என் பெருமழைச் சாரல் நீ

This entry is part 8 of 25 in the series என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

  என் பெருமழை சாரல் நீ 
சாரல் – 8 
அடர் பனியோடு விடிந்தும் விடியாததுமாய் இருந்த அந்த வெள்ளிக்கிழமையின் அதிகாலையில் வழக்கமாக எழுந்து குளித்து வாயிலில் கோலமிட்டு விளக்கேற்றி வழிபாடு முடித்து வீட்டாரை எழுப்பி அவர்கள் குளித்து வரும் முன்னரே அவர்களுக்கு தேநீர் தயார் செய்து கொடுத்து பொங்கல் வைக்க தேவையானவற்றை எடுத்து வைத்து பரபரப்பாக கிளம்பி நின்றாள் முத்து . 
தன் கணவனின் குல தெய்வமே இனி தனக்கும் தன் சந்ததியினருக்கும் குலதெய்வமாகும் முதன் முதலாக தன் குல தெய்வத்தை வணங்க செல்லும் பொருட்டு மனதிற்குள் ஆனந்தம் பொங்க தயாராகி நின்றால் பெரியவீட்டு மருமகள் முத்தம்மாள் .
துளியும் சோம்பல் இல்லாது இவ்வளவு அதிகாலையிலேயே அத்தனை வேலைகளையும் முடித்து தயாராக நிற்கும் தன் வீட்டு மருமகளை எண்ணி பெருமை பட்டு கொண்டார் பெரியவர் 
சீதையம்மாள் அவளை நெட்டி முறித்து வா தாயி என்று அழைத்து சென்று சாமியறையில் இருந்த திருநீறை எடுத்து அவளது நெற்றியில் இட்டு நல்லா இருக்கனும் என்று ஆசீர்வதித்தார் .
பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் மற்றும் ஆடு அனைத்தையும் ஒரு வண்டியில் ஏற்றி சீதையம்மாள், பெரியவர், வீரைய்யா மூவரும் ஒரு வண்டியில் ஏறி கொள்ள கோட்டைசாமியும் முத்தமாளும் ஒரு வண்டியில் தனித்து விட பட்டனர் .
தனது பணியினை தொடங்க ஆதவன் கீழ் வானில் தோன்ற பறவைகள் இறை தேடி பறக்க அந்த ரம்மியமான காலை வேளையில் செம்மண் பாதையில் வண்டி ஜல்ஜல் என்று ஒலியெழுப்பியவாறு குலுங்கி குலுங்கி சென்று கொண்டு இருந்தது.இதமாக வீசிய காலை தென்றலில் மனம் நெகிழ வெளியே வேடிக்கை பார்த்தவாறு தன் அருகே அமர்ந்து இருந்த தன்னவளது தளிர் கரங்களை பற்றி தன் மடியில் வைத்து கொண்டார் கோட்டைசாமி .
தன்னவனது ஸ்பரிசம் உணர்ந்து திரும்பிய மங்கை ” என்ன” என்பது போல் பார்க்க மறுப்பாக தலையசைத்து ” ஒன்னும் இல்ல ” என்று அமைதியாக இருந்தார் கோட்டைசாமி .
 தன்னவனது மனதில் ஓடுவது என்னவென்று தெரியா விடினும் அவருக்கு ஆறுதலாக இருக்கும் பொருட்டு அவரது கரத்தின் மேல் தனது மற்றொரு கரத்தினை வைத்து அழுத்தி பற்றினாள் மங்கை
” நான் இருக்கிறேன் ” என்பதாக இருந்த அவளது செய்கையில் தன்னவளது இடப்புற தோளில் தலை சாய்த்தார் கோட்டைசாமி அமைதி சூழ வரும் வழியில் மரங்கள் நகர்வதை பார்த்து கொண்டு வந்தவளின் தோளில் சுடுநீர் இறங்கியதை கண்டு பதறி கணவனை தலை நிமிர்த்தினாள்.
” என்னங்க என்ன ஆச்சு எதுக்கு இப்படி கண் கலங்குரிங்க என்றாள் கண்களை தனது சேலை தலைப்பால் துடைத்தவாறு
“நீங்க கண் கலங்கின நா தாங்க மாட்டேன்னு தெரியாத ” என்றவாறு அவளும் கண்கலங்க அதனை பார்த்தவர்
” அடி கிறுக்கு புள்ள எதுக்கு அழறவ இப்போ ” என்று அவளது கண்களில் வழிந்த நீரை துடைத்துவிட்டார் .
அவள் ” நீங்க இப்படி கண்கலங்கின நா எப்படி கல்லு மாதி பாத்துகிட்டு இருப்பே ” 
” ஒண்ணுமில்ல த்தா ஏ ஆத்தா நியாபகம் வந்துருச்சு அதே சட்டுனு கண்கலங்கிருச்சு ” என்றார் தன்னை நிதானப்படுத்தி கொண்டு .
