உயிர் உருகும் தேடல் நீ…!!!

This entry is part 2 of 22 in the series உயிர் உருகும் தேடல் நீ

உயிர் உருகும் தேடல் நீ

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

உயிர் உருகும் தேடல் நீ…!!!

3


உயிர் உருகும் தேடல் நீ…


ஜியா ஜானவி ❤️


“ப்ரத்யூ.. ப்ரத்யூ…” என்று மாலில் இருந்து வந்த உதய் புலம்பிக்கொண்டே இருந்தான். அதுவும் அவளின் பின்புறம் என்றாலும் அவளை அறியாதவன் இல்லையே இவன்? கூடவே அவளது சூல் தாங்கிய வயிறு????


மீண்டும் மீண்டும் அவனது நிழல்களும் நிஜங்களும் அப்பெண்ணொருத்தியை மட்டுமே சுற்றி சுற்றி வலம் வந்து கொண்டிருக்க.. நிலை கொள்ளாமல் தவித்தான். அவளின் நிலை அவனை மிகவும் வருத்திற்று.


“ஏன்? ஏன்? ஏன் அவ என்னிடம் சொல்லவில்லை? ஏன் ப்ரத்யூ??”


இதுநாள் வரை அழைக்காமல் வைத்திருந்த அவள் எண்ணுக்கு அழைப்பு விடுத்தான். அந்த எண் தற்போது உபயோகத்தில் இல்லை என்றது. மீண்டும் மீண்டும் எத்தனை முறை தொடர்பு கொண்டும் கம்ப்யூட்டர் பெண்ணும் அதையே திரும்பத் திரும்ப சொல்ல.. வெறுத்துப் போனவன் ஃபோனை போட்டு வீசிறி அடித்தான் சுவற்றை நோக்கி.. அவன் மனம் போலவே அதுவும் சில்லு சில்லாய் உடைந்தது.


விளையாட்டு பிள்ளையாக.. விபரீத கலைகளில் ஆர்வம் உள்ளவனாக.. பெண்களிடம் லீலை புரியும் கண்ணனாக… தாய் தந்தையருக்கு விஷமம் புரியும் நந்தனாக… என்று பலவாறு அவதாரம் எடுத்து இலகுவாக சுற்றிக் கொண்டிருந்தவன், இளகி உருகி நின்ற ஒரு இடம் அவள் தான்!! இனம் புரியாத ஒரு அன்பா ஈர்ப்பா சலனமா எதுவென்று தெரியவில்லை அவனுக்கு.. அவளை கண்ட நாள் முதல் இன்று வரை!!


மெல்ல மூச்சை இழுத்து விட்டவனின் கண்களுக்குள் வந்து சிரித்தாள் “ஹாய்.. சந்துரு” என்ற படி பிரத்யுக்ஷா!!


இன்ஜினியரிங் படிக்கும் அளவுக்கு எல்லாம் மார்க் எடுக்கவில்லை சந்தான பாண்டியனின் மகன் உதய் சந்திரன். எப்படி இருந்தாலும் தொழிலை தான பார்க்கப் போகிறான் என்று சென்னையில் பெஸ்ட் காலேஜில் பிசினஸ் மேனேஜ்மென்ட் வித் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் கோர்ஸில் சேர்த்து விட்டிருந்தார். அங்கேயும் பாதிநாள் கல்லூரிக்கும் மீதி நாள் வெளியிலும் சுற்றித்திரிந்தான் அவனுடைய நண்பர் குழுவோடு.


இன்டர்காலேஜ் காம்படிஷனுக்கு இவர்கள் கல்லூரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிக்கெட் டீம்மின் கேப்டனாக மூன்றாம் ஆண்டு படிக்கும் உதய் தேர்ந்தெடுக்கப்பட்டான். அதுபோல கலை நிகழ்ச்சிகளுக்கும் வேறொரு குழு. ஆனால் கலை மற்றும் விளையாட்டு என இரண்டு குழுகளுக்கும் பொதுவாக வழிநடத்தும் பொறுப்பை உதயசங்கரன் மற்றும் திலீபன் என்ற மற்றொரு மாணவனும் எடுத்துக் கொண்டனர்.


அப்பொழுதுதான் முதல் முதலில் ப்ரித்யுக்ஷாவை பார்த்தான். அந்தப் பார்வை தங்களோடு யார் யார் வருகிறார் என்று தெரிந்துக் கொள்ளும் பார்வை மட்டுமே!! இரண்டாவது நாளில் திலீபன் அவசரமாக இவனுக்கு அழைக்க.. கிரிக்கெட் பயிற்சியில் இருந்தவன் “என்னடா??” என்று வந்து கேட்க அழுது கொண்டிருக்கும் ப்ரத்யுக்ஷாவை காட்டினான் திலீபன்.


என்னவென்று விசாரிக்கும் பொழுது தான் மற்ற கல்லூரி மாணவர்கள் ஏதோ வம்பு செய்வதாகவும் தொடர்ந்து ரிகர்சல் செய்ய முடியவில்லை என்றும் அவள் தேம்பி தேம்பி அழு குரலில் கூற..


“ஓகே.‌ நீங்க ரிகர்சல் பண்ணுங்க.. நான் பார்க்கிறேன் எவன் வம்பு போன்றானு?” என்றவன் அவளும் மற்றவர்களும் பயிற்சி செய்ய நடுநாயகமாக அவர்கள் முன்னால் சேரில் அமர்ந்தான்.


அடுத்த பத்தாது நிமிடத்தில் வேறொரு கல்லூரி மாணவர்கள் இவர்களிடம் வம்பு வழக்கவென்று வர.. தன் கையில் வைத்திருந்த கிரிக்கெட் பேட்டை சுழற்றிக்கொண்டு அவர்களை நோக்கி உதய் செல்ல.. அவன் நடையின் வீரியமும் கண்ணில் கண்ட அழுத்தமான தைரியமும் அவர்களை பின்னடையச் செய்தது. அப்படியும் ‘என்ன செய்து விடுவான் பார்க்கலாம்?’ என்று முன்னால் வந்தவன் மண்டையை பேட்டால் உடைக்க.. அதற்குப்பின் அனைவரும் தெறித்து ஓட.. பெண்களுக்கு ஆசுவாச நிம்மதி!!


அதிலிருந்து கல்லூரியின் பெண்கள் ஆஸ்தான மானசீக நாயகன் இல்லை இல்லை அண்ணனானான் உதய்!!


“உதய் ணா…” என்று யாராவது வந்தால்.. “அடிங்க உதைப்பேன்! எவளாவது அண்ணனு சொன்னீங்கன்னா?” என்று உதய் அடிக்கவே கிளம்பிடுவான்.


“நாங்க செகண்ட் இயர் தானே? அப்போ அண்ணன் தான் சொல்லுவோம்!” என்று ப்ரத்யுக்ஷாவும் அவனிடம் வாய் அடிக்க.. ஒரு விரல் பத்திரம் காட்டியவன் “இதுக்கு நீங்க என்னை பேரு சொல்லியே கூப்பிடலாம்!”

என்று அலுத்து கொள்வான்

அவளை திட்ட முடியாமல்.. ஏனோ அவளை.. அவள் கண்களைப் பார்த்தால் இவனால் கோபம் கொள்ளவே முடிந்ததில்லை இன்று வரை!!


அவளும் “ஓகே சந்துரு.. போய்ட்டு வரேன் சந்துரு.. நாளை பார்க்கலாம் சந்துரு..” என்று அவன் பிற்பகுதியை கூப்பிட்டு அவனை ஒரு வழியாக்கினாள்.


முகத்தில் புன்னகை முகிழ்த்தாலும் அதனை காட்டிக் கொள்ளாமல் அவன் தீர்க்கமாக அவளை பார்க்க..

“அது சந்துரு இல்லை.. சீனி.. சீனியர் தான்!” என்று அழைத்து அவள் சிரிக்க.. மற்ற பெண்களும் தைரியத்துடன் அவனிடம் வாயாட.. இப்படியாக இன்டர்காலேஜ் காம்பெடிஷனில் இரண்டாவது இடத்தை பெற்று வெற்றி கோப்பையோடு கல்லூரிகளுக்கு திரும்பினர். அதிலும் ப்ரத்யுக்ஷாவின் பரதநாட்டியம் தனி மற்றும் குழுவில் முதல் பரிசு தட்டிச் சென்று அவர்களின் வெற்றிக்கு வழி வகுத்தது.


அன்று அழுத விழிகள் அதன்பின் நன்றியோடு பார்த்த பொழுது அடிக்கடி அவன் பார்வை அங்கு செல்ல மயூரிக்கோ கடுப்பாக இருக்கும்.


அதுவும் கல்லூரி வந்த பிறகும் அவர்களின் நட்பு தொடர்ந்து. அதன் பின் மூன்றாம் ஆண்டு முடித்தவுடன், ஒரு வருடம் அதே கல்லூரியில் முடிக்க வேண்டிய அரியர்ஸை அப்பாவிடம் சொல்லாமல் டிப்ளமோ அது இது என்று ஓட்டினான்.


இவன் மேற்படிப்பு என்ற பெயர் செய்து கொண்டு ஃபாரின் செல்ல, இவனோடு ஹரிஷ் மயூரி செல்ல.. அங்கே தான் அவர்களுக்கு நண்பர்களானர்கள் பவன் மிதுன் மற்றும் இந்து.


மேற்படிப்பு முடித்தவுடன் எல்லாம் இந்தியா வரவில்லை இவர்கள் கேங். மேலும் ஒரு ஆறு மாதங்கள் விட்டு வைத்திருந்த அரியர்ஸ் எல்லாம் கிளியர் செய்து கொண்டு அதன் பின்னே இந்தியா வந்தவர்கள் பார்ட்டி பப் என்று சுற்ற.. சந்தானம் தான் கஷ்டப்பட்டு கம்பெனிக்குள் அவனை இழுத்தார்.


அவரது எக்ஸ்போர்ட் இம்போர்ட் பிசினஸ் அவனை நுழைக்க படாத பாடுபட்டார். ஆனாலும் உதய் அசைந்து கொடுக்கவில்லை. அப்போது எல்லாம் சந்தானத்திற்கு அண்ணன் சௌந்தரத்தைக் கண்டு ஏக்கமாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கும். இதே வயது தான் சூர்யாவுக்கும். அதற்குள் அவன் பிஜி முடித்து அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் தொழிலில் உதவி கொண்டு.. தானும் ஒரு தொழிலை கையில் எடுத்து அதிலும் முன்னேறிக் கொண்டிருந்தவனை பார்க்க பார்க்க.. அத்தனை ஆசையாக இருக்கும் இவருக்கு. இதுபோல் ஏன் உதய் இல்லை என்று அவரின் கேள்விக்கு அவரிடமே பதில் இல்லை.


“உதய் கண்ணா… நீ கம்பெனிக்கு வர வேண்டாம் அதை பார்த்துக்க வேண்டாம். ஆனா வெளில உனக்குன்னு ஒரு இமேஜ் வேண்டாமா? அதுக்காகவாவது.. நம் கம்பெனியில் அட்லீஸ்ட் சேர்ந்த மாதிரியாவது ஒரு பெயரை கொடுப்போம் வெளி உலக்த்துக்கு!” என்று தான் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தார்.


அதற்கு அவன் தனது நண்பர்கள் அனைவரையும் அழைத்து இருக்க.. ப்ரத்யுக்ஷாவையும் அழைத்து இருந்தான். அன்றுதான் இருவருக்குள்ளும் பெரும் பிரச்சனை, எல்லாம் அவன் செய்த தவறு தான்!!


ஆத்திரத்தில் திட்டி விட்டு சென்றவள் தான், அதன் பின் அவன் எத்தனை முறை அவளை சந்திக்க விரும்பி அவர்கள் வீட்டுக்கு சென்ற போதும் நிதர்சனமாக மறுத்துவிட்டாள். கூடவே அடுத்த ஒரே வாரத்தில் அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு சென்று விட்டதாக தகவல் தான் வந்தது. ஆனால் என்ன நடந்தது என்று இவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியுமே தவிர மற்ற நண்பர்களுக்கு ஏதோ பிரச்சனை என்று மட்டுமே தான் தெரியும்.


மற்றவர்கள் இவனை முறைத்துப் பார்த்தாலே.. முழுதாக அடித்து வீழ்த்தி விட்டோ இல்லை நீ எல்லாம் எனக்கு நிகரா? என்று பார்த்து ஒதுங்கி செல்லும் உதய்.. அவள் விலகி விலகியும் தேடிச் சென்றது ஏனோ மயூரிக்கு பிடிக்கவே இல்லை.


அது அவள் ஆழ்மனதில் அவன் மீது கொண்டுள்ள காதலா? இல்லை தன் நண்பன் அந்த பெண்ணுக்காக இவ்வளவு இறங்கி செல்ல வேண்டுமா என்ற கோபமா? ஏதோ ஒன்று.. அவளுக்கு அது புரியாமல் புரிந்து கொள்ள இயலாமல் தடுமாறிக் கொண்டு, உதய் பிரத்யுக்ஷா பற்றி பேசும் வேலை எல்லாம் வெடித்துக் கொண்டே இருந்தாள்.


ஒரு வழியாக அனைத்தும் முடிந்தது இனி அவளது பேச்சே இல்லை என்று இந்த ஆறு மாதமாக மயூரி நினைத்து இருந்த வேளையில்.. இவன் ஏன் அவளைப் பற்றி பேசுகிறான் என்று யோசித்தபடி நண்பர்களோடு ரெசார்ட் வந்தவள் முதலில் சென்று உதய் தங்கி இருந்த அறையின் கதவைத் தட்டினாள்.


இவளோ தட்டிக் கொண்டே இருக்க..

அவனும் திறக்கவே இல்லை. எவ்வளவு முறை தட்டி பார்த்து

சோர்ந்து நின்ற சமயம்,

படார் என்று திறந்தவன் “ரெஸ்பான்ஸ் பண்ணலைனா டிஸ்டர்ப் பண்ண கூடாதுனு பேஸிக் மேனர்ஸ் கூட தெரியாதா உனக்கு?” என்று வார்த்தைகளை கடித்து துப்ப.. மயூரி கண்களோ கலங்கிவிட்டது.


உதய் அதை கண்டு கொள்ளவே இல்லை. அவள் நிற்கும் போதே கதவை வேகமாக அடைத்து சாற்றி விட்டு உள்ளே சென்று விட்டான். தன் முகத்திலே அடித்த மாதிரி முகம் அவமானத்தில் கன்றி சிவக்க தன்னறைக்கு வந்தவளுக்கு அழுகையை மீறி கோபமே துளிர்த்தது.


உதய் மீதும் அவனை நினைவுகளையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் பிரத்யுக்ஷா மீதும்!!


ஹரிஷூம் மற்றவர்களும் ‘ஏன்டா இந்த ட்ரிப்புக்கு வந்தோம்? எப்படி வேஸ்டா போச்சு!’ என்று தங்களுக்குள் புலம்பிக்கொண்டிருந்தனர். நேரமோ சென்று கொண்டே கொண்டிருந்தது.‌ அதன் பிறகு அனைவரும் ஹரிஷை அனுப்பி உதய்யை சமாதானம் செய்ய சொன்னார்கள்.


ஹரிஷூம் மனதினை தேற்றிக் கொண்டு ஒரு வழியாக உதய்யை சமாதானம் செய்து அழைத்து வர… அப்போதுதான் அந்த பிளாக் ரைடர்ஸ் கண்களில் இவர்கள் சிக்க அந்தப் போட்டி நடைபெற்றது.


எப்பொழுதும் போட்டி என்றால் இலக்கு ஒன்றே கண்ணாக இருப்பவனுக்கு, அன்று கண்கள் முழுக்க பெரிய வயிற்றோடு நின்றிருந்த பாவையே கண்களை நிறைக்க.. வழி மறைத்ததா இல்லை விதி அவன் கண்ணை மறைத்ததா? இல்லை சதியின் கைகள் அவன் கண்களை மறைத்ததா?

இந்த விதி உனக்கு இவ்வளவு தான் வாழ்க்கை என்று குறுக்கே நின்றதா?


தனித்து ஒன்று வந்தாலே தனி மனிதனின் வாழ்க்கை தரம் உடைந்துவிடும். அனைத்தும் ஒன்று கூடி வர… வாலிப வயதில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான் உதயசந்திரன்!


இனி உதயமாகுமா சந்திரனின் வாழ்க்கை? இல்லை தேய்பிறை ஆகுமா?


பூஜையில் அத்தனை திருப்தி இல்லை செண்பகத்தம்மாளுக்கு பூஜை மட்டுமல்ல இந்த வரனில் கூட முழு திருப்தி இல்லை தான். ஆனாலும் சொந்தம் இரு மருமகளுக்கும் அண்ணன் முறை. பெண்ணும் பழுது இல்லை பார்ப்பதற்கு ஆனாலும் நிறைவில்லை. இதற்கும் அத்தனை நாள் பார்த்து தான் சம்மதம் சொன்னார்.


எல்லோருக்கும் முன்னால் பேசி எல்லோரும் மனதையும் சங்கடப்படுத்த விரும்பாமல் தனியாக சென்று பூசாரியிடம் “என்னய்யா இது.. தேங்காய் சரியா உடையல? அதுவும் நான் கொடுத்த தேங்காய நீங்க கொடுக்கல.. வேற தேங்காய் குடுத்திருக்கீங்க” என்று கேட்டார் வருத்தத்தோடு.


பூசாரி மற்றவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு.. “ஆமாம் அம்மா… நீங்க கொடுத்த தேங்காய் அழுகிடுச்சு!! அதை சொல்லி வந்து…‌ உங்க.. மனசெல்லாம் கஷ்டப்படுத்த எனக்கு விருப்பம் இல்ல.. உள்ள இருந்து நான் தான் வேற தேங்காய் எடுத்து உடைச்சேன். அதுவுமே இப்படி முன் பின் முரணா தான் ஒடஞ்சிருக்கு. எதுவும் பார்த்து செய்யுங்க.. சகுணம் சரியில்ல…” என்றதும் மீண்டும் மனதில் ஒரு பயம் அவருக்கு.


கூடவே அனைவரும் கிளம்பும் நேரத்தில் சந்தானம் அவரிடம்.. “அம்மா.. நானும் யசோவுமீ உதய் ஜாதகத்த பார்த்திட்டு வரோம். அவனுக்கும் வயசு ஆகுது.. பொண்ணு பார்க்கணும் இல்லையா?” என்றதும் “சந்தோஷமா போயிட்டு வாப்பா!” என்று வழி அனுப்பி வைத்தார்.


“சரி அப்பத்தா… நான் அப்படியே ஆபீஸ் கிளம்புறேன்” என்று சூர்யவர்த்தன் வந்தீ நிற்க..


“கோவிலுக்கு போயிட்டு வீட்டுக்கு தான் வரணும் வரதா!” என்று அவர் அழுத்தமாக கூறியதும் சரி என்று காருக்கு சென்று விட்டான். ஒரு காரில் இவர்கள் குடும்பம் ஏற மற்றொரு காரில்.. வெண்மதி அவள் பெற்றோருடன் வந்தாள். வரும் வழியில் எல்லாம் கபாலீஸ்வரன் பொறுமிக் கொண்டு வந்தார்.


“ஏன் பாப்பா.. மாப்ள தான் சரியா பேச மாட்டேங்குறாரு.. வேல வேலன்னு ஓடுறாரு! நீ ஏன் பாப்பா இப்படி இருக்க? போய் நீயா பேச வேண்டியதுதானே? அது தான் கல்யாணம் நிச்சயமாகி.. பத்திரிகை வரைக்கும் வந்தாச்சு, அவரோட கார்ல நீ எறிக்க வேண்டியது தானே! இதெல்லாம் சொல்லிக் கொடுத்தா வரணும்? பாப்பா.. இந்த காலத்து பிள்ளைகளுக்கு நாங்க சொல்லணும் இல்ல…” என்று விடாமல் பேசிக் கொண்டே வந்தார்.


இந்த சம்பந்தம் தகைய அவர் எத்தனை பாடுபட்டிருப்பார்.. எத்தனை தரம் நடையாய் நடந்திருப்பார் இவர்கள் வீட்டுக்கு.. தன்மகள் வாழ்வுக்காக தான் இத்தனை சிரமப்பட.. இவள் இப்படி தேமே என்று இருக்காளே என்று தலையில் அடித்துக் கொள்ளாதது தான் பாக்கி அவர்.


இப்படியாக அவர்கள் வீடு போய் சேர்ந்து குலதெய்வ கோவில் கொடுத்த பிரசாத்தை பூஜை அறைக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தார் தேவகி. அப்போதுதான் வெண்மதியின் குடும்பம் உள்ளே நுழைய.. ஹாலில் தந்தைக்கு அருகில் அமர்ந்திருந்தவனுக்கு ஃபோன் வந்தது. ஹரிஷ் என்று ட்ரு காலரில் பெயர் வர.. யார் என்று யோசனையுடன் எடுத்தவனுக்கு அவன் சொன்ன செய்தி கேட்டு “வாட்??” என்று வீடே அதிர அவன் கத்த.. அனைவரும் பதட்டத்தோடு அவனை தான் பார்த்தனர்.


“வந்துடாறேன் வந்துடுறேன்.. எவ்ளோ சீக்கிரம் வர முடியுமா அவ்வளவு சீக்கிரம் வந்துடுவேன்” என்று வலி மிகச் சொற்களால் பேசியவன், குடும்பத்தை பார்த்தான்.


அனைவரும் ஒருவித அதிரவோடு என்ன சொல்ல போகிறானா என்று அவனைப் பார்க்க.. “உதய்ய ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணி இருக்காங்களாம்.. ஆக்ஸிடெண்டாம்!” என்றவனுக்கு அதன் பிறகு வார்த்தையே வரவில்லை.


கையில் இருக்கும் தாம்பாளம் கீழே விழ.. “என்ன ஆச்சு? உதய்க்கு என்னாச்சு? எப்படி இருக்கான்? எங்க இருக்கான்?” என்று பதட்டத்தோடு மகனிடம் ஓடி வந்தார் தேவகி. அதுக்கு குறையாத தவிப்போடும் மறுபக்கம் அப்பத்தா தவிப்போடு அவனை பார்க்க.. “பெங்களூர்ல ஏதோ ரேஸ் போயிருக்கான். அங்க தான் ஆக்சிடென்ட்! நான்.. போய் அவனை… நான் பார்த்துட்டு வரேன்..” என்று வாசல் வரை கிளம்பியவன், “அப்பா சித்தப்பாவுக்கும் விஷயத்தை சொல்லி இருப்பாங்க.. நீங்க அவங்களை கொஞ்சம் பார்த்துக்கோங்க! நாங்க போயிட்டு உங்களுக்கு கால் பண்றேன்” என்றவன் வேகமாக சென்று விட…

செல்லும் அவனையே சுந்தரமும் சற்குணமும் விழி அகற்றாமல் வருத்தம் தொய்ந்த முகத்தோடு பார்த்தனர்.


தூத்துக்குடி வந்து அங்கிருந்து பிளைட் மூலமே பெங்களூர் வந்து சேர்ந்தான்.


முகத்தில் எதையும் கணிக்க முடியாத இறுக்கத்தோடு வேக நடையோடு தன்னை நெருங்கும் அந்த நெடியவனை ஒரு நிமிடம் யோசனையாக பார்த்தான் ஹரிஷ். அடுத்த நிமிடமே தெரிந்து விட்டது அவன் யார் என்று!! அண்ணன் தம்பிகளாக இருந்தாலும் அத்தனை ஒற்றுமை இல்லை இருவரிடம். ஆனாலும் அந்த சாயல்.. அந்த குடும்பத்தின் சாயல் இருவரிடமும் இருக்க தானாகவே எழுந்து நின்றான் ஹரிஷ்.


சூரியவர்த்தன் வரும் வழியிலேயே அனைத்தையும் ஆட்களை வைத்து தெரிந்து கொண்டான். ஏற்கனவே இவன் நண்பர்கள் பற்றி தெரிந்தாலும் பெரிதாக அலட்டிக் கொண்டதில், இப்பொழுது ஆதி முதல் அந்தமாக யார் யார் என்று அவர்களது பயோடேட்டா கூடவே யார் கூட இங்கே பெங்களூருக்கு வந்தான் என்று அனைத்தையும் தெரிந்தவன், ஹரிஷிடம் சென்று “யாரோட காம்பெடிஷன்?” என்ளு கேட்டான்.


அவன் திக்கி திணறி “பிளாக் ரைடர்ஸ்” என்றதும் அதையும் அவனின் ஆட்களுக்கு ஃபோன் மூலம் செய்து விஷயத்தை கண்டுபிடிக்க செய்தவன் தம்பியை பார்க்க சென்றான்.


வர்த்தன் செல்லும்போது உதய் ஆழ்ந்த மயக்கத்தில் தான் இருந்தான். இவனை யார் என்று தெரிந்த டாக்டர் “சார் அவருக்கு கான்ஷியஸ் எப்ப வருதுன்னு சொல்ல முடியாது! ஆனா.. காப்பாற்றுவது கொஞ்சம் கஷ்டம் தான்” என்று மறக்காமல் உண்மையை கூறினார்.


“எதனால?? அவன் ஃபுல் ப்ரொடக்ஷன் ஓட தான் எப்பவும் ரேசில் கலந்துப்பான்”

என்றான் இறுக்கத்தோடு..


“அது.. ஹெல்மெட் இரண்டாக பிளந்து பின்னாடி மண்டையில் நிறைய அடி.. ப்ரைன்ல அங்கங்க நிறைய க்ளாட் ஆகி இருக்கு சார். ப்ரைன்க்கு பிளட் போறதே ரொம்ப கம்மியா 20% தான் போகுது

இப்படியே இருந்தா ப்ரைன் டெத் கன்ஃபார்ம். கூடவே அவர் ரிப்ஸ் ஒடஞ்சு இதயத்துல இரண்டு சேம்பர் குத்தி கிழிச்சிருக்கு. ஹார்ட்டாலயும் பம்ப் பண்ண முடியல.. கடைசி நிமிடங்கள் தான்!” என்று விட்டு டாக்டர் செல்ல.. கண்களை மூடி அந்த நிமிடத்தை கடக்க பிரம்மப்ரயத்தனப பட்டான்.


சிறு வயது முதலே இருவருக்கும் பெரிய ஒட்டு உறவே இல்லை தான். பார்க்கும்போது பேசிக் கொள்வதோடு சரி. அதுவும் வளர வளர இன்னும் தனித்தே நின்றான் உதய். கூடவே அவனது பழக்க வழக்கங்களை சுட்டிக்காட்டி ஏதாவது கூறினால்.. சித்தி சண்டைக்கு வந்து விடுவதால் ‘எக்கெடாவது கெட்டு ஒழி’ என்றவாறு சூரியவர்த்தனும் ஒதுங்கிவிட.. அவனின் பழக்கங்கள் இன்னும் மோசமாகி தான் பாக்கி. ‘அப்படியே விட்டு இருக்க கூடாதோ?? இழுத்து இரண்டு அரை விட்டு சொல் பேச்சை கேட்க வெச்சிருக்கணுமோ?’ என்று காலம் கடந்து தம்பியின் நிலை கண்டு தனக்குள்ளேயே வெடித்து அழுதான் வர்த்தன்.


அப்போது ஒரு செவிலயப்பெண் வந்து “சார் பேஷண்ட் கண் வழிச்சிட்டாரு.. கொஞ்சம் வாங்க” என்றதும் அவசரமாக வந்தவனை மெல்ல கண்களை திறந்து பார்த்தவன் முகத்தில் சிறிய புன்னகை.


அடுத்த நிமிடம் உதய் கையை மெல்ல உயர்ந்த இவனே ஓடி சென்று கையை பிடித்துக் கொண்டு “ஏண்டா?? ஏன்‌டா சின்னவனே இப்படி?” என்று நா தழுதழுக்க பேசினான் வர்த்தன்.


“சூரி.. ச்சூரி…. வந்து…‌ப்ப்…‌ப்ர.. ப்ரத்யூ…‌ குழந்த… அவள.. விட்டுடாத

ச்சூரிஇஇ…. நம்ம வ்வாரிச… த்தவிக்க.. வ்விட்டுடாத டா… ச்சத்தியம்‌ பண்ணு…” இதில் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.


பிரத்யூ.. குழந்தை.. வாரிசு.. அது மட்டுமே புரிய தம்பியை திகப்போடு பார்த்தான். ஆனால் மெல்ல உயர்ந்திருந்த அவன் கையும்.. சத்தியம் செய்து கொடேன் என்று கெஞ்சும் கண்களும்.. விட்டு விட மாட்டாய் தானே என்று அண்ணனை தெரிந்தவனாய் அவன் நம்பிக்கையும்.. அவனை நெகழ்த்தியது. சிறிதும் யோசிக்காமல் இறுக்க பற்றி “அவங்க இனி என் பொறுப்பு!! நான் பார்த்துக்கிறேன்” என்றதும் மெல்ல முகிழ்த்த புன்னகை அப்படியே உறைந்து நிறைந்து போனது உதய சந்திரனின் முகத்தில்!!


வாழ்க்கையில் பௌர்ணமி என்ற ஒன்றை காணாமலேயே தேய்ந்து அமாவாசையாகி மறைந்து போனான் இந்த உதயச்சந்திரன்…


தேடல் தொடரும்…



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *