❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤
❤அத்தியாயம் 19❤
தன் முன்னால் நின்றிருந்த ஆண்களை ‘நீங்களா..’ என்ற கேள்வியோடு கிரிஷ் நோக்குவதை உணர்ந்த ஆர்யனோ அவன் சந்தேகப்பார்வையை பெண்கள் பார்பதற்கு முன் வேகமாக சென்று அவனுடைய முகத்தில் தன் முறுக்கேறிய இரும்பு கைகளால் நான்கு குத்து விட அவனுடைய மூக்கும் பல்லும் உடைந்து இரத்தம் பீறிட்டு வந்து வலியில் அலற தொடங்கினான். அவனுடைய கழுத்தை ஆர்யன் நெறுக்க அவனுக்கோ விழி பிதுங்கி மூசுமுட்ட பின் அவனுக்கு வாயிலிருந்து வார்த்தை வந்தால் தானே..
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆருத்ராவோ இவர்களால் இவனுக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வின் காரணமாகவே கிரிஷை பார்த்ததும் தன் மொத்த கோபத்தை அவன் மீது வெறித்தனமாக காட்டுகிறான் என தப்பாக புரிந்து கொள்ள, ஆனால் ஆர்யன் ஏன் அவனை பேச விடாது அடித்தான் என்பது நம் இளங்காளைகள் மாத்திரம் அறிந்த உண்மையே..
ஆர்யனின் கையை பிடித்து தட்டிவிட்ட ஆருத்ரா,
“இனிமே நீங்க இங்க இருக்க வேணாம்.. இதுக்கப்றம் என்ன பன்னனுமோ அத நாங்க பாத்துக்குறோம்.. நீங்க வெளிய போங்க..” என கூற,
“ஹெலோ நாங்க எதுக்கு வெளிய போகனும்.. அதெல்லாம் முடியாது.. ஆத்தீதீ அவன் என்னா வெயிட்டு தெரியுமா அவன தூக்கிட்டு வந்தது நானு.. அதனால நாங்க எங்கயும் போக போறது இல்ல இங்க தான் இருப்போம்..” என அபி சொல்ல மற்றவர்களும் அவனுக்கு ஆமா சாமி போட்டு ‘போக முடியாது’ என அடம்பிடித்தனர்.
“இதுங்க என்னைக்கு நாங்க சொல்றத கேட்டிருக்குதுங்க.. என்னவோ பன்னி தொலைங்க..” என கயல் கோபத்தோடு கூறிவிட்டு நகர பெண்களும் ஒரு பெருமூச்சை விட்டு தங்களின் வேட்டையில் கவனமாகினர்.
ஆர்யன் அடித்த அடியில் வலி தாங்காது சோர்ந்து போன கிரிஷ் ஆடவர்களை பார்த்தவாறு ஏதோ கூற வர அவனால் பேச முடிந்தால் தானே.. வெறும் காற்று மட்டுமே வந்தது. ஆர்யன் அவனுடைய கழுத்தை நெறித்த நெறியில் ஒரு வித வலியும் எடுக்க இயலாமையில் முகம் சுழித்து தலை குனிந்தவன் முகத்தில் ‘தான் இனி உயிரோடு இருக்க வாய்ப்பில்லை..’ என புரிந்தது போல் பயம் அப்பட்டமாக தெரிந்தது.
கிரிஷின் முன்னால் வந்து முட்டி போட்டு அமர்ந்த ஆருத்ராவுக்கோ தன் மனக் கண்ணில் சில நிழற்படங்கள் வந்து செல்ல கோபத்தில் அவள் மனம் எரிமலை குழம்பாய் கொதித்தது. கண்கள் சிவப்பேற கிரிஷுடைய கையை பிடித்து தன் அருகில் இழுத்தாள்.தொடுகையை உணர்ந்து கிரிஷ் அவளை நோக்க அவளுடைய முகத்தில் தெரிந்த அனலே அவனுக்கு பீதியை கொடுக்க அவனுடைய கை கால்கள் பயத்தில் நடுங்கின.
முகமெல்லாம் வியர்த்து போய் உடல் நடுங்க அமர்ந்திருந்தவனை பார்த்தவாறு ஆருத்ரா “இவனுக்குன்னு ஸ்பெஷலா வச்சத கொண்டு வா ” என இதழோர வெற்றிப் புன்னகையுடன் சொல்ல அவளின் கையில் குறடை கொடுத்து துர்கா நகர ஆருத்ரா தன் மொத்த கோபத்தையும் அவன் விரல்களில் காட்ட ஆரம்பித்தாள்.
கிரிஷை சுற்றி நான்கு பெண்களும் அவனை கொலைவெறியுடன் நோக்க கிரிஷோ பயத்தில் உறைந்து ‘என்னை விட்டுறுங்க..’ என்று கூட சொல்ல முடியாது அவர்களிடம் கெஞ்சவும் முடியாது வார்த்தை வராமல் ஆர்யனின் அடி, இவர்களின் தாக்குதல் என வலியை பொறுக்க முடியாது கண்களில் நீரோட கதறத் தொடங்கினான்.
ஆண்களோ தோழிகள் ஐவரையும் கண்கள் விரிய எழுச்சிலை விழுங்கியவாறு ஒருவித கலவரத்தோடே பார்த்துக் கொண்டிருந்தனர்.
கிரிஷுடைய இடது கையை அழுத்தமாக பிடித்தவாறு ஆருத்ரா,
“உனக்கு எங்கள தெரியாதுல்ல.. ம்ம்.. நீ பன்ன பாவத்தோட பிரதிபலன் தான் நாங்க.. நீ என்ன குடிச்சே செத்துறலாம்னு முடிவு பன்னிட்டியா.. உன்னையே மறக்குற அளவுக்கு உள்ள தள்ளுற.. எங்க சந்தோஷத்தை அழிச்சிட்டு அவ்வளவு சீக்கிரம் எங்க டோர்ச்சர(Torture) அனுபவிக்காம போய் சேர்ந்திடலாம்னு நினைச்சியா.. ம்ம்..” என கூறியவாறு அவனுடைய ஒரு விரலை குறடால் நசுக்கி வெட்ட அவன் கதறிய கதறலை விட அவனின் அறுக்கப்ட்ட விரலிலிருந்து இரத்தம் வெளியேறியது.
அவனுடைய வலது கை விரல்களை அவனை பார்த்துக் கொண்டே புன்னகைத்தவாறு மென்மையாக தடவி விட்டு தன் கையில் இருந்த மற்றொரு குறடால்,
“பொண்ணுங்கன்னா உனக்கு போதைப் பொருளா டா.. இந்த விரல் தானே அவ கதற கதற கொஞ்சம் கூட பாவமே பார்க்காம அவளுக்கு வலிய கொடுத்திச்சு.. இதே விரல் தானே டா பல பொண்ணுங்களோட வாழ்க்கைய அழிச்சிச்சு கதறுடா நாங்க பார்க்கனும் நல்லா அனுபவி..” என்று அவனது விரல்களை சிரித்தவாறு கயல் அறுக்க,
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஹரியோ அதிர்ச்சியிலும் பயத்திலும் தன் அருகிலிருந்த சித்துவின் மீது மயங்கியே சரிந்து விட இதை கவனித்த ரியா அவனிடம் ஓடி வந்து அவனது கன்னத்தை தட்டி ‘இவனெல்லாம் திருத்தவே முடியாது..’ என பெருமூச்சு விட்டவாறு சித்துவிடம் இவனை மற்றொரு அறைக்கு அழைத்து சென்று அவன் பக்கத்திலே இருக்குமாறு கூற சித்துவும் சரி என்று தலையசைத்து விட்டு ஹரியை தாங்கி பிடித்தவாறு அந்த அறையை விட்டு வெளியேறினான்.
பின் கிரிஷை கட்டிப்போட்டிருந்த நாற்காலியில் பின்புறமாக கைகளை ஊன்றிக் கொண்டு தன் கையில் வைத்திருந்த கத்தியை அவன் கழுத்தின் பின்புறம் வைத்து அழுத்தியவாறு அதிலிருந்து கசியும் இரத்தத்தை பார்த்துக் கொண்டே,
“என்ன டார்லிங் வலிக்குதா.. எனக்கும் அப்பிடிதானே இருந்திருக்கும்.. எத்தனையோ பொண்ணுங்கள தொட்டு நாசமாக்கின அதே கையோட எவ்வளவு தைரியம் இருந்தா என்னையும் தொட்டிருப்ப.. எனக்கு எப்பிடி இருந்துச்சு தெரியுமா.. உன்ன இப்பிடி கதற வச்சி பாக்குற இந்த நாளுக்காக தான் டா வெயிட் பன்னேன்.. இன்னும் கதறு..” என கத்தியால் அவன் பின் கழுத்தை கிழித்தாள் ஆதிரா.
துர்காவும் ரியாவும் தங்களுடைய மொத்த கோபத்தை அவனுடைய கால்களில் காட்ட ஐந்து பெண்களும் அவனுடைய உடலை குத்தி கிழித்தனர். அவனோ வலியை பொறுக்க முடியாது கதறி கதறி ஒரு கட்டத்தில் இரத்தம் அதிகமாக வெளியேறி அவன் இதயத்துடிப்பு நிற்க, அவன் துடித்து இறப்பதை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவன் இறந்த மறுநிமிடமே தரையில் அமர்ந்து கதறி அழத் தொடங்கினர்.
இவ்வளவு நேரம் அவர்களின் ஆக்ரோஷத்தை திகைத்து பார்த்துக் கொண்டிருந்த ஆர்யன், ஆதி, அபி இப்பொழுது இவர்கள் கதறியழுவதை பார்த்து ‘என்ன மாதிரியான பெண்கள் இவர்கள்..’ என நினைத்து செய்வதறியாது திணறித்தான் நின்றனர்.
அழுதால் மனதில் அழுத்தியுள்ள பாரம் குறையும் என இவர்களும் சமாதானப்படுத்தாது அமைதியாக இருக்க மங்கைகளின் அழுகையோ நின்றபாடில்லை. ஒரு கட்டத்தில் ஆருத்ராவின் அழுகையை காண முடியாது ஆர்யன் அவள் அருகில் சென்று அமர்ந்து அவள் தலையை வருட, தன்னவனிடத்திலே தனக்கான ஆறுதல் எனும் ரீதியில் அவனை தாவி அணைத்து கதறி அழ தொடங்கினாள் அவனவள்.
அவனும் எதுவும் வார்த்தையால் சமாதானம் சொல்லவில்லை.. அவளும் எதுவும் கூறவில்லை வெறும் அழுகை மட்டுமே… அவனும் அவளை மென்மையாக அணைத்தவாறு அவள் முதுகை நீவி விட, அவனுடைய அணைப்பில் ஒரு இதத்தை உணர்ந்தவள் அழுகை மட்டுபட பின் தான் இருக்கும் நிலை உணர்ந்து அவனிடமிருந்து மெதுவாக விலகினாள்.
ஆர்யன் ஆருத்ராவை மெதுவாக எழுப்பி அவளது நண்பிகளை கண்களால் சைகை காட்ட அதைப் புரிந்து கொண்டவளோ தன் தோழிகளின் அருகில் சென்று கண்ணீரை துடைத்தெறிந்து நால்வரையும் அணைத்து ஆறுதல்படுத்த அவர்களும் தங்களின் நண்பியின் அணைப்பில் தங்களுடைய வேதனையை ஒதுக்கினர்.
இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஆதிக்கும் அபிக்கும் தங்களின் மனம் கவர்ந்தவர்களின் அழுகை மனதை பிசைய ஆனாலும் எதுவும் கூறாது அவர்களை பார்த்தவாறே நின்றிருந்தனர்.
“நீங்க இனி வீட்டுக்கு போங்க.. இவன் உடம்ப என்ன பன்னனும்னு நீங்க நினைச்சிங்களோ அத நாங்க பாத்துக்குறோம்..” என ஆர்யன் தோழிகள் ஐவரையும் நோக்கி சொல்ல, அவர்களும் எதுவும் கூறவில்லை. சரி என தலையசைத்து விட்டு வெளியேற அவர்களை அவர்கள் வீட்டில் விட ஆதியை அவர்களுக்கு துணையாக அனுப்பிய ஆர்யன் அபி சித்து ஹரியுடன் அடுத்து செய்ய வேண்டி காரியங்களை செய்ய விரைந்தான்.
————————————————————-
கிரிஷ் பொதுவாக கெஸ்ட் ஹவுஸிலே தங்கிக் கொள்வதால் அவன் வீட்டிற்கு வராததை அவன் அம்மா ராதிகா பெரிதுபடுத்தவில்லை. கிரிஷிற்கு அப்பா இல்லை அம்மா மட்டுமே.. அவனுடைய அம்மா ராதிகா சமுதாயத்தில் முக்கிய புள்ளி. பெரிய தொழிலதிபர்.
தொழில், பணம் என்று அதிலே முழுமூச்சாக இருந்ததால் கிரிஷை கவனிக்கவே இல்லை என்பதை விட அவனுடன் பேச கூட அவருக்கு நேரம் இருந்ததில்லை என்றே கூறலாம். தன் மகனுக்கு நடந்தது அறியாது எப்பொழுதும் போல் அவரும் இருந்து விட அவருடைய மகனின் உடல் ஒரு நாள் பூராக அந்த நகரத்தில் குப்பைகள் குவியும் இடத்தில் பாதி அழுகியும் அழுகாமலும் பல வெட்டுக் காயங்களோடு இரத்தக் கிளறியாக கிடந்தது.
—————————————————————
ஒரு நாள் கழித்து,
அன்று இரவு,
தனது ஃபார்ம் ஹவுஸிற்கு (Farm house) பின்னாடியுள்ள காட்டுப் பாதையில் பயத்தில் விழி கருமணிகள் அங்கும் இங்கும் உருள, கைகள் நடுங்க தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தான் ஆரவ். ஒரு கட்டத்தில் முடியாமல் மூச்சு வாங்க கைகளை முட்டியில் ஊன்றியவாறு பெரும் மூச்சுகளை விட்டுக் கொண்டிருந்தவன் சற்று நேரத்திற்கு முன் நடந்ததை யோசிக்க ஆரம்பித்தான்.
அவன் தான் ஆரவ் அரோரா. ஆர்னவின் சித்தப்பா ஜெகன் அரோராவின் மகன். ஆர்னவ் கிரிஷ் ஹரிஷ் மூவர் செய்யும் அனைத்து கெட்டதிலும் இவனுக்கும் பங்கு உண்டு. ஏதோ தப்பித்தவறி நம் சிங்கப் பெண்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தில் இவன் தொடர்புபடாமல் போய்விட்டான்.
ஹரிஷ் சாவின் போது இவன் வெளியூரில் இருந்ததால் அவனுக்கு முடிவு கட்ட நினைத்தவர்களிடம் அன்று தப்பித்து விட்டான். ஆனால், விதியின் விளையாட்டு இன்று ஒரு நவநாகரீக மங்கையுடன் தன் ஃபார்ம் ஹவுஸில் கூடலில் இருந்தவன் அறியவில்லை இன்றே தனக்கான இறுதி நாளென்று.
அவனுடன் கூடலில் இருந்தவள் சட்டென தனக்கு வந்த ஃபோன் ரிங்கில் அவனை தன்னிடமிருந்து விலக்கி அழைப்பை ஏற்று காதில் வைத்தாள். மறுமுனையில் என்ன கேட்கப்பட்டதோ ஒரு இதழோர குறுஞ்சிரிப்பை சிந்தியவள் ‘ரெடி’ என்று மட்டும் கூறி அழைப்பை துண்டித்து விட்டு கட்டிலிலிருந்து எழுந்து தனது ஆடைகளை அவசர அவசரமாக அணிய ஆரவோ அவளையே புரியாமல் பார்த்தான்.
பின் ஆரவ் கட்டிலிலிருந்து எழுந்து அவளருகில் வர, கதவை படாரென்று திறந்து கொண்டு வந்தனர் இருவர். ‘யார் இவர்கள்’ என்று அவன் புரியாமல் நோக்க, அந்த இருவரில் ஒருவனோ ஆரவையே அழுத்தமாக பார்த்தவாறு அந்த யுவதி கையில் சில பண கட்டுகளை வைத்து,
“தேங்க்ஸ் ஃபோர் யுவர் ஹெல்ப்.. இப்போ இவன நாங்க கவனிச்சிக்கிறோம்..”
என சொல்ல,
அவளோ பண கட்டுகளை வாய் பிளந்து பார்த்து விட்டு ஆரவை நோக்கி,
“எல்லாம் உன்னால தான் தேங்க்ஸ் ஹனி.. பாய்ய்..” என குழைவாக பேசிவிட்டு அவள் பாட்டிற்கு செல்ல,
ஒரு நிமிடம் ‘இங்க என்னதான் நடக்குது’ என பாதி புரிந்தும் பாதி புரியாமலும் அவ்விருவரையே விழி பிதுங்கி பார்த்துக் கொண்டிருந்தவன்,
“ஏய்ய்.. ஹேய்ய்.. யா..யார்ரா நீங்கெல்லாம்.. உங்க இஷ்டத்துக்கு உள்ள வந்திருக்கீங்க.. செக்யூரிட்டி.. செக்யூரிட்டி..” என திக்கித்திணறி பேசியவாறு பதற,
அவர்களோ அவனுடைய பதட்டத்தை கண்டு வாய்விட்டு சிரித்து,
“நீ உன் அப்பனயே கூப்பிட்டாலும் அவனால கூட இப்போ உன்ன எங்ககிட்ட இருந்து காப்பாத்த முடியாது மிஸ்டர்.ஆரவ் அரோரா..” என மற்றொருவன் கூற,
ஆரவோ சட்டென இருவரையும் தள்ளிவிட்டு அறையிலிருந்து வேகமாக வெளியேறியவன் தலை தெறிக்க ஓடினான். ஆனால், அவர்களோ விஷமமான புன்னகையுடன் அவன் ஓடுவதையும் தடுக்காது அவன் பின் நிதானமாகவே சென்றனர்.
மூச்சு வாங்கிக் கொண்டே நடந்ததை நினைத்துப் பார்த்தவன் தன் முன் நிழலாடுவதை உணர்ந்து தலை நிமிர்ந்து பார்க்க தன் முன்னால் ஏளன சிரிப்புடன் நின்றுக் கொண்டிருந்த மூவரையும் ‘இப்போ இவங்க யாரு..’ என்ற ரீதியில் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
திடீரென தன் தோளில் தொடுகையை உணர்ந்தவன் உடல் தூக்கி வாரிப்போட இரண்டு மூன்று அடிகள் முன்னால் நகர்ந்து திரும்பி பார்க்க சற்று நேரம் முன் தன் அறைக்கு வந்த இருவர் நிற்பதை பார்த்தவனது கண்கள் ஐவரையும் பயத்துடனும் அதிர்ச்சியுடனும் மாறி மாறி நோக்கி அலை பாய்ந்தன. அந்த ஐவர் வேறு யாருமில்லை சாட்சாத் நம் கதா நாயகர்களே..
“என்ன பாஸ்.. நீங்க எவ்வளவு பெரிய ஆளு இப்பிடி அலறுறீங்க.. பாக்குற எங்களுக்கே பாவமா இருக்கே எதுக்கு வந்தமோ அத பன்ன கூட மனசு வருதில்ல.. ச்சு..ச்சு..ச்சு..” என ஆர்யன் அவனை ஏளனமாக பார்த்து உச்சுகொட்ட,
“டேய்ய்.. யாருடா நீங்கெல்லாம்.. நா யாருன்னு தெரியுமா டா.. என் பெரியப்பா யாருன்னு தெரியுமா டா..” என ஆரவ் பேச,
அதை குறுக்கிட்ட ஆதி,
“போடாங்ங்..” என நிறுத்தி ” உனக்கே உன்னையும் உன் பெரியப்பா புடலங்காயையும் தெரியல.. அப்றம் ஏன் டா எங்ககிட்ட கேக்குற..” என முகத்தை சுழித்தவாறு சொல்ல,
“ஆமா டா.. இவன் எல்லா ஒரு ஆளுன்னு இவன இன்னைக்கு இங்க வரவைக்க அந்த மேனா மினிக்கிகிட்ட போய் பேசலாம்னு போனா அவ என்னை இவன மாதிரி நினைச்சிட்டு என் கூட சேர்ந்து குடும்பம் நடத்த ப்ளான் போடுறா.. இதுக்காகவே இவன கொல்லனும் டா..” என சித்து ஆவேசமாக கூற,
“ஏய்ய்.. மரியாதையா என்னை விட்டுறுங்க.. அப்றம் உங்களுக்கு தான் பிரச்சினை.. நீங்க யாருன்னு கூட எனக்கு தெரியல.. என்கிட்ட உங்க மிரட்டலெல்லாம் வச்சிகாதீங்க..இத விட மோசமா அனுபவிப்பீங்க..” என அந்த பயத்திலும் கொஞ்ச நஞ்ச தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஆரவ் அவர்களை மிரட்ட,
“டேய்ய்.. இவன் வேற என்னை ரொம்ப படுத்துறான் டா.. நமக்கிட்ட மாட்டிகிட்டதிலிருந்து மிரட்டுறன்னு பேர்ல சினிமா டயலாக்கா பேசி காமெடி பன்னிகிட்டு இருக்கான்..” என ஹரி புலம்ப,
அவன் கூற்றில் சிரித்த ஆர்யன் பின் ஆரவை முறைப்புடன் அழுத்தமாக பார்த்து கொண்டு,
“ஆமா.. நாங்க யாருன்னு உனக்கு தெரியாது தான்.. நீ கூட எங்க வாழ்க்கைல எதுவும் பன்னல.. ஆனா, நீ யாரோ ஒருத்தரோட வாழ்க்கைல விளையாடுனதுக்கு உனக்கான எமனா கடவுள் எங்கள ஃபிக்ஸ் பன்னிட்டாரே.. எங்களாலயும் மறுக்க முடியல பாஸ்.. வேறவழி.. தலையெழுத்தேன்னு உன் முன்னாடி நின்னுகிட்டு இருக்கோம்..” என ஆர்யன் சொல்ல,
“ஆமா ஆர்யா.. இவன் கதைய சீக்கிரம் முடிச்சிடு டா.. ரொம்ப நேரமா இவன் கூடவே கடல போட்டுகிட்டு இருக்கோம்.. இன்ஸ்டால என் ரஷ்யன் கேர்ள் ஃப்ரென்ட் வேற வெயிட்டிங் டா.. லேட் ஆகினா ரஷ்யன் பாஷையிலேயே பச்சை பச்சையா கழுவி ஊத்துறா..மீ பாவம் டா..” என அபி பாவமாக முகத்தை வைத்து கூற,
இன்று தன்னை இவர்கள் விடப்போறதில்லை என புரிந்து கொண்ட ஆரவ்,
“ப்ளீஸ் என்னை விட்டுறுங்க.. உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன்.. நீங்க தான் என்னை கொல்ல வந்தீங்கன்னு உங்கள காட்டி கூட கொடுக்க மாட்டேன்.. நீங்க என்ன கேட்டாலும் தர நா ரெடி.. என்னை விட்டுறுங்க..” என ஆரவ் டீலிங் பேச,
அவன் அருகில் நெருங்கிய ஆர்யன்,
“என்ன கேட்டாலும் எவ்வளவு கேட்டாலும் தருவியா..” என போலி ஆச்சரியத்தில் கேட்க,
“ஷுவர்(Sure) கண்டிப்பா தரேன்.. எவ்வளவு வேணும் என்ன வேணும்னு மட்டும் சொல்லுங்க..” என தான் தப்பித்து விட்டதாக தவறாக புரிந்து கொண்டு ஆர்வத்தில் ஆரவ் கேட்க,
“ச்சு.. ச்சு.. ச்சு..” என அவனை பார்த்து உச்சு கொட்டிய ஆர்யன்,
“நமக்கு வேண்டப்பட்டவங்க இப்போ உன் உயிர தான் கேட்டிருக்காங்க.. சோ.. எனக்கும் அது தான் வேணும்.. நீயே பெருந்தன்மையா என்ன கேட்டாலும் தரேன்னு சொல்லிட்ட.. அதனால நானே எடுத்துக்குறேன்..” என கூறியவன் அவன் மிரளும் பார்வையை பார்த்தவாறு தன் துப்பாக்கியால் அவனுடைய இடது பக்க நெஞ்சை துளைத்தான்.
துப்பாக்கி சத்தத்தில் அந்த இடத்தை சுற்றி மரங்களிலுள்ள பறவைகள் அடித்து பிடித்து அலறியடித்துக் கொண்டு பறந்தன. தன் நெஞ்சை குண்டுகள் துளைத்தெடுக்க விழி பிதுங்கி அந்த இடத்துலேயே சரிந்தான் ஆரவ்.
யாரும் பார்க்காத வண்ணம் ஐவரும் அவனை தங்களின் வண்டியின் பின் டிக்கியில் போட, உடனே ஒருவருக்கு தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்ட ஆர்யன்,
“ஆரவ் இஸ் நோ மோர்.. வேலைய பக்காவா முடிச்சாச்சு..” என சொல்ல,
மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ மீண்டும் ஆர்யன்,
“இதுல எங்க மேல சந்தேகம் வராம பாத்துக்க வேண்டியது உங்க பொறுப்பு..” என கூறியவன் மறுமுனையில் பதிலை எதிர்பாராமல் துண்டிக்க, வண்டி நேராக சென்றது கிரிஷின் உடல் போடப்பட்ட அந்த குப்பை கூவியும் இடத்திற்கு தான் அங்கு வேலையாட்கள் வராது யார் கண்ணிலும் படாததால் கிரிஷின் உடல் அப்பிடியே இருந்தது.
கிரிஷின் உடல் போடப்பட்ட இடத்திலிருந்து சற்று தொலைவில் ஆரவுடைய உடலை போட்டவர்கள் தானே பொலிஸிற்கு அவ் ஏரியா மக்கள் போல் தகவல் சொல்லி அவ் இடத்தை விட்டு நகர்ந்தனர்.
நடு நிசி,
ஒரு மணி போல்,
தூக்கத்திலிருந்த கிரிஷின் அம்மா ராதிகா தனக்கு வந்த அழைப்பை அரைதூக்கத்தில் எடுத்து காதில் வைக்க மறுமுனையில் சொன்ன செய்தியில் மொத்த தூக்கமும் கலைந்து கண்கலங்க உறைந்தே விட்டார்.
❤தொடரும்..❤
————————————————————-
Friends innaiki ud epidinnu marakama unga comments a solluga.. thanks for ur support guys..😍 Keep supporting me😊
❤ZAKI❤
