நந்தனின் கண்ணம்மா
நந்தனின் கண்ணம்மா 9:
பொள்ளாச்சி அருகில் உள்ள அய்யம்பாளையம் தான் இவர்களின் சொந்த ஊர். பெரியவீட்டுகாரர் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அவரது பெயர் கந்தசாமி அவரது மனைவி செண்பகம் இவர்களுக்கு ஒரு மகன் சுதர்ஷன் மற்றும் ஒரு மகள் கவிநிலா. அந்த ஊரிலேயே உள்ள சோமசுந்தரம் மகனை காதலிக்கிறேன் என்று தன் தந்தையிடம் கவிநலா கூறியதும் அவர் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் வந்து பெண் கேட்க சொல் என்றார். சோமசுந்தரம் மகனை பற்றி அவருக்கும் தெரியும் நல்ல பையன் பொள்ளாச்சியில் உள்ள இரண்டு மில்களை பொறுப்பாக பார்த்துக் கொள்கிறான் வேற என்ன வேண்டும் என்று தான் சம்மதம் சொன்னார்.சுந்தரதிற்கு ராஜா என்ற ஒரு மகன் மற்றும் மகள் நிராந்திரா மட்டுமே.அவரது மனைவி இரு வருடங்களுக்கு முன்பு புற்று நோய்க் காரணமாக இறந்து விட்டார்.கவி ராஜாவை சந்தித்து தந்தை பெண் கேட்க வர சொல்கிறார் என்றதும் இவனும் தன் தந்தையுடன் பேசி கூட்டி வருவதாக சொன்னான். அவன் தனது தந்தையிடம் சொன்னதும் அவரும் பெண் கேட்க வந்தார். அவர்களை வரவேற்று உபசரித்து பேச தொடங்கியதும் எனக்கு ஒரு பெண் இருக்கிறாள் அவள் பெயர் நிரந்திரா அவளுக்கு கல்யாணம் முடித்து விட்டு ராஜா கு பண்ணலாம்னு இருந்தேன் ஆனா அவன் உங்க பொண்ண விரும்புரதா சொன்னான் உங்களுக்கும் ஒரு மகன் இருக்கான் இது தான் என் பொண்ணு ஃபோட்டோ பார்த்து விட்டு முடிவு சொல்லுங்க உங்களை கட்டாய படுத்தல உங்க மகனுக்கு பிடித்தால் இரண்டு திருமணமும் ஒரு சேர நடத்தலாம் இல்லையென்றால் என் மகளின் திருமணத்தை முடித்து விட்டு ராஜா வின் கல்யாணத்தை நடத்தலாம் என்று சொன்னார். சுதர்ஷினிடம் ஃபோட்டோ காட்டியதும் மறுக்க காரணம் எதும் இல்லை என்பதால் அவனும் பெண்ணை மணந்து கொள்கிறேன் என்று சொன்னதால் நால்வருக்கும் இனிதே திருமணம் நடைபெற்றது. கவி ராஜா இவர்களின் புதல்வன் தான் ரிஷினந்தன். நந்தனுக்கு இரண்டு வயதாகியதும் தங்கள் குலதெய்வ கோவிலில் மொட்டையடித்து காது குத்துவதரகாக அனைவரும் புறப்பட்டனர். ராஜா கவி சுந்தரம் ஒரு காரிலும் சுதர்ஷன் குடும்பம் ஒரு காரில் வந்தனர். சுதர்ஷன் நிரந்திறா விற்கு இன்னும் குழந்தை இல்லை என்றதால் ரிஷி என்றால் இருவருக்கும் பிரியம். அதிகமாக செல்லம் கொடுப்பதால் அவனும் அத்தை அத்தை என்று இவளிடம் தான் இருப்பான். கோவில் சென்று வழிப்பட்டுவிட்டு வரும் போது நா அத்தை கூட போறேன் என்று சொல்லி சுதர்ஷன் காரில் ஏறி கொண்டான். வரும் வழியில் ராஜாவின் கார் ப்ரேக் பிடிக்காமல் போக மரம் ஒன்றில் மோதி நின்றது அந்த காரில் இருந்த சுந்தரம் ராஜா கவி மூவரும் அந்த இடத்திலேயே உயிரை விட்டனர்.
