தீரா வினை திரும்பி வரும்
முழுகதையும் சொல்லி முடித்தப்பின் கோதாண்டம் தூக்கிலிருந்து இறக்கப்பட்டார்
நீ சொன்ன கதைக்கும் இப்ப நடந்துள்ள கொலைகளுக்கும் என்ன சம்பந்தம்
அன்று பெண்பிள்ளையை நரபலி கொடுக்க தூக்கிட்டு தப்பிய போது ஆசிட் வீசிட்டு தப்பினோம் இப்போ நடந்த ரெண்டு கொலையிலேயும் ஆசிட் இருக்கு அது இல்லாமா அந்த சம்பவத்திற்கு பிறகு நாங்க கோபாலாவை சந்திக்கவில்லை ஒருமுறை மட்டும் பணம் வாங்கி சென்றார் அது நடந்து முப்பது வருசமாச்சு இப்போ என் மகன் கோபாலா சபாபதி வரிசையாக செத்திருக்கார்கள் இரத்தினத்தைக் காணவில்லை அதுதான் காரணமாயிருக்க முடியும்
சபாபதி கொலைக்கு யார் காரணம்…?
முத்துச்சாமி சுமதி ரெண்டு பேரையும் கொன்னு புதைச்சிட்டோம் எஞ்சியது சிறுவனும் அவன் அம்மாவும்தான் ஆனால் அவ கூட இறந்து போயிட்டா பிழைத்துக் கொண்டது அவன் தான்
ஆம் அவன் மட்டும் தான் அவன் பேரு செல்வா….
உயிர் பயத்தில் கோதாண்டம் நடந்ததை எல்லாம் சொல்லி முடித்தாலும் அதன் பின் நடந்ததை அவன் அறிந்திருக்கவில்லை
சித்தன் ஊருக்குள் வந்திருந்தான் செல்வாவைத் தேடி…
சிறிது காயம் ஆறியிருந்தாலும் முகத்தில் ரணம் மாறவில்லை அவன் கூட விளையாடக்கூட சிறார்கள் பயந்து வெறுத்து ஒதுக்க ஒதுக்க இந்த சமூகத்து மேலே பெரிய வெறுப்பு உண்டாகியது அது கொஞ்சம் கொஞ்ச வெறியாக மாறியது
சித்தன் காட்டுவாசினாலும் ஊரில் எல்லோரிடமும் நல்ல பழகுவான் அதனால எப்பவும் ஊரில் காட்டில் கிடைக்கும் பழங்களை ஊரில் விற்று செல்வான்.சித்தன் தினந்தோறும் செல்வத்தைப் பார்க்க வந்தான் பழம் கொடுத்து வளர்த்தான் செல்வமும் சித்தனோட ஒட்டிக்கொண்டான் அவனோடு காட்டுக்கு போவதும் வீட்டில் தங்குவதுமாக நாளாக நாளாக சித்தனோட காட்டிலே தங்கி விட்டான்.
செல்வம்…
என்ன அண்ணா…..
இப்போ உன் காயம் எப்படி இருக்கு….
நீ மூலிகை மருந்து வைத்து கட்டிய பிறகு வலியில்ல நிறைய ஆறிருச்சு
உன்னுடைய பொருள் ஒண்ணு என்ட்ட இருக்கு செவ்வா….
என்னன்னு எனக்குத் தெரியும்
செல்வா சொன்னதும் சித்தன் திகைத்து நிற்க அருகில் அவர்கள் தங்கியிருந்த மலைக்குகைகக்குள் சென்று துணியை எடுத்து வந்தான் அதில் ஏதோ வைத்து கட்டி வைத்திருந்தான் சித்தன்
சித்தன் துண்டைப்பிரித்து வைத்திருந்த மண்ணைக் காட்டினான்
காட்டுல மொச வேட்டையாட அடிவாரத்துக்கு தேடிவந்தேன் சாமி
ஒரு பொண்ண தூக்கிட்டு உள்ள போனானுங்க என்னனு புரியல சாமி
பெரிய மரத்துல ஏறிப்பார்த்தேன் குழந்தையோட அழுகுரல் மட்டும் கேட்டுட்டே இருந்துச்சு மரத்துல நல்ல உயரத்துல ஏறிப் பார்த்தேன் அங்க ஒரு புள்ளய பலி கொடுத்தாங்க
உடம்பெல்லாம் ஆடிப்போச்சி சாமி…
நாங்க எங்க சாமிக்கே மிருகங்களத்தான் பலியிடுறோம் ஆனா இவனுங்க புள்ளய கொடுக்கிறானுங்கனு நினைச்சிடேன்
மறுநாளே ஊருக்குள்ள வந்து யார் எதுனு தேடினேன் பத்து ஊர் தாண்டி தான் உன்னை கண்டுபிடிக்க முடிஞ்சது நீ ஹாஸ்பிட்டல்ல இருந்தியா அதான் சடங்கு செய்ய வேணுமே அந்த இரத்தம் ஓடின மண்ணை அள்ளி வைச்சேன்.
இரத்தம் கலந்த மண்ணை பார்த்தவுடன் கதறி அழுதான்
அவனை எப்படி தேற்றுவது என சித்தன் கலங்கி நின்றான்…
சிறிது நேரத்துக்குப் பிறகு அடுத்த குகைகக்குள் போன செல்வம் அவள் அம்மா சரதாவோட அஸ்தியிருந்த கலயத்தை எடுத்துவந்தான் அதோடு இன்னொரு கலயத்தில் இரத்தம் கலந்த மண்ணை வைத்து மேல்புறம் துணியால் கட்டி வைத்தான்….
சித்தா…
சொல்லு செல்வா….
அந்த நாலு பேரை பத்தி நாம தெரிஞ்சிக்கனும் …
என்ன பண்ண முடியும் செல்வா…
அவர்களுக்கு எமன் நான் தான் சித்தா
அவர்களைப்பற்றி சேதி கொண்டு வா….
சரி நீ வரவேண்டாம் நான் அடிவாரத்துக்கு போய் வாரேன் அவர்களைப் பற்றிய தகவல் கண்டிப்பாய் கொண்டுவாரேன்….
முதலில் நம்பூதிரி கோபாலா மலையாள பேப்பரில் பேட்டி போட்டோவுடன் அதை வாங்கி கொடுத்தான் சித்தன் அப்புறம் வரிசையாக கோதாண்டம் சிவசங்கர் ரத்தினம் சபாபதி அவர்கள் கல்லூரி விளம்பரம் பத்திரிக்கை விளம்பரம் இப்படி கிடைத்ததை தேடிக் கொடுத்தான் சித்தன்….
இதற்கிடையே தன் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் விறகு வெட்டி கனிகள் விற்று பணத்தை தேடிச் சேர்த்துக் கொண்டிருந்தான் செல்வா
காலம் உருண்டோட பழிவாங்கும் எண்ணம் துளி கூட குறையாது தன்னை தயார்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறான் செல்வம்
மீண்டும் கோதாண்டம் விடுவிக்கப்பட்டார்.
கண்ணை கட்டி ஊருக்கு வெளியே கொண்டு இறக்கி விடப்பட்டார்.
கோதாண்டம் ஆட்டோ எடுத்து வீடு வந்த போது வசந்த் ரகு வரதன் மூவரும் நின்றிருந்தனர்
ஆடிப்போய் வீட்டில் நுழைந்த இவர் போலிஸ் படையை பார்த்து மேலும் மிரண்டார். அவர்களைப் பார்த்தவுடன் பத்திக் கொண்டு வந்தது
யார் கடத்தியது எப்படிக் கடத்தினார்கள் என போலீஸ் துருவித் துருவி விசாரித்தார்கள் விசாரணைகள் கிடுக்கி பிடிபோட்டது இவரும் சமாளித்து அனுப்ப போதும் போதும் என்றாகி விட்டது
அவர் பொண்டாட்டி தமயந்தி காலை கட்டிக்கொண்டு அழுதாள்
“ஏய்ய்ய் எழுந்திரு செத்தா போய்ட்டேன் “
கத்தினார் மிரண்டாள்.
செல்வாவை செதிள் செதிளாக வெட்ட வேண்டும் ..
தன் படை பரிவாரங்களை அழைத்தார் …
மலையடிவாரத்தில் பத்து பதினைந்து கிராமங்கள் இருக்கு அதில்தான் செல்வா இருக்கனும் சந்தோஷ் நீ இன்னும் ஆள் எத்தனை ஆட்களை வேண்டுமானாலும் அழைத்துக் கொள் அவன் சாகவேண்டும் அடையாளம் மூஞ்சில ஆசிட் அடிச்ச தடமிருக்கும் விசாரித்து முடி ஒரு கோடி ரூபா ஒரே பேமெண்ட்
சரிங்க ஐயா….
தன்னை கடத்திய சபாபதி ஆட்கள் யார் …
அவர்களையும் வேரறுக்க வேண்டும் முகமெல்லாம் பகையுணர்வு படர வெறித்தனமாக யோசித்துக் கொண்டிருந்தார் கோதாண்டம்….
நாமாதான் கோதாண்டத்தை கடத்தினோம் என்று தெரியாதுல்ல வசந்த் கேட்டான்
எப்படி தெரியும் ஆனா செல்வம் குடும்பம் பாவமில்லையா
ம்ம்ம் பாவம் தான் சட்டத்துக்கு முன்னாடி இரண்டு பேருமே குற்றவாளிதான்.
வாக்குமூலம் பக்காவா இருக்கே ?
இதை வைச்சு கோதாண்டத்தா அரஸ்ட் பண்ணலாமே
கண்டிப்பா அதுக்கு முன்னாடி கோதாண்டத்த வைச்சு செல்வத்த பிடிக்கனும் இனிமே கோதாண்டம் விடுற மூச்சு காத்து கூட நம்மள தாண்டித்தான் போகனும்.
பாதுகாப்பு போட்டாச்சு நம்ம ஆட்கள் வீட்டை சுற்றி சுமார் இரண்டு கிலோ மீட்டர் அளவிற்கு தீவிர கண்கணிப்பில் உள்ளது
இவ்வளவு பாதுகாப்பில் இருக்கும் போது குற்றவாளி வெளியே வருவானா.
சந்தேகம் தான் வர்றது
ஆனா வெளியே வருவான் அவன் அடிபட்டது பூனையல்ல #வேங்கை
செல்வம் காட்டில் சித்தனோட இருந்தான் …
“சித்தா மூணு உயிர எடுத்துட்டேன் இப்போ சொல்லு சுமதிய வெட்டினது யாரு”
“மந்திரவாதி சாமி” சித்தன் சொன்னான்
“அவன என்ன பண்ணினேன் தெரியுமா “
ஒரு ஸ்பிரே எடுத்துக்கு காட்டினான்
“இது மூஞ்சில அடிச்சேன் மயங்கிட்டான் அவன் கண்ணுல்ல கண்ணு”
அதுல ஹா…ஹா…ஹா அதுல ஆசிட் அடிச்சேன் சித்தா
அவன் கத்த கத்த எனக்கு வலி குறைஞ்சது சித்தா
இந்த கத்தி பாரு சட்டையின் பின்னாடியிருந்து சாமுராய் கத்தியை காட்டினான்
சித்தன் பயத்தோட பார்த்து கொண்டிருந்தான்
இதுலா அவன் முகத்துல கோடு போட்டேன் ஆழமா
ஹா..ஹா… ஹா சித்தா பயப்பிடாதா
ரத்தினம் இவன் தான் முகத்துல ஆசிட் வீசினான் இவன என்ன பண்ணினேன் தெரியுமா பெண் இல்லாமா தூங்க மாட்டானாம் இந்த பணக்கார பொறுக்கி.
நடிகையோட ஆல்பம் இருக்குடானு சொன்னேன்
கொண்டு வாடானு சொன்னான் அவனுக்கு பிளான் பக்காவா பண்ணிட்டு
அப்புறம் அவனுங்க அலார்ட் ஆகிட்ட பிரச்சனை என்று அன்றே ரத்தினத்துக்கு ஆல்பம் கொண்டு போனேன் இதுல கொடுமை என்னன்னா அவனே வந்து எமன கூட்டிட்டு போனான்.
துப்பாக்கியைத் தூக்கி பொட்டுல வைச்சேன் சித்தா ஒழுங்கா சபாபதிய கூப்பீடுனு சொன்னேன் போன் பண்ணி வரவைச்சான் வரும்போதே போட்டேன் நெஞ்ச பிடிச்சிட்டே செத்தான் என் வலி இன்னும் குறைஞ்சது..சித்தா சித்தா செல்வம் சந்தோசித்து சொல்ல
ரத்னம் எங்க செல்வா
அவனா ….
கொன்னுட்டியா…
ச்சே ச்சே அவன நான் கொல்லல
அப்புறம்
அந்த மேடு இருக்குல்ல அதுக்குல்ல தான் உயிரோடு புதைச்சு வைச்சிருக்கேன் அப்புறம் தான் என் மேல் பட்ட ஆசிட் வலி குறைஞ்சது..
இன்னொன்னு தெரியுமா…
சிவசங்கர் பொறுக்கி என்னைத் தேடி இங்கே காட்டுப்பக்கம் திரிஞ்ச்சிட்டு இருக்கான் அவனும் சாவான்
என் குடும்பத்த அழிச்சு அவன் குடும்பத்த காப்பாத்த நினைச்ச கோதாண்டம் அவன் பையன் போதையிலே போய் சேர்ந்தான்
ஆசிட் அடிபட்டு இனி கோதாண்டமும்
சாவான் அவன் சாவு சாதரணமா இருக்காது சித்தா
ஹா..ஹா…ஹா..
காடே அதிர சிரித்துக்கொண்டிருந்தான் செல்வம்.
