உயிர் உருகும் தேடல் நீ
தேடல்… 12!!
சூரியவர்த்தன், மனைவி பிரதியுக்ஷா பிள்ளைகளோடு வீட்டிற்கு செல்லும் நேரம்… மற்றவர்கள் அனைவரும் ஏற்கனவே வந்திருக்க.. ஆலத்தோடு மருமகள்கள் இருவரையும் மற்றொரு அத்தை முறை கொண்ட பெண்ணையும் நிற்க வைத்திருந்தார் செண்பகத்தம்மாள்!!
இவர்கள் இருவரும் நிற்க “குழந்தைகள அவங்க கிட்ட குடுங்க!” என்றார் பெரியவராய் அவர்.
சோனாலி ஞானசம்பந்தம் குழந்தைகளை அவர்களிடம் கொடுக்க… நால்வருக்கும் ஆராத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தார்கள்.
சொந்தங்கள் கலையட்டும் பிறகு சொந்தக் கதை சோக கதை பேசலாம் என்று முடிவெடுத்த செண்பகத்தம்மாள் சூரியவர்த்தனையும் பேச விடவில்லை.
இங்கேயே இரு காதுகளையும் தீட்டி வைத்து விட்டு.. கண்களை வேறு புறம் திருப்பி கண்டென்டுகளை கவ்வ காத்திருப்பவர்களை கண்டே அமைதி காத்தார்.
பிரதியுக்ஷாவை அழைத்து சென்று பூஜை அறையில் விளக்கேற்ற சொன்னார். தேவகி அவரைப் பார்க்க கண்களை மூடி ‘அழைத்து செல்…’ சொந்தக்காரங்களை காட்டி ‘இப்போது எதுவும் பேசாதே!’ என்று அறிவுறுத்த மாமியாரின் ஆணையை சிர மேற்கொண்டு மருமகளை அழைத்து சென்றார் இந்த புதிய மாமியார்.
பிரதியுக்ஷாவும் ஏதோ கீ கொடுத்த பொம்மை போலவே இயங்கினாள்!!
மனதினிலோ ‘என்று இவர்கள் குடும்ப ஆட்களை பார்த்தாமோ.. அன்றிலிருந்து என் வாழ்க்கை என் கையிலே இல்லை! இவர்கள் என்னை பந்தாக மாற்றி.. மாறி மாறி அடிக்கிறார்கள்!’ என்று வெறுமையான உணர்வோடு தேவகி சொல்வதெல்லாம் செய்தாள்.
ஏற்கனவே திருமண விருந்துக்கு என்று அவர்கள் வீட்டுக்கு அருகில் இருந்த இடத்தில் விருந்து தயாராகிக் கொண்டிருந்தது.
சொந்தங்கள் அடுத்து என்ன நடக்குமோ? யார் என்ன பேசுவார்கள்? எப்போது இவனுக்கு குழந்தைங்க பிறந்தாங்க? ஏன் இவ்வளோ தான் பிரிந்து இருந்தாங்க? என்று ஒருவித சுவாரஸ்யத்தோடு இவர்களை கவனிக்க… பிள்ளைகளின் இளம் குரல்கள் மட்டுமே அங்கே ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
செண்பகத்தம்மா சற்குணத்தை பார்த்து கண்ணசைக்க… அவர் தன் மகன்களை பார்த்து “என்னடா பார்த்துட்டு சும்மா இருக்கீங்க? மதியமாகிடுச்சு எல்லாரையும் விருந்து அழைச்சிட்டு போங்க… என்ன மா நீங்களும் பாத்துக்கிட்டே இருக்கீங்க?” என்று மகன்கள் மருமகள்களை வைத்து அனைவருக்கும் மதிய விருந்தை தடபுடலாக பரிமாற சொன்னார்.
செண்பகத்தம்மாள் இவர்களுக்கான உணவை வீட்டுக்கே வரவழைத்து விட.. அதை வில்லவும் முடியாமல் விழுங்க முடியாமல் தவித்தது என்னவோ பிரதியுக்ஷா மட்டும் தான்.
“குழந்தைக்கு என்னமா கொடுக்கலாம்?” என்று செண்பகத்தம்மாள் பிரதியுக்ஷாவிடம் கேட்க… அவர் தன்னிடம் தானா பேசியது என்பது போல தடுமாறியவள் “அது.. அது.. வந்து.. பருப்பு சாதம்” என்றாள்.
அடுத்து சில நிமிடங்களில் பருப்பு சாதம் வந்திட சோனாலி வாங்க முயன்றதும் “நானே ஊட்டுறேன்” என்றதும் பெரிதாக பிகுவெல்லாம் செய்து கொள்ளாமல் தன்மையாக ஒதுங்கி நின்று கொண்டார் சோனாலி.
‘என்னை இருந்தாலும் அவர்கள் குடும்பத்து வாரிசுகள்.. அவர்கள் பார்க்க தானே வேண்டும்’ என்று!!
மெதுவாக இவர்கள் சாப்பிட்டு முடித்ததும்… வீட்டில் உள்ள மற்றவர்களையும் வீட்டு ஆளாய் சாப்பிட வைத்தார் செண்பகத்தம்மாள்.
அடுத்து ஒவ்வொரு சொந்தங்களாக சொல்லிக் கொள்ள வர “இங்க வாமா..” என்று பிரதியுக்ஷாவை அழைத்து தன் அருகில் நிறுத்திக் கொண்டவர், சொல்லி சென்றவர்களுக்கெல்லாம் தாம்பூல பையை அவள் கையாலேயே கொடுக்க வைத்தார்.
ஓரளவு சொந்தங்கள் எல்லாம் சென்றதும்.. தேவகியிடம் விருந்தினர் அறை ஒன்றைக் காட்டி “இவர்களை அங்க தங்க வை தேவகி” என்றார்.
பிரதியுக்ஷாவும் பெற்றோர்கள் பின்னே செல்ல… குழந்தைகளோ வர்த்தனை விட்டு வராமல் அவன் தோளிலே தொற்றிக் கொள்ள… “கொடுங்க.. அவனுங்கள” என்றாள் இவள் மெதுவாக..
“நீ வேணா போ!! அவனுங்க வர மாட்டானுங்க.. என் பிள்ளைங்க என்னோட தான் எப்போதும் இருப்பாங்க.. உனக்கும்…!!” என்று இதழ் கடித்து சிரித்தவன் பிள்ளைகளை தூக்கிக் கொண்டு மாடி அறைக்கு சென்று விட்டான். போகும் அவனை முறைப்போடு பார்த்தவள் அருகே வந்த யசோதா…
“புதுசா கல்யாணம் ஆனவங்களுக்குத்தான் நாள் நட்சத்திரம் பார்த்து ஒன்னு சேரனும் சொல்லி புருஷன் போகும்போது தனியா அனுப்ப மாட்டாங்க.. உங்களுக்கு என்னமா? ஏற்கனவே ஒன்னுக்கு ரெண்டா வாரிசுகள வைச்சிருக்கிங்க? நீ சூரியா பின்ன போறதில்ல இங்க யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை!!” என்று நமட்டு சிரிப்போடு நக்கலாக அவர் சொன்ன வார்த்தைகள் ரணமாக அவளை குத்த…
அவர் முன் முயன்று தன்னை அடக்கியவள், தாயை தேடும் கன்றாய் சோனாலியை தேடி ஓடினாள். அவர் மடியில் முகம் புதைத்து இந்நாள் வரை அழாத அழுகை எல்லாம் சேர்த்து வைத்து அழுதாள்!!
மகள் அழுததும் பதறிய ஞானசம்பந்தத்தை கண்களாலேயே ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சமாதானப்படுத்தி.. அழுது தீரும் மட்டும் பெண்ணின் முதுகை இதமாக வருடி விட்டார் சோனாலி!!
மெல்ல மெல்ல அழுகை விசும்பலாக… அதுவும் நின்று வெறும் வருத்தங்கள் மட்டுமே மனதில் தேங்கி நிற்க… வெறித்த பார்வையோடு மடியில் கிடந்த மகளை தன் புறம் திரும்பினார் சோனாலி.
“நீ பழசை நினைச்சு அழுதது இதுதான் கடைசியாக இருக்கணும் ப்ரத்யூ… ஒருத்தருக்கு கஷ்டம்னா அவருக்கு தேடிப்போய் உதவுற மனிதம் செத்து பல வருஷங்கள் ஆயிடுச்சு… அவங்க துன்பத்துல இன்பம் காண்றதும்… ஆறுதல் வார்த்தைகளுக்கு பதிலாக தேள் கொடுக்கா கொட்டுறதும் தான்… இப்போ நிதர்சனம்!!”
“ஒவ்வொருவரும் உன் கடந்த காலத்தை பேசும் போது நீ எப்பவும் இப்படி அழுது கிட்டு இருந்தேனா உன்னால வாழவே முடியாது கண்ணு… உன் கோபத்தை நெஞ்சில் வை!! வார்த்தைகள வைக்காதே… உன் தைரியத்தை கண்களில் வை… உன்னை பேசுபவர்களை நிமிர்ந்து ஒரு பார்வை பார்.. அது போதும், அவங்களே அவங்க வாயை மூடிக்கொண்டு செல்ல… அப்போதும் அவங்க வாய் ஓயலைனா உனக்கும் வாய் இருக்கிறது இல்லையா?? வலிக்க திருப்பி கொடு!!
ஆனால் இப்படி கோழை மாதிரி அழுகாத டா… கண்ணீர் ரணத்தை ஆற்றுவது மட்டுமல்ல சில சமயம் நம் மனதின் வலிமையையும் குறைத்து விடும்” என்று பார்த்தனாய் மகளுக்கு இந்த குடும்பம் என்னும் குருஷேத்திர போரில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மகளுக்கு போதித்தார்!!
“எப்பவும் அம்மா உன் கூட இருக்க முடியாதில்ல ப்ரத்யூ… ஆனா அம்மாவின் வார்த்தைகள் எப்போதும் உன் கூடவே தான் இருக்கும் பிரத்யூ.. சமாளிச்சு தான் ஆகணும் இந்த வாழ்க்கையை… வாழ்க்கை கூட ஒரு சவால் தான்!! வாழ்ந்து பார் அதில் கசப்புகள் மட்டும் கிடையாது இனிப்பான கனிகளும் இருக்கும்.. நம் தேஜ் தீரஜ் போல…” என்று மகளின் தாடையை பிடித்து ஆட்டினார்.
அம்மாவின் பேச்சில் சற்று தெளிந்தவள் “கொஞ்ச நேரம் தூங்கி எழு ப்ரத்யூ” என்று மகளை படுக்க வைத்து அருகில் அவரும் படுக்க.. அம்மா மகள் இருவரும் கண்ணுறங்க… இருவருக்கும் தனிமை கொடுத்து வெளியில் சென்றிருந்த ஞானசம்பந்தன் தூங்கும் இருவரையும் ஒரு மென்புன்னகையோடு பார்த்தார்.
மாடிக்கு பிள்ளைகளை தூக்கி சென்ற வர்த்தன், இருவரையும் தன் தோள்களிலேயே போட்டு தூங்க வைத்தான். அன்னையாய் ப்ரதியூக்ஷா மட்டுமல்ல இவனுமே நேற்று இரவு குழந்தைகள் காணோம் என்று தவித்தான் தானே.. இப்போது அவர்களின் அருகில் அந்த தவிப்பிற்கு ஆறுதல் தேடியவன், குழந்தைகளோடு குழந்தையாய் அவனும் உறங்கினான்.
மாலை போல எழுந்தவன் குழந்தைகளுக்கும் முகம் கழுவி பாத்ரூம் அழைத்து சென்று இருவரையும் தூக்கிக் கொண்டு கீழே செல்ல… அதற்குள் சோனாலியும் மகளை எழுப்பி ரெஃப்ரெஷ் சொல்லி இருந்தார்.
“ம்மா.. சும்மா படுத்தாதம்மா இது கட்டு அது கட்டுனு! ஏது என்கிட்ட புடவை? மத்தெல்லாம் யோசிச்ச அவரு.. இதை யோசிக்கலயாக்கும்.. புள்ளகள தூக்கிட்டு போனார் இன்னும் தூக்கிட்டு வரல..” என்று எரிச்சலோடு அவள் கூற..
“பிரத்யூ மரியாதையா பேசணும்!! ஒரு மனைவியா அவர்கிட்ட தனியா இருக்கும் போது நீ எப்படி வேணாலும் பேசலாம்.. ஆனா அடுத்தவங்க கிட்ட இந்த மாதிரி மரியாதை இல்லாம பேசக்கூடாது” என்று அன்னையாய் கண்டித்தார்.
