தித்திக்கும் இதழில்? 'தீ'? பிடிக்கும்
19) இதழ் 💋 தீ 🔥
விடுமுறை கழித்து புத்துணர்ச்சியாக இரு பெண்களும் அலுவலகம் வந்து சேர்ந்தனர் என்ன இருந்தாலும் அபிக்கு மூன்றாம் நாள் என்பதால் அதுவும் மிக மோசமான நாள் என்பதால் சற்று கடுமையாக தான் இருந்தாலும் முகத்தை புன்னகையோடு வைத்துக் கொண்டு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாள்..
வழக்கம்போல் ஆத்மிகா இருக்கும் இடத்திற்கு மோப்பம் பிடித்து அமர் அவள் அருகிலேயே நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டவன் அவர்கள் குழு செய்யும் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான் அடிக்கடி யாருக்கும் சந்தேகம் படாமல் அனைவரிடமும் பேசி சந்தேகத்தை கேட்பது போலவும் அவன் மற்றவர்கள் சந்தேகத்தை தீர்ப்பது போலவும் உலக மகா நடிப்பைக் கச்சிதமாக செய்து கொண்டிருக்கும் சமயத்தில் அவ்வப்போது ஆத்மிகாவை சீண்டுவதையும் விடுவதில்லை இப்படியே அவர்களின் காதல் விளையாட்டு நடந்து கொண்டிருந்தது..
இங்கே உலக அதிசயத்தில் ஒன்றாக ஆத்ரேயன் அபி இடம் எதுவும் பேசாமல் அமைதியாக கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். காரணம் கொஞ்சம் அதிகப்படியான வேலை அதனால் தான் தீவிரமாக செய்து கொண்டிருக்கிறான் அருகில் இருப்பவர்கள் யார் என்று கூட கண்டுகொள்ள மாட்டான் அபி தான் பாவம் அடிக்கடி தன்னை பார்த்து ஏதாவது பேசுவான் என்று தலை திருப்பி திருப்பி சுளுக்கு தான் பிடித்து விட்டது அவளுக்கு..
மத்தியான இடைவெளியில் நண்பர்களுடன் செல்லலாம் என்று பார்த்தால் கதவு லாக் செய்யப்பட்டிருந்தது
‘சிடுமூஞ்சி சிங்காரம் எதையோ பிளான் போட்டு இருக்கு அப்படி என்னதான் கதவு லாக் பண்ணிட்டு கிழிக்க போறானுங்களோ’
என்று முணுமுணுத்துக் கொண்டு திரும்பி பார்க்க அவளிடமிருந்து ஒரு இன்ச் இடைவெளியில் தான் அவன் நின்று கொண்டிருந்தான் வெப்ப மூச்சுக்காற்று அவள் கழுத்தை தாண்டி அபாய பகுதிக்கு சென்று உடலை உஷ்ணம் செய்தது..
ஒரு நிமிடத்தில் தூக்கி வாரி போட்டது இவ்வளவு பெரிய மூச்சுக்காற்று எங்கே வரை சென்று இருக்கிறது என்று அப்போதுதான் கீழே பார்த்தாள்
கண்ணோடு கண் வைத்து வசியம் செய்து கொண்டிருக்கும் இடைவெளியில் அவள் துப்பட்டாவை தன் கைக்கு கொண்டு வந்திருப்பதை இப்பொழுது தான் கவனித்து இருந்தாள்..
ஆனால் இதெல்லாம் பிடிக்காத விஷயம் அவளுக்கு அனுமதி இல்லாமல் இவ்வாறு செய்வது நேற்று தான் நல்லவனை போல் பேசி இப்பொழுது என்ன வந்துவிட்டது என்று கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு
“ரேயா… அடி வாங்க போற “
என்று துப்பட்டாவை பிடுங்க வர அவனும் பின்னோக்கி சென்று கொண்டே இருந்தான் அவன் துப்பட்டாவை தன் உயரத்துக்கு வைத்துக்கொண்டு அவளிடம் தராமல் போக்கு காட்டிக் கொண்டிருந்தான்..
அவள் துப்பட்டாவை பிடிக்கும் நோக்கில் இருந்தாலே தவிர அவனை துரத்திக் கொண்டே அவனை நோக்கி வருவதை அவன் தலை முதல் கால் வரை அவள் உடல் அங்கங்களை இன்ச் பை இன்ச் ரசித்துக் கொண்டிருப்பதை மறந்து போனாள்..
ஒரு கட்டத்தில் அவன் சுவரோடு நின்றுவிட அவளும் அவனை நெருங்கி வர
அப்படியே அவளை லாவகமாக தூக்கிக்கொண்டு தனது பர்சனல் அறைக்குள் அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்தான்..
“அது என்ன எல்லா ஆபீஸ்லயும் உங்கள மாதிரி ஆளுங்களுக்கு இந்த மாதிரி தனி சொகுசுரும் வேற கேக்குதா இந்த மாதிரி ரூம் இருக்கிறது டேஞ்சர் தான் எங்கள மாதிரி ஹீரோயின்ஸ் கு”
என்று உதட்டை சுழித்துக் கொள்ள
“வாய் வாய் வாய் இது மட்டும் இல்ல இந்நேரம் உன்ன வாயில போட்டு முழுங்கிடுவேன் சரி இப்படி உட்காரு”
என்று அவளை கட்டில் மேல் சாய்த்து அமர வைத்து இரு கால்களின் தன் மடிமீது போட்டுக் கொண்டு விரல்களுக்கு நெட்டி முறித்துக் கொண்டிருந்தான்
அவள் ஏன் எதற்காக எதுவும் பேசவில்லை அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தால் பிறகு உளுத்தம் மாவு களி எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தான்
பிறகு இளநீர் கொடுத்தான்..
அபியை தேடி நண்பர்கள் வருவார்கள் என்று தெரிந்ததால் முன்கூட்டியே அவளுக்கு வேலை இருக்கிறது என்று இனியன் மூலம் தகவல் சென்றுவிட அதனால் அனைவரும் அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர்..
இங்கே ரேயன் அபிராமி அபிராமி என்று கமல் சொல்வது போல் அபி அபி என்று இவள் பின்னாடி சுத்திக் கொண்டிருந்தான்..
என்ன இருந்தாலும் தன் காதலனுக்கு தன் மீது உள்ள அக்கறை ஏதாவது ஒரு சூழ்நிலையில் தென்படுகிறது என்று மனம் மகிழ்ந்து போனாள் பேதை ஆனால் அதை அனைத்தையும் சுக்கு நூறாக உடைக்கும் அளவிற்கு அவனிடமிருந்து ஒரு பதில் வந்தது..
“நான் இதெல்லாம் செய்யறதால நீ ரொம்ப இம்ப்ரஸ் ஆகி என் மேல உயிரையே வெச்சிடாத குறைஞ்ச காலம்தான் வாழ போறோம் என்னோட ரெண்டு பையன் பொண்ணு குழந்தைகளை பெத்து கொடுத்துட்டு உன் பொருளை மூட்ட கட்டிட்டு இங்கிருந்து போகணும் அதுக்கு முன்னாடி பீரியட்ஸ் டைம்ல தான் பொண்ணுங்க ஜாக்கிரதையா இருக்கணுமா இந்த டைம் நல்லா ஹெல்தியா இருந்தா தான் கரு தங்குமா அதான் இந்த டைம்ல உன்ன அக்கறையா பார்த்துக்கிறது அப்பதானே நான் என்னுடைய குழந்தையை கொடுத்து உன்னுடைய கருவில் ஆரோக்கியமாக தங்க வைக்க முடியும் எல்லாம் என்னோட சுயநலம்தான் பேபி எனக்கு இருக்கிற கெட்ட பழக்கமே இதுதான்
அன்னைக்கு நான் கூப்பிட்டேன் வந்திருந்தா இந்நேரம் நல்லா இருந்திருப்ப ஆனா நீ எங்க அப்பாவுக்கு பிடிக்கலை எங்க ஆட்டுக்குட்டிக்கு பிடிக்கலை வளர்த்த கடமை மயிறு மட்டு அப்படின்னு இஷ்டத்துக்கு டயலாக் பேசிட்டு போயிட்ட அதற்கான தண்டனை உனக்கு வேணாமா கிடைச்ச வாய்ப்ப தவறிவிட்டவர்களுக்கு தக்க தண்டனை கடவுள் கொடுப்பார் என்று சொல்வார்கள் ஆனால் என்கிட்ட நான் கொடுக்கிற வாய்ப்பு நிராகரிக்கிறவங்களுக்கு கடவுளை விட மோசமான தண்டனைகள் கொடுப்பேன் அதுல நீயும் மாட்டிக்கிட்ட அனுபவி”
என்று சொல்லிவிட்டு அறை கதவை மூடி அவள் அருகில் அவள் இடையை தன் பக்கம் பிடித்து திருப்பிக் கொண்டு அவள் நெஞ்சில் சாய்ந்து கண்களை மூடினான்..
இது என்ன விதமான காதல் இது காதலா இல்லை காமமா இல்ல சுயநலமா இல்ல என்ன இதுக்கு பெயர் என்று புரியாமல் கண்களில் வழிந்தோட கண்ணீரோடு அப்படியே வலி மயக்கத்தில் உறக்கத்தை தழுவினாள்..
இரண்டு மணி நேரம் இருவரும் உலகை மறந்து உறக்கத்தை தழுவினர் முதலில் கண்விழித்த ரேயன் அருகில் இருக்கும் அபி முகத்தை பார்க்க எந்த ஒரு களங்கமும் இல்லாத பால் வடியும் குழந்தை போல கண்மூடி உரைக்கத்தை தழுவி இருக்க ஆனால் அவள் கண்களில் இருந்து கண்ணீர் கோடுகள் அச்சு அப்படியே பிரதிபலித்தது..
“எனக்கு வேற வழி தெரியல பேபி உனக்கு எப்பவுமே அரைகுறை வாழ்க்கை தான் எல்லாத்துக்கும் முடிவு இருக்கும் என்ற மாதிரி என்கிட்ட இருந்து தப்பிக்க உன்னால முடியுமான்னு தெரியல ஆனா கஷ்டமோ நஷ்டமோ என் கூட தான் இருக்கணும் சின்ன வயசுல உன்னை ஒதுக்கி வெறுத்து ஓட பார்த்த நானே இப்ப விரட்டி பிடிக்க வேண்டி நிலைமைக்கு வந்துட்டேன் ஐ ஹேட் யூ பேபி”
என்று நெற்றியில் ஒரு முத்தத்தை பதித்து அவளை எழுப்ப அவளும் கண்களை கசக்கி கொண்டு மணியை பார்க்க
“இன்னும் ஹாஃப் அன் ஹவர் தான் இருக்கு நான் என்னுடைய டீம் கூட போகணும் சரி நான் கிளம்புறேன்”
என்று அங்கு இருக்கும் குளியல் அறைக்குள் சென்று முகத்தை நன்றாக கழுவிக் கொண்டு எப்பொழுதும் ஹேண்ட்பேகில் இருக்கும் மேக்கப் செட் எடுத்துக் கொண்டு சிறிதாக டச் அப் ப் செய்து இயல்பாக கீழே தன் கைப்பை எடுத்துக் கொண்டு சென்று விட
இங்கே ரேயனுக்கு ஒரு இம்பார்டன்ட் கால் வந்ததால் அதை பேசி முடித்து மற்ற வேலைகளை முடிக்கவே சரியாக இருந்தது அவனுக்கான நேரம்..
வேலை அனைத்தும் முடித்துவிட்டு இரவு 11 மணி அளவில் தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் அண்ணன் தம்பி இருவரும் இன்று ரெஸ்டாரண்டிற்கு போக முடியவில்லை அந்த அளவுக்கு கழுத்தைப் பிடித்துக் கொண்ட வேலை இந்த அமர் அதிகபட்ச நேரம் ஆத்மிகா உடன் செலவழிப்பதை சுட்டிக்காட்டிய பிறகு மத்தியத்திற்கு மேல் கொஞ்சம் தீவிரமாக வேலையில் இறங்கி விட்டான்..
“அமர் இன்னும் நாள் ரொம்ப குறைவா இருக்கு பாட்டி கால் பண்ணி பேசிட்டாங்க மேரேஜ் பத்தி நீ என்ன சொல்ற”
என்று தம்பியிடம் ஆலோசனை
கேட்க..
“இதுல என்ன இருக்கு ஏற்கனவே சொல்லி வச்ச மாதிரி நமக்கு ஏத்த மாதிரி ரெண்டு பொண்ணுங்க கண்ணு முன்னாடி இருக்காங்க அதுவும் நம்ம அத்தை பொண்ணு அடையாளத்தோட அது என்ன மிராக்கிள் என்ன லாஜிக் எனக்கு புரியல சரி இப்ப இந்த ரெண்டு பொண்ணுங்கள தான் இப்ப நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகணும் ஆனா ஒன்னு நம்ம வீட்டுக்கு போய் பெரியவங்க டெஸ்ட் பண்ணி கல்யாணம் பண்றதுக்குள்ள நீயும் நானும் செத்து போயிடுவோம் பேசாம கல்யாணம் பண்ணிக்கிட்டு பேர பேத்திகளோட போய் அவங்க முன்னாடி போய் நின்னா ப்ராப்ளம்
என்று அதி புத்திசாலித்தனமான ஐடியாவை தரும் தம்பியை மேலும் கீழும் ஆக பார்த்து இதழ் வளைத்து சிரித்தவன்
“பொறுத்திருந்து பாரு என்னோட பிளானே வேற ஆக மொத்தம் நம்ம விரும்புற பொண்ணுங்கள தான் கட்டிக்க போறோம் ஆனா நம்ம வீட்டு ஆளுங்களோட சம்மதத்தோட நம்ம பகதூர் அரண்மனைல தடபுடலா ஊர் ஜனங்கள் ஒன்று கூடி ஆசிர்வாதம் பண்ணி பல வருஷங்களுக்கு பிறகு நடக்கப் போற ஜமீன் கல்யாணத்தை பார்த்து இந்த ஊரே ஆச்சரியப்பட போகுது”
என்று சொல்லிவிட்டு உறங்க சென்று விட அமர் மனதில்
“இவன் எதையோ பெருசா செய்யப் போறான் ஆனா யாருக்கும் எந்த பங்கமும் வரக்கூடாது ஆத்தா நீ தான் எங்க குடும்பத்தை காப்பாத்தணும்”
என்று மாரியம்மன் க்கு வேண்டுதலை சொல்லிவிட்டு மொபைலில் ஆத்மிகாவுடன் கடலை போட சென்று விட.
நாட்களும் இவர்களுக்காக காத்திருக்காமல் மின்னலைப் போல் கடந்து சென்றது..
ரேயன் அவ்வப்போது அபியிடம் திருமணத்தைப் பற்றியும் அக்ரீமெண்ட் பற்றியும் சொல்லி தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்க அபி அதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் ப்ராஜெக்ட் பற்றி தீவிரமாக செயலில் இறங்கி விட்டாள் இப்பொழுது அவன் அறைக்கு கூட செல்வதில்லை குழு நண்பர்களுடன் இறங்கி விடுகிறாள் தனியாக அவனிடம் சிக்கவில்லை அதற்கான போதிய காலம் அவனுக்கும் கிடைக்கவில்லை அவனுக்கு வேலைகள் தலைக்கு மேல் இருப்பதால் அலுவலகம் பக்கம் அவ்வப்போதுடன் வருகிறான்..
ஒரு நாள் தக்க சமயம் வந்து அவளை தான் அறைக்குள் அழைத்து காரசாரமான விவாதத்தை நடத்தி வைத்தான்
“இங்க பாரு என்ன ரொம்ப கெஞ்ச வைக்காத எனக்கு நாள் ரொம்ப கம்மியா இருக்கு சீக்கிரம் நான் சொல்றபடி நீ கேட்டு ஆகணும் நமக்கு சீக்கிரம் கல்யாணம் நடந்து ஆகணும் அதன் ஞாபகம் வச்சுக்கோ இந்நேரம் உன்ன கடத்தி போய் இருக்கலாம் ஆனால் ரொம்ப ஜென்டில்மேன் அதனால்தான் டீசன்ட்டா உன் கிட்ட ஹேண்டில் பண்ணுகிறேன் ஒழுங்கா ஓகே சொல்லிட்டு இல்லனா சேதாரம் உனக்கு தான்”
என்று அவன் கடுகடுப்பான குரலில் திமிராக சொன்னாலும் அவள் எதையும் கேட்பதாக இல்லை
“இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் எனக்கு வேண்டாம் உங்கள மாதிரி நிறைய பேர பாத்துட்டேன் எல்லாரும் கடந்து வந்தாச்சு நீங்க மட்டும் என்ன புதுசா”
அவளுக்கு எப்பொழுதும் துணை இருக்கும் அவளுடன் பணிபுரிந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சமீப காலகத்திற்கு முன்பாக தான் மாரடைப்பு வந்து இறந்து விடவே இனிமே தனக்கு யார் துணை என்பது போல் இவனை எப்படி சமாளிக்க போகிறோம் என்று அடி மனதில் பயம் இருந்தாலும் தன்னை காதலித்தவன் என்ற மனிதாபிமானம் அடிப்படையில் அவனிடம் பொறுமையாக பேசிக் கொண்டிருக்கிறாள்..
“முடிவா என்ன சொல்ல போற பேபி??”
“சும்மா இதே கேள்விகளை கேட்க வேண்டாம் ரே. அதான் சொல்லிட்டேன்ல நோ மீன்ஸ் நோ இதற்கு நான் ஒத்துக்க மாட்டேன் என் மேல உயிரா இருக்கிற ரேயன நம்பி தான் இவ்வளவு தூரம் ஓடி வந்தேன் ஆனா எல்லா ஆம்பளைங்க மாதிரி தான் நீங்களும் முடிவு பண்ணிட்டீங்க இதுக்கு அப்புறம் என்னோட காதல் உங்களுக்கு கிடையாது”
என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே சென்று விட மனதிற்குள்
“அவசரப்பட்டுட பேபி இனி என்னோட கேம் ஸ்டார்ட்”
என்று மனதிற்குள் சூளுரைத்துக் கொண்டான்..
அபி விரைவாக வந்துவிட்டாள் காரணம் வேலைகள் தலைக்கு மேல் இருப்பதால் அவளால் அந்த ரெஸ்டாரண்டில் இருக்கும் அக்கவுண்டன் வேலை சரியாக கவனிக்க முடியவில்லை அதற்கு பதிலாக புதிய நபர் வேலைக்கு அப்ளிகேஷன் போட்டு இருப்பதால் தனக்கு அந்த வேலை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டாள்
ஆத்மி மட்டும் வேலை செய்து கொண்டிருக்கிறாள் துணைக்கு அமர் இருக்கிறார் அதனால் அவளுக்கு கவலை இல்லை அவனை அழைத்துச் சென்று இரவு அவனை அழைத்து வந்து விடுவான் அன்று இரவு ஆத்மி காக அபி நீண்ட நேரம் காத்துக்கொண்டிருக்க இரவு 11 தாண்டிய பிறகு தான் வந்தாள்..
தூக்க கலக்கத்தில் இருந்தவள் ஆத்மியை வரவேற்று அவளுக்கு உணவளிக்க அவள் அமைதியாக சாப்பிட்டுவிட
அபி அதிகபட்ச தூக்க களைப்பால் தன் அறைக்குள் முடங்கிவிட இங்கே ஆத்மி இத்தன அறைக்குள் தாழ் போட்டுக் கொண்டு சுவரொடு சாய்ந்து கதறி துடித்துக் கொண்டிருந்தாள் மௌனமாக
அவள் அங்கிருந்து கிளம்பியதில் இருந்து இப்பொழுது வரை கிட்டத்தட்ட 50 மிஸ்டு கால் அமர் என்னிலிருந்து ஆனால் அவள் எடுக்கவில்லை அடிக்கடி அழைப்பு வந்து கொண்டிருக்கவே சுவிட்ச் ஆப் செய்து விட்டு
“எனக்கு நீ வேண்டாம் அமர்”
என்று சொல்லி புலம்பிக்கொண்டே அப்படியே மயங்கி சரிந்தாள்
