குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி - காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

குறிஞ்சி – காதலும் காதல் சார்ந்த இடமும்

அத்யாயம் 14  
                           பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் 
                           உள்ளம் உடைந்துக்கக் கால்  (குறள்#1270)
                     துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போயிவிடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடுவதினாலோ, என்ன பயன்?
              ஏன் அவன் இன்னும் தன்னிடமிருந்து வாங்கவில்லை என லேசாக நிமிர்த்தவள் அவன் கண்களை எதிர் நோக்க இயலாது என்பதை உணர்ந்து மீண்டும் தலை கவிழ்ந்தாள்.  அவள் நிமிர்ந்து பார்த்திருந்தாலும் எதையும் கண்டறிந்திருக்க முடியாது. ஆம் அவன் தன் கண்களை கூலர்ஸ் போட்டு மறைத்திருந்தான். 
                அவன் அணிந்திருந்த ப்ளூ ஜீன்சும், கிரீம் கலர் டீ ஷிர்ட்டும் அவன் கம்பீரத்தை பறைசாற்ற,  கண்களை மறைத்திருந்த கூலர்ஸ், அவன் என்ன யோசிக்கிறான் என்பதை நம்மிடமே மறைத்தது. பாவம், தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தவளுக்கு என்ன தெரியும்.
                 தன்னையும் ஒருவன் நிராகரிக்கக்கூடும் என அவள் கனவிலும் நினைத்ததில்லை. இதுபோன்ற ஒரு சூழ்நிலையை எதிர்நோக்கி அவள் வரவில்லை. ஆகவே இப்போது என்ன செய்வது என்றுகூட அவளுக்கு தெரியவில்லை. கன்னியின் மனம் அங்கே சுக்குநூறாக உடைந்து அவனின் செய்கையால் கசக்கி பிழியப்பட்டுக்கொண்டிருக்க, அந்த வலியும் வேதனையும் கண்களிலிருந்து பிரவாகமாக ஊற்றெடுத்தது. 
               அதுவரையில் சிலையென சமைந்திருந்த இருவரில், அந்த கண்ணீர் திவலைகளை கண்டவனின் கரங்கள் தன்னிச்சையாய் நடுநடுங்க அவளின் கரங்களை அழுந்தப்பற்றி அவளை ஆற்றுப்படுத்த முயன்றான். அனால் அவளோ சரேலென தன் கைகளை பின்னிழுத்துக்கொண்டாள். அப்போதும் அவள் தன் குனிந்திருந்த தலையை நிமிர்த்தவேயில்லை.
              ஆரு, இதுவரை யாரிடமும் அவமானம் அடைந்ததில்லை. இது முதன்முறை, பெருத்த ஏமாற்றத்தையும் உடன் கொடுத்திருந்தது. அவளுக்கே அவளை சமாதானம் செய்யும் வழியும் தெரிந்திருக்கவில்லை. 
             பெண்களின் சிறந்த ஆயுதமே கண்ணீர்தான், அதைக்கொண்டு எதையும் ஆக்கலாம், எதையும் அழிக்கலாம். இப்போது அவள் தன் துன்பத்தை அழித்துக் கொண்டிருந்தாள். தன்மேல் கொண்ட கழிவிரக்கம் மேலும் மேலும் கூட, கண்ணீர் ஊற்று நின்றபாடில்லை.
              இப்போது அவன்தான் தவித்துப்போனான் என்ன செய்வது என்று தெரியாமல். அவள் வைத்திருந்த கவரை பார்த்தவுடன் அவன் தெரிந்துகொண்டான், அது ஒரு கிரீட்டிங் கார்டு என. இன்று தனது பிறந்தநாளும் இல்லை, அப்படியானால் வேறென்ன இருக்கமுடியும் என யூகிப்பதும் அவனுக்கு கடினமில்லை.
             ஆகவே தான் அவன் அதை வாங்கவில்லை, ஆனால் இவள் இப்படி அழுவதை யாரவது பார்த்து என்னவென்றுகேட்டால் என்ன சொல்வது? அப்போது சுற்றிலும் அங்கே யாரையும் காணோம், அதுவரையில் நல்லது. 
               தனியாக ஒருபெண்ணை அழைத்துவந்ததோடில்லாமல், இப்படி அவளை அழவைக்கிறோமே என அவனே அவனை நொந்துகொண்டான். உச்சி வெயில் ஏறிக்கொண்டிருந்தது. அவளை இதுபோன்ற இடத்தில் தனியாக விட்டு செல்லவும் முடியாது. இந்த வயதுப்பெண்கள் எப்போது என்ன செய்வார்கள் கணிக்கவும் முடியாது. உச்சியில் நின்று பார்த்தால் மூன்று புறமும் கிடுகிடு பள்ளம். விழுந்தால் எலும்புகூட கிடைக்குமா? தெரியாது.
                அவளுக்கோ இப்போது வாய்விட்டு அழவேண்டும் போலிருந்தது, அவன் சட்டையை பிடித்து ஏன் என்னை பிடிக்கவில்லை? என கேட்க தோன்றியது. பாவம் பெண்ணவள், பொதுஇடத்தில் தன் இயலாமையால் அனைத்தையும் அழுதே கரைத்துக் கொண்டிருந்தாள். 
                முதலில் அவன் நிதானித்து ஏங்க,  கொஞ்சம் பாருங்க ஆரண்யா, எதுக்கு இப்போ அழறீங்க ப்ளீஸ். தயவுசெய்து அழறத நிறுத்துங்க, என்னால தாங்க முடியல என்றான் பரிவாய்.
               இன்னமும் தலை நிமிராதவள் தேம்பிக்கொண்டுதான் இருந்தாள். மெல்லிய கேவலாய் அவளின் அழுகை மாறியிருந்தது.
  
              மேலும் அவன் விடாமல், அவள் கரங்களிலிருந்து அந்த கவரையும், அவள் அழுத்திபிடித்திருந்த அவளது பையையும் பிடுங்கினான். அவள் தன் துப்பட்டாவால் முகத்தை இறுக மூடிக்கொண்டாள். அவனிடம் தன் இந்த அழுகாச்சி முகத்தை காட்ட விரும்பாமல்.
                நிதானமாக அவள் பையை திறந்து அந்த கார்டை அதனுள் வைத்தவன், சிறிதுநேரம் அமைதியாய் இருந்துவிட்டு, பையிலிருந்த அவள் ID கார்டை பார்த்தபடி ஒரு பி ஜி படிக்குற ஸ்டுடென்ட், இப்படியா நடந்துக்குவீங்க? என்ன பத்தி உங்களுக்கு தெரியாது? உங்கள பத்தியும் எனக்கு ஒன்னும் தெரியாது. ஏதோ ரெண்டொருதரம் பார்த்துக்கே இப்படியா என பொறுமையாக அவன் வினவ, எல்லாம் எங்களுக்கு தெரியும் என குனிந்தவாறே பதிலளித்தாள். 
அவன் பேச பேச, அழுகை தற்காலிகமாய் சற்று ஓய்ந்திருந்தது. 
என்னை பத்தி என்ன தெரியும்? என்றான்
உங்க பேர், ஊர், உங்க ப்ரொஃபெஸண், ஃபேசன் எல்லாமே!!
என்ன, பேஸ் புக் ல பார்த்ததை வச்சி சொல்றீங்களா, அதுல எத்தனை பேக் ID இருக்குன்னு தெரியுமா? 
              அவன் கேட்பதும் நியாயமாக பட, அவன் என்ன சொல்ல வருகிறான் என நிமிர்ந்துபார்த்தவள், அவன் கண்களை சந்திக்க முடியாமல் தலை கவிழ்ந்துகொண்டாள். ஆம், இப்போது அவன் கூலர்ஸ் ஐ கழட்டி இருந்தான்.  
              மெலிதாக அவளை பார்த்து சிரித்தவன், முதல்ல சொன்னியே என் பேர், அதுவே தப்பு தான். என் உண்மையான பேர் முகேஷ் என்றான் சிரித்தவாறு. 

             அவன் சிரிக்கும்போது அவனின் திருத்தப்பட்ட கத்தையான மீசைக்கு கீழமைந்த பல்வரிசையில் வலதுபுறம் ஒரு அழகான தெத்துப்பல், அவன் சிரிப்புக்கு அழகூட்ட, இந்த ரோபோவுக்கு சிரிக்க கூட தெரியுமா என்பதுபோல் நிமிர்ந்தவள், அவன் சிரிப்பில் லயித்தாள். 
என் உண்மையான வயசு என்னன்னு தெரியுமா என்றான்? அவளிடம் பதிலில்லை. 

ஆமா, உங்க வயசு என்ன? என்றான்.  
22 என்றாள்.
எனக்கு 30. உன்ன விட 8 வருஷம் அதிகம்.
பரவால்ல, எங்க அப்பாக்கும் அம்மாக்கும் 10 வயசு வித்யாசம் என்றாள்.

இவளை எப்படி சமாளிப்பது என விழித்தான் சங்கோஜமாய்.
               பிறகு ஏதோ யோசித்தவன் ஹலோ, ஐ ஆம் முகேஷ் என்று கைநீட்ட, தனை மறந்து அவளும் அவன் கைப்பற்றினாள். பற்றிய கையை விடாமல் அவன் அப்படியே மேலெழுந்து நிற்க, அவள் எழுவதா? இல்லையா? என யோசிக்க, அவனோ வாங்க இன்னும் இருக்கு என்னை பற்றி சொல்ல என அழைத்தான். மேலும் மணி 12 ஆகப்போது, கீழ இறங்கும்போது பேசிக்கிட்டே போகலாம் என்றான். 
            அழுதிருந்த அவள் கண்கள் வெய்யிலில் மேலும் கூச, தன் கையிலிருந்த கூலர் ஐ அவளிடம் தந்து போடச்செய்தான். தன்னிடமிருந்த அவள் பையையும் அவளிடம் கொடுத்து மீண்டும் கையை பிடித்தபடி மெல்ல கீழிறங்கினர். 
சமதளம் அடைந்தவுடன் அப்போ “மித்ரன்” உங்க பேர் இல்லையா என்றாள்
முகம் சுருக்கி யோசித்தவன், இல்லை அது என்னோட ப்ரொபைல் நேம் என்றான். 
அப்போஉங்க ப்ரொஃபெஸண்?  ஃபேசன்?
அது எல்லாம் உண்மைதான் என்றான்.
              இப்போது அவளுக்கு கோபம் முட்டிக்கொண்டு வந்தது. என்ன பேசுவது என புரியாமல் அப்போ பேமிலி ஸ்டேட்டஸ் ல ஏதாவது பிரச்சனை வரும்னு சொல்றீங்களா? 
இல்லை என மறுப்பாய் தலை அசைத்தான்.
பியூச்சர்ல காஸ்ட் ப்ராப்ளம் ஏதும் வரும்னு யோசிக்கிறீர்களா? 
அதற்கும் சிரித்தபடியே மழுப்பினான். 
               அவளும் யோசித்தவாறு ஒவ்வொன்றாய் கேட்க கேட்க, அவன் இல்லை, இல்லை என்றே சொல்லி கார் பார்க்கிங் வந்திருந்தார்கள். 
               அவன் தன் கேமெராவை பின்சீட்டில் வைத்துவிட்டு வண்டியிலேற, இவளும் அருகிலமர்ந்தவாறே அப்போ என்னதான் பிரச்சனை உங்களுக்கு, நான் அழகா இல்லையா?
உங்களை போய் அழகா இல்லைனு எந்த மடயனாவது சொல்வானா?
அப்புறம் உங்களுக்கு ஏன் என்ன பிடிக்கல? என நேரடியாக கேட்டுவிட்டாள். 
அவனது ஆழ்ந்த பெருமூச்சு மட்டுமே அவளுக்கு பதிலாக கிடைத்தது. 
வண்டி மலைச்சரிவில் இறங்கிக்கொண்டிருக்க, இவளுக்கு தலை பாரம் அதிகமானதுபோல் உணர்ந்தாள்.
அவன் பேச்சை மாற்ற எண்ணி, என்ன சாப்பிடறீங்க? வெஜ்ஜா? நான் வெஜ்ஜா? 
அவள் உறுதியாக இல்ல, எனக்கு சாப்பாடு வேண்டாம் என்றாள். 
அவன், காலையிலிருந்து உங்களால நானும் இன்னும் சாப்பிடல. பசி வயித்த கிள்ளுதுங்க என்றான். 
அவளோ மேலும் பிடிவாதமாக, உங்களுக்கு வேணும்னா நீக்க பொய் சாப்பிடுங்க சார், எனக்கு வேண்டாம் என்றாள்.
வண்டி திருச்செங்கோட்டை தாண்டி சங்ககிரி நோக்கி சென்றுகொண்டிருந்தது. 
அவன் அவள் புறம் திரும்ப, அவளோ கண்களை மூடி தவம்போல் இருந்தாள். 
அவனாகவே சரி சொல்லுங்க, உங்களுக்கு இப்போ என்னதான் வேணும்?
எனக்கு கரணம் தெரியணும்? ஏன் என்ன மறுக்குறீங்க?
ஏன்னா இங்க ஏற்கனவே வேற ஒருத்திக்கு இடம் கொடுத்துட்டேன் என்றான் தன் நெஞ்சில்  கை வைத்தபடி மிக அழுத்தமாக…
பொய் சொல்கிறானோ? என திரும்பி அவனை பார்க்க, அவன் கண்களோ இல்லை, உண்மை தான் என்றது அவளிடம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *