என் பெருமழைச் சாரல் நீ

This entry is part 24 of 25 in the series என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

என் பெருமழைச் சாரல் நீ

                                             என் பெருமழை சாரல் நீ 

சாரல் – 24 

அந்த பெரிய இரண்டு காளை மாடுகளை பூட்டிய மாட்டு வண்டி குலுங்கி குலுங்கி அந்த சாலையில் சென்று கொண்டு இருந்தது.

காளைகளின் கழுத்து மணி எழுப்பிய ஜல் ஜல் என்று ஒலியும் வண்டி சக்கரத்தின் கட கட சத்தத்தையும் தவிர்த்து வேறு சத்தமே இல்லை.

பேச்சி எப்போதும் கலகல பேச்சுக்கு சொந்தக்காரி அவளது பேச்சில் அவளது வீடே கலகலவென்று இருக்கும்.

என்று அந்த அம்மாள் மயங்கி விழுந்த அவளது நாடியை பிடித்து அவள் இரண்டு உயிராய் இருப்பதை உறுதி செய்தாளோ அன்றே அவளது கலகல பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தது காலம்.

அதன் பிறகு தனது அத்தை மகனுடனான திருமண பேச்சில் மொத்தமும் ஒடுங்கி போயி இருந்தவளுக்கு தன்னை மாரிலும் தோளிலும் போட்டு வளர்த்த தனது தந்தையும் தமையன்களும் தன்னிடம் பாராமுகம் காட்டுவது அவளை மேலும் உருக்குலைய வைத்து இருந்தது.

அவளது கரு விழிகளை சுற்றி கருவளையம் வர தொடங்கி இருந்தது முகம் சோகத்தை பிரதிபலித்தாலும் அதில் ஒரு பொலிவு இருந்தது. மனம் பாரமடைய யாரிடமாவது கதறி அழ வேண்டும் போல் இருந்தது பேச்சிக்கு ஆனால் அதை செய்ய மனம் துணியாது அமைதியாய் இருந்தாள்.

வண்டி அந்த சாலையில் இருந்து பிரிந்து காட்டுக்குள் செல்லும் பாதையில் இறங்கியது. அவ்வளவு தான் தனது வாழ்க்கை இன்றோடு முடிந்தது என எண்ணுகையில் துக்கம் தொண்டையை அடைக்க தனது காதலுடனான காதல் பொழுதுகளை நினைத்துக் கொண்டாள். அவளது கண்கள் கலங்க தொடங்கின.

வீரைய்யாவுடன் தான் இருந்த பொழுதுகளில் தங்களது எதிர்கால வாழ்வை பற்றி அவர்கள் கண்ட கனவுகள் அனைத்தும் அவளது கண்ணெதிரே காற்றில் கலைந்து செல்வதை போல் உணர்ந்தாள்.

தான் இறந்தால் கூட பரவா இல்லை ஒன்றும் அறியாத இந்த குழந்தை என்ன பாவம் செய்தது. இன்னும் மண்ணை பார்க்காத ஒரு கருவிற்கு ஏன் இந்த நிலைமை. தன்னவனது வாரிசு இப்படி வளரும் முன்னே கருக வேண்டுமா. நீ என்ன பாவம் செய்தாய் என் வயிற்றில் வந்து உதிக்க என்று மனதிற்குள் மருகியவள் வயிற்றில் கை வைத்து தடவி விட்டாள்.

அவ்வளவு இனி நான் வீடு திரும்ப போவது இல்லை, கொள்ளையில் நான் வளர்த்த கொய்யா மரம் காய்ப்பதை  நான்  பார்க்க போவதில்லை, அம்மையை, அய்யனை தனது தோழியை, தான் வளர்த்த கன்றுக்குட்டியை மல்லிகை செடியை இன்னும் இன்னும் தான் இத்தனை வருடங்களாய் பழகி வளர்ந்த இடத்திற்கு இனி நான் சொல்ல போவது இல்லை. இதோ இன்னும் சிறிது தூரத்தில் தனக்கு என்ன நேர காத்து இருக்கிறதோ … 

உயிரற்ற எனது உடலை பார்த்தாள் என்னவர் துடித்து போவாரே…

அவரையும் காண முடியாது போய் விட்டதே என்ன ஒரு துரதிஷ்டம் என்று தலையில் அடித்துக் கொண்டாள். இதை எல்லாம் யோசித்து யோசித்து அவளுக்கு மனதினுள் துக்கம் கரை புரண்டது.

இவ்வாறு உள்ளே புயல் வீச வெளியே ஏதும் கூறாது கற்சிலையாய் அமர்ந்து இருந்தாள் பேச்சி.

வாய் திறவாமல் அமர்ந்து இருந்த தனது தங்கையை ஒருமுறை திரும்பி பார்த்தவன் அவளிடம் பேசும் விருப்பு இன்றி தலையை திருப்பிக் கொண்டான்.

அவனை பார்த்தவளுக்கு தான் ஒரு நிமிடம் வீட்டில் இல்லையாயினும் தன்னை தேடி தவித்து போகும் தனது அந்த பழைய அண்ணனின் நினைவுகள் மனதினுள் வந்து போக கசந்த முறுவல் ஒன்றை உதிர்த்தவள் மறுபடியும் தனது நிலையை தொடர்ந்தாள்.

வண்டி அடர்ந்த காட்டுக்குள் நுழைந்தது. அந்த காட்டிற்குள் அவள் இதற்கு முன் தனது குல தெய்வமான சீலைக்காரி அம்மனை தரிசிக்க வந்து இருக்கிறாள். ஆனால் பெண்களுக்கு அந்த காடு அத்தனை பாதுகாப்பானது இல்லை என்பதால் அந்த கோவிலின் மண்ணை எடுத்து வந்து ஊருக்குள் கோவிலை கட்டினர்.

அதிலிருந்து அந்த காட்டுக்குள் செல்லும் அவசியம் அற்று போனது பேச்சிக்கு. சூரிய ஒளியை மறைத்து தனது கிளைகளை பரப்பி இருந்த நெடிய மரங்களை பார்க்கும் போதே அவளது மனம் சில்லிட்டது.

இந்த காட்டுக்குள் தனக்கு என்ன நேர்ந்தாலும் யாருக்கும் தெரியாது. அதனால் தான் இங்கு அழைத்து வந்து உள்ளார்கள் என யூகிக்க முடிந்தது பேச்சியால்.

இவர்களது வண்டி செல்லும் சத்தத்தை தவிர்த்து வேறு சத்தம் ஏதுமின்றி அத்தனை அமைதியாய் இருந்தது அந்த காடு.

வண்டி மாடுகளின் கழுத்து மணி சத்தத்தில் கூடுவிட்டு பறந்த பறவைகள் இறகுகளை பட படவென்று அடித்துக் கொண்டு ஒலி எழுப்பியது.

வண்டி நின்றதும் பேச்சி நினைவுக்கு வந்தவளாய் சுற்றி பார்க்க மூத்தவன் இறங்கி “பேச்சி கீழ எறங்கு” என்றான் அவளை பார்த்து 

“ம்ம் செரி ண்ணே” என்றவாறு கீழே இறங்கினாள் பேச்சி.

கூச்சலிட்டவாறு பறந்து செல்லும் பறவைகளை பார்த்தவாறு நின்று இருந்தாள் பேச்சி. 

“ம்ம் வா எங்க கூட” என்றவாறு இரு ஆண்களும் முன்னே செல்ல அவர்களை தொடர்ந்து பேச்சி செல்ல மூவரும் சீலைக்காரி அம்மனின் கோவிலை நோக்கி சென்றனர்.

மனதிற்குள் பல்வேறு எண்ணங்களுடன் மூவரும் அந்த கோவிலை அடைந்தனர்.

சலசலத்து ஓடும் ஆற்றின் கரையில் ஆதி காலத்தில் கற்களால் கட்டப்பட்ட அந்த கோவில் இன்றும் புயலுக்கும் மழைக்கும் நிலைத்து கம்பீரமாய் நின்று இருந்தது.சிறிய கோவில் அது அம்மனுக்கு மட்டும் கட்டப்பட்டது. கோவில் சிறிது என்றாலும் கலைநயமுடன் காணப்பட்டது.

அந்த ஆற்றின் குளிர்ந்த காற்று உடலை வருடி செல்ல அந்த இடமே ரம்மியமாக காணப்பட்டது.

ஆனால் அங்கு இருந்த மூவரின் மனமோ இது எதையும் கவனிக்கும் நிலையிலோ ரசிக்கும் நிலையிலோ இல்லை.

இவர்கள் தன்னை என்ன செய்ய போகிறார்கள் என்ற எண்ணத்தோடே மௌனமாய் நடந்து வந்தாள் பேச்சி.

கோவிலின் எதிரே வந்ததும் இருவரும் நிற்க அதனைக் கவனியாமல் வந்த பேச்சி அவர்களின் முதுகில் தலையை மோதி பின் நின்றாள்.

“என்ன பேச்சி கவனம் லாம் எங்கன இருக்குது?” என்று ஒருவன் கேக்க 

“நம்ம தங்கச்சிக்கு செய்யுற வேலையில வீட்டு ஆளுக மேல இருந்த கவனம்லாம் போயி ரெம்ப நாளாச்சுது லே” என்றான் மற்றொருவன்.

பேச்சு தன்னை குத்திக்காட்டுவதாய் உணர்ந்தவள் அமைதியுடன் ஆற்றில் கால் நனைக்க சென்றாள்.

“எங்கன போற முத்து” என்றான் மூத்தவன்.

“ஆத்துக்கு ண்ணே கால் கை கழுவிட்டு வாறே”

“அதுக்குள்ள என்ன அவசாரம் த்தா அங்கன தானே போக போற” என்றதும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க

“இல்ல த்தா இந்தா இந்த பானையில தண்ணி எடுத்து கொண்டாந்து அத்தாக்கு ஊத்து” என்றான் சமாளிக்கும் விதமாக

“ம்ம்” என்றவாறு அவள் பானையை வாங்கிக் கொண்டு ஆற்று பக்கமாக போக

“ஏலே காரியத்த கெடுத்துருவ போல அந்த புள்ளைக்கு தெரிஞ்சா சத்தம் போடும் எங்கிட்டாச்சும் ஓடும் எந்த சத்தமும் இல்லாம முடிக்கணும்ல”

“மன்னிச்சுரு ண்ணே ஆனா இங்கன யாருண்ணே வர போராக இந்த காட்டுக்குள்ள தே யாருமே வர மாட்டாகளே”

“சொல்ல முடியாது லே நம்ம கெரகம் எவனாச்சும் வந்தா பெரிய சிக்கலாயி போகும்ல”

“ம்ம் செரி ண்ணே அது வருது வாங்க நம்ம அந்த பக்கமா போவோம்”

“ம்ம் ஆமா லே சந்தேகம் வர கூடாது” என்றவாறு அவர்கள் அங்கிருந்து நகர்ந்து செல்ல பேச்சிக்கு சிரிப்பு தான் வந்தது.

இருந்தும் தனக்கு எதும் தெரியாது என்பது போல் இருந்து கொண்டாள்.

தண்ணீரால் அம்மனை தூய்மை படுத்திவிட்டு நிமிர்ந்தாள் அவளது அண்ணன்கள் இருவரும் வந்து நின்றனர்.

“என்னண்ணே?”

“வேல முடிஞ்சுதா ஆத்தா?”

“ம்ம் முடிஞ்சுது ண்ணே”

“செரி அப்ப போயி கெழக்கு பக்கமா நின்னு ஆத்துல மூணு முங்கு முங்கிட்டு வா “

“எதுக்கு ண்ணே?”

“பரிகாரம் பண்ணணும்ல த்தா “

“ம்ம் செரி ண்ணே”

“ஏலே என்னாலே அப்டி பாக்குத?”

“இல்ல ண்ணே இந்த புள்ள அந்த தப்ப பண்ணிருக்குமா ண்ணே?”

“ஏலே என்ன சொல்லுத?”

“இல்ல ண்ணே மனசு கேக்கல ண்ணே”

“ம்ம் எனக்கும் தாம்ல ஆனா என்ன பண்ண அய்யன் சொன்னத கேட்டியல்ல?”

“ம்ம் கேட்டே ண்ணே””

“ம்ம் பொறவு இம்பூட்டு தூரம் வந்துட்டு இப்ப இப்டி பேசுத?”

“இல்ல ண்ணே அது வந்து ..”

“என்னையாவும் கொழப்பாத ல போயி அய்யன் சொன்னத செய்”

“செரி ண்ணே ” என்றவாறு அவன் நகர இருவரும் பேச்சி யை தொடர்ந்து சென்றனர். 

அவள் முதுகின் பின் சென்றவர்கள் இருவரும் தங்களுக்குள் சைகையில் எதோ பேசிக் கொண்டார்கள். பின் இருவரும் தண்ணீருக்குள் சத்தம் எழுப்பாமல் மூழ்கினர்.

பேச்சி கிழக்கு புறமாக திரும்பி நின்றவாறே அப்படியே தண்ணீருக்குள் மூழ்க. தண்ணீருக்குள் அவளுக்கு முன்னதாகவே இருந்த அவளது அண்ணன்கள் அவளை அப்படியே பின் புறம் இருந்து வாயை மூடி அவர்களின் வேட்டியை அவிழ்த்து கைகளை பின்புறமாய் பிணைந்து ஆற்றின் மைய பகுதிக்கு இழுத்து சென்றுவிட்டனர்.

அவள் தண்ணீருக்குள் மௌனமாய் மனதிற்குள்ளேயே கதறி தீர்த்தாள். வயிற்றில் இருந்த குழந்தைதான் அவளுக்கு பெரியதாக பட்டது. அதை வாழ வைக்கவேணும் தான் உயிருடன் இருக்க வேண்டும் என்று மனதிற்குள் ஆண்டவனிடம்

“கடவுளே ஏ புள்ள உசுர காப்பாத்து ஆத்தா சீலக்காரி காப்பாத்து த்தா” என்று வேண்டினாள். அவ்வாறு வேண்டுதல் வைத்த சிறிது நேரத்திலேயே அவளுக்கு மூச்சுமுட்டி மயக்கம் வர தொடங்கியது.

அவள் பாதி மயக்கமுற அப்படியே விட்டுவிட்டு கரையை நோக்கி சென்றனர் அந்த இரு கல் நெஞ்சக்காரர்களும்.

பேச்சி ஊரில்,

கோட்டைச்சாமியின் வண்டி பேச்சியின் ஊர் எல்லைக்குள் வரும் போதே ஆற்றங்கரையில் ஓட்டமும் நடையுமாக ஒரு பெண்மணி எதிரே வர 

“ஏ இந்த புள்ள இப்டி வேகு வேகுன்னு போயிட்டு இருக்கு” என வண்டியின் வேகத்தை குறைக்க

“என்ன ண்ணே” என்றவாறு உள்ளே இருந்து எட்டி பார்த்த வீரைய்யா கண்டு விட்டான் லெட்சுமியை.

அவளை பார்த்ததும் பேச்சியை பற்றி விசாரிக்க வண்டியை விட்டு கீழே இறங்கி அவள் எதிரே வர அவளும் கண்டு கொண்டாள் வீரைய்யாவை.

அவள் “அய்யா அய்யா வந்துடியலா? ஒங்கள தேடி தே போனே, கும்புட போன சாமி குறுக்க வந்தது கணக்கா வந்துட்டிய” என்றவாறு அவள் அவனை நெருங்க 

மற்றவர்களும் வண்டியில் இருந்து இறங்கினர். 

“இந்தாங்க அய்யா பேச்சி அம்மா இத ஒங்கட்ட குடுக்க சொன்னாக” என்று அவள் தாவணியை கொடுக்க 

மற்றவர்கள் புரியாமல் பார்த்து இருந்தனர். வீரைய்யா அதனை வாங்கி முழுதும் விரித்து சோதித்தான். அதில் ஒரு இடத்தில் எழுத்துக்கள் தெரிய அந்த இடத்தை அருகில் கொணர்ந்து வாசிக்க தொடங்கினார்.

அவள் சுருக்கமாய் இரண்டு வரிகளில் விஷயத்தை எழுதி இருக்க அதனை படித்து முடித்ததும் லெட்சுமியை பார்த்து

“லெட்சுமி அவுக எப்ப கெளம்புனாக?”

“இப்ப தே அங்கிட்டு போராக நா வெரசா ஒங்கள பாக்க இங்கிட்டு வந்தே”

“ரெம்ப நன்றி லெட்சுமி ஒன்னய என்னைக்கும் நா மறக்க மாட்டே” என்று உணர்ச்சி தளும்ப சொல்ல

கோட்டைச்சாமி “என்ன லே அது”

“அண்ணே அந்த கல்யாணத்த நிறுத்தவும் பேச்சி அப்பாவுக்கு அவ மேல சந்தேகம் வந்துருச்சு போல ண்ணே, அந்த புள்ளய என்ன பண்ண சொன்னாருன்னு தெரியல்ல காலைல திடுதிப்புனு காட்டுக்குள்ள இருக்க கோயிலுக்கு அந்த புள்ளய அவ அண்ணனுங்க ரெண்டு பேரும் கூப்ட்ருக்கானுவ, அவ எனக்கு இந்த சேதிய எழுதி குடுத்துட்டு அவனுங்க கூட கெளம்பி போயிடலாம் ண்ணே”

“அய்யயோ செரி வண்டில ஏறு ல எதாச்சும் தப்பா நடக்குறதுக்குள்ள அங்கன நம்ம போகணும்” என்றவாறு அந்த பெண்மணியை பார்த்து நன்றி தெரிவித்து விட்டு வழியை கேட்டுக்கொண்டு உடனே புறப்பட்டனர்.

வழிநெடுக பேச்சியின் நியாபகம் அவரை துன்புறுத்த “அவள எப்படியாச்சும் என்ட சேத்துரு கருப்பா” என்று அவரும் கடவுளிடமே தனது வேண்டுதலை வைக்க

முதலில் பெருசா ஏதும் பண்ண மாட்டானுங்க என்று தைரியம் கொண்டு இருந்த மற்றவர்கள் அந்த காட்டை பார்த்ததும் புரிந்து கொண்டனர் எதோ தப்பா தே பண்ண போறானுங்கனு.

கூடிய மட்டிலும் விரைவாக வண்டியை செலுத்திய கோட்டைசாமி பேச்சியின் வண்டி நின்ற இடத்திற்கு வந்துவிட்டார்.

அங்கேயே அவர்கள் வண்டியையும் பக்கத்தில் ஒரு மறைவில் விட்டுவிட்டு ஐவரும் இறங்கினர்.

கால் தடங்களை வைத்து அவர்கள் கோவிலை அடையவும் பேச்சியின் அண்ணன்கள் இருவரும் ஆற்றில் இருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது.

அவர்களை காணவும் ஐவரும் அங்கு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு பேச்சியை தேட அவளை காணவில்லை.

அந்த இருவர் மட்டுமே ஆற்றை பார்த்து பார்த்து தயங்கி நின்றனர்.

அவர்கள் ஆற்றை பார்க்க கோட்டைசாமிக்கு எதோ விளங்கியது.

தனது தம்பியிடம் கண்ணை காட்டிவிட்டு மெதுவாக ஆற்றின் கரையை அடைந்தனர்.

அந்த இருவரும் தூரத்தில் ஆற்றை பார்த்து கும்பிடுவது தெரிந்தது. அந்த நேரத்தில் ஐவரும் ஆற்றுக்குள் மூழ்கினர்.

பேச்சியின் அண்ணன்கள் வந்த வழி திரும்ப இவர்கள் நீருக்குள் பேச்சியை தேடி பார்க்க தொடங்கினர்.

அந்த இடம் முழுதும் தேடி களைப்புற்றவர்கள் நீரின் அளவு குறைவான இடத்திற்க்கு வந்து அமர்ந்து விட்டனர்.

வீரைய்யா மட்டும் இன்னும் தேடிக் கொண்டு இருந்தார். எத்தனை தேடியும் அவளை காணாது கண்கள் கலங்க அப்படியே தலையில் அடித்துக் கொண்டு அழ தொடங்கினார்.

“அய்யோ பேச்சி நா வேணா வேணான்னு சொன்னேனே டி இப்டி என்னய விட்டுட்டு போறதுக்கா என்ன புடுச்சுருக்குனு இவ்ளோ தூரம் கொண்டு வந்த… பேச்சி எங்க டி இருக்க வந்துரு டி நீ இல்லாம நம்ம புள்ள இல்லாம நா என்ன டி வாழ போறே, இனி நா என்ன டி பண்ண போறே.. ஓ வாழ்க்கைய ஒண்ணுமில்லாம சீரழிச்சுட்டேனே டி.. நா பாவி பேச்சி பாவி என்னையாவும் ஓ கூட கூட்டி போயிரு டி நானும் வாரே” என்று தண்ணீருக்குள் மூழ்கினார்.

மற்றவர்கள் அவரை இழுத்து கொண்டு வந்து கரை சேர்த்தனர். ‘ஏலே நீ என்ன பைத்தியமா ல எதையுமே யோசன இல்லாம செய்யுறது பொறவு ஒக்காந்து அழுகுறது இல்ல முட்டா தனமா முடிவு எடுக்குறது.” என்று கோட்டைச்சாமி அவரை கடிந்து கொள்ள.

“என்ன மாப்ள இதுக்கு தே இந்த மாதி வேல எல்லாம் பாக்க கூடாதுங்குறது இப்ப பாருங்க எல்லாருக்கும் சங்கடம்” என்று சோமு கூற

“ஏலே என்னாலே பேசுத அந்த புள்ளயோட அப்பனையும் அண்ணனையையும் வெட்டி போடுறத விட்டுட்டு இப்டி பேசிகிட்டு இருக்கவ” என்று காளி கூற 

முருகன் அவனை தொடர்ந்தான் “ஆமா லே இப்டி தா புள்ளன்னு கூட பாக்காம ஆத்துல தள்ளி விட்ருக்கானுங்க அவனுங்கள கொன்னா தாம் ல ஏ மனசு ஆரும்” என்று முடிக்க

“நீங்க என்ன சொல்லுதிய” என்று கோட்டைசாமியை வினவ அவரின் பார்வையோ வேறு எங்கோ வெறித்துக் கொண்டு இருந்தது.

                                                                                  ———-சாரல் அடிக்கும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *