தித்திக்கும் இதழில்? 'தீ'? பிடிக்கும்
17) இதழ் 💋 தீ 🔥
“என் பொண்டாட்டி கிட்ட இருந்து எனக்கு எந்த சுகமும் கிடைக்கல உனக்கு வாழ்நாள் செட்டில்மெண்ட் நா மாசம் மாசம் தரேன் நான் சொல்ற கெஸ்ட் ஹவுஸில் ராணி மாதிரி நீ இருக்கலாம் எனக்கு நீ கம்பெனி கொடுத்தா போதும்”
“உன்னோட உடம்பு அனுபவிக்கிறவன் தான் பிறவி பலன் அடைந்தவன் ஒரு ராத்திரிக்கு எவ்வளவு மட்டும் சொல்லு உனக்கான பணத்தை நான் தேடி வந்து தரேன் ஒரு நாள் ஒரே ஒரு நாள் என் கூட படுத்துட்டு போ”
இவ்வாறான வார்த்தைகளை வாழ்நாளில் கேட்டு கேட்டு அலுத்து போய் வாழ்க்கை வெறுத்துப் போனவளுக்கு அதையே மறைமுகமாக ஒருவன்
“அக்ரிமெண்ட் முறைப்படி திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை பெற்ற பிறகு நீ என் வாழ்க்கையை விட்டு சென்று விடு அதற்கான பணத்தை நான் உனக்கு தருகிறேன்”
என்று மிரட்டலாக சொல்லி போனவனுக்கும் என்ன வித்தியாசம் என்று யோசித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தாள் அபி
காலிங் பெல் சத்தம் கேட்டு கதவை திறந்த ஆத்மி சோகம் தோய்ந்த முகத்தோடு இருக்கும் அபியை பார்த்து நெற்றி சுருக்கி
“அக்கா என்ன ஆச்சு உனக்கு ஏன் இவ்வளவு டல்லா இருக்க கோவிலுக்கு போயிட்டு வந்ததுக்கு அப்புறம் நீ சந்தோஷமா ஃபீல் பண்ணுவன்னு பார்த்தா எப்படி இருக்க சரி டிராமா எல்லாம் பார்த்து அழுது போய் இருப்ப”
என்று அவளை கேள்விகளை கேட்டு அவளே ஒரு சமாதானம் சொல்லி அவளை கைபிடித்து அழைத்து வர அவள் பிரம்மை பிடித்தது போல் அப்படியே சோபாவில் அமர்ந்து கொண்டாள்
“அக்கா நான் சாப்பிட்டேன் நீ”
என்று கேட்க கோவிலில் அபிஷேகம் முடிந்த பிறகு தான் விரதத்தை முடிப்பவள் என்று அதுபோல அவளிடம் கேட்க..
“இல்ல கோவில்ல மிகப்பெரிய தரிசனம் அது மட்டும் இல்லாம இன்னிக்கி அங்க அன்னதானம் கூட நடந்தது அங்கே சாப்பிட்டேன் நீ போய் தூங்கு”
என்று அவளை அனுப்பி விட அறைக்குள் வந்தவள் மொபைலில் ஆல்ரெடி காலில் வெய்ட்டிங்கில் இருந்த அமருடன் கதைக்கத் தொடங்கினால் இருவரும் நீண்ட நேரமாக என்ன பேசினார்கள் ஏது பேசினார்கள் என்று தெரியாமல் பேசிக்கொண்டே இருந்தார்கள் ஏதோ பல நாள் காதலர்கள் போல..
“நாளைக்கு உனக்கு தான் லீவு இல்ல ஏதாவது சொல்லி கொஞ்சம் வெளிய வா நம்ம ரெண்டு பேரும் மனசு விட்டு பேசலாம் அவுட்டிங் போன மாதிரி இருக்கும் அப்படியே டேட்டிங் முடிச்ச மாதிரி இருக்கும்ல”
என்று புதியதாக ஒரு பெண்ணிடம் பேசும் காதலனை போல் குழைந்தவாறு வெட்கப்பட்டு கொண்டு பேச வாழ்க்கையில் முதல் முதலில் காதல் வார்த்தைகளை கேட்க கேட்க பிஞ்சு பெண்ணின் மனம் ஆசை அலை பாய்ந்தது..
“சரிங்க அக்கா கிட்ட சொல்லிட்டு நாளைக்கு உங்களை மீட் பண்றேன் நானும் இத பத்தி யோசிக்க நினைச்சேன் உங்களை மீட் பண்ணி மத்ததெல்லாம் பேசணும்னு நாளைக்கு மீட் பண்ணலாம் ஓகே டைம் ஆயிடுச்சு குட் நைட்”
என்று சொல்ல அவனும் அவசர அவசரமாக
“அவ்ளோ சீக்கிரமா வா என்னோட தூக்கத்தை கெடுத்துட்டு நீ தூங்க போறியே அவ்வளவுதானா??”
என்று ஏக்கமாக சொல்ல அவளோ ஒன்றும் புரியாமல்
“டைம் என் ஆகப்போகுது பேசறதுக்கு என்ன இருக்கு தூக்கம் வருதுல்ல”
என்று சொல்ல
“உன்ன வெச்சிக்கிட்டு போடி”
என்று நச்சென்று ஒரு இச்சை கொடுத்துவிட்டு போனை கட் செய்துவிட அவன் நிம்மதியாக கவுந்து படுத்துக் கொண்டான் ஆனால் பெண்ணவளுக்கு தூக்கம் எட்டாக்கனியாகிவிட்டது..
ஒருவழியாக புரண்டு படுத்து நித்ராதேவி இடம் சரணடைந்து விட்டாள்..
இங்கே உறக்கம் வராமல் தவித்த அபி நாளை ஏதாவது ஒன்று சொல்ல வேண்டும் என்பதற்காக தக்க ஆதாரத்தை திரட்டிக்கொண்டு நாளை அவனைப் பார்க்க தயாராக இருந்தாள்..
“நீ நெனச்சாலும் என்னால உனக்கு ஒரு பயனும் இல்லை நாளைக்கு நான் சொல்ல போற விஷயத்தை அப்புறம் தான் தெரியும் என்னோட நிலைமை என்னன்னு”
என்று கவலை தோய்ந்த குரலில் ரேயனின் புகைப்படத்தை பார்த்து புலம்பிக் கொண்டிருக்க..
அப்பொழுது ஜெய் இடமிருந்து அந்த மருத்துவ ரிப்போர்ட் வந்தது இது இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே அவள் உடல் பரிசோதனையில் கிடைத்த ரிப்போர்ட் தான்..
சாதாரண பெண்கள் 13 அல்லது 14 வயதில் தான் பருவம் அடைவார்கள் ஆனால் சூழ்நிலை உணவு அதன் காரணத்தினால் பத்து வயதிலேயே அபி பருவ வயதை அடைந்து விட இதோடு அவள் வயது வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் படப்பிடிப்புக்கு செல்வதற்காக அனைவரும் முழு மருத்துவ பரிசோதனை எடுக்க வேண்டும் என்று சொல்ல அப்பொழுது அவளது மாதவிடாய் சமயம் மாதவிடாய் சமயத்தில் மட்டும் அவள் வெளியே எங்கேயும் வர மாட்டாள்
வலி உயிர் போகும் இது எல்லா பெண்களுக்கும் இருப்பதால் தனக்கும் அப்படி என்று சாதாரணமாக விட்டு விடவே அது பெரிய கொடிய விஷயத்தை கொண்டு வந்தது ஒருநாள் அதிக வலி காரணமாக மருத்துவமனையில் தன்னை சோதிக்கும் பொழுது இந்த மாதவிடாயால் இருக்கும் பிரச்சனையை மருத்துவரிடம் விளக்க
அவரும் அவளுக்கு ஸ்கேன் அனைத்தும் செய்து கர்ப்பப்பை மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் சிறுவயதிலேயே பருவத்தை அடைந்து அதை சரியான கவனிப்பு இன்றி அதிக ரத்தப்போக்கு அதிகபட்ச வயிற்று வலி அதன் காரணத்தால் கர்ப்பப்பை மிகவும் பலவீனமானதால் அதிகபட்சம் உச்சகட்ட உடலுறவு வைத்தால் உடலுக்கு கெடுதல் அது மட்டுமில்லாமல் ஒரு கருவை தங்கும் அளவிற்கு அங்கே பலமில்லை ஐந்து சதவீதம் வாய்ப்பு இருக்கிறது அவ்வளவுதான் என்ற மருத்துவரின் அறிக்கை வந்தது..
அதன் பிறகு வாழ்க்கை வெறுத்துப் போய்விட்டால் தன்னால் ஒரு ஜீவனை சுமக்க முடியாது தன் வாழ்க்கை அவ்வளவுதான் என்று மனதை திறப்படுத்திக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறாள் மருத்துவ அறிக்கை பத்திரமாக அவள் வீட்டில் இருக்கிறது..
எதற்கும் பயன்படாது அந்த ரிப்போர்ட் இப்பொழுது ஆத்ரேயனின் போட்டிருக்கும் நிபந்தத்திற்கு எதிர்மறையான ஒரு ஆதாரமாக அவளுக்கு தேவைப்பட்டது..
அவள் கரங்கள் தன்னிச்சையாக தன் வயிற்றை வருடி கொண்டது
“நான் பட்டுப்போன நிலம் என்னால உங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்ல ரேயன் நீங்க நல்லா இருக்கணும் அது போதும் எனக்கு இந்த உலகத்துல காதல் மட்டும் செல்லாது காமமும் தேவைப்படுது அதுக்கப்புறம் ஆதாரமா வாரிசுக்காக ஒரு குழந்தையும் தேவைப்படுது ஆனா என்கிட்ட காதல் மட்டும் தான் இருக்கு அத வச்சுக்கிட்டு என்னால உங்க கிட்ட நெருங்க முடியாது வாழ்க்கைக்கு முக்கியமான ரெண்டு விஷயம் என்னிடம் இல்லை முழுசா கணவன திருப்தி படுத்த முடியாத ஜடம் ஒரு கருவை தாங்க முடியாத வலுவிழந்த கர்ப்பப்பை இப்படி பட்டவள எவனுக்கு பிடிக்கும் இது தெரியாம வெளிய அழகா இருக்க நிறைய சுகம் கொடுப்ப பல பலனு இருக்கிறனு என் உடம்புக்கு அலைஞ்சிகிட்டு வரானுங்க”
என்று வலிநிறைந்த விரக்தி சிரிப்போடு அப்படியே கண்களை மூடி உறக்கத்தை தழுவினாள் ..
மறுநாள் காலை ஆர்ப்பாட்டம் இல்லாமல் விடிய காலையில் ஒருவித எரிச்சலோடுவே கண் விழித்தாள் அபி வயிற்றில் சுர் என்ற வலி நேற்றுதான் இதைப் பற்றி யோசித்தோம் காலையிலே வந்துவிட்டது காலையில் வரும் மாதவிடாய் இருக்கிறதே உயிர் போகும் தொல்லை அன்றைய நாள் முழுதும் எரிச்சல் கடுகடுப்பாக இருக்கும்..
“வந்துட்டியா மாசம் நீ மட்டும் வந்து என் உயிரை எடுத்துட்டு போ சரியான இம்சை”
என்று குளியல் அறைக்குள் சென்று குளித்து முடித்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஓரமாக அமர்ந்து விட அருகில் வந்த ஆத்மி அவள் முகத்தையும் அவள் மாற்றத்தையும் பார்த்து புரிந்து கொண்டவள்
“என்னக்கா பசங்க(மாதவிடாய் செல்லமாக கலாய்த்து கூறும் பெயர்) வந்துட்டாங்களா சரி நான் உங்களுக்கு வந்து கஞ்சி ரெடி பண்ணி எடுத்துட்டு வரேன்”
என்று சொல்லி கிச்சனுக்குள் சென்று உழுத்த மாவு களி கேழ்வரகு கஞ்சி இரண்டையும் தயார் செய்து வந்து சுடச்சுட அவளுக்கு கொடுக்க சூடு ஆறிய பிறகு பொறுமையாக உண்டு முடித்தவள் தனக்கு ஓய்வு வேண்டுமென்று உறங்கிவிட..
ஆத்மிகா அவளிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றுக் கொண்டவள் சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று ஷாப்பிங் மாலுக்கு சென்றாள் அங்கே பொருள்கள் எல்லாம் வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவள் பின்னால் யாரோ நிற்பது போல் இருக்க திரும்பி பார்க்கும் பொழுது அவளை அணு அணுவாக பார்வையால் பருகிக் கொண்டே அமர் தான் நின்று கொண்டிருந்தான்..
“அட வந்தா பேச்சு கொடுக்க மாட்டீங்களா இப்படியா அமைதியா நிக்கிறது சரி சில பொருட்கள் வாங்கணும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க”
என்று அவன் கையிலும் ஒரு பையை கொடுக்க அனைத்தையும் சுமந்தபடி ஒரு வழியாக ஷாப்பிங் அனைத்து முடிந்து இருவரும் ஃபுட் கோட்டிற்கு வர..
“எனக்கு பிரான் ஃபிரைடு ரைஸ் சிக்கன் லாலிபாப் உங்களுக்கு என்ன வேணும் ஆர்டர் பண்ணிக்கோங்க “
என்று சொல்லிவிட அவனும் தனக்கான உணவை ஆர்டர் செய்து உணவுக்காக இருவரும் காத்திருந்தனர் என்ன பேசுவது என்று தெரியவில்லை இருவர் மனதிலும் படபடப்பு இருக்கிறது ஆனால் வெளியே காட்டிக் கொள்ளாமல் எப்பொழுதும் போல இருக்கின்றனர் இது பொதுவாக காதலர்களுக்கு வரும் ஒரு சின்ன இனிய அவஸ்தை தான்..
“என்ன நேத்து நைட்டு போன்ல அப்படி பேசினோம் ஆனா நேர்ல என்ன பேச தெரியாம ஒருத்தருக்கு ஒருத்தர் முழிச்சுக்கிட்டு இருக்கோம் இந்த காதலோட அவஸ்தையே இதுதான் தெரியுமா இங்க பாரு என்னை சுத்தி வளச்சி பேச தெரியாது எனக்கு நீ வேணும் உன்ன பாத்ததுல இருந்து நான் நானா இல்ல மூணு நாள் என் தூக்கத்தை கெடுத்த ராட்சசி நீதான்
எனக்கு சினிமால வர மாதிரி பொறுமையா ஆற போட்டு விஷயத்தை சொல்லி உன்னை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணி புள்ள பெத்துக்கறது எல்லாம் ரொம்ப கஷ்டம் இப்பவே சொல்றேன் எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு எனக்கு நீ மட்டும் தான் வேணும் என்ன கல்யாணம் பண்ணிக்கோ உனக்கு சந்தோஷமான வாழ்க்கையை நான் தரேன் ஆல்ரெடி உங்க அக்கா கிட்ட எங்க அண்ணா இத பத்தி பேசிட்டாரு அதனாலதான் உங்க அக்கா எத பத்தியும் பேசாம அமைதியா இருக்கா காரணம் நீ சம்மதிச்சா மட்டும் தான் இதை பத்தி மேற்கொண்டு அவங்க பேசுவாங்க நீயும் என்னை புடிச்சிருக்குன்னு சொல்லுவ இல்ல??”
என்று ஒரு விதமான தோணியில் கேட்க அவள் மனதில் அவன் ஏமாறக்கூடாது வருத்தப்படக்கூடாது இல்லை என்று சொன்னால் அவன் இதயம் உடைந்து விடுமோ என்ற ஒரு பக்கம் இருந்தாலும் அவளுக்கும் அவன் பிடித்து இருக்கிறது அல்லவா வேகமாக..
“இல்லை இல்லை உங்களை எனக்கு புடிச்சிருக்குறத பத்தி தான் சொல்லுவேன் ஆனா அக்கா இருக்கும்போது நான் எப்படி உங்களை??”
என்று தயக்கத்தோடு சொல்ல அவள் நிலையை புரிந்து கொண்டவன் சிரித்துக் கொண்டே
“ஆல்ரெடி உங்க அக்காவுக்கும் எங்க அண்ணாக்கும் ஒரு லைன் ஓடிட்டு இருக்கு அது ரெண்டு பேரும் ஊருக்கு தெரியாமல் மறைத்துக்கொண்டு இருக்காங்க அவங்க இப்ப இல்ல அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இருந்தே காதல் வளர்த்திட்டு இருக்காங்க அதனால தான் லவ்வர மறக்க முடியாமல் உங்க அக்கா லண்டனுக்கு ஓடி வந்துட்டா கடவுள் இலவச இணைப்பா எனக்கு ஒரு ஜோடி சேர்க்க உன்னையும் சேர்த்து அனுப்பிட்டார் அவ்வளவுதான் வித்தியாசம்”
என்று ரேயனின் ஐந்து வருடங்களுக்கு முன்பாக நடந்த அபியின் சந்திப்பு விபத்தை பற்றி விளக்கி கூற ஆத்மினிக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது எங்கே தனக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைய காரணம் அபி அப்படிப்பட்டவருக்கு நல்ல வாழ்க்கை அமைய கூடாதா என்று மனதில் வேண்டிக் கொண்டவளுக்கு இதோ கடவுள் இருவரையும் ஜென்மத்தில் சிரிக்காததை போல இப்படி இணைய வைத்து விட்டாரே என்று கோடி நமஸ்காரங்கள் வைத்து விட்டாள்..
“என்னால என்ன சொல்றதுன்னு புரியலங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு நிம்மதியாக இருக்கு இப்படியே எல்லாம் நல்லபடியா இருக்கணும் என் வாழ்க்கையில எனக்குன்னு எனக்காக இருக்கிற உறவை நீங்கதான் உங்களை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் உங்க கடந்த காலமும் சரி நிகழ்காலமும் சரி எதிர்காலமும் சரி எல்லாம் நானா தான் இருக்கணும் வேறு யாருக்கும் இந்த இடத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன் பிகாஸ் எனக்கு ரொம்ப பொசசிவ் குணம் ஜாஸ்தி”
என்று கரகரப்பான குரலில் சொல்லிவிட அவனுக்கு சற்று பயம் வந்தாலும் இனி கடந்த காலத்தை பற்றி பேசுவதற்கு என்ன இருக்கிறது என்று அதை எளிதாக தவிர்த்தான் இருவரும் கைகளை கோர்த்து பொருட்கள் அனைத்தையும் ஒரு சேமிப்பு கிடங்கில் வைத்துவிட்டு ஒரு நல்ல காதல் திரைப்படத்திற்கு சென்று தங்கள் காதலை வளர்க்க திட்டமிட்டனர்..
இங்கே வயிற்றைப் பிடித்துக் கொண்டு வலியில் அபி கதறிக் கொண்டிருக்க அவள் அருகில் மேலாடை இல்லாமல் வெறும் ட்ராக் அணிந்து கொண்டு ஆத்திரேயன் என்ன செய்வது என்று தெரியாமல் கையறு பட்ட நிலையில் இருந்தான்..
