MMVA

This entry is part 12 of 13 in the series MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

MMVA

மோகம்- 13:
“மதுமதி” என்று கோபமாக அழைத்த மித்ரனை கண்டு, ” ஏன் கோபப்படுறாங்க…. என்னாச்சு…… “என்று நினைக்கும் போதே அவளை நெருங்கி அவள் கையைப் பிடித்து தங்கள் அறைக்கு இழுத்துக் கொண்டு போனான்.

அறைக்கு வந்ததும் “என்ன ஆச்சு அத்தான்….. ஏன் இவ்வளவு கோபம் …… உனக்கு அறிவு இருக்கா மது……” என்று ஆத்திரமாக கேட்டான்.

 “ஏன் அத்தான்…..”

 “என்ன ஏன் அத்தான்……. நீ எதுக்கு வேலை செய்ற…… நீ வேலை செய்ய சொன்னா ஆயிரம் ஆளுங்க இருக்கும்போது நீ ஏன்டா மதும்மா வேர்த்து விறுவிறுக்க வேலை செய்யனும்…… என்றதும் அவளுக்கு உருகிப்போயிற்று”

“அதுமில்லாம வேலையாட்கள் கூட அதிகமா பேச்சு வச்சுக்க கூடாதுடா……”

 “இல்ல அத்தான்…… அந்த அண்ணா தான் உதவி பண்றேன்னு சொன்னாங்க…..” என்று வெகுளியாக சொன்னாள். 

“அதில்லடா மதுக்குட்டி யாரு எப்படினு நமக்கு என்ன தெரியும்….. அதுமில்லாம வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைக்கிற ஆளு நீ ……அதான்டா மது தெரியாதவங்ககிட்ட அதிகமாக பேச்சு வச்சுக்க கூடாது……. சரியா……”

 “ஹிம்ம் சரி அத்தான்…..”
 
“அதுமில்லாம நீ எந்த தப்பான எண்ணத்தோடும் பேச மாட்ட……ஆனால் உன்கிட்ட பேசுறவங்களும் அப்படி இருக்கணும்ல…… அவங்க தப்பான நோக்கத்தோடு பேசினா நமக்கு எப்படி தெரியும் ……அப்புறம் வெளிய இருந்து பாக்குறங்களுக்கும் அது தப்பா தான் தெரியும் …..சரியா……” என்று சின்ன குழந்தைக்கு சொல்வதுபோல் சொன்னான்.

“சரி அத்தான்……”என்று சொன்னவள் தன் மேல் அக்கறை காட்ட தன் அத்தான் இருக்கின்றான் என்ற சந்தோஷத்தில் அவனை இழுத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

“என்ன மதுக்குட்டி கன்னத்துல குடுக்குற……. எனக்கு இங்க வேணும்……”

 “போங்க அத்தான்……” என்று அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளினாள். 

“அய்யோ அத்தான் உங்க சட்டையில் மண் ஒட்டிடுச்சு அச்சோ…..”என்று சொல்லி அதே கையால் துடைத்து விட்டாள்.

“மது நீ கறையை தொடைக்கிறேன்னு இன்னும் அழுக்காக்குற….. ” என்று சிரித்தான்.

“அய்யயோ …..”என்று அவளும் சிரித்துக்கொண்டு அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.

“மது….. ரெண்டுபேரும் சேர்ந்து குளிப்போமா ……”

“அதெல்லாம் வேண்டாம் அத்தான்…… “

அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அலேக்காக தூக்கியவன் குளியலறையில் இறக்கிவிட்டு ஷவரைத் திறந்துவிட்டான்.

“அத்தான் நீங்க வெளியே இருங்க…… நான் குளிச்சிட்டு வரேன்……” அவள் சொல்லும் போதே சேலையை உருவிப் போட்டிருந்தான்.

“அத்தான் …….ப்ளீஸ் அத்தான்…… ” என்று சுவற்றுபக்கம் திரும்பி நின்றுகொண்டாள் வெறும் பாவாடை ரவிக்கையுடன்.

அப்படியே அவள் மீது சாய்ந்து சுவற்றோடு அழுத்தியவன் “மதும்மா திரும்பிடி……” என்று அவள் பின் கழுத்தில் முத்தமிட்டான் கூச்சம் தாங்காமல் திரும்பியவள் பேரம்  பேச ஆரம்பித்தாள்.

“அத்தான் இப்போ வெளியே போனா நைட் ரெண்டு திராட்சைப்பழமும் தருவேன்…… “

அவளைப் பார்த்து சிரித்தவன் “நீ தர வேண்டாம் நானே எடுத்துப்பேன் ……” என்று அவள் நெஞ்சில் முட்டினான் பின்பு அவள் கெஞ்சவும்

 “சரி இரு நான் குளிச்சிட்டு போறேன்…..” 

“அய்யோ வேண்டாம் அத்தான்…… “

“நான் உன்னை போல வெக்கமெல்லாம் பட மாட்டேன் மதுக்குட்டி…..” என்று அவன் சட்டையை கழட்டினான்.

அவன் சட்டையை கழட்டவும் இவள் திரும்பி நின்றுகொண்டாள்.
பின்பு எந்த சத்தமும் வரவில்லை என்றதும் ஓரக்கண்ணால் பார்த்தாள்.

“ஓய் கள்ளி இங்க என்ன பார்வை……” என்று அவளை பின்னால் இருந்து அணைத்தவன் “குளிச்சிட்டு வா….. நான் போறேன்…..” என்று முத்தமிட்டு விட்டு சென்றான்.

அவன் வெளியே சென்றதும் பிடித்து வைத்திருந்த மூச்சை விட்டாள்.
பின்பு அவள் குளித்து முடித்து டவலுடன் வெளியே வந்தாள் ,அங்கேயே நின்றிருந்திருப்பான்  போல ,வந்து அள்ளிக்கொண்டான்.

“அத்தான்…. என்ன அத்தான்….. இப்படி பண்றீங்க……”

“எப்படி பண்றேன் …..என் பொண்டாட்டிய நான் தூக்கினது தப்பா……இதென்னடா மித்ரனுக்கு வந்த சோதனை…… ஏதோ வேற யாரையோ தூக்கின மாதிரி சொல்ற…….”

“ஓ ……என்ன தவிர வேற யாரையும் தொட கூடாது அத்தான்……. எனக்கு நீங்க மட்டும்தான் இருக்கீங்க…… நீங்களும் என்னைவிட்டு போய்ட்டா நான் என்ன பண்ணுவேன்…….”

இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை தான் அவனை பார்த்து , ஆனால் இனி அவன் இல்லாமல் இருக்க முடியாது என்று தோன்றியது.

அன்பு காட்ட யாருமே இல்லாமல் அன்புக்காக ஏங்கி தவித்தவள் அன்பின் மொத்த உருவமாய் , “உனக்கெனவே நான்” என்று வந்து நின்றவனை அப்படியே பிடித்துக்கொண்டாள்.

“உன்னை விட்டுட்டு எங்கும் போக மாட்டேன்டா…….” என்று அனைத்துகொண்டான்.

“சரி சாரி கட்டலையா…… இப்படியே அணைச்சுக்கிட்டே எவ்வளவு நேரம் இருக்குறது…….”

“திராட்சைபழம் சாப்பிடலையா…..” என்று இவளே கேட்க “சூப்பர் மதுக்குட்டி நல்ல முன்னேற்றம் ……”என்று அவளை சிலாகித்தவன் தன் வேலையே ஆரம்பித்தான்.

அப்புறம் என்ன…… இன்னொரு திராட்சைப் பழமும் பெருசாயிடுச்சுன்னு புகார் வாசித்தாள்……

 ஆனால் இந்த சந்தோஷம் நாளை நிலைக்குமா……

மோகம் 14:

வான்மதி தன் தாயிடம் “நான் கிளம்புறேன்…… தயவு செஞ்சு சென்னைக்கு போய் அசிங்கப்பட்டு வராதா…… ஏன்னா நீ கண்டிப்பா சும்மா இருக்க மாட்டேன்னு மாமாக்கு தெரிஞ்சிருக்கும்…….. அதனால் உன் வேலையெல்லாம் அங்கபோய் காட்டாத……. அப்புறம் பின்னாடி வருத்தப்படுவ…….”
சொல்லிக்கொண்டிருந்தவள்

 தன் தாயை நெருங்கி கைகளைப் பிடித்துக் கொண்டு ” ம்மா அக்கா பாவம் மா….. உன்கூட இருந்தவரைக்கும் அவள் நிம்மதியா இல்ல…… சரி உனக்கு தொந்தரவா இருந்தா, சுமையா இருந்தா என்று நீ நினைச்சாலும் அவ இங்க இருக்கிற வரைக்கும் மாடு மாதிரி உழைச்சிருக்கா……. நீ அப்பொழுதும் அவளை அடிச்சிருக்க…… திட்டிருக்க …… ஆனால் அவள் ஒன்னுமே பேசுனது இல்லை….. ப்ளீஸ் மா….. அவள் இப்போ இங்க இல்லை….. உனக்கு எந்த வேலையும் வைக்காம மாமா வந்து கூட்டிட்டு போய்ட்டாரு…….”

“சரி டி …. சொன்னதே எத்தனை தரம் திரும்ப திரும்ப சொல்லுவ …..இப்படியே இருந்த உன்ன கட்டிக்கப் போறவன் காதுல பஞ்ச வச்சுட்டுதான் சுத்துவான்…….”

“அந்த பாவப்பட்ட பிறவி எங்க இருக்கோ யாருக்கு தெரியும்……..”

(எனக்கு தெரியும் அந்த பாவப்பட்ட பிறவி லண்டன் ல இருக்கு)

 “சரி நான் கிளம்புறேன்…..”

“சரி போய்ட்டு போன் போடு…..”
………………………………………………………………………..
ஒரு வாரம் ஓடியிருந்தது…..

மித்ரன் மதியிடம் சொல்லிக்கொண்டு  ஆபிஸ்க்கு கிளம்பிவிட்டான்.

கிருஷ்ணா புறப்பட்டதும் சனா, மதியிடம் “கோயிலுக்கு வரியாடா போய்ட்டு வரலாம்…….”

 “இல்லை அத்தை… எனக்கு கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி இருக்கு……நான் வீட்டுலயே இருக்க வா…..”

“சரிடா டேப்லட் தரேன் வா போட்டுட்டு படு….. “.

 “ஹிம்ம் …..”

“மித்ரன் கிட்ட சொன்னியா….. “

 “இல்லை அத்தை சொல்லியிருந்தா விட்டுட்டு போயிருக்க மாட்டாங்க…… ஏதோ மீட்டிங் இருக்குன்னு சொன்னாங்க……. அதான் எதும் சொல்லல……”

“ஹிம்ம் ….ஆமாம் டா ஜெர்மனில இருந்து ஏதோ ஒரு ப்ரோஜெக்ட் பத்தி பேச வரதா உங்க மாமா கூட சொல்லிட்டு இருந்தார்…..”

“ஹ்ம்ம்…. ஆமாம் அத்தை அத்தானும் அதான் சொன்னாங்க…..”

“சரிடா நான் ரமேஷ கூட்டிட்டு கிளம்புறேன் ……நீ ரூம்க்கு போ…..”

“சரி அத்தை……” என்று தன் அறைக்கு வந்தவள் மாத்திரையை போட்டு சிறிது நேரம் தூங்கினாள்.

ஒரு மணி நேரம் கழித்து மதிய சமையலுக்கு மெனு சொல்ல கீழிறங்கியவளை ,கர்னக் கொடூரமான ஒரு குரல் அழைத்தது.

 (வெண்கலப்பானையை உருட்டினா ஒரு சத்தம் வருமே அதவிட மோசமா)

“ஏய் இங்க வா….. “

(மித்ரன் இருக்கும் போது சொல்லி பாரு வாய ஒடைச்சுட்டு தான் மறுவேலை பார்ப்பான்….)

“பிச்சைக் காரியை வீட்டுல வச்சா இப்படிதான்……நல்ல தூக்க மா……”

 “மித்ரன் யாருக்கும் சொல்லாம கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டான்னு சொன்னப்போ …..சரி பொண்ணு அழகா இருப்பா……  சொத்து சொகமா இருப்பான்னு நினைச்சேன்…….”

“இங்க வந்து பாத்தால்ல தெரியுது….. கருப்பா இருக்க……
அப்படி என்னடி உன்கிட்ட இருக்கு…… மித்ரன் உன்கிட்ட மயங்க……” என்று கேவலமாக பேசினாள்.

“நல்லா பணக்காரனா பாத்து வலச்சுப் போடுன்னு உங்க ஆத்தாக்காரி சொன்னாளா……” என்றதும் மதிக்கு பொல பொலவென கண்ணீர் கொட்டியது.

அவள் அழுததை பார்த்திருந்தால் வேறொருவராக இருந்தால் எதும் சொல்லாமல் போயிருப்பார்கள்.

ஆனால் இந்த பூதம் அவளை விடவில்லை
“மித்ரன் எவ்வளவு பெரிய பணக்காரன்னு தெரியுமாடி உனக்கு……. அவனுக்கு பொண்ணு குடுக்க க்யுல பணக் காரங்க வரிசைக் கட்டி நிக்கிராங்க……”

“அவனையும் உன்னையும் சேர்த்து கண்ணாடில பார்த்துருக்கியா……. என் அண்ணன் மகன் கால் தூசிக்குப் பெறமாட்ட நீயெல்லாம் அவனோட பொண்டாட்டி……”

மதி மனதிற்குள் “அத்தான் ……வாங்க அத்தான்…… ப்ளீஸ் இந்தம்மா என்னென்னமோ பேசுறாங்க…… என்னால தாங்க முடியலை…..” என்று மனதோடு அவனிடம் பேசியவள் அழுதுகொண்டே இருந்தாள்.

“இப்போ கூட ஆயிரம் கோடி பெருமானமுள்ள ஒரு ப்ரொஜெக்ட் சைன் பண்ண தான் போயிருக்கான்…..”

“ஆயிரம் கோடிக்கு எத்தனை ஜீரோன்னு உனக்கு தெரியுமாடி……”

“இந்த அண்ணன் அண்ணிக்கு புத்தி எங்க போச்சு…..” என்று பேசிக்கொண்டிருந்தவர்

“போதும் நிறுத்து வசந்தா……” என்ற குரலில் திரும்பிப் பார்த்தாள்.

“என் வீட்டுக்கு வந்து என் மருமகளை திட்டுறதுக்கு உனக்கு எந்த ரைட்சும் இல்லை……”

 “மித்ரன் அவளை கல்யாணம் பண்ணினா அது அவனோட விருப்பம்……
அதுல நாம யாரும் தலையிட முடியாது……”
என்று கூறினார் .

வேறு யாராக இருக்க முடியும்  ராதாகிருஷ்ணன்தான்

“அதில்லைண்ணா ஒரு அன்றாடங்காட்சியைப் போய்……” என்று சொல்ல வருவதற்குள் தன் கைகளை காட்டி அவள் பேச்சை நிறுத்தியவர் 

“மதுமதி இப்போ மித்ரனோட பொண்டாட்டி…… அவள் முன்னாடி யாரா வேணா இருந்துட்டு போகட்டும் …… ஆனால் இப்போ பிஸ்னஸ் கிங் ராதாகிருஷ்ணனோட மூத்த மருமகள்…… இந்த சொத்த ஆளப் போறதே அவள் தான்…… உன்னை இதுவரைக்கும் நிக்க வச்சு பேசிட்டு இருக்குறதே என் தங்கை என்கிறதால தான்……. இது மித்ரனுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் உண்டில்லைன்னு பண்ணிட்டுதான் மறுவேலை பார்ப்பான் …….அவன் வருவதற்குள் இடத்தை காலி பண்ணு…..” என்று வாயிலைக்காட்டினார்.

“இல்லை அண்ணா….. நம்ம அந்தஸ்து என்ன…..” என்று திரும்ப ஆரம்பிக்க அப்பொழுதுதான் வந்த சனா “பணம், அந்தஸ்து எல்லாம் நாம பிறக்கும் போதேவா வருது……பணம் பணம் என்று ஓடி தான் என் மித்துவ தொலைச்சிட்டு நிக்குறேன்……” என்றார்.

“என் மருமகள் போல நல்ல குணம் கொண்ட ஒருத்தர் இந்த அந்தஸ்து, பணம் என்று இருக்குறவங்கள்ல்ல பார்க்க முடியுமா……”

“இதுக்கு மேலே நான் பேச விரும்பல…..” என்று வாசல் பக்கம் கையை காட்டினார்.

வசந்தா அதற்குமேல் அங்கு இருப்பாரா…?

அழுது கொண்டிருந்தவளை “மதி அழாத….. மித்ரன் இப்போ வந்துருவான்….. அவன் இப்படி உன்னை பார்த்தா வருத்தப் படுவான்டா……”என்று அவள் கண்களைத் துடைத்துவிட்டார்.

“உன் ரூம்க்கு போ….. காலையிலேயே தலைவலிக்குதுன்னு சொன்ன….. ரெஸ்ட் எடு என்று அனுப்பிவைத்தார்.

மித்ரனுக்கு தன் மதி அழுவது தெரிந்தால்…..?

மோகம் 15:

விக்கி , “மச்சி பெரிய பார்ட்டி அரேஞ் பண்ணு….. பெரிய ப்ராஜெக்ட் வெற்றிகரமா சைன் பண்ணிட்ட…….. கண்டிப்பா பார்ட்டி வேணும்…….”

“சரி மச்சான் கண்டிப்பா பண்ணிடலாம்……” என்று சிரித்தான்…..மித்ரன் 

“சரி மச்சி நான் கிளம்புறேன்…… நாளை பார்க்கலாம்……”

“ஹிம்ம் வாடா….. மதிக்கு அப்படியே ஐஸ்கிரீம் வாங்கிட்டு உன்னை ட்ராப் பண்ணிட்டு போறேன்…….”

“மச்சான்…. நான் கார்ல தான் வந்தேன்….. நீ கிளம்பு நான் போய்க்கிறேன்…….. என்ன மச்சான் ஐஸ்கிரீம் லாம் என்ன ஒரே அஜால் குஜால்லா………”
 
“அட ஏன்டா நீ வேற… எரியுற நெருப்புல எண்ணெய் ஊத்துற ……… நீங்கதான் கல்யாணம் வரைக்கும் கையை கட்டிப் போட்டுட்டீங்களே……..”

( இல்லனா மட்டும் ….. நீ கைய சும்மாவா வச்சிட்டுருக்க……. டேய் விக்கி இவன நம்பாதடா …….)

“சரி சரி மச்சான்……ஃபீல் பண்ணாத…… இருந்தாலும் கொஞ்சம் கஷ்டம் தான் என்று ஃபீல் பண்ணி பாவ்லா காட்டி ஓடிவிட்டான்……..”

மித்ரன் சிரித்துக்கொண்டே  ஐஸ்கிரீம் பார்லர் போய்  வாங்கி விட்டு வீட்டிற்கு வந்தான்.

ஆனால் அவன் உயிர் அழுது கொண்டல்லவா இருக்கிறது.

மித்ரன் வீட்டிற்குள் நுழைந்ததும் சனா அவனை நோக்கி வரவும் ஒன்றும் பேசாமல் நின்றான்.

சனா மித்ரனிடம் வசந்தா வந்தது முதல் அனைத்தையும் சொல்லி மதிக்கு தலைவலி என்று அனைத்தையும் சொன்னார். அவர் சொல்ல சொல்ல கோபத்தில் கைகளை மடக்கிக்கொண்டு வெளியே செல்ல முற்பட்டவனை கிருஷ்ணன் தடுத்தார்.

“மித்து அங்கபோய் அவங்கள பார்க்குறதுக்கு முன்னாடி மருமகளைப் போய் பாரு என்றார்……”

“அவள் முன்பே தலைவலி என்று சொன்னாள்….. இந்த அண்ணி இன்னும் என்னென்ன சொன்னாங்களோ…… பாவம் பிள்ளை…… அவளைப் போய் பாருப்பா…..” என்றதும் தன் அறைக்கு சென்றான்.

அவன் அறையை திறந்து மெத்தையை பார்த்தான் அங்கும் அவள் இல்லை …… பால்கனிக்கு வந்து ஊஞ்சலில் பார்த்தான் அங்கும் இல்லையென்று திரும்பியவன் மண்டியிட்டு தரையில் அமர்ந்தான்.

ஆதரவற்ற குழந்தைப்போல வெறும் தரையில் கை கால்களை குறுக்கிக் கொண்டு  அழுது வீங்கிய முகத்துடன் உறங்கியவளைப் பார்த்து “சாரிடா மது…..” என்று உள்ளம் கலங்கியவனாக தன் மதுக்குட்டியை அப்படியே படுத்து அனைத்துக்கொண்டான்.

“சாரிடா மது……சாரி சாரி…..” என்று ஜெபம் போல் முணுமுணுத்துக்கொண்டே அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்.

அவன் அணைக்கவும் திடுக்கிட்டு எழுத்தவள் அவனை கண்டு கொண்டு “ஏன் அத்தான் நீங்க அப்போவே வரல….. அந்தம்மா எப்படி எல்லாம் திட்டினாங்க தெரியுமா…… எனக்கு அழுகையா வந்துச்சு….. மனசுக்குள்ளேயே உங்களை வாங்க வாங்கன்னு கூப்டுட்டே இருந்தேன்…… நீங்க வரவே இல்லை…….” என்று அழுதாள்.

“சாரிடா மது…… இனி உன்னைவிட்டு  எங்கேயும் போகமாட்டேன் டா….. இதுக்கு அவங்க பதில் சொல்லியே ஆகனும்……”

“அவங்க ஏதோ தெரியாம பேசிட்டாங்க அத்தான்….. விடுங்க நீங்க கோபப்படாதீங்க…..”

      (சும்மா விட்டுருவானா…..)

“சரி எழுந்திரு, உள்ளே போகலாம்…..” என்று அவளை தன் கைகளில் ஏந்திக் கொண்டவன் உள்ளே வந்தான்.

“அத்தான் கண்ணாடிகிட்ட கூட்டிட்டு போங்க …..”என்றதும் அங்கு போய் நின்று இறக்கிவிட்டவன்

” என்னடா….”

“என்கூட சேர்ந்து நில்லுங்க……”

“எதுக்குடா…..”

“உங்க அத்தை சொன்னது உண்மைதான் அத்தான்……”

“என்ன சொன்னாங்க……”

“நான் உங்களுக்கு பொருத்தமே இல்லைனு சொன்னாங்க…… அப்புறம் கருப்பா இருக்கேனு சொ…….” அவளை தன்பக்கம் திருப்பியவன் 

“மதுக்குட்டி இங்க என்ன பாருடா…… எனக்கு நாளைக்கே எதாவது ஒன்னாகி கையோ, காலோ இல்ல இந்த முகமோ சிதைந்து போனா என்னை விட்டுட்டு போய்டுவியா……”

 அவன் வாயில் பட்டென்று அடி ஒன்றுபோட்டு

 “ஏன் அத்தான் இப்படியெல்லாம் பேசுறீங்க…….நான் எப்படி உங்களை விட்டுட்டு போவேன்…….”

 “பின்ன என்னடா மதி யாரோ ஏதோ சொன்னாங்கன்னு நீ அழலாமா…… நீ கருப்புன்னு யாரு சொன்னா ……இந்த ஒரு வாரத்துலயே முன்னைவிட என் மதுக்குட்டி கலராய்ட்டாங்க…… இன்னும் கொஞ்சநாள் போனா நான்தான் உன் பக்கத்துல நிக்க முடியாது……..”

“அதெல்லாம் முடியாது….. நான் உங்களை எப்பொழுதும் ஒட்டிக்கிட்டே தான் இருப்பேன்…….” என்று அைணைத்துக்கொண்டாள்.

அப்படியே அவளை தூக்கியவன் மெத்தையில் படுக்க வைத்து தானும் படுத்துக்கொண்டான்.
அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டவன்….. அவள் தலையை வருடிக் கொண்டே 

“மது யாரு எது சொன்னாலும் காதுல வாங்க கூடாது சரியா…… நான் தானே உனக்கு முக்கியம்…….”

“ஹம்ம்….. “

 “அப்போ நான் எதாவது சொன்னாதான் நீ வருத்தப்படனும் சரியா…… நீ எப்படி இருந்தாலும் எனக்கு உன்னை மட்டும்தான் மதுக்குட்டி பிடிக்கும் ……. அதனால அடுத்தவங்க எதாவது சொன்னா அதெல்லாம் கண்டுக்ககூடாது சரியா……”

“உங்க அத்தை தலைவலின்னு சொன்னாங்க…….. என்னடா ஆச்சு……” என்று அவள் நெற்றியை வருடிக் கொடுத்தான்.

“ஆமாம் அத்தான் …..இப்போ ரொம்ப வலிக்குது……”

“அழுதா இன்னும் தான் வலிக்கும்….. மதுக்குட்டி கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சரியா போயிடும் டா……”

“தூங்க வைங்க……” என்றதும் அவளை தன்னோடு அணைத்து தட்டிக்கொடுத்தான்.

அவள் கண்கள் மூடியிருந்தாலும் ஏதோ யோசிக்கிறாள் என்று கருமணிகள் அசைந்து காட்டி கொடுத்தது .

உடனே அவளின் இதழை சிறைப்பிடுத்து சப்பி இழுத்து அவன் நாக்கை உள்ளே அனுப்பி அவள் நாக்கோடு சண்டையிட்டுக் கொண்டே அவளின் மாராப்பை உறுவி ரவிக்கையை அவிழ்த்து திராட்சையை கைகளால் அழுத்தி கசக்கி அவள் உதட்டில் இருந்து பிரித்துக்கொண்டு திராட்சையை கவ்வி கொண்டான்.

அவன் தரும் சுகத்தின் பிடியில் அனைத்தையும் மறந்து தன்னோடு அவனை அணைத்து கொண்டாள்.

அவளிடமிருந்து வந்த சீரான மூச்சுக்காற்று அவள் தூங்கி விட்டதை உணர்த்த அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு போர்வையை அவளுக்கு போர்த்தி விட்டவன் எழுந்து தன் அலைபேசியில் யாருக்கோ தொடர்பு  கொண்டு பேசியவன் முகம்  கோபத்தில் ஜொலித்தது.

பின்பு கதவு தட்டப்பட யாரென்று பார்த்தான் , முத்து தான் சாப்பாடு அடங்கிய ட்ரேயுடன் நின்றிருந்தார். 

அதனை வாங்கிக்கொண்டு சிறிது நேரம் அவரிடம் பேசியவன் உள்ளே வந்து டேபிளில் ட்ரேவை வைத்துவிட்டு மதியை அணைத்துக் கொண்டு படுத்தான்.

போனில் யாரிடம் பேசியிருப்பான் ……

அந்த ஜந்து வீட்டில் குண்டுவெடிக்குமா……

மோகம் 16:
மறுநாள் காலையில் அனைவரும் வீட்டில் 
தான் இருந்தனர். 

“அத்தான் நான் கோதுமை பர்பி செஞ்சிருக்கேன்….. எப்படி இருக்குனு சாப்ட்டு பாத்துட்டு சொல்லுங்க…….”

  அங்கு சோஃபாவில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த கிருஷ்ணனிடம் , “மாமா இங்க பாருங்க….. ஒரு ஸ்வீட் செஞ்சிருக்கேன்…. சாப்பிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க….”

அவர் சாப்பிட்டு “ரொம்ப பிரமாதமா இருக்குமா….. உங்க அத்தைக்கு இந்த மாதிரிலாம் செய்ய தெரியல ….அவளுக்கும் கொஞ்சம் சொல்லி குடுமா எப்படின்னு….”

சனா, அவரை முறைத்துக்கொண்டே
“இனி சுலோ குலோன்னு (குலோப் ஜாமூன்)  வந்தீங்க….. அப்புறம் இருக்கு…..”  

“ஐயோ!!! நீ இருக்குறத மறந்துட்டு வாய் விட்டுட்டேனா…..” என்று நினைப்பதாக வெளியே சொன்னவர் மதியின் சிரிப்பிலும் சனாவின் முறைப்பிலும் கப்பென்று வாயை மூடிக்கொண்டார்.

மதி சிரித்துக் கொண்டே திரும்பியவள் அங்கு நின்றிருந்தவரைக் கண்டு கைகள் நடுங்க தன் கணவனை திரும்பி பார்த்தாள்.

மதி சிரித்ததை பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் முகம் மாறவும் அவள் பார்க்கும் திசையில் பார்த்தவன் உடனே எழுந்து தன் மனைவியிடம் வந்தவன் , “ஸ்வீட் நல்லாருக்கு மதி….” என்று அவளை அணைத்து அப்பொழுதுதான் வாசலைப் பார்ப்பதுபோல பார்த்து “அடடடே அத்தை வாங்க வாங்க….. என்ன இவ்வளவு காலையிலேயே வந்துருக்கீங்க….. அப்போ ஏதோ குட் நியுஸ் இருக்கு…… வாங்க என் பொண்டாட்டி ஸ்வீட் செஞ்சிருக்கா….. எடுத்து சாப்பிடுங்க……”

வசந்தா ஆங்காரமாக 

“போதும் நிறுத்து மித்ரா…..” என்றதும் கிருஷ்ணன் எழுந்து
” என்ன வசந்தா ? எதுக்கு அவன் கிட்ட இப்படி பேசுற….. உன்னை ஸ்வீட் தானே சாப்பிட சொன்னான்…….”

“ஏன் அண்ணா… உனக்கு தெரியாதா ….. ஒன்னும் தெரியாத மாதிரி நிக்குறானே உன் பிள்ளை அவன் கிட்டயே கேளு…..”

“என்னப்பா மித்ரா அத்தை என்ன சொல்றா…..”

“எனக்கெப்படி தெரியும்….. அவங்க எதை பத்தி பேசுறாங்கனு ……”

“எங்க உணவு தொழிற்சாலை மூடினது தெரியாதா உனக்கு…..”

“அதெப்படி தெரியாம இருக்கும் …..ஏன்னா புகார் குடுத்ததே நான் தானே…..”

“அதான் ஏன் குடுத்த ….. நைட்டோட நைட்டா மூடிட்டானுங்க….. இனி எல்லாத்தையும் சோதனை பண்ணிட்டு தான் திறக்க முடியும்னு சொல்றாங்க……”

“பாருடா….. நம்ம அரசாங்கம் நைட்டோட நைட்டா வேலை முடிச்சிருக்காங்க…… பாராட்டக்கூடிய விஷயம் தான்……”

“எதுக்கு மித்ரா இப்படி பண்ண……”

“உப்ப திண்ணவங்க தண்ணி குடுச்சுத்தான் ஆகனும்…..”

“இந்த அன்றாடங்காட்சிக்காக …..”என்று சொல்ல வந்தவரை
“நிறுத்துங்க….” என்று கத்தினான்.

 “என் பொண்டாட்டிக்கு நான் இருக்கேன்…… இனி எப்பொழுதும் இருப்பேன்…..நேத்து நீங்க பேசிட்டு போனதுக்கு தான் இப்போ இந்த புட் இண்டஸ்ட்ரிய மூட வச்சேன்……இன்னும் ரெண்டு நாள்ல்ல அவங்களே ஓபன் பண்ணிடுவாங்க……
நீங்க என் மனைவிக்கிட்ட மன்னிப்பு கேட்டே ஆகனும்……”

” என் வீட்டுக்கே வந்து என் பொண்டாட்டிக் கிட்டயே அசிங்கமா பேசுவீங்க, நான் அதை பாத்துட்டு சும்மா இருக்கனுமா……”

“அதான் ஹெல்த் டிப்பார்ட்மண்ட்க்கு ஒரு கால் பண்ணினேன்……இதே நீங்க தொடர்ந்து பண்ணினா உங்க மற்ற பிஸ்னஸ்யும் எப்படி முடக்கனும்னு எனக்கு தெரியும்……. எல்லா இடத்திலேயும் எனக்கு ஆளிருக்கு……சும்மா இருப்பேன்னு மட்டும் நினைக்காதீங்க……”

“நீங்க எப்போ வேணாலும் இந்த வீட்டுக்கு வரலாம் போகலாம்….. எல்லாம் உங்க அண்ணன் அண்ணியோட நிறுத்திக்கனும்…… என் பொண்டாட்டி இருக்குற பக்கம் கூட நீங்க திரும்ப கூடாது…… “என்று மதியை அழைத்துக் கொண்டு மேலே தங்கள் அறைக்கு சென்றுவிட்டான்.

வசந்தா தன் அண்ணனிடம் “பார்த்தீங்களா…. உங்க பிள்ளை எப்படி பேசிட்டு போறானு….. நல்லா மயக்கி வச்சிருக்கா மாயக்காரி…..”

“இப்போதானே மித்ரன் சொல்லிட்டு போனான், திரும்ப மதுவை திட்டுற நீ நேற்று மதியை பேசியதற் குதான் அவன் இப்படி செஞ்சிருக்கான்……இதுல நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்ல…..”

அவர் வந்த வழியே கிளம்பிவிட்டார். ஆனால் உள்ளுக்குள் மதியைப் பொருமித் தள்ளினார்.

இங்கு அறையில் மித்ரனிடம் மதி

 “ஏன் அத்தான் பாவம் தானே அவங்க நீங்க பேச பேச அவங்க முகத்துல பயத்தை பார்த்தேன்….. பாவம் அத்தான் அவங்க….”

(உன்னை யாரும் பாவம்னு பார்க்கலை நீ எல்லாருக்கும் பாவம் பார்த்துட்டு இருக்க லூசு )

“நான் என்ன வேணும்னா பண்ணினேன்….. என் பொண்டாட்டிய பத்தி என் வீட்டுக்கே வந்து பேசுவாங்க…. நான் பார்த்துட்டு சும்மா இருக்கனுமா….. நீ இதெல்லாம் கண்டுக்ககூடாது மதுக்குட்டி…. உன் அத்தான மட்டும்தான் நினைக்கனும் சரியா…..”

“ஹம்ம் சரி அத்தான்……”
 
இங்கு சிவகாமி ராமரை நச்சரித்துக் கொண்டிருந்தாள் .நல்லவள் போல், “சென்னைக்கு போய் பிள்ளைய பார்த்துட்டு வருவோம்…..” என்று 

” நீ அங்க வந்து எதாவது ஏழரைய கூட்டுவ …..நான் மட்டும் போய்ட்டு வரேன்……” என்றவர் மித்ரனிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார் சென்னைக்கு தான் வருவதாக….. அவனும் அனுமதி அளிக்க அன்றிரவே புறப்பட்டனர். ஆம் சிவகாமியும் தான் ….. 

ராமர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்….. ஆனால் சிவகாமி கேட்கவில்லை விடாப்பிடியாக தானும் கிளம்பினார்.

 சரி மாப்பிள்ளை பார்த்துக்கொள்வார் என்ற தயிரியத்தில் ராமரும் கிளம்பினார்.

(ஒரு குண்டு போய் இன்னொரு குண்டு வந்தது டும் டும் டும்…..)

மோகம் 17:

எப்பொழுதும் போல் காலையிலே விழிப்பு வர ,எழ முயல அவளால் எழ தான் முடியவில்லை.

கீழே குனிந்து பார்த்தவளுக்கு சிரிப்பு தான் வந்தது. மித்ரன் எப்பொழுதும் போல அவளது ஒரு பக்க திராட்சையை வாயில் வைத்துக் கொண்டு தன் தலையையும் அவள் மார்பையும் மறைக்குமாறு அவள் முந்தானையை எடுத்து போட்டிருந்தான்.

மெதுவாக முந்தானையை விலக்கி தன் மேல் போட்டுக் கொண்டு அவன் வாயில் இருந்த திராட்சையை மெதுவாக நகர்ந்து எடுக்கவும் அவன் தூக்கத்திலேயே
” ம்ம் “என்று சத்தம் போட்டு கையால் பிடித்துக் கொண்டு வாயில் வைத்து சப்பி உரியவும் மதியின் உணர்வுகளை தூண்டி விட்டது போல் ஆனது .

அந்த உணர்வை அடக்கத் தெரியாமல் தன் நெஞ்சோடு வைத்து அழுத்தி இன்னொரு பக்க மார்பை  அவளே எடுத்து அவன் வாயில் வைத்தாள்.

அவள் அவன் தலையை வைத்து அழுத்தவும் தூக்கம் கலைந்தவன் இன்னொரு மார்பை எடுத்து அவளே வாயில் வைக்கவும் குஷியாகி போனான்.

ஒன்றை வாயில் வைத்து உறிந்து கொண்டு மற்றொன்றை கைகள் கொண்டு வன்மையாக பிசைந்து ஒரு விரல் மட்டும் அதன் நுனியை நிமிண்டி வட்டத்தில் தேய்த்து நகத்தால் கீறிவிட்டு அவளை சுகத்தில் துடிக்க வைத்தான்.

பின்பு அவள் மேல் கவிழ்ந்து இரண்டையும் கைகளில் பிடித்து ஒன்று சேர்த்து தன் தாடையில் தேய்த்து இன்னும்  விரைக்க வைத்து சப்பினான்.

அவன் ஒவ்வொரு செயலுக்கும் துடித்து தவித்தவள் ஒரு கட்டத்தில்  உடம்பை முறுக்கவும் அவளை அனைத்துக்கொண்டு படுத்தான்.

“ஏன் அத்தான் இப்படி பண்றீங்க…..எனக்கு உடம்பெல்லாம் ஒரு மாதிரி பண்ணுது…..”

“திராட்சைப் பழம் முன்னவிட பெருசாயிடுச்சுல்ல…..”

“பின்ன அதையே வாயில வச்சு இழுத்துட்டு இருந்தா……”

“வேற எதை மதி அப்புறம் பண்றது…… இன்னும் ரெண்டு வாரத்துக்கு இது மட்டும்தான்……ரெண்டு வாரத்துக்கு”

 “அப்புறம்…..”

“ரெண்டு வாரத்துக்கு அப்புறம் ஒரு புதையல் இருக்கு…… “என்றவன்அவள் வயிற்றில் இருந்த தன் கையை அடிவயிற்றுக்கு கொண்டு சென்றான்….. அவன் கையோடு தன் கையை வைத்து தடுத்தவள், 

“என்ன அத்தான் பண்றீங்க கையை எடுங்க……”

“நோ முடியாது…..”

“அத்தை சொன்னாங்க…..” என்று ஆரம்பித்தவளை 

“இன்னும் ரெண்டு வாரம் தான்…… அப்புறம் தினமும் கெடாவெட்டு….. கறி சோறு…… பிரியாணிதான்…….”அவனோ வேறு அர்த்தத்தில் சொன்னான். 

இவள் அதை உண்மை என்று நம்பி, “அத்தான் உங்க ஊருல கல்யாணம் நடந்தா தினமும் பிரியாணி போடுவாங்களா…… எங்க ஊருல வெறும் இட்லி பொங்கல் மட்டும்தான் போடுவாங்களாம்…… எனக்கு ராணி சொன்னா……” என்று சொல்லியவளை அணைத்து கொண்டு அடக்கமாட்டாமல் சிரித்தான்.

அவளை ஆண்டு விடும் வேகத்தில் இருந்தவன் இதை கேட்டு சிரித்து 
விட்டான்.

“அய்யோ மதிக்குட்டி …..உன்னை வச்சுக்கிட்டு என்ன பண்ண போறேனோ தெரியலையே…….” என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.

“சரி நீ போய் குளி…. நான் ஜாகிங் போய்ட்டு வரேன்……”

பின்பு அவள் குளித்து விட்டு கீழே இறங்க இன்னும் யாரும் ஏழவில்லை என்று அவள் காஃபி போட்டுக் குடித்துவிட்டு மித்ரனுக்கு அறைக்கு எடுத்துச் சென்றாள்.

குளியலறையில் சத்தம் கேட்கவும் டேபிளில் வைத்துவிட்டு பால்கனிக்கு சென்று ஊஞ்சலில் அமர்ந்தாள்.
மித்ரன் துண்டோடு வரவும்” அத்தான் காஃபி….” என்று நீட்டினாள்.

அவன் குடித்துக்கொண்டே தன் கபோர்டில் இருந்து உடையை எடுத்துக்கொண்டிருந்தான்.
அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள் அவன் பின்னால் போய் அனைத்துக்கொண்டாள்.

“என்னடா மதுக்குட்டி அதிசயமாக இருக்கு……. நீங்களே வந்து கட்டிப் பிடிக்கிறீங்க…….”

“எனக்கு தோணுச்சு அத்தான்…… அதான் கட்டிப் பிடிச்சேன்……”

“ஒ…..தோணுதா….. எப்படி இப்போ தோணுச்சு…….”

“அதான் தெரியலை….. எப்படினு….. ஆனால் உங்களை எதாவது 
பண்ணனும்னு தோணுது……”

“என்னடி காலையிலேயே ஒரு மார்கமா பேசுற……”

“ஆமாம் உங்களை இறுக்கமா கட்டிப் பிடிச்சு உம்மா குடுக்கனும்னு தோணுது…….”
 
”கட்டிபிடிச்சுட்ட ஓகே….. அந்த உம்மா சொன்னியே அத பண்ணலை……”

“இப்போதானே கட்டிப் பிடிச்சிருக்கேன்…… உம்மா குடுக்கவும் கத்துக்குட்டு குடுப்பேன்……”

“சரி நான் பண்ற மாதிரி பண்ணுவியாம்… ” என்று அவளை நெருங்கினான்.

 “இப்போ கிளம்புங்க…. அப்புறம் குடுக்கலாம் ……”

“இப்போ மதி……”

 “ஆபிஸ்க்கு கிளம்புங்க ……அப்புறம் பாத்துக்கலாம்…….”

“சரி  நைட்  டபுள்ளா குடுக்குறேன்……. சொல்ல மறந்துடன் மதி …..உங்க அப்பா வராராம் இன்னைக்கு……”

“சரி அத்தான்……”
 
“நைட்டே கிளம்பிட்டேன்னு சொன்னாரு என்னன்னு தெரியல இன்னும் வரல….” 

“வந்துருவாங்க அத்தான்…… வந்ததும் உங்களுக்கு கால் பண்றேன்……”

அங்கு சிவகாமி ராமரிடம் “ஒரு டிரைன்ல டிக்கெட் போட்டுருக்க கூடாதா…… இந்த பஸ்லதான் வரனுமா……”

 “பாதி வழியிலேயே ரிப்போர் ஆகும்னு நான் கனவா கண்டேன்…… இன்னும் கொஞ்ச நேரத்துல தாம்பரம் போய்டும்……”

 “மாப்பிள்ளை டிரைவர் நம்பர் குடுத்துருக்காரு …..அந்த நம்பர்க்கு கால் பண்ணினா டிரைவர் வந்து கூட்டிட்டு போவான் ……. நீ கொஞ்ச நேரம் பேசமா வா தொண தொணன்னுட்டு…..”

(இங்க மட்டும்தான் பேச முடியும் சிவசாமி , அங்க வாயக் கூட திறக்க முடியாது………)

ரமேஷ் இருவரையும் அழைத்துவந்தான் சிவகாமிக்கு வீட்டை பார்த்ததுமே முகம் சுருங்கிவிட்டது.

” எவ்ளோ பெரிய வீடு….. ரொம்ப பணக்காரங்களோ? பார்க்க அப்படி தான் தெரியுது……”

காரில் இருந்து உள்ளே சென்றவர்களை கிருஷ்ணனும் சனாவும் வரவேற்று பேசிக் கொண்டிருந்தனர்.

மேலிருந்து இறங்கி வந்த மதியைப் பார்த்து சிவகாமி ஷாக் ஆனார்……ஏன் ???.

மோகம் – 18:

சிவகாமி வந்ததிலிருந்து வீட்டையே தான் பார்த்துக் கொண்டிருந்தார் .”அய்யோ என் வயிறு பத்தி எரியுதே….. வீடே இப்படி இருக்குன்னா ……அந்த தம்பி (ரமேஷ்) சொன்ன பில்டிங்லாம் எவ்ளோ பெருசு இருக்குமோ……”

“கடவுளே இவ்ளோ சொத்தும் அந்த பிச்சைக்காரிக்கா…..”

 காரில் வரும்போதே ரமேஷிடம் இவர்களை விசாரித்துக் கொண்டு தான் வந்திருந்தார் .

அவனும் அவனுக்கு தெரிந்த அனைத்தையும் கூறினான். இவர்கள் கால் பதிக்காத பிஸ்னஸே இல்ல….. வெளிநாட்டுல இருந்துலாம் கூட ஆளுங்க வருவாங்கன்னு சொன்னதுமே…….. சிவகாமிக்கு பத்திக் கொண்டு வந்தது.

சிவகாமி சனாவிடம் “எங்க மதுமதிய காணோம்……”

“இனிமே தான் கீழே வருவா….. இப்போ கொஞ்ச நேரம் முன்னாடிதான் மித்ரன ஆபீஸ் அனுப்பி வச்சுட்டு மேல போனா…..”

“க்கும் ஒன்னாங் கிளாஸ் புள்ளை அழுதுட்டு ஸ்கூல்க்கு போகுது….. இந்தம்மா அனுப்பி வேற வைக்கிறங்கலாம்…..” என்று சிவகாமி மனதுக்குள் நொடித்துக்கொண்டார்.

“வேலைலாம் எதும் இல்லையா …..மேல போய் என்ன பண்ணுறா……”

”வேலைக்காரங்க இருக்காங்க சம்மந்தி வேலை செய்ய……மதி அவங்க என்ன செய்யனும்னு சொல்லுவா…….. மித்ரன் வேலை செய்ய கூடாதுன்னு சொல்லிருக்கான்…….”

“க்கும் கத்திரி வெயில்ல வேலை செஞ்ச கழுதை …..அடுத்தவங்களுக்கு ஆர்டர் பொடுறாலா …….இங்கு ரூம்க்குள்ளையே இருந்துட்டு வெளிய கூட வரமாட்டுறா……..”

(அவள் புருஷன் அவளைப் பூப்போல பார்த்துக்கிறான் உனக்கென்ன சிவகாமி பொறாமை …..)

சிறிது நேரம் கழித்து மேலிருந்து கீழே இறங்கி வந்தவளை பார்த்து சிவகாமி அதிர்ந்து போனார்.

இந்த இரண்டு வாரத்தில் கொஞ்சம் சதைப் போட்டு மாநிறத்திலிருந்து இன்னும் கூடுதலாக நிறமாறி தன் கணவனின் அன்பினில் விளைந்த வாடாத புன்னகையுடன் இறங்கியவளை கண்டு வாயடைத்துப் போனார்.

அது மட்டுமில்லாமல் அவள் கழுத்தில், காதில், கைகள் அனைத்திலும் வைரம் பல பலவென மின்னியது. 

அதை பார்த்த சிவகாமிக்கு நெஞ்சமெல்லாம் கொதித்தது.

“அய்யோ…. அய்யோ….. எம்புட்டு நகை….. அம்புட்டும் வைரம் போல….. இந்த சிறுக்கிக்கு வந்த வாழ்வ பாரேன்…..” என்று மனதினுள் பொருமித் தள்ளினார்.

மதி தன் அப்பாவிடம் சென்று நலம் விசாரித்தவள் தன் சித்தியை பார்த்து “வாங்க சித்தி எப்படி இருக்கீங்க……”என்று கேட்டவளை சனா “மதி போய் மெனு சொல்லிட்டு வாடா ……..”என்று அனுப்பி வைத்தார்.

ராமருக்கு தன் மகளை பார்த்ததும் பரம திருப்தி நல்லாருக்கனும் என்று மனதார வாழ்த்தினார்.

சனா தன் மருமகளை அழைத்து தன்னருகில் அமர்த்திக் கொண்டார். 

சிவகாமி ஏதோ கேட்க வாயெடுக்க “கரெக்ட்டான நேரத்துல தான் வந்துருக்கேன் போல……” என்று வந்தவன் “சோபாவில் வந்து அமர்ந்து எப்படி இருக்கீங்க…..” என்று பொதுவாக கேட்டான்.

 “மதி வந்தவங்களுக்கு ஜூஸ் குடுத்தியாடா……. சூடா இருப்பாங்க……. எடுத்துட்டுவாடா…… குளுகுளுன்னு இருக்கும்ல குடிக்க…….” என்றான் நக்கலாக.

“ஹிம்ம் சரி அத்தான்…..” என்று அனைவருக்கும் எடுத்து வந்தாள்.

 மதியை மிதரன் தன்னருகில் அமர்த்திக் கொண்டான்.

பின்பு கிருஷ்ணன் ராமரிடம் “இன்னும் இரண்டு வாரத்தில் எல்லாரையும் கூப்பிட்டு கிராண்டா கல்யாணம் பண்ணலாம்னு முடிவுல இருக்கோம்……. உங்களுக்கு கார் அனுப்புறேன் வந்துருங்க…….” என்றார்.

இது தான் சாக்கென்று சிவகாமி “அப்போ ரெண்டு வாரம் மதுவை கூட்டிட்டு போய்ட்டு திரும்ப அழைச்சுட்டு வரோம்……”

மித்ரன் அவரை முறைத்து பார்த்து “இவ ஏற்கனவே என் பொண்டாட்டி தான் ரிஜிஸ்டர் கூட பண்ணிட்டேன் ….”என்றான்.

 இது மதிக்கு புதிய செய்தி நாம இல்லாம எப்படி இவங்க ரிஜிஸ்டர் பண்ணிருப்பாங்க.

ராமருக்கு மித்ரன் கண்ணைக் காட்டினான் அதை புரிந்துகொண்டு “சரிங்க சம்மந்தி நாங்க கிளம்புறோம் ……ரெண்டு வாரம் கழிச்சுவரோம்………”

 சிவகாமியால் எதும் பேசமுடியாமல் பஸ்சில் போகும் வழியெல்லாம் புலம்பிக்கொண்டே போனார்.

சிவகாமி ஊருக்கு போயும் ஓயவில்லை புலம்பிக்கொண்டே இருந்தார்.

வீட்டுலையே விலை அதிகமான சேலை கட்டிருக்கா….அய்யோ படுபாவி …..

(உன் பேரலாம் என் சிவகாமி சொல்ற)

மித்ரன் அனைவரிடம் இருந்தும் மதுவை காப்பாற்றினான்…… ஆனால் அவனிடம் இருந்து மதுவை காப்பவர் யார்??

மோகம்- 19:

வசந்தா வீட்டில் தன் கணவரிடம் மித்ரன் தான் இண்டஸ்டிரிய மூட வச்சது என்று கூறினார். 

“நீ ஏன் அவன் பொண்டாட்டிய போய் திட்டிட்டு வந்ததே…..வீடு தேடி போய்  கேவலமா பேசுவ….. அவன் சும்மா இருப்பானா……. நான் பெத்ததும் சரியில்லை …….வாச்சதும் சரியில்லை……”

“இப்போ எதுக்கு நிவிய இதுல இழுக்கிறீங்க…….”
 
“உன் பொண்ணு ஏற்கனவே பண்ணினது போதாதுன்னு, நீ வேற போய் இந்த வேலை பண்ணி வச்சிருக்க……. அதான் மித்ரன் இப்படி மொடக்கி வச்சுட்டான்……”

“உங்களால எனக்கு 50 லட்சம் நஷ்டம்……
உங்களால உதவி தான் பண்ண முடியல , உபத்திரம் பண்ணாமலாவது இருங்க……. இதுக்கு மேல என்னால இழக்க முடியாது………” என்றார் விஸ்வநாதன்.

“ஏங்க எவளோ ஒரு பிச்சைக்காரியை கூட்டிட்டு வந்து அவ தான் பொண்டாட்டின்னு சொன்னா, நாங்க சும்மா விட்ருவோமா…… நான் என் பொண்ண கல்யாணம் பண்ணி குடுத்து எல்லாத்தையும் வளைச்சு போடலாம்னு பார்த்தா……. இந்த மித்ரன் இப்படி எவளையோ இழுத்துட்டு வந்துருக்கான்………”

“வசந்தா…..அது அவன் இஷ்டம் அதுமில்லாம உன் பொண்ணு பண்ணினதுக்கு இதுவரைக்கும் அவங்க வீட்டுக்குள்ள கூட அவளால் போக முடியல…… இதுல உன் பொண்ண எப்படி அவங்க மருமகளா ஏத்துப்பாங்க……”

“நீங்க இனி யாரும் அங்க போக கூடாது…… போனீங்கன்னு தெரிஞ்சுதுன்னா நான் மனுஷனா இருக்க மாட்டேன்……..”
என்று கூறிவிட்டு அவர் கிளம்பியதும்

“என்னம்மா காலையிலேயே உன் வீட்டுக்காரர் என்ன சொல்லிட்டு போறார்……..” என்று வந்தாள் நிவேதா.

“மித்ரன பத்தி தான்…..”

“சரி …..மித்ரனோட பத்தினி எப்படி இருந்தா……”

      (பொறாமை…..)

“நல்லாதான் இருக்கா….. அவளுக்கு என்ன….. நான் போய் சும்மா நாலு வார்த்தை பேசுனதுக்கே பொல பொலன்னு கண்ணுல இருந்து தண்ணி ஊத்துது………”

“அந்த கழுதையை ஈசியா அடிச்சித் துரத்திடலாம்…….”

(நீ பேசுனது உனக்கு நாலு வார்த்தையா அடியாத்தி…….. சரியான ரவுடியா இருப்ப போல……)

“அப்போ இன்னைக்கே போய் நான் கொஞ்சம் அள்ளிப் போட்டுட்டு வரேன்……”

“இல்லை நிவி …..உங்க அப்பா அங்க போக கூடாதுன்னு சொல்லிருக்காரு………”

“அடப்போமா நான் யாருக்கும் தெரியும் அவ மட்டும் இருக்குற டைமா பார்த்து போய்ட்டு வரேன்…….”

“சரி என்ன பண்ணப்போற நிவி…..”

“முன்னாடி அந்த பெருசுங்க கிட்ட ஒரு பிட்டை போட்டேன்ல…… அதைதான் இவக்கிட்டையும் சொல்ல போறேன்…….”

“வேணாம் நிவி….. அதுக்குத்தான் உன் அப்பா இதுவரைக்கும் உன்கிட்ட பேசலை……. அதெல்லாம் வேண்டாம்…..”

“நான் யாருக்கும் தெரியாம தான் மா போகப் போறேன்…… ஒன்னும் பிராப்ளம் இல்லை மா…… அப்பா சொன்னதை கேட்டல்ல…… 50 லட்சம் நஷ்டம்…… எல்லாம் அவளால தானே…….”

“ஆமாம் நிவி …..ஒத்த பைசாவுக்கு ப்ரொஜனம் இல்லாதவ…..50 லட்சம் போச்சு……”

“ம்ம் எந்த பொண்ணாலையும் தன் புருஷன் இன்னொருத்தி கூட இருந்தான்னு சொன்னா பொருக்க முடியாது……. கண்டிப்பா சந்தேகம் வரும்…… அதைதான் இவக்கிட்டையும்
சொல்லி விரிசல் உண்டாக்கனும்…….”

(அடிப்பாவிங்களா ஒரு குடும்பத்தகெடுக்க எப்படியெல்லாம் ப்ளான் போறீங்க….)

……………………………………………………………………………

இங்கு மதி மித்ரன் ஆபிஸ்க்கு கிளம்பியதும் தனதறைக்கு வந்தவளுக்கு வயிற்றில் வலி ஏற்படவும் தேதியைப் பார்த்தாள் “ஓ அதான் வலிக்குது போல…..” என்று குளியலறைக்குள் நுழைந்தாள்.

பின்பு கீழே இறங்கி வந்ததும் சனா இவளிடம் “மதி நான் ஷாப்பிங் போறேன்…… நீயும் வரியாடா…..” என்றார்.

“இல்லை அத்தை…… எனக்கு வயிறு வலிக்குது…… இன்னைக்கு சுத்தமா முடியாது…… ரொம்ப வலிக்கும்….. நான் வீட்டுலையே இருக்கேன்…… நீங்க போய்ட்டு வாங்க……..”

அவள் கன்னம் தொட்டு “ரொம்ப வலிக்குதா மதி …..இரு வரேன்……” என்று சமையலறைக்கு போய் மோரில் வெந்தையம் போட்டு எடுத்து வந்தார். 

மதியிடம் “இதை குடிடா…… அப்படியே முழுங்கிடு ……இல்லனா கசக்கும்……”

அவள் குடித்து முடித்ததும் “இன்னும் கொஞ்ச நேரத்துல வலி குறைஞ்சிடும் டா……. நீ போய் ரெஸ்ட் எடு……. நான் போய்ட்டு வரேன் சரியா……”

“சரி அத்தை….. “

இவர்கள் வீட்டிலிருந்து சற்று தொலைவில் தன் காரில் அமர்ந்து இவர்களை வேவு பார்த்துக் கொண்டிருந்தவள் அனைவரும் கிளம்பியதும் வீட்டிற்குள் வந்தாள்.

இவள் வந்ததும் முத்து வந்து ” எல்லாரும் வெளியே போய்ட்டாங்கமா …..”என்றார்.

“நான் இந்த வீட்டோட புது மருமகளைப் பார்க்கனும்……”

“அவங்க …..” என்று முத்து ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் போதே “யாருஅண்ணா…..”
 என்று மேலிருந்து குரல் கேட்டது .

“மித்ரன் சாரோட அத்தை பொண்ணு மா…… இவங்க பேரு நிவேதா……”

 “சரி அண்ணா…… நான் பார்த்துக்கிறேன்……. நீங்க போய் உங்க வேலையப் பாருங்க……..”

“சரிம்மா…… ” என்று அவர் வெளியே போய் மித்ரனுக்கு அழைத்தார். ஆனால் அவன் எடுக்கவில்லை மீட்டிங் நடப்பதினால் தன் கைப்பேசியை சைலட்டில் போட்டிருந்தான்.

நிவேதா வந்தவள் சிறிது நேரத்திலேயே கிளம்பி விட்டாள்.

    (என்னஅள்ளி போட்டியோ)

இங்கு மித்ரன் மீட்டிங் முடிந்ததும் தன் கைப்பேசியை எடுத்தான்….என்ன இத்தனை மிஸ்டு கால்ஸ் இருக்கு….. என்று யோசித்துக்கொண்டே முத்துவிற்கு அழைத்தான்.

“என்ன அண்ணா இத்தனை தடவை கால் பண்ணிருக்கீங்க……..”

“தம்பி உங்க அத்தை பொண்ணு வந்தாங்க…….”

“யாரு நிவேதாவா…….”

“ஆமாம் தம்பி…… சின்னம்மா கூட பேசனும்னு சொன்னாங்க…….. நான் அவங்க வீட்டுல இல்லைனு சொல்றதுக்கு முன்னாடி சின்னம்மா கீழே இறங்கி வந்துட்டாங்க…….அதான் உங்களுக்கு கால் பண்ணினேன்……..”

“சரி அண்ணா…….. நான் வீட்டுக்கு வரேன்…..” என்று தன் கைப்பேசியை அனைத்து விட்டு “மது அவ சொன்னது எதையும் நம்பாத மது……. நீயும் என்னை நம்பலைனா…… என்னால தாங்க முடியாது……… “என்று நினைத்துக் கொண்டே வந்தான்.

அவன் வேகமாக தன் அறைக்குள் நுழைந்தான் .அங்கு மெத்தையில் மது  குப்புற படுத்திருந்தாள் “மது….” என்று அழைத்தவன் அருகில் சென்றான்.

 அவன் குரல் கேட்டு எழுந்தவள் முகம் அழுது அழுது கண்கள் சிவந்து இருக்க மித்ரன் “நீயும் நம்பலையா மது……” என்று சற்று கோபத்துடன் கேட்டவன் அவள் “உங்க அத்தை பொ….” என்று ஏதோ பேச வந்தவள் கழுத்தை நெறித்து “நீயும் என்னை நம்பலையா ச்சீ…….. ஏன் எல்லாரும் இப்படி இருக்கீங்க……” என்று அவளை மெத்தையில் தள்ளி விட்டவன்
வேகமாக வெளியே கிளம்பிவிட்டான்.

(நடந்தது என்ன ஹி ஹி….

நிவேதா என்ன கூறியிருப்பாள்……

மித்ரனின் இந்த செயலுக்கு ……..

மதியின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்……..)

மோகம் 20:

“மச்சான் மதிக்கூட என்னை நம்பலைடா…….” என்று விக்கியிடம் புகார் வாசித்தான்.

“டேய் மதி உன் கிட்ட வந்து சொன்னாளா…… நான் உங்களை நம்பலை…… இல்லை, ஏன் இப்படி பண்ணீங்கன்னு கேட்டாளா…….”

“இல்லைடா……”

“அப்புறம் எப்படிடா சொல்ற…… அவ உன்னை நம்பலன்னு……”

“மதி அப்படிலாம் நினைக்க மாட்டாடா ….. போய் என்னன்னு பேசு அவக்கிட்ட…… புலம்பாம போடா வீட்டுக்கு……. “என்று அனுப்பி வைத்தான்.
…………………………………………………………………………..

மதி மித்ரன் தன்னை தள்ளிவிட்டு சென்றதும், இந்த அத்தானுக்கு எதுக்கு இவ்வளவு கோபம் வருது …….வரட்டும் இன்னைக்கு இருக்கு…… கோபத்தை குறைங்கன்னு சொன்னா கேக்குறாங்களா……. எதையுமே தெளிவா கேட்காம ,என்னை பேசக்கூட விடாமா…… எதுக்கு தான் இவங்க இப்படி பண்றாங்கன்னு தெரியல…….

அவள் கீழ் இறங்கவும் சனா அப்பொழுதுதான் ஷாப்பிங் முடித்து வந்தார். 

“ஏன்டா மதி அழுதியா…… என்ன ஆச்சு….”

“வயிறு வலிதான் அத்தை…. நிக்கவேயில்லை…….ரொம்ப வலிச்சுது……அதான் அழுதுட்டேன்……”

 “சரிடா சாப்பிடு வா……. நான் எடுத்து வைக்கிறேன்…….”

 “அப்புறம் அத்தான் வந்ததும் சாப்ட்டுக்கிறேன் அத்தை…… “

 “சரிடா நீ போய் ரெஸ்ட் எடு……சாப்பாடு வேணும்னா கால் பண்ணு….. நான் முத்துவ மேல அனுப்புறேன் சரியா……”

 “ம்ம் சரி அத்தை…….. “

தோட்டத்திற்கு போவதாக கூறிவிட்டு வெளியே தன் கணவனது கார் நிற்கிறதா என்று பார்த்தாள் இல்லை என்றதும் தன் அறைக்கு வந்து
விக்கிக்கு கால் பண்ணினாள்.

“அண்ணா எப்படி இருக்கீங்க …….வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க…….”
 
“நான் நல்லாருக்கேன் மா…… அங்க எதாவது பிரச்சனையா மா …… இங்க வந்து இவ்வளவு நேரம் புலம்பிட்டு போறான்…..”

“அவரோடு அத்தை பொண்ணு வந்துச்சு…… அதை சொல்ல போனேன்….. உடனே நீயும் என்னை நம்பலையானு கேட்டு கோபப்பட்டு வந்துட்டாங்க……. இப்போ அங்க இருந்தா வீட்டுக்கு வர சொல்லுங்க அண்ணா…….”

“இப்போ தான் மா கிளம்பினான்……. நான் சொல்லிருக்கேன்……. வருவான் மா……”

“சரி அண்ணா……”

“மதி நிவேதா சொன்னது……. “என்றவனை இடைமறித்து

 ” அண்ணா அந்த பொண்ணு சொன்னதெல்லாம்…….நான் ஒரு பொருட்டாவே எடுத்துக்கல …….”

 “அத்தான் தான் என்னன்னு கூட கேட்காம கோவப் பட்டுட்டு கிளம்பிட்டாங்க……. அதான் இவ்ளோ நேரம் வரவேயில்லை….. சாப்பிடவும் இல்லை….. அதான் உங்களுக்கு கால் பண்ணினேன்…….”

“சரி மா பார்த்துக்கோ அவனை…….. நான் வைக்கிறேன்……..”

“சரி அண்ணா…….” என்று போனை அனைத்தவள் நிவேதா தன்னிடம் கூறியதை நினைத்துப் பார்த்தாள்.

மதி முத்துவை அனுப்பி விட்டு நிவேதாவிடம் “வாங்க நிவேதா, உட்காருங்க…… என்ன சாப்டுறீங்க……”என்று கேட்டாள். 

நிவேதா திமிராக “எனக்கு அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்…….நான் சொல்ல வந்ததை சொல்லிட்டு போயிடுறேன்……”

“சரி சொல்லுங்க…….” என்று அவளைக் கூர்மையாக பார்த்தாள்.

“உன் புருஷன் இருக்கானே ,அதான் மித்ரன்….. அவன் என்கிட்ட ஒரு வாட்டி தப்பா நடந்துக்க டிரை பண்ணினான்….. சரியான பொம்பளைப் பொறுக்கி…….”
 என்றாள்.

 “ஓ ……அவ்வளவு தானா…… சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டீங்களா…….”

அவள் அலட்ச்சியமாக கேட்டதும் “ஹேய் நான் சொல்றது உண்மை அவனைவிட்டு போயிடு…… அவன் என்கிட்டயே அப்படி நடந்துக்கிட்டான்னா…… அப்போ இன்னும் எத்தனை பேரு ……” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே 

“போதும் நிறுத்துங்க…… இதுக்கு மேல பேசினா வாயில பல்லு இருக்காது……. என் புருஷனா பொம்பளை பொறுக்கின்னு சொன்னப் போவே உன் பல்ல ஒடைச்சிருக்கனும்……..
மாமாவோட தங்கச்சி பொண்ணாச்சேன்னு பார்த்தா…… நீ ரொம்ப ஓவரா பேசுற…… ரெண்டு நிமிஷத்துல இடத்த காலி பண்ணணும்…… இல்லன்னா என்ன நடக்கும்னு தெரியாது……

“ஏன் பட்டிக்காட்டுல இருந்து வந்துருக்கா……. ஒன்னும் தெரியாதுன்னு நினைச்சீங்களா…….. உங்க அம்மா பேசும் போது அன்னைக்கு நான் வாய் பேசாம இருந்ததுக்கு காரணம் அவங்க வயசுல பெரியவங்க ………அதனால ஒன்னும் பேசல……… கிளம்பு இங்கிருந்து போ……..” என்று கத்தினாள் .

நிவேதாவின் பயந்த முகம் நினைவில் வர சிரித்தாள். 

“இந்த அத்தான் வரட்டும் இருக்கு அவருக்கு…….”

(டேய் மித்ரா சும்மா இருந்த பிள்ளைய இப்படி வைலண்ட் ஆக்கிட்டியே டா)

மித்ரன் தன் அறைக்கு வந்தான்…. முன்பு போலவே தான் மதி படுத்திருந்தாள்…. அவன் வரவும் இவள் எழுந்து அவனை கண்டுக் கொள்ளாமல், தன் அத்தையை அழைத்து சாப்பாடு குடுத்து அனுப்புமாறு சொல்லி வைத்து விட்டு ,டேபிள் மேல் இருந்தே சேனிட்டரி நேப்கினை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றாள்.

மதி தன்னை கண்டுக்கொள்ளாமல் தன் அன்னையிடம் பேசியது அவனுக்கு காண்டாகியது. 

“என்கிட்ட மட்டும் கோவப்படுறா…..” என்று நினைத்துக் கொண்டான்.

 (யாரு அவ மட்டும் தான் கோவப்படுறாளா….. அப்போ நீங்க பண்றதெல்லாம்……)

அவள் நேப்கினை எடுக்கவும் “அய்யோ வயிறு வலிக்குமே…..” என்று நினைத்தான்.

 அவள் வெளியே வரவும் அவளிடம் சென்று “வயிறு வலிக்குதா மது……” என்று கையைப் பிடித்தான்.

அவள் உடனே கையை உதறவும் கோபத்துடன் கத்தப்போனவன், கதவு தட்டும் சத்ததில் கதவைத் திறந்து முத்து குடுத்ததை வாங்கி கொண்டு கதவை மூடியவன் டேபிளில் வைத்து விட்டு அவளிடம் வந்தான்.

“மது…..” என்று அழைத்தான்.

 அவளிடம் பதிலில்லை. அவன் அவளை தன் பக்கம் திருப்பவும்
 “என்ன…..” என்றாள் கோபமாக. 

“எதுக்கு என்கிட்ட பேசமாட்டுற…… முகத்த கூட பார்க்க மாட்டுற……”

“பின்ன நீங்க பண்றதுக்கு உங்களை கொஞ்சுவாங்களா…….”

 “அப்போ அவ சொன்னத நம்புறியா மது……..”

அவன் திரும்ப திரும்ப அதை கேட்கவும் வைத்தாளே ஒரு அறை பட்டென்று …….

மரியாதைலாம் கைவிடப்பட்டாச்சு……..

அப்புறம் என்ன………


      (ஒரே வைலன்சுதான் ஹாஹா)

மோகம் 21:

மித்ரனால் நம்ப முடியவில்லை மதியா தன்னை அடித்ததென்று…….. 

மதிக்கும் தன் முன்னால் கன்னத்தில் கை வைத்து அதிர்ச்சியுடன் நிற்கும் தன் கணவனை பார்க்க ஒருபக்கம் பயமாகவும் ஒரு பக்கம் சிரிப்பாகவும் இருந்தது. 

ஆனால் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவன் ஏதோ பேச வரவும் வாயில் கை வைத்து

 “இன்னும் கொஞ்ச நேரத்துக்கு பேச கூடாது……” என்றால் கோபத்துடன் . 

அவனை அழைத்து மெத்தையில் அமருமாறு கண்ணைக் காட்டினாள்.

அவனும் கீ குடுத்தது போல் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அவள் சொன்னதை செய்தான்.

அவனை அமர வைத்து விட்டு டேபிளில் இருந்த சாப்பாடை எடுத்து அவனுக்கு ஊட்டினாள். 

வாய திறங்க என்று அவனுக்கு ஊட்டி தண்ணீர் குடுத்து தானும் சாப்பிட்டு கைகழுவி வந்தவள்.

 அவன் பக்கத்தில் அமர்ந்து “இப்போ சொல்லுங்க….” என்றாள்.

“என்ன மதி அடிச்சுட்ட…..” என்று சிறு பிள்ளை போல் பாவமாக கேட்டான் .

அந்த நேரம் பார்த்து விக்கி கால் பண்ணவும் எடுத்தான் “மச்சான்……..” என்று மெதுவாக அழைத்தான்.

 “என்ன மச்சி குரல் மெதுவா வருது…….அடி பலமோ……. ஆமாம் மச்சான் …….உன் தங்கச்சி என்னை அடிச்சிட்டாடா………” என்று சொன்னதும்

 “என்னாதுதுது………”

 மதி அவனிடமிருந்து போனை வாங்கி சைலண்டில் போட்டு ,

“அத்தான்……. சாரி அத்தான்…… அது நீங்க திரும்ப திரும்ப கேட்டதும் என்னையே அறியாமல் அடிச்சுட்டேன் அத்தான்……. ” 

“அவளாம் ஒரு ஆளுன்னு அவ பேச்ச நான் கேட்பேனா அத்தான்…….. அதான் அவ ஓவரா பேசவும் திட்டி அனுப்பிட்டேன்………. சாரி அத்தான் வலிக்குதா மன்னிச்சிருங்க………” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அவளை திட்டி அனுப்பிட்டேன் என்று சொன்னதும் 

“மதி அவள் என்ன சொன்னா……. “

 அவன் கேட்டதும் நிவேதா வந்தது முதல் தான் திட்டி அனுப்பியது வரை அனைத்தையும் கூறினாள் .

“அத்தான் நான் உங்க அத்தை பொண்ண திட்டிட்டேன் கோபமா…….”

 “அதெல்லாம் இல்லைடா…….”

சட்டென்று கண் கலங்கி “நீ என்னை நம்புன மாதிரி ஏன் மது அப்பா அம்மா என்னை நம்பலை ……..”என்று கேட்டதும் அவள் அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள்.

“என்ன ஆச்சு அத்தான்…… அப்போ அத்தை மாமாக்கிட்ட பேசாததுக்கு நிவேதா தான் காரணமா……..”

 “ஆம்” என்று தலையாட்டியவன் “அப்புறம் ஏன் நான் மதியம் வரும் பொழுது அழுது கண்ணுலாம் சிவந்து இருந்துச்சு…….”

“எனக்கு நீங்க போனதுல இருந்து வயிறு வலி…….. அத்தை மோரு குடுத்தாங்க……. ஆனா அப்பொழுதும் வலி நிக்கவே இல்லை……..அப்போதான் நிவேதா வந்துச்சா…… உங்கள கேவலமா பேசவும் எனக்கு கோவம் வந்துடுச்சு……. திட்டி அனுப்பிட்டேன்…….”

“அப்புறம் நீங்க வந்தீங்களா……. உங்ககிட்ட நிவேதா வந்தத பற்றி சொல்ல தான் வந்தேன்…….. ஆனால் நீங்க நான் என்ன சொல்ல வரேன்னு கூட கேட்காம கோபப்பட்டு போய்டீங்க……… திரும்பி வந்தும் நீ என்ன நம்பலையான்னு கேட்டதும், எல்லா சேர்ந்து அடுச்சிட்டேன்……… சாரி அத்தான்…….” என்று முத்தமிட்டாள்.

“நீ அடுச்சது வலிக்கலடா…….. ஷாக்கா இருந்துச்சு……… என்னடா இது என்னோட மதுக்குட்டி வைலண்டா பிகேவ் பண்றாங்கன்னு………” நினைச்சேன்.

“நான் உங்க கிட்ட பேசமாட்டேன் அத்தான்…….” என்று திரும்பி அமர்ந்தவளை 

“ஏன்டா மதிக்குட்டி…….”

“நீங்க எப்படி அத்தான் நினைக்கலாம்……..”

” எப்படி……”

“நான் உங்களை சந்தேகப் பட்டுருப்பேன்னு…….”

“அப்படியில்லைடா மதி…….”

 “போங்க நீங்க பேசாதீங்க……..”

தன் கைவளைவிற்குள் அவளை கொண்டு வந்தவன்

 “எப்படி மதுக்குட்டி என்மேல உனக்கு இவ்ளோ நம்பிக்கை வந்துச்சு……… என்னை உனக்கு இந்த ரெண்டு வாரமா தானே தெரியும்……..”

அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே “ஏன்னா நீங்க என்னை காதலிக்கிறீங்க அத்தான் ……..”என்று வெட்கத்துடன் கூறிக்கொண்டே அவன் நெஞ்சில் தன் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

“எப்படி மதுக்குட்டி……. நான் உன்னை உன்னோட சம்மதம் கூட கேட்காம உன் சித்திய மிரட்டி கல்யாணம் பண்ணிட்டு வந்தேன்………”

“அத்தான் நீங்க சித்திய மிரட்டி என்னை கல்யாணம் பண்ணிருந்தாலும் , இது வரைக்கும் என்னை சின்ன வார்த்தை சொல்லி அதட்டுனது கூட இல்லை………ஏன் என்னை கல்யாணம் பண்ணிட்டு உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரனும்னு கூட அவசியம் இல்லையே……..”

“ஆனால் நீங்க என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்து, எனக்காக எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்றீங்க…….. என்னை யாரும் ஒரு சொல் சொல்லிடக் கூடாதுன்னு அப்படி பாத்துக்குறீங்க……..”

“உங்க அத்தைக் கிட்டயே எனக்காக சண்டைக்கு போனீங்க……… அப்புறம் சித்தி வந்தப்போ என்னை கூப்பிட்டு உங்க பக்கதுல உட்கார வச்சுக்கிட்டீங்க…….. “

“ஏன் இந்த இரண்டு வாரத்துல என்னை என்ன வேணாலும் பண்ணிருக்கலாம்……… ஆனால் நீங்க உங்க அப்பா அம்மா சொன்னதால எதும் பண்ணல அத்தான்……..”

“என்னை ரொம்ப ரொம்ப காதலிக்கிறீங்க அத்தான்…….. இப்போ கோபப்பட்டுட்டு போனப்ப கூட இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவீங்கன்னு தெரியும்………”

 “ஏன்னா என்ன விட்டுட்டு உங்களால இருக்க முடியாது அத்தான்…………”

 “என்னாலையும் நீங்க இல்லாம இருக்க முடியாது அத்தான்……. நானும் உங்களை விரும்புறேன்……..” என்று அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

மது பேச பேச அவன் எந்த மாதிரி உணர்கிறான் என்றே தெரியவில்லை……..

 இப்பொழுது உலகிலேயே மகிழ்ச்சியான மனிதன் யார் என்றால் நான் தான் என்பான்.

 அந்தளவுக்கு அவன் உள்ளம் உவகையில் நிறைந்தது. 

தானும் மதியை அணைத்துக் கொண்டு “லவ் யூ மதி…… லவ் யூ சோ மச் மா……..” என்று அவள் உச்சந்தலையில் இதழ் பதித்தான்.

அவளைத் தன்னிடமிருந்து பிரித்து “கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுடா…….” என்று அவளைப் படுக்க வைத்து அவளை அணைத்துக்கொண்டு படுத்தான்.

அவள் வயிற்றிலிருந்து சேலையை ஒதுக்கிவிட்டு கைகளால் மெதுவாக அழுத்திக் கொடுத்தான், பின் தலைமுடியை கோதிக் கொடுத்தான் . 

அவனுக்கு அவன் மதி தன்னை விரும்புகிறேன் என்று சொன்னதால் அவன் ஆகாயத்தில் பறந்துகொண்டு இருந்தான்.

“அத்தான் எனக்கு தூக்கம் வரல……”

“வலிக்குதா……”

“ம்ம்…..”

” டேப்லட் போடுறியா…….”

 “வேண்டாம்……. நீங்க திராட்சை சாப்பிடுங்க……..”

 அவன் சிரித்துக் கொண்டே “அது என்ன ஸ்லிப்பிங் டோஸா……..”

“ம்ம் ஆமா………” என்று அவன் இதழை சிறைப்பிடித்தாள்.

 அவன் கீழுதடை பற்களால் இழுத்து கடித்து அவனை துள்ள விட்டு பின்பு மேல் உதடை கவ்வி சப்பி நாக்கை உள்ளே விட்டு துழாவ இவன் பற்றிக்கொண்டான்.

 பின்பு அவன் கை அவனுக்கு பிடித்த இடத்தை பிடித்து நசுக்கி கசக்கி, பின்பு பற்களால் இழுத்து பெரிதாக்கி வாயில் வைத்து உறிந்து அவளை தூங்க வைத்து தானும் தூங்கிவிட்டான்.

இவர்கள் இருவரும் தூங்கி விட்டார்கள் ஆனால் சைலண்டில் இருந்த போனில் நூறாவது முறையாக கால் பண்ணி மினுக்கு மினுக்குன்னு கண்ணடுச்சிட்டு இருந்தது……… 

வேற யாரு விக்கி தான்…….

(ஏன்யா ரெண்டு பேரும்  அடில ஆரம்பிச்சு ஸ்லிப்பிங் டோஸ் போட்டு தூங்கிட்டீங்க…….. 

அங்க ஒருத்தன் அடின்னு சொன்னதுமே ஷாக் ஆகி உட்காந்தவன் தான்…….

 பாவம் விக்கி நீ….)

மோகம் 22:

மித்ரன் தூக்கம் கலைந்து எழுந்தவன், தன் கழுத்தைக் கட்டிக்கொண்டு தூங்கும் தன் மதுவையே சிறிது நேரம் பார்த்தபடி இருந்தான்.

பின்பு தான் கவனித்தான் மேசை மேலிருந்த போனில் மினுக்மினுக்கென்று ஒளி வருவதை …..அதை கண்டதும் ,தான் எழுந்து மதிக்கு போர்வை போர்த்தி விட்டு வந்தவன் தன் கைப்பேசியை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றான்.

கைப்பேசியை பார்த்தவன் திகைத்தான்…. “என்ன இது 167 மிஸ்டு கால் இருக்கு…….”

அவன் விக்கி தான் பண்ணியிருப்பான் என்று நினைக்கவில்லை.

“விக்கி தான் பண்ணிருக்கான்……ஏன் இத்தனை தடவை போன் பண்ணிருக்கான்….”என்று நினைத்துக் கொண்டே அவனுக்கு அழைத்தான்.

 இவன் அழைத்ததும் முதல் ரிங்கிலேயே எடுத்தான் .

( பயபுள்ளை போனையே பார்த்துட்டு இருந்துருக்கும் போல…….)

“என்னடா மச்சான்…… இத்தனை கால் பண்ணிருக்க…… என்ன ஆச்சு….”

“என்ன ஆச்சா…… டேய் உனக்கு ஒன்னும் அடிலாம் பலமா படலல்ல…….”

“ஏன்டா…. நல்லாதானே இருக்கேன்…..”
 
“டேய்….. மதி அடிச்சான்னு சொன்னல்ல…..”

“ஆமாம் மச்சான்…… ஆனால் சமாதானம் ஆயிட்டோம்…..” என்று சிரித்தான்.

“அட கிராதகா…….அதை சொல்ல வேண்டியது தானே……. நான் பயந்துட்டே இருந்தேன்……”

 (டேய் அவன் அதலாம் கணக்குளையே வைக்கல….இன்னும் அடிச்சா கூட வாங்கிட்டு ,ஸ்லிப்பிங் டோஸ் போடுவான்……)

“டேய் அதெல்லாம் ஒன்னும் இல்லடா…… நான் நல்லாருக்கேன்…..”

“அப்புறம் ஏன்டா கால் பண்ணப்ப எடுக்கல……”

“ஹி ஹி….. தூங்கிட்டேன் மச்சான்……”

 அப்பொழுது தான் அவனுக்கு லேசாக விளங்கியது.

“டேய் மச்சான்…… கன்னி பையன் சாபம் உன்னை சும்மா விடாதுடா…….”

(ஆமாம் விக்கி அவர்களை நம்பாத…… ரெண்டும் கூட்டுக் களவானிங்க…)

“டேய் மச்சி…….நானும் கன்னிப்பையன் தான் டா…….”

“போடா….. உன்னை நம்பமாட்டேன்……” என்று வைத்துவிட்டான் .

மித்ரன் சிரித்துக் கொண்டே கைப்பேசியை டேபிளில் வைத்து விட்டு மெத்தையைப் பார்த்தான்.

மதி இன்னும் தூங்கிக் கொண்டு தான் இருந்தாள்…… அவள் பக்கத்தில் படுத்துக்கொண்டு அவள் கன்னத்தை வருடிக் கொடுத்தான்……

“தேங்க்ஸ் மதுக்குட்டி ……எங்க நீ என்ன நம்ப மாட்டியோன்னு பயந்துட்டேன்…….”என்று அவள் கண்ணத்தில் முத்தம் வைத்தான்.

அவள் அசையவும் கையை எடுத்தவன், “மது ……”என்று மெதுவாக அழைத்தான்.

அவள் தூக்கத்திலே “ம்ம்…..”என்று முனகி அவன் மேல் கைப்போட்டு அவன் நெஞ்சில் தலை வைத்து படுத்தாள்.

 “மது….” என்று கிசுகிசுப்பாக திரும்ப அழைக்கவும் தன் தாடையால் அவன் நெஞ்சில் தேய்த்து திரும்பி படுத்தாள்.

அவளை இறுக்கி அணைக்கவும் கண்விழித்து “அத்தான்….”என்று அவளும் கட்டிக்கொண்டாள்.

“மது வயிறு வலி போய்டுச்சாடா……”

“ம்ம்…..” என்று அவன் கையை எடுத்து அவள் வயிற்றில் வைத்து அழுத்திக் கொடுக்க சொன்னாள்.

பின்பு “அத்தான்……. நிவேதாவ எதும் பண்ணாதீங்க……. நான்தான் திட்டி அனுப்பிட்டேன்ல……. நீங்க எதும் பண்ணாதீங்க அத்தான்……”

“அவளை சும்மாவிட்டா திரும்பவும் எதாவது பண்ணுவா……”

“இல்லை அத்தான் வேண்டாம்….. எதும் பண்ணாதீங்க ப்ளீஸ்……”

“சரிடா…….”

“அத்தான் உங்க சின்ன வயசு போட்டோ இருக்கா……”

“ம்ம் இருக்குடா…….”

“எடுத்துட்டு வாங்க பார்க்கலாம்…….”

அவன் எழுந்து, எடுத்துட்டு வரவும் அதை பார்த்தவள்

 “அத்தான் நீங்க சின்ன வயசுல அழகா இருக்கீங்க……”

“அப்போ, இப்போ எப்படி இருக்கேன்……”

அவன் கன்னத்தை வருடி, அவன் கண்களை பார்த்துக் கொண்டே ,”இப்போ ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க அத்தான்…….”

அந்த போட்டோ ஆல்பத்தில் ஆறு வயது வரைக்கும் எடுத்த போட்டோக்கள் அனைத்திலும் குடும்பமாக நால்வரும் இருந்தனர் .

அதன் பிறகு உள்ள போட்டோவில் விக்கியின் தாய் தந்தையும் இரண்டு சிறுவர்களும் நின்றிருந்தனர்.

அதை அவள் உற்று பார்ப்பதை பார்த்து “என்ன மேடம் அப்படி பார்க்குறீங்க ……இது யாருன்னு கண்டுபிடி….” என்றான்.

“இவங்க விக்கி அண்ணாவோட அப்பா அம்மா…… இது நீங்களும் விக்கி அண்ணனுமா……”

“ஹிம்ம்……”

 மற்ற போடோக்களிலும் இவர்கள் நால்வரும் தான் இருந்தனர்.

 பின்பு சில போட்டோக்களில் மித்ரநந்தன் இருந்தான்.

“ஏன் அத்தான்….. அத்தை மாமா கூட போட்டோ எதும் எடுக்கலையா……. “என்று கேட்டதும் கைகளை இறுக்கினான். 

அவன் பதில் எதும் சொல்லாமல் இருக்கவும் நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்தாள்.

அங்கு கோபத்தில் முகம் சிவந்து கைகளை மடக்கி நின்றிருந்தவனை கண்டவள் “என்ன ஆச்சு அத்தான்……”அவன் கண்கள் கலங்கிருந்தனவோ.

ஆல்பத்தை எடுத்து வைத்துவிட்டு அவன் தோளைத் தொட்டு “அத்தான்……” என்றாள்.

 மித்ரன் அவள் மடியில் படுத்துக்கொண்டு அவள் வயிற்றில் முகம் புதைத்து இடுப்பை வளைத்து கொண்டான்.

“என்ன அத்தான் ஆச்சு……” என்று கேட்டதும் அவன் அனைத்தையும் கூறினான்.

அவன் கூறி முடித்ததும் “நான் உங்களுக்கு எல்லாமாவும் இருப்பேன் அத்தான்……. நீங்க வருத்தப்படாதீங்க……… “

“இருங்க அத்தையும் மாமாவையும் எப்படி நீங்க ஏன் அத்தான தவிக்க விடலாம்னு கேட்கிறேன்…….”

என்ன நடந்திருக்கும்…..

மோகம் 23 :

மித்ரனுக்கு பத்து வயது இருக்கும் போது ஒரு பெரிய பள்ளியில் ஹாஸ்டலில் சேர்த்தனர். 

மித்ரனும் புது இடத்திற்கு செல்கிறோம் என்ற உற்சாகத்தில் அதனைக் கண்டுக் கொள்ளவில்லை.

ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு தன் அப்பா அம்மாவை பிரியும் நேரம் தான் அவன் தன் தாய் தந்தையுடன் இருக்க முடியாதோ என்று பிரிவை உணர்ந்தான்.

பின்பு தன் தந்தையிடம் “அப்பா நான் வீட்டுல இருந்தே படிக்கிறேன் பா…… உங்களை விட்டு என்னால இருக்க முடியாது பா…….. நான் உங்ககூடவே வரேன் பா……” என்று அவர் கைகளைப் பிடித்து அழுதான்.

சனா உடனே “மித்து ……அம்மா உன்னை வந்து பார்க்கிறேன் டா கண்ணா…….. அப்பாக்கு பிஸ்னெஸ் மீட்டிங்ஸ் இருக்குறதால அடிக்கடி வெளிய போற மாதிரி இருக்கும் டா கண்ணா…….. அப்படி போகும்போது நானும் போக வேண்டியது இருக்கும்………”

“அப்படி போகும் போது உன் படிப்பு ஸ்பாயில் ஆகக் கூடாதில்லையா அதான் உன்னை ஹாஸ்ட்டலில் சேர்த்தோம்……..”

“அம்மா வந்து அடிக்கடி பார்க்கிறேன் சரியா…….” என்று அவனை சமாதான படுத்திவிட்டு சென்றனர்.

ஆரம்பத்தில் வாரம் ஒருமுறை ஞாயிற்றுக் கிழமைகளில் மித்ரனை வந்து பார்த்துவிட்டு சென்றனர்.

அந்த பள்ளியில் படிக்கும் போது தான் விக்கியின் தோழமைக் கிடைத்தது.

ஒரு நாள் அழுது கொண்டு மித்ரன் பள்ளிக்கு வந்தான். விக்கி “ஏன் ….”என்று கேட்டதும் “என்னை மூன்று மாதமா அம்மா அப்பா பார்க்க வரவில்லை……… ஜெர்மனி போயிருக்காங்கலாம்……..” என்று விக்கியிடம் சொன்னான்.

விக்கி வீட்டிற்கு கொஞ்சம் பக்கத்திலே அந்த பள்ளி இருந்ததால் விக்கி வீட்டிலிருந்து வந்து கொண்டிருந்தான்.

மித்ரன் விக்கியிடம் “எனக்கு ஆசையா இருக்குடா விக்கி……. நம்ம ப்ரெண்ட்ஸ் அம்மா அப்பாலாம் வாரவாரம் வந்து அவங்களை பார்த்துட்டுப் போறாங்க…….”

“போன வாரம் கூட ஆகாஷ் அம்மா வந்தாங்கடா…….. அவனுக்கு பிடிக்கிற சாக்லெட்ஸ்லாம் வாங்கிட்டு வந்தாங்க…….அவனுக்கு ஊட்டி விட்டாங்கடா………” என்று ஏக்கமாக கூறினான்.

அன்றே விக்கி தன் தந்தையிடம் சென்று அனைத்தையும் கூறி “என்னையும் ஹாஸ்ட்டலில் சேருங்கப்பா……” என்றான்.


அவர் விக்கியை ஹாஸ்ட்டலில் சேர்த்துவிட்டு அன்றிலிருந்து வாரவாரம் குடும்பமாக இருவரையும் பார்த்து விட்டு அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்து ஹாஸ்ட்டலில் விட்டு  செல்வார்கள்.

அப்பொழுதிலிருந்து மித்ரன் விக்கியுடனும் அவனது குடும்பத்துடனும் இன்னும் நெருக்கமானான்.

முதலில் மித்ரனின் பெற்றோருக்கு இது பெரிதாக தெரியவில்லை.

வருடங்கள் செல்ல செல்ல விடுமுறைக்கு வீட்டிற்கு வருபவன் நந்துவிடம் பேசுபவன், இவர்களிடம் கேட்டால் பதில் சொல்வான், இல்லை என்றால் தன் அறையில் முடங்கிக்கொள்வான்.

அவன் பெற்றோர்கள் அவனை நெருங்க முயல அவன் விலகி சென்றான். 

மனதால் என்றோ விலகி இருந்தான்.

அப்பொழுது தான் கிருஷ்ணனும், சனாவும் தங்கள் தவறுகளை உணர்ந்தனர். 

பணம் பணம் என்று பிள்ளையைக் கவனிக்கவில்லையோ என்று காலம் கடந்து யோசித்தனர்.

மித்ரன் லண்டனில் தன் படிப்பை முடித்து தமிழ்நாட்டிற்கு வந்த சமயம் அது.

மித்ரன் தன் அறையில் யாரிடமோ கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தான்.

அப்பொழுது வீட்டுக்கு வந்த நிவேதா அவனை பின்னால் இருந்து அணைத்தாள்.

அவள் அனைத்ததும் “ஏய் கையெடு…… என்ன பண்ற……ச்சீ…….” என்று அவளைப் பிரித்துவிட்டான்.

“என்ன மித்து…… நான் கட்டிப் பிடிக்கக்கூடாதா…….” என்று கொஞ்சலாக கேட்டு அவனை திரும்பக் கட்டியணைக்க வந்தவளைப் “பளார்…..” என்று அறைந்தவன் அறுவெறுப்புடன் அவளைப் பார்த்தான்.

அவன் தன்னை அறைந்ததும் “என்னையா அடிக்கிற இரு உன்னை என்ன பண்றேன்னு பாரு …… “என்று தன் மனதில் வன்மத்துடன் எண்ணியவள் கீழே சென்று ராதாகிருஷ்ணனிடம் “மாமா…… மித்து என்ன அடிச்சுட்டாரு…… அவரு என்னை கிஸ் பண்ண வந்ததும் நான் வேணாம்னு சொன்னேன் என்று என்னை அடிச்சுட்டார்………” என்று நீலிக்கண்ணீர் வடித்தாள்.

மித்ரன் அவள் சொன்னதைக் கேட்டுக் கொண்டே வந்தவன் கோபத்துடன் ஏதோ சொல்ல வந்தவனை கிருஷ்ணன் என்ன என்று கூடக் கேட்காமல் அறைந்துவிட்டார். சனாவும் அங்குதான் இருந்தார் அதிர்ச்சியுடன் தன் மகனைப் பார்த்தாரே தவிர ஒன்றும் சொல்லவில்லை.

அவருக்கு ஒரு பெண் இதில் பொய் சொல்ல மாட்டாள் என்று நினைத்து தான் தன் பிள்ளையை அடித்தார்.

ஆனால் அந்த நிவேதா இதற்கும் மேலும் பேசுவாள் என்று பாவம் அவருக்கு தெரியவில்லை.

மித்து தன் தந்தை தன்னை நம்பாமல் அறைந்ததும் கோபத்துடன் தன் அறைக்கு சென்றவன் தான் அதன்பிறகு இருவரிடமும் முகம் கொடுத்துக்கூட பேசவில்லை.

பின்பு விஸ்வநாதன் மூலமாக தான் தெரிந்தது .தன் மகளும் மனைவியும் பேசிக்கொண்டதைக் கேட்டு கிருஷ்ணனிடம் கூறினார்.

அதற்கு பிறகு எவ்வளவோ அவனிடம் பேச முயற்சிசெய்தனர் .ஆனால் அவன் பூட்டிய மனக்கதவை திறக்கவே இல்லை.

மதி வந்ததிலிருந்து தான் அனைவருடனும் சேர்ந்து அமர்ந்து சாப்பிடுகிறான்.

அதற்கு முன்னால் முத்துவை தன்னறைக்கு எடுத்து வர சொல்வான்.

அவனைப் பார்ப்பதே அரிதாக இருக்கும். 

அனைத்தையும் மதியிடம் சொல்லியதும் அவனை அணைத்துக் கொண்டு அழுதாள்.அவளுக்கு இப்பொழுது அவன் பத்துவயது சிறுவன் போல தான் தெரிந்தான்.

அம்மா அப்பா இருந்தும் பாசத்துக்காக ஏங்கி இருக்கிறான் என்று நினைத்து அவள் துடித்தாள்.

அவனை அணைத்துக்கொண்டு முகம் முழுக்க முத்தமிட்டு “நான் இருக்கேன் அத்தான் உங்களுக்கு……..” என்று அணைத்துக்கொண்டாள்.

மித்ரனும் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

தனக்கென்று யாரேனும் ஒருவராவது இருக்கிறார்கள் என்றாலே அது நமக்கு தனி பலம் தானே……..

மோகம் 24:

“அத்தான் அவங்க உங்களை நம்பாம அடிச்சது தப்பு தான் ………”

“ஆனால் ஒரு பொண்ணு இந்த மாதிரி விஷயத்துல பொய் சொல்ல மாட்டாள்…….. ஆனால் இந்த நிவேதா இப்படி பண்ணுவான்னு அவங்களுக்குத் தெரியாதுல்ல அத்தான்…….”

“அவங்க கிட்ட பேசுங்க அத்தான்……. அவங்க பண்ணினது தப்புதான்……. நான் இல்லன்னு சொல்லல்ல……. ஆனால் இப்போ அவங்க நீங்க ஒரு வார்த்தை பேசிட மாட்டீங்களான்னு ஆவலா உங்க முகத்தைப் பாக்கும்போது கஷ்டமா இருக்கு அத்தான்……..”

“நீங்க அவங்களுக்காக ஏங்குன நேரம் அவங்க உங்க கூட இல்லைதான்…… ஆனால் அவங்க பண்ணின அதே தப்ப நாமும் ஏன் செய்யனும் அத்தான்………”

“எல்லாத்தையும் மறந்துடுங்க அத்தான்……… அவங்களை மன்னிச்சு ஏத்துக்கோங்க அத்தான் ப்ளீஸ்……..”

“அப்போ நான் இழந்ததெல்லாம் திரும்ப கிடைச்சிடுமா மது……..”

“போனது வராது தான் அத்தான்…….. ஆனால் இனிவரப் போற காலங்கள்ல்ல நாம சந்தோஷமா இருக்கனுமில்ல அத்தான்……….”

“அதுமில்லாம இப்போ கல்யாணம் வேற இன்னும் ஒரு வாரத்துல வரப் போகுது…….. அதுக்கு அவங்க மனசுல எந்த குறையும் இல்லாமா சந்தோஷமா இருக்கனும் அத்தான்……..”

“பேசுங்க அத்தான்…….கஷ்டம் தான்……. ஆனால் உங்க அப்பா அம்மா தானே புரிஞ்சுக்கோங்க அத்தான்…….” என்று அவன் தாடையை பிடித்துக் கேட்டாள்.

“ஹிம்ம்……. பார்க்கலாம் மது……. உடனேலாம் மாற முடியாது…….. உனக்காக முயற்சி பண்றேன்……..” என்றதும் அவன் கன்னத்தில் முத்தமிட்டு

 “செல்லக்குட்டி அத்தான் நீங்க……… நான் சொன்னதெல்லாம் கேக்குறீங்க………” என்று தாடையை பிடித்துக் கொஞ்சினாள்.

“நான் பிஸ்னெஸ்மேன் மதுக்குட்டி……. ஆதாயம் இல்லாமா எதுமே செய்யமாட்டேன்…….உன் பேச்ச கேக்குறேன்னா….. உன்கிட்ட இருந்து நான் எதாவது எதிர்ப்பார்ப்பேன்……அதை  நீ அப்படியே தரனும்…….என்ன தருவியா……  என்று புருவத்தை ஏற்றி இறக்கிக் கேட்டான்.

“என்கிட்ட ஒன்னுமே இல்லையே அத்தான்……. “என்று உதட்டைப் பிதுக்கி கூறியவளைப் பார்த்து “இப்போதைக்கு இது தான் மதுக்குட்டி வேணும்……..” என்று பிதுக்கிய உதடை சிறைப்பிடித்தான்.

அவனிடம் இருந்து பிரிந்தவள் ”போங்க அத்தான்……. நீங்க எப்போ பார்த்தாலும் முத்தம் குடுக்குறேன்னு சொல்லி கடிக்கிறீங்க …….”என்று புகார் வாசித்தவள் 

“அத்தான் நா உங்களை ஒன்னு கேட்கனும்னு நினைச்சேன்…….”

“என்ன மது……”  என்றான் உதட்டின் மேலே கண்ணாக.

“மறந்துடுச்சு அத்தான்…… இருங்க யோசிக்கிறேன்…….” என்றவளை இழுத்து தன் கைவளைவில் வைத்துக்கொண்டு அவள் உதட்டை வருடினான்.

“அத்தான்……. இப்படி பண்ணினா நான் எப்படி யோசிக்கிறது …….”என்று சிணுங்கினாள்.

“அதெல்லாம் யோசிக்க வேண்டாம்…….. தானா அதுவே நியாபகம் வரும்……. அப்போ சொல்லு……இப்போ வா ……என்று அவளை கைகளில் அள்ளியவன் மெத்தையில் கிடத்தி பக்கத்தில் படுத்தான்.

(ஏன்டா ஆவுனா பட்டு பட்டுன்னு தூக்குற……)

உடனே அவள் எழுந்து “அத்தான் நியாபகம் வந்துருச்சு……”

“என்னது…..”

“நீங்க எப்போ ரிஜிஸ்டர் பண்ணிங்க நம்ம கல்யாணத்தை……..”

“அது மூணு மாசம் முன்னாடி……”

“என்னது மூணு மாசம் முன்னாடியா…….” என்று அதிர்ந்தவள்.

“எப்படி அத்தான்…..” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் .

“அப்பொழுதுதான் அவன் உணர்ந்தான்…… தான் உளறிகொட்டியதை……. மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவன்.

“அது சீக்ரெட் மதுக்குட்டி…… அப்புறம் சொல்றேன்…….”

“அத்தான் ப்ளீஸ்…..”

“அப்புறம் தான்…..”

“சரி….. ஆனால் ரிஜிஸ்டர் பண்ண கையெழுத்து வேணும்……அப்புறம் நானும் இருக்கனும்ல…… எப்படி பண்ணீங்க…….”

“எல்லாம் ஆளு கரெக்ட் பண்ணிதான் பண்ணினேன்……..உன் கையெழுத்து உன்கிட்ட தான் ஆளு வச்சு வாங்கினேன்…….”

“எப்போ அத்தான் வாங்குனீங்க……..”

“மூணு மாதம் முன்னாடி நூறுநாள் வேலைவாய்ப்பு அரசாங்கம் அறிவித்த  போது நீங்க கையெழுத்துப் போட்டீங்கள்ல்ல……. அப்போ சுட்டது தான்……..” என்று சிரித்தான்.

“அத்தான் அப்போ சித்திக் கிட்டையும் அப்படி தான் வாங்கினீங்களா……..” என்று வாயைப் பிளந்தாள்.

“ஹிம்ம் ……ஆமாம் உங்க சித்தி சும்மா உன்னை கேட்டா குடுக்க மாட்டாங்க …….. அதான் சொத்தை வச்சு மடக்கினேன்………”

“டவுட் கிளியர் ஆயிடுச்சா…… என் வேலைய நான் பார்க்கலாமா…….” என்றான் .

“என்ன வேலை அத்தான்…… அதான் நைட் ஆயிடுச்சே ……இதுக்கு மேலயா ஆபீஸ் போறீங்க……” என்றாள்.

“அங்க யாரு போறது…… இங்கதான் வேலை……” என்று அவள் மார்பை முட்டினான்.

“எப்போ பார்த்தாலும் இதே தான் உங்களுக்கு வேலையா……..” என்றாள்.

“என்ன பண்றது இன்னும் ஒருவாரத்துக்கு இதை வச்சு தான் காலத்தை ஓட்டனும்…….”

“ரொம்பலாம் சலிச்சுக்க வேண்டாம்…….” என்று நகர்ந்தாள்.

“அய்யோ….. மதுக்குட்டி காரியத்தையே கெடுத்த போ……” என்று அவள் மார்பில் புதைந்தான்.

சிறிது நேரம் கழித்து சாப்பிட கீழே இறங்கவும் மித்ரனுக்கு தெரியாமல் சனாவை பார்த்துக் கண்ணடித்தவள், நேரே அவரிடம் சென்று

 “உங்களுக்கே இது நியாயமா இருக்கா அத்தை…… என் புருஷன் மேலே உங்களுக்கு எவ்வளவு நம்பிக்கை……” என்றதும் அவள் எதைப்பற்றி கூறுகிறாள் என்று விளங்கியதும் தன் மகனை தானே நம்பவில்லையே என்று வேதனையுடன் பார்த்து அழுதார். 

அப்பொழுது கிருஷ்ணன் சோர்ந்த குரலில் “என் பிள்ளையை நம்பாம நானே அடிச்சுட்டேன்…… எந்த பொண்ணும் அந்த மாதிரி விஷயத்துல பொய் சொல்ல மாட்டாங்கன்னு நினைச்சுத் தான் என் பிள்ளையை கைநீட்டிட்டேன்…….” என்று வருத்தப்பட்டார்.

அவர்கள் இருவரும் வருத்தப் படுவது பிடிக்காமல் “மது….” என்றான்.

“இருங்க …..” என்று ஏதோ சொல்லப் போனவளை இழுத்து தன் அருகில் அமர்த்தி தன் அன்னைய பார்த்து “நீங்க சாப்பாடு வைங்க மா……”என்றான். 

மது சிரித்து கொண்டே அவன் அருகில் சாய்ந்து “கோவம் போய்டுச்சா……” என்றாள்.

“ஹம்ம்……” என்றான்.

“அய்யோ கோவமா இருக்காறோ …..”என்று பார்த்தாள்.

சனாவோ தன் மகன் பேசியதும் ஆனந்தத்தில் சிலையாக மாறியவர் மித்ரன் அழைக்கவும் தான் தெளிந்தார்.

கிருஷ்ணன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க “நீங்களும் வாங்கப்பா……” என்றான். 

அவர் ஒரு தலையசைப்புடன் வந்து அமர்ந்தார்.


அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு தங்கள் அறைக்கு செல்லும் முன் “எப்படி உங்க பிள்ளையை பேச வச்சேன் பார்த்திங்களா……” என்றாள் கெத்தாக.
சனா கண்கலங்கி அவள் தாடையை வருடவும் 
“சரி சரி போய் தூங்குங்க…….நான் போறேன்……” என்று தன் அறைக்கு வந்தவள் மித்ரனிடம் வந்து “அத்தான் உங்களுக்கு என்மேல கோபமா…….”

“இல்லையே……”

 “அப்போ சரி …….ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அத்தான்……. அத்தை மாமாட்ட பேசினதுக்கு……..”

“தேங்க்ஸ் லாம் வேண்டாம்…….. எனக்கு வேற வேணும்…….”

“என்ன அத்தான்…….”

அவளை நெருங்கி “ஸ்லிப்பிங் டோஸ் தான் வேணும்……”

 “ஓ…தாராளமா ……” என்று அவனை நோக்கி கையை விரித்தாள்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *