சீதையின் ராவணன்

This entry is part 11 of 18 in the series சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

அத்தியாயம் – 11

‘என்னையவா வாயடினு சொல்ற? இரு உன்னை என்னப் பண்றேன்னு பாரு?’ என தன் மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டவள் வெளியே பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டாள்.

“கார்த்தி, விநோத் நீங்க கொஞ்ச நேரம் வீட்டை சுத்திப் பார்த்ததுட்டு இருங்க. நான் போய் குளிச்சுட்டு ஓடி வந்துர்றேன்” என அவர்களிடம் கூறிச் சென்றான் வசந்த்.

“வா பாப்பு. நாம பின்னாடி தோட்டத்தை சுத்திப்பார்ப்போம்.”

அவர்கள் எழுந்து பின்பக்கமிருந்த பாய்மரக் தோட்டத்திற்கு சென்றனர். வீட்டின் பின்னால் படைப்புகள் மேல்நோக்கி சென்று கொண்டிருந்தன.‌

“தோட்டக்காரண்ணா!”

“என்ன தாயி?”

“இந்த பைப்புல்லாம் எவ்ளோ பெரிசாயிருக்கு!”

“ஆமா தாயி. இந்த பெரிய பைப் மட்டும் சின்னையா ரூம்க்கு போகுது”

“ஓஹோ!”

அவர் அந்த பக்கம் சென்றதும் தன் அண்ணனை அழைத்தாள்

“ஹேய் அண்ணா! குனியேன்.”

“ஏன் பாப்பு?”

“சொன்னதை செய்யேண்ணே”

“சரி”

கார்த்திக் குனிந்திருந்த அவனது முதுகில் கால் வைத்து ஏறியவள் வசந்த் அறைக்கு செல்லும் பைப் தொடர்பினை அடைத்து வைத்தாள். 

“முடிஞ்சுது! வா போலாம்.”

“என்ன பாப்பு பண்ண?”

கார்த்திக் கேட்டு முடிப்பதற்குள் வீட்டின் உள்ளே இருந்து வசந்தின் சத்தம் கேட்டது. 

“பாட்டிடிடிடி. பைப்புல தண்ணி வரலை. அய்யோ! என் கண் எரியுதே!” எனும் அலறல் குரலைக் கேட்டு சந்தோஷமாக குதூகலித்தாள்.

“டேய் விநோத்! வசந்த் அலறுகிறான்டா. வா போய் பார்க்கலாம்.”

விநோத்தும் கார்த்திக்கும் சென்று பார்த்த போது இடையில் துண்டோடு உடல் முழுவதும் சோப்பு நுரையுடன் கத்திக் கொண்டிருந்தான் வசந்த். 

“யாருன்னு தெரியல தம்பி. பாத்ரூம் பைப்பை பூட்டி வச்சுருக்காங்க. இப்போ போய் குளிங்க தம்பி” என்று சொல்லிச் சென்றார் தோட்டக்காரர். வசந்தும் குளியலறைக்குள் சென்று குளித்துவிட்டு வெளியே வரும் போது உதட்டிற்குள் அடக்கப்பட்ட சிரிப்புடன் நின்றிருந்தாள் பார்கவி. 

“ஏன் அண்ணா? இங்க வீட்டு பைப்ல தண்ணீர் தானே வரல? என்னமோ வானமே இடிச்சு விழுறாப்புல இந்த கத்து கத்துறாரே!” என வசந்த் தை வம்புக்கிழுத்தாள் பார்கவி. பிறர் அறியாமல் அவளிடம் வந்த வசந்த்

“நீ தான் செஞ்சுருக்க. எனக்கு முன்னமே தெரியும். இது உன்னோட வேலை தான்னு.”

“ஆமா. நான் தான் பண்ணேன்.”

“எதுக்கு இப்படி பண்ண?”

“ம்ம்ம். நீங்க மட்டும் என்னை வாயாடின்னு சொல்லலாமா?”

“உன் அண்ணனில் இருந்து அக்கா வரை எல்லோரும் அப்படி தானே சொல்றாங்க. நான் சொன்ன மட்டும் உனக்கு கோபம் வருதோ?”

“அவங்கயெல்லாம் வேற. நீங்க எப்படி என்னை சொல்லலாம்?”

“ஏன் நான் மட்டும் சொல்லக் கூடாது? நான் அவ்வளவு ஸ்பேஷலா உனக்கு?”

“ச்சே ச்சே அப்படித்தான் இல்ல. அவங்கல்லாம் என்னோட சொந்தக்காரங்க. ஆனா நீங்க எனக்கு யாரோ? அதனால் தான் கோபம் வருது. நீங்களாக எதையும் நினைச்சுக்காதீங்க.”

அவனது அருகாமை அவளை ஏதோ செய்தது. அவனிடம் இருந்து சற்று தள்ளி நின்று கொண்டாள். கார்த்திக் மட்டும் அல்ல அவனது பெரும்பாலான நண்பர்கள் அவளை வாயாடி என்று தான் அழைப்பார்கள். அப்போதெல்லாம் அவளுக்கு இவ்வளவு கோபம் வந்ததில்லை. அதுவுமில்லாமல் அவர்களிடம் இவ்வாறு விளையாடியதும் இல்லை. வசந்திடம் மட்டும் ஏன் இந்த விளையாட்டுத்தனம்? காரணம் தான் அவளுக்கு விளங்கவில்லை. அதனை யோசிக்கும் அளவுக்கு வயது முதிர்ச்சியும் அவளுக்கில்லை. 

“ஹேய் வசந்த்! எங்க காலனில நாளைக்கு பொம்மை கல்யாணம் பண்றோம் டா”

“அப்படினா என்ன விநோத்?”

“அது நாங்க எல்லாரும் மாப்பிள்ளை வீட்டாளுங்க. பெண்பிள்ளைங்க எல்லோரும் பொண்ணு வீட்டாளுங்க. நம்ம ப்ளாக்குல உள்ள சின்னப் பொண்ணு, பசங்க பெயரெல்லாம் எழுதிப் போட்டு குலுக்கல் முறைல தேர்வு செய்வோம். அவங்களை பொண்ணு மாப்பிள்ளை மாதிரி அலங்காரம் பண்ணுவோம். அப்புறம் சும்மா பெயருக்கு பூ கட்டி மாலை போட சொல்லுவோம். அப்புறம் மஞ்சள் தடவிய சின்ன கயிறை பையன் கையில் கொடுத்து சும்மா கட்டப் சொல்லுவோம். அவங்கவங்க வீட்டுலருந்து அரிசி, பருப்பு, காய்கறி, மசாலான்னு கொண்டுவருவாங்க எல்லோரும் உட்கார்ந்து கூட்டாஞ்சோறு ஆக்கி சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போயிடுவோம். போன தடவை நம்ம கார்த்திக்கிற்கும் ஷியாமளாவிற்கும் பொம்மை கல்யாணம் நடந்துச்சு. இந்த விளையாட்டு சூப்பராயிருக்கும். நீயும் வாயேன்.”

பார்கவியை பார்த்தவாறே தானும் அந்த விளையாட்டிற்கு வருவதாக கூறினான் வசந்த். 

அதே போல் அனைவரின் பெயரையும் எழுதிப் போட்டு குலுக்கல் முறையில் முதலில் வசந்தின் பெயரை தேர்ந்தெடுத்தனர். பிறகு பெண்பிள்ளைக்கான பெயரை தேர்ந்தெடுக்கும் போது தன் பெயர் அதில் வர வேண்டும் என ஆர்யமாலா மிகவும் ஆசை கொண்டாள். ஆனால் வந்ததோ பார்கவியின் பெயர் தான். 

“அப்போ இன்னைக்கு வசந்துக்கும் பார்கவிக்கும் தான் பொம்மை கல்யாணம் பண்ணிப் போறோம். எல்லோருக்கும் சம்மதம் தானே” என பத்திரிகை வாசிப்பது போல் நடுநாயகமாக அமர்ந்து கொண்டு விநோத் கேட்டு அதை அனைவரும் ஆமோதித்தனர். 

“அப்போ பொண்ணு வீட்டுக்காரங்க பொண்ணை தயார் பண்ணுங்க. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மாப்பிள்ளையை தயார் பண்ணுங்க” என அனைவருக்கும் உத்தரவிட்டான் விநோத். 

பார்கவியை முறைத்துக் கொண்டே அவளுக்கு பட்டுப் பாவாடை தாவணி அணிந்து மணப்பெண் போல் ஆர்யமாலா அலங்கரித்து கூட்டி வந்தாள்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *