❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤
❤அத்தியாயம் 31❤
ஆதியுடன் கயல் வெளியில் சென்றிருக்க போகும் வழியெல்லாம் ஆதி எப்பொழுதும் போல் அவளை வம்பிழுக்க அவளும் பதிலுக்கு வாயாடிக் கொண்டே வர சூப்பர் மார்க்கெட் வாசலில் காரை நிறுத்தினான்.
உள்ளே சென்று லிஸ்ட்டிலிருந்த பொருட்களை வாங்கி விட்டு பிறகு ஹரிணி சொன்ன சில பொருட்களையும் வாங்கிவிட்டு கயல் ஒரு பையையும் ஆதி இரு பைகளையும் தூக்கி கொண்டு வர அவள் இரண்டு கைகளால் ஒரு பையை தூக்கி கொண்டு வருவதை கண்ட ஆதி,
“ஹேய் ஹேய் நடிக்காத டி.. பத்து ரூவாய்க்கு நடிக்க சொன்னா பத்தாயிரம் ரூவாய்க்கு உன் நடிப்பு திறமைய காட்டுற பாத்தியா.. இந்த நடிப்பெல்லாம் என்கிட்ட செல்லாது.. ஹரிணிக்கு வாங்கின அஞ்சு மேக்கப் சாமான் தான் அதுக்குள்ள இருக்கு அதுக்கு ஏன் டி பத்து கிலோ அரிசி மூட்டைய தூக்கிட்டு வார மாதிரி ஏக்ட்(Act) பன்ற..” என்று ஆதி சலித்து கொள்ள,
அவனை பார்த்து அசடுவழிந்தவாறு ஒரு கையால் அந்த பேக்கை ஒரு சுற்று சுற்றியவள்,
“ஆம்பள பையனா பொறுப்பா வேலை பாரு டா.. பொண்ணு என்னை போய் வெயிட்ட தூக்க சொல்ற..” என்று அசால்ட்டாக சொல்ல,
ஆதியோ. “எது பொண்ணா எங்கே.. எங்கே..” என்று சுற்றி முற்றி பார்த்தவன் பின் யோசனை செய்வது போல் முகத்தை வைத்துக் கொண்டு, “என் கண்ணுக்கு ஒரு பொண்ணும் தெரியல்லையே.. பிசாசு தான் தெரியுது.. அதுவும் என் எதிர்ல நின்னுகிட்டு என்னை தான் டோர்ச்சர் பன்னிக்கிட்டு இருக்கு.. அப்போ நீ யார சொல்ற கயலு..” என அவன் தீவிரமாக முகத்தை வைத்து கொண்டு கேட்க,
அவளோ அவனை கையில் வைத்திருந்த பையாலயே ஒரு போடு போட்டு விட்டு முகத்தை திருப்பி கொள்ள சரியாக அவள் கண்ணில் பட்டாள் அந்த சிறு பெண். கிழிந்த அழுக்கு சட்டையணிந்து போவோர் வருவோரிடம் யாசகம் கேட்டுக் கொண்டிருந்த அச்சிறு பெண்ணை பார்த்த கயலுக்கு ஏதேதோ நினைவுகள் தோன்ற தன் கையிலிருந்த பையை கீழே போட்டவள் அவளை நோக்கி ஓட,
“ஹே ராட்சசி உனக்கு மனசாட்டியே இல்லையா.. வர வர கையும் நீளுது.. இப்போ இதையும் கீழ போட்டுட்டு அம்போன்னு விட்டுட்டு போற.. என்ன தான் டி நினைச்சிட்டு இருக்குற மனசுல.. ” என கத்திக் கொண்டே அந்த பையையும் தூக்கி கொண்டு அவள் பின்னாலே ஓடி வந்தான் ஆதி.
கயலோ அந்த சிறு பெண்ணின் அருகில் சென்று நிற்க அந்த சிறுமியே கயலை நிமிர்ந்து பார்த்து,
“அக்கா ரொம்ப பசிக்குதுக்கா.. சாப்பாடு வாங்க காசு இருந்தா தாங்கக்கா..” என கேட்க கயலுக்கு கண்கள் கலங்கியே விட்டது. அவளைப் பார்க்க கயலுக்கு தன்னையே பார்ப்பது போல் இருந்தது.
அவள் உயரத்திற்கு முட்டி போட்டு அமர்ந்தவள் அவள் கன்னங்களை தாங்கி,
“உன் பெயரென்ன..” என கேட்டாள்.
அந்த சிறுமியோ, “தெரியாது அக்கா..” என சொல்ல கயலோ அவளை பரிதாபமாக பார்த்து,
“உன்ன ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன்.. உன் வயசுல நிறைய பசங்க இருப்பாங்க.. படிக்கலாம்.. என் கூட வரியா..” என கேட்க,
அந்த சிறுமியோ மலங்க மலங்க விழித்துக் கொண்டிருக்க கயலுக்கோ அவளுடைய முழியை பார்த்து தன்னிடமும் இவள் வயதில் இவ்வாறு கேட்ட போது தானும் இதே போல் தான் விழித்தேன் என நினைவு வர புன்னகைத்தவள் அச்சிறுமியிடம்,
“பயப்புடாத.. உன்ன பாதுகாப்பான இடத்துக்கு கூட்டிட்டு போறேன்.. அங்க போனா உனக்கு அம்மா அப்பா அண்ணா அக்கா ஏன் எனக்கு கிடைச்ச மாதிரி நல்ல ஃப்ரென்ட்ஸ் கூட கிடைப்பாங்க.. என் கூட வரியா..” என மீண்டும் கேட்க,
அந்த சிறுமியும் சரி என தலையசைக்க ஆதியை நிமிர்ந்து பார்த்த கயல்,
“சீக்கிரம் காரை எடு.. இங்க இருக்குற ஒரு நல்ல ஆசிரமத்திற்கு காரை கொண்டு போ..” என சொல்ல,
அவன் தான் ‘இவள் என்ன மாதிரி பெண்..’ என்ற ரீதியில் அவளையே விழி அகலாது பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் முன் சொடக்கிட்டவன் “ஏய்ய்.. என்ன பேந்த பேந்த முழிச்சிக்கிட்டு இருக்க.. சீக்கிரம்..” என அவனை உலுக்க, அவனும் சுயவுணர்வு பெற்று காரில் அவளையும் அச்சிறுமியையும் அங்கிருக்கும் ஆசிரமத்திற்கு கூட்டிச் சென்றான்.
அச் சிறுமியை அழைத்துக் கொண்டு சென்ற கயல் அந்த ஆசிரம நிர்வாகியிடம் பேசி அச்சிறுமியை அங்கு சேர்த்து அவள் படிப்பிற்கு தேவையான அத்தனை செலவுகளையும் தான் பொறுப்பேற்று ஒரு தொகைப்பணத்தையும் அந்த ஆசிரமத்திற்கு டொனேட் செய்தாள்.
பின் அந்த சிறுமியிடம் வந்தவள் அவள் உயரத்திற்கு முட்டி போட்டு அமர்ந்து,
“உனக்கு பேர் இல்லைன்னு சொன்னல்ல.. நானே உனக்கு பேர் வச்சிருக்கேன்.. கவிதா என் அம்மா பேரு.. எப்பிடி..” என்று புருவத்தை உயர்த்தி கேட்க,
அந்த சிறுமியோ, “அய்ய்.. என் பேரு கவிதாவா..” என தன் முத்து பற்கள் தெரிய சிரித்து வைத்தாள்.
அச்சிறுமியின் ஒரு கன்னத்தை தாங்கியவள்,
“நா உன்கிட்ட ஒன்னு சொல்லவா.. எனக்கு உன்ன பார்க்கும் போது என்னையே பார்க்குற மாதிரி இருக்கு.. முதல்ல புது இடம் புது ஆளுங்க பயமா தான் இருக்கும்.. ஆனா, என்னைக்கும் உன் பயத்தை வெளில காட்டிக்காத.. என்ட் படிப்பு ரொம்ப முக்கியம் நீயும் நல்லா படிச்சு உன்ன மாதிரி கஷ்டப்படுற பசங்களுக்கு உதவி பன்னனும்.. இனி நீ ஸ்கூல் போவ, படிப்ப, உனக்குன்னு ரத்த பந்தம் இல்லாம நிறையவே உறவுகள் கிடைக்கும்.. எல்லாரையும் நம்பாத.. அதே போல எல்லாரையுமே சந்தேக கண்ணோட பார்க்காத.. நாளைக்கே உனக்கு புது டிரஸ் நீ ஸ்கூல்க்கு போறதுக்கு தேவையான எல்லாமே வாங்கிட்டு வரேன்.. பார்த்து கவனமா இரு.. நா முடிஞ்ச அளவுக்கு உன்ன அடிக்கடி பார்க்க வரேன்..”
என கூறியவள் அவள் நெற்றியில் முத்தமிட அந்த ஒன்பது வயது சிட்டுக்கு என்ன புரிந்ததோ அவளும் கயல் கன்னத்தில் முத்தமிட்டு “நன்றிக்கா..” என சொல்லி சிரித்தாள்.
பின் ஆதியுடன் வீடு நோக்கி புறப்பட்ட கயல் எதுவுமே பேசாது இறுகிய முகத்துடன் ஜன்னலின் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வர அவள் செய்த ஒவ்வொன்றையும் ஆச்சரியமாக விழிவிரித்து பார்த்துக் கொண்டிருந்த ஆதிக்கு அவள் எதுவும் பேசாது இறுகிய முகத்துடன் வருவது மனதை பிசைய அவளிடமும் எதுவும் கேட்காது அமைதியாகவே வந்தான்.
உள்ளே இருவரும் அமைதியாகவே வர கயல் சாரதாவிடம் பொருட்களை கொடுக்க செல்ல ஆதி யோசனையில் வருவதை சோஃபாவில் அமர்ந்திருந்து பார்த்த ஆதிரா,
“என்ன மிஸ்டர் ஆதித்யா.. என் ஃப்ரென்ட் கூட அதாவது உங்க எதிரி கூட வெளில போயிட்டு வர்றீங்க.. ஆனா, அமைதியா வர்றீங்க.. சம்திங் ரோங் ஹான்..” என. புருவத்தை உயர்த்தி ஆச்சரியப்படுவது போல் பாவனை செய்ய,
ஆதியோ ஒரு பெருமூச்சு விட்டவாறு ஆதிராவுக்கு எதிரில் சோஃபாவில் அமர்ந்து நடந்தது அனைத்தையும் கூற,
ஆதிராவோ சிறு புன்னகையுடன்,
“அது எப்போதும் நடக்குறது தான் ஆதி.. ரோட்டுல அநாதையா விடப்பட்ட சின்ன பசங்கள பார்த்தாலே அடுத்த நொடி கயல் அவங்கள ஒரு நல்ல ஆசிரமத்தில சேர்த்து விட்டு அவங்களுக்கான செலவையும் அவளே பொறுப்பேத்துறுவா.. ஏன்னா அவளும் அப்பிடி ஒரு நிலைமையில இருந்து ஆசிரமத்தில சேர்ந்தவ தான்..” என
சொல்ல ஆதியோ புரியாமல் பார்த்தான்.
பார்வையை வேறு புறம் பதித்தவாறே,
“கயலுக்கு அம்மா மட்டும் தான் இருந்தாங்கன்னு சொன்னா வீடெல்லாம் இல்ல ரோட்ல ப்ளாட்ஃபோர்ம்ல தான் படுத்திருப்பாங்களாம்.. கயல தூக்கி வச்சிக்கிட்டு அவங்க அம்மா சிக்னல்ல வண்டில வரவங்ககிட்ட காசு கேட்பாங்க.. அப்போ அவங்கள ஒரு லோரி மோதி ஸ்பொட்லயே இறந்துட்டாங்க.. கயலுக்கு அப்போ ஏழு வயசு தான் பசிக்காக ரோட்ல வரவங்ககிட்ட காசு கேட்பாளாம்.. யாரும் காசு கூட போட மாட்டங்கன்னு சொல்வா.. அப்போ நாங்க வளர்ந்த ஆசிரமத்த நடத்துறவங்க எங்க நிவேதா அம்மா கயல் கூட பேசி அவள ஆசிரமத்துக்கு கூட்டிட்டு வந்திருக்காங்க.
ஏன் நானும் துர்காவும் கூட இப்பிடி ஒரு நிலைமைல இருந்து வந்தவங்க தான்.. எங்க நிவேதா அம்மாவோட கனவும் அதான் இன்னும் பல இடத்துல ஆசிரமம் கட்டி ஆதரவு இல்லாத கஷ்டப்படுற பசங்களுக்கு படிப்பு பாசம் எல்லாம் குறையில்லாம வழங்கனும்.. ஆனா அவங்க இப்போ.. ” என்று நிறுத்தியவளின் குரலோ தழுதழுத்தது. ஆதியும் அவளை தான் கவனித்துக் கொண்டிருந்தான்.
சற்று தொண்டையை செறுமியவள்,
“இப்போ எங்களால முடிஞ்ச அளவு எவ்வளவு பசங்களுக்கு உதவ முடியுமோ அத்தனை பசங்களுக்கு ஹெல்ப் பன்றோம்.. எங்களோட கனவுன்னு ஒன்னு இருக்கு கூடிய சீக்கிரம் அதுவும் நடக்கும்..” என்று கண்கள் மின்ன சொன்னவள் எழுந்து செல்ல, ஆதிரா பேசியதை பின்னால் இருந்து கேட்டுக் கொண்டிருந்த அபிக்கு கூட அவர்கள் மீது இருந்த மதிப்பு இன்னும் பெருகியது.
ஆதி தான் கயல் இவ்வளவு கஷ்டங்கள் அனுபவித்திருக்கிறாளா என மனதினில் அவளுக்காக வருந்தியவன் அவளை உடனே காண கண்கள் துடிக்க கண்களை அங்கும் இங்கும் சுழலவிட்டு தேடினான். சரியாக அவனுடைய ராட்சசி வாசலில் ஆர்யனுடன் வெகு தீவிரமாக ப்ளான் செய்துக் கொண்டிருந்தவள் எதோ உள்ளுணர்வு உந்த திரும்பி பார்க்க அவளையே ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி.
மாநிறமாக இருந்தாலும் நல்ல கலையான முகம், தோல் வரையேயான கர்லிங் ஹெயார், அவள் அணிந்திருந்த வெள்ளை டொப் உம் ஜீன்ஸ்உம் அவளுடைய மெல்லிய உடலுக்கு கச்சிதமாக பொருந்தியிருக்க மார்ஷியல் ஆர்ட்ஸ் போன்ற கலைகளை கற்றிருந்ததால் உடலை எப்போதும் ஃபிட்டாக வைத்திருக்கும் அவளை காண காண அவனுக்கு திகட்டவே இல்லை.
தன்னையே வைத்த கண் வாங்காமல் புதிதாக பார்த்துக் கொண்டிருக்கும் ஆதியை பார்த்தவள் மனதிலே, ‘இவன் நம்மள தான் பார்க்குறானா.. இல்ல நமக்கு பின்னாடி யாராச்சும் இருக்காங்களா.. ஒருவேள அனிதாவா இருக்குமோ..’ என நினைத்தவள் பின்னாடி பார்க்க யாரும் இல்லாததை பார்த்து மீண்டும் அவனை புரியாமல் பார்த்தாள்.
ஆதியோ அவள் மனதை படித்தவன் போல் இதழில் அவளை பார்த்தவாறே ஒரு மெல்லிய சிரிப்பை உதிர்த்து விட்டு செல்ல கயலுக்கு தான் உச்சகட்ட ஆச்சரியம். ‘என்ன டா நடக்குது.. நம்மள பார்த்தா சிரிச்சிக்கிட்டு போறான் இந்த சிடுமூஞ்சி.. ஆனாலும் சிரிக்கும் போது நல்லா தான்யா இருக்கான் இருந்தாலும் நம்ப முடியல்லையே..’
என தனக்குள்ளே பேசிக் கொண்டிருந்தவள் சட்டென தன் தலையில் விழுந்த அடியில் நிமிர்ந்து பார்க்க ஆர்யன் ஒற்றை புருவத்தை உயர்த்தி அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவள் சுதாகரித்து, ” என்ன லுக்கு..” என கேட்க,
ஆர்யனோ அவளையே கூர்மையாக பார்த்து , “எனக்கு உன்ன பார்த்தா சந்தேகமா இருக்கு.. டு யு லவ் ஹிம்..” என நக்கலாக கேட்க,
அவளோ, “எது லவ்வா.. அதுவும் அவன் கூடவா..வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை..” என சொல்ல,
“அப்போ அவன் யார் கூட பேசினா உனக்கென்ன கயல்.. நீ ஏன் டென்ஷனாகுற.. ம்ம்..” என புருவத்தை உயர்த்தி ஆர்யன் வினவ,
“இதோ பாரு உன் ஃப்ரென்ட்ட நம்பி எல்லாம் ஒரு பொண்ண ஒப்படைக்க முடியாது.. அவன் ரொம்ப டேன்ஜர்.. என்ன தான் இருந்தாலும் அனிதா என் கூட பிறக்காத தங்கச்சி மாதிரி அவ லைஃப் அ சேஃப் பன்ன வேண்டிய கடமை எனக்கிருக்கு.. சோ, என்னை உன் அரைமென்டல் ஃப்ரென்டோட ஜோடி சேர்த்து கனவு காணாத..” என எதையோ பேசி அவள் சமாளிக்க,
ஆர்யனோ அடக்கப்பட்ட சிரிப்புடன்,
“உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை தாயி.. நீ நடத்து நடத்து..” என அவளை கிண்டல் செய்து விட்டு நகர,
கயலோ மனதில், ‘டேய்ய் பரங்கிக்கா தலையா அடுத்தவங்க கிண்டல் பன்ற அளவு என்னை கொண்டு வந்து நிறுத்திட்டியே.. இரு இன்னைக்கே உனக்கு ச்செக் வைக்கிறேன்..’ என மனதில் கருவியவள் ‘என்ன பன்னலாம்..’ என யோசித்துக் கொண்டே அறைக்கு சென்றாள்.
———————————————————————
இங்கு மண்டபத்தில் நுழைந்த ஹரி மண்டப உரிமையாளரிடம் மண்டப அலங்காரம், மண்டபத்திற்கான பேய்மென்ட்(Payment) பற்றி பேசிவிட்டு திரும்ப ரியாவோ மண்டபத்தை ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தாள்.
அவள் அருகில் சென்ற ஹரி,
“ரீ உனக்கு எப்போ கல்யாணம்..ம்ம்..” என ஏதோ ஒரு ஆர்வத்தில் கேட்க,
நடந்து சென்றுக் கொண்டிருந்தவள் ஹரி அப்பிடி கேட்டதும் திடுக்கிட்டு திரும்பி பார்த்து பின் முகத்தை வேறுபுறம் திரும்பிக்கொண்ட ரியா, “கல்யாணமா..” என கூறி விரக்தியாக சிரித்தவள், “அதுக்கெல்லாம் ச்சான்ஸ்ஸே இல்லை..” என ஒரு மாதிரி குரலில் சொன்னாள்.
அதில் ஹரியின் முகம் வாடி விட பின்,
“ஏன் இன்ட்ரெஸ்ட் இல்லையா..” என உள்ளே சென்ற குரலில் தெரிந்து கொள்ள கேட்க,
அதற்கு ரியாவோ,
“இருக்குறது ஒரு வாழ்க்கை அதை எனக்கு புடிச்சவங்க கூட வாழ ஆசைப்படுறேன்..பட் அதுக்கு எனக்கு குடுத்து வைக்கல.. மனசுல ஒருத்தர வச்சிக்கிட்டு நம்மள சுத்தி இருக்குறவங்களுக்காக ஒருத்தர கல்யாணம் பன்னி என்னையும் ஏமாத்தி அவரையும் ஏமாத்த நா விரும்பல.. அதான் நா ஆசைப்பட்டவரோட இருந்த ஒவ்வொரு நினைவுகளோடயே கடைசி வரைக்கும் வாழ்ந்துருவேன்..” கண்கள் கலங்க குரல் கமர ரியா கூறிக் கொண்டிருக்கும் போதே வெளியே ஃபோன் பேச சென்றிருந்த விஷ்வா வந்தான்.
“ரியா இங்க பக்கத்துல ஒரு புது ஷோப் திறந்திருக்காங்களாம்.. நாம அங்க போயி பார்த்துட்டு வீட்டுக்கு போகலாம்.. ப்ரோ சீக்கிரம் வா நீ தான் கூட்டிட்டு போகனும்..”
என கூறிக் கொண்டே ரியாவுடன் பேசியவாறு விஷ்வா முன்னே செல்ல ஹரிக்கு தான் ரியா சொன்ன விடயத்தில் ஒரே குஷியாக போனது.
அவளையே கண் இமைக்காமல் ஹரி பார்த்துக் கொண்டிருக்க இதை கவனித்த விஷ்வாவிற்கு ஏதோ புரிவது போல் இருந்தது. ஹரியுடன் இதை பத்தி பேச வேண்டும் என நினைத்துக் கொண்டான். ஆனால், விஷ்வா ஹரியுடன் பேசும் சமயம் தான் ஹரிக்கு புதிதாக பூத்த காதலுக்கு ஆப்பாக அமையப்போகிறது என்பதை அப்போது அவன் அறியவில்லை..
வீட்டில் ஆதியை பற்றி தீவிரமாக யோசித்த கயலுக்கோ உடனே ஒரு நல்ல ஐடியா தோன்ற, ‘இதை விட்டா வேற வழியில்லை.. ஹாஹாஹா ஹே சிடுமூஞ்சி இனி அனிதாவே உன் பக்கம் திரும்பி கூட பார்க்காத மாதிரி பக்காவா ஒன்னு மாட்டிருக்கு..’ என நினைத்தவள் வெளியில்,
“அனிதா.. ஏம்மா அனிதா..” என கத்திக் கொண்டே சென்று அனிதாவிடம் வெறும் பத்தே நிமிடம் பேசி தனது ஐடியாவை கச்சிதமாக செய்து முடித்தாள்.
கயல் என்ன பேசினாளோ ஏது பேசினாளோ அனிதா அதன் பிறகு ஆதியை பார்க்கும் போதெல்லாம் மேலும் கீழும் ஒரு மார்கமாக பார்த்து ஒரு ஏக்க பெருமூச்சை விட்டவாறு நகர்ந்து போக ஆதிக்கு தான் அவள் செயலில் ஒன்னுமே புரியவில்லை.
❤தொடரும்❤
——————————————————————-
don’t forget to comment guys..
thanks for ur support😍
and keep supporting me❤❤
❤ZAKI❤