சற்று நேரம் அமைதியில் கழிய ” அம்ம இருக்க வர வருஷா வருஷம் வந்து பொங்க வைப்போம் , கடைசியா இந்த கோவிலுக்கு எனக்கு ஆறு வயசு இருக்கும் போது ஏ அம்ம கூட வந்து பொங்க வச்சோம் அதுக்கு பொறவு தம்பி பொறந்த வீட்டுக்குள்ளயே அம்மய சாமி கூப்டுகிருச்சு” எனும் போதே குரல் கமற அதனை சரி செய்து கொண்டே மேலே தொடர்ந்தார் 
முத்துவும் அவர் மனதில் இருப்பதை கூறி முடிக்கட்டும் என்று அமைதி காத்தாள் .
” கோயில் கொடைக்கு செய்ய வேண்டியத அய்யன் செய்வாக மத்தபடி நாங்க இங்கன வந்து நின்னு சாமி கும்புடவே இல்ல முத்து ஆச்சியும் புடிவாதம இருந்துருச்சு ஏ வீட்டுக்கு மறுமவ வந்து அவ கையால பொங்க வைக்குறப்போ தே ஓன் சந்நிதிக்கு வருவேன்னு சொல்லி இருந்துருச்சு, அதனால நாங்களும் வர பிரியப்படல இத்தன வருஷத்துக்கு பொறவு இன்னைக்கு தே போறோம் அங்கன” என்றதுடன் சிறிது இடைவெளி விட்டவர் தன் மனையாளின் முகம் பற்றி 
” இதலாம் ஏ இப்ப சொல்லுதேனா ஏ ஆத்தா இருந்த எடத்துல இனி நீ தே இருந்து என்னயவும் நம குடும்பத்தையும் பாத்துக்கிடனும் ஆத்தா ” என்று அவளது கண்களையே பார்த்து இருந்தார் 
அவரது கண்களில் வலியை கண்டவளது நெஞ்சம் அடைக்க மெலிதான குரலில் “அத்தான் நீங்க இதலாம் எனக்கு சொல்லனுமா என்னைக்கு உங்க கையால தாலி வங்கினேனோ அன்னைக்கே உங்க குடும்பம் என்னோட குடும்பமா ஆகிருச்சுங்க நா பொறுப்பா பாத்துக்கிடுவேனு நம்பி தே மாமா உங்கள என்கிட்டக்க குடுத்துருக்காக நா கண்டிப்பா அவுக நம்பிக்கைய காப்பாத்துவேங்க “
அவளது முகத்தையே பார்த்து இருந்தவர் அவளை தன்னோடு இறுக அணைத்து கொண்டார் . மனம் லேசாக அவளை விடுவித்து அமைதியாக அவளது கரத்தினை பற்றிக் கொண்டு வெளியே வேடிக்கை பார்த்தவாறு இருந்தார்.
அவளும் அவரையே பின்பற்ற உருக்கமாகவும் காதலாகவும் இனிதாக அமைந்தது தன்னவனுடனான அவளது முதல் பயணம் .
கோவில் சென்று இறங்க கையில் அருவாளோடு முறுக்கி விட்ட பெரிய மீசையோடு கனல் தெறிக்கும் பார்வையோடு கம்பீரமாக நின்று இருந்தார் காவல் தெய்வமான கருப்பன் .
அவரை வணங்கி கற்களை அடுக்கி அடுப்பு அமைத்து அருகில் விறகு தேடி எடுத்து பொங்கல் வைப்பதற்கான ஏற்பாட்டை தொடங்க மற்றவர்கள் பூஜை சாமான்களை எடுத்து வைத்து கொண்டு இருந்தனர் பெரியவர் கோவிலுக்கு வந்து இருப்பதை தெரிந்து அக்கம் பக்கத்தினர் அவரை பார்க்க வர ஆண்கள் மூவரும் அங்கு இருந்தனர் சீதையம்மாள் சொல்ல சொல்ல முத்து பொங்கல் வைத்து முடித்தார் .
ஊரார்களில் பெரிய வீட்டு மருமகளை பார்க்காதவர்கள் முத்துவை வந்து பார்த்துவிட்டு நலம் விசாரித்து சென்றனர் .
பூசாரி ஆட்டினை மஞ்சள் நீரால் குளிப்பாட்டி மாலை அணிவித்து தலையில் மஞ்சள் நீரை ஊற்ற ஆடு தலையை ஆட்டி உத்தரவு கொடுக்க பெரியவர் தீட்டி வைத்த அரிவாள் கொண்டு ஓரே வெட்டு தலை தனியாக விழுந்து விட தலையற்ற உடலில் இருந்து ரத்தம் பீச்சி அடிக்க அதனை அனைத்து தெய்வங்களுக்கும் சமர்ப்பித்து வேண்டுதலை நிறைவேற்றினர் .
பின் பொங்கலை நெய்வேத்தியம் செய்து பூஜை செய்ய அனைவரும் கண் மூடி தங்களது வேண்டுதலை வைத்தனர் . 
பின் அங்கு இருந்தவர்களுக்கு பொங்கல் கொடுத்து விட்டு தாங்களும் உண்டு முடித்து வெட்டிய ஆட்டினை உரித்து சமைக்க தொடங்கினர் 
பெரிய பாத்திரங்களில் சமைத்து கோவிலுக்கு வந்து இருந்த அனைவருக்கும் உணவு வழங்கி அனைவரும் சாப்பிட்டு முடித்து திருப்தியுடன் வீடு திரும்பினர் கோட்டைசாமி குடும்பத்தார் . 
மாலை மயங்கும் வேளையில் வீட்டை அடைந்தவர்களுக்கு உடல் ஓய்வை கெஞ்ச அனைவரும் சற்று நேரம் அமர்ந்து இருந்துவிட்டு அவரவர் அறைகளுக்கு சென்றனர் .
சிறிது நேரம் கண்ணயர்ந்தவள் இரவு உணவு தயாரிக்கும் பொருட்டு எழுந்து கொள்ள தன் அருகில் உறங்கிய கணவனை பார்த்தாள் அவ்விடம் வெற்றிடமாக இருக்க அவள் முகம் கழுவி கொண்டு அடுப்படி சென்றாள் .
அங்கு வேட்டியை மடித்து கட்டி கொண்டு சமையல் வேலையில் ஈடுபட்டு இருந்த தன் கணவனை கண்டதும் அதிசயித்து போனாள் முத்தம்மாள் 
” அட என்ன எழுப்பிருக்க கூடாத இப்படியா இருப்பிய வெளில வாங்க மொதல்ல அடுப்படில நீங்க நிக்கலாமா வாங்க ” என்றவாறு உள் நுழைந்தவளை கண்டு 
” அவ்ளோ தா புள்ள முடிஞ்சது நீ போயி சாப்பிட எல்லாரயும் கூப்டு ” என்றவாறு சமைத்ததை மற்ற பாத்திரங்களில் மாற்றி கொண்டு இருந்தார் கோட்டைசாமி .
” ஏ அத்தான் இப்படி பண்ணுணிக என்ன எழுப்பிருக்க கூடாத” என்று பாவமாய் வினவியவளை கண்டு ” நீ காலைல இருந்து அசராம எம்புட்டு வேல பாக்குற நா சும்மா வீட்ல தான முத்து இருக்கே” என்றார் தன் வேலையில் கவனமாக .
காதலோடு தன் கணவனை பார்த்து இருந்தவள் தனது கணவனின் அருகில் சென்று அவரது தலையை வருடி சேலை தலைப்பால் தன்னவனது முகத்தில் பூத்திருந்த வியர்வை முத்துக்களை துடைத்து எடுத்தாள் .
கோட்டைசாமி அவளை காதலோடு அணைத்து கொண்டார் தன்னவனது கைகளுக்குள் இதமாக ஒன்றினால் முத்து .
இயல்ப்புக்கு திரும்பிய முத்து தன்னவனது நெஞ்சில் சாய்ந்தவரே ‘அத்தான் சாப்ட போகலாமா நேரமாச்சு ” என்க அவளது குரலில் நடப்புக்கு வந்தவர் அவளை தன்னில் இருந்து மெதுவாக விலக்கி நெற்றியில் இதழ் ஒற்றி ” எடுத்து வை முத்து நா போயி மேலுக்கு ஊத்திட்டு வாரே என்றவாறு கிணற்றடி நோக்கி செல்லும் தன்னவனது முதுகை பார்த்தவாறு நின்று இருந்தாள் முத்து .
பின் அனைவரையும் அழைத்து சாப்பிட கொடுத்து பால் காய்ச்சி கொடுத்து உறங்க அனுப்பி வைத்து விட்டு சமையலுக்கு பயன்படுத்திய பாத்திரங்களை எடுத்து கொண்டு கிணற்றடி சென்றாள் .
அனைவரும் உறங்க சென்று விட தன்னவளை காணாது அவளை தேடி கூடத்திற்கு வந்தார் கோட்டைசாமி . கிணற்றடியில் சத்தம் கேட்க அங்கு சென்றார் .
கிணற்றடியில் முத்து பாத்திரம் கழுவ கோட்டைசாமி கிணற்று மேட்டில் ஏறி அமர்ந்தவாறே “இந்த நேரத்துல இருட்டுக்குள்ள இத பாத்த தான வெள்ளன பாக்க கூடாத ” என்க 
” இந்தா அவ்ளோ தா ங்க இப்போ கழுவி போட்டுட்டு படுத்தா தே காலைல பொலங்க எதுவா இருக்கும் ” என்றவாறு பாத்திரம் தேய்த்தார் .
அவளுக்கு உதவும் பொருட்டு தண்ணீர் இறைத்து கொட்டியவர் “செரி பைய பண்ணு முத்து இப்படி காத்தாட ஒக்காந்து ஒன்ன பாக்குறதும் நல்லா தே இருக்கு” என்றவாறு கண் சிமிட்ட 
“போங்க அத்தான் நீங்க இருந்தா எனக்கு வேலயே  ஓடாது மொதல்ல எந்திருச்சு உள்ளாரா போங்க ” என்றாள் தலையை குனிந்தவாறே 
” ஹா ஹா ஏ முத்து நா பாட்டுக்க சிவனேனு ஒக்காந்துருக்கே ஒன்ன வேல பாக்க விடாம கைய வா பிடிச்சு வச்சுருக்கே நீ பாட்டுக்க வேல பாரு நா ஒன்ன பாக்குறே “
” அத்தான் பேசாம இருங்க” என்றவாறு வேலையை தொடர 
அவர் அவளில் இருந்து பார்வையை திருப்பி சுற்றி பார்த்து கொண்டு இருக்க முத்து அமர்ந்து பாத்திரம் கழுவி கொண்டு இருந்த இடத்தின் அருகில் எதோ ஊர்வதை போல தோன்ற பட்டென்று எழுந்து நன்றாக உற்று பார்க்க நிலவொளியில் மின்னியது நாகம் ஒன்று . 
” முத்து அசையாம இரு ” என்றார் கோட்டைசாமி .
அவரின் குரலில் இருந்த பதட்டம் அறிந்து ” ஏ அத்தான் ” என்றவாறு அவரை நோக்க அவர் தரையில் அவளருகே ஊர்ந்து வந்த பாம்பினை பார்த்து கொண்டு இருந்தார் அவர் பார்வை சென்ற இடத்தில் அவள் பார்வை பதிக்க அவளும் அந்த பாம்பை கண்டு கொண்டாள் 
அதற்குள் அது அவள் அமர்ந்து இருந்த இடத்திற்கு வெகு அருகில் வந்து விட அவளை அப்படியே அலேக்காக தூக்கி துவைக்கும் கல்லில் அமர வைத்து விட்டார் . அது தடை ஏதும் இல்லாமல் ஊர்ந்து செல்ல அவளின் புறம் திரும்ப 
பயத்தில் அவள் ஈனஸ்வரத்தில் ” அத்தான் போயிருச்சா ” என்க 
அவளை ஏறிட்டவர் பயத்தில் இருப்பதை உணர்ந்து அருகில் சென்று ” ஒன்னும் இல்ல ஆத்தா நல்ல பூச்சி தே நாம அத ஒன்னும் பண்ணலான அதும் நம்மள ஒன்னும் பண்ணாது ஆத்தா போயிருச்சு ” என்றவாறு அருகே சென்று அணைத்து கொண்டார் 
“இனிமே இருட்டுக்குள்ள இங்கன திரியாத ஆத்தா ” என்றவாறு அவளது முதுகை தடவி கொடுத்தார் .
அவள் தலையை ஆட்டவும் மத்தத காலைல பாத்துக்கலாம் நீ வா என்று அழைத்து சென்று விட்டார் .
அவருக்கும் தான் ஒரு நிமிஷம் உயிர் போயி உயிர் வந்து விட்டது ஆனால் தான் பயந்ததை அவளிடம் காட்டிக் கொண்டாள் எங்கே அழுது விடுவாளோ என்று எண்ணி தைரியமாக அவளுக்கு ஆறுதல் கூறி அழைத்து வந்தார் .
தண்ணீர் குடிக்க வைத்து தன்னோடு அணைத்தவாறு படுக்க வைத்து கொண்டார் .
குதூகலமாக அவர்களது நாட்கள் நகர ஆறு மாதங்கள் முடிந்து விட்டது அவள் திருமணம் ஆகி வந்து .
காலை விடிந்து ஆண்கள் அனைவரும் தமது வேலைகளை கவனிக்க வெளியே சென்று விட காலை உணவுண்ண சீதையம்மாளை அழைக்க சென்றவளுக்கு அவரது நிலையை கண்டு அதிர்ந்து நின்றுவிட்டாள் . 
                                                                                                                     —— சாரல் அடிக்கும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *