என் பெருமழைச் சாரல் நீ
என் பெருமழை சாரல் நீ
சாரல் – 18
தன் மனையாளை காண போகும் ஆவலில் சென்றவரை வரவேற்றது முத்து வீட்டாரின் பதட்டமான முகங்கள்.
“வாங்க மாப்ள” என்று முத்துவின் தந்தை வரவேற்க அவரது குரலில் பதட்டமோ பயமோ என்று பிரித்தறிய முடியாத எதோ ஒன்று இருக்க அது கோட்டைசாமியையும் பற்றிக் கொண்டது.
வண்டியை விட்டு பதட்டமாக இறங்கியவர் “மாமா என்ன ஆச்சு ஏ இப்டி நிக்குதிய”
“என்னனு மாப்ள சொல்லுவே ” என்று தலை குனிய முத்துவின் அன்னையை நோக்கி
“அத்த நீங்களாச்சும் சொல்லுங்க என்ன ஆச்சு முத்து எங்க ?”
“அய்யா அது வந்து” என்று அவள் பேச வார்த்தையின்றி திணற
“அண்ணே நானும் முத்துவும் கோயிலுக்கு போனோம்னே அவ கொளத்தங்கரையிலேயே இருந்துட்டா நா சாமிய கும்புட்டுட்டு வெளில வந்து பாத்தேன் அவ இல்லணே தேடி பாத்துட்டு அவ வீட்டுக்கு தே வந்துருப்பானு வந்துட்டே இங்கன வந்து கூப்டுதே அவ இல்லனே” என்று கலக்கத்துடன் முடித்தாள்.
“என்ன சொல்லுத செல்வி முத்துவ காணாமா?”
“ஆமா அண்ணே நாங்க ஊரு முழுக்க தேடிட்டோம்ணே அவள காணோம் நா தே அவள தொலைச்சுட்டே” என்றவாறு அழ தொடங்க
“அட நீ என்ன ஆத்தா பண்ணுவ விடு நீ வீட்டுக்கு போ நாங்க பாத்துக்கிடுதோம்” என்றார் முத்துவின் தந்தை.
“மாமா எங்க போயிருக்கும் முத்து?”
“வாங்க மாப்ள பாப்போம்” என்றவாறு இருவரும் ஊரையே சல்லடையிட்டு சலித்து விட்டனர் ஆனால் முத்துவை கண்டு பிடிக்க இயலவில்லை.
பொழுது மங்க தொடங்க முத்துவின் தந்தை களைத்து போனார். இருவரும் சோர்ந்த நடையுடன் வீடு திரும்பினர்
“என்னங்க என்ன ஆச்சு முத்து எங்க?”
“முத்துவ காணோம்த்தா” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவளது பெரியப்பா மகன் வந்துவிட்டான்.
“சின்னய்யா என்ன பண்ணுதிய?” என்றவாறு வந்து அமர்ந்தவன் அருகில் கோட்டைசாமியைக் கண்டு
“வாங்க அத்தான் சொகம் தானே?”
“சொகம் தே மாப்ள” என்றார் உள்ளே போன குரலில்
“ஊருல எல்லாம் சொகம் தான முத்து வ பாக்க வந்தியல அத்தான்?”
“ஆமா மாப்ள ஒரு கொறயும் இல்ல எல்லாரும் சொகம் தே”
“என்ன சோந்து போயி தெரியுரிய?”
“ஒண்ணுமில்ல சோமு” என்றார் முத்துவின் தந்தை.
“ம்ம் ஏட்டி முத்து தண்ணி கொண்டா” என்று சோமு உள்ளே பார்த்து குரல் கொடுக்க
வீட்டினுள் இருந்து முத்துவின் அன்னை தண்ணீர் எடுத்து வந்து தர “எப்டி இருக்கிய சின்னம்மா”
“நல்லா இருக்குதே யா”
“முத்து எங்கன ஆளயே காண்கள? ” என்க அனைவரும் அமைதி காக்க அவனே தொடர்ந்தான்.
“செரி இந்தாங்க சின்னம்மா போன வாரம் ஊருக்கு வந்தப்ப முத்து வாங்கியார சொல்லுச்சு அதுட்ட குடுத்துருங்க ” என்றவாறு கையில் இருந்த மஞ்சள் பையை கொடுத்தான்.
அதை கையில் வாங்கியவர் “அய்யா சோமு ஓன் தங்கச்சிய காணோம்யா ” என்று கதறி அழுதுவிட்டார்.
அவரது வார்த்தையில் பதறி எழுந்தவன் “என்ன சின்னம்மா சொல்லுதிய சின்னய்யா அம்ம சொல்லுறது நெசந்தான என்ன அத்தான் ” என்று அனைவரையும் கேள்விகளால் துளைக்க
“ஆமாய்யா சேதி தெரிஞ்சதுல இருந்து நாங்களும் தேடாத எடம் இல்லயா கோயில் கொளத்தடில இருந்தவ எங்க போனானே தெரியலய்யா”
“என்ன சொல்லுதிய புள்ளத்தாச்சி புள்ளைல அய்யா நா என்ன பண்ணுவே” என்று அவன் பதற
“என்ன பண்ணுறதுனு தெரியாம தே யா பித்து புடுச்சு ஒக்காந்துருக்கோம்”
“நா கும்புட்ட சாமி எல்லாம் கை விட்ருச்சே ஏ புள்ள எங்கன என்ன பாடு படுதாளோ தெரியலயே அய்யா அய்யனார் அய்யா நீ கண்ண மூடிக்கிட்டு தே இருக்கியா அய்யா ஏ புள்ள ஒரு ஈ எறும்புக்கு கூட துரோகம் நெனைக்காதவ அவள இப்டியா தவிக்க விடுவிய” என்று கதறி அழ ஆரம்பித்தார் முத்துவின் அன்னை.
“ஏ ராக்கு என்னத்துக்கு இப்போ ஒப்பாரி வைக்குதவ”
“பொட்டச்சி வேற என்ன செய்ய முடியுது” என்று மேலும் கதறினார்.
“சின்னம்மா நம்ம முத்துக்கு ஒன்னும் ஆவாது அழுகய நிப்பாட்டு மொத அந்த காலி பயலுவ தே இந்த வேலய பாத்துருப்பாங்கே நா அன்னைக்கே சூதானம இரு னு சொன்னே அந்த புள்ள லேசா நெனச்சுருச்சு”
“யார மாப்ள சொல்லுதிய “
“அந்த காளிமுத்தும் அவே கூட்டாளியும் தே மாமா இந்த வேலய பாத்துருப்பாங்கே வேற வெளியூருகார பயலுவலா நம்ம ஊருக்குள்ளாற வந்து நம்ம புள்ளய தூக்கிட்டு போயிருப்பாங்க?”
இந்த வார்த்தையை கேட்டதும் பதட்டமாக சென்ற அந்த வண்டிக்காரனது முகம் கோட்டைசாமியின் முகம் மனதில் வந்து போனது.
“ஆமா மாப்ள”
“அட அந்த குடி கெடுத்தவே கூட பெரிய ஏலவா லே போச்சு ஏ குடும்பத்த ஆட்டி படைக்குதான்” என்றவாறு ராக்கு வை முறைக்க
“ஐயோ நா என்னத்த கண்டேன் என்னய மொறைகுதிய அவனுக்கும் எனக்கும் ஒட்டுமில்ல ஒறவுமில்லைனு நா என்னைக்கோ வெட்டி விட்டுட்டேனே” என்று அவள் மீண்டும் அழ தொடங்க
வேகமாக ஓடி வந்தான் முத்து வீட்டு தோட்டத்தில் பணி செய்யும் பண்ணையாள்.
“அய்யா அய்யா ” என்று அவன் வேகமாக வர
“என்ன லே சுப்பையா என்னவாச்சு”
“இந்த காளிமுத்து பயலும் அவே கூட்டாளியும் நம்ம தோப்பு தாண்டி காட்டுக்குள்ள ஒரு வண்டியில போறாங்கே வண்டியில எதோ பொட்டப்புள்ள அழுகுற சத்தம் கேட்டுச்சு ஆரு என்னனு மொகத்த பாக்க முடியலய்யா”
“என்ன சுப்பு சொல்லுத எந்த பக்கமா போறானுவ?”
“எல்லையில இருக்க அவே காட்டு பக்கமா தே ய்ய போறானுவ”
“மாப்ள வாங்க போகலாம் அந்த பய தே ஏ புள்ளய தூக்கிட்டு போயிருக்கனும்”
“இருங்க சின்னய்யா” என்று மறித்தவன் கோட்டைசாமியை பார்த்து
“அத்தான் சின்னய்யா இங்கன அம்மைக்கு தொணயா இருக்கட்டும் நீங்க வாங்க நம்ம ரெண்டு பேரும் போவோம்”
“இல்ல லே நானும் வாரே இதுக்கு முன்னக்க ஏ புள்ளைட்ட கிசும்பு பண்ணுதப்ப சும்மா விட்டுட்டேன்னு இப்ப ஏ புள்ளய கடத்திட்டே போயிருக்கான் ஏ கையால அவன வெட்டி போட்டாதாம்ல ஏ ஆத்தரம் அடங்கும்” என்று துடித்துக் கொண்டு இருந்தார் முத்துவின் தந்தை ராமு.
“ஆமா அவன வெட்டி போட்டுட்டு ஏ புள்ளய பத்தரமா கொண்டாங்க” என்று ராக்குவும் சொல்ல
“அயோ சின்னமா பேசாம இரு சின்னய்யா நீங்க இங்கனயே இருங்க நாங்க இருக்குதோம்ல பாத்துக்கிடுதோம்”
“அட என்ன லே நீயும் ஏ புள்ள வயித்து புள்ளயோட அங்கன என்ன பாடு படுதாளோ னு நெருக்கு நெருக்குன்னுது நீ என்னடானா இங்கனயே இரு இருங்குறவன்”
“ஆமா சின்னய்யா ஒனக்கு மட்டும் தே புள்ளயா இதோ நம்மள நம்பி புள்ளயோட பொண்டாட்டிய அனுப்பி விட்டவரு நிக்குதாரு அவரு போதும் இனி அவருக்கு பொறவுதே நாம அதே நா போறேன்குதேன் ல பொறவு என்ன ஒமக்கு பேசாம இங்கன இருங்களே” என்று அதட்டி விட்டு கோட்டைசாமியை அழைத்தான்.
“மாப்ள சொல்லுறதும் வாஸ்தவம் தே மாமா நீங்க அத்தைக்கு தொணயா இங்கன இருங்க நாங்க முத்துவோட தே வருவோம்” என்று இருவரும் கிளம்பி சென்றனர்.
கோட்டைசாமி பேச்சுக்கு மறுத்து பேச முடியாமல் போகவே அவர்களை அனுப்பிவிட்டு திண்ணையிலேயே அமர்ந்துவிட்டார் ராமு.
முத்துவை தேடி சென்றவர்கள் விரைவாக முத்துவின் தோப்பை அடைய அதற்கு பிறகு அவர்களுடன் வந்த அந்த பண்ணையாள் வழி காட்டினார்.
அவர்களும் அந்த வழியில் செல்ல நிலவின் ஒளியில் அங்கு ஒரு பாழடைந்த கட்டிடம் தென்பட்டது.
அதனுள் ஒரு சிறிய விளக்கொளியும் தெரிந்தது மேலும் முன்னேற ஒரு பெண் குரல் பேரழுகையுடன் கேட்டது.
“மாப்ள அது முத்து தே மாப்ள என்றார் கோட்டைசாமி பதட்டமாக.
“ஆமா அத்தான் நீங்க பதட்ட படாதிய” என்றவாறு கூடிய மட்டிலும் விரைவாக அந்த கட்டிடத்தை நெருங்கினர்.
சிறிது தூரத்திலேயே வண்டியை நிறுத்திவிட்டு “அத்தான் அங்க போனா சத்தம் கேட்டு ஓடுனாலும் ஓடிருவான் “
“ஆமா மாப்ள அவன ஏ கையால கொல்லனும்”
“எறங்குங்க அத்தான்”
“சுப்பு மாட்ட புடுச்சுக்கிட்டு கூப்டுத தூரத்துல இரு நாங்க கூப்டதும் வந்துரு” என்று அவனிடம் வண்டியை விட்டுவிட்டு இருவரும் அந்த விளக்கொளியை நோக்கி நடையை தொடங்கினர்.
“மாப்ள முத்து ரெம்ப கத்துதே என்னவா இருக்கும்னு தெரியலயே இந்த படுபாவி பய அவள என்ன கொடும பண்ணுதான்னு தெரியலயே” என்றவாறு விரைவாக சென்றனர்.
அங்கு முத்து இருந்த நிலைமையை கண்டு அதிர்ந்து நின்றனர்.
வயிற்றை பிடித்துக் கொண்டு முத்து பிரசவ வலியில் கத்திக் கொண்டு இருந்தாள். காளிமுத்து அவளை பிடித்துக் கொண்டு “ஆத்தா முத்து அழுகாத த்தா இதோ இப்போ வந்துருவாக” என்றவாறு அவளுக்கு தேறுதல் கூறிக் கொண்டு இருக்க
“மாமா என்னய வீட்டுக்கு கூட்டிட்டு போ” என்று அவள் கண்ணீருடன் கதற
“கூட்டி போறேன் த்தா புள்ளய வெளிய எடுக்கட்டும்” என்று அவன் கூறிக் கொண்டு இருக்கும் போதே அந்த புறம் இருந்து காலையில் வழியில் பார்த்த அந்த வண்டிக்காரனும் கூடவே ஒரு வயதான பெண்மணியும் உள்ளே நுழைந்தனர்.
“ஏலே முருகா இம்புட்டு நேரமாலா புள்ள வலியில துடிக்குதுல பாக்க சகியல”
“என்ன செய்ய சொல்லுத உள்ளூருகுள்ளயும் கூப்ட முடியாது பக்கத்து ஊரு ஆள கூட்டியாந்தாலும் சிக்கலு அதே அம்புட்டு தொல போயி இந்த அம்மாவ கூட்டியாந்தேன் அது நேரமாயி போச்சு”
“செரி செரி படக்குனு பாக்க சொல்லுலே அந்த புள்ள வெகு நேரமா துடிச்சுக்கிட்டு கெடக்கு”
“ஆச்சி என்ன முழுச்சுகிட்டு நிக்குதிய பாருங்க படக்குனு” என்றதும் முத்துவின் அருகே அந்த பெண் செல்ல அதற்குள்ளாக வாயிலை அடைந்தவர்கள்
“அவ மேல யாராச்சும் கைய வச்சிய அவுகள கொன்னுட்டு தே மறு வேல பாப்பேன் ” என்றவாறு கையில் இருந்த அரிவாளை வீச அது சரியாக காளிமுத்துவின் கால்களுக்கு நடுவில் போய் விழுந்தது.
எதிர்பாராத நேரத்தில் ஆண் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினர் இருவரும்.
முத்துவை நெருங்கிய அந்த அம்மாளும் எழுந்து நின்று அங்கு நடப்பவைகளை புரியாமல் பார்த்து இருந்தார்.
முருகன் மெதுவாக நழுவ தொடங்க “ஏலே முருகா அங்கனயே நில்லு ஒரு அடி முன்னால எடுத்து வச்ச தல இருக்காது ஒடம்புல” என்று சோமு அதட்ட அப்படியே நின்றுவிட்டான் அவனும்.
காளிமுத்துவுக்கு கோட்டைசாமியை நினைத்து உள்ளூர பயம் இருந்தது ஆனால் அவன் ஊரில் இல்லை என்ற தைரியத்திலும் அவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் முத்துவை கடத்தி வந்து விட்டான்.
இப்போது கோட்டைசாமியை எதிரில் காணவும் அவனுக்குள் இருந்த தைரியம் அனைத்தும் வடிந்து விட்டது.
தப்பிக்கும் வழியறியாது அவன் திணறி நிற்க அதற்குள்ளாக முத்து அழைத்து விட்டாள் தன் கணவனை.
கோபத்தின் உச்சியில் இருந்தவருக்கு தன்னவளது அழைப்பில் சட்டென்று அனைத்தும் மறந்து அவளருகே ஓடி சென்றார்.
“முத்து முத்து என்ன டி பண்ணுது”
“அத்தான் … வயிறு… இங்க……” என்று பேச திணற
“என்ன டி பண்ணுது வலிக்குதா முத்து ” என்று அவர் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே கண்கள் சொருக மயங்கிவிட்டாள் முத்து.
காளிமுத்துவையும் முருகனையும் ஒரே ஆளாக அடி பிண்ணி கைகளை கட்டி வைத்து இருந்தான் சோமு.
அங்கு நின்று இருந்த பெண்மணி “அய்யா வெலகுங்க நா பாக்குதே” என்றவாறு அவர் முத்துவின் அருகில் அமர்ந்து அவளது நாடியை பிடித்து பார்த்துவிட்டு
“அய்யா புள்ள மயங்கி தே இருக்கு சுளுவா தெளிய வைக்கணும் புள்ளதாச்சி புள்ள”
“செரி கெளம்புங்க ஊருக்குள்ள போயிரலாம் இங்கன தண்ணி கூட கெடயாது” என்க
“ஆமா அதே செரி வாங்க என்றவாறு அந்த அம்மாள் முன்னே செல்ல கோட்டைசாமி முத்துவை தூக்கிக் கொண்டார்.
“சோமு ” என்று அவன் புறம் திரும்ப
“நீங்க தங்கச்சிய வீட்டுக்கு வெரசா கூட்டி போங்க இவனுங்கள நா பாத்துகிடுதே”
“செரி மாப்ள இவனுங்கள விட்றாதா” என்றவாறு முத்துவை தூக்கிக் கொண்டு வெளியே சென்றார் கூப்பிடும் தூரத்தில் நின்று இருந்த சுப்பையாவை அழைக்க அவரும் வண்டியோடு வந்துவிட்டார்
உடனே வண்டியில் ஏற்றி “ஆச்சி நீங்களும் ஏறுங்க, சுப்பு நேர நம்ம வீட்டுக்கு போங்க”
“செரிங்கய்யா” என்றவாறு அவன் வண்டியை கிளப்ப
சோமு காளிமுத்துவையும் முருகனையும் ஒரு வண்டியில் ஏற்றினான்.
“சோமு வரப்ப நம்ம ஊரு மருத்துவச்சிய வீட்டுக்கு கூட்டியாந்துரு”
“செரிங்க அத்தான் ” என்றவாறு அவனும் வண்டியை கிளப்பினான்.
இரு வண்டிகளும் ஊரை நோக்கி செல்ல கோட்டைசாமியின் நெஞ்சம் தான் பதைபதைப்பில் இருந்தது. தன் மடியில் உணர்வற்று கிடக்கும் தன்னவளை பார்க்க பார்க்க காளிமுத்து மேல் கொலைவெறி வந்தது கோட்டைசாமிக்கு.
“அய்யா கருப்பு ஏ புள்ளயவும் பொண்டாட்டியவும் காப்பாத்தி குடுத்துருய்யா நா ரெட்ட கெடா வெட்டி பொங்க வைக்குதே” என்று மனசுக்குள்ளேயே வேண்டுதலும் வைத்தார்.
ஒருவாறாக வீட்டை அடைய சோமு வும் மருத்துவச்சியோடு வீடு வந்தான்.
அவர்களை எதிர் பார்த்து இருந்த முத்துவின் பெற்றோரும் அக்கம் பக்கத்தாரும் அங்கு கூடி விட மெதுவாக கீழே இறக்கினார் தன் மனையாளை. அனைவரும் அதிர்ச்சியோடு அவர்களை நெருங்கினர்.
மெதுவாக வீட்டினுள் கொண்டு சென்று தங்களது அறையில் கிடத்த
“முத்து முத்து” என அனைவரும் கூடிவிட்டனர்
“புள்ளைக்கு காத்து வரட்டும் கொஞ்சம் வெலகி நில்லுங்க” என்று மருத்துவர்கள் கூறிவிட அனைவரும் வெளியே காத்து இருந்தனர் .
கோட்டைசாமியும் முத்துவின் பெற்றோரும் அங்கு நிற்க “அய்யா நீங்களும் கொஞ்சம் வெளிய இருங்க நாங்க கூப்டுதோம் “
“செரி” என்று தலையசைத்தவாறு வெளியே சென்றனர் இருவரும்
செல்வியும் முத்துவின் அன்னையுடன் இருக்க மருத்துவச்சிகள் முத்துவை தெளிய வைத்து பிரசவம் பார்க்க தொடங்கினர்.
ஒருவாறாக அதற்கு மேலும் தன் தந்தையையும் தாயையும் தவிக்க விடாமல் அதிகாலை 4 மணிக்கு தாயின் கருவறையை விட்டு மண்ணுலகை காண வந்து விட்டான் முத்தம்மாள் கோட்டைசாமியின் தவபுதல்வன்.
அனைவரும் காத்து இருந்து பிள்ளையை பார்த்துவிட்டு செல்ல கோட்டைசாமி தன் மகனை மாமியாரின் கையில் கொடுத்துவிட்டு தன் மறு உயிரை காண சென்றார்.
துவண்டு கிடந்தவளை அருகில் சென்று தலை கோதி பார்த்து இருந்தார் மெதுவாக மயக்கம் தெளிந்து கண் விழித்தாள் முத்து.
“முத்து” என்றார் தன் உயிரை உருக்கி வார்த்தையாக.
“அத்தான்” என்றாள் அவளும் அதே ஆழ்ந்த குரலில்.
அவர் நெற்றியில் தன் இதழை பதிக்க “அத்தான் என்ன புள்ள அத்தான்?”
“ஆம்பள புள்ள தே ஆத்தா” அவரின் பதிலில் அவள் ஆழ்ந்த மூச்சொன்றை விட
“ஏ முத்து பொம்பள புள்ளயா இருந்தா வேணாம்னு சொல்லிருப்பியா?”
லேசாக சிரித்தவள் “ஏ அத்தான் தெரிஞ்சுக்கிட்டே கேக்குதிய?”
“ம்ம் செரி ரெம்ப அலட்டிக்காத முத்து படுத்துக்க நா புள்ளய கொண்டாறேன்”
“செரிங்க” என்று எட்டி தன் கணவனின் கன்னத்தில் ஆழ்ந்த ஈர முத்தம் ஒன்றை இரண்டாவதாக பதித்தாள் முத்து.
காலையில் இருந்து அவர் பட்ட அத்தனை கஷ்டங்களும் காணாமல் போனது அந்த ஒற்றை முத்தத்தில்.
—–சாரல் அடிக்கும்
