சோடு அவனை அழுத்தவும் மெதுவாக கடித்து நாவால் நக்கி ,பின்பு சப்பவும் முன்பைவிட இது சுகவேதனையாகி போனது.

சிறிது நேரத்தில் அவன் விலகியதும் இவள் நாடாவை கட்ட கையை வைக்கவும் 
“நோ மது …..அது எனக்கு நைட் புல்லா வேணும்……” என்று அவன் வாயில் வைத்துக்கொண்டே தூங்கிப்போனான். தன் நெஞ்சோடு அவனை அணைத்துக் கொண்டு அவளும் தூங்கிப்போனாள்.

இங்கு கிருஷ்ணன் அறையில் “மருமகள் அப்பாவியா வெள்ளந்தி மனம் கொண்டவள் இல்லையா…..”

 “ம்ம்…. ஆமாங்க நல்ல பொண்ணு….. வந்த அன்னைக்கே மித்துவை கீழே கூட்டிட்டு வந்துட்டா……. நம்ம பையன் நம்மக்கிட்ட இன்னும் கொஞ்சநாள்ல்ல வந்துருவான் இல்லங்க…..”

அவர் வருந்தவது பிடிக்காமல் “சுலோ ….. வந்து என்னை கவனிடி ……அப்புறம் உன் பிள்ளை புராணம் பாடுவ……”

“தினமும் தான் கவனிக்கிறேன்….. மருமகள் வந்துட்டா……  இனி கொஞ்சம் அடக்கியே வாசிங்க….. “

“நோ சுலோ….. அப்படியெல்லாம் உன்னைவிட முடியாது ….”என்று அவரை அணைத்தவரிடம் “சுலோ …சுலோன்னு சொல்லி சுலோவாதான் பண்றீங்க ……” 

“என்னது….”

” ஆமாம் உங்களுக்கு வயசாகிடுச்சுல …… அதான் சுலோவா பண்றீங்க….. “
 
“உனக்கு வலிக்கும்னு மெதுவா பண்ணின…… நீ என்னையே குத்தம் சொல்றியா……”

“நான் உங்க கிட்ட வலிக்குதுனு சொன்னேனா கிருஷ்…..”

“இப்ப பாருடி அலற விடுறேன்…..” என்றவர்” சுலோ சுலோ” என்று புலம்பிக் கொண்டே வேக வேகமாக செய்து சுலோவின் இடுப்பை உடைத்தார். 

காலையில் மதி சீக்கிரமே விழிப்பு வந்து எழ முதலில் எங்கு இருக்கிறோம் என்று புரியவில்லை பின்புதான் நேற்று நடந்தது அனைத்தும் நினைவு வர புன்னகைத்தவள் “ஆ… “என்று கத்தினாள்.

என்னவாக இருக்கும்???

மோகம் 11 :

மித்ரன் தான் தூக்கத்தில் அவளது ஒரு பக்க மார்பை விடாமல்  பிடித்துக் கொண்டு சப்பினான்.
நைட் புல்லா வாயிலேயாவா வச்சிருந்தாங்க என்று நினைத்தவள் தன் நெஞ்சோடு அவனை இறுக்கிக்கொண்டாள்.

அவள் அணைக்கவும் தூக்கம் கலைந்து எழுந்தான் “என்னடா சீக்கிரம் எழுந்துட்டியா…..” என்று தன் வாய் அருகில் இருந்த திராட்சையை கவ்வி சுவைத்தான்… 

“தூக்கம் வரலை அத்தான்….. சீக்கரம் எழுந்துதான் பழக்கம்….. அதான் முழிப்பு வந்துடுச்சு…….”

 “தினமும் காலையில் என்பொழுது இப்படியே விடியனும்” என்று சொல்லிக் கொண்டே அவள் மார்பை ஒரு கையால் பிடித்துக் கொண்டு அந்த கருநிற திராட்சை விதையை மற்றொடு கையால் நிமிண்டி கசக்கினான்.

“ஹா….அத்தான்…. நைட் ஃபுல்லா வாயில் வைத்து கொண்டே தூங்கியதால் அது பெருசாயிடுச்சு அத்தான்…… எனக்கு எப்பொழுதும் இவ்ளோ பெருசா இருக்காது……” என்று அவனை உசுப்பேத்திக் கொண்டிருப்பதை பாவையவள் அறியவில்லை.

அவன் உடனே மற்றொரு மார்பை அழுத்தி “இன்னைக்கு நைட் இதை வாயில் வைத்துக் கொண்டே தூங்கினா இதும் இந்தளவுக்கு பெருசாயிடும் மதுக்குட்டி ….” என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.

“போங்க அத்தான்…..நீங்க இப்படி பேசாதீங்க …..எனக்கு ஒரு மாதிரியா இருக்கு ….”

அவள் மேல் தன் காலை போட்டு இழுத்து தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தவன் “என்ன மாதிரியா இருக்கு மதுக்குட்டி….”

 “தெரியலை…..” என்று அவன் மார்பில் தன் முகத்தை புதைத்து கொண்டாள்.

“சரி…. எழுந்து குளி…..நான் ஜாகிங் போய்ட்டு வரேன்…..” என்று கீழே சென்றான்.

வெளியே வந்தவன்” என்ன ரமேஷ் எங்க போயிருந்த ஆளை பாக்க முடியல ….” 

” சார் நான் ஊருக்கு போயிருந்தேன் ….. இப்போதான் வந்தேன்….. சார் கிட்ட சொல்லிட்டு தான் போனேன்……”

 “சரி வேலைய பாரு ரமேஷ்…..”

 அவர்கள் வீட்டில் டிரைவராக வேலை பார்க்கிறான். இங்கு வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது.

மதி குளித்து கீழே வந்து சாமியறையில் விளக்கேற்றி விட்டு வரும் போது சனா (சுலோச்சனா இனி சனா என்று அழைக்கப்படுவார்)

 “அதுக்குள்ள எழுந்துட்டியாடா….” 

“ஆமாம் அத்தை….”

 “சரி இரு வரேன்” என்று சொல்லிவிட்டு அவர் அறையில் இருந்து நகைப் பெட்டி ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தார்.

அதில் வைரத்தால் ஆன தோடும் அழகிய வேலைப்பாடு கொண்ட ஒரு செயின் இருந்தது. அதை எடுத்து மதியை போட சொன்னார்.

மதி , “வேண்டாம் அத்தை அத்தான் குடுத்தது இருக்கு…..”

“அதை கழட்டிட்டு இதை போட்டுக்கோடா…..”

அப்பொழுது மித்ரனும் இதை கேட்டுக் கொண்டே வந்தவன் “அதான் சொல்றாங்களே மதி போட்டுக்கோ….” 
அவன் சொல்லவும் போட்டுக் கொண்டவள் “நல்லார்க்காஅத்தை…..”

 “அழகா இருக்குமா …..”என்கவும் தலையை குனிந்து கொண்டு வெட்கிச் சிரித்தாள் .அதை பார்த்துக் கொண்டே மேலே தன் அறைக்கு செல்ல படிகளில் ஏறியவன் “மதி மேலே வா….” என்றான்.

 “போமா கூப்டுறான் பாரு….. நான் காபி போட்டு அனுப்பி வைக்கிறேன்……”
தங்கள் அறைக்கு வந்தவள் குளியலறையில் சத்தம் கேட்கவும் நேற்று அவன் வாங்கிவந்த உடைகள  பார்த்துக் கொண்டிருந்தாள் .அவன் வரவும் “என்ன அத்தான் கூப்டீங்க…..”

” நான் ஆபிஸ் போய்ட்டு வரேன்….. நீ ஏதாவது வேணும்னா கால் பண்ணு சரியா……” என்றான் அவள் கன்னத்தை வருடிக்கொண்டே.

“ஹம்ம சரி அத்தான்……”

 “நீ கார்டனில் செடி வைக்கிறேனு  சொன்னல்ல….  கீழே ரமேஷ்ன்னு ஒருத்தன் இருப்பான், அவன உதவிக்கு கூட வச்சிக்கிட்ட செய் சரியா……”
( இங்கு தான் மித்ரன் தப்பான ஆளை சூஸ் பண்ணிட்டானோ…..)

“ஹம்ம்….”

அவள் டிரெஸை கையில் வைத்திருக்கவும்
“டிரெஸ்லாம் எப்படி இருக்கு…. பிடிச்சிருக்கா….. இல்லை வேற வேணுமா…..”

“எப்படி அத்தான் என்னோட அளவு உங்களுக்கு தெரியும்….. கரெக்டா இருக்கு….”

(ஆடு தானா போய் சிக்கிடுச்சு …..ஏன் மா மதி சும்மா இருக்குறவனை நீயே ஏத்தி விடுற ) 

அவள் சொல்லவும் “கரெக்டா இருக்கா மது ……எல்லாம்……” என்று அவள் காது மடலை உரசிக் கொண்டே குரல் கரகரக்க கேட்டான்.

அவன் அப்படி கேட்கவும் தான் “அய்யோ மதி உனக்கு அறிவே இல்லையாடி ……. சும்மாவே இழுத்து வச்சு கடிப்பாரு …… இப்போ போச்சு சொல்லவே வேணாம்…” என்று அவள் நினைத்தது போலத்தான் மித்ரன் அவளை உருட்டிக் கொண்டிருந்தான்.

“அத்தான் ஆபிஸ்க்கு போகணும்னு சொன்னீங்க…..”

“போயே ஆகனுமா மது……”

அவள் ஏதோ சொல்ல வருவதற்குள் மித்ரனின் கைப்பேசி அழைக்க யாரென்று பார்த்தர்ன்.

விக்கி தான் அழைத்தான். “என்ன மச்சான் நல்ல தூக்கமோ…..”

 “ம்ம் செம தூக்கம் …..”என்று மதியைப் பார்த்துக் கண்ணடித்தான். 

அவள் தலையைக் கீழே குனிந்து கொண்டாள்.

“அப்பா கால் பண்ணிருந்தார்…… மதிய பத்தி கேட்டார்……”

 “சொல்லிட்டியா…..”

” ஹம்ம் சொன்னேன்…… எதும் சொல்லல்ல……கல்யாணம்…. அடுத்த மாதம் தான் நல்ல நாள் இருக்காம்……”

“என்னது அடுத்த மாதம் தானா…… டேய் மச்சான்….. என்ன டா …..இன்னும் எவ்வளவு நாள் டா…….”

“இவ்ளோ நாள் பொருத்துட்ட…. இன்னும் கொஞ்ச நாள் தான் டா…..” என்று அடக்க மாட்டாமல் சிரித்துக் கொண்டே சொன்னான்.

 “ஹம்ம் சரி….. நீ சிரிக்கிறியா …..கன்னி பையன் சாபம் உங்கள சும்மா விடாதுடா……” என்று சொல்லி போனை அனைத்தான்.

“என்னங்க அடுத்த மாதம்…… “

“ஹம்ம் …..ஒன்னும் இல்லை….. “

கதவு தட்டப்படவும் யாரென்று மித்ரன் பார்தத்தான் முத்து தான் கையில் காஃபி ட்ரெயுடன் நின்றிருந்தான்.

” சார் உங்க இருவரையும் ஐயா கீழே வர சொன்னார்……”

“ஹம்ம் வரோம் அண்ணா…..”

இருவரும் கீழே வந்ததும் ராதாகிருஷ்ணன் வீட்டில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் தன் மருமகளை அறிமுகப்படுத்தினார்.

 பின்பு மதி பரிமாற அனைவரும் சாப்பிட்டனர். மதியை அமர்த்தி அவளை சாப்பிட வைத்து விட்டே மித்ரன் தன்னுடைய ஆபிஸ்க்கு சென்றான்.

அனைத்தும்  நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது …….
அவள் வரும் வரை……. 

அந்த அவள் யார் சிவகாமியா? இல்லை வேறு நபரா??

மோகம் 12:
சனா மதியை அழைத்து, ” மதிம்மா , கோவிலுக்கு போய்ட்டு வருவோம்டா…..” 

“சரி அத்தை…. போகலாம்…… எதாவது விஷேசமா அத்தை……”

 “கோவிலுக்கு போய் ரொம்ப நாட்கள் ஆச்சுடா….. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்…… என் பையன் கொஞ்ச கொஞ்சமா மாறிட்டு வரான்……எல்லாம் உன்னாலதான் மா……. இன்னும் கொஞ்ச நாட்கள்ல்ல, என் பிள்ளை எனக்கே கிடைச்சிடுவான்….. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு…… “

“கவலைப்படாதீங்க அத்தை….. அத்தான் உங்ககிட்ட கண்டிப்பா பேசுவாங்க …..”

“நீ இப்படி சொன்னதே ரொம்ப சந்தோஷமா இருக்குடா……”

” ஏன் அத்தை? என்ன ஆச்சு? ஏன் உங்க கிட்ட அத்தான் பேச மாட்டேங்கிறார்?”

” நானே என் பிள்ளையை நம்பாமல் போய்ட்டேன்……”
இதை சொல்லிக்கொண்டே அவர் கண் கலங்கவும்

” சரி விடுங்க அத்தை…… அதை பற்றி நினைக்காதீங்க……வாங்க நாம கிளம்பலாம்……”

இங்கு சிவகாமி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அளவுக்கு சூடாக இருந்தார். அப்பொழுது வானு ,”அம்மா உன் முகத்தை கண்ணாடில பாத்தியா……” 

“ஏன்டி…..”

” பாத்துடாத மா ….காலையிலேயே இப்படி முகத்தை வச்சிருந்தா ஒரு வேலையும் ஆகாது…….நாம வேலை செஞ்சாதான் வேலை எல்லாம் முடியும்…….

(ஏன் வானு எரியுற எண்ணெயில் நெய்ய ஊத்துற )

“ஏன் மா நேத்து வரைக்கும் வேலை செய்ய ஆளு இருந்துச்சு…… இப்போ அக்கா இல்லாம எல்லா வேலையும் செய்ய உனக்கு இடுப்பு வலைய மாட்டேங்குதோ….. ” என்று நக்கலாக சிவகாமியை பார்த்துக் கூறினாள்.

“நாளை மறுநாள் நான் ஹாஸ்டல் கிளம்புறேன்…… அதுக்கப்பறம் அங்கபோய் எதாவது கோல்மால் பண்ணன்னு தெரிஞ்சுது…… நான் பொல்லாதவள் ஆயிடுவேன் மா…….” என்று கூறிவிட்டு சென்றாள்.

சிவகாமி தன் மனதில் “நீ கிளம்புடி…..உன் அக்கா காரிய என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்……” என்று நினைத்துக்கொண்டாள்.

(சிவகாமி நீ ஒன்னு மறந்துட்ட மித்ரன் தான் கூட இருப்பானே அவக்கிட்ட உன்னை நெருங்க வே விட மாட்டான்…….ஹா ஹா ப்ளான் போடுற முகறக்கட்டைய பாரு…… ஹாஹா)

இங்கு இருவரும் கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.ரமேஷ் தான் கார் ஓட்டி கொண்டிருந்தான்.  அவ்வபொழுது கண்ணாடி வழியாக மதியைப் பார்த்துக் கொண்டு வண்டி ஓட்டினான்.

(உன் கண்ணுல கொசு வத்தியை வைக்க)

“பொண்ணு நல்லாதான் இருக்கா…..   மாநிறமா இருந்தாலும் தளதளன்னு நச்சுனு இருக்கா…..
பார்க்க அப்பாவியா…… ஒன்னும் தெரியாத மாதிரி தான் இருக்கா……. ஈஸியா மடிஞ்சிடும்…… ரமேஷு உன் காட்டுல மழைதான்டா…….” 

ரமேஷ்  ஆள் கொஞ்சம் பார்க்க அழகாக இருப்பான் இதற்கு முன்பு வேலை செய்த வீட்டில் உள்ள பெண்களிடம் பேசி நெருக்கமாகி பழகி போட்டோ எடுத்துக் கொண்டு அவர்களிடம் இருந்து பணம் பறிப்பது தான் இவனின் வேலையே. மது இவனிடமிருந்து தப்புவாளா???.

மாமியாரும் மருமகளும் தங்களுக்குள் சலசலத்துக் கொண்டு வர சனாக்கும் செடி வளர்க்க பிடிக்கும் என்று சொன்னதால் சாமி தரிசனம் முடித்துவிட்டு வரும் வழியில் ஒரு நர்சரியில் செடிகள் வாங்கி வந்தனர்.

“நீ கொஞ்ச நேரம் ஓய்வு எடுடா…… நான் மதியம் சாப்பிட கூப்பிடும் போது வா சரியா…..”

 “சரி அத்தை…….”

தங்கள் அறைக்கு வந்ததும் தன் கைப்பேசியை எடுத்து கணவனுக்கு அழைக்கலாமா என்று யோசித்தாள் பின்பு வேண்டாம் அவங்க வேலையா இருப்பாங்க எதுக்கு தொந்தரவு பண்ணனும் என்று நினைத்துக் கொண்டே கீழே வைத்தாள்.

 திடீரென்று அலைப்பேசி அழைக்கவும் திடுக்கிட்டு பயந்தவள் கைப்பேசியை எடுத்து “ஹலோ” என்றாள்.

” என்ன குரல் நடுங்குது……பயந்துட்டியா மதுக்குட்டி……”

” ஆமாங்க இப்போதான் உங்களுக்கு போடலாம் நினைச்சு போனை எடுத்தேன்…… அப்புறம் வேலையா இருப்பீங்கன்னு வச்சுட்டேன்…… திடீர்னு சத்தம் கேட்கவும் பயந்துட்டேன்…….”

“ஹம்ம் சரிடா……. இன்னும் கொஞ்ச நேரத்துல வரேன்…….”

“ஹம்ம சரிங்க…… “

அவனிடம் பேசிவிட்டு வைத்ததும் எழுந்து பால்கனிக்கு வந்து அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்தாள்.
சிறிது நேரத்திலே கண்கள் சொக்க நித்திரையில் ஆழ்ந்தாள்.

மித்ரன் வீட்டிற்கு வந்தவன் தன் அறைக்கு வந்து பார்க்கவும் மதி எங்கே என்று தேடிக்கொண்டே வர அவள் ஊஞ்சலில் அமர்ந்து கம்பியில் தலைசாய்த்து தூங்குவதை பார்த்து “என் தேவதை தூங்குறாங்களா……”சொல்லிக்கொண்டே மெதுவாக அவளை தன் கைகளில் அள்ளிக்கொண்டு மெத்தைக்கு வந்தான்.

அவளை படுக்க வைக்கவும் திடுக்கிட்டு எழுத்தவள் “அத்தான் நீங்கதானா…… “

“ஹிம்ம்….” என்று அவள் உதட்டில் ஒரு முத்தம் வைத்தான். 

“என்ன தூக்கம்….” அவன் சாதாரணமாக தான் கேட்டான் அவள் திட்டுவான் என்று பயந்து நடுங்கிகொண்டே “இல்லை அத்தான் கோயிலுக்கு நானும் அத்தையும் போய்ட்டு வந்தோம்….. அப்புறம் ஊஞ்சல்ல உட்காந்து ஆடிட்டு இருக்கும் போது நல்லா காத்தும் அடுச்சுதா…… அதுல அப்படியே தூக்கம் வந்துருச்சு…… இனிமே தூங்கமாட்டேன் சாரி அத்தான் என்னை மன்னிச்சிடுங்க …..”என்றாள்.

“ஏய் மதுக்குட்டி….. உன்ன தூங்கக்கூடாதுன்னு சொல்லலா…… பயப்புடுதா…. என்று அவளை அணைத்துகொண்டான்”

“நான் கூட பயந்துட்டேன் அத்தான்……. நான் தூங்குனதுக்கு நீங்க திட்டு வீங்கன்னு…… நான் தூங்குனா சித்தி திட்டு வாங்க ……அதான் அந்த நினைப்புல பயந்துட்டேன்……..” என்று அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அவன் சட்டை பட்டனை திருகியபடி கூறினாள்.

“உன் சித்திய பத்தி பேசாதடா மதுக்குட்டி … எனக்கு கோபமா வருது……”

” இனிமே பேசமாட்டேன்……”

“ஹிம்ம்……”

“சரிவா நாம சாப்பிட்டுட்டு நான் ஆபீஸ்க்கு போகனும்….”

அவன் சாப்பிட்டு கிளம்பிவும் மாமியாரும் மருமகளும் செடி வைக்கும் வேலைக்கு ஆயத்தமாகினர்.
ரமேஷ் இவர்களுக்கு உதவுகிறேன் என்று எடுத்து வைத்து கொண்டிருந்தான். இப்படியே நேரம் போக சனா மதியிடம் “நான் கொஞ்சம் ஓய்வெடுக்குறேன்மா….” என்று சொல்லிவிட்டு சென்றார். 
மதியும் “சரி அத்தை” என்று வேலையை கவனித்தாள்.
இவளுக்கு உதவி பண்ணுவதுபோல் “நான் பண்றேன் சின்னம்மா……” என்றான் 

“பரவாயில்லை அண்ணா….” 

“அட குடுங்க சின்னம்மா…..” என்று அவன் அவள் கையில் இருந்த தொட்டியை வாங்கி செடியை வைத்தான். 

இவளும் அவன் கள்ளத்தனம் புரியாமல் இவனுடன் பேசி சிரித்து கொண்டு வேலை செய்தாள்.
 அப்பொழுது மித்ரன் வரவும் இந்த காட்சி அவன் கண்ணில் பட்டது.

“மதுமதி “என்று கோபத்துடன் அழைத்தான்.

 அடுத்து என்ன நடந்திருக்கும்……..

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *