சீதையின் ராவணன்

This entry is part 18 of 18 in the series சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

அத்தியாயம் – 21

“சீக்கிரம் கவி. எவ்ளோ நேரம்?”

“இதோ கிளம்பிட்டோங்க.”

பட்டுப் புடவையில் எளிமையான அலங்காரத்தில் கொள்ளை அழகோடு வந்த மனைவியை கண்ணிமைக்காமல் பார்த்தான் வசந்த். 

“அப்பா. நான் எப்படி இருக்கேன்?”

“அம்மா மாதிரியே பொண்ணு. அம்மா தேவதைனா! பொண்ணும் குட்டிதேவதை தான்!”

மகள் கேட்ட கேள்விக்கு மனைவிக்கும் சேர்த்து பதிலளித்தான். அவனின் ஆளை விழுங்கும் பார்வையில் வெட்கம் கொண்டாள் பார்கவி. முதன்முறையாக அவன் பார்வைக்கு சலிக்காமல் மறுபார்வை பார்த்தாள். இத்தனை நாள் எதற்காக தவமிருந்தானோ அந்த காதல் பார்வையை பெற்றுவிட்டான் வசந்த். இந்த ஜென்ம பயனை அனைத்து விட்ட உணர்வு வந்தது. அரிதிலும் அரிது ஒரு பெண்ணின் வெல்வது. அது அவ்வளவு சுலபம் அல்ல. 

ஏற்கனவே மனதாலும் உடலாலும் பாதிக்கப்பட்டு இருத்தலின் மனதை சீராக்கி அவளின் மனதில் இடம் பிடிக்க அவன் பட்டபாடும் கொஞ்சநஞ்சமல்ல. பார்கவி யின் உணர்வதற்கு மதிப்பளித்து இன்றளவும் தள்ளி நின்று தன் கண்ணியம் காத்து நிற்கின்றான். 

ஒரு பெண்ணிற்கு உடலால் நெருங்கும் ஆண்மகனை விட மனதால் நெருங்கும் ஆண்மகன் வாழ்க்கை துணையாக கிடைப்பது வரமாகும். அந்த பாக்கியத்தை முன் ஜென்மத்தில் புண்ணிய பலனாக பெற்றாள் பார்கவி. 

அவள் கண்ணால் இடும் ஆணைகளை தலையாய கடமையாக நிறைவேற்றினான். கண்ணில் காதலியர் கடைக்கண் காட்டி விட்டால்;

மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்! 

“வாங்க! வாங்க தம்பி!”

கூடிய நின்றிருந்த அனைவரும் மிகுந்த மரியாதையோடு வசந்தை வரவேற்றனர். அக்கூட்டத்தில் கணவனோடு செல்வதை பெருமையாக உணர்ந்தாள் என்று கூறுவதை விட அவன் அவளை அவ்வாறு உணர வைத்தான் என்று சொல்வதே சிறப்பு. 

முதல் மரியாதையாக வசந்தின் தலையில் பரிவட்டம் கட்டி அம்மையப்பன்  கழுத்தில் இருந்த மாலையை அவனுக்கு அணிவித்த கையோடு மற்றொரு மாலையையும் கொடுத்து பார்கவியின் கழுத்தில் அணிவிக்குமாறு கூறினார் கோயில் குருக்கள். 

அத்தனை பேருக்கு முன்னேயும் அவள் கழுத்தில் மாலை அணிவித்து அவள் நெற்றியில் குங்குமப் பொட்டிட்டு தனது தர்மப்பத்தினியாக சம உரிமை வழங்கினான். 

“அடுத்த வருஷமே தம்பியைப் போல் ஒரு சிங்கக்குட்டி மை பெத்தெடுக்கனும்” என குருக்கள் ஆசிர்வதிக்க அதனை கேட்ட பார்கவி யின் உடல் சிலிர்த்தடங்கியது. 

கோயிலுக்கு பின்னால் இருந்த கற்பக விருட்சம் மரத்தில் சேலையினால் ஆன தொட்டிலை கட்டப் சொன்னார் வசந்தின் பாட்டி. அவர் சொல்வது போல் செய்ய முயன்றவளுக்கு அம்மரத்தின் உயரம் எட்டவில்லை. என்ன செய்வதென்று முழித்துக் கொண்டிருந்தவளின் இடையைப் பிடித்து மேல் நோக்கி தூக்கினான் வசந்த். 

