தீரா வினை திரும்பி வரும்
தீரா வினை திரும்பி வரும்…. 4
மயக்கம் தெளிந்த போது
கோதாண்டம் கண்கள்கட்டி அடைத்து வைக்கப்பட்டிருந்தார்
வீட்டிலே பின்புறம் காலையில் உடற்பயிற்சி செய்வது வழக்கம் நேற்று அப்படி உடற்பயிற்சி செய்யும் போது புதர் அசையும் சத்தம் கேட்டு பக்கத்தில் போய் பார்த்தார் முகத்தில் ஸ்பிரே அடிக்கப்பட்டது வரை ஞாபகம் வந்தது அதற்கு பிறகு என்ன நடந்தது
ஞாபகம் இல்லை….
கண்கட்டிய நிலை கை கால் இறுக்கி கட்டி வைத்திருக்கிறார்கள்….
தண்..ணீ …த..ண்ணீ கோதாண்டம் முனக… அவரை நோக்கி யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது….
அவர் வாயருகே ஸ்டாராவை வைத்தவுடன் கவ்வி நீரைக் குடிக்கத் துவங்கினார் …
யார் நீங்களாலாம் எதுக்காக என்னைக் கடத்தி வைச்சிருக்கிங்க …
அவர் முகத்தில் யாரோ கர்ச்சீப்பை வைத்து அழுத்த அப்படியே சுயநினைவை இழக்கத்துவங்கினார்….
மறுநாள் காலை …
பிரேம் ஏசி சேல்ஸ் அன் சர்வீஸ்….
சடகோபன் மப்டியில்….
சொல்லுங்க சார் என்ன வேணும்
உங்க ஒனர் பெயர் என்னங்க…
“வேலு ” சார்
அவர பாக்கனும்….
சரியா பத்து நிமிட இடைவெளியில் வேலு வந்தார் மோகனை தேடி பார்த்து இல்லாததால் போன் பண்ணினான்
“ஹலோ மோகன் எங்க இருக்கிங்க”-வேலு
“சொல்லுங்க சார்..”
“கடைக்கு வாங்க ஏசி மாட்டனும் முடியுமா…?”
“அஞ்சு நிமிசத்துல வாரேன் சார்…”
மோகன் மெக்கானிக் தான் நீ குறிப்பிட்ட அட்ரஸூக்கு இன்சார்ஜ் அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்…..
நன்றி சார் …
“வா …மோகன் ….!
சாரோட அவங்க ஆபிஸ் போய்ட்டு எத்தனை ஏசி மாட்டனும்னு பார்த்து விட்டு வா…?”
“ம்ம்ம் சரிண்ணா”
“போகலாமா” சடகோபன்….
“போகலாம் சார் ஆபிஸ் எங்க இருக்கு ” வேலு கேட்க
“சாவி கொடுங்க நான் ட்ரைவ் பண்றேன் ‘ சடகோபன் வேலுவின் ட்டூவிலரை ஓட்டினார்
நேராக போலீஸ் ஸ்டேசன் வாசல்ல வண்டியை நிறுத்தினார்
“போலீஸ் ஸ்டேசன்ல மாட்டனுமா சார்” வேலு கேட்க
, “ஆமா ஜி லாக்கப்ல மாட்டனும் உள்ள வாங்க ” சடகோபன் சொன்னார்
நிலைமை புரிந்தது வேலுக்கு ஆனா எதற்கு என்று தெரியல…
போலீஸ் ஸ்டேசன்ல தனியறையில் அமர்த்தப்பட்டான் மோகன் விசாரணையெல்லாம் கிடையது இதுவரை அலைந்த எரிச்சல் தீரும் வரை தாக்கப்பட்டான்.
எதுக்கு சார் என்னைய அடிக்கிறீங்க…மோகன்
சபாபதி வீட்டு விசாரணை துவங்கி ஏசியில் வைக்கப்பட்ட விசபாட்டில் வரை வசந்த் சொல்ல
.விசமா… டன் கணக்கில் மோகன் அதிர
“உன் கூட இருந்த இன்னொருத்தன் யாரு..! சபாபதியை காலி பண்ண யார் திட்டம் போட்டது…?”
“என்ன மோகன்….. பத்து நிமிசத்துல கரிகாலன் வருவார் ..” “என்னா விசயம்னா அவர் விசாரிச்சா ஒண்ணு உண்மை சொல்லுவான் இல்லன அடிவாங்கி செத்துருவான்.” ” உனக்கு எப்படி வசதி
உயிரோட இருக்கனுமா இல்ல…””
“சார் அன்னைக்கு மூணு இடங்களுக்கு சர்வீஸ் போக வேண்டி இருந்தது நானும் சலீமும் ஒரு இடத்துக்கு போனோம் இன்னும் ரெண்டு பேர் பக்கத்து ஊருக்கு அனுப்பினேன் சபாபதி வீட்டுக்கு போக ஆள் இல்லை அதனால மணிங்கிற. ப்ரண்ட கூப்பிட்டேன் அவனும் பிஸி அதனால அவன் பிரண்ட அனுப்பினான் அங்க தான் பிரச்சனை
என்ன பிரச்சனை வசந்த் கேட்டான்.
மணி அனுப்பியவனைத் தாக்கிவிட்டு வேற யாரோ மணி அனுப்பிய ஆளாக என்னோட சேர்ந்து கொண்டான் நாங்க கொடுத்த வேலையை முடித்து விட்டோம் உள்ளே வெசம் வைச்சதெல்லாம் எனக்கு தெரியாது சார்…
சொல்லுங்க உண்மைய மட்டும் தான் சொல்லனும் பொய் சொன்ன பிரயோசனம் இல்லை தொங்க வேண்டியிருக்கும் அண்ணனே போய்ட்டார் இனி யாரையும் பார்க்க மாட்டோம் …
அவன் யாருண்ணே தெரியாது சார்….
அவன் பாக்க எப்படியிருந்தான்..?
நல்ல உயரம் மாநிறம் கண்ணாடி போட்டு இருந்தான் அப்புறம் முகமெல்லாம் புள்ளி புள்ளியாய் இருந்தது ….
புள்ளியா.. சடகோபன் கேக்க….
ஆமாம் சார் ஆசிட் அடிச்சி தோள் கருகி மீண்டும் செட்டான எப்படி இருக்கும் அது மாதிரி…!
ஆசிட்டா …. ஒரே நேரத்தில் சடகோபனோடு கூட இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்…..
இரண்டு நாட்களாக அறையில் அடைந்து கிடந்ததால் மனதளவிலும் உடலாலவிலும் சோர்ந்து போயிருந்தார் கோதாண்டம் …
ஏற்கனவே மகன் இறந்த சோகம் இப்போ பேசக்கூட ஆளில்லாமல் கிடந்தார் கைசொடுக்கினால் எதிராளியை வெட்டி அங்கேயே புதைத்து விடும் ஆள் பலம் இருந்தும் இன்று யாருமில்லாமல் உக்கி உக்கி அழுது கொண்டிருந்தார்
துப்பாக்கி முனையில் உணவு அருந்தினார் மூன்று பேர் காவலுக்கு
இருந்தனர் யாரும் எதுவும் பேசவில்லை மீறி இவர் பேசினால் துப்பாக்கி நீளும்.
“எதற்காக சாமி இப்படி அடைச்சி வைச்சிருக்கிங்க பணம் எவ்வளவு வேணாலும் தாரேம்பா தயவு செய்து என்ன விடுங்க சாமி” கோதாண்டம்
முதல் முறையா பேசினான் சுத்த தமிழில் அது இலங்கையர் பேசும் தமிழ்.
“இன்று எங்கள் தலைவர் வருவார் அப்போது கேளுங்கள் பதில் சொல்லுவார்”
“எப்போ சாமி ‘
பதில் அளிக்க விரும்பவில்லை கண்கள் கட்டி கையும் கட்டப்பட்டது….
கோதாண்டம் காணாமல் போனது குறித்து கோயமுத்தூர் போலீ ஸ் அலார்ட் நிலையில் இருந்தது
வீட்டைச் சுற்றி 24 மணி நேரமும் பாதுகாப்பு கொடுத்திருந்தும் அவர் காணாமல் போய்விட்டார் என்ற தகவல் வெளியே பரவ பத்திரிக்கைகள் எல்லாம் பயங்கரமாக விமர்சித்து எழுதியிருந்தார்கள் தொடர்கொலைகள் நிகழ்ந்து அதன் காரணமாக காவல் கொடுக்கப்பட்டிருந்த பின்பும் முறையாக கோதாண்டத்தை பாதுகாக்க தவறியது ஏன் என்றும் வரதனின் தலைத்துவம் செயலிலழந்து விட்டது அவரை இடைநீக்கம் செய்யனும் அல்லது ஆயுதப்படைக்கு மாற்றனும் எப்போது நிகழும் என விமர்சித்து இருந்தார்கள் …
கொல்லப்பட்டவர்கள் பணக்காரர்கள் என்பதால் இந்த வழக்கை கிட்டதட்ட இந்தியா முழுவதுமே எதிர்பார்த்து காத்திருந்தார்கள்…
இந்த வழக்கு வெகு சீக்கிரத்தில் முடிந்துவிடும் மேலதிக தகவல்கள் விரைவில் தந்துவிடுவோம் குற்றவாளி போலீஸ் வளையத்துக்குள் வந்துவிட்டான் என பத்திரிக்கையில் வரதன் பேட்டி அளித்திருக்க அதை பார்த்து செல்வமும் சிரித்துக் கொண்டான்…..
கோதாண்டம் கண்கட்டு அவிழ்க்கப்பட்டார் அவருக்கு எதிரே தூக்கு கயிறு
ஒரு நாற்காலி அது ஒரு ஐஸ் பார் மேல இருந்தது .
வலுக்கட்டயமாக. நாற்காலியின் மேல் ஏற்றப்பட்டு கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது நாற்காலியின் நான்கு கால்களுக்கும் கீழே பெரிய ஐஸ் பார் இருந்தது நல்ல திட நிலையில் இருந்தது அது கரைந்து நாற்காலி ஆடி கீழே சரிந்தால் கோதாண்டம் தூக்கில் தொங்க வேண்டியது தான்.
“வணக்கம் அண்ணா நான் சபாபதியோட தம்பி எனக்கு ஒரு உண்மை தெரியனும்.”
“என்ன உண்மை” கோதாண்டம்
“எதற்காக சபாபதி அண்ணன் கொல்லப்பட்டார் உண்மையான காரணம் வேனும்” சொல்லி தொடர்ந்தான்
நான் இங்க அரைமணி நேரம் இருப்பேன் உண்மையை சொன்ன தப்பிக்கலாம்
சரியா 31 வது நிமிசம் நாங்க இந்த இடத்த விட்டு போய்டுவோம்.
“ஐஸ் கரைஞ்சு நீ தூக்குல தொங்க ஒரு மணி நேரம் ஆகும் “
திடமான ஐஸ் கொஞ்ச கொஞ்சமாய் கரைய பரிதாபமாய் பார்த்தார் கோதாண்டம்…
அது எனக்கு எப்படித் தெரியும் என் பையனும்தான் கொல்லப்பட்டான்
இதெல்லாம் போலீஸ்ட்ட சொல்லு நம்புவாங்க சபாபதி அண்ணன் கொலைக்கு பதிலுக்கு பதில் கொடுத்தே ஆக வேண்டும் நீயும் சேர்ந்து செத்துப்போ
சொன்னவர்கள் மீண்டும் அந்த இடத்திலிருந்து கிளம்ப கோடை வெப்பத்தின் காரணமாக ஐஸ் வேகமாகக் கரைய கழுத்தில் போட்டிருந்த சுருக்கு அவர் கழுத்தை இறுக்க …
சொல்லிடுறேன் … சொல்றேன் என அனத்த …
வெளியே கிடந்த நாற்காலிகளை எடுத்து அவருக்கு முன்னாடி போட்டுக்கொண்டு மூவரும் அமர்ந்தனர்….
மோகன் சொன்ன அடையாளங்களை வைத்து செல்வத்தின் உருவத்தை வரைந்து வெளியிட்டிருந்தார்கள் இவனைப்பிடித்துக் கொடுத்தாலோ தகவல் அளித்தாலோ தக்க சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தீருந்தார்கள்….
