என் பெருமழைச் சாரல் நீ

This entry is part 5 of 25 in the series என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

   என் பெருமழை சாரல் நீ 
சாரல் – 5 
தன்னை இழுத்தது யார்ரென்று நிமிர்ந்து பார்த்தாள் முத்து . அவளது பெரியப்பாவின் மகன் மருதப்பன் ” அட நீயாண்ணே ஒரு நிமுசம் மூச்சே நின்னு போச்சு இப்டியா திடீர்னு வந்து இழுப்ப ” என்றவாறு கையை உதற 
” ஒண்ணுமில்லத்தா அங்கன மந்தைல என்னா நடக்குதுனு தெரியுமாத்தா அதே ஒன்ன கூட்டிட்டு போக அவசரமா வந்தே ” என்று விளக்கமளித்தான் மருது 
“இம்புட்டு அவதியா ஓடி வர அளவுக்கு அப்டி என்னா ணே நடக்கு அங்கன ” என்றால் சுவாரஸ்யமின்றி .
“அட என்னா முத்து உனக்கு தெரியாத அப்போ” என்க  
” தெரியாமதானே ண்ணே கேக்குதே என்னானு வெரசா சொல்லு வூட்ல அம்ம தேடும் ” என்றாள் முத்து .
“திருவுழா பக்க வந்த நம்மா மாப்ளய இந்த கோட்டிக்காரே காளி நம்ம மந்தைல வச்சு எதோ சொல்லிப்புட்டான் போலத்தா அவுக அய்யனாரு கணக்கா நிக்குதாக அதே ஏதும் தப்பு தண்டா நடந்து போகும்னு பயந்து சின்னய்யாவ கூட்டியார வந்தே ” என்றான் மருத் மூச்சு வாங்கி .
” ஐயையோ அண்ணே அய்யன் வீட்லதே இருக்காக நீ போயி கூட்டியா நா மந்தைக்கு போறேன்” என்று ஓட்டமும் நடையுமாக மந்தை என்று அழைக்கப்படும் ஊர் மத்திக்கு சென்றாள் .
சுற்றி ஆட்கள் நிற்க கையாய் முறுக்கிக் கொண்டு நெஞ்சை நிமிர்த்தி மூச்சு வாங்க சீறலோடு நின்று இருந்தார் கோட்டைசாமி முத்து சொல்வதை போல எல்லையில் நிற்கும் காவல் தெய்வம் அய்யனார் போல தான் அனைவர் கண்ணிற்கும் தெரிந்தார் கோட்டைசாமி .
” சபைல வச்சு எங்க ஐயன நாலு பேரு கேள்வி கேக்குத மாதி பண்ண அன்னைக்கே உன்ன வகுந்துருக்கணும் லே பொண்ணு வீட்ல நிக்குதோம் நல்ல காரியம் பேச வந்துட்டு இப்படி நடத்துகிறது நல்லது இல்லனு பேசாம விட்டுட்டேன் இப்போ வாலே பாத்துக்கிடுவோம் நீயா நானா னு” என்றவாறு வேட்டியை மடித்து கட்டி கையை முறுக்கிக் கொண்டு நின்றார் கோட்டைசாமி .
” அதெல்லாம் உங்க ஊறுகாரங்கே வாய்ல நல்லா தாம்ல பேசுவீக செயல் ல காட்டுல எங்க என்ன அடிச்சுட்டு நீ இந்த ஊரு எல்லைய தாண்டிருவியா னு பாக்குதேன் ல ” என்று அவன் நிற்க 
அதற்கு மேல் தாங்காது  அவனை நோக்கி பாயும் நேரம் அவள் வந்து முன்னே நின்று விட்டாள் அவளை பார்த்ததும் அப்படியே நின்று ” முத்து வெலகு இம்புட்டு பேசினவன விட்டுட்டு போனா எனக்கும் எங்க ஊருக்கும் தே  அசிங்கம் ” என்றார் அவனை பார்த்து பல்லை கடித்து கொண்டு .
” இல்ல அத்தான் இது நல்லா இல்ல இப்டியா நாலு பேருக்கு மத்தியில பொண்ணு எடுக்குற ஊருக்குள்ள நடந்துகுவிய ? நாளப்பின்ன நாலு நல்லது கேட்டதுக்கு வந்து போகணும் அத்தான் இப்படி பட்டுனு கைய நீட்டுனா இது ஊரு வெவகாரமா ஆகி போகாதா அப்றம் மாமாக்கு என்ன மருவாத? இல்ல எங்க அப்பாருக்கு தே என்ன மருவாத? கைய இறக்குங்க மொத வீட்டுக்கு வாங்க எதா இருந்தாலும் அங்கன பேசிக்கலாம் என்று அவரை நேருக்கு நேர் பார்த்து பேசியவளை பார்த்து கொஞ்ச நேரம் முன்னாடி வளையல் கடையிலும் அன்று வீட்டிலும் பார்த்த முத்துவ் இது பிரமித்து நின்று விட்டார் கோட்டைசாமி .
அவள் கூறியதை கேட்டதுக்கு பிறகு தான் ஐயனையும் வீட்டின் மரியாதையையும் யோசித்தார் கோட்டைசாமி உண்மை தான் இப்போ அவனை அடித்து இருந்தால் அது கண்டிப்பாக இரண்டு ஊருக்குள்ளும் பெரிய பிரச்சனையை இழுத்து விட்டு தான் இருக்கும் . 
” இல்ல முத்து என்ன நடந்துச்சுனா” என்று இழுத்தவரை பார்த்து “எதா இருந்தாலும் வீட்ல போயி பேசிக்கலாம் அத்தான் நடங்க வீட்டுக்கு” என்றாள் கண்டிப்போடு 
அவள் பார்வையில் இருந்த எதோ ஒன்று அதற்கு மேல் அங்கு நிற்க விடமால் அவளை தொடர செய்தது.
அவர் ஏதும் பேசாமல் அவ்விடம் விட்டு நகரவும் முத்துவின் தந்தை அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது வேகமாக வந்ததால் மூச்சு வாங்கிய படியே ” என்னா மாப்ள என்ன ஆச்சு இந்த கோட்டிக்காரா பய என்ன சொன்னான் என வினவ “
“ஒண்ணும் இல்லைங்கய்யா வாங்க வீட்டுக்கு போயி பேசிக்கலாம் ” என்று முடித்து விட்டாள் முத்து . “சேரி த்தா மாப்ளய வீட்டுக்கு கூட்டிட்டு போ த்தா ” என்றுவிட்டு மந்தையில் இருந்த பெரியவர்களுடன் நின்று விட இளையவர்கள் இருவரும் வீடு நோக்கி சென்றனர் . 
அதனை கண்ட காளிமுத்து க்கு வயிறெரிய ஆரம்பித்தது ” எப்படியாச்சும் இத ஊரு வெவகாரமா ஆக்கி கல்யாணத்த நிறுத்திப்புடனும் னு நெனச்சது வீணா போச்செல ” என்று தன் ஆதங்கத்தை வெளியிட்டான் காளிமுத்து . செல்பவர்களின் முதுகை முறைத்து நின்றான் காளிமுத்து . 
” சேரில விடு இன்னொரு தெரம் மாட்டாமலா போயிருவான் வால என்று அழைத்து சென்றனர் அவனது சகாக்கள் .
வழியை பாராமல் தன்னையே பார்த்தவாறு நடந்து வண்ட கோட்டைசாமியை கண்டு “எதுக்கு இப்டி பாத்துட்டு வாரிக ” என்றாள் அவரை நிமிர்ந்து பாராமல் .
” இல்ல நா அன்னைக்கு பாத்த முத்து தான இப்போ ஏ முன்ன நிக்குறவனு பாக்குறே ” என்றார் நிஜமான ஆச்சரியத்துடன் .
அவள் சின்னதாக சிரித்து ” அதுல என்னா சந்தேகம் வந்துச்சு ஒங்களுக்கு” நா அதே முத்து தே ஏ இப்டி கேக்குதிய ” என்றாள் நாணத்தோடு . 
” ஹாஹா அன்னைக்கு நிமுந்து கூட பக்க மாட்டேனவ இன்னைக்கு மந்தைல இப்படி பேசினா வேற எப்படி புள்ள கேக்குறது ” என்றார் கேலியேடு. 
அவள் எதும் பேசாமல் தலை குனிந்தவாறே செல்ல இவர் புன்னகையுடன் அவளை தொடர்ந்தார் . வீடும் வந்து விட அவள் முன்னே சென்று உள் நுழைய கோட்டைசாமி வீட்டுக்குள் போக தயங்கி நிற்க முத்து உடன் வந்தவரை காணாது திரும்ப அவர் வாசலிலேயே நின்று இருந்தார் ” உள்ளாரா வாங்க” என்றாள் முத்து.
” இல்ல முத்து நா உள்ளார வரல குடிக்க கொஞ்சம் தண்ணி மட்டும் குடுத்தா ” என்றவாறு திண்ணையில் அமர முத்து உள்ளே சென்றாள் .
முத்துவின் அம்மை பேச்சு சத்தம் கேட்டு வெளியே எட்டி பார்க்க கோட்டைசாமியை கண்டவர் ” வாங்கய்யா உள்ளாரா வந்து ஒக்காருங்க ஏட்டி முத்து மோரு கொண்டா டி ” என்றார் உள்ளே பார்த்து .
” இருக்கட்டும் அத்த நா இங்கனயே இருக்கேன் தண்ணி குடுங்க போதும் ” என்றவாறு அவர் அமர்ந்து விட “செரி ப்பா இருங்க இந்தா வாரே ” என்று உள்ளே சென்றார் 
தண்ணீர் சொம்புடன் முத்து வந்து விட அதனை வாங்கி அருந்தியவர் ” செரி அப்போ நா கெளம்புதே புள்ள மாமா வந்தா சொல்லிரு என்றவாறு எழ ” சாப்டு போங்க ” என்றாள் முத்து .
” இல்ல முத்து நேரமாச்சு ஐயன் அங்கன காத்துருப்பாக என்று எழுந்தவர் அவளது கையில் தான் தன்னவளுக்காக வாங்கி வந்த வளையலை கொடுத்து விட்டு தலையசைத்து விடை பெற்றார் . 
 அதனை பெற்று கொண்ட மங்கைக்கோ இன்ப அதிர்ச்சி குற்றால குளுமை மனதிற்குள் குடி கொள்ள தன்னிடம் விடை பெற்று செல்பவரையே பார்த்து இருந்தாள் .
முத்துவின் அம்மை வந்து தோளை தட்டி ” ஏட்டி எழுப்புட்டு நேரமா காத்திக்கிட்டு இருக்கேன் ம்ம் னு கூட கேக்காம என்ன நின்னுக்கிட்டே கனா காங்குறவ ” என்றவருக்கு சிரிப்பொன்றை பதிலாக உதிர்த்து விட்டு தன் அறைக்கு சென்று விட்டாள் 
” இனி நாம கூப்பிட்றதுலாமா காதுல விழும் ” என்றவர் தன் வேலையை தொடர அடுப்படிக்குள் சென்று விட்டார் .
தன் மெத்தையில் விழுந்தவளுக்கு மனம் முழுவதும் தன்னவனே நிறைந்து இருந்தான் ..
தன் வீடு திரும்பியவனை வரவேற்றது  ஆத்திரத்தோடு தன்னை எதிர்பார்த்து இருந்த அவரது அய்யனின் கோபமுகமே கோட்டைசாமியைக் கண்டதும் ” ஏல வால இங்கன எங்கல போயிருந்த இம்புட்டு நேரோம் ” என்க 
அது வரை மனதில் இருந்த மகிழ்ச்சி காணாமல் போக அவரை எதிர்கொள்ள இயலாது தலையை கவிழ்ந்தவாறே ” பயலுவ கூட பக்கத்து ஊரு வரைக்கும் போயிட்டு வாறே அய்யா ” என்றார் மெல்லிய குரலில் .
“நா ஒண்ட என்னாலே சொல்லிட்டு போனே அப்போ தலய தலய ஆட்டிட்டு இப்போம் அங்கன போய்ட்டு வந்தேன்னு சொல்லுதவே ” என்றார் சற்றே அதட்டலுடன் .
” இல்லைங்கய்யா அது வந்து ” என இழுக்க பெரியவருக்கு சிரிப்பு வர பார்த்தது அதனை அடக்கியவாறு 
” அதா வந்துட்டல்ல லே அப்றம் என்னா வந்து போயினு இழுத்துட்டு இருக்கவே ” என்றார் பெரியவர் .
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ” எல்லாம் இந்த ஆச்சி யால வந்தது நா பாட்டுக்க செவனேனு படுத்து கிடந்தவன அத இத சொல்லி அனுப்பி வச்சுட்டு இப்போ எங்க போயி ஒளிஞ்சுட்டு இருக்குனு தெரியல ஏ கண்ணுல மட்டும் மாட்டட்டும் தண்டட்டிய அத்துறேன் ” என்று தனக்குள் சீதையம்மாளை வசைபாட 
” என்னாலே அங்கன முணுமுணுப்பு பேசுறத பெலக்க பேசுல” என்றார் பெரியவர் .
” இல்லைங்கய்யா பயலுவ கூப்ட்டானுங்க அதே போயிட்டேன் மாப்பு கேட்டுக்குறேன் ய்யா ” என்று நின்றவரை என்ன சொல்லுவது என்று தெரியாமல் அருகே அழைத்து ” ஏ லே போனது தே போன எதுக்கு போனியோ அத மட்டும் பாத்துட்டு வராம எதுக்கு ல அந்த காளி பய கூட சண்டைக்கு நின்ன ” என்றதும் திக்கென்று ஆனது கோட்டைசாமிக்கு எது தன் அய்யனுக்கு தெரியக்கூடாது என்று நினைத்தாரோ அதனை அவர் கேட்கவும் சற்று மிரண்டு தான் போனார் 
அவர் திகைத்து ” அய்யா அது உங்களுக்கு எப்படி …..” என்று இழுக்க ” தெரியும்ன்னு கேக்குத்தியால உங்கய்யானுக்கு எல்லா பக்கமும் கண்ணு இருக்கு ல நீயும் உன் கூட பொறந்தவனும் என்ன பண்ணாலும் எனக்கு தெரிஞ்சுரும்ல ” என்றார் . 
” அந்த கோட்டிக்காரே தே அய்யா எங்கள வம்புக்கு இழுத்தா அனாவசியமா வார்த்தைய விடவும் தாங்கய்யா நா சண்டைக்கு போக வேண்டியதா போயிருச்சு ” என்று விளக்கினார் கோட்டைசாமி .
” அதலாம் செரி தாம்ல அவே எதுக்கு சும்மா போன உங்கள வம்புக்கு இழுக்குறானு யோசிக்காம கைய நீட்டீருவியால பொண்ணு எடுக்குற ஊருக்குள்ள கைகலப்பு னு நின்னா யாருக்குல அசிங்கம், ஒன்னுல எறங்குறதுக்கு முன்ன எல்லாத்தையும் யோசிக்கணும்ல ” என்றவரை இடை மறித்து அவசரமாக ” இல்லைங்கய்யா அவே தே வம்பு பண்ணுனா ” என்றார் தன் தரப்பை நிரூபித்து விட எண்ணி .
” அவே ஆயிரம் தப்பு பண்ணாலும் அது அவே ஊருல அவன விட்டு குடுப்பாகலா அவசராபட கூடாதுல நிதானம் வேணும் எல்லா காரியத்துலயும் எனக்கு பின்னால நல்லது கேட்டது பாக்க வேண்டிய பொறுப்பு ஒனக்கு இருக்குல ” எனவும் தனது முட்டாள்தனத்தை எண்ணி வெட்கினார் கோட்டைசாமி .
” மாப்பு கேட்டுக்கிறேன்ய்யா இனிமே இப்டி நடக்காதுங்கய்யா” என்றார் குற்ற உணர்ச்சியில் 
தன் மகன் இவ்வாறு வருத்தப்படுவதை தாங்காது ” விடு லே இனிமே சூதானம நடந்துக்கோ , அப்றம் ஏ மருமக என்னா லே சொன்னா ” என்றார் பேச்சை மாற்றும் விதமாக .
அவர் கேட்டதும் முத்துவின் வெட்க முகம் நினைவில் வர முறுவலுடன் ” ஒன்னும் சொல்லலைங்கய்யா ” என்றார் தலை குனிந்தவாறு .
” மந்தைல சண்டியர நின்னவுகள பேசியே தான் பின்னாடி வர வச்சுட்டானுல லே கேள்விப்பட்டேன் என்றார் கோட்டைசாமியின் முகத்தை ஆராய்ந்தவாறே .
” யாரோ தப்பா சொல்லிருக்காகய்யா என்றார் அசடு வலிந்தவாறே .
வெடி சிரிப்பொன்றை உதிர்த்தவர் ” அது செரி உங்கய்யனுக்கு காதும் கண்ணும் போயிருச்சு னு சொல்லுறியாலே என்றார் பெரியவர் .
அவரின் கூற்றில் திகைத்து ” அய்யா என்ன சொல்லுதீக அங்கன வந்துருந்தீகளா”  என்றார் நிஜமான ஆச்சரியத்துடன் .
பதிலாக தலையசைத்தவர் ” ஒனக்கு ஏத்த புள்ளய தாம்ல பாத்துருக்கே ஒண்ட மாட்டிகிட்டு என்ன பாடு பட போகுதோ பவோம்னு நெனச்சன்ல இன்னைக்கு தே தெரிஞ்சுது ஒனக்கு எந்த வகையிலயும் கொறஞ்சவ இல்ல லே ஏ மருமவ ” என்றார் தன்னை மெச்சி .
அவரது மெச்சுதலை ஆமோதிக்கும் வண்ணமாக தலையசைத்து சிரித்தார் கோட்டைசாமி. அவளது பெயரை கேட்டதும் மனதுக்குள் அடிக்கும் சாரலை என்ன முயன்றும் தடுக்க முடியாமல் திணறி தான் போனார் கோட்டைசாமி .
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அல்லவா அவரது முகத்தை வைத்தே மனதை படித்த பெரியவர் ” பொருத்துக்கல எண்ணி முப்பது நாள் ல கல்யாணம் அப்றம் பக்கத்து ஊருக்கு போயி பாக்குற அளவுக்கு சேரமம் இல்லாம மருமவ ஓன் பக்கத்துலயே தாம்ல இருப்பா பாத்துகிட்டே இருக்கலாம் ” என்றார் கேலியுடன் .
வெட்கத்தை மறைக்க முடியாமல் “நா உள்ளாரா போறேங்கய்யா” என்றுவிட்டு விட்டா போதும் டா சாமி னு ஓடியே போய் விட்டார் தன் அறை நோக்கி .
                                                                                           —— சாரல் அடிக்கும் ..

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *