❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

               ❤அத்தியாயம் 16 ❤

அன்று,
  ஆருத்ரா வீட்டில்,

 

            தற்பொழுதெல்லாம் ரியாவுக்கு ஹரி மீதான உரிமையான அதட்டல்களும்,  அக்கறையும் அதிகரித்துக் கொண்டே சென்றது. அன்று கடைசியாக இவர்களின் சந்திப்பில் ரியா ஹரியின் மீது உரிமையாக நடந்துக் கொண்டதிலிருந்து ஹரியுடன் முன்பை விட நெருங்கி பழகவே ஆரம்பித்திருந்தாள்.

 

            அவனுடனான சந்திப்பின் போது நெருங்கி பழகுவதும், அதிகமாக பேச முயற்சிப்பதும், அவன் மீது அதிகமாக உரிமை எடுப்பதுமாக ரியா வெளிப்படையாகவே தன் காதலை உணர்த்த இதை மற்றவர்கள் கண்டும் காணாதது போல் இருந்து விட்டனர்.

             ஆனால்,  ஹரியோ ரியாவுடன் நெருங்கி பழகினாலும் அவளுடன் உரிமையாக நடந்து கொள்ளும் அளவிற்கு செல்லவில்லை. அவள் தன்னிடம்  உரிமை எடுப்பதை தடுக்கவும் இல்லை. அவனால் அதை மறுக்கவும் முடியவில்லை. அவனுக்கு அவளின் உரிமை கலந்த அன்பு ஒருவிதமான உணர்வையும் இதத்தையும் ஏற்படுத்தினாலும் அதை ஒரு மனம் ஏற்க மறுமனமோ ‘இவள் உனக்கானவள் இல்லை’ என்ற வாசகத்தையே ஒலித்தது.

 

           அவனுக்கும் அவளுடனான நெருக்கம் பிடித்திருந்தாலும் அவ்வப்போது அவள் பக்கம் மனம் சாயும் போது அவனுக்கு சிறுவயதிலிருந்து பெற்றோர் கூறிய அச்சொல் நியாபகத்துக்கு வந்து ரியாவை விட்டு சற்று விலகியே நிற்க வைத்தது. இவர்களின் உறவை கவனித்துக் கொண்டிருந்த சித்துவோ ‘ரியா தேவையில்லாமல் மனதில் ஆசையை வளர்க்கிறாளோ’ என்றெண்ணி ஹரி குடும்பம் பற்றிய உண்மையை அவளிடம் பேசி இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தான்.

 

         அன்று ரியா பெல்கனியில் போடப்பட்டிருந்த ஸோபாவில் அமர்ந்து தனது லேப்டாப்பில் எதையோ டைப் செய்துக் கொண்டிருக்க ‘இது தான் இவளுடன் பேசுவதற்கு சரியான சந்தர்ப்பம்’  என்றெண்ணிய சித்து அவள் எதிரில் வந்து நிற்க, தன் முன்னால் நிழலாடுவதை உணர்ந்தவளோ நிமிர்ந்து பார்த்தாள்.

அங்கு சித்து ரியாவின் எதிரில் கைகளை கட்டிக் கொண்டு அவளையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருக்க, கண்களில் கேள்வியை தாங்கிய வண்ணம் ரியா சித்துவை நோக்கினாள்.

       “நா உன்கிட்ட முக்கியமான ஒரு விஷயமா பேசனும்..” -சித்து

 

      “இதுக்கு எதுக்கு மிஸ்டர் சித்தார்த் முகத்தை உர்ருன்னு வச்சிக்கிட்டு சொல்றிங்க.. உனக்கு இதெல்லாம் செட்டே ஆகலயே.. சரி என்ன மேட்டர்.. அதுவும் முகத்தை இப்பிடி வச்சிருக்கன்னா சீரியஸான மேட்டருன்னு தான் நினைக்கிறேன்..” – ரியா கேலியாக கூற,

 

       “ஹரி பத்தி பேசனும்.. ” என சித்து பட்டென்று சொல்ல இப்பொழுது முகத்தை சீரியஸாக வைப்பது ரியாவின் முறையானது.

அவனை ஆழமாக பார்த்த ரியா,
        “ஹரி பத்தி என்ன பேச வேண்டி இருக்கு என்கிட்ட..”

 

        “உனக்கு ஹரி மேல ஈர்ப்பா காதலா என்ன எளவோ.. எதுவா இருந்தாலும் அப்பிடி ஒரு எண்ணம் உன் மனசுல இருந்தா அத இப்போவே அழிச்சிரு.. உன் நல்லதுக்கு தான் சொல்றேன்..” – என சித்து கூற,

அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவள் இறுகிய முகத்துடன் “ஏன்..” என்ற ஒற்றை சொல்லை மட்டுமே கேட்டு வைத்தாள்.

ஒரு பெருமூச்சை விட்ட சித்து,
             “லுக் ரியா..நீ அவன்கிட்ட உரிமையா பழகும் போது அவன் தடுக்கலன்னு அவனுக்கும் உன்மேல அப்பிடி ஒரு எண்ணம் இருக்குன்னு மட்டும் நினைச்சிராத.. ஏன்னா அவன் வேற பொண்ண லவ் பன்றான் அதுவும் சின்ன வயசிலிருந்து..” என கூறி முடிக்க,

அவன் கூறியதை கேட்ட ரியாவுக்கோ தன் இதயத்தை யாரோ குத்தி கிழிப்பதை போன்ற வலியை உணர வைத்தது. இருந்தும் தன்னை சமன் செய்துக் கொண்டு,
           “அவன் நெஜமாவே வேற பொண்ண லவ் பன்றானா…  நீ ஒன்னும் என்கிட்ட விளையாடல்லயே…” என நடுங்கும் குரலில் கண்ணீரை அடக்கிய வண்ணம் கேட்க,
    
          “நீ தேவையில்லாம மனசல ஆசைய வளர்த்து அப்றம் ஃபீல் பன்னக் கூடாதுன்னு தான் நா இப்பவே சொல்றேன்.. ஹரியோட அப்பாவோட தங்கச்சி அதாவது ஹரியோட அத்தை ஒருத்தர காதலிச்சு வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பன்னிக்கிட்டாங்க.. அதனால ஹரியோட தாத்தா அவங்கள வீட்ட விட்டே ஒதுக்கி வச்சிக்கிட்டாங்க.. அப்றம் நாலு வருஷம் கழிச்சு அவங்க ஃபேமிலி ஏதோ ஒரு ஆக்ஸிடன்ட்ல இறந்துட்டதா தகவல் கிடைச்சிச்சு.ஹரியோட ஃபேமிலிக்கு இது ரொம்பவே அதிர்ச்சி. அவனோட அத்தை தப்பே பன்னிருந்தாலும் அந்த வீட்டுல ஒரு இளவரசி மாதிரி இருந்தவங்க. அவங்க இறந்த செய்திய கேள்விப்பட்டு வீட்டுல எல்லாரும் ரொம்பவே உடைஞ்சி போய்ட்டாங்க.. அதுல ஹரியோட அப்பாவுக்கு அவங்கள இத்தனை நாள் ஒதுக்கி வச்சிட்டோமேன்னு குற்றவுணர்ச்சியாகிட்டு..

 

         பட் அந்த ஆக்ஸிடன்ட்ல ஹரியோட அத்தையும் அவங்க   ஹஸ்பன்ட் மட்டும் தான் இறந்திருக்காங்க.. அதனால அவங்ளுக்கு ஒரு பொண்ணு இருந்ததா முன்னாடியே தெரிஞ்சதால அவங்களோட பொண்ண தேடி அலைஞ்சிருக்காங்க.பட் அந்த பொண்ண பத்தின டீடடெய்ல்ஸ் மட்டும் கிடைக்கவே இல்ல.. ஆனா, ஹரியோட அப்பாக்கு எப்பிடியாவது அந்த பொண்ண கண்டுபிடிச்சு அவங்க தங்கைக்கு செய்த பாவத்துக்கு பரிகாரமா அந்த பொண்ணையே ஹரிக்கு கல்யாணம் பன்னி குடுக்கனும்னு ஆசை..

         அதனாலயே சின்ன வயசிலிருந்து அவனுக்கும் அதையே சொல்லி வளர்த்தாங்க. அவனும் முகம் பார்க்காத பேர் தெரியாத அவன் அத்தை பொண்ண காதலிக்க ஆம்பிச்சிட்டான்.இப்போ கூட அவன் மும்பைல எங்ககூட வேல பாக்குறதுக்கான ரீஸனே அந்த பொண்ணு இங்க இருக்கிறதா தகவல் கிடைச்சிருக்கு அந்த பொண்ண எப்படியாவது கண்டுபிடிச்சு அவன் குடும்பத்தோட சேர்க்கிறதுக்கு தான் அவன் போராடிகிட்டு இருக்கான்..” என்று கூறிய சித்து சிறிது நேர மௌனத்துக்கு பிறகு மீண்டும் தொடர்ந்தான்.

            “நீ இப்போ எப்பிடி ஃபீல் பன்றன்னு என்னால உணர முடியலன்னாலும் புரிஞ்சிக்க முடியுது. நாங்க காதலிக்கிறவங்க இன்னொருத்தருக்கு சொந்தமானவங்கன்னு தெரியும் போது ரொம்பவே கஷ்டமா தான் இருக்கும். ஆனா, நா இப்போ உன்கிட்ட இத சொல்லலன்னா நீயா ஆசைய வளர்த்து அப்றம் அவன் மூலமா தெரிஞ்சிக்கும் போது ரொம்பவே கஷ்டப்படுவ. என்னோட ஃப்ரென்ட் கஷ்டப்படுறத நா விரும்பல.. நீ ரொம்பவே ஸ்ட்ரோங்கான பொண்ணு ரியா.. ஐ ஹோப் யு அன்டர்ஸ்டேன்ட்(Understand).. ” என கூறிய சித்து அவள் தலையை ஆதரவாக வருடிவிட்டு அவள் பதிலை எதிர்ப்பார்க்காது சென்று விட,

 

            ரியாவுக்கோ கண்களில் கண்ணீர் வந்து விழவா என்றவாறு முட்டிக்கொண்டு நிற்க, தரையில் பார்வையை பதித்த வண்ணம் தன் முதல் காதல் தோல்வியடைந்ததை மனம்  ஏற்றுக் கொள்ள மறுக்க  செய்வதறியாது உறைந்த சிலைப்போல் பேசா மடந்தையாக நின்றுக் கொண்டிருந்தாள்.

 

        அவளுடைய கண்களில் குளமாக கட்டியிருந்த கண்ணீர் துளியாக அவள் கன்னம் வழியே வழிந்தோட அதில் சுயவுணர்வு பெற்றவள் உயிரற்ற ஜடம் போல் தன் அறைக்கு வந்து ஆடைகளுக்கு நடுவே வைத்திருந்த அவளுடைய பெற்றோருடன் எடுத்த சிறுவயது குடும்ப புகைப்படத்தை கையில்  எடுத்து அப்பிடியே முட்டி போட்டு அமர்ந்தவள் அதை பார்த்தவாறே கதறி அழ ஆரம்பித்தாள்.

       “அம்மா.. அப்பா.. ஏன் என்னை மட்டும் இங்க தனியா விட்டுட்டு போனிங்க என்னையும் உங்ககூடவே கூட்டிட்டு போயிருக்கலாமே.. இதுக்கு மேல எந்த இழப்பையும் என்னால தாங்க முடியலம்மா..  முதல்ல நீங்க அப்றம் தியா இப்போ என்னோட சரண்.. கஷ்டமா இருக்குப்பா.. நா ஆசைப்படுற எதுவும் என்கூட இருக்க மாட்டிகிதும்மா.. நானும் உங்ககிட்டயே வந்துருறேன்மா.. ப்ளீஸ் மா… என்னால இந்த வலிய தாங்க முடியலப்பா..” 

 

     என அந்த படத்தில் இருந்த தன் பெற்றோர்களிடம் மானசீகமாக புலம்பியவாறு கதறி அழுதவளுடைய தலையை ஒரு கரம் வருடி விட நிமிர்ந்து பார்த்தவள் தன் முன்னால் நின்றிருந்தவளின் வயிற்றில் முகத்தை புதைத்து அழ ஆரம்பித்தாள்.

அவளை ஆறுதலாக அணைத்த ஆருத்ரா அவள் தலையில் தன் நாடியை வைத்து அவள் முதுகை நீவி விட்டவாறு,
         “என் ரியா ரொம்ப ஸ்ட்ரோங் ஆச்சே.. அப்போ எதுக்கு இப்பிடி அழுகுறா.. அப்போ அவளுக்கு நாங்க ஃபேமிலி இல்லையா.. ம்ம்..” என கேட்டவளை தலையை நிமிர்த்தி பார்த்த ரியா ஏதோ கூற வர, அவள் உதட்டில் விரல் வைத்து பேச வந்ததை தடுத்தவள்,
         “நீ எதுவும் சொல்ல வேணாம்.. நானும் எதுவும் கேக்க போறதில்ல பட் நீ அழுதா பார்க்க நல்லாவே இல்ல.. சோ.. ப்ளீஸ் இந்த அழுகைய நிறுத்திட்டு என் மடியில படுத்துக்கோ.. ”

 

          என ஆருத்ரா அவள் தற்போதைய மனநிலையை மாற்ற எண்ணி அவள் அழுவதற்கான காரணத்தை பேசாது அவள் அருகில் அமர்ந்து அவள் தலையை தன் மடியில் தாங்கிக் கொண்டாள். ஆருத்ராவுக்கு சித்து பேசியது நன்றாகவே கேட்டது. ரியவிடம் பேச பெல்கனிக்கு வந்தவள் சித்து பேசியதை கேட்டு ரியா எந்த மாதிரியான மனநிலையில் இருப்பாள் என தெரிந்தே அவள் பின்னால் அவள் அறைக்கு வந்தாள்.

  

      ஆருத்ரா மடியில் படுத்த ரியாவுக்கு முதன் முதலில் ஆருத்ரா தன்னை மடியில் தாங்கிய நிகழ்வே நியாபகத்துக்கு வந்தது.

 

     தனது  பத்து வயதிலே ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட ரியா நிலத்தில் விரிக்கப்ட்ட பாயில் சுருண்டு படுத்துக் கொண்டு “பாட்டி.. தாத்தா.. ” என அழுதுக் கொண்டிருக்க கயலுடன் விளையாடிக் கொண்டிருந்த பத்து வயது ஆருத்ரா ரியாவை பார்த்து கயல் காதில் ஏதோ கிசுகிசுத்து கயலுடன் அவள் அருகில் சென்று அமர்ந்தாள். ரியாவோ நிமிர்ந்து இருவரையும் பார்த்து விட்டு முகத்தை புதைத்துக்கொண்டு  மீண்டும் அழ அவள் தலையை லேசாக வருடி விட்டாள் கயல்.


       “எனக்கு என் பாட்டிக்கிட்ட போகனும்..” என தேம்பி தேம்பி அழுதவளை புரியாமல் பார்த்த ஆருத்ராவுக்கு தியா தான் அழுதால் மடியில் படுக்க வைத்து ஆறுதல் கூறுவது நினைவில் வர அவள் தலையை வலுக்கட்டாயமாக தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டாள்.


ரியாவோ தன் தலையை நிமிர்த்த,
           “என் மடியில படுத்துக்கோ அழுக மாட்ட.. நாங்க உன்கூடவே இருக்கோம்.. பயப்புடாத..” என தனக்கு தெரிந்த ஆறுதலை அந்த குட்டி ஆருத்ரா கூற, குட்டி கயலும் “ஆமா..ஆமா..” என கூறியவாறே அவள் தலையை வருட அந்த சுகத்திலே உறங்கிப் போனாள் ரியா.

          அன்றைய நாளை நினைத்துப் பார்த்தவள் அன்று கவலையை மறந்து எப்பிடி தூங்கினாளோ இன்றும் நடந்ததை மறந்து அவள் வருடலில் சுகமாக தூங்க ஆம்பித்தாள் அந்த மங்கை.

      ரியா உறங்கியதும் அவளை படுக்கையில் சரியாக படுக்க வைத்து போர்த்திவிட்டு அறையிலிருந்து வெளியே வந்த ஆருத்ரா தன் தொலைபேசியை பார்க்க அதில் ஒருவரிடமிருந்து வந்திருக்கும் செய்தியை பார்த்து அதிர்ச்சியாகி கோபம் உச்சத்தை தொட உடனே  அந்த வெளிநாட்டு எண்ணிற்கு அழைப்பை அவசரமாக மேற்கொண்டாள்.

மறுபுறம் அழைப்பை ஏற்ற அந்த நபரோ,
          “சொல்லு ருத்ரா இப்போ என்ன பன்ன போற ” என கேட்க,

          “அவன எங்க பார்த்த கௌத்தம்..” என கொபம் பொங்க கேட்டாள் ஆருத்ரா.

அவள் குரலிலேயே அவள் எந்தளவிற்கு கோபத்தில் இருப்பாள் என்பதை புரிந்துக் கொண்டவன்,
          “வொஷிங்டன் (Washington) ” என சொல்ல,

        “சாவுக்கு பயந்தே போயிருப்பான்.. ச்சே.. அவன எப்பிடியாவது இங்க வரவைக்கனும்..” -ஆருத்ரா இறுகிய குரலில் சொல்ல,

அவள் கோபத்தை உணர்ந்து சிரித்தவன்,
       “ரிலாக்ஸ்.. எதுக்கு இவ்வளவு டென்ஷன்.. ஆமா.. அந்த கிரிஷ்ஷோட கதைய எப்ப முடிக்கிறதா ப்ளான்..”
-கௌத்தம்

 

     “இன்னும் இரண்டே நாள்ள..” -ஆருத்ரா

 

     “அவன என்ன பன்னனுமோ அத நீங்க பன்னுங்க.. ஆர்னவ் அ நா பாத்துக்குறேன்.. உங்க ஆசைப்படி நீங்க ஸ்கெட்ச் போட்ட மாதிரி தான் அவன வச்சி செய்ய போறிங்க.. சோ.. நிதானமா இரு ருத்ரா..” – என கௌத்தம் சொல்ல,

 

    “அவன கவனிச்சிக்கிட்டே இரு.. அவனோட நெருங்கி பழக பாரு.. அவன இங்க வரவைக்க உன்னால என்ன பன்ன முடியுமோ அத பன்னு.. நினைச்சா அவன அங்க வச்சே போட்டுத் தள்ள முடியும் ஆனா, அவன் இங்க வந்தே ஆகனும்.. ” -ஆருத்ரா தீவிர குரலில் சொல்ல,

 

    “சரி அத விடு.. நா ஒன்னு கேள்விப்பட்டேன் அது உண்மையா..” என நக்கல் தொனியில் கௌத்தம் கேட்க,

அதில் குழம்பியவள்,
      “என்ன உளர்ற..என்ன கேள்விபட்ட.. எது உண்மையா..” என ஆருத்ரா கடுப்பாக கேட்க,

 

        “உழவுத்துறையிலிருந்து தகவல் வந்திச்சு.. நீங்களும் பூ பறிக்க ஆரம்பிச்சிட்டீங்களாமே.. நிஜமாவா.. ” – என கௌத்தம் புதிராக பேச,

அவன்  எதை சொல்ல வருகிறான் என்பதை உடனே புரிந்து கொண்டள்,
        “உன்கிட்ட சொன்னது எந்த ப்ளாக் ஷீப்னு எனக்கு நல்லாவே தெரியும்.. அந்த ஆட்டை நா அப்றம் அடிச்சு குழம்பு வச்சிக்கிறேன்..” என கயல் தான் அந்த ஆடு என கண்டுபிடித்த ஆருத்ரா கயலை மனதில் வறுத்தவாறு பல்லை கடித்து கொண்டு சொல்ல,

 

     “ஹாஹாஹா… அப்பிடியா.. அப்போ அது உண்மைதான் போல..” என சிரித்துக் கொண்டே கூறியவன் பின் தீவிரமான குரலில்,
       “ருத்ரா யாரு என்னன்னு கூட தெரியாது அட்லீஸ்ட் அவங்க பேர தவிர அவங்க வீடு எங்க இருக்குன்னாவது சொல்லிருக்காங்களா..  திடீர்னு வீடியோவ வச்சி மிரட்டி உங்ககூட சேர்ந்திருக்காங்க அவங்கள பத்தி எதுவுமே தெரியாதப்போ எனக்கு இது சரியா படல.. ” என கௌத்தம் சொல்ல,

 

       “கௌத்தம் நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல.. என்ட் அவங்க ரொம்ப நல்லவங்க அவங்க சொல்லலன்னாலும் எங்க சேஃப்காக  நாங்க அவங்க வீடு, வேலை பாக்குற இடம் எல்லாமே கண்டு பிடிச்சிட்டோம்.. சந்தேகப்படுற மாதிரி எதுவும் இல்ல.. அவங்க லைஃப்லயும் ஏதோ நடந்திருக்கு.. அதான்..” என ஆருத்ரா கௌத்தமிற்கு புரிய வைக்க முயல,

 

      “ருத்ரா யாரையும் நம்பாத உன்னோட பெரிய வீக்னெஸ்ஸே அதான்.. அவங்களோட இருக்கிற உறவ ஒரு லிமிட்குள்ள வச்சிக்கோங்க உங்க லைஃப் அ பாதிக்காம பாத்துக்கோங்க.. அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும்..  தட்ஸ் இட்.. டேக் க்யார்(Take care).. ”

       என கூறியவன் அழைப்பை துண்டிக்க ரியாவின் அறையை ஒரு தரம் திரும்பி பார்த்தவள் பெருமூச்சு விட்டவாறு தனதறையை நோக்கி சென்றாள்.

❤தொடரும்..❤
———————————————————–

         Friends innaiki ud epidinnu marakama unga comments a solluga.. edhuwum mistakes irundha enaya mannichu😁.. and thanks for ur support guyzz..❤❤
  

❤ZAKI❤

        

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *