உயிர் உருகும் தேடல் நீ…!!!

This entry is part 9 of 22 in the series உயிர் உருகும் தேடல் நீ

உயிர் உருகும் தேடல் நீ

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

தேடல் 11.1

இன்னொருக்கு இன்னார் என்று.. எழுதி வைத்தானே தேவன் அன்று!!

இன்னொருத்தன் மனைவியையோ புருஷனையோ அடுத்தவர் திருமணம் செய்து கொள்ள முடியாது!! அடையவும் முடியாது!!

பிரம்மன் எழுதியதை மாற்றும் விதி எவருக்கும் இல்லை!! சில சமயங்களில் விதிக்கு கூட விதிவிலக்குகள் உண்டு… 

அதிலும் பிரதிக்ஷாவின் கண்களை பார்த்து “உன் கழுத்தில் ஏறும் முதல் மற்றும் கடைசித் தாலி இதுதான்!!” என்று அழுத்தமாக அவன் கூற… அவன் தாலி கட்டியதே அதிர்ச்சி என்றால்.. அவன் கூறி அந்த வார்த்தைகள்.. பேதையவளுக்கு பேரதிர்ச்சி!!

“எப்படி தெரிந்தது அவனுக்கு? அந்த உண்மை எப்படி தெரிந்தது? அன்னைக்கும் தந்தைக்கும் கூட இவள் ஏதோ காதலித்து திருமணம் செய்து பிரிந்து விட்டதை போலத்தான் ஒரு தோற்றம் இருந்தது. ஆனால் இவன் எப்படி கண்டு கொண்டான்?” என்று புரியாமல் அவள் பார்க்க… 

“குட்!! இப்ப எப்படி அமைதியா தாலி கட்டும் போது இருந்தியோ அதேபோல இன்னும் கொஞ்ச நேரத்திற்கு பேசமடந்தையா இருந்தாகனும்!! எல்லாம் நான் பார்த்துக்கிறேன்… ஏன்னா நான் சொல்ல போற பொய்யை சமாளிக்க கூடிய நிலையில் நீ இல்லை” என்று ஒற்றை கண்ணடித்து அவன் கூறிய விதத்தில் அப்பொழுது தான் நினைவு உலகத்திற்கு வந்தவள் சுற்று முற்றும் பார்க்க…

அனைவரும் முகத்திலும் அப்பட்டமான அதிர்ச்சியே!!

அதிலும் கபாலிஸ் கோபத்தில் பொங்கி எழுந்திருக்க.. அவரை வர்த்தனின் ஆட்கள் தங்கள் கைப்பிடியில் வைத்திருந்தனர் மிக இறுக்கமாக!! அப்படியும் திமிறி கொண்டு இருந்தார் அவர்.

அவரை அலட்சியம் செய்தவன் தன் குடும்பத்தை பார்க்க…  அனைவரின் முகத்திலும் ‘இதை உன்னிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை!’ என்ற செய்தி!! 

யசோதா முகம் மட்டுமே அங்கே அமைதியாக இருந்தது. அவரைப் பொறுத்தவரை உதயச்சந்திரன் திரும்பி உயிரோடு உணர்வோடு அவர் கையில் தவழ வேண்டும்.. அவனை உச்சி முகர வேண்டும்… இதில் வர்த்தன் எந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் என்ன? என்ற நிலை அவரோடது!!

ஆனால் மகன் மீது தேவகி பெரும் நம்பிக்கை வைத்திருக்க..  இப்படி குழந்தைகளோடு திருமணம் செய்ததை எந்த அன்னையால் தான் பொறுத்துக் கொள்ள முடியும்? வர்த்தன் பிரதியுக்ஷாவின் கையை பிடித்து இழுத்துச் சென்ற பொழுதே “சூர்யா..!!” என்று இவர் பின்னே செல்ல.. அவர் கையை பிடித்து தடுத்துவிட்டார் செண்பகத்தம்மாள். “நடப்பதை மட்டும் பார்!!” என்று வார்த்தைகளோடு!!

“அத்த..‌ ” என்று கலங்கிய குரலோடு மாமியாரை தேவகி பார்க்க… 

“ஏற்கனவே பூசாரி சந்தனம் வந்து வாரிசு இருக்குன்னு சொல்லியாச்சு தேவகி.. அதுவும் வரதா வாயிலேயே அது அவன் குழந்தைகளுனு சொல்லிட்டான். இதில் நீ போய் இன்னும் என்ன செய்யப் போற? இப்ப நாம வெறும் பார்வையாளர்கள் மட்டும்தான்!!” என்றதும் அமைதியாக இருக்க முயன்றாலும் முடியவில்லை தேவகியால்.

ஆனால் ஞானசம்பந்தமும் சோனாலியும் அமைதியாக தான் இருந்தனர். பிரதியுக்ஷாவின் விழிகள் தம் பெற்றோர்களை தழுவ… அவர்களின் அமைதி இவளுக்கு எதுவோ புரிவது போல் இருக்க… முகத்தை மட்டும் திருப்பி வர்த்தனை முறைத்தாள். அவன் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் அமைதியாக தான் இருந்தான்.

கபாலீஸ்வரரை பிடித்திருந்த ஆட்களை பார்த்தவன் “அவரை அப்படியே பத்திரமாக கொண்டு போய் அவரு வீட்ல விட்டுட்டு வந்துடுங்க… கூடவே அவரு மனைவி அழைச்சிட்டு போங்க! அவர் பொண்ணு இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்துருவா” என்றதும், அதற்கு மேல் கபாலீஸ்வரரை ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் குண்டு கட்டாகத் தூக்கிக் கொண்டு சென்றார்கள் அவனது ஆட்கள்.

வசந்திக்கு இந்த திருமணம் நடக்காததில் பெரும் நிம்மதி!! அதைவிட சூர்யவர்த்தன் பிரதியுக்ஷா கழுத்தில் தாலியைக் கட்டியது ஒரு பெண்ணாய் அவருக்கும் சந்தோஷமே!! கண்களால் தன் சந்தோஷத்தை வர்த்தனிடம் வெளிப்படுத்திவிட்டே,  கணவன் பின்னே அப்பாவியாக சென்றார்.

ஆனால்.. அந்த அப்பாவிக்குள் ஒரு அடப்பாவி இருப்பது வர்த்தன் மட்டுமே அறிந்த ரகசியம்!!

ஆம்!! குழந்தைகள் கடத்தப்பட்ட அன்று இரவு இவனுக்கு ஆட்கள் போன் செய்து தேஜூம் தீரஜூம் கடத்தப்பட்டு விட்டதாக கூற… எப்படி யோசித்தும் அவனுக்கு யார் என்று முதலில் விளங்கவில்லை!!

கிஞ்சித்தும் இது கபாலீஸ் வேலை என்று அவன் நினைத்திருக்கவில்லை!! சொந்த மாமனான இவர் இந்த அளவு இறங்குவார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. பொண்ணை நல்ல இடத்தில் கட்டிக் கொடுப்பதற்காக சில பல பொய்களை சொல்கிறார் என்று நினைத்திருந்தான்.

யார்?  யார்? யார் இதை செய்திருப்பார்கள்?  இந்த வர்த்தனின் குழந்தைகள் மீது கை வைக்க எவனுக்கு தைரியம் இருக்கிறது? என் குழந்தைகள் என்று தெரிந்த கை வைத்திருந்தால்… அவ்வளவுதான் அவன் நிச்சயம் இதுவரை கொடுமையான தண்டனையை அனுபவிப்பான்!! என் குழந்தைகள்… என் குழந்தைகள்… இப்போது எப்படி இருக்கிறார்களோ? அழுவார்களோ? என்னை தேடுவார்களோ? என்று நெற்றியை கொண்டிருந்தவனுக்கு ஒன்று மட்டும் சுளிர் என்று அவன் அறிவில்  

அறைந்தது.. மனதை பிழிந்தது!! அவனே அறியாமல் அவர்களை அவன் குழந்தைகளாக அவனது மனம் ஸ்வகரித்து இருந்தது.

அது புரிந்த அந்த நொடி… அந்த கணம்… வர்த்தனின் வதனமோ மகிழ்ச்சியில் விகிசிக்க…. முகம் நிறைந்த புன்னகையில் அத்தனை வசீகிரமாய் இருந்தான் வர்த்தன்!!  

இதற்கிடையில் குழந்தைகளை தேடி அனைத்து இடத்திலும் ஆட்களை முறுக்கி விட்டு இருந்தவன், ஏதேனும் ஒரு துப்பாவது கிடைக்குமா என்று ஃபோனையே பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது அவனால் வெளியில் செல்லவும் முடியாது அதை அவர் குடும்பத்தார் அனுமதிக்கவும் மாட்டார்கள். 

முதன் முதலாய் அவர்களை தன் பிள்ளைகள் என்ற சொந்தமாய் உணர்ந்த தருணம்…  இத்தனை நாள் இருந்த பாசம் என்னவென்று புரிந்து அந்த தருணம்… அவர்களை உடனே ஆலிங்கினம் செய்ய வேண்டும் என்று அவனது கைகளும் இதயமும் பரபரக்க… ஆனால்… பிள்ளைகளோ இங்கே இல்லை!!

என்ன செய்ய?? என்ன செய்ய?? என்று தவித்து புலம்பிக் கொண்டிருந்தவனுக்கு நல்ல செய்தியை தாங்கி கிங்கிணியாய் இசைத்தது அவனது போன்… வசந்தி என்ற பெயரை தாங்கிக்கொண்டு!!

‘எதுக்கு இந்த அத்தை இப்ப போன் பண்றாங்க?’ என்று யோசனையோடு எடுத்தவன் ஹலோ என்று கூற அந்தப் பக்கமும் பெருத்த மூச்சுவிடும் சத்தம் மட்டுமே!!

“அத்த… அத்த.. என்னாச்சு?” என்று இவன் பதட்டத்தோடு கேட்க..

“தம்பி.. தம்பி… இவரு உங்க மாமா…” என்று அடுத்த வார்த்தை வராமல் அவர் தடுமாற…

“சொல்லுங்க அத்த..  என்ன ஆச்சு? மாமாவுக்கு திரும்ப ஏதும் உடம்பு சரியில்லாம போயிடுச்சா?”

“அவருக்கு என்ன நல்லா குத்து கலாட்டா தான் இருக்காரு!!” என்று கடுப்போடு மொழிந்தவர், “பிள்ளைகள்.. பிள்ளைகள இவர்தான் ஏதோ பண்ணிட்டார் போல தம்பி…” ஒருவித குற்ற உணர்வோடு கூறினார் வசந்தி.

இவர் எந்த குழந்தைகளை பற்றி குறிப்பிடுகிறார் என்றும் புரிந்தும் புரியாத நிலையில் அவன்!!

“எந்த குழந்தைகள சொல்றீங்க அத்த?” என்று எகிறி குதித்த இதயத் துடிப்பை அடக்கியப்படி கேட்டான் வர்த்தன்.

“அதான் தம்பி.. உங்க குழந்தைகள் தான்!! அந்த பொண்ணுக்கு பிறந்த உங்க குழந்தைகள்* என்றதும் அமைதி காத்தான் வர்த்தன்.  என்னென்ன விஷயங்கள் அவருக்கு தெரிந்திருக்கின்றன என அவரிடமிருந்து விஷயத்தை கிரஹிக்க முற்பட்டான். வசந்தியோ அவருக்கு தெரிந்து விட்டதால் குற்ற உணர்வு கொள்கிறான் என்று நினைத்தார்.

“தம்பி…இருக்கீங்களா?”

“சொல்லுங்க??”

“எங்களுக்கு ஏற்கனவே இந்த விஷயம் தெரியும் தம்பி. ஆனா இவர் எதையோ சொல்லி என்னை குழப்பிட்டார். ஆனா குழந்தைகளை எல்லாம் தூக்குவாருனு கனவுல கூட நினைக்கல நானு தம்பி… இவருக்கு உடம்பு சரியில்லைனு நினைச்சேன். ஆனா இவரு…” என்று விசும்பினார் வசந்தி.

ஒரே வீட்டின் கீழ் அறையில் இருந்து தான் அவர் பேசுகிறார் என்று புரிந்தவன், “குழந்தைங்க இப்ப எங்க இருக்காங்க ஏதாவது உங்களுக்கு ஐடியா இருக்குதா அத்த?” என்று கேட்டான்.

“அவரோட உதவியாளுக்கு கிட்ட  ஏதோ குசுகுசுனு பேசுனதை பார்த்து தான் எனக்கு உதவியா இருக்கும் பேச்சிய அனுப்புன ‌போது தான் இந்த விஷயமே தெரிந்தது தம்பி!” என்றார்.

“ரொம்ப.. ரொம்ப நன்றி அத்த!” என்று மனதார நன்றி உரைத்தவன், அவர் சொன்ன இடத்தில் இருக்கும் குழந்தைகளை தன் ஆட்களை விட்டு கண்காணிக்க உடனே அனுப்பி வைத்தான்.

அப்போது தான் முடிவெடுத்தான் இனி பிரதியுக்ஷாவையும் குழந்தைகளையும் அவனுடைய அரவணைப்பில் வைத்துக் கொள்வது என்று!!

“அத்த நீங்க எனக்கு இன்னொரு உதவி பண்ணனும்!! நாளைக்கு இந்த கல்யாணத்தை நிறுத்தனும்” என்றான். சொல்லும் போது அவனுக்கு கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது.  “ஆனாலும்… அத்த.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறதை விட வேறு ஒருத்தனை கல்யாணம் பண்ணிட்டா உங்க பொண்ணு ரொம்ப நல்லா இருப்பா” என்றதும் அவர் சம்மதிக்க… அவரை விட்டே மறுநாள் வெண்மதியை அங்கிருந்து அப்புறப்படுத்த திட்டமிட்டான்!! அதைக் கச்சிதமாக நிறைவேற்றினார் வசந்தி!!

கபாலிஸ் கட்டு கட்டாய் பணத்தை செலவு செய்து.. உடல்நிலை சரியில்லை என்று நாடகமாடி.. தங்கைகளிடம் பாசத்தை நேசமாக கொண்டு போராடி.. கடைசியாக பிள்ளைகளை ரவுடிகளை விட்டு கடத்தி.. என்று ஏக வேலைகள் செய்து இந்த திருமணத்தை நடத்த முயல… ஒரே ஒரு வேலை அதுவும் அவரின் மனைவியை வைத்தே மணப்பெண்ணை தூக்கி இருந்தான் வர்த்தன்.

திருமணத்திற்கு அலங்காரத்தோடு தயாராக இருந்தவளிடம் “அருகில் உள்ள சிறு மண்டபத்திற்கு சென்று விளக்கேற்றி வா.. ஏதோ சம்பிரதாயமாம்” என்று வர்த்தன் சொன்னது போல வசந்தி சொல்லி அனுப்பி வைக்க.. அங்கே வந்த பரத் மற்றும் அவனுடைய ஆட்கள் அவளை தூக்கி சென்றனர்.

இளம் பெண்!! அதுவும் திருமணம் ஆகாத பெண்!! அதனால் மற்ற யாரிடம் விட வர்ததனுக்கு விருப்பமில்லை. அதனால் பரத்திடம் இந்த வேலையை ஒப்படைத்து இருந்தான். அவனும் கனகச்சிதமாக செய்து முடித்து இருந்தான்.

“இன்னும் எவ்வளவு நேரம் இங்கே இருக்கப் போகிறோம்! கிளம்பலாமா?” என்று வர்த்தன் கேட்க.. மற்றவர்கள் எதுவும் பேசும் நிலையில் இல்லை. ஏற்கனவே அவன் சொன்னது போல இங்கே எதையும் பேச வேண்டாம்… மற்றவர்களின் வாய்க்கு அவலாக வேண்டாம் என்று மொத்த குடும்பமும் அமைதியாக கிளம்ப.. குழந்தைகள் இருவரும் பிரதியுக்ஷாவின் பெற்றோரிடம் இருந்தனர்.

அவர்கள் பின்னால் சென்றவளின் கை பிடித்து தடுத்து நிறுத்தியவன் அவனது காரில் ஏற்றிக் கொள்ள… மற்றவர்களெல்லாம் அவர்கள் காரிலும்… சொந்தங்கள் வேனிலும் வர.. இவனே ஞானசம்பந்தம் சோனாலியை தன்னுடைய காரில் ஏற்றிக் கொண்டான்.

எல்லாரும் முன்னே செல்ல.. இவனது கார் சற்று பின்தங்கி மெதுவாகவே சென்றது. 

முதல் நாள் இரவே இவர்களை இங்கே வரவழைத்து இருந்தான் பிள்ளைகளை கண்டுபிடித்து விட்டேன் என்று சொல்லி… 

அரக்க பறக்க வந்தவர்களிடம் மெதுவாக விஷயத்தை கூறினான். கபாலீஸ் எதுக்கு ஏன் பிள்ளைகளை கடத்தனும் என்று சகட்டுமேனிக்கு பிரதியுக்ஷா கேள்வி கேட்க… நன்றாக சிரித்தவன் “அவருக்கு தெரிந்திருக்கு! உனக்கு தெரியலையா? என்னோட முழு அன்பும் பாசமும் ஏன் உரிமை கூட பிள்ளைகள் மீது இருக்கிறது என்று!! பின்னால அவர் பொண்ணுக்கு பிரச்சினை வரக்கூடாதுனு தான் கடத்தியிருக்கார்” என்றவன் உதயசந்திரன் தற்போது உயிருள்ள இல்லை என்பதை கூற ஞானசம்பந்தமுக்கும் சோனாலிக்கும் அத்தனை அதிர்ச்சி!! ஆனால் அவர்கள் அளவு அதிர்ச்சி இவளிடம் இல்லை.

ஏதோ தெரிந்தவர்கள் மரணத்தைப் போல கேட்டவள் ஓஹோ… என்றதோடு முடித்துக் கொண்டாள்.

பின்னே அவள் பட்ட ரணமும் வலியும் கொஞ்சமா? நஞ்சமா? அவனால்!!

ஒருத்தரின் மரணம் கூட நம்மை பாதிக்கவில்லை என்றால்.. மரணித்தவரின் செயல்கள் நம்மை மிகவும் காயப்படுத்தி இருக்கும் இல்லை மன்னிக்க முடியாத பாவத்தை செய்து விட்டு சென்றிருப்பார் அவர்!!

ஆனால் உதயச்சந்திரன் பொருத்தவரை இதை இரண்டுமே செய்து விட்டு சென்றிருக்க பிரதியுக்ஷாவிடம் பெரிதாக மாற்றம் எதுவும் இல்லை.

மறுநாள் குழந்தைகள் வந்து விடுவார்கள் என்பதிலேயே அவள் அமைதியோடு இருக்க.. ஞானசம்பந்தமும் சோனாலிடமும் இவன் தனியாக நிறைய பேசினான். அதனால்தான் மறுநாள் இவர்களின் திருமணத்தை  எதிர்பார்த்து இருந்தவர்கள் பெரியதாக அதிர்ச்சி அடையவில்லை. 

கார் மெதுவாக ஊர்ந்துக் கொண்டிருக்க… “இப்ப எதுக்கு ஊர்வலம் போற மாதிரி கார மெதுவாக ஓட்டிட்டு இருக்கீங்க?” என்றாள் பிரத்யூ.

அவளின் வார்த்தைகளில் வாய்விட்டு சிரித்தவன் “உண்மைதான்.. ஊர்வலம் தான்!! இப்ப தானே கல்யாணம் முடிச்சோம். அதான் மணமக்கள் ஊர்வலம் போகிறோம்” என்றவன் பிரத்யுக்ஷா மடியில் இருந்த தேஜை கன்னத்தை நிமிண்ட… அவனோ கிளுக்கிச் சிரித்தான்.

ஒரு இறுக்கமான சூழலில் தேஜின் அந்த சிரிப்பு அங்கே ஒரு இதமான மனநிலையை தோற்றுவித்தது.

“எதுக்கு இந்த ஊர்வலம்னு கேட்டில சில விஷயங்களை நாம் இங்கே தெளிவுப்படுத்துகிறது நல்லது. முக்கியமா நீயும்.. நானும்..” என்றவன் பின்னாடி அமர்ந்து இருந்த பிரதியுக்ஷாவின் பெற்றோர்களை பார்த்து “அநேகமா உங்ககிட்ட கேள்விகள் வராது!! அப்படி வந்தாலும் நீங்களும் சமாளிச்சுக்கோங்க” என்றான்.

“இனி இவர்கள் உதயச்சந்திரன் ஓட வாரிசு கிடையாது!! இந்த சூரிய வர்த்தனின் வாரிசுகள் எங்கேயும் எப்போதும்!! அதை உன் மூளையில் மட்டுமல்ல மனதிலும் தெளிவாக பதிவு செய்து வைத்துக் கொள்!!” என்றதும் ஒரு அலட்சிய உதடு சுழிப்பு பிரதிக்ஷாவிடம்.

“என்ன.. உங்க தம்பி செஞ்சதுக்கு நீங்க பரிகாரம் பண்றீங்களா?” என்று ஏகத்தாளமாக கேட்டாள்.

“அவன் ஊரு பூரா இந்த மாதிரி தப்பு செஞ்சு வைத்திருந்தாலும்.. எல்லாத்துக்கும் நான் பரிகாரம் பண்ணவா?” என்று கேட்டதும் அவனை முறைத்தாள் பெண்!! அதில் கோபத்தை தாண்டிய ஒரு உரிமையை கண்டுகொண்டவனின் கண்களில் மின்னல்!!

“ஏன் செய்யுங்களேன்? உங்க தம்பி ஒரு குட்டி ஊரையே உருவாக்கி வைத்திருந்தாலும்.. வியப்பில்லை!!” என்று வார்த்தைகளால் குட்டினாள்.

“அப்படி செய்திருக்கிறவன் இறக்கும் தருவாயில் கூட உன்னை.. பிள்ளையை பார்த்துக்க சொல்லி சொல்லி இருக்க மாட்டான்” என்றதும் இது என்ன புதுக்கதை என்று அவள் பார்க்க… 

“பின்ன நீ இருக்கிறது.. எனக்கு எப்படி தெரியும்? உன்னை நான் தேடி வந்ததுக்கு காரணம் அவன் தான்!!” என்று நடந்ததை சுருக்கமாக அவளிடம் கூற.. அப்பவும் உதயசந்திரனை மன்னிக்கும் மனம் அவளுக்கு இல்லை.

“அன்னைக்கு மைசூர் பங்ஷனுக்கு குழந்தைகளை கூட்டிட்டு போகாம இருந்திருந்தா… இப்படி வந்து மாட்டி இருக்க மாட்டேன்” என்று கூற வர்த்தன் வருத்தத்தோடு “ஆமா அவனும் இறந்திருக்க மாட்டான்” என்றான்.

இவர்கள் இருவரும் தங்களது வலியை.. வலிக்க வலிக்க பேசி இன்னும் வலித்துக் கொள்வதை விரும்பாத ஞானசம்பந்தம் “முடிந்து போனதை பேசி இனி பிரயோஜனம் இல்லை.. நடப்பதை பேசுவோம் இனி” என்ற அதனை முடித்து வைத்தார்.

“எஸ்..! மாமா சொல்றதும் சரிதான்” என்றதும் அந்த மாமாவில் பிரதியுக்ஷா “நீ நடத்து ராசா.. நடத்து”  என்று ஏளனமாக அவனைப் பார்த்தாள் என்றால்.. ஞானசம்பந்தத்துக்கு மனதில் பெரும் நிம்மதி!!

“சோ.. நான் என்ன சொல்ல வரேன்னா.. என்ன தான் என்னோட வேலை எல்லாம் தூத்துக்குடி மார்த்தாண்டத்தை சுத்தியே இருந்தாலும்.. பொதுவாக சென்னைக்கு அப்பப்போ வருகிற வழக்கம் எனக்கு உண்டு. படித்ததும் வெளியூரில் தான்!!  அதனால்..  அப்போது பார்த்து பேசி பழகி காதல்… என்று தான் சொல்ல போகிறேன்” என்று ஞானசம்பந்தம் சோனாலியை வைத்துக் கொண்டே.. அவன் சில விஷயங்களை கூறி “இதை மாற்றி கூறாதே!!” என்றான்.

சில விஷயங்கள் அவன் பேசும் போது பெற்றோர்களாக அவர்களுக்கு சங்கடமாக இருந்தாலும், மகளின் இந்த வாழ்க்கை நிலைக்க வேண்டி சகித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர் அமைதியாக…

இதில் குழந்தைகள் அழுக வண்டியை ஓரமாக நிறுத்தியவன் “பிள்ளைகளுக்கு பசியாத்து…” என்று ஞானசம்பந்தத்தோடு கீழே இறங்கி நின்று கொண்டான். அம்மாவின் உதவியோடு இரு குழந்தைகளுக்கும் பசியாத்தி முடிய.. 

“கொஞ்ச நேரம் பிள்ளைகளை நாங்கள் வெளியே காத்தாட வைத்திருக்கிறோம்… உங்களுக்குள் ஏதாவது பேச வேண்டும் என்றால் பேசிக்கொள்ளுங்கள்” என்று சோனாலி… காரை விட்டு இறங்கியவர் “கருவாயா இங்கே வாங்க..  இந்த தீரஜ் பையன தூக்குங்க.. தொண்ட வரளுது.. கரும்பு ஜூஸ் குடிச்சிட்டு வருவோம்”  என்றார். 

பெரியவர்கள் இருவரும் பிள்ளைகளோடு சென்றவுடன் 

பெரும் அமைதி இருவருக்குள்ளும் யுத்தம் செய்ய… அதனை தடுத்து சத்தத்தை கொடுத்தான் வர்த்தன்.

“என் தம்பி கடைசியாக சொன்ன வார்த்தைக்காகவோ… குழந்தைக்காகவோ இந்த திருமணம் கிடையாது! மத்த திருமணத்தை போல இந்த திருமணமும் உண்மையானது.. நிலையானது.. சித்திரமானது!! மற்ற தம்பதியர் போல் அடுத்தடுத்த நிலைக்கு செல்ல.. நமக்கு சிறு கால தாமதம் ஆனாலும், இருவரும் சேர்ந்துதான் பயணிக்க போகிறோம். அதில் மாற்றமில்லை!!” என்று அழுத்தமாக உரைத்தவனின் கைகள் ஸ்டேரிங்கில் தாளம் போட்டுக் கொண்டிருந்தது.

தாலி கட்டி விட்டான் தான்..  அவள் பதில் அளிக்க முடியா வண்ணம் பேசி விட்டான் தான்… ஆனாலும் உள்ளுக்குள் சற்று உதறியது உண்மை!!

காதல் கல்யாணம் தாம்பத்தியம் கணவன் குழந்தைகள் என்று கனவுகள் ஒவ்வொரு பெண்களுக்கும் உண்டு!! அதில் பிரதியுக்ஷா மட்டும் விதிவிலக்கு அல்ல!! 

ஆனால் உதயசந்திரன் பதித்துவிட்டு  சென்று தடங்கள் மிகுந்த  ரணமாய் வலித்துக் கொண்டிருந்த காலத்தில் அவள் இதையெல்லாம் தூக்கிப்போட்டு தன் பிள்ளைகள் ஒன்றே பிரதானம் என்று இருந்திருந்தவள், திருமணம் என்ற ஒன்றையே தன் வழியில் இருந்து சுத்தமாக துடைத்தெறிந்து இருக்க…

இப்பொழுது வலுக்கட்டாயமாக அதில் தன்னை பிணைத்து தன் வழியோடு அவளையும் இழுத்து செல்லும் இவனை ஆத்திரமாக முறைத்தாள் பிரதியுக்ஷா!!

“இன்னாருக்கு இன்னாரென்று… எழுதி வைத்தானே தேவன் என்று…

கடவுள் அமைத்து வைத்த மேடை…”

மெல்லிய குரலில் பாடியவன் அவள் முறைப்பைக் கண்டு கொள்ளாது “அடிக்கடி இப்படி கண்ணில் ஃபயர் விடுவதை நிறுத்திக்க பிரதி! இல்லைன்னா கஷ்டம் உனக்குத்தான்..” என்று அவள் தாடையின் அடியில் ஒற்றை விரலை வைத்து முகத்தை இங்கும் அங்கும் ஆட்டியவன் இலகுவாக கூற… அவளுக்கு அவனின் தொடுகை தீப்பற்றியது போல தகிக்க சற்று என்று கையை தட்டி விட்டாள்.

வலது கை ஸ்டேரிங்கில் பிடித்திருந்தால் மற்றொரு இடது கையால்.. இல்லை இல்லை விரலால்தான் லேசாக தொட்டு இருந்தான். அதுக்கு கூட இவளின் இந்த செயல் அவனுக்கு வலித்தது.

 “உனக்கு என்னோட இந்த வாழ்க்கை வாழ நிறைய டைம் எடுக்கணும் புரியுது!! அதுக்காக இப்படி சின்ன சின்ன தொடுகைக்கு கூட நீ ரியாக்ட் பண்ணனும்னு அவசியம் இல்லை!! அப்படி பண்ணுனா….” என்றவனின் ஆழ் குரலை அறியாதவள் “பண்ணினா… என்ன பண்ணுவீங்க?” என்று நக்கலாக கேட்க…

“எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு ப்ரதி… எது செய்யாதுன்னு சொல்றாங்களோ அதைத்தான் முதல்ல செய்து முடிப்பேன்” என்றான் அவளது தாடையை அழுத்தமாக பற்றி தன் முகத்துக்கு அருகே இழுத்து… அவனின் இந்த அடர்ந்த கற்றை மீசையும்… அருகில் தெரியும் அழுத்தமான உதடுகளும் அவளை நிலைக்குலைய செய்ய அவன் பார்வை திரும்பிக் கொண்டாள்.

இப்போது அவளின் கனிந்த கன்னங்கள் அவன் கண்களுக்கு விருந்தாய்!!

ஒரு இன்ச் இருக்கும் இடைவெளியை குறைக்க அவன் மனம் விரும்பவில்லை.  அதே நேரம் அவனின் பிடியில் இந்த தாடையை விளக்கிக் கொள்ள அவள் திரும்ப… மெல்ல இதழ்கள் இரண்டும் இசைந்துக் கொண்டன… ஒரு சில விநாடிகளே!!

உரசிக் கொண்டது எல்லாம் முத்தம் என்னும் கேட்டகிரியில் சேராது!!

அதிலும் அவள் அதிர்ந்ததை விட அதிகமாக அதிர்ந்தது என்னவோ வர்த்தன் தான்!!

பெண்ணறியாதவன் முதல் முத்த விபத்தில்  மயங்கிப்போனானான். பெண் வாசனை வா பக்கம் வா சவால் விட்டதில் தகர்ந்தே போனான்!!

எங்கேயோ பார்த்த மயக்கம்…

எப்போதோ வாழ்ந்த நெருக்கம்…

தேவதை இந்த சாலை ஓரம்…

வருவது என்ன மாயம்.. மாயம்…  

தேடல்… தொடரும்…

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *