நந்தனின் கண்ணம்மா
நந்தனின் கண்ணம்மா 7:
கனி எழுந்து கொண்டு அவனை பார்த்து வாங்க சாப்ட போலாம் என்றாள். அவனும் ஒன்றும் சொல்லாமல் வந்து அமர்ந்தான். இருவருக்கும் சாப்பாடை பரிமாறி அவள் சாப்பிட ஆரம்பித்தாள். இவன் சாப்பாடை அலைந்து கொண்டு இருந்தான் அதை கண்டு சாப்பிடுங்க மாமா என்றாள். அவன் அதன் பின்னர் சாப்பிட்டு எழுந்ததும் அனைத்தையும் சுத்தம் செய்து அடுக்கி விட்டு வந்தாள். அவன் எங்கே என்று பார்த்தாள் அவன் பால்கனியில் நின்று வானத்தை வெறித்து கொண்டிருந்தான். அதை கண்டு ஐய்யா பீல் பன்றாரு போல ஹம் பண்ணட்டும் பண்ணட்டும் என்று அவள் போன் எடுத்து கொண்டு ஹாலில் இருந்த சோஃபாவில் உட்கார்ந்து விஷ்ணு க்குக் கால் செய்தாள். முதல் ரிங்கிலே எடுத்தவனை இதெல்லாம் உன் வேலை தான்னு தெரியும் .அய்யோ கண்டு பிடுசுட்டாளே இவ கைல்ல மாட்டுனா காலி பண்ணிட்டு தான் மறுவேலை பார்ப்பாள் என்று நினைத்து கொண்டு இருந்தவனை கலைத்து நான் நாளைக்கு ஊருக்கு போறேன் என்றதும் இப்போவாச்சும் இந்த முடிவு எடுத்தியே என்று மனதில் நினைத்தவன் ஓகே கனி பாத்து போய்ட்டு வா என்றான். நாளைக்கு மார்னிங் நீ இங்க வா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்றவள் ஓகே பை என்று கட் பண்ணி விட்டு தன் மாமனை காண சென்றாள். இங்கு விஷ்ணு என்ன காரணம் சொல்லி இவகிட்ட இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தபடி இருந்தான்.
இங்கு தன் மாமனை காண வந்தவள் அவனை பின்னால் இருந்து அணைப்பது போல் நின்று கொண்டு வானத்தில் அப்படி என்ன தான் பார்த்து கொண்டிருந்தான் என்று பார்த்தாள். பின்னால் அவள் மூச்சுக்காற்று பட இவன் அவளை திரும்பி பார்க்கும் போது இவளும் அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள். அந்த கண்களில் தொலைய விரும்பிய மனதை அடக்கி கொண்டு போய் தூங்கு கனி என்றான். நீங்களும் வாங்க மாமா என்றவள் அவனுக்கு ஒரு தலையணையும் போர்வையும் எடுத்து கொடுத்தாள். அதனை வாங்கி கொண்டு கீழே படுக்க போனவனை மாமா கட்டில்ல படுக்களாம் இடம் நிறையவே இருக்கு என்றாள். இல்ல கனி நா கீழ படுத்துக்குறேன் என்று கீழே போர்வையை விரித்தான் அதை கண்டு அவளும் வேறு பக்கம் போர்வையை விருப்பதை பார்த்து பிடிவாதம் பிடிவாதம் என்று நினைத்து கொண்டு கனி மேல படு என்றான். அவள் அதை காதில் வாங்கவே இல்லை. அவன் தான் பிறகு அவளிடம் சரி வா நானும் மேலேயே படுக்கிறேன் என்றதும் தான் மேலே வந்து படுத்து கொண்டாள். அவனும் படுத்ததும் அவள் பக்கம் இருந்த லைட் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிவிட்டு படுத்து கொண்டாள். சிறிது நேரம் கழித்து அவனை திரும்பி பார்த்தவள் அவன் சீரான சுவாசத்தால் அவன் ஆழ்ந்து தூங்குகிறான் என்று தெரிந்ததும் இவள் போர்வையை விலக்கி மெதுவாக வந்து அவன் போர்வையை எடுத்து தானும் உள் சென்று அவன் நெஞ்சில் தலை வைத்து அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள். தூக்கத்தில் அவனும் இவளை அனைத்து கொண்டான். அவன் அனைத்ததும் இவள் அவன் நெஞ்சில் முத்தமிட்டு தூங்கி போனாள். காலையில் ரிஷி தான் முதலில் கண் விழித்தான். எழ முயன்றவனால் முடியவில்லை. அவன் கண்ணம்மா அவன் தலையை தன் நெஞ்சோடு வைத்து தன் கைகளால் சிறை செய்த படி தூங்கி கொண்டிருந்தாள். அவள் அணைப்பில் இருந்தவனால் தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு படாதாபாடு பட்டுப்போனன்.இவன் மெதுவாக அவள் கையை விலக்க பார்க்க அப்போது தான் அவள் தூக்கத்தில் அவனை இன்னும் தன் நெஞ்சோடு இறுக்கி கொண்டாள். அய்யோ இவ வேற மனுஷனோட நிலைமை புரியாம இப்படி தூங்குறா கும்பகர்ணன் தங்கை போல என்று நினைத்து கொண்டு அம்மணி எழுந்தா தான் நா எழுந்துக்க முடியும் என்று நினைத்து கொண்டே படுத்திருந்தான்.
