காதல் சுகமானது
18 KS
பொறுமை எடுங்க சார்.. கல்யாணத்துக்கு அப்புறம் உல்டாவா வாழ்க்கை இருக்கும் புரிஞ்சிக்கோங்க.. மேடம் இஷ்டத்துக்கு போக சொல்லல.. உங்க இருவர் கருத்துவேறுபாடுகள் வெளியில் தெரியாம பார்த்துக்கோங்க.. ஒரே வீட்டில் கூட சண்டை போடுங்கோ.. இப்படி வேணாமே? ப்ளீஸ்..
இதெல்லாம் கேட்கவே பிடிக்காது வேறுபக்கம் முகம் திருப்பி முறுக்கிக்கொண்டான் ஆரன்.. அவனின் ஈகோ அவ்வாறு செய்ய வைத்தது..
இவரும் விடாது தாலி என்று ஒன்று பெண் கழுத்தில் கட்டிட்டா அவளை அணைத்துத்தான் செல்ல வேண்டும் முரண்படக்கூடாது அது உங்களுக்கு ஒரு கரும்புள்ளி .. நாம எவ்ளோவோ வீணா போனவர்களை பார்க்கிறோம் அவர்கள் வீட்டில் சரியா இருக்கமாட்டார்கள் அந்த நடத்தை தான் வெளியில் பிரதிபலிக்கும்.. வீட்டின் அமைதி வெளியில் வெற்றி சார்.. என்று சிற்சில சூட்சுமங்களை சொல்ல திமிர் பிடித்த ஆரனுக்கு காதில் ஏறல..
வாலு மட்டும்தான் போல ரியாக்சன் அவனிடன்..
அனுபவஸ்தர் இன்று இல்லன்னா என்றாவது ஆரன் பொறுமை கொள்வான் வேண்டாத வேலைகளை விடுவான் என்று நம்பினார்.. நல்லவர்களுக்கு அப்படித்தான் அறிவுரை சொல்வதென்றால் அல்வா சாப்பிடுவதற்கு சமம்..
இதற்கிடையில் தொழில் முறை விரோதத்தால் இரண்டுமுறை ஆரன் பகைவர்களால் தாக்கப்பட்டான் கனடாவிலேயே.. முத முறை அவனில்லை ட்ரைவர்க்கு பலத்த காயம்.. அடித்து இவனுக்கு காலில் லேசு அடி சரிபண்ணிக்கொண்டான்.. மிடுக்காய் அரக்கனாய் முகம் இறுகி போனான்.. நான் முதலில் தொடங்கல்ல நீதான்.. பலனை அனுபவி என்று தான் சந்தேகித்த எதிரியை தொழில் செய்ய விடாது முடக்கி வைத்துவிட்டான்.. யாருக்கிட்டே??!!
அடிபட்டது வீட்டில் சொல்லவில்லை.. உயிர் இருக்குல்ல என்று பெருசா எடுத்துக்கல.. பகலில் தொழில் வெக்கையில் சுத்திட்டு தூங்கும் பொழுது நிலா முகம் வரும்.. சத்தியம் தா வெண்பஞ்சு கை நீட்டி கேட்கும்.. இவனின் பட்டை இதழ்கள் விரிந்து நீ ஒரு லூசுடி பெண்ணே! யானையை பானையில் அடைக்க பார்க்கிற…
யானை எனக்கே எனக்கு வேணுமே.. நான் வேணாமா? ஆரன் உங்களுக்கு.. கண்ணீர் கண்ணில் தழும்ப உயிரை அசைக்கும் பார்வை… கனவிலும் அவனை உருக்கும்..
வேணாம்டி அழாதே! ஏய் இது எனக்கு சுத்தமா பிடிக்காது.. அதட்டினாலும் அதில் தொக்கி நின்றது தவிப்பே.. இங்கு இதயம் பதறும்.. மறுநாள் மாமியாருக்கு அடிப்பான்.. பொண்டாட்டி பற்றி தெரியாதது போலவே விசாரிச்சி பணம் அனுப்பிருவான்.. குற்றயுணர்ச்சி குறைஞ்ச பீல் வரும்..
இப்படி நாட்கள் ஜெட் வேகத்தில் போக ஒரு நாள் மனிலாவிடமிருந்து போன் .. அதுவும் இவனின் முக்கிய மீட்டிங் பொழுதில்.. இந்த பொம்பளைக்கு எவ்ளோ கொடுத்தாலும் ஆத்தாது பொண்ண வச்சு சம்பாரிக்குது பொல்லாதது.. இரு இப்போவே எல்லாத்தையும் கட் பண்றேன்.. புதுசு புதுசா பணம் வாங்க காரணம் சொல்லும் .. இப்போ என்ன அளக்குது பார்ப்போம்?! எரிச்சல் மூள எடுத்தவன்.. மனிலா “கண்டேன் சீதையை” என்பது போல நறுக்குன்னு விஷயம் சொல்ல, ஆனந்த அதிர்வுகள் உடலெங்கும் ஓடி அடிபட்ட காலின் வலி கூட தித்திக்க உடலெங்கும் மகிழ்ச்சி மழை… சரி அப்புறம் அவ கிட்டே பேசறேன்.. அவ இப்போ வச்சுருக்க நம்பர் அனுப்பிவிடுங்க.. முடிச்சுட்டான்..
தானாய் முகம் கனிந்து விகசித்தது.. இத்தனை நேரமிருந்த சாதா கவனம் போய் மீட்டிங் உற்சாகமாய் முடித்து, தன் குழுவை அனுப்பிவிட்டு, தாய்க்கு உடனே போன் போட.. அவர் குரலில் உற்சாகம் .. ரொம்ப சந்தோசம் ப்பா ஆண்பிள்ளை தான் நம் சொத்தையெல்லாம் கட்டி காத்து ஆள இளவரசன் பிறக்க போறான் என்று அவர் குரலில் உற்சாகம் …
அம்மாக்கு தெரிந்தது இவனுக்கும் சந்தோஷமே..
உங்களுக்கு எப்போ தெரியும்?
மனிலா எனக்குத்தான் முதலில் சொன்னா.. ஹாஸ்பிட்டல் பைல் எல்லாம் கொண்டு வந்து காட்டினா.. தேஜா என்கூட இவ்ளோ நேரம் இருந்துட்டு இப்போதான் அவங்க வீட்டுக்கு போறா..
ஓ! நெஞ்சம் நெகிழ்ந்தது மகனுக்கு..
எப்போ வர கண்ணா?
பார்க்கிறேன்ம்மா.. ம்ம்
வந்தா தேஜு சந்தோசப்படுவா இல்ல.. பிள்ள முகம் வாடி கிடக்கு.. மெலிஞ்சும் இருக்கா.. இப்பக்கம் பெருமூச்சு விட்டான் ஆரன்.. மனசு வலித்தது.. அடம் பிடிச்சவ..
அம்மாகிட்ட இருவருக்கும் நடக்கும் டைவர்ஸ் நாடகம் பற்றி மனைவி சொல்லாது இயல்பாய் பார்த்து வந்தது இவனுக்கு இதமளித்தது.. இவ என் போக்குக்கு என்னை விட்டா என்ன? சும்மா தோண்டிக்கிட்டு.. தன் இஷ்டத்துக்கு அவள் வராதது குறித்து அதிருப்தி கொண்டான்..
ஆனால் அவளை பார்க்கணும்.. ஏன்டி எனக்கு நரம்பு தளர்ச்சியா? கேட்கோணும்.. கல்யாணம் ஆகி 35 நாள் தான் ஆவுது? குழந்தை பாரு உடனே? மூணு தடவை சேர்ந்திருந்திருப்போமா? சேவலாய் கொக்கரித்தான்.. உன்ன குப்புறக்க போட்டு முடியை கைக்குள் சுத்தி வச்சிட்டு.. பின்னாடியிருந்து ஓங்கி இதை கேட்டு சாவடிக்கிறேன் இருடி.. சின்னதா டைட்டா இருக்கு அத வச்சுட்டே எவ்ளோ திமிர் உனக்கு? இன்னும் உள்ளே பழமாய் போய்ட்டாலும் அவ்ளோதான் அதை பிடிச்சாலும்.. உன்னை பிடிக்க முடியாது.. கருவினான்.. சின்னது குற்றம் சொல்லும் பொழுதே குறுமுடிகள் சூழ்ந்த அவனின் தேனடை கண்ணில் வந்தது.. மாதுளை நிறமனைய பெண்மை நாக்கில் சுவை தர.. மோகம் கிளம்ப எச்சில் விழுங்கினான் ஆரன்..
நினைத்த பொழுதிலேயே போதை தரும் குணம் காதலுக்கு உண்டு கள்ளுக்கு கூட இல்லை..
போறோம் தேனை குடிக்கிறோம் .. என் இஷ்டத்துக்கு விடுறி இப்போவும் கேட்கிறோம்.. புறப்பட்டுட்டான்..
அன்றே ஒற்றைக்கு ரெட்டையா செலவு செய்து சென்னைக்கு வந்தும்விட்டான் பேய் உலாத்தும் நள்ளிரவில்..
உடனே மனிலாவுக்கு போன்.. அவரோ முழுமட்டை புருஷனோடு தண்ணீர் அருந்தி ரெண்டும் ஆட்டம் போட்டதால்.. நேரங்கழித்தே அலர்ட் ஆகி மாப்பிள்ளை என்றதும் ஜெர்க்காகி எடுத்து
அலோ வாய் குழறி பேச
வாசலில் நிற்கிறேன்
கடுப்பில் கத்த..
இதோ வந்துட்டேன் மாப்பிள்ளை..
ஒரு முழு அங்கியை எடுத்து முழுக்க தன்னை சுற்றி.. தட்டு தடுமாறி ஓடி கதவு திறக்க.. அந்தம்மா நின்ற அரைகுறை ஆடையை முறைத்த படி தேஜு ரூமை திறக்கும் பிடியை திருக.. திறந்துதானிருந்தது..
ஏதாவது சாப்பிட கொண்டு வரவா?
எல்லாம் ஆச்சு ..காலையில் சொல்றேன்.. திரும்பியும் பாராது பதில் கூறி சப்தமின்றி உள்ளே போனவன்.. அறையின் மெல்லிய விளக்கொளியில் தன் தூங்கும் அழகியை இமை கொட்டாது கண்டு ரசித்தான்.. தன் பயணப் பையினின்று ரா உடையை எடுத்துக்கொண்டு ரெஸ்ட் ரூம் போய் உடுத்தி தன்னை பிர ஷ் பண்ணிக்கொண்டும் வர.. இவன் தன் அறையில் நடமாடும் சந்தடியறியாது தேஜ் தூக்கமோ தூக்கம்..
அதுவும் கூட ஆரனுக்கு பிடித்தது.. திருட்டுத்தனம் போன்ற கிளர்ச்சி ஏற்பட.. மெல்ல அவள் அருகில் படுத்து லேசு போர்வை போர்த்தி உறங்குபவளின் இடையில் கை போட்டு இவன் அவள் முதுகில் ஒண்ட.. அவளும் இசைந்து ஒண்டியது கவிதை.. நெஞ்சுக்குள் கோழி குஞ்சாய் பதுக்கி.. கன்னத்தில் பாசமுத்தமிட.. மீசை குத்தி தேஜுக்கு சிலிர்ப்பு.. விரல்கள் கொண்டு தடவி விட்டு.. அவள் தூக்கம் தொடர, அவமானமாய் போச்சு ஆரனுக்கு
