குறிஞ்சி - காதலும் காதல் சார்ந்த இடமும்
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை. (குறள்#1151)
பிரிந்து செல்வதில்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல் நீ போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீ திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போது விடைபெற்றுக்கொள்.
அவர்களிருவரும் போட்டோகிராபியை பற்றி பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை அவளுக்கு. மணி மதியம் 1 ஐ தாண்டியிருக்க, ஆருவின் மொபைல் சிணுங்கியது. விசாலம்தான் அழைத்திருந்தார்.
என்னடி, சீக்கிரம் வரேன்னு சொல்லிட்டு போன? இன்னுமா முடியல?
இல்லமா, கோவில்ல கூட்டம் கொஞ்சம் அதிகம், அதான் என்றால்.
கார்த்திகை தீப நாளில் கூட்டம் இருக்க தானே செய்யும்.
சரி சரி, சீக்கிரம் வந்து சேர். இங்க எல்லா வேலையும் நானே செய்ய வேண்டி இருக்கு. கொழுக்கட்டை வேறு செய்யணும், என்று போனை வைத்தார்.
சரி என்று கிளம்பியவர்கள் மீண்டும் பல விஷயங்களை பேசியவாறு மலை அடிவாரம் வரை வந்தவுடன் இவள், லஞ்ச் டைம் ஆயிடுச்சே, வாங்க ஏதாவது ஹோட்டல்ல சாப்பிட்டு போகலாம் என அழைக்க, அவன் “இல்ல! வேணாங்க”, மேல சாப்பிட பிரசாதமே எனக்கு ஈவினிங் வரை தாங்கும் என மரியாதையுடன் மறுத்துவிட்டான்.
அவள், சார் இப்போ தான் நாம ப்ரண்ட்ஸ் ஆகிட்டோமே இன்னும் ஏன் இவ்ளோ மரியாதை, சும்மா பேர் சொல்லியே கூப்பிடுங்க சார் என்றாள். இவனும் நெளிந்தவாறே, இல்லைங்க பரவால்ல எனக்கூற அவள் முகத்தை சோகமாக வாய்த்துக்கொண்டாள்.
ஐயோ, இதுக்கு பொய் ஏங்க உங்க முகம் இப்படி மாறிடிச்சி, சரி இனிமே ட்ரை பண்ணி பாக்குறேன் என்றவாறே விடைபெற, இவள் அடிவாரத்திலிருந்து மருதமலை பேருந்து நிலையத்தில் ட்ராப் செய்றேன் வாங்க வண்டியில் என அழைத்தாள். கொஞ்சம் தூரம் தானே! பறவையில்லீங்க, அதற்கும் அவன் மறுக்க மீண்டும் ஒரு சோக நாடகம்.
அவனுக்கு தான் இதை எப்படி சமாளிப்பது என தெரியவில்லை।
வீட்டில் ஒரே ஒரு பெண்பிள்ளையாய் பெற்று இப்படி பொத்தி பொத்தி வளர்த்தால் இது தான் நடக்கும். “பார்ன் வித் சில்வர் ஸ்பூன்” என்பது போல இதுவரை அவர்களுக்கு “வேண்டியது, வேண்டியவாறே, வேண்டும்முன்” கிடைப்பதை வைத்து, அதுபோலவே எல்லாம் எல்லோரிடமும், எப்போதும் எதிபார்க்கத் தொடங்குவதால் வரும் வினை. கொஞ்சம் மெச்சூரிட்டி இருக்கும் பெண்கள், கிடைக்காத விஷயங்களுக்கு பெரிதாக அலட்டுவதில்லை. ஆனால் இன்னமும் சிறுபிள்ளைத்தனம் மாறாத பெண் என்றால் ஒன்றும் செய்வதற்கில்லை.
எல்லாம் பெத்தவங்களை சொல்லணும். இந்த மாதிரியான பொண்ணுங்கள கட்டிக்கிட்டு பொழப்ப தள்ளுறவன் பாடுதான் ரொம்ப கஷ்டம்.
இப்போது அவனே மீண்டும் சமாதானமாக இறங்கிவந்து, சரி வாங்க, நான் வேணும்னா வண்டிய தள்ளிகிட்டுவரேன் பஸ் ஸ்டாண்டு வரையில் என்று, அவளது ஸ்கூட்டியை தள்ளியபடி பேசிக்கொண்டே வந்து அவளிடம் கொடுத்துவிட்டு, அவளிடமிருந்து விடைபெற்றுக்கொண்டான்.
அவளுக்கு தான் இப்போது காற்றில் பறப்பது போலிருந்தது.
வண்டியை ஸ்டார்ட் செய்து, ஹெல்மெட்ஐ அணிந்தபடி அவனிடம் மீண்டும் சிந்திப்போம் என்றுகூறி கிளமபினாள். வரும் வழியில் அகல் விளக்குகளை கடைபரப்பியிருந்த ஒரு ஆயாவிடம் 1 டஜன் வாங்கி வண்டியில் பத்திரப்படுத்திக்கொண்டு வீட்டை அடைந்தாள்.
மறக்காமல் அவனுக்கும் மெசேஜ் செய்து வீட்டை அடைந்ததை தெரிவித்தவள், அவனிடமும் மாலை வெள்ளியங்கிரி ஏறுவதற்கு முன் மெசேஜ் செய்ய கேட்டுக்கொண்டாள். இன்றைய தினம் மிக்க சந்தோசமாக அமைத்ததில் அவளுக்கு பரம திருப்தி.
தந்தையும், அண்ணன்களும் சீக்கிரமே வீடு திரும்பியிருந்தார்கள்। மாலை புதிய அகல் மட்டுமின்றி வீட்டிலிருந்த பழைய விளக்குகளையும் சேர்த்து மொத்தம் 108 விளக்குகளாக ஏற்றி அம்மாவுடன் சேர்ந்து வீடிசுற்றிலும் வைத்து, ஒரே கொண்டாட்டமாக இருந்தாள். வீட்டில் பெண்பிள்ளைகள் இருப்பதே ஒரு அதிர்ஷ்டம்தான்.
ஏழு மணி பக்கமாக அவனிடமிருந்து ஒரு மெசேஜ் வந்திருந்தது, மாலை ஏறப்போவதாய். இவளும் டேக் கேர் என பதிவிட, சிங்கள் டிக் மட்டுமே கிடைத்தது. அதற்குள் மொபைலை சுவிட்ச் ஆப் செய்திருப்பான் போல என எண்ணிக்கொண்டாள்.
தான் வணங்கும் கடவுள் தன்னை கைவிடவில்லை, வேண்டியதற்கு கைமேல் பலன் கிடைத்ததாக எண்ணி பூரித்தாள். அது நாள் முழுவதும் அவளில் நீடித்தது.
சாப்பிட்டுவிட்டு விரைவில் உறங்கச்செல்வதாக சென்றவள் மொபைலில் பாவியின் கால். சாதாரணமாக பேசியவள், இன்றைய அவனுடனான சந்திப்பை மட்டும் பவியிடம் சொல்லவில்லை. கள்ள மனம், சில ரகசிய அறைகளை பூட்டியே வைக்க வேண்டுகிறது. பொதுவாக பேசி கட்செய்தாள்.
உறங்கும் பொது, அன்றைய கனவிலும் அவனுடன் பல சாகச பயணங்கள் செல்வது போலவும், பல இடங்களை சுற்றி பார்பதுபோலவும், அவனோடே இணைபிரியாது பல படங்களை எடுத்டுக்கொள்வதுபோல இன்னும் என்னன்னவோ பலப்பல கனவுகள்.
ஆனால் கனவுகள் மட்டுமே வாழ்க்கை ஆகிவிடுவதில்லை என்னும் நிதர்சனத்தை அவள் உணர்ந்தாளில்லை.
அவளது போனில் அவன் நம்பரை “மை” என்று பெயரிட்டு செமித்திருந்தாள். சற்றும் கண்களை தவிர வேறுஎங்கும் பார்த்துப்பேசாத அவன் கண்ணியமும், அவளின் சாதாரண முக சுணக்கத்தை காண சகியாது, அவன் காட்டிய அன்பும், பரிவும், குறிப்பறிந்து பசியாற்றிய அவன் செயலும் அவளை அவ்வாறு எண்ணச்செய்திருந்தது.
என்னமோ அவன் இவளுக்கு மட்டுமே சொந்தமெனஎண்ணினாள். பேதை மனத்திற்கு தெரிந்திருக்கவில்லை, அவன் முன்னமே வேறு யார் யாருக்கோ சொந்தமானவனாக இருந்திருக்கலாம் என யோசிக்காதபடிக்கு, அவள் மனமும், புத்தியும் வழிநடத்தின.
