என் பெருமழைச் சாரல் நீ

This entry is part 11 of 25 in the series என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

   என் பெருமழை சாரல் நீ 
சாரல் – 11 
இன்னும் வானில் இரவின் மிச்சம்  இருக்க இறை தேடும் பறவைகள் தங்களது கூட்டை விட்டு புறப்பட்ட அந்த அதிகாலை வழக்கமாக துயில் எழும் முத்து அன்று இன்னுமும் தன்னவனின் அரவணைப்பில் உறங்கி கொண்டு தான் இருந்தாள் .
தனது சிறு அசைவும் தன்னவளது உறக்கம் கெடுக்கும் என்றெண்ணி துயில் கலைந்தும் அசையாமல் தன் மார்பில் முகம் புதைத்து குழந்தையாக உறங்கிக் கொண்டு இருக்கும் தன்னவளின் முகத்தை பார்த்தவாறே படுத்து இருந்தார் கோட்டைசாமி .
மெதுவாக துயில் களைந்து இமைக்கதவுகளை திறந்தவளின் கண்களில் விழுந்தது தன்னை கண் சிமிட்டாது பார்த்திருக்கும் தன்னவனது தோற்றமே .
” அத்தான் என்ன அப்டி பாக்குத்திக ” என்றாள் முத்து 
“எப்ப எப்டி பாத்தாலும் அழகா தெரியுறியே டி ” என்றவாறு தன்னவளை தன்னுடன் இறுக்கிக் கொண்டார் கோட்டைசாமி 
தன்னவனது மார்பில் சுகமாய் ஒன்றியவள் ” அத்தான் நேரமாச்சு எந்திரிங்க” அவர் மாட்டேன் என்பது போல தலையை இட வலமாக ஆட்ட “தோட்டத்துக்கு போகலயா ” “ம்ஹும்ம் போகல ” என்றார் கோட்டைசாமி 
“நம்ம இன்னைக்கு ஊருக்கு போகணும் ல ” அவர் மறுபடியும் தலையை அசைத்தார் 
” அப்போ எந்திரிச்சு கெளம்புங்க “
“ம்ம்ம்” என்றவாறு அவளை தன்னில் இருந்து விலக்கி நெற்றியில் இதழொற்றி
” செரி முத்து வேலய முடிச்சுட்டு வெரசா கெளம்பு நா தோட்டம் வர போயி தகவல் சொல்லிட்டு வாரே ” 
” செரிங்க ” என்றவாறு படுக்கையை விட்டு எழுந்து சென்றாள் முத்து .
இவ்வாறாக அந்த காலை காதலாக விடிந்தது அந்த தம்பதியினருக்கு .
குளித்து முடித்து வழக்கமாக முடிக்கும் வேலைகளை முடித்து விட்டு சீதையம்மாளிடம் சொல்லி கொண்டு தனது வீட்டிற்கு செல்ல ஆயத்தமானாள் முத்து .
முதல் நாள் ராத்திரியே சீதையம்மாள் பெரியவரிடமும் முத்து தனது தாய் வீடு செல்ல நினைப்பதை கூறி இருந்தாள் .
கோட்டைசாமி தோட்டத்தில் இருந்து வந்ததும் தனது தந்தையிடம் சொல்லிக்கொண்டு அவரும் தயாராகி வீட்டில் சொல்லி கொண்டு முத்துவின் ஊர் நோக்கி பயணப்பட்டனர் .
“வாரே ஆச்சி வாரே மாமா” என்று அவள் விடைபெற
“பாத்து போயிட்டு வாங்க வெரசா வந்துருத்தா நீ இல்லாம வீடே நெறக்காது என்று வழியனுப்பினர் பெரியவர்கள்
“ஆகட்டும் ஆச்சி பொழுது சாய வந்துறே” என்றவாறு கிளம்பியவளிடம்
“இந்தா ஆத்தா அம்ம கிட்டக்க குடுத்துரு நா கேட்டேன்னு சொல்லு தாயி” என்று தங்களது தோட்டத்தில் விளைந்த பொருட்களை கொடுத்து அனுப்பினார் சீதையம்மாள்
” செரிங்க ஆச்சி வாரே” என்றவாறு கையசைத்து சென்றாள் முத்து அவர்கள் செல்வதை பார்த்து கொண்டு இருந்த பெரியவர்
” என்ன தா புகுந்த வீட்ல எல்லாரும் தாங்குனாலும் பெத்தவுக வீட்டுக்கு போகணும்னா மொகத்துல தனி சந்தோசம் வந்துருது ” என்று சீதையம்மாளிடம் சொல்லிக்கொண்டு இருந்தார் .
” ஆமாய்யா பெத்தவுகள பாக்கணும்னா தனி சந்தோசம் தே வந்துருது இந்த குட்டிகளுக்கு ” என்று சிரித்துக் கொண்டனர் .
மனம் மகிழ்ச்சியில் பொங்க முகம் உள்ள பூரிப்பினை பிரதிபலிக்க அன்றலர்ந்த மலராக அமர்ந்து இருந்த தன்னவளை கண்களுக்குள் நிறைத்து கொண்டார் கோட்டைசாமி .
தன்னவனது பார்வையை உணர்ந்த பாவை “காலைல இருந்து எதுக்கு தே இப்டி பாத்துகிட்டே இருக்கிக என்னமோ இன்னைக்கு தே புதுசா பாக்குற மாதி தே பாப்பிக” சிவந்த முகத்தை மறைத்தவாறு .
“ஹா ஹா குள்ளச்சி எப்போ பாத்தாலும் புதுசா பாக்குற மாதி தே தெரியுற ” 
“நா குள்ளச்சியா ஒங்களுக்கு ” என்றாள் பொய்யாக முறைத்தவாறு .
“ஆமா டி குள்ளச்சி ” அவளை சீண்டும் விதமாக 
” போங்க” என்றாள் சிணுங்களாக 
பேச்சும் சிரிப்புமாக வீடு வந்து சேர அவளை எதிர்பாராத அவள் பிறந்தவீட்டாருக்கு இன்ப அதிர்ச்சி ..
தான் பிறந்து வளர்ந்த வீடு இந்த ஆறு மாதத்தில் வேறு ஆகி போன தோற்றம் எழுந்தது முத்துவிற்கு .
” ஆத்தா முத்து வா தா வாங்க மாப்ள உள்ளாரா வாங்க ” என்றனர் முத்துவின் பெற்றோர்.
” வரேன் மாமா ” என்றவாறு உள்ளே நுழைந்தார் கோட்டைசாமி .
” ஆத்தா ” என்றவாறு தனது அம்மையை அணைத்து கொண்டாள் முத்து .
” ஆத்தா மாப்பிளைக்கு ஏதாச்சும் குடிக்க குடுங்க ” என்றார் உள்ளே பார்த்து .
தாயும் மகளும் தங்களது கதைகளை பேசியவாறு அடுப்படியில் இருக்க தனது தந்தையின் அழைப்பில் கூடத்திற்க்கு மோர் எடுத்து வந்து கொடுத்துவிட்டு சென்றாள் முத்து .
தாயும் மகளும் சலசலத்தவாறு சமையல் வேலையில் ஈடுபட்டு இருக்க
“இருங்க மாப்ள உள்ளாரா போயி இருங்க நா வந்துறே” என்றவாறு பையை எடுத்து கொண்டு வெளியே சென்றார் முத்துவின் தந்தை 
எந்த வேலையும் இல்லாமல் அமர்ந்த இடத்திலேயே அமர்ந்து இருக்க பிடிக்காமல் வீட்டை சுற்றி பார்க்க கிளம்பிவிட்டார் கோட்டைசாமி .
பின்புறம் உள்ள கிணற்று பக்கம் தோட்டம் அமைத்து இருந்தார்கள் முத்து வீட்டார் . அதனை பார்த்து கொண்டு அங்கேயே இருந்துவிட்டார் கோட்டைசாமி . அடுப்படியில் தாயும் மகளும் உரையாடுவது விழ அப்படியே அமர்ந்து விட்டார் .
“என்ன த்தா அங்கன ஒன்னய நல்லா பாத்துக்கிடுதாகல” என்று தன் மகளிடம் ஆண்டாண்டாக தாய் கேக்கும் கேள்வியை முத்துவின் தாயும் கேட்க
” ஏ என்னய பாத்தா என்ன கொறய இருக்க மாதி தெரியுது ஓன் கண்ணுக்கு ” என்றவாறு தனது புகுந்த வீட்டு பெருமையை பாட்டாக பாடி கொண்டு இருந்தவளை வாயை மூட வைத்தது அவளது அம்மையின் அடுத்த கேள்வி 
அவளது பேச்சில் சிரித்து கொண்டு இருந்த கோட்டைசாமிக்கும் அந்த கேள்வி வருத்தத்தை தான் அளித்தது .
அப்டி என்ன தான் கேட்டார் என்று பார்ப்போமா 
“எதும் நல்ல சேதி யா டி” என்று தான் கேட்டார் .
இவ்வாறு கேள்வி கேட்ட தன் அம்மைக்கு மௌனம் ஒன்றையே பதிலாக அளித்தால் முத்து .
அவரது கேள்வியில் மௌனித்து போன தன்னவளது உள்ளதை அவளை பாராமலே உணர்ந்து கொண்டார் கோட்டைசாமி . இது வரை அவரும் இதை யோசிக்கவில்லை .
“ஒரு வேல அவ அழுததுக்கு இதா காரணமா இருக்குமோ”என்று யோசனையில் இருந்தவரை கலைத்தது முத்துவின் தாயின் குரல் .
” என்ன டி எதுக்கு அழுகுறவ இப்போ நா என்ன டி கேக்காதத கேட்டுட்டேனு இப்டி கண்ண கசக்குறவ ” என்று பதறி கேட்க 
அவள் புறம் மௌனமே பதிலாக இருந்தது 
” ஏ டி மாப்ள வீட்ல ஏதும் பேசிட்டாகால ” என்றவருக்கு 
” ஐயையோ நீ வேற அவுக இத பத்தி கேக்கவே இல்ல எனக்கு தே சங்கடமா இருக்கு “
” செரி அழுகாத முத்து நம்ம கும்பிடுற சாமி தே நல்ல வழி காட்டணும் வந்தது வந்துட்ட அந்த ஆத்தா கோயிலுக்கு போயி தொட்டி கட்டிட்டு வா முத்து “
“——–“
” ஓன் மாப்ளயவும் கூட கூட்டிட்டு போ “
“——–“
” வாய தொறந்து பேசு டி மண்டய மண்டய ஆட்டுறவா “
” செரி த்தா போய்ட்டு வாரே “
“புள்ள வரம் கெடைக்குறதுலா நம்ம கைல இல்ல ஆத்தா அந்த சாமி பாத்து குடுக்குறப்ப வாங்கிக்கணும் இதுக்குலாம் அழுக கூடாது முத்து “
அவர்கள் உரையாடலை கேட்டுவிட்டு கனத்த மனதுடன் துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து இருந்தவரை தேடி வந்தாள் முத்து .
” என்னங்க சாப்பிட வாங்க “
அவளை வெற்று பார்வை பார்த்தவர் எதும் பேசாமல் அவளுடன் எழுந்து சென்று அரை மனதுடன் சாப்பிட்டு எழுந்தார் .
அவருக்கு வெற்றிலை மடித்து கொடுத்தவள் ” என்னங்க ஊருக்கு போறதுக்கு முன்ன கோயிலுக்கு போய்ட்டு போவமா ங்க “
” சரி முத்து போய்ட்டு வருவோம் “
அவர் முகம் வாடி இருப்பதாய் தோன்ற ” என்னங்க ஏதும் பிரச்னையா மொகம் என்னமோ மாறி இருக்கே “
சிரித்து மறுத்தவர் ” ஒன்னும் இல்ல தல வலிக்குற மாதி இருக்கு த்தா ” 
” செரி உள்ளாரா வந்து படுங்க ” என்று அவளது அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்து தலையை பிடித்து விட்டாள் முத்து அதில் கண்ணயர அப்படியே உறங்கி போனார் கோட்டைசாமி 
அவரை சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தவள் அவர் உறக்கம் கலையாத வண்ணம் நெற்றியில் இதழொற்றி வெளியே சென்றாள் .
                                                                                                                   —— சாரல் அடிக்கும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *