சீதையின் ராவணன்
அத்தியாயம் – 12
மணமகனாக பட்டு வேட்டி சட்டையில் வசந்த் அமர்ந்திருக்க அருகில் கொழு பொம்மை போல் அமர்ந்திருந்தாள் பார்கவி.
இருவரது கையிலும் அழகிற்காக வைக்கப்பட்டிருந்த சிவப்பு தேன்பூக்களினால் கட்டப்பட்டிருந்த மாலையை கொடுத்தனர்.
“பொண்ணும் பையனும் மாலை மாத்திக்கோங்கோ.”
ஐயர் போல் வேடமணிந்த விநோத் கூற வசந்தும் பார்கவியும் மாலை மாற்றிக் கொண்டனர்.
“இந்தாம்மா! இதை எல்லார்கிட்டயும் காட்டி ஆசிர்வாதம் வாங்கிட்டு வா. “
விநோத் மெல்லிய மஞ்சள் பூசிய கயிற்றை ஆர்யமாலாவின் கையில் கொடுக்க பொறாமை தீயில் உள்ளுக்குள் வெந்து போனவள் அதனை சிறுவர்களிடத்தில் எடுத்தச் சென்று ஆசிப் பெற்று வருவது போல் காண்பித்து அவர்களிடம் வேப்பம்பூவை அச்சதைப்பூக்களாக கொடுத்து விட்டு வந்தாள்.
“கெட்டி மேளம். கெட்டி மேளம்”
விநோதம் சத்தமாகப் கூறவும் தன் கையில் இருந்த மெல்லிய மஞ்சள் கயிற்றை பாா்கவியின் கழுத்தில் கட்டினான் வசந்த். அனைவரும் வேப்பம்பூவை அவர்கள் மேல் தூவி மணமக்களை ஆசிர்வதித்தனர்.
“மணமக்கள் கடவுள் கிட்ட ஆசிர்வாதம் வாங்குங்க”
இருவரும் அங்கே பொம்மையாக இருந்த விநாயகர் சிலையிடம் ஆசிர்வாதம் வாங்கினர்.
“பையன் பொண்ணு கால்ல இந்தமெட்டியை மாட்டி விடுங்கோ”
விநோத் தன் கையில் வைத்திருந்த இரும்பு வளையத்தை வசந்த் கையில் கொடுக்க அதனை வாங்கி பார்கவியின் பாதத்தை தன் மடியில் தாங்கி வைத்து போட்டுவிட்டான்.
“இரண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சுது. வாங்க எல்லோரும் சாப்பாடு சமைக்கலாம்.”
சிறுவர்கள் அனைவரும் ஆளுக்கொரு வேலை செய்த வண்ணமிகு கற்க பார்கவியும் அவர்களோடு கலந்து கொண்டாள். அவளைப் பொறுத்தவரை இது பொம்மை கல்யாணம். ஆனால் வசந்தை பொறுத்தவரை இது அவனது முதல் கல்யாணம். கல்யாணத்தில் செய்யப்படும் அனைத்து சடங்குகளும் விளையாட்டாக செய்யப்பட்டன.
கூட்டாஞ்சோறு ஆக்கி சாப்பிட்டுட்டு அனைவரும் வீட்டுக்கு செல்லும் வேலையில் பார்கவி தன் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிற்றை அவிழ்பதையும் நெற்றியில் இருந்த செந்தூரத்தை எடுப்பதையும் காலில் இருந்த இரும்பு கம்பியை உருவுவதையும் கண்டவன் அவள் அருகில் வந்தான்.
“இதையெல்லாம் என்னப் பண்ணப் போற கவி?”
“என்னப் பண்ணுவேணா? தூக்கிப் போடப்போறேன்.”
“தூக்கிப் போடுறது தானே! நானே தூக்கிப் போட்டுருறேன். எங்கிட்ட கொடு.”
அதனை அவளிடம் இருந்து வாங்கியவன் தனது சட்டைப் பையில் பத்திரமாக வைப்பதை பார்த்தாள் ஆர்யமாலா.
‘இதை இப்படியே விட்டா சரி வராது. என்னை அவன்கூட சேர்த்து விடச் சொன்னா? இவளே அவனை வலச்சி போட்டுகிட்டா. இனிமே உன்னை என்னப் பண்ணுவேன்னு பாரு’ என தனக்குள் சூளுரைத்துக் கொண்டாள் ஆர்யமாலா.
வீட்டிற்கு சென்ற வசந்திற்கு பார்கவியின் ஞாபகமாகவே இருந்தது. தன் அருகில் உரசியவாறு அமர்ந்திருந்த பெண்களின் மென்பஞ்சு ஸ்பரிசம் இன்னும் தன்னைச் சுற்றி இருப்பது போல் உணர்ந்தான். அவர்களது பொம்மை கல்யாணத்திற்கு சாட்சியாக இருந்தனவற்றை பொக்கிஷமாக பெட்டியில் வைத்துப் பூட்டினான். அவளை தன் மனைவியாக மனமார ஏற்றுக்கொண்டான்.
அவனது மனநிலைக்கு எதிர்மறையான மனநிலையில் இருந்தாள் பார்கவி. அவளைப் பொறுத்தவரை மேளம் கொட்டி பொன்மஞ்சள் தாலி அணிந்து பெற்றோரின் ஆசியோடு நடப்பது தான் கல்யாணம் என்று அறிந்திருந்தாள். பத்தாம் வகுப்பு படிக்கும் பெண்ணிற்கு வேறெதுவும் தவறாக எண்ணத் தோன்றவில்லை. ஆதலால் அவள் தன் இயல்பில் இருந்தான்.
“பாட்டி. நான் கார்த்திக்கின் அக்கா.”
“ஓ! உள்ளவாம்மா.”
“உங்கிட்ட வசந்தை பற்றி பேசனும்.”
“சொல்லுமா.”
தன்னுடைய வன்மத்தாலும் பொறாமையாலும் வெந்து போயிருந்த ஆர்யமாலா பார்கவி யைப் பற்றி தவறாக சித்தரித்து கூறினாள். பார்கவி வசந்திற்கு வலை விரிப்பதாகவும் அவளிடமிருந்து வசந்தை காப்பாற்றும்படியும் கூறினாள்.
பார்கவியின் அக்காவே இப்படி கூறும் போது அவர்களும் தான் என்ன நினைப்பார்கள்? வசந்தை உடனடியாக அவனது தாய் வீட்டிற்கு அனுப்பி முடித்தார் அவனது பாட்டி. .
தான் வந்த வேலை சிறப்பாக நடைப்பெற்றதை எண்ணி உள்ளுக்குள் குத்தாட்டம் போட்ட ஆர்யமாலா அடுத்ததாக பார்கவியின் தாய் மங்களத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்கவி வசந்தை காதலிப்பதாகவும் மேலும் இங்கிருந்தால் அவளது வாழ்க்கை பாழாகிவிடும் என்றும் அவளைப் பற்றி தவறாகக் கூறினாள்.
இப்போது தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது. தனக்குக் கிடைக்காத வசந்த் அவளுக்கும் கிடைக்கக் கூடாதென நினைத்த ஆர்யமாலா இறுதியில் தான் நினைத்ததையே நடத்திக் காட்டினாள்.
“அம்மா விஜய்யா நான் யாரையும் லவ் பண்ணலம்மா. உங்க மேல் சத்தியம்மா. என்னை நம்புங்கம்மா.”
“என்னத்தடி நம்பச் சொல்ற? நீங்க ரெண்டு பேர் பழகுவதை தான் ஊரே பேசுதே. இதுக்கு மேல நீ இங்க இருக்க வேண்டாம். கிளம்பு டி என்கூட”
“உங்கக்கூட வர்றேன் மா. ஆனால் என்னை சந்தேகம் மட்டும் படாதீங்க மா. அதை மட்டும் என்னால் தாங்க முடியலை.”
தவறே செய்யாத சிறுப்பிள்ளையை அடித்து இழுத்துச் சென்றார் மங்களம். பார்கவி சென்ற சிறிது நேரத்தில் அங்கே வந்தான் வசந்த். ஆர்யமாலாவிடம் பார்கவியை விசாரித்த போது அவனுக்கு சரியான பதிலை அவளும் கார்த்திக்கும் வழங்காததால் மனமுடைந்து சென்றான் வசந்த்.
அன்று சென்ற பார்கவியை மீண்டும் பத்து வருடங்கள் கழித்து தனது டெக்ஸ்டைல் மில்லில் டெய்லராக வேலை செய்யும் போது தான் பார்த்தான்.
அத்தியாயம் – 13
அன்று அவனடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. தன் கையை விட்டுச் சென்ற சொர்க்கம் மீண்டும் தன் கை வந்து சேர்ந்தது போல் உணர்ந்தான்.
அவனுக்கு தான் அவளை அடையாளம் தெரிந்ததே ஒழிய அவளுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. அது மட்டுமல்லாது எதையோ பறி கொடுத்தவள் போல் இருந்தவளை பின் தொடர்ந்து அவளைப் பற்றி அறிந்து கொண்டான்.
அவளது இந்நிலைக்கு தன்னையே காரணமாக கருதினான். எப்படியாவது அவளைத் தேடி போயிருந்தால் அவளுக்கு இந்நிலை வந்திருக்காதல்லவா!
உடலால் இணைந்தால் தான் காதலா? அவளை சந்தோஷமாகப் பார்த்துக் கொள்வதைத் தான் தனது காதலாக எண்ணினான். மலரை கொய்யாமல் செடியிலேயே வைத்து அழகு பார்ப்பது போல் அவளைத் தொடாமல் தள்ளி நின்று ரசிக்கின்றான். அவனது பழைய குறும்புகார பார்கவியை எதிர்பாத்துக் காத்திருக்கின்றான்.
குளித்து உடைகளை மாற்றியவர் தேன்மொழியருகில் சென்று படுத்தேன் நிம்மதியாக உறங்கத் தொடங்கினான்.
“சர்ப்ரைஸ்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி!”
“அப்பா! எப்ப வந்தீங்க?”
“நேற்று நைட் தான் வந்தேன்டா. இந்தா உன்னோட பிறந்த நாள் பரிசு.”
“தாங்க் யூப்பா.”
“தாங்க்யூப்பா இப்படித்தான் சொல்லுவாங்களா?”
“சாரிப்பா. நான் மறந்துட்டேன்”
தனது பிஞ்சு இதழ்களால் வசந்தின் கன்னத்தில் முத்தமிட்டாள் தேன்மொழி.
“இது உனக்கு பார்கவி.”
“எதுக்கு?”
“ஏதோ வாங்கிக் கொடுக்கனும்னு தோணுச்சு. இந்தா”
“தாங்க் யூ”
“அய்யோ அம்மா! இப்படியா தாங்க்ஸ் சொல்லுவாங்க. நான் சொன்ன மாதிரி சொல்லுங்க.”
“அது அது பெரியவங்க அப்படி சொல்ல மாட்டாங்க. இப்படி தான் தாங்க்ஸ் சொல்லுவாங்க.”
“அப்பா நீங்க தானே சொன்னீங்க. வேற யாருக்கும் இப்படி தாங்க்ஸ் சொல்லக் கூடாது. அப்பா, அம்மா, பாட்டிக்கு மட்டும் தான் சொல்லனும்னு.”
“ஆமா.”
“பின்னே அம்மா பெரியவங்க இப்படி தாங்க்ஸ் சொல்லக் கூடாதுன்னு சொல்றாங்க. அம்மாவையும் இதே மாதிரி தாங்க்ஸ் சொல்ல சொல்லுங்க.”
அடம்பிடிக்கும் குழந்தையை என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தனர் இருவரும். தேன்மொழியின் பிடிவாதம் நேரமாக நேரமாக அதிகரித்ததே தவிர குறையவில்லை.
“சரி. நான் அப்பாக்கு தாங்க்ஸ் சொல்றேன். நீயும் உன் அப்பாவும் கண்ணை முடிக்கனும்.”
“ஏன்? நான் தாங்க்ஸ் சொல்லும் போது நீங்க மட்டும் கண்ணை திறந்து தானே இருந்தீங்க.”
“உனக்கு கஷ்டமாயிருந்தா நீ தாங்க்ஸ் சொல்ல வேண்டாம். நான் தேனை சமாளிச்சுக்குறேன்.”
“ம்ம்ம்.”
“குட்டிமா. நாம கோயிலுக்கு போக வேண்டாமா? சீக்கிரம் குளிச்சு ரெடியாகுங்க.”
“முடியாது. அம்மா உங்களுக்கு தாங்க்ஸ் சொன்னா தான் நான் அவங்க கூட பேசுவேன். இல்லைனா நான் எங்கேயும் வரமாட்டேன். யார்க்கிட்டயும் பேச மாட்டேன்.”
முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சென்ற குழந்தைக்கு என்ன சொல்லி சமாதானப் படுத்தவென்று தெரியாது அவளது நிலையில் இருந்து கீழே இறங்கி வந்தாள் பார்கவி.
“இப்போ தேனுக்குட்டிக்கு என்ன? அவங்க அம்மாக்கு நான் தாங்க்ஸ் சொல்லனும். அவ்வளவு தானே! இங்கப்பாருங்க அம்மா அப்பாக்கு தாங்க்ஸ் சொல்லப் போறேன்.”
“ஐ! குட் அம்மா.”
தேன்மொழி குதூகலிக்க வசந்தை நெருக்கியவள் பட்டும் படாமல் அவன் கன்னத்தில் தன் இதழ்களை ஒற்றி எடுத்தாள்.
அவளுடைய அந்த ஒற்றை இதழ் தீண்டலில் சிலிர்த்து அடங்கியது வசந்தின் மெய்.
“இப்போ ஓகேவா? சரி நேரமாச்சு குளிக்கப் போலாம்.”
தேன்மொழியை தன் கையில் அள்ளிக் கொண்டு குளிக்க ஊற்றச் சென்றாள். குழந்தையை தயார் செய்து தம்பதியராக ராணியம்மா முன்னாடி வந்தனர். மூவரும் ஒரே நிறத்தில் உடையணிந்து கண்ணைப் பறித்தனர்.
“அம்மா எங்களை ஆசிர்வாதம் பண்ணுவாங்க.”
“நல்லாருங்கப்பா. சீரும் சிறப்புமா மூன்று பேரும் நீண்ட காலம் நல்லாருக்கனும்.”
இராணியம்மா கண்ணில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தது.
“இந்த மகராசியை ஏன் கண்முன்னே முன்னமே காட்டவில்லை தெய்வமே!” என கடவுளிடம் கேள்வி கேட்டார்.
அவருக்கு எப்படி தெரியும்? கடவுள் ஒன்று சேர்க்க நினைத்த இதயங்களை மனிதமிருங்கள் தங்களின் சதியினால் பிரித்ததென்று!
“அம்மா நாங்க கோயிலுக்கு போயிட்டு வர்றோம்.”
“சந்தோஷமா போயிட்டு வாங்கப்பா.”
மூவரும் பெங்களூரில் இருக்கும் ஸ்ரீ பனசங்கரி அம்மன் கோவிலுக்குச் சென்றனர். கோயிலுக்கு உள்ளே செல்லும் முன் வாசலில் விற்ற மல்லிப்பூவை வாங்கி அவனே தன் கையால் இயல்பாக பார்கவி தலையிலும் தேன்மொழியின் தலையிலும் வைத்து விட்டான்.
“என்ன அதிசயத்தை பார்க்குற மாதிரி பார்க்குற? வா போகலாம்.”
தேன்மொழியை ஒரு கையில் தூக்கிக் கொண்டவன் மறுகையால் பூஜைப் பொருட்களை தூக்கிக் கொண்டு சென்றான்.
திவ்யதரிசனத்தை பார்த்து முடித்ததும் எந்த குங்குமத்தை அன்று அவளது நெற்றியில் இருந்து எடுப்பதை பார்த்தானோ இன்று அதே குங்குமத்தை அவளது நெற்றியில் உரிமையுடன் வைத்தான்.
தனது தோழனின் திருமணத்திற்காக பெங்களூர் வந்த மலைச்சாமி பார்கவியின் சிரித்த முகத்தைப் பார்த்ததும் அவளை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என நினைத்து கொண்டான்.
அவர்கள் செல்லும் பாதையை பின்தொடர்ந்து சென்றான்.
‘ஊரறிய என்னை அசிங்கப்படுத்திட்டு இங்க குடும்பமா சந்தோஷமா வாழுறியா? உன்னை அப்படி வாழ விட்டுடுவேனா? ஆனாலும் பணக்காரனாத்தான் பிடிச்சுருக்க.”
அவளின் நடவடிக்கைகளை தினந்தோறும் பின்தொடர ஆரம்பித்தான். பழிவாங்கும் சந்தர்பத்திற்காக காத்திருந்தான்.
