தீரா வினை திரும்பி வரும்
இரவு இரண்டு மணி ஒரு உருவம் கோதாண்டம் வீட்டு காம்பவுண்ட் சுவற்றை ஒட்டி பதுங்கி நின்றது
ஆள் அரவம் இல்லை மெதுவாக சுவரைப்பற்றி ஒரே ஜம்ப் உள்ள குதித்து புதரில் பதுங்கியது..ஐந்து நிமிடம் தன்னை யாரும் கவனிக்க வில்லை என்பதை உறுதி செய்து கொண்டு
மெதுவாக ஊர்ந்து ட்ரெயினேஜ் பைப்பை பிடித்து மேலே ஏறியது..
பணக்கார வாசனையோடு பிரமாண்டமாக பல அறைகளைக் கொண்ட வீடு ஒவ்வொரு அறையாக பார்த்துக் கொண்டு வந்த உருவம் கோதாண்டம் அறையைத் திறந்து பூனைபோல உள்ளே நுழைந்தது…
முன்னிரவில் அடித்த மதுவால் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தார் கோதாண்டம் சத்தம் கேட்டு விழித்த கோதாண்டத்திற்கு முன் துப்பாக்கியை நீட்டியது பதறி எழுந்தார் கோதாண்டம் மாஸ்க்கை கழட்டியது உருவம் அது வசந்த்.
அயர்ந்து உறங்கியவனை எழுப்பி நெற்றியில் துப்பாக்கி வைத்தவுடன்
வியர்த்துக் கொட்டியது கோதாண்டத்திற்கு
தன் முகமூடியைக் களைந்த வசந்த்
பயப்பட வேண்டாம் சார்…
நம்மை நேரடியாகவோ மறைமுகமாகவோ கொலைகாரன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் அதனால் தான் நம்மால் அவனை எதுவும் செய்ய முடியவில்லை
ஆகையால் தான் இந்த ரகசிய சந்திப்பு நான் உங்களை சந்திக்க வந்தது யாருக்கும் தெரியாது…
வசந்த் பேச பேச கோதாண்டத்திற்கு கொஞ்சம் நிம்மதியாகவும் அதே நேரத்தில் பயமாகவும் இருந்தது
சார் தயவு செஞ்சி பயப்படாதிங்க….
இம்முறை நீங்கள் தனித்து தான் செல்வத்தை சந்திக்கப் போகிறீர்கள் அவ்வவா
நாளை எங்கே பணம் கொண்டு வரச்சொல்லியிருக்கான்.
காலையில தான் சொல்வேன் என்கிறான்.
சரி…
இந்த கோட்டை நீங்கள் போட்டுக் கொள்ளுங்கள் புல்லட் ப்ருப் ஜாக்கெட் இணைக்கப்பட்டிருக்கு அதோட கேப்ம் போட்டுக்கோங்க டரஸ்ல யூபிஎஸ் பொருத்தியிருக்கு இதை அணிந்த பின் அந்த பட்டனை அழுத்தி விடுங்கள் உங்களை பின் தொடர்ந்து போலீஸ் மப்டில வரும்
எக்காரணம் கொண்டும் கோட்டையோ தொப்பியையோ கழட்டி விடாதீர்கள்.முக்கியமாக உங்கள் மனைவி பாதுகாப்பாக கிடைக்கிறவரை போலீஸ் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாது ….
மிரட்சியோட பார்த்தார் கோதாண்டம்
பணத்தை எடுத்துக்கிட்டு எங்கேயும் ஓட முடியாது பாதுகாப்புக்கு ஐம்பது போலீஸ் எப்போதும் உங்களை சுற்றி இருக்கும்…
உங்களுக்கு வர்ற கால் அனைத்தும் போலீஸ் கேட்டுகிட்டே தான் இருக்கும் எந்த பயமும் உங்களுக்கு வேண்டாம்
சரிங்க சார்
டேக்கேர் நாளை போன் வந்தவுடன் நீங்க பேசுறது எல்லாம் நாங்களும் கேட்பதாலே எங்களுக்கு எதுவும் தெரியப்படுத்த முயற்சி பண்ண வேண்டாம். அது அவனுக்குத் தெரிந்தால் நமது திட்டம் தோற்றுக்கூட விடலாம்
சரி சார் நம்புங்க காவல் துறை உங்கள் நண்பன் சொல்லிவிட்டு வந்த வழியே திரும்பினான்.
சிவசங்கருக்கு மொத்தம் புரிந்து விட்டது காட்டுக்குள்ளே வாழும் செல்வம் எப்படி பிடிபடாமல் கொலைகளை செய்துவிட்டு தப்பிக்கிறான் என சப்இன்ஸ்பெக்டர் சடகோபன் காரணம்
சிவசங்கரையும் குருவையும் அருகே இருந்த மரங்களில் கட்டிப்போட்டார்கள்…
கருப்பா இவர்களைப் பார்த்துக் கொள்.. என்னால் இங்கே தொடர்ந்து இருக்க முடியாது செல்வம் வரட்டும்
சடகோபன் சற்றென்று கிளம்பினார் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த மலையில் குறுக்கு வழியில் யோசிக்காது இறங்கினார்…
அடர்ந்த காட்டில் கூட அங்கே வசிப்பவர்களுக்கு சில பாதைகள் தெரியும் அது விரைவாக போய்வரவும் மிருகங்கள் ஆபத்தில்லாது இருப்பது என அங்கேயே வாழ்ந்தவர்கள் அறிந்து வைத்திருப்பார்கள் …
சற்று நேரத்திற்கெல்லாம் செல்வம் வந்துவிட்டான் வரும்போதே காட்டு முயல் ஒன்றைக் காதைபிடித்து தூக்கிவந்தான்…
கருப்பா…
சொல்லு சாமி…
இத உப்பு வைச்சு சுட்டுக்கொடுடா பசிக்குது முயலை கருப்பனிடம் கொடுத்தான் ..
சிவசங்கரையும் குருவையும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை அடர்ந்த காட்டில் பெளர்ணமி வெளிச்சத்தில் வெற்றுத்தரையில் தலை சாய்த்து படுத்தான் தன் தாய் சாரதா மடியில் தலைசாய்த்து படுக்கும் போது எத்தனை இன்பமோ அதே போல இன்பம்தான் வெகுநேரம் கண்களை மூடிக் கிடந்தவன் கருப்பன் குரல் கேட்டு எழுந்தான்….
சாப்பிடு சாமி….
முயலை தீமுட்டி கருக்கி கொடுத்திருந்தான்…
ரசிச்சு ருசிச்சு உண்ணத் துவங்கினான் உண்ட பின்னே ஓடைத் தண்ணீர்
கொஞ்ச நேரத்துல விடிஞ்சிரும் கருப்பா நான் கெளம்புறேன் …இவனுங்கல இங்கேயே புதைச்சிட்டு கெளம்பிருங்க….
சிவசங்கர் அழுதான் அரற்றினான் கையெடுத்துக் கும்பிட்டான் எதையுமே செல்வமோ கூட இருந்த மலைவாசி இளைஞர்களோ காதில் வாங்கவில்லை குரு ஏற்கனவே மயங்கிக் கிடந்ததால் இது எதுவும் அறியாமல் கிடந்தான்….
சிவசங்கரையும் குருவையும் உயிரோடு புதைத்து விட்டு தாங்கள் குடிசையை நோக்கி மலைவாசியினர்
செல்வம் கீழே இறங்கிய போது பொழுதும் விடியத்துவங்கியிருந்தது….
மறுநாள் காலை …
இந்த வழக்கில் இதுவரை நடைபெற்ற பயங்கரங்ளை முடிவுக்குக் கொண்டுவந்து தீமைகளைத் தீயிடும் நாளாக பொழுது விடியும் என்ற நம்பிக்கையோடு கோவை காவல்துறை மப்டியில் தயாராகிக் கொண்டிருந்தனர் …
வரதன் பேசினார்
நாம நூறுபேர் ஒருத்தனை பிடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறோம் நம்மோடுதான் அவன் இருக்கிறான் இதுதான் அவனை நாம் கண்டுபிடிக்க முடியாமல் இருக்க காரணம் கோவை முழுவதும் நமது கண்ட்ரோல்ல இருக்கட்டும் கொலைககாரனைப் பற்றிய தகவல்கள் கிடைக்க கிடைக்க பகிர்ந்து அவன் எல்லையை சுருக்கி கோதாண்டத்தை ஆபத்தில்லாமல் காப்போம் தமயந்தியை மீட்போம்….
மறுநாள் வசந்த் சொன்னவாறு தயாராகி விட்டார் அவன் போனுக்காக காத்திருந்தார் மணி 7.35…
கோவை போலீஸ் விழிப்போடு காத்திருக்க
சார் கோதாண்டத்திற்கு கால் வருது….
ட்ர்ர்ர்ர்…ட்ர்ர்ர்ர் ரீங்காக அதை கோதாண்டம் எடுக்கும் முன்னர் காவல்துறை இதயத்துடிப்பு எகிறியது….
