நந்தனின் கண்ணம்மா
காரில் ஏறியதிலிருந்து ஜன்னல் பக்கமாக சாய்ந்தவள் தான் அதன் பிறகு அவன் என் பக்கம் அவள் திரும்பவே இல்லை. சிறிது நேரம் கழித்து வண்டி நின்றதும் அபார்ட்மெண்ட் வந்துவிட்டது தெரிய எதும் பேசாமல் இறங்கியவளை பார்த்து அவனும் இறங்கி நின்றான். அவள் அவனை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டாள். வீட்டிற்குள் நழைந்ததும் விஷுக்கு கால் பண்ணினாள். அவன் எடுத்ததும் சரமாரியாக திட்டியவளை கண்டுகொள்ளாமல் என்ன நிஷ் கால் பண்ணிருக்க என்று கேட்டதும் மறுபக்கம் இருந்தவளுக்கு பற்றி கொண்டு வந்தது. டேய் எரும மாடு என்னமோ பெரிய இவன மாதிரி கால் பண்ணு வரே சொன்ன கால் கூட எடுக்க முடியலையா இன்னும் பத்து நிமிஷம் தான் அதுக்குள்ள வர இல்லனா என்ன பண்ணுவேன்னு தெரியாது என்று சொல்லிவிட்டு வைத்து விட்டாள். இந்த பக்கம் இருந்தவனுக்கு அப்பாடி என்று இருந்தது. அய்யோ நம்ம பாடே இப்படி இருக்கு மாம்ஸ் என்ன ஆனார் நு தெரியலையே. அபார்ட்மெண்ட் கு வந்தவன் வெளியில் நின்றிருந்த ரிஷியை கண்டு என்ன மாம்ஸ் அடி பலமோ என்றான்.வாடா நல்லவனே உன்ன என்ன சொன்னேன் அவள ஒழுங்கா பாத்துக்க சொன்னா அவயெப்படி ஆய்யிட்டா பாரு டா மனசே தாங்களடா என் கண்ணம்மா எப்படி இருந்தவள் இப்படி ஆயிட்டா. அதான் நீங்க வந்துட்டீங்கல்ல எல்லாம் சரியாகிவிடும். இருங்க மாம்ஸ் நா போய் பாக்குறேன். கதவை தட்டியதும் திறந்தவளை கண்டு எதுக்கு வர சொன்ன என்று ஒன்னுமே தெரியாதது போல் கேட்டான். அப்போது அவள் எதோ சொல்ல வருவதற்குள் காலிங் பெல் அடித்தது.அய்யோ இந்த மாம்ஸ் ஏன் அவரே வந்து இவக்கிட்ட சிக்குறாரு என்று நினைத்துகொண்டு இருந்தவனை போய் கதவ தெற என்று சொன்னாள் அய்யய்யோ இன்னைக்கு அடி வாங்காம போக முடியாது போல என்று நினைத்து கொண்டு கதவைத் திறந்தான்.
