தீரா வினை திரும்பி வரும்
காற்றில் ஏதோ சத்தம் …
ஏறுவதை நிறுத்தி விட்டு மூச்சிறைக்க நின்று கவனித்துக் கொண்டிருந்தனர் சிவசங்கரும் குருவும்
என்ன குரு சத்தம் …
காத்துல சருகு பறக்கிற சத்தமா
இல்ல மேலே யாரோ நடக்கிற மாதிரி சத்தம் கேட்குது
நாம இன்னும் ஐம்பதடிக்கு மேலே ஏறனும் காத்து வேற அதிகமா வீசுது இதுல சத்தம் கேட்குமா
நல்லா கவனிச்சுப் பாரு …
குழி தோண்ட்ற மாதிரி சத்தம் கேட்குது…
குரு உன்னிப்பாக கேட்க அவனுக்கும் அப்படித்தான் இருந்தது…
மேலே ஏறவும் பயம் கீழே இறங்கவும் பயம் கருப்பனைத் தேடிவந்தவர்களோ கருப்பனோ என்ன ஆனார்கள் என்று தெரியாமல் திகைத்து நிற்க….
இன்னும் குழி வெட்டும் சத்தம் வேகமாகத்தான் கேட்கிறது…
இறங்கும் போது எளிதாக தெரிந்த மலையில் ஏறுவது அத்தனை சுலபமில்லை வசதியாக வாழ்ந்த சிவசங்கருக்கு மலையேறுவதிலுள்ள சவால் அப்போதுதான் விளங்கியது .குருவும் விழி பிதுங்கியிருந்தான் கஷ்டப்பட்டு மேலே ஏறியவர்களுக்கு அதிர்ச்சி…
முன்பு அவர்கள் நின்ற இடத்தில் வரிசையாக இரண்டு குழிகள் அப்போதான் யாரோ வெட்டி முடித்திருந்தார்கள்…
டேய் குரு யார் இங்கே குழி வெட்டி.யிருப்பார்கள்..?
தெரியலை சார் ஒருவேளை செல்வமாக இருக்குமோ..?
செல்வமாக இருந்தால் நாம இரண்டு பேருதான் இருக்கோம்னு எப்படித்தெரியும்.?
அப்படினா…
நம்மைப் பின் தொடர்ந்து வந்த யாரோதான் இதை செய்திருக்கனும் ..?
குரு அதிர்ச்சியில் வாயைப் பிளந்து நின்றான்
சிவசங்கர் கன்ஐ தூக்கிப்போட்டான் இந்த இடத்தைச் சுற்றித் தேடுவோம் யாரைப் பார்த்தாலும் யோசிக்காதே சுட்டுவிடு
துப்பாக்கியை எடுத்துக்கொண்ட குரு தேடத் துவங்க சிவசங்கர் எதிர் முனையில் தேடத் துவங்கினான்..
அரை மணி நேரம் தேடி யாரையும் காணாமல் திரும்பிய இருவருக்கும் அதிர்ச்சி முன்பு அவர்கள் நின்ற இடத்தில் யாரோ அமர்ந்திருந்தார்கள் கருப்பு சால்வையை உடலைச் சுத்தி போர்த்திக் கொண்டு கையில் துப்பாக்கியோடு….
இருவரும் துப்பாக்கியை அந்த உருவத்தை நோக்கி நீட்ட…
தீடிரென பெருங்குரலெடுத்து சிரிக்க ஆரம்பித்தது
முட்டாள்களே .. இது காடு இங்க உங்கள் சட்டங்களோ துப்பாக்கியோ செயல்படாது இங்கே நாங்கள்தான் ராஜா நாங்கள் சொல்வதே சட்டம்…
யார் நீ…
யார் நீ செல்வமா…?
செல்வத்தை பார்த்ததில்லையா….
ம்கும் உங்களுக்கு அந்த பாக்கியமில்லை செல்வத்தைக்காண நீங்கள் உயிரோடு இருக்கப்போவதில்லை….
அப்படினா…
நீ யாரு…?
கருப்பா நான் யாருனு சொல்லு….
கருப்பனா… அவன் எப்படி இங்க என யோசிக்கும் போதே ஒரு மரத்திலிருந்து குதித்தான் கருப்பன் அவனைத் தொடர்ந்து இன்னும் சிலர்…
சாமிய்யா…. இவங்க எங்க குலசாமி ஊரையே கொள்ளையடிக்கும் உங்களைப் போன்றோர் மத்தியில் எங்க இனத்த காக்கவே படிச்சிட்டு பதவியில இருக்கும் எங்க குலசாமி…
இருளில் இருந்து வெளிச்சத்துக்கு நகர்ந்தது உருவம் அது
சப்இன்ஸ்பெக்டர் சடகோபன்…
கருப்பா அந்த பசங்க எங்க ..? வைசாக் மற்றும் சக்தியைக் கேட்டார் சடகோபன்
அவனுங்க அடிச்சு புதகுழில தூக்கி போட்டாச்சு
பிழைக்க வாய்ப்பிருக்கா…
உள்ள யானையே விழுந்தாலும் முழுங்கிரும் வெளில வர வாய்ப்பில்ல சாமி
தோல்வி அடைந்த வெறுப்பும் …
செல்வம் தன் மூஞ்சில கரி பூசியதும் நினைக்க நினைக்க வரதனுக்கு எரிச்சலைக் கொடுத்தது…
காவல் துறை மேலிடமும் செம்ம டென்சன்
வரதன் முழித்தார் ஒரு இஞ்ச் கூட நகரவிடவில்லை
கோதாண்டம் பேயாட்டம் ஆடினார்
“என் மனைவியை காப்பாற்ற எனக்கு தெரியும் எவனும் தலையிட வேண்டாம் “
ஸார் அவசரப்படாதிங்க.. நம்ம நோக்கமும் உங்க மனைவியை காப்பாற்றுவதுதான் அவனுக்கு இந்த காடு பாதுகாப்பா இருக்கு இன்னும் தேடுதலை நிறுத்தவில்லை ஆட்கள் ப்ரஸ்ட்டை அலசிக் கொண்டு தான் இருக்கிறார்…
ஐயா சாமி நீங்கள் பண்ணிய உதவி எல்லாம் போதும் அவன் கேட்பது பணமாயிருந்தாலும் சரி என் உயிராயிருந்தாலும் சரி எப்படியும் நானே மீட்டுக் கொள்கிறேன்
வரதன் மேலிடத்தில் கலந்து பேசினார் கொலைகாரனை நெருங்கவிடாமல் இருக்கும் பிரச்சனையைக் குறித்தும் கோதாண்டத்தின் விரக்தி குறித்தும் பேசினார் முதலில் உயிரைக் காக்க வேண்டும் வாய்ப்பு கிடைத்தால் செல்வத்தைக் கொன்றுவிடலாம்
இப்பிரச்சனையை சுமூகமா முடிக்க முடிவு செய்யப்பட்டது போலீஸ் விலகி கொள்ள முடிவு செய்யப்பட்டது.
கோதாண்டத்திற்கு பாதுகாப்பு மப்டியில் மட்டும் .
கோதாண்டம் செல்வம் போனுக்காக காத்திருந்தார்
அதே நேரம் செல்வம் வரதன் ஏறிச் சென்ற மலையின் அடிவாரத்தில் குகையில் இருந்தான் அங்கிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் டெண்ட் அடித்து மயக்கமருந்தின் உதவியோடு மயங்கிக் கிடந்தாள் தமயந்தி.
மனித அரக்கர்கள் மத்தியில் பெண்ணாய் பிறந்து வளர்ந்த காரணத்திற்கு ஒரு விரலை இழந்து
செல்வம் நல்லது கெட்டது பாவம் புண்ணியம் எதுபற்றியும் கவலைப்படாமல் கொலைவெறி தலைக்கேறி மிருகமாய் இருந்தான்
சரியான பனிரெண்டு மணிக்கு கால் வந்தது.
ஹலோ கையும் குரலும் நடுங்கியது
அறுபது லெட்சம் கொடுத்து வஞ்சத்தை தீர்த்துக்கோ
போலீஸ் வந்த எனக்கு காசு நட்டம் உனக்கு உசுரு நட்டம் நான் நட்டப்பட்டத்தை அடுத்த கடத்தல்ல சம்பாரித்து விடுவேன் #புரிஞ்சதா
தொடர்பு துண்டிக்கப்பட்டது.
செல்போனை வைக்க இதையெல்லாம் ரெக்கார்டிங் பண்ணப்பட்டு போலீஸ்க்கு அனுப்ப பட்டது…
இரவு இரண்டு மணி ஒரு உருவம் கோதாண்டம் வீட்டு காம்பவுண்ட் சுவற்றை ஒட்டி பதுங்கி நின்றது
ஆள் அரவம் இல்லை மெதுவாக சுவரைப்பற்றி ஒரே ஜம்ப் உள்ள குதித்து புதரில் பதுங்கியது..ஐந்து நிமிடம் தன்னை யாரும் கவனிக்க வில்லை என்பதை உறுதி செய்து கொண்டு
மெதுவாக ஊர்ந்து ட்ரெயினேஜ் பைப்பை பிடித்து மேலே ஏறியது..
பணக்கார வாசனையோடு பிரமாண்டமாக பல அறைகளைக் கொண்ட வீடு ஒவ்வொரு அறையாக பார்த்துக் கொண்டு வந்த உருவம் கோதாண்டம் அறையைத் திறந்து பூனைபோல உள்ளே நுழைந்தது…
முன்னிரவில் அடித்த மதுவால் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தார் கோதாண்டம் சத்தம் கேட்டு விழித்த கோதாண்டத்திற்கு முன் துப்பாக்கியை நீட்டியது பதறி எழுந்தார் கோதாண்டம் மாஸ்க்கை கழட்டியது உருவம் அது வசந்த்.
