சீதையின் ராவணன்

This entry is part 17 of 18 in the series சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

சீதையின் ராவணன்

அத்தியாயம் – 20

ஆர்யமாலா தூரமாக வரும்போது அவளை பார்த்துவிட்டான் வசந்த். அவளின் சுயரூபத்தை பார்கவிங்கு நிரூபித்துக் காட்டவே ஏதோ மறந்து வைத்துவிட்டது போல் நடித்து மீண்டும் உள்ளே சென்றவன் அவர்கள் பார்வைக்கு கொஞ்சம் தூரமாக நின்று நடப்பதை கவனிக்க ஆரம்பித்தான். 

ஆர்யமாலா பேசியதை கேட்டு அதிர்ந்து நின்றதும் ஒரு நிமிடம் தான் பிறகு அவளை நோக்கி ஏளனமாக சிரித்த பார்கவி

“திணை விதைத்தவன் திணையறுப்பான்; வினை விதைத்தவன் வினையறுப்பான். அவங்கவங்க எண்ணப்படி தான் வாழ்க்கை. நீங்க சொன்ன மாதிரி நானும் கஷ்டப்பட்டேன் தான். ஆனால் இப்போ ரொம்ப ரொம்ப சந்தோஷமாயிருக்கேன். என்னப் பார்க்குறீங்க? இப்பவும் எப்பவும் நான் வசந்தோட மனைவி தான். இன்னாருக்கு இன்னாருக்கு மனுஷங்க தீர்மானிக்குறதில்ல. கடவுள் தான் தீர்மானிக்குறாரு. அது மாதிரி தான் வசந்த் எனக்குன்னும் நான் வசந்துக்குன்னும் ஆண்டவன் எழுதி வச்சுருக்கான். எங்களுக்கு இடையில் ஒரு ஆர்யமாலா இல்ல ஆயிரம் ஆர்யமாலா வந்தாலும் எங்களை பிரிக்க முடியாது. இப்பவும் உங்களை நினைச்சா எனக்கு கோபம் வரல. பரிதாபம் தான் வருது. உங்க மனப்பிரச்சனைக்கு நீங்க தான் காரணம். எனிவே உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி தான். இதுநாள் வரையிலும் வசந்த் சொல்லுறது தப்பா இருக்கலாம்னு நினைச்சேன். இப்போ தான் நீங்களே உங்க வாயால் ஒத்துக்கிட்டீங்களே. இனிமே அந்த நெருடல் கூட எனக்கிருக்காது. உங்கள் வருகைக்கு நன்றி.”

தன் முன்னால் நிமிர்ந்து நின்று கொண்டிருக்கும் இந்த பார்கவி முற்றிலும் புதியவளாக தோன்றினாள். குழம்பிக்கிடப்பவர்களை வீழ்த்துவது எளிது. ஆனால் தெளிவாக இருப்பவர்களை நெருங்குவது கூட ஆபத்து. சிரித்துக் கொண்டிருப்பதில் புன்னகையை ஒன்றும் முடியவில்லையே என்ற குரோதத்துடன் அங்கிருந்து அகன்றாள் ஆர்யமாலா. 

நெடுநாட்களாக தன் நெஞ்சை அழுத்தியிருந்த விஷயம் இன்று வெளிச்சத்திற்கு வந்ததில் அவளுக்கு மகிழ்ச்சி தான். 

“என்ன கவி போலாமா?”

“போவாங்க.”

“ஏதாவது என்கிட்ட சொல்லனுமா?”

“ஏன்?”

“இல்லை. ஏதோ யோசிச்சுகிட்டே வர்றியே. சொல்லனும்னு தோணுச்சு ரா சொல்லலாம்.”

“அதெல்லாம் ஒன்னுமில்ல. நீங்க ரோட்டைப் பார்த்து ஓட்டுங்க.”

“சரிங்க மேடம்.”

பார்கவியின் முகத்தில் இருந்த சந்தோஷம் அவனது முகத்திலும் தொற்றக் கொண்டது. ஆதலால் விசில் அடித்துக் கொண்டே காரைச் செலுத்தினான். 

“ஏய் நில்லு! தேன்மொழி நில்லு. இன்னைக்கு சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கனும். ஓடாத டா அம்மா பாவம்ல. “

“முடியாது. அது கண்ணுக்குள்ள எல்லாம் போகும். ஒரு எரிச்சலா இருக்கும். எனக்கு வேண்டாம்.”

பார்கவி யின் கைக்கு அடங்காமல் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தாள் தேன்மொழி. 

“நில்லு மாட்டுனியா.”

“விடுங்கப்பா. இது சீட்டிங். அம்மா தான் என்னை பிடிக்கனும். நீங்க ஏன் என்னை பிடிச்சீங்க. விடுங்கப்பா.”

“அம்மா வேற? அப்பா வேறயா? இரண்டு பேரும் ஒருத்தர் தான். இந்தா கவி இவளுக்கு நல்லா எண்ணெய் தேய்ச்சு விட்டு சுடு தண்ணீரில் முட்கி எடு.”

வசந்த் கூறியதை கேட்டு சிணுங்கிய மகளுக்கு தலை முதல் கால் வரை நல்லெண்ணெய் தேய்த்து விட்டவள்

“ம்ம். உங்களுக்கு தனியா சொல்லனுமா. அந்த நீள டவலை கட்டிட்டு வாங்க. உங்களுக்கும் எண்ணெய் தேய்ச்சு விடனும்.”

பார்கவி கூறியதை நம்பி முடியாமல் அவளை சட்டென திரும்பிப் பார்த்தான்.

“என்னப் பார்க்குறீங்க? சீக்கிரம். எனக்கு வேலையிருக்கு.”

அவள் கூறியது போலவே பெரிய டவலை இடுப்பில் சுற்றிக் கொண்டு அமர்ந்திருந்தான் தலையில் எண்ணெய் ஊற்றி சூடு போக தேய்த்து விட்டாள். அவனது தோள், கை, கால்கள் என அனைத்திலும் எண்ணெய் மசாஜ் செய்து விட்டவள் அவனை குளிக்க சொன்னாள். 

அவளது ஸ்பரிசம் இன்னும் தன் மேனியில் இருக்கவே அதனை சில மணித்துளிகள் ஆழ்ந்து அனுபவித்தவன் பிறகு குளித்து விட்டு வந்தான். 

அன்று கடை வாசலில் ஆர்யமாலாவைப் பார்த்து விட்டு வந்ததில் இருந்து அவளின் மனநிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. 

இவர்களுக்குள் ஏதோ ஒன்று திரையாக இருக்க அதனை கண்டு கொண்ட வசந்தின் பாட்டி இருவரையும் சேர்த்து வைக்க தன்னால் ஆனதை செய்தார். அதில் ஒன்று தான் இந்த எண்ணெய் குளியல். 

இவள் செய்கின்றாளா? இல்லையா? என்று கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு பார்ப்பது போல் பார்த்து அவளை செய்ய வைத்தார். இதே போல் பல நல்ல காரியங்களை பாட்டி பார்கவியை செய்ய வைத்ததால் வந்த உபயம் இருவரும் மனதால் நெருங்கினர். ஆனால் இருவருக்கும் இடையே கண்ணுக்கு தெரியாத மனத்திரை ஒன்று இப்போதும் இருந்த. அது விலகும் நாளும் வந்தது. 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *