காதல் சுகமானது
6 KS
“நீங்களாச்சு! அவங்களாச்சு!”
சொன்னவள் காதில் அறை விடுமளவு கோபம் வந்தது ஆரனுக்கு..
“கூட்டு களவாணி, நேற்றே மனையிலிருந்து எந்திரிச்சு ஓட வேண்டியது தானே? யார் உன்னை தடுக்கப்போறா? இப்போ எதுக்குடி இப்படி பிரச்சனை பண்றே?”
“நான் ஏதும் பண்ணல.. நீங்க தான் ஸீன் போடுறீங்க.. பிடிக்கல விட்ருங்க என்று தன்மையா சொல்றவளை கத்தி கூச்சல் போட்டு அசிங்கப்படுத்துறீங்க” ரொம்பவும் பச்ச பிள்ளையா தேஜு சண்டை.. ஹாஹா
இதான் சண்டையா? அட! போங்கயா!
“ஏய்.. லா பேசாதேடி.. வா கிளம்பு.. எதுன்னாலும் நம்ம வீட்டில் பேசிக்கலாம்”
“உங்க வீட்டுக்கு வர முடியாது.. உங்க பேச்சு வார்த்தை எப்படி இருக்கும் என்று நேற்று நைட் தெரிஞ்சுக்கிட்டேன்.. முடியாது.. படிப்பு முடிந்ததும் வேலைக்கு போறேன்.. எங்கம்மா எவ்ளோ பணம் தரணும் சொல்லுங்க.. பேங்க் வட்டி போட்டு திரும்ப செலுத்திடுறேன்..”
நட்ட நடு படிப்பில் இருப்பவளுக்கு இன்னும் வேலை கிடைக்கணும் சம்பளம் வரணும் என்ற நடைமுறை சிக்கல்கள் தாண்டி வெகு நேர்மையா இளையவள் கூற..
அவளின் பேத்தல்களையெல்லாம் தன் கோட்டை விலக்கி இடுப்பில் கை கொடுத்து ஸ்டைலாய் நின்று கேட்டவனுக்கு எரிச்சல் மண்டியது..
தேஜுவா இருக்கும் பொழுது வேறு.. மிசஸ் ஆரனாய் இந்த வேலை சம்பளம் பற்றிலாம் பேசுவது மிக பெரிய அவமானம் அவனுக்கு..
தேஜு.. வா அங்கு பேசிக்கலாம்.. இரைய..
நோ..
அவ்ளோதான்.. இந்த கேடி மருமான் மனிலா விடம் போய்ட்டான்.. காச் மூச் ன்னு ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை அர்ச்சனை அவருக்கு.. ஆரன் முன்வைத்த யாவும் செய்வான் .. மனிலா உதடு இறுகினார்..
உள்ளறையில் கணவன் அராஜக வார்த்தைகளுக்கு காது மூடி நின்றவள்.. தங்கை தொட்டு அழைத்து.. வெளியில் கூப்பிட..
இவளும் மனம் நைந்து ஹாலில் நிற்க..
கால் மேலே கால் போட்டு உர்ர்ன்னு உட்கார்ந்திருந்தான் ஆரன்..
மனிலா முகம் வெளுத்து கிடந்தார்.. ராஜியம்மாவிடம் வாங்கியது இந்த கடுவனுக்கு தெரிந்தது முத அதிர்ச்சி.. அது மகள் பண்ணும் கூத்தில் இவரை போட்டு பிராண்டியதில் இன்னும் கடுப்பாகிட்டார்.. மொத்த கோபமும் மகள் மீது பாய..
என்ன பாப்பா இப்படி பண்ணுற.. இப்போ மாப்பிள்ளையுடன் போ.. அடுத்தடுத்த வீடு தானே.. இஷ்டப்படும் நேரம் வந்து போ..
அம்மா.. ப்ளீஸ் என்னை கட்டாயம் பண்ணாதீங்க.. போவ மாட்டேன்.. பிடிக்கல..
கோபத்துடன் ஆரன் தன்னிடத்திலிருந்து எழ..
சுஜி மாமாவை அக்கா ரூமுக்கு கூட்டிட்டு போ..
மாப்பிள்ள ஒரு அஞ்சு நிமிடம் பொறுங்க.. நான் நல்ல படியா பேசி கூட்டிட்டு வரேன்.. மனிலா ஆரனை எகிற விடாது தாஜா பண்ணி தேஜு ரூமுக்கு அனுப்பி விட்டு..
அவன் இல்லை என்பதை உறுதி பண்ணிட்டு தன் அறைக்கு மகளை இழுத்துட்டு போய் மெகா அர்ச்சனை.. பொறுப்பில்லாத நன்றி கெட்ட பெண் என பலவாறு சொல்ல..
திருமண பந்தத்தில் நுழையும் பொழுது குருடாயிருந்தவள்.. ஒரே நாளில் முழுக்க அவன் அவளுக்கே வேணும் எனும் கண் திறப்பில் இருந்தாள்..
பணம் பொருளுக்கு ஆசைப்பட்டு தன் ஆன்மாவை விலை கொடுக்க விரும்பவில்லை..
தாய் எவ்ளோ போதனைகள் செய்தும்…. அதை காதில் வாங்காது தேஜு நிலையாய் நின்றுவிட்டாள்..
நான் பார்த்துகிறேன் ஆரன் கிட்டே நான் பேசுகிறேன்.. நீங்க இடையில் வராதீங்க
அப்போ அவரை இப்படி அசிங்கமா நடு ஹாலில் பேச விடாதே..
ம்ம்ம்.. எவ்ளோ வாங்குனீங்க?
என்னது?
அவரோட அம்மா கிட்டேயிருந்து…
அவன் பொய் மேலே பொய்யா சொல்றான்.. மனிலா தாடையை தோளில் ஒரு வெட்டு வெட்டி இளகாரமா..
முதலில் ஒரு ஆள் விட்டு பெண் கேட்டார்கள்.. மாப்பிள்ளை பற்றி தெரியாது பெரிய இடமாச்சே.. காலம்பூரா நீ சந்தோஷமா இருப்பே ன்னு.. தெரியாத்தனமா பாசிட்டிவ்யா தலையாட்டிட்டேன்.. அப்புறம் தான் லேடீஸ் கிளப் பூரா ஏதேதோ சொல்லி என்னை கேலி செய்ய.. ராஜிம்மா அடுத்த கட்டத்துக்கு போகும் முன் சுதாரிச்சு நான் பின்னடிச்சேன்.. என் பையன் இப்படித்தான் மறைக்க ஏதுமில்லை.. உனக்கு என்ன வேணும் கேளு மனிலா தரேன் உன் மகள் எனக்கு மருமகளா வந்தா மட்டும் போதும் என்று வருந்தி கேட்டார்கள்..
நமக்கும் பசியா?
அப்பப்போ அவர்கள் தருவதை வாங்கிப்பேன்.. நம்ம குடும்பத்துக்குள் அது போயிரும் .. நூறு ரூபா கூட நான் திங்கல.. எல்லாம் கடன் வட்டி கொடுக்கல் வாங்கலில் போயிருச்சு… தாய் கதை சொல்ல..
கூர்ப்பாய் கேட்டவள்.. கண்டிப்பா ஆரன் சொல்வது போல சீட்டிங் தான்.. தாய் மழுப்பி சொல்லும் விஷயத்தில் இருக்கும் நேர்மையின்மை கணவன் கத்தி சொல்லும் விஷயத்தில் உண்மை இருக்க கண்டு கொண்டாள். இதும் இவளின் பொறுப்பே.. சுமையே..
எவ்ளோ வாங்குனீங்க?
என்ன ஒருஐம்பது லட்சம் இருக்கும்.. அவ்ளோதான் இருக்கும் தேஜு..
அவன் மேலேயே சொன்னான்.. தலை வலித்தது..
சண்டை போடாதே.. கூட இருந்தே திருத்து தேஜு.. தாய் வீட்டை காப்பதும் பெண் பிள்ள கடமை தான்.. ஒரு ஆம்பளை பிள்ள பெத்து இருந்தேன்னா ராணி போல இருந்திருப்பேன் இப்படி உன் கிட்டலாம் கெஞ்சிட்டு இருக்க மாட்டேன்.. கிரகம் .. என் புருசனுக்கு தொழில் அடிபட்டு போச்சு… மனிலா கண்ணீர் வடித்து மகளை கரைக்க..
சிலது பேசிட்டு அவரோடு போறேன்..
என்னவோ செய்.. அவர் பணம் காய்க்கும் மரம் விட்டுறாதே.. சமாதானம் பண்ணு.. முந்தியில் முடிஞ்சு உன் இழுப்புக்கு கொண்டு வா.. சண்டை சத்தம் வர விடாதே..
முடிச்சு போட்டாலும் ஆண் ஆணாவே இருப்பானாம்.. பெண் ஒரே நாளில் மெச்சூர்ட் ஆகிரணுமாம்.. ஒன்னும் புரில தேஜாவுக்கு..
ஆரனுடன் போக முடியுமா? அப்படி போனால் நான் யார் அவனுக்கு? என் தேவை என்ன?
தன்னறைக்கு போக சுஜி, இவளிடம் விளையாடுவது போல அவனிடமும் நெருக்கமாய் பாசமாக விளையாட.. இவளுக்கு துணுக்கென்றது.. பார்க்க ரசமாயில்ல..
அவளை தாயிடம் அனுப்பிவித்து.. பேசாது நிற்க..
பெரிய சைஸ் சுஜியா நின்றவள் மீது வீட்டுக்கு வராத கோபம் தாண்டி இரக்கம் ஊறியது..
வா வென்பதாய் இரு கரம் விரிக்க.. மெல்ல தேஜுவும் கைச்சிறைக்குள் தஞ்சமாக… பெண்ணவள் ஜாதிப்பூவாய் மணத்தாள்.. முதுகெங்கும் அடர்ந்த கத்தரிக்கப்பட்ட கூந்தலை கோதி விட்டு.. உச்சி முத்தமிட்டு ..
“தேஜ் .. ரிலாக்ஸ் பேபி.. ஒரே நாளில் எதுவும் மாயம் நிகழாது .. என்னுடன் வா .. எல்லாம் சரியாகிரும்..” வசியக்குரலில் பேச..
போயிடலாமா? நொடி யில் தோணினாலும்..
என்ன சரியாகும்? அவன் செயல்களுக்கு நான் பழகிருவேனா? நாசி விடைத்தாள்..
இல்ல .. மாட்டேன்..
கணவன் திண்ணிய மார்பிலிருந்து விலக முயற்சிக்க.. அவன் பிடி வேறுமாதிரி ஆனது.. அவளை கட்டிலில் கிடத்தி சேலையை விலக்க ஆரம்பித்தான்.. வில்லின் வளைவனைய ஓரங்களில் லேசா முறுக்கி வைக்கப்பட்ட சாக்லேட் உதடுகளை கவ்வி வெல்லப்பாகோ? தேனோ? கனிச்சாறோ? தெள்ளிய பதநீரோ? தன்னவளின் எச்சிலை சுவைத்து தேடலின் முதல் அடி வைத்தான் ஆரன்..
பெண்ணை மயங்கச் செய்யும் மந்திரன்… இங்கு ஈர்க்கும் தேஜுவின் இளமையின் பொக்கிஷங்களை ஆவல்கொண்டு அள்ளி மயங்கினான்.. பத்தினி பெண்ணுக்கென்று தனிப்பட்ட வசியம் உண்டலல்லவா?
ஆரனின் அணைப்பும் செய்கையும் வேகம் கொண்ட பொழுது.. நாள் பூரா தன்னிடமே யிருந்தவன் மேலே எந்த நினைப்புமில்லாது.. தேஜுவும் இணங்கினாள்.. கொக்கி பிரிக்க சிரமப்பட்டவனுக்கு திறந்து கொடுக்க.. ஏற்கனவே இரவில் இவன் பல் பட்டு கன்றி சிவந்து கிடந்த வெண்ணெய் கட்டிகளை பகல் வெளிச்சத்தில் கண்டு இன்னும் கிறங்கியவனாய் பல் படா தடமதில் கடித்தான்.. பெருவிரலில் புறப்பட்ட சுரீர் ரென அதிர்வுகள் உடலெங்கும் பரவ.. ஆரனின் அலைபாயும் கேசத்தில் ஒரு கையும்.. முதுகில் ஒரு கையுமாய் கொடுத்து தேஜு ஒன்ற.. ம்ம்மா ஹ்ஹா .. சுக அனத்தல் ஆரன்.. கேசத்துக்குள் விரல்கள் அலைவது அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.. அதில் தாய்மை சாயலை உணர்வான்.. மனைவியின் இந்த தொடல் எத்தனையோ ஜென்மங்களாய் பந்தம் கொண்ட உணர்வு தந்தது.. விரல்வழி உயிர் தொட்டவளை விடவே மாட்டேன் என்பதாய் சிறு பிள்ளை வீம்பு கூட வந்துச்சு ஆரனுக்கு அந்நேரம்…
அவள் அவன் பிடியிலிருந்து தேஜு எழ முயல.. வேண்டாம் என்கிறாளோ? அவள் மீது ஆரன் படர..
“கதவு லாக் ஆகி இருக்கா பார்க்கிறேன் இருங்கப்பா” விட்டான்
அவள் அங்கு சார்த்தி வரவும் உரிச்ச சேவலாய் அவனும் எல்லாம் கழற்றி போட்டு வெட்கமே படாது நீட்டி கிடந்த தோடு நிற்க.. சிலை தேகமதில் கலைக்கப்பட்ட உடைகளோடு நாணம் கொண்டு பாவையவள் விழி மூடி நிற்க.. அணைக்கப்பட்டாள் முழுசா..
கொண்டாடும் இடத்தில் தெய்வமும் குழந்தையும் இருக்குமாம்..
பெண்ணை ஆள்வது பெரிதல்ல.. உறுபு நலன் புகழ்ந்து அவளை வசியத்தில் வைத்து காதல் முன் விளையாட்டு நடத்தி செல்வது கலவியின் அரிச்சுவடி..
ஆரனோ தன் இளமானின் அழகை சின்ன சின்ன வார்த்தைகளில் பாராட்டி, இச்சுக்கள் பல இட்டு நேற்றிரவு திறக்கப்பட்ட சொர்க்க வாசலில் முட்டி மோத அது இன்னும் நெகிழ்வு தன்மைக்கு வாராது முதன் முறை ஆணின் ஆட்டத்தை பெற்ற சூட்டில் சிவந்து கிடக்க.. செய்ய செய்யத்தான் பழகும் என்பதால் அந்த இறுக்கம் அதீத வெப்பம் பற்றிலாம் கருத்தில் கொள்ளாது ஆரனோ வாகாய் தன் சுக்கானை செலுத்த.. கொதித்த எரிமலை கூட உன்மத்தம் கொடுத்தது அந்த காதல் காண்டாமிருகத்துக்கு.
அழகா இருக்கேடி.. ம்ம்ஹ்ஹான்..
உன்னை என் கைகளுக்குள்ளே பொத்தி வைத்துக்கொள்ளவாடி!
ம்ம்ம்ம்
இதுக்கும் லிப்ஸ்டிக் போடுவியா? ம்ம்ஹூம்.. கோபுரகலசங்களின் ரோஜா நிற முகப்பை நிமிண்டி சுண்டி கேட்டான்..
ம்ம்ஹூம் ம்ம்ம்..
சாவடிக்கிறடி.. எலும்பு நொறுங்க இறூக்கினான்..
நல்லா சாப்பிடு.. சதை வைடி..
ம்ம்ம்
என்னை தாங்க சத்து வேணும்ல..
ம்ம்ம்..
உடலெங்கும் முத்தமிட்டவன் கைகளின் அடியில் குட்டி ரோமக்காட்டில் முகம் வைத்து வாசம் பிடித்து.. முடியை சேவ் பண்ணுடி.. அங்கேயும் புதரா இருக்கு
ம்ம்ம்
ஆனாலும் வாசமா இருக்குடி.. மூக்கை மோப்ப நாயா அங்கு முட்டி நாவினால் கோலம் போட.. கூச்சத்தில் தேஜு நெளிய.. பெரிய முழு காதல் ஆவர்த்தனங்கள் நிகழ்த்தாதே நடந்தது இனிமையான கூடல்.. வெப்பம் மிகுந்த வாக்கு வாதங்களுக்கு பின் மழையாய் குளுமை தந்தது..
இருவரும் ஒன்றாகவே குளித்து உடைகள் மாற்றிய பின்..
கை நீட்டினாள் தேஜு..
ஆரன் அக்கைகளை பிடித்து தன் வீட்டுக்கு போக கதவுக்கு செல்ல.. உடன் வராதவளை கேள்வியாய் திரும்பி பார்க்க…
“உங்க அம்மா பெயரில் சத்தியம் தந்தால் வரேன்..”
அடமாய் உள்ளங்கையை திறந்து வைத்திருந்தாள் தேஜு..
“போடி.. இனி நீயா வா” விடு விடுன்னு கிளம்பி போய்ட்டான் ஆரன்..
காதல் சுகமானது..