அவனை தாதாவாக ஒருப் பார்வை பார்த்தவள் அம்மரத்தின் கிளையில் தொட்டிலை கண் கட்டினாள். 

“உன்ன மாதிரி அழகா; என் பேரனை மாதிரி கம்பீரமா; ஒரு சிங்கக்குட்டி யைப் பெத்துக்க கொடுமா” 

“போங்கப் பாட்டி.” 

வெட்கத்தில் சிவந்த முகத்தை வசந்தின் முதுகுக்கு பின்னால் மறைத்தாள் பார்கவி. 

அன்று முழுவதும் தன்னைத் தொடர்ந்திருந்த வசந்தின் பார்வையை உணர்ந்தே இருந்தாள் பார்கவி. 

“பாருமா. இன்னைக்கு பாப்பா எங்கக் கூடவே தூங்கட்டும். தம்பி எப்பயோ மாடிக்கு போயிட்டான். நீயும் விரசாப் போய் தூங்காத்தா.”

“சரிங்கப் பாட்டி.”

மிஞ்சி மிஞ்சி போனால் கீழிருந்து மேலாக மாடிக்குப் போக பத்து படிகள் தான் இருக்கும். அந்த பத்துப் படிகளும் நூறு படிகளாக பார்கவிக்கு காட்சியளித்தன. தயங்கித் தயங்கி ஒரு வழியாக மாடிக்கு வந்து விட்டாள். இப்போது தனதறைக்குச் செல்லும் வழியில் தனது கால்கள் இரண்டும் பின்னணிக் கொள்வதைப் போல் உணர்ந்தாள். 

வேர்க்க விருவிருக்க இன்று தான் திருமணமான புதுப் பெண்ணைப் போல் அவளது நெஞ்சம் படபடத்தது. கல்வியைத் திறந்து அறையின் உள்ளே சென்று பார்த்தவளின் கண்ணிற்கு வசந்த் இருப்பது போல் தெரியவில்லை. 

“இங்கே இருக்குறேன் கவி.”

பால்கனியில் இருந்து குரல் வரவே அங்கு சென்று பார்த்தாள். பால்கனி பதில் சுவற்றில் கையை வைத்து இரவில் முழு நிலவோடு தெரிந்த வானத்தை பார்த்துக் கொண்டிருந்தான். 

“தேன்மொழி எங்க?”

“அவ அவ பா பாட்டியோட தூங்கச் போயிட்டா”

“ஓஹோ! எதுக்கு நீ திக்கும்? பயப்படுறியா? “

“இல்ல.”

“அப்புறம் ஏன் இப்படி வேர்த்துருக்கு? இங்க வா. இப்படி வந்து உட்காரு.”

 அவளும் அங்குப் போடப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சில் அவனோடு சேர்ந்தமர்ந்தாள். 

“இந்த இதை பிடிச்சுப் பாரு”

அவள் கையில் நகைப் பெட்டி ஒன்றை கொடுத்தான்.நகையாகத் தான் இருக்கும் என நினைத்து அதனை திறந்து பார்த்தவள் அதிர்ந்தாள்.

ஏனெனில் அதில் இருந்தது முதன்முதலாக அவன் அவளுக்கு அணிவித்த மெல்லிய மஞ்சள் கயிறும் மற்றும் காலில் அணிவித்த இரும்பு வளையமும். அதனைக் கண்டவள் கேள்வியாக அவனைப் பார்த்தாள்.

“இது உனக்கு ஞாபகம் இருக்கா?”

அவளால் பேச முடியவில்லை. ஏனெனில் அவளுக்கு தெரியும் இது எப்போது? எங்கே? அவன் அவளுக்கு அணிவித்தான் என்று.

“இது எப்படி உங்கக்கிட்ட? இதைத்தான் அப்பவே தூக்கிப்போட சொன்னேனே?”

“தூக்கி எறியக் கூடிய பொருட்களா இது? இது எல்லாம் என்னோட பொக்கிஷங்கள். இத்தனை வருட என் தவ வாழ்க்கைக்கு கிடைத்த அரிய பொக்கிஷங்கள். உனக்காக காத்திருக்கும் போது இதுதான் எனக்கு துணையா இருந்துச்சு.” என்றவனீ அவளருகே நெருங்கி,

” ஒன்னு மட்டும் நல்லாள் புரிஞ்சுக்கோ.. இந்த ஊர் உலகத்துக்காக என்னைக்கும் உன் மனசை பூட்டி வைக்காத. ஏன்னா இந்த உலகம் தோற்றாலும் ஏசும்.. ஜெயிச்சாலும் ஏசும்.. ஊருக்காக மனசைப் பூட்டி வாழ்ந்தவன்னு உனக்கு ஒன்னும் சிலை வைக்கப் போறதில்ல.. இது உன் வாழ்க்கை; நம்ம வாழ்க்கை. அதை நமக்கேத்த மாதிரி நாம தான் வாழணும்..” என்றவனின் கண்ணோடு கண் கலந்து அவனுடன் அவனது உலகத்திற்குள் சென்றாள்.

அத்தியாயம் – 22

“உனக்கு ஒன்னு தெரியுமா? நாம ரெண்டு பேரும் பார்த்து இருக்கோம்; பேசி இருக்கோம்; ஆனால் காதலா ஒரு பார்வை கூட பார்த்ததில்லை. என் விரல் நுனி கூட உன்னை தொட்டதில்லை. ஆனா நீ எங்க இருந்தாலும் என் பார்வை உன்ன சுத்தி தான் இருக்கும். நாம பழைய காலத்துல என் காதலை நீ ஒரு நிமிஷம், ஒரு செகண்ட் கூட உணரவேயில்லையா? நீ என்ன விட்டு பிரிஞ்சு போகமாட்டேன்னு நான் உறுதியா நம்புனேன்.  உனக்காக என் பாட்டிகிட்ட அம்மா கிட்ட எல்லார்கிட்டயும் சண்டை போட்டேன். ஆனா நீ என்னை விட்டு போயிட்ட. நீ போனப்போ எனக்கு கொஞ்சம் வருத்தம் இருந்துச்சு. காலப்போக்கில் அந்த வருத்தம் கோபமா மாறிடுச்சு. நான் உன்னை பாதிக்கவே இல்லையா? நான் உன்னை காதலித்த அளவுக்கு நீ என்னை காதலிக்கலையோன்னு  தோணுச்சு. அப்ப கூட உன்னை தேடி வரணும்னு எனக்கு தோனல.  எனக்காக நீ காத்திருப்பேன் முழுமனதோடு நம்புனே. ஆனா நீ வரவுமில்ல.  உன்னை பத்தின தகவல்கள் எதுவும் எனக்கு தெரியவுமில்ல.”

அவன் பேசப் பேச அவன் எந்த அளவிற்கு அவளை தேடி இருக்கிறான் என அவள் இதயம் உணர்ந்தது. தான் இந்த அளவிற்கு ஒருவனால் நேசிக்க படுவோம் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. ஒருவரை நேசிப்பதை விட ஒருவரால் நேசிக்கப் படுவது ஒரு சுகம். அந்த சுகத்தை இப்போது அவள் அனுபவித்தாள். எந்த காதலுக்காக அவளது மனம் ஏங்கியதோ  இப்போது அந்த காதல் அவள் கையிற்குள். காதல் என்றால் என்ன? ஆணுக்கும் – பெண்ணுக்கும் இடையே உள்ள காதல் என்பது தாகமும் குடிநீரும் போல. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.

அழகைப் பார்த்து வரும் காதல் அந்த அழகை அனுபவிக்க வேண்டும். அதனை அனுபவித்துவிட்டால், இயற்கையாகவே அதன் அழகு சலித்துவிடும். இதைத்தான் காதலென்ற பெயரில் பலர் இன்று செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடைசி வரை ஒரு உயிர் எந்தவித சுயநலமுமின்றி நம்முடன் பயணிக்க வேண்டுமென்றால், காதல் எனும் ஆயுதம் அதற்கு தேவை. இப்படி கடைசி வரை ஒருவருக்கொருவர் துணையோடு வாழவேண்டுமெனில், அந்தக் காதல் எவ்வளவு ஆழமானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும். வசந்தின் காதல் உள்ளத்தின் தேடல். அவனது தேவை அவளது உடல் அல்ல; உள்ளம் மட்டுமே. 

வினாடிக்குள் உலகத்தை சுற்றி வர வல்லது நம் மனது. வசந்த் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அவன் முதலில் இருந்து அவளிடம் நடந்து கொண்டவைகள் அத்தனையும் அவளது கண்முன் வந்து சென்றது. 

‘ஓரிடத்தில் கூட அவன் என்னை காயப்படுத்தவில்லை. எனது உணர்விற்கு மதிப்பளித்து இதோ இந்த நொடி வரை விலகி நிற்கிறான். இவனுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?’ என தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் பார்கவி.

“உன்னை முதன் முதலில் டெக்ஸ்டைல் மில்லில் டெய்லராக பார்க்கும்போது எப்படி இருந்தது தெரியுமா? எவ்வளவு ஆவலா உன் முகத்தைப் பார்த்து தெரியுமா? ஆனால் உனக்கு தான் என் ஞாபகமே இல்லையே. கல்லையும் மண்ணையும் பாக்குற மாதிரி என்னை பார்த்த. அப்புறம் உன்னை பத்தின எல்லா தகவல்களையும் விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன். உன்ன பழைய பார்கவியா  பாக்கணும்னு முடிவு பண்ணுனேன். அம்மா மூலமாக உன்கிட்ட பேசி கல்யாணத்திற்கு சம்மதிக்க வச்சேன். இப்போ உன் மனசுல என்ன ஓடுதுன்னு  எனக்கு நல்லா தெரியும். உனக்கு நான் இதை செய்கிறேன்.  எனக்காக பதிலுக்கு இதையெல்லாம் செய்யனும்னு எதிர்பார்த்து வருவதல்ல காதல்.  நீ எப்படி இருந்தாலும் கடைசி வரைக்கும் உன் கூட துணையா இருப்பேன். இதுதான் என் காதல். நீ கைமாறாக எனக்கு எதுவும் செய்ய வேண்டாம். இதே மாதிரி என்னை நேசிச்சாலே போதும்.”

அவன் கூறி முடிக்கவும் அவனை பின்னால் இருந்து இறுக அணைத்திருந்தாள் பார்கவி. இத்தனை நாள் அவர்கள் இருவருக்கும் நடுவே மெல்லிய திரையாக இருந்த மனத்திரை ஒன்று இப்போது காணாமல் போனது. 

“சாரி மாமா. எப்பவும் போல இப்பருவம் உங்களை தப்பா தான் புரிஞ்சுகிட்டேன். கைமாறு அது இதுன்னு. உங்களோட இத்தனை வருஷம் காதலை இப்போ நல்ல புரிஞ்சுகிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க.”

“ஏய் லூசு. நீ மனசு கஷ்டப்படனும்னு நான் இதை சொல்லலை. இது எல்லாம் என் மனதில் கிடந்த ஏக்கங்கள். அதை உன்கிட்ட சொல்லனும்னு தோணுச்சு. சொன்னேன். ஒன்னு மட்டும் நல்லாள் புரிஞ்சுக்கோ. நம்முடைய காதல் உடல் சார்ந்த காதல் இல்லை. மனதால் மனதை அறியும் காதல்.”

“ம்ம்ம்” என்றவாறு அவனது நெஞ்சில் சாய்ந்தாள் பார்கவி. காடு மலையெல்லாம் திரிந்து தன் வீடு வந்து சேர்ந்த உணர்வை அவ்வணைப்பு கொடுத்தது. 

“சரி பனி ரொம்ப கொட்டுது. உள்ளப் போய் தூங்குவோமா?”

“மாமா. பாட்டி சொன்னாங்க.”

“என்ன சொன்னாங்க?”

“அதான் சிங்கக்குட்டி?”

“அதெல்லாம் காலத்தின் மாற்றத்தில் தான் இருக்கு. இன்னும் உன் மனசு முழுசா தயாராகல. நானும் உன்னை ஃபோர்ஸ் பண்ண மாட்டேன். அதுவா நடக்கும் போது நடக்கட்டும். இப்போ உனக்கு நான். எனக்கு நீ.”

விடிய விடிய பல கதைகள் பேசினர். இத்தனை வருடங்கள் தான் கடந்து வந்தப் பாதையை நகைச்சுவையாக கூறினான். அவன் கூறுவதை கேட்ட பார்கவி தன் மனதார சிரித்தாள். 

அத்தியாயம் – 23

“தேன்மொழி சீக்கிரம் கிளம்பு. நேரமாச்சு. அப்பா கிளம்பி வந்துடுவாங்க.”

“இதோ அஞ்சு நிமிஷம் மா.”

காலையில் எழுந்ததில் இருந்து பம்பரமாக சுழன்று கொண்டிருந்தாள் பார்கவி. 

“அத்தை இந்தாங்க. உங்க பீபி டேப்லெட். டாக்டர் உங்களை ரெஸ்ட் எடுக்க சொல்லிருக்காரு. அதனால் நீ தூங்குங்க. எங்கயாவது வேலை செய்வதைப் பார்த்தேன். ஒரு ஊசிக்கு இரண்டு ஊசி போட வைச்சுருவேன். ஜாக்கிரதை.”

தன்னை மிரட்டி விட்டுச் செல்லும் மருமகளை ஆதுரத்துடன் பார்த்தார் ராணியம்மா. 

“கவி. கவி.”

“இதோ வர்றேங்க. இந்தா இதை மிக்ஸியில் போட்டு அரைச்சு வைச்சுடு. அவ்ளோ தான் முடிஞ்சுது. இந்தா நீ இந்த பழத்தை ஜுஸ் போடு. பெரிய பாப்பாக்கு மாதுளம் பழ ஜுஸ் போடு. சின்னவளுக்கு அன்னாசி பழம் தான் பிடிக்கும். அங்க கட் பண்ணி வச்சுருக்கேன்.”

சமையலுக்கென்றிருந்த ஆட்களிடம் அவர்களுக்குரிய வேலைகளை பிரித்துக் கொடுத்துவிட்டு தன் கணவனைத் தேடிச் சென்றாள் பார்கவி.

“கவி கவி கவிவிவி.”

“இதோ வர்றேன்னு சொல்றேன்னு”

வேகமாக மாடி ஏறியவள் தங்கள் அறைக்குள் சென்று பார்த்த போது சிரித்து விட்டாள். அவள் பெற்ற அருமை மகன் அவனை வேலைக்கு செல்ல விடாமல் தடுத்துக் கொண்டிருந்தான். 

“எங்கப் போன நீ? உன்னை எவ்வளவு நேரம் தான் கூப்பிடுவது? பாவம் மாஸ்டர் எப்படி அழுகுறான் பாரு?”

தனது ஒன்றரை வயதே ஆன கடைக்குட்டி சிங்கத்தை அவள் கைகளில் கொடுத்துவிட்டு அக்குழந்தை அசிங்கம் செய்திருந்த சட்டையை மாற்றி வேறு அணிந்து கொண்டு கிளம்பினான். 

“அப்பா எனக்கு ரெட்டை சடை போட்டு விடுங்க. அம்மாக்கு சரியாகவே போடத் தெரியல” என்றவாறு வசந்திடம் வந்து நின்றாள் அவனது நான்கு வயதான இரண்டாவது மகள் கனிமொழி. 

“ஏன்டி நான் தலைசீவி விட்டால் என்னவாம்?”

“ம்ம்ம். அங்கங்கே கோணை கோணையா நிக்கும். இதே அப்பா சீவி விட்டால் சாயங்காலம் வரை அவுராது.”

அழகாய் வாயடித்த சின்ன மொட்டைத் தூக்கிக் கொஞ்சினான். 

“வர வர உனக்கு வாய் அதிகமாகிடுச்சு.”

“போங்கம்மா. ஒரு தலையைகூட சீவத் தெரியலை. இவங்களையெல்லாம் எப்படிப்பா ஒரு கம்பனிக்கு சேர்மன் ஆக்குனீங்க.” 

தன்னை மேலும் வாரிய பெரிய மகளை முறைத்துக் பார்த்தாள் பார்கவி.

“ஏய் கொன்னு கொன்னு” 

தன் தாயை அவர்களிடத்தில் இருந்து காக்கும் பொருட்டு தன் பிஞ்சு கையை தூக்கி மிரட்டினான் துரைசிங்கம். 

“முளைக்கவேயில்ல நீ என்னைப் பார்த்து மிரட்டுறியா? இரு உன்னைப் பண்ணுறேன்னு பாரு”

மூன்று குழந்தைகளும் தன் தகப்பனோடு சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்க

“ஆஹா! பெரிய குழந்தையும்  விளையாட ஆரம்பிச்சாச்சா. கிளம்புங்க. தேன் மொழி கனி மொழி கீழே போங்க. டிபன் ரெடியாயிருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல ஸ்கூல் பஸ் வந்துடும். ம்ம். கிளம்புங்க.”

மூன்று பேரையும் உருட்டி மிரட்டி சாப்பிட வைத்தவள் மகள்கள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பிய கையோடு கணவனோடு அலுவலகம் புறப்பட்டுச் சென்றாள். பிஞ்சு பாலகனாக துரைசிங்கத்தையும் தன்னுடனே தூக்கிச் சென்றாள். 

அவளது அலுவல் வேலைகளை மாலைக்குள் முடித்து விட்டு பள்ளியில் இருந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்காக வீடு திரும்பி காத்திருப்பாள். இன்றைய சமூக சூழலில் கல்வியையும் நல்ல நடத்தையையும் ஊக்குவிப்பது குடும்பத்தின் பொறுப்பாகும்.

அதனை ஒரு நல்ல இல்லத்தரசி யாக கடைபிடித்தாள் பார்கவி. மனைவியாக வசந்தை பார்த்துக் கொள்ளவும் தாயாக தன் குழந்தைகளை கண்ணுக்குள் இளமையாக பார்த்துக் கொண்டாள். தனது மாமியாருக்கு நல்ல மருமகளாகவும் தோழியாகவும் இருந்தாள். இத்தனை அவதாரங்களை மும் அவளால் தனியாக எடுக்க முடியுமா? அவளுக்கு பெரும் உறுதுணையாக இருப்பது வசந்தின் காதலாகும். 

குடும்பம் என்கிற அமைப்பு கொஞ்சம் குறைபாடுகளும், அதிக நன்மைகளும் வாய்ந்தது. குடும்ப தலைமை என்பது, அடக்குமுறை, ஆக்கிரமிப்பின் ஆரம்பம் என்று உணர்வதை விட, சரியான பாதுகாப்பு ஏற்பாடு என்பதே உண்மை. ஒரு குடும்பத்துக்கு ஒரு தலைமைதான் சாத்தியம். குடும்ப தலைமை என்பது, அரசு தலைவர் போல, அதிக அதிகாரம் உள்ள பதவி அல்ல. அதிக பொறுப்பு உள்ள பதவி என்பதே பொருள். அடக்கு முறைக்கோ, அடிமைத்தனத்துக்கோ இங்கே இடமில்லை. பெண்களை மதித்து, அவர்களது உணர்வுகளை போற்றி, அவளுக்கு துரோகம் செய்யாது, அடிமைப்படுத்தாது, அரவணைப்பு காட்டும் நல்ல ஆண்மகன் தலைமையிலானது என்பதே சிறந்த பாதுகாப்பு தலைமை.

வசந்த் சிறந்த குடும்பத் தலைவனாக இருக்கின்றான். தன்னை மறந்து போன காதலியை தேடிக் கண்டுபிடித்து தனது நேச முகம் மறக்கலாமோ என நியாயம் கேட்டு அவளது மனதில் இடம் பிடித்து அவள் வாழ்வின் துயர் போக்கி அன்பை மட்டுமே வாரி வழங்குகின்றான். 

சீதையைப் போல் பரிசுத்தமான பார்கவின் வாழ்க்கையில் ராமனே ராவணனாக மாறி சிறையெடுத்தான். கலங்கமில்லாத தனது காதலை அவளுக்கு புரிய வைத்தான். உண்மையான காதல் என்றும் கலங்கமற்றது. அது எத்தனை துன்பங்கள் வந்தாலும் மாறாது. வசந்த் பார்கவிக்கு நல்ல தந்தையாக தாயாக தோழனாக கணவனாக குருவாக ஏற்றும் அவளோடு வாழ்வான். நாமும் அவர்களை வாழ்த்தி விடை பெறுவோம். 

                     நன்றி!

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *