உயிர் உருகும் தேடல் நீ
தேடல்… 17
இரவு மணி ஒன்று… ஆனால் இன்னும் வர்த்தன் வீடு வரவே இல்லை.
“இன்னொருத்தியை காதலித்தவன் எனக்கு வேண்டாம்! இன்னொருவள் காதலிப்பவனும் எனக்கு வேண்டாம்!!” என்று விடாப்படியாக விலகியவளை இழுத்து பிடித்து இறுக்க அணைத்து இதழ் முத்தம் கொடுத்தவனோ… “நீ தான் வேண்டும்!! நீ மட்டும் தான் எனக்கு வேண்டும்!!” என்று வேகமாக சென்றவன் தான். சீறிப்பாயும் அவனது காரின் சத்தத்திலேயே அவனின் கோபத்தின் அளவு புரிய.. அந்த நடன அறையில் தளர்ந்து அமர்ந்து விட்டாள் பிரதியுக்ஷா.
“அவனின் எந்த முகம் உண்மை? தன்னிடம் பிள்ளைகளிடம் காட்டும் இந்த அன்பு முகமா இல்லை பழைய காதலியிடம் காட்டும் அந்த காதல் முகமா?” என்று தவித்தவள் எவ்வளவு நேரம் அந்த அறையிலேயே இருந்திருப்பாளோ தெரியவில்லை!! குழந்தையின் அழு சத்தத்தில் தான் அவ்வறையிலிருந்து வெளியே வந்து, தன் அறைக்கு சென்று தன்னை சற்று சீர்படுத்திக் கொண்டு கீழே இறங்கி சென்றாள்.
அதற்குள் தேவகியும் யசோதாவும் குழந்தைகளுக்கு இரவு உணவு ஊட்டி முடித்திருக்க.. தேவகி செண்பகத்தம்மாள் மூலம் அனைத்தையும் கேட்டவர் யசோதாவை வழக்கம் போல திட்ட முடியாமல், மருமகளை தான் தவிப்போடு பார்த்தார்.
அவரின் தவிப்பை கண்டவளுக்கு உள்ளுக்குள் அத்தனை வருத்தம்!! “எத்தனை பேர் இவரால் அழுகிறார்கள்? இவன் ஏன் இந்த திருமணத்தை செய்து எல்லோரையும் இப்படி வருத்துகிறான்? நம்பிக்கையை உடைத்து விட்டான் என்று இவன் அம்மா… வாழ்வே போய்விட்டது என்று வெண்மதி… விருப்பம் இல்லாத வாழ்வில் நான்… ஏன்? ஏன்? எல்லாம் இந்த ஒற்றை திருமணத்தால்? தேவையா இப்படி பட்ட வாழ்க்கை?” உள்ளுக்குள் குமைந்து நின்றாள்.
“உஷா… நீ சாப்பிடுறியா இல்ல சூரியா வந்ததும் சாப்பிடுறியா?” என்று வெகு அக்கறையாக கேட்டார் யசோதா!!
‘பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுகிறாரே!’ என்று அவர் மீது அத்தனை கோபம்!! இவரின் இந்த புத்தி தான் உதயசந்திரனுக்கும் போல.. என்று முகம் கொள்ளா கோபத்தோடு அவர் பக்கம் திரும்பாமல் அவள் நின்று இருக்க…
“யசோ.. உஷா குழந்தைக்கு பால் கொடுக்குறவ.. அவளுக்கு பசிக்கும்!! அவன் வெளியில போயிட்டு வர வரைக்கும் காத்துகிட்டு இருக்க முடியுமா? நீ சாப்பிடு உஷா” என்றார் தேவகி அக்கறையான மாமியாராக!!
“அது சரி.. இன்னும் அவ குழந்தைகளுக்கு அம்மாவா மட்டும் தானே இருக்குறா.. பாவம் சூரியா!! ம்ஹூம்…” என்று இரட்டை அர்த்தத்தில் கூறி பெரு மூச்சு விட்டப்படி அனுதாபப்பட்டவர் “நீ சாப்பிட்டு போ உஷா… சூர்யா வந்தா வெண்மதி பரிமாறுவா!” என்றார் கொஞ்சம் கூட அவளின் மனதை வருத்துகிறோம் என்று எண்ணாமல்!!
“யசோ… என்ன பேச்சு இது?” என்று தேவகி கடிந்துக் கொள்ள…
“அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன் க்கா… காலையிலிருந்து நாம தான் நிறைய நேரம் குழந்தைகள பாத்துக்குறோம். நமக்கும் களைப்பா இருக்கும் தானே? எப்படியும் சூரியா வர லேட் ஆகும். உஷா குழந்தைகள தூங்க வைக்கணும். ஏன் மதி சூர்யாவுக்கு மாமா பொண்ணு தானே.. அவ பரிமாறினா என்ன தப்பு? நடக்க வேண்டியது ஒழுங்கா நடந்திருந்தா.. இந்நேரம் அவதான் சூர்யாவுக்கு எல்லாமுமா இருந்திருப்பா.. இப்படி அர்த்த ராத்திரிக்கு வீட்டுக்கு வருவானா என் புள்ள? அவன் மனசறிஞ்சு பக்குவமா நடந்திருப்பா… அதே மாதிரி இப்போ பக்குவமா பரிமாறவும் செய்வா!” என்று வெண்மதிக்கு இவர் மார்க்கெட்டிங் செய்து கொண்டிருக்க.. வெண்மதியோ சின்னத்தையை பார்த்து அழகாக சிரித்துக் கொண்டு தட்டை நிறைத்துக் கொண்டு வயிற்றையும் நிறைத்து கொண்டு இருந்தாள்.
‘அருவருப்பே இல்லாமல் அடுத்தவ புருஷனுக்கு கோர்த்துவிடும் வேலையை பார்க்கும் யசோதாவையும் அதற்கு சிரித்துக் கொண்டே இருக்கும் வெண்மதியையும் கண்டவளுக்கு அத்தனை அருவருப்பாக இருக்க…
“அதான் இவங்க இருக்காங்களே த்தை… அப்புறம் என்ன? நல்லா பரிமாறட்டும்!!” என்று நக்கலாக மொழிந்தவள், உதட்டை இழுத்து சிரிப்பை ஒன்றை அவரிடம் விட்டாள். “நான் குழந்தைகள தூங்க வைக்க போறேன் அத்தை!” என்று விட்டு குழந்தைகள் இருவரையும் தூக்கிக்கொண்டு தங்கள் அறைக்கு வந்து விட்டாள்.
குழந்தைகளின் தத்து பித்து பேச்சுகளிலும் விளையாட்டிலும் தன்னை மறந்து சிறிது நேரம் அவர்கள் உலகத்தில் கலந்து தன் கவலைகளை ஒதுக்கி வைத்து சிரித்து விளையாடினாள். மனம் சிறிது சமன்பட்டது.
அவர்களுக்கு தட்டி கொடுத்து உறங்க வைத்தாள். என்னதான் இரவு உணவு அரிசி கஞ்சியோ இல்லை செர்லாக் இல்லை இட்லி சாப்பிட்டாலும்.. அன்னையிடம் அமுது குடிக்காமல் இருவரும் உறங்க மாட்டார்கள். அவர்கள் உறக்கத்திற்கு சொக்கி கண் மூடும் வரை அவர்களது வாயில் சப்பிக்கொண்டு இருக்க வேண்டும். அமுதும் சுரந்துக் கொண்டு இருக்க வேண்டும். இல்லையேல் வீடு இரண்டாக தொண்டையை கிழித்துக் கொண்டு கத்தி தீர்ப்பார்கள்.
சோனாலி கூட அப்போதிருந்து “இப்படி பழக்காதே பிரத்யூ… அப்புறம் பெருசா ஆனாலும் விடமாட்டானுங்க” என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவள் கேட்டதில்லை.
பிள்ளைகளை அருகில் போட்டுக் கொண்டு இப்படி அமுது ஊட்டி தன் வலிகளுக்கு பிள்ளைகளின் அருகில் நிவாரணம் தேடிக் கொண்டவளால் இப்பழக்கத்தை மாற்ற முடியவில்லை.
பெற்றவளே மாற்றவில்லை என்றால் பிள்ளைகள் மட்டும் எங்கனம் மாறுவார்கள்? இல்லை மறப்பார்கள்?
கண்கள் எங்கோ வெறிக்க… பிள்ளைகளுக்கு அமுது ஊட்டிக் கொண்டிருந்தாள் மாது!
அவள் நினைவு மொத்தத்தையும் மிச்சமின்றி ஆட்கொண்டிருந்தான் அவள் மணாளன்!!
தீரஜ் அப்படியே உறங்கி விட… தேஜோ விடாமல் அன்னையை படுத்திக் கொண்டிருந்தான். தீரஜை கட்டிலின் ஓரம் அணைவாக படுக்க வைத்தவள், தேஜூக்கு படுத்த வாக்கில் அமுது ஊட்டிக் கொண்டிருந்தாள்.
தேஜோ மதியம் போல நன்றாக உறங்கி இருக்க… தூங்காமல் சேட்டை செய்து கொண்டே இருந்தான் குட்டி குறும்பன். இவள் முந்தானை தலைப்பால் மூட… அவன் தள்ளி விட… மீண்டும் இவள் மூட… சேட்டை பிடித்தவனோ மீண்டும் தள்ளி விட்டு அன்னையை பார்த்து சிரிக்க… அந்த குழி விழுந்த குண்டு கன்னத்தில் முத்தமிட்டவள், “சேட்டை கூடிப் போச்சு உனக்கு… உங்க அப்பா மாதிரி ஓவரா அட்டூழியம் பண்றா டா.. படவா” என்று அந்த குறும்பு கண்ணாளனின் கன்னத்தில் மெலிதாகக் கிள்ள அவனோ கிளுக்கிச் சிரித்தான்.
சிறிது நேரம் பிள்ளையிடம் மனம் லயித்தாலும்.. விக்ரமாதித்தன் எவ்வளவு சமாதானம் செய்தாலும் மீண்டும் முருங்கை மரம் ஏறும் வேதாளமாய் மனம் கணவனிடமே சென்றது.
‘எங்கே சென்றிருப்பார்? ஏன் இன்னும் வரவில்லை? அப்படி என்ன கோபம்? அப்படி என்ன சொல்லிவிட்டேன் நான்? உண்மையை தானே சொன்னேன்?’ என்று தனக்குள் உழன்றுக் கொண்டிருந்தவள், அறையினுள் நுழைந்து அதிர்ந்து பேச்சின்றி நின்றவனை பார்க்கவில்லை!!
“பிரதி….” என்று தன் முன்னால் இருக்கும் டேபிளை ஓங்கி குத்தினான் வர்த்தன். அவளால் உணர்ந்த… கிளர்ந்த… உணர்வுகளை அடக்க முடியாமலும்.. தன்னைக் கட்டுப்படுத்த முடியாமலும்.. அலுவலகத்தில் இருக்க முடியாமலும்… தவித்து தகித்து நின்றான் அவன்.
“நீ நினைப்பது.. செய்வது.. தவறு வர்த்தா!” என்று ஒரு மனம் அவனை கட்டுப்படுத்த..
“என்ன தவறு? என் மனைவி அவள்!! எவ்வளவு காலம் எங்கள் வாழ்க்கையை வாழாமல் நாங்கள் இருக்கப் போகிறோம்?” என்று மற்றொரு மனம் மறுதலிக்க…
இரண்டுக்கும் இடையே அலைகழிக்கப்பட்டவன் ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் வீட்டிக்கு வந்தான். இவனுக்கு பரிமாற என்று காத்திருந்த வெண்மதியோ சோபாவிலே படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
‘இவள் ஏன் இங்கே உறங்குகிறாள்?’ என்று யோசித்தவன் வினாடி கூட தாமதிக்காது மாடி ஏறி வந்து விட்டான்.. தன் மணைவாட்டியையும் பிள்ளைகளையும் கண்களால் நிறைத்துக் கொள்ள!!
பின்னே கைகளாலா அணைத்து கொள்ள முடியும் அவளை?
யசோதாவோ ‘வெற்றிகரமாக வெண்மதியை அவனுக்கு பரிமாற அமர்த்தி விட்டோம். எப்படியும் நாளைக்கு ஒரு புயல் வெடிக்கும் இந்த வீட்டில்… நாமோ மிக்சரோடு ஓரமாக அமர்ந்து விடலாம் வேடிக்கை பார்க்க…” என்று நிம்மதியாக உறங்கினார்.
நடுராத்திரியில் வந்தவனோ நிதானமாக கதவை திறக்க… அங்கே மெல்லிய மஞ்சள் நிறவொளியில்
தெரிந்த தன்னவளின்
வஞ்சனை இல்லா ஓர அழகில் மூச்சு அடைத்துப் போனான் வர்த்தன்.
இலை மறைக் காயாய் தெரிந்த கனியின் அழகில்…
தேஜ் அமுது உண்டு உறங்கி விட… உறக்கமா கலக்கமா தெரியாத நிலையில் பிரதியுக்ஷா!!
அவளின் அள்ளி தெறித்த அழகில்
எச்சில் விழுங்க கூட மறந்து விழிகள் நிலை குத்தி நின்றிருந்தான் வர்த்தன்.
இதுவே இயல்பான கணவன் மனைவி என்றால்… இது இயல்பாகவே கடந்து போகும் ஒரு செயல்!!
ஏற்கனவே மணையாளின் மீதான தாபத்தில் மண்டை காய்ந்து போய் வந்திருந்தவனோ… அவளின் இந்த அரைகுறை அழகில் தேகம்
முழுக்க வெடித்து கிளம்பிய மோகத்தின் தாக்கத்தில் சற்றே இல்லையில்லை நிரம்பவே நிலைக்குலைந்து போனான்.
தன்னை மறந்து மெல்ல பூனை காலடி வைத்து அவளை நோக்கி நடந்தவனின் இதயத்துடிப்போ தாறுமாறாக எகிறியது!! ஏதோ ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவன் போல…
ஆம்.. ஓட்டப்பந்தயம் தான்!! ஆனால் வாழ்க்கைக்கான பந்தயம்!!
இந்த பந்தயத்தில் அவசரம் ஆகாது!!
மென்னடிகளும் நிதானமான அணுகுமுறையும் தான் வெற்றியை ஈட்டித் தரும்!!
இதுவரை அதிரடியாக இருந்தவன், முதன் முறையாக அம்மென்மையை கையில் எடுத்தவன்… தன்னவளை நோக்கி முன்னேறினான்.
அவனின் கண்களோ அவளை அணு அணுவாக ஆராய… மெல்ல இறங்கிய அவனின் பார்வை இடையை கண்டதும் மொத்தமாக கொள்ளை கொண்டது!! முத்தாட விழைந்தது அவ்விடத்தை!!
சுழித்து இருந்த நாபி அவனை அதனுள் சுனாமியாய் இழுத்தது!
தேஜின் சேட்டையில் அழகிய ஓவியமாக கலைந்து இருந்தவளின் அழகுகள் வர்த்தனை அவனின் அனுமதியின்றி அவளை நோக்கி நகர்த்தியது!!
மடிப்போடிருந்த அவளது சற்று தொப்பையோடு கூடிய அவளது இடை மீது பொல்லா மோகத்தோடு நின்றிருந்தான் ஆடவன்.
“வேணாம் வர்த்தா… வேணாம் வர்த்தா… எழுந்தா அவள் காளியாத்தா..!” என்று அவன் மனசாட்சி அவனை எச்சரிக்க…
“ப்ளீஸ்.. ப்ளீஸ்.. என் வொய்ஃப் தானே… கல்யாணம் முடிஞ்சு இத்தனை மாசம் சந்நியாசியாக தானே இருந்தேன். இப்ப கொஞ்சமே கொஞ்சம்… ஜஸ்ட் பார்த்திட்டு மட்டும்…” என்று வெட்கமே இல்லாமல் கெஞ்சினான் மனசாட்சியிடம்.
“வர்த்தனு ஒரு நவ்லவன் இருந்தான்ன்ன்….” என்று அது இழுக்க…
“எஸ். இருந்தான்! இனி இல்லை!! பொண்டாட்டி கிட்ட எதுக்கு நல்லவன் வேசம்! ஒன்லி ரேமோ வேசம்! வரட்டா…” என்று தைரியத்துடன் இன்னும் இரண்டு அடிகளை பத்து நிமடங்களாக எடுத்து வைத்து மனைவியை நெருங்கினான்.
ஆழ்ந்த மூச்சு எடுத்தவனுக்கு விம்மி தணியும் அவளின் அங்க அழகுகள் ஒவ்வொரு முறை ஏறி இறங்கும் போதும் தொண்டை எச்சிலில் குளிக்க… இவனோ வியர்வையில் குளிந்தான்!
மீன் குஞ்சு போல வாய் பிளந்து உறங்கிக் கொண்டிருக்கும் ரதியவளின் அழகு வதனம், அவனை முத்தாட அழைக்க… அதனை நிதானமாக ரசித்து நிமிடங்களை உறைய வைத்து ஆழமாக அமிழ்ந்துக் கொண்டிருந்தான் அவளது அழகில்.
“டேய்… வர்த்தா… டைம் தான் ஆகுது. நீ.. அவளை நெருங்குவதாய் காணும்? நீங்குவதாயும் காணும்? நீ இதுக்கு எல்லாம் சரிப்பட மாட்ட… வா
வா… மொட்டை மாடியில் போய் தனியா படு!” என்று மானாவாரியாக அவனை வாரியது மனசாட்சி!!
“இல்லையில்லை… எல்லாம் இந்த மூளை தான் என்னை அடித்து எச்சரிக்குது தப்புன்னு…” என்றவனின் அடங்காத விழிகள் சகல உரிமையுடன் அவள் மேனியை அலசி ஆராய.. இனி அவளை மறுப்பது கனவிலும் நடவாதோ என்று தோன்றியது வர்த்தனுக்கு.
வயிறு நிறைந்த மகன் ஓரமாய் உறங்க… சொட்டு சொட்டாக கசிந்த அமுதத்தை அந்த மெல்லிய ஒளியிலும் அதனை கண்டுக் கொண்டவனின் நெஞ்சம் நின்று துடித்தது.
//என்னோடு நின்று கொல்லடி..
என்னோடு நின்று
கொல்லடி…
விலகி செல்ல
வேண்டுமோ….
என்னோடு
சேர்ந்து செல்லடி…
பிரிந்து
போக வேண்டுமோ//
அவளை இத்தனை உரிமையாய் எப்படி பார்க்க முடிந்தது?
இத்தனை உரிமை எது தந்தது? அவள் மனைவி என்பதால் தானே? எப்பொழுதுமே அவளை அடுத்தவனின் காதலி என்று உணர்வு கொண்டு அவனால் பார்க்க முடிந்ததே இல்லை. அவளை கண்ட நாள் முதலாய்…
அதுவும் தன் சகதர்மினி என்று ஆன பிறகு ‘என் மனைவி அவள்!’ என்று உரிமையாய் பார்க்கும் கணவனாய் மாறிப் போனான். அந்தோ பரிதாபம் அவளுக்கு அது தெரியவில்லை!! தெரிந்தால் என்ன நடக்குமோ? தெளிந்தால் சரி!!
இன்னொரு மனது “என்ன இருந்தாலும் அவள் தம்பியின் மீது காதல் கொண்டு அதன் மூலம் பிள்ளைகளை ஈன்றவள்.. உன்னை எப்படி ஏற்பாள்?” என்று எச்சரிக்க.. அவள் அடுத்தவன் உரிமை என்ற நினைப்பே பெரும் காயத்தில் அடர் அமிலத்தை ஊற்றிய வலி கோபம் என்று அவனை பாடாய்படுத்தியது.
என்னதான் நிதர்சனம் வேறு சொன்னாலும் அவனின் உள்ளுணர்வு ‘இல்லை.. அவள் உன்னவள்! உன்னவள் மட்டுமே!!’ என்று அடித்துக் கூற… ஆணி அடித்தது போல் அதே இடத்தில் நின்று அவளின் அழகை அணு அணுவாக பருகிக் கொண்டிருந்தான் வர்த்தன்.
இதுவரை தான் காத்த கண்ணியம் கடமை அனைத்தும் மாறி.. இப்பொழுது கட்டவிழ்ந்து விட்ட ஜல்லிக்கட்டு காளையாய் சிலிர்த்துக் கொண்டு நின்றது என்னவோ.. தாபமும் மோகமும் தீராத இளமை பசியும் தான்!!
இவை அந்த கண்ணியத்தை கடமையை கட்டுப்படுத்துமா? இல்லை காட்டாற்று வெள்ளமாய் தகர்த்து எறியுமா?
எவ்வளவுதான் மனதினை இரும்பாய் கோட்டையை கட்டிக்
கொண்டவனாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் ஒரு பெண்ணினால் அவனது மனதில் சிறு சலனத்தை மட்டுமல்ல பெரும் சூறாவளியையும் ஏற்படுத்த முடியும் என்பதை நன்கு புரிந்துக் கொண்டான்.
மற்ற பெண்களிடம் ஏன் வெண்மதியிடம் கூட ஈர்க்கப் படாதவன் இன்று இவளிடம் இதயத்தை இரவல் கேட்டு இறைஞ்சுகிறான்.
ஏதோ ஒன்று இவளிடம் இருக்கிறது! என்னை சுண்டி இழுக்கிறது? மாய பிசாசாய் என் அறிவை மழிக்க செய்து என்னை மோகத்துக்குள் தள்ளி முத்தெடுக்க வைக்க பார்க்கின்றாள் சரியான மோகினி பிசாசு.. யட்சிணி.. அரக்கி.. ராட்சசி!!
அவளின் தாய்மை கோலத்தைக் காண காண.. இவனுக்கு கணவன் என்னும் உணர்வு அதிகமாக சுழன்றி அடிக்க.. இதற்கு மேல் நின்றால் அவ்வளவு தான் என்று அவ்விடத்தை விட்டு வேகமாக வெளியேறியவன், அருகில் இருந்த மேடாவில் இடித்துக் கொள்ள.. அதில் வைத்திருந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிளாஸ்க்கு கீழே உருண்டோடி சத்தத்தை ஏற்படுத்த.. அதை கொஞ்சமும் கூட கண்டு கொள்ளாமல் புயலாக வெளியேறி இருந்தான்.
கீழே விழுந்த பாத்திரத்தின் சத்தத்தில் சடார் என்று விழித்தவள் அருகில் பார்க்க இரு பிள்ளைகளும் ஒவ்வொரு திசையில் தூங்கிக் கொண்டிருந்தனர். சிரித்தப்படி அவர்களை பார்த்தவள் பின்பு தன்னை நோக்க.. அவளிருந்த நிலையை கண்டவளுக்கு பெரிதாக கூச்சம் இல்லை. எப்பொழுதும் இருப்பது தானே? என்று.
ஆனால் வர்த்தன் முன்னே இவ்வாறு இருந்ததில்லை. “நல்லவேளை அவர் இல்லை” என்று நினைத்தவள் அப்பொழுதுதான் “கீழே விழுந்த பாத்திரத்தின் சத்தத்தில் தானே விழித்தோம்! அப்போ யார் வந்தது?” என்று பார்க்க… அறையில் யாரும் இல்லை. கீழே விழுந்த ப்ஸாஸ்க் மட்டும் சுழன்று கடைசியாக மெல்ல ஆடிக் கொண்டிருந்தது.
“ஒரு வேலை கனவா?* என்று அவள் யோசிக்க.. கனவில்லை நினைவுதான் என்று உருண்ட பாத்திரம் கீழே மெல்ல அசைந்தாடிக் கொண்டே கூறியது. ‘அவர்களின் அறையில் வேறு யாரு நுழைய முடியும் அவனின்றி?’ என்று நினைத்தவளுக்கு மனது திக்கென்று ஆனது.
அன்றிரவு தூங்கா இரவானது அவளுக்கு!!
அவனுக்கோ…. ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த தாப தீயில் அவளது இளமையின் ரகசியங்கள் நெய்யை வார்க்க… அவளை நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
‘கிட்ட நெருங்கினால் தானே இந்த தவிப்பு! தவிர்த்து விட்டால்??’ என்று நினைத்தவனுக்கு அது சாத்தியமா என்று தெரியவில்லை!! ஆனாலும் முயன்றான்!!
மறுநாள் இவள் எழும் முன்னே, அறைக்கு வந்தவன் உறங்கும் பிள்ளைகளை கொஞ்சினான். மெல்ல மணையாளின் பக்கம் தடதடத்த இதயத்தோடு திரும்பி பார்வை… அவள் முழுதாக போர்த்திக்கொண்டு தூங்க சற்றே சமாதானமானது!! ஆனால் உள்ளுக்குள் ஏமாற்றமடைந்தது அவன் மட்டுமே அறிந்த ரகசியம்!!
வேகமாக குளித்து கிளம்பி இருந்தான். மதியம் அவ்வப்போது தலைகாட்டுபவன், அன்று வீட்டுக்கு வரவேயில்லை!!
யசோதாவோ நக்கலாக பார்த்தார் ப்ரதியுக்ஷாவை!!
“நேத்து சூர்யா நல்லா சாப்பிட்டானா மதி? நீ அவன் வயிறு வாடாம பரிமாறினாயா?” என்று ஓர கண்ணால் பிரதியுக்ஷாவை பார்த்துக் கொண்டே வெண்மதியிடம் அவர் விசாரிக்க… அவளோ திரு திரு என்று விழித்தாள்.
“அது… அது… வந்து… சின்னத்தை…” அவள் தடுமாற… அந்த தடுமாற்றமே சொன்னது அவள் பரிமாறவில்லை என்று!!
பிரதிக்ஷாவுக்கு குதூகலமாய் இருக்க.. நேற்றிலிருந்து தன்னை பேச்சாலேயே வதைக்கும் யசோதாவுக்கு திருப்பிக் கொடுக்க எண்ணியவள், “அதை ஏன் அவ கிட்ட கேக்குறீங்க? என்கிட்ட கேக்கணும்!! ஏன்னா அவருக்கு பரிமாறியது நான். மிர்ஸஸ் சூரியவர்த்தன் பிரதியுக்ஷா!” என்றாள் மிடுக்கோடு!!
தேவகி எழுந்த சிரிப்பு அடக்கிக் கொள்ள… யசோதாவோ தன் கோபத்தை கட்டுப்படுத்துக் கொண்டு கோபத்தோடு பிரதியுக்ஷாவை பார்த்தார்.
“உஷா… உனக்கு டான்ஸ் கிளாஸ் இருக்குன்னு சொன்ன… சாப்பிட்டு சீக்கிரம் கெளம்பு.. நைட் சூரியாவோட திரும்பி வா.. தனியா வராதே!” என்று கண்களில் பல அர்த்தத்தை கொடுத்து.. அடுத்து வேறு ஏதும் பிரச்சினையாகாமல் மருமகளை கிளப்பி விட்டார் தேவகி!!
அவளும் குழந்தைகளோடு தூத்துக்குடியை நோக்கி சென்றாள்!!
அன்றிரவு…. மனைவியை தவிர்க்க என்று தூத்துக்குடியில் தன் வீட்டிற்கு வந்த வர்த்தனுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி ஆனந்தமாக… அவனது மஞ்சனையில் துயில் கொண்டிருந்தாள் வஞ்சி…!!
நேற்று போலா? எதிர்ப்பார்ப்போடு நங்கையவள் தேகத்தை நோக்கி புல்லட் என பாய்ந்தது அவனது கண்கள்!!
தேடல் தொடரும்…
