❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤
❤அத்தியாயம் 29❤
எவ்வளவு வேகமாக போக முடியுமோ அவ்வளவு வேகமாக வண்டியை செலுத்தியவள் தன் பின்னால் ஒரு ஜீவன் அவள் வேகத்துக்கு பயந்து அவள் வண்டி ஓட்டுவதை விழி விரித்து பார்ப்பதை கவனிக்காது அவள் பாட்டிற்கு ஓட்டிக் கொண்டு செல்ல ஹரியோ ஒரு கட்டத்தில் தான் பிடித்திருந்த பிடியை விட்டுவிட்டு அவள் இடுப்பை பிடித்துக் கொண்டான்.
அவன் தொடுகையில் வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தியவள் திரும்பி அவனை பார்க்க அவனோ எதுவும் அறியாத பிள்ளை போல்,
“என்னாச்சு ரீ.. ஏன் வண்டிய நிறுத்துன..” என கேட்க,
ரியா தான் ‘இவன் தெரிஞ்சி நடிக்கிறானா.. இல்ல.. தெரியாம கேக்குறானா..’ என நினைத்து குழம்பியவாறு அவனை பார்த்துக் கொண்டிருக்க அவனும் எந்த வித சலனமும் இல்லாமல் அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் பார்வையின் வீச்சை தாங்க முடியாது சட்டென முன்னாடி திரும்பியவள் வண்டியை ஸ்டார்ட் செய்ய போக திடீரென ஒருவன் முன்வந்து வண்டியை பிடித்த வண்ணம்,
“ப்ரோ.. ஆஃப்டர் லோங் டைம் ஹான்..” என கத்த ரியாவோ திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
ஹரி அவனை பார்த்து வண்டியை விட்டு இறங்கி அவன் முதுகிலே இரண்டு போடு போட்டு,
“காலைலயே வரேன்னு தானேடா சொன்ன அறிவு கெட்டவனே.. உன் தங்கச்சி உன் மேல செம காண்டுல இருக்கா..” என திட்ட,
அவனோ,
“ஐய்யோ ப்ரோ.. நா என்ன பன்னுவேன்.. ட்ரைன்ன மிஸ் பன்னிட்டேன்.. அதுக்கப்றம் நாயா பேயா அலைஞ்சி வண்டி பிடிச்சு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆகிட்டு..” என சலித்துக் கொண்டு கூற, ரியா தான் அவர்கள் இருவரையும் புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
எதேர்ச்சையாக ரியாவின் புறம் திரும்பியவன்,
“வாவ்வ்.. ஊருக்குள்ள வந்த உடனே இப்பிடி ஒரு தரிசனமா..” என ரியாவை பார்த்துக் கொண்டே சொல்ல அவன் கூற்றில் ரியா ‘க்ளுக்’ என சிரித்து விட்டாள்.
அவனை கடுமையாக முறைத்த ஹரி ரியா சிரிக்க அவளையும் முறைத்துக் கொண்டு,
“இது என் தம்பி.. பேரு.. ” என சொல்ல வந்தவனை தடுத்தவன்,
“ப்ரோ நானே என்னை இன்ட்ரோ பன்னிக்கிறேன்..” என கூறி ரியாவின் புறம் கை நீட்டி,
“ஐ அம் விஷ்வா L.L.B ஹரி ப்ரோவோட சித்தி பையன்..” என சொல்ல,
ரியாவோ புரியாமல், “அதென்ன LLB” என கேட்க,
ஹரியோ கடுப்பாக, “அது சார் வாங்கின பட்டம்.. பேரோட சேர்த்து சொல்லி தான் துரை இன்ட்ரோ பன்னிக்குவாரு..” என கூற,
ரியாவும் அவனோடு கை குலுக்கி அவனை போலவே, ” ஐ அம் ரியா B.Tech ” என சொல்ல,
விஷ்வாவோ, “பார்ர்ராரா.. அதுக்குள்ள நம்ம சங்கத்துல இணைஞ்சிட்டாங்க.. இஃப் யு டோன்ட் மைன்ட் என்னை வீட்ல ட்ரோப் பன்ன முடியுமா..” என கேட்க,
ஹரியோ, “நோ.. நோ.. நாங்க கல்யாண வேலையா அர்ஜெர்ன்ட்டா போக இருக்கு..” என வாயுக்கு வந்த பொய்யை உரைக்க,
ரியாவோ, “அச்சோ.. அப்பிடி எல்லாம் இல்லை விஷ்வா நீங்க வாங்க..” என சொல்ல,
அவள் பின்னால் ஓடிச் சென்று அமர்ந்த விஷ்வா, “இந்த வாங்க போங்க ஃபோர்மலிடீஸ் (Formalities) எல்லாம் வேணாமே.. ஜஸ்ட் கோல் மீ விஷ்..” என சொல்ல,
அதில் சிரித்தவள் ஹரியின் புறம் திரும்பி,
“சரண் காசு வச்சிருக்கீங்களா..” என கேட்க,
அவனோ எதுவும் செய்ய முடியாத தன் இயலாமையில் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு, ” ஏன்ன்..” என இழுத்து கேட்க,
“இல்ல.. ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு வந்துருங்க பாய்ய் சரண்..” என ரியா கை காட்டிய வண்ணம் வண்டியை ஸ்டார்ட் செய்து பறக்க,
பின்னாலே விஷ்வாவும்,
“ப்ரோ டாடா… வீட்டுல பார்க்கலாம்..” என கத்திக் கொண்டே சென்றான். பாவம் ஹரி தான் நடுரோடு என்றும் பார்க்காமல் தன் தலை முடியை உச்சகட்ட கடுப்பில் தானே பிய்த்துக் கொண்டான்.
———————————————————————
அடுத்தநாள் காலை,
” டேய்ய்.. எல்லாரும் கல்யாண வேலையா வெளில போயிட்டாங்க.. இப்போ நாமளும் அந்த பிசாசுங்களும் தான் வீட்ல இருக்கோம்.. இப்போ மட்டும் நாம எதுவுமே சமைக்கல அதுங்க நம்மளையே சாப்பிட்டாலும் சாப்பிட்டுறுங்க..” என ஹரி புலம்ப,
“சனியனே உங்களால தான் டா எல்லாம்.. வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்காம சமைக்க போனவங்களையும் ‘அம்மா நீங்க போங்க நாங்க பாத்துக்குறோம் சமையல் கலைல நாங்க ச்செஃப்(chef) தாமோதரனோட சிஷ்யனுங்கன்னு’ ஏதேதோ பேசி அவங்கள அனுப்பி விட்டுட்டு இப்போ பெக்க பெக்கன்னு முழிச்சிக்கிட்டு இருக்கீங்க..” என செய்வது எல்லாம் செய்து விட்டு திருட்டு முழி முழித்துக் கொண்டிருந்த ஆர்யன் ஆதியை சித்து காய்ச்சி எடுக்க,
“என்ன டா உங்க பிரச்சினை.. அம்மா வெளில போற அவசரத்துல அவசரமா சமைக்க போனாங்க.. வீட்ல இப்போ வேற எந்த பெரியவங்களும் இல்லை.. வீட்ல இத்தனை பொண்ணுங்க இருந்தும் ஒன்னு கூட உறுப்படி இல்லை.. அதான் நாங்க பாத்துக்குறோம்னு சொன்னோம்..” என ஆர்யன் சொல்ல,
“ஆமா.. ஆமா.. பாரு நாங்க ஆறு பேரு இருக்கோம்.. அசால்ட்டா எவ்வளவு வேலை பன்னிருப்போம்.. இதெல்லாம் நமக்கு சல்ப மேட்டரு டா.. தட்டுறோம் தூக்குறோம்..” என ஆதி சொல்ல, ‘எது தூக்குறோமா..’ என்றவாறு எல்லாரும் அவனையே ஒரு மாதிரியாக பார்க்க,
அப்போது தான் சொன்னதை உணர்ந்த ஆதி, ‘ வர வர அந்த ராட்சசி மாதிரியே பேச கத்துகிட்டோம்.. நேரம் டா..’ என தன் தலையிலேயே தானே அடித்துக் கொண்டு “சமைக்கிறோம்.. சாப்பிடுறோம்..” என திருத்தி சொல்ல மற்ற ஐவரும் ஒரு பெருமூச்சை விட்டவாறு தலையிலேயே கை வைத்துக் கொண்டனர்.
“ப்ரோ வெட்டியா பேசுறதுக்கு பதில் என்ன பன்றதுன்னு யோசிங்க..” என விஷ்வா கூற,
“எடு டா அந்த கடாய.. எடு டா அந்த கரண்டிய..எடு டா அந்த ரவைய..” என ஆதி ஆவேசமாக கத்த, விஷ்வாவோ ‘பயபுள்ள ஏதோ பெருசா செய்ய போகுது..’ என மனதில் நினைத்தவாறு அவசரமாக அவன் கேட்டதை எடுத்துக் கொடுத்தான்.
“என்ன டா பன்ன போற..” என ஆதியின் சமையல் திறமையை பற்றி தெரிந்த அபி சந்தேகமாக கேட்க,
“வேறென்ன.. ரவை உப்புமா தான்..” என சொல்ல, “ஈஸ்வரா..” என நெஞ்சில் கை வைத்த அபியின் கால்கள் தானாகவே இரண்டடி பின்னால் நகர்ந்தது.
ஓடி வந்து அவனிடமிருந்து பொருட்களை பறித்தெடுத்த ஆர்யன்,
“தெய்வமே.. நீ எதுவும் பன்ன வேணாம்.. அந்த பசைய சாப்பிடுறதுக்கு பதிலா நா ஒரு நல்லா ப்ளான் வச்சிருக்கேன்..” என கூற,
“என்ன டா என்ன..” என எல்லாரும் ஆர்வமாக கேட்க,
“எடு டா அந்த மேகிய..” என ஆர்யன் சொல்ல மற்ற ஐவருமே ‘ஙே’ என அவனை புரியாமல் பார்த்தனர்.
“அறிவு கெட்டவனே அது வீட்டுக்கு வந்திருக்கிற சின்ன பசங்களுக்கு வாங்கி வச்சது டா..” என ஹரி சொல்ல,
“எனக்கு வேற வழி தெரியல கோபால்..” என ஆர்யன் பாவமாக முகத்தை வைத்து கூற அவனை முறைத்துக் கொண்டே மேகி பேக்கட்டுக்களை எடுத்துக் கொடுத்தான் ஹரி.
அடுப்பில் தண்ணீர் வைத்து மேகியை போட்டவன் கரண்டியால் அதை கிளறிக் கொண்டே,
“உன் சமையலறையில் நான் உப்பா சக்கரையா..” என பாட,
அவனருகில் சமையலறை மேடையில் சாய்வாக இருந்து அவனை முறைத்துக் கொண்டிருந்த அபி “என்னது இது..” என ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க,
“ஹாஹா இது தெரியலயா.. பாட்டு..” என ஆர்யன் நமட்டு சிரிப்புடன் சொல்ல,
“செருப்பு.. முதல்ல ஸ்டவ்வ ஓன் பன்னு டா..” என அபி கத்த, அசடுவழிந்துக் கொண்டே ஓன் செய்தவன் சமத்தாக மேகியை செய்ய ஹரியோ அவனுக்கு ஒரு அழைப்பு வர வெளியே சென்றிருந்தான்.
“என்ன டா இங்க விளையாடுகிட்டு இருக்கீங்க.. உங்க விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லையா..” என்ற கயலின் குரலில் மற்ற ஐவரும் திடுக்கிட்டு திரும்ப அங்கு சமையலறை வாயிலில் தோழிகள் ஐவருடன் ஹரிணியும் அவர்களை விதிர்த்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஏய்ய்.. எங்கள பார்த்தா விளையாடுற மாதிரியா தெரியுது.. சமைச்சிக்கிட்டு இருக்கோம்..” என சித்து சொல்ல,
“எது சமைக்கிறீங்களா.. என்ன சமைக்கிறீங்க.. ” என்ற ஆருத்ரா ஆர்யன் கரண்டியை வைத்து கிளறிக் கொண்டிருந்த சட்டியை எட்டிப் பார்க்க
அதில் மேகியை பார்த்தவள் திரும்பி ஐவரையும் முறைத்து,
“இதுக்கு பேர் தான் உங்க ஊருல சமையலா..” என கேட்டு தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்கும் ஆர்யன் புறம் திரும்பி,
“சார்ர்.. கொஞ்சம் உங்க சமையலையும் பார்த்தா நல்லா இருக்கும்.. தண்ணி வத்தி இருக்குறதும் சட்டில ஒட்டிக்க போகுது..” என கிண்டல் செய்ய ஆர்யனோ “ஹிஹிஹி..” என இழித்து வைத்தான்.
“அந்த மேகிய அப்பிடியே ஓரமாக வச்சிருங்க நாங்க சமைக்கிறோம்..” என ரியா சொல்ல,
“வாவ்வ்.. டார்லிங் நீ சமைப்பியா..” என விஷ்வா குதூகலமாக கேட்க,
“உங்க டார்லிங்கும் நல்லா பன்னுவா.. நாங்களும் நல்லாவே சமைப்போம்.. முதல்ல இடத்தை காலி பன்னுங்க..நாங்க பாத்துக்குறோம்..” என துர்கா கறாராக சொல்ல,
“நோ..நோ.. எல்லாரும் சேர்ந்தே பன்னலாம்.. நாங்க வேணா உங்களுக்கு சின்ன சின்ன ஹெல்ப் பன்றோம்..” என சித்து சொல்ல,
“வாவ் சூப்பர் அண்ணா.. ஜோலியா இருக்கும்.. எல்லாரும் சேர்ந்தே பன்னலாம்..” என ஹரிணி குதூகலிக்க, தோழிகளோ புருவத்தை உயர்த்தி பெருமூச்சு விட்டவாறு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு வேலையை ஆரம்பிக்க ஆடவர்களோ அவர்களை சீண்டிக் கொண்டும் கேலி செய்துக் கொண்டும் உதவி பன்னுகிறேன் பேர்வழி என்று ஒருவழிப்படுத்தி எடுத்தனர்.
அவசரத்திற்கு ரொட்டியும் அதற்கு தேங்காய் சம்பலும் செய்ய ஒரு மணி நேரத்தில் முடிக்க வேண்டிய வேலை இவர்ளுடன் அரட்டை அடித்து இரண்டு மணி நேரம் ஆகியது. பெண்கள் சமையலறையை க்ளீன் செய்துக் கொண்டிருக்க, ஆண்கள் உணவுத் தட்டுக்களை டைனிங் டேபிளில் அடுக்கவும் ஹரி ஒரு ஆடவனுடன் வரவும் சரியாக இருந்தது.
உள்ளே வந்த ஹரி,
“ருத்ரா யாரு வந்திருக்காங்கன்னு வந்து பாருங்க..” என ஹோலிலிருந்து கத்த,
சமையலறையிலிருந்து வேகமாக வெளியே வந்த ருத்ரா, “கௌத்தம்..” என முகம் முழுக்க சிரிப்புடன் அவனை ஓடிச் சென்று அணைக்க அவனும் “ருத்ரா..” என்று புன்னகையுடன் கூறியவாறே அணைத்துக் கொண்டாள்.
இவ்வளவு நேரம் யாரென்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த ஆர்யனோ ஆரு கௌத்தமை அணைக்கவும் தன் இடது பக்க நெஞ்சில் ‘டொம்ம்..’ என்ற சத்தத்தில் ஏதோ வெடிப்பது போன்றே உணர்ந்தான்.
அப்போது பின்னாடியே வந்த கயலும்,
” ஹே.. கௌத்தம்..” என கூறியவாறு ஓடிச்சென்று அவன் தோளில் அடிக்க,
அவனும், “அவுச்.. உன்ன..” என்றவாறு கயலின் சுருண்ட கூந்தலை பிடித்து இழுக்க அங்கு சிரிப்பலை தான். ரியா, துர்கா, ஆதிரா கௌத்தமை இதற்கு முன் நேரில் பார்த்தில்லாவிடினும் தங்களுக்கு உதவி செய்த அவனுடன் தொலைபேசியில் பேசி பழக்கம் ஏற்பட்டதால் அவர்களும் அவனுடன் அரட்டை அடித்தனர்.
இங்கு ஆர்யனுக்கு தான் அவன் ஆருத்ராவின் தோள் மேல் கை போட்டு பேசுவதை பார்க்க பார்க்க பத்திகிட்டு எரிந்தது.அதுவும் அவனருகில் இருந்த அபி சும்மா இல்லாமல்,
“யார்ர்ரா இவன்.. வெள்ளைகாரன் மாதிரி சும்மா டக்கரா இருக்கான்..” என சொல்ல ஆர்யனோ திரும்பி “டக்கரு…” என கேட்டு வைத்து முறைத்த முறைப்பில் ஏதோ சரியில்லை என்று புரிந்துக் கொண்டு வாய்க்கு பூட்டு போட்டு விட்டான் அபி.
“என்ன சொல்லாம கொள்ளாம.. அதுவும் இங்க எப்பிடி..” என கயல் ஆச்சரியமாக கேட்க,
“உனக்கு ஸப்ரைஸ்ஸா இருக்கட்டுமேன்னு ருத்ரா தான் சொல்ல வேணான்னு சொன்னா.. என்ட் உங்க ஃப்ரென்ட் ஹரி தான் இங்க வர ஹெல்ப் பன்னாரு.. ரொம்ப தேங்க்ஸ் ப்ரோ..” என கௌத்தம் சொல்ல,
ஹரியோ, “பரவாயில்லை ப்ரோ.. நம்ம கலாச்சாரத்த பத்தி தெரிஞ்சிக்க உங்களுக்கு ரொம்ப ஆர்வம் இந்தியா வரனும்னு இருக்கீங்கன்னு ருத்ரா சொன்னாங்க.. பட் நீங்க வர நேரமா பார்த்து இவங்க இங்க வந்துட்டாங்க.. அதான் உங்கள இங்கேயே வர சொல்ல சொன்னேன்.. உங்களுக்கும் எங்க ஊர சுத்தி பார்த்தாப்ல இருக்கும்.. எங்க வீட்டு கல்யாணத்துல கலந்துகிட்ட மாதிரியும் இருக்கும்.. எங்க ஃப்ரென்ட்ஸ்ஓட ஃப்ரென்ட் எங்களுக்கும் ஃப்ரென்ட் தானே.. இல்ல டா..” என கூறியவாறு ஹரி தன் நண்பர்கள் புறம் திரும்ப,
அபியோ, ” செத்தான்யா மனோகர் மகனு.. ” என மனதில் நினைத்தவாறு வெளியே போகுமாறு ஹரியை கண்களால் சைகை காட்ட,
ஆர்யனோ ஒரு தக்காளியை கைகளால் நசுக்கியவாறு, “அவன கூட்டிட்டு வந்த நல்லவன் நீ தானா..” என்று அவனை மூக்கு விடைக்க முறைக்க, அவன் முறைத்ததில் அவனையும் ருத்ராவையும் மாறிமாறி பார்த்தவனுக்கு அப்போது தான் புரிய ‘இன்னைக்கு நமக்கு சங்கு தான் போல..’ என நினைத்து ஆர்யனின் புறம் பார்வையையே திருப்பவில்லை ஹரி.
“ஹி இஸ் கௌத்தம் எங்க ஃப்ரென்ட் ஃப்ரொம் அமெரிக்கா..” என சொல்லி கௌத்தமை எல்லாருக்கும் ருத்ரா அறிமுகப்படுத்த அவனோ எல்லாரையும் பார்த்து “ஹாய்..” என பொதுவாக கூறிவிட்டு ஆர்யனை கடந்து இரண்டடி முன்னால் வைத்தவன் பின் ஏதோ தோண அதே இரண்டடி பின்னால் வைத்து ஆர்யன் முன் வந்து கை நீட்டி,
“ஆர்யன் ரைட்.. நைஸ் டு மீட் யு..” என சிரிப்புடன் சொல்ல,
ஆர்யனோ கஷ்டப்பட்டு வரவழைக்கப்பட்ட புன்னகையுடன்,
“யெஸ் மிஸ்டர் கௌத்தம்.. நைஸ் டு மீட் யு டூ..” என கூறியவாறு நீட்டிய கரங்களுடன் கையை குலுக்க,
ஆர்யனின் போலி புன்னகைக்கு பின்னால் உள்ள முறைப்பை கௌத்தம் கண்டுகொண்டானோ என்னவோ ருத்ராவை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் உள்ளுக்குள் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு, “வில் சீ..” என சொல்லி விட்டு ருத்ராவுடன் அறையை நோக்கி செல்ல,
ஆர்யனுக்கோ பொறாமை உச்சத்தை தொட்டது. ஆனால் ஆருத்ராவோ ஆர்யனை கண்டும் காணாதது போல் இருந்து கொண்டு தன் நண்பனை நீண்ட நாட்கள் கழித்து நேரில் பார்த்த சந்தோஷத்தில் ஆர்யனையும் வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.
❤தொடரும்..❤
———————————————————————
Thanks for ur support guys..❤❤
and keep supporting me😍
❤ZAKI❤