“சரி.. சரி… அந்த மகா கணம் பொருந்திய மணவாளரு… இன்னும் என் பிள்ளைகள கொண்டு வந்து கொடுக்கல பசி எடுத்திருக்கும் அவனுங்ளுக்கு..” என்று அவள் புலம்ப, கதவை தட்டி உள்ளே வந்தான் வர்த்தன்.
கையில் உள்ள குழந்தைகள் அவளிடம் “ம்மாஆஆ…” என்று தாவ, அதுவரை இருந்த எரிச்சல் கோபம் எல்லாம் காணாமல் போக… இருவரையும் வாரி அணைத்து கொண்டவள் “ஏன்டா உங்களுக்கும் இந்த அம்மா தேவையில்லையா? இவ்வளவு நேரம் என்னை தேடவே இல்லை ரெண்டு பேரும்” என்று செல்லமாய் முறைக்க…
எச்சில் வழிய அன்னையின் கன்னத்தில் இருவரும் தங்கள் அன்பை முத்தங்களாய் செலுத்த அதில் நெகிழ்ந்து போய் இருவரையும் அணைத்தவாறு அமர்ந்திருந்தாள் பிரதியுக்ஷா.
“அதை கொண்டு போய் அப்படி ஓரமா வைங்க” என்றதும் என்னென்று மூவரும் திரும்பி பார்க்க… அங்கே பிரதிக்ஷாவுக்கும் குழந்தைகளுக்கும் என்று ஆடைகள் வந்து இறங்கின!! கூடவே சோனாலிக்கும் ஞானசம்பந்தத்துக்கும் இருந்தது.
“ஏன் மாப்பிள்ளை எங்களுக்கு எல்லாம்… அவங்களுக்கு தான் நிறைய தேவைப்படும். நாங்க நைட்டே கிளம்பலாம்னு இருக்கோம்” என்றார் ஞானசம்பந்தம் மனைவியை பார்த்துக் கொண்டே…
சோனாலியும் தலையாட்ட.. மா என்று சற்றே பயத்தோடு பெற்றோரைப் பார்த்தாள் பிரதியுக்ஷா.
“இருக்கட்டும் மாமா!! எப்படியும் இனிமேதான் பஞ்சாயத்தே இருக்கும். எல்லாம் பேசி முடிக்கட்டும். அப்புறம் கிளம்பலாம் ஒன்னும் அவசரம் இல்லை..” என்றவன், பிரதியுக்ஷாவின் பக்கம் திரும்பி “நீயும் பிள்ளைகளும் ரெடியாயிட்டு சீக்கிரம் வெளில வாங்க!” என்று உத்தரவு போல் கூறி விட்டு செல்ல.. ‘இவன் பெரிய மகாராஜா.. ஆர்டர் போடுறாரு’ நொடித்துக் கொண்டாள்.
“பிரத்யூ… மாப்பிள்ளை சொன்னத செய்!” என்று அன்னையாய் மகளை கண்டித்தார். முதலில் இருவருக்கும் அவள் பசியாத்த.. பின் இரு பிள்ளைகளையும் அவளின் பெற்றோர்கள் கவனித்துக் கொள்ள.. இவளும் வேறு புடவை உடுத்தி பிள்ளைகளை தூக்கிக்கொண்டு சிறு தயக்கத்துடனே அந்த ஹாலுக்கு வந்தாள்.
அப்போதுதான் விளக்கு வைக்கும் நேரம்!! “தேவகி மருமகள அழைச்சிட்டு போய் விளக்கு ஏத்த வை” என்று செண்பகத்தம்மாள் தானே எழுந்து இரு பிள்ளைகளையும் வாங்க… யசோதா “இங்கே ஒருத்தன கொடுங்க அத்த” என்று ஆசையாக வாங்கிக் கொண்டார்.
யசோதாவின் முகம் ஆராய்ச்சியோடு அவர் கையில் இருந்த பேரபிள்ளையை நோக்க.. அதை கண்டு கொண்ட சூரியவர்த்தனுக்கு உள்ளே சிறு பதற்றம்!! ‘ஏன் சித்தி இப்படி பிள்ளைகள உத்து உத்து பார்க்கிறாங்க? உதயன் ஜாடை ஏதும் இருக்குமோ?” என்று அவனுக்குள் சிறு கலக்கம்.
என்னவாகினும் அவர்கள் என் பிள்ளைகளாக தான் வளர வேண்டும் என்று முடிவு எடுத்திருந்தவன், இந்த விஷயத்தை வீட்டில் யாருக்கும் சொல்லப்போவதில்லை என்றும் திடமாக இருந்தான்!!
‘பிரதியுக்ஷாவை பேசுகிறார்களா என் மனைவியாக பேசட்டும்!! பிள்ளைகளை சொல்கிறார்களா அதுவும் என் வாரிசுகள் என்று சொல்லட்டும்!!’ என்ற எண்ணம் மட்டுமே!! அதைத் தவிர்த்து அவளை வேறு யாருடனும் ஒற்றை வார்த்தை பேசக்கூட இனி அனுமதிக்க போவதில்லை என்று தீர்மானித்தவன், யசோதாவை பார்த்து “அப்படி என்ன சித்தி குழந்தைகிட்ட தேடுறிங்க?” என்று தீர்க்கமான வார்த்தைகளாய் கேட்க…
“அது.. அது.. ஒன்னும் இல்ல சூரியா சும்மா குழந்தை யார் ஜாடைல இருக்குன்னு பார்த்தேன்! அப்பா மாதிரியா? அம்மா மாதிரியானு?” என்று அவர் திக்கி திணறி சமாளித்தார்.
“எங்க குழந்தைங்க எங்கள மாதிரி தான் இருப்பாங்க.. யார் ஜாடையா இருந்தா என்ன?” என்று அவன் கூறிய விதத்தில் இனிமே இதைப் பற்றி பேசக்கூடாது என்று கண்டனம் இருந்தது.
அதற்குள் சற்குணம் “இங்க கொண்ட பேர பிள்ளைகள” அருகில் வைத்து இருவரையும் பார்த்தவர், “ரெண்டு பேருமே அவங்க அம்மா போலத்தான் இருக்கானுங்க.. ஆனா இந்த மூக்கு மட்டும் தாண்டா நம்மள மாதிரி நல்ல கூரா இருக்கு!! உனக்கு குறைஞ்சவனுங்க கிடையாது உன் பிள்ளைங்க கோவத்துல.. வீரியத்துல” என்றதும் ஒரு கர்வ புன்னகையோடு மீசையை நீவிக் கொண்டால் சூரியவர்த்தன்.
அதேசமயம் தேவகியோடு அங்கே வந்து நின்ற பிரதியுக்ஷாவின் கண்களில் இவன் மீசையை முறுக்கி கொள்வதை பார்த்ததும்.. ஒரு கேலி புன்னகை! ‘ரொம்ப கர்வம் கொள்ளாதடா! அது உன் குழந்தைகள் அல்ல!’ என்று!!
‘ஆயிரம் கேலி நீ செய்தாலும்… அவர்கள் வித்துக்கு வேறு ஒருவன் காரணமாக இருந்தாலும்… இனி இப்புவித் தனில் அவர்கள் இறக்கும் காலம் வரை இனி வர்த்தனின் வாரிசுகளே!’ என்று பதிலுக்கு அவன் கூர் பார்வையிலேயே பதில் கொடுக்க…
பிரதியுக்ஷாவே சிறிது நேரம் அசந்து நின்றாள் அவனின் பதிலில்!!
இவனுக்கு என்ன இப்படி ஒரு பாசம் இந்த குழந்தைகள் மீது என்று அவளுக்கு கொஞ்சமும் புரியவில்லை!!
அன்பு என்பது தானாக ஊற்றெடுக்கும் சுனை போன்றது. அள்ள அள்ள குறையாமல் பெருகி வருமே தவிர குறையாது!! அந்த அன்பென்றும் சுனை நீரில் தாகம் தணித்து இன்புற்று இருக்க வேண்டுமே தவிர.. அதன் அடி அந்தம் நாதம் என்று நாம் ஆராய்ந்தால்… அது நம் அறிவிலீத்தனமாய் அந்த அன்பு சுணையை இழக்க நேரிடும்!!
அவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள அவ்வீட்டினர் ஒவ்வொருக்குள்ளும் ஒவ்வொரு விதமான உணர்வு உந்து தள்ளியது என்றால்… அதைவிட அந்த குழந்தைகளின் மீதான பாசம் தான் எப்போதும் முன் நின்றது.
அதனால் எப்படி இந்த விவாதத்தை ஆரம்பிப்பது? யார் மனசும் கோணாமல் எப்படி இதை கேட்பது? என்று அங்கே ஒரு மெல்லிய மௌனம் அடர்த்தியாய் அவர்களை போர்த்திக் கொண்டது!!
மெல்ல தொண்டையை கணைத்துக் கொண்ட சற்குணம் “வரதா….” என்று அழைக்க… ஒரு பெரு மூச்சோடு தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், “ஐயா… நீங்க என்ன கேட்க வரீங்கனு புரியுது. உங்க எல்லாருக்கும் உள்ள அந்த சந்தேகத்தை தீர்க்கும் பொறுப்பு ஒரு மகனா.. பேரனா எனக்கிருக்கு!! அதே போல்.. உங்க கோபமோ.. ஆற்றாமையோ.. அதன் தாக்கமோ என்னை நோக்கி மட்டும் தான் வரனும்! என் மனைவியையோ.. பிள்ளைகளையோ நோக்கி அல்ல!!” என்று குறிப்பாய் யசோதாவை பார்க்க… அவரோ பார்வையை திருப்பிக் கொண்டார்.
அவன் சொன்ன வார்த்தைகளின் பின்னால் இருந்த பொருள் குடும்ப உறுப்பினர்களுக்கு புரிய ஒரு பெருத்த அமைதி!!
“நடந்தது நடந்து முடிஞ்சிடுச்சு!! அதுல எதுவும் நாம மாற்ற போறது கிடையாது!! பழச திருப்பி போட்டு அத பேசி.. கீறி.. மீண்டும் அந்த வலியை உணரதுக்கு பதில்.. இனி நடக்கப் போவது மட்டும் பேசுவோமே!! பழைய பேச்சுக்கள் வேணாமே!!” என்று தேவகி ஓரக்கண்ணால் மகனை பார்த்தவாரே பொதுவாக கூற, அனைவருமே அதற்கு சம்மதமாய் தலையாட்ட.. அத்துடன் சூரியவர்த்தன் பிரதியுக்ஷாவின் பழங்கதை என்ன என்று யாருக்கும் தெரியாமலேயே போனது!!
பெரிய வருத்தம் யசோதாவுக்கு தான்!! அப்படி என்ன நடந்திருக்கும் என்று தெரிந்து கொள்ள அத்தனை ஆர்வம்??
‘இப்பொழுது வாயை திறந்தால் அம்மாவும் பிள்ளையும் நம்மைத்தான் முறைப்பார்கள்! நமக்கு என்ன வந்தது? கத்திரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்து தானே ஆகும்! அப்போது பார்த்துக் கொள்ளலாம்..’ என்று மெதுவாக நழுவி விட்டார்.
ஞானசம்பந்தம் இப்போது சற்குணம் பாண்டியனுக்கு முன்னால் நின்று “கடந்த காலத்தை மறந்து விடுவது தான் நிகழ்காலத்திற்கும் வருங்காலத்திற்குமே நல்லதுங்க ஐயா.. நாங்க இப்போ உத்தரவு வாங்கிக்கிறோம். பொண்ணையும் மாப்பிள்ளையும் என்னைக்கு வந்து மறு வீட்டுக்கு அழைத்து செல்லணும்னு சொல்லுங்க.. அன்னைக்கு நாங்க வரோம்! எங்களுக்கும் பெருசா எந்த சொந்தமும் கிடையாது. முறை வழக்கம் எல்லாம் நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படியே!!” என்றதும் சற்குணம் தன் இரு மகன்களையும் மனைவியும் பார்க்க…
“மறு வீடு அப்படி எல்லாம் வேண்டாம்!! விருந்து மாதிரி ஒன்னு வச்சிடுங்க எல்லோரையும் அழைத்து அது போதும்!! அதே மாதிரி இங்கும் சொந்தங்களுக்கு ஒரு பெரிய விருந்து ஒன்னு வைப்போம்! அது தோது பார்த்துகிட்டு உங்களுக்கு சொல்றேன்.. நீங்க கண்டிப்பா வரணும்!!” என்றார் செண்பகத்தம்மாள்.
இரு குடும்பங்களும் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை மட்டுமே முதன்மையாக கருதி.. பழசை விடுத்து நிகழ்காலத்தை மட்டும் முன்னுறுத்திக் கொள்ள எந்தவித கசப்புமின்றி ஒரு மெல்லிய புரிதல் உருவானது இது குடும்பங்களுக்கிடையே..
“அப்போ நாங்க கிளம்புறோமுங்க..” என்று அனைவரிடமும் மரியாதையாக தெரிவித்துவிட்டு இருவரும் கிளம்பினர். அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினர்.
பிரதியுக்ஷாவுக்குத்தான் மனம் கிடந்து தவித்துக் கொண்டது. புது இடத்தில் எவ்வாறு பொருந்திக் கொள்வது என.. ஆனாலும் தன் கலக்கத்தை கண்களில் காட்டாமல் இழுத்து வைத்த புன்னகையோடு பெற்றோருக்கு விடை கொடுத்தாள்.
இரவு முடிவு உணவு முடிந்து அனைவரும் அவரவர் அறைக்கு செல்ல.. குழந்தைகளோடு மாடி ஏறியவனை தடதடக்கும் இதயத்தோடு… படபடக்கும் விழிகளோடு… பார்த்து நின்றாள் பாவை!!
“எப்படி அவன் பின்னால் அவன் ரூமுக்கு போவது.. ஐயோ!!!” என்று கண்களை இறுக்க மூடி… மாடி படியின் முதல் படியில் கால் வைக்க தயங்கி நின்றிருந்த அவளின் காதுகளில்…
“நான் வேணா உனக்கு ஹெல்ப் பண்ணட்டுமா?” கற்றை மீசை உரச கேட்ட அந்த குரலில்.. அதிர்ந்து இவள் தடுமாற.. சட்டென்று அவள் இடுப்பில் கை வைத்து அவளை பின்னாலிருந்து அணைத்தான் வர்த்தன். அவன் அணைப்புக்கு சிலிர்த்து நடுங்கிய அவள் உடல் வளைந்து நெளிந்தது. புது ஆணின் தொடுகையில், அவனின் இறுக்கமான அணைப்பில் கூசிச் சிலிர்த்தது. அவன் உதடுகள் அவளின் பின் கழுத்தில் அழுத்தமாக
பதிந்தது.
எதிர்பாராத இதழ் அணைப்பில் அவள் விக்கித்து சடாரென்று திரும்ப… அவனுமே அவளுக்கு முத்தம் கொடுத்ததை நம்ப முடியாமல் ஒரு மோன நிலையில் இருக்க… அவள் திரும்பலில்
மீண்டும் ஒரு இச் நச்சென அவன் இதழ்களில்!!
இம்முறை கொடுத்து என்னவோ அவள்!!
உறைந்து நின்றது என்னவோ அவன்!!
தொடரும்…
தேடல்… 13
விடியற்காலையில் விழித்தவன் தோளில் ஒருத்தனும் அவன் மார்பில் ஒருத்தனும் தூங்கிக் கொண்டிருக்க.. அழகிய புன்னகையோடு அவர்களை சரியாக படுக்க வைத்து நெற்றியில் முத்தம் வைத்தவன், அடுத்து படுத்திருந்தவளை தான் விழி எடுக்காமல் பார்த்தான்.
குழந்தைகளை பற்றிய எந்த கவலையும் இன்றி நிதர்சனமாக தூங்கிக் கொண்டிருந்தாள் பிரதியுக்ஷா.
முதல் நாள் மட்டுமே இருவருக்குள்ளும் பெரும் தயக்கம்… எப்படி ஒரே அறையில்.. அருகே அருகே படுக்க என்று!! விடிய விடிய தூங்கா இரவாக கழிய.. அடுத்தடுத்த நாள் நிதர்சனத்தை புரிந்து இவர்களோடு வாழ பழகிக் கொண்டாள் பிரதியுக்ஷா.
அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவளின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவனின் விழிகள் தன்னிச்சையாக அந்த தேன் சிந்தும் இதழ்களில் வந்த நின்றாட… இவனுக்குள்ளே மனம் சதிராடத் தொடங்கியது!!
அன்று உணர்ந்த அந்த இதழ்களின் சுவை… அதன் மென்மை… இன்றும் வேண்டும் என்று பித்தாய் பிடித்து ஆட்டியது அவன் மனதை!!
மறுநாள் வர்த்தன் வேலைக்குச் சென்று விட்டான். ஆனாலும் அவன் மனது என்னவோ பிரதியுக்ஷாவையே அதிகமாக நினைத்துக் கொண்டிருந்தது. இதுநாள் வரை காதல் அனுபவம் கூட கிடைத்திராத அவனுக்கு நேற்று அவளுடன் ஏற்பட்ட நெருக்கமான உணர்வு அவனை பாடாய் படுத்தியது. அவனுக்கென்று ஒரு பெண் அமைந்த போதும்…
தனக்கு மனைவியாய் வரப் போகும் பெண்ணை அவனது மனம் நினைத்ததே இல்லை!!
ஆனால்.. அவனது மனது என்னவோ இப்போது பிரதியுக்ஷாவை அதிகம் விரும்பியது… அதிகமாக அவள் அருகாமையை தேடியது!!
அது தவறுதான் என்று தெரிந்தாலும்.. தன் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் தவித்தான்!! அவளை தவிர்க்க முடியாமல் உள்ளுக்குள் தகித்தான்!!
இயல்பான கணவனாய் மனைவியை நெருங்க முடியாமல்
புழுங்கினான்.
வர்த்தனின் கண்கள் அவ்வப்போது தாபத்துடன் அவள் முகத்தின் அழகை ரசித்தன.. அவள் கன்னங்களின் மென்மையும்.. மூக்கின் நுனி வளைவும்.. அதில் இருக்கும் ஒற்றை கல் மூக்குத்தியும்.. உதடுகளின் ஈரமும்… நரம்புகளுடன் சிலிர்த்திருக்கும் மென் கழுத்தும் நிமிர்ந்து எழுந்த மென்மைகளும் அவனின் விழிகளுக்குள் கற்பனையை நிறைத்தன..!!
மோகத்தை ஏற்றின..!!
ச்ச… இது தப்பு!! தப்பு!! என்று அறிவு அறிவுறுத்த…
‘இல்லை.. அவள் என் மனைவி!! எனக்கானவள்!! இதில் தவறென்ன?’ என்று மனது எதிர் கேள்வி கேட்க…
நித்தம் நித்தம் அறிவுக்கும் மனதுக்கும் இடையே நடக்கும் தர்க்கத்தில் தவித்து போனது என்னவோ வர்த்தன் தான்!!
பிரத்யுக்ஷாவின் கண்கள் அவன் கண்களைச் சந்தித்து மெல்ல வெட்கிச் சரிந்து நிலம் நோக்கின. இமைகளின் துடிப்பை துல்லியமாக அருகில் இருந்தவனால் அறிய முடிந்தது வர்த்தனால்!!
அதன் விளைவால் அவளுக்குள் எழுந்திருக்கும் மெல்லிய பதட்டத்தில் அவள் உடலின் ஒவ்வொரு அணுக்களும் விதிர் விதிர்த்திருந்தது. உடல் மொத்தமும் சிலிர்த்திருப்பதை உணர்ந்தாள். அவள் மனம் நிலையற்று தவித்தது.. அவனது அருகாமையில்…
வர்த்தன் அவள் தோளில் கை வைத்தான். சட்டென்று உடல் விரைக்க விதிர்த்தாள். அவள் உடலில் சிறு நடுக்கம் எழ.. மென்மைகள் விம்மித் தணிய நீளப் பெருமூச்சு விட்டாள். அவனின் பார்வை அவளின் பக்கவாட்டு மென் குவியல்களின் எழுச்சித் தோற்றத்தை சற்று உரிமையுடன் விழுங்கின.
கனிந்து சிவந்திருந்த உதடுகள்..
பச்சை நரம்புகள் புடைத்திருக்கும் மென்மையான கழுத்து வளைவுகளும்.. அவனின் இளமைக்கு தூபம் போட…
அதை விட… அவளது உள்ள களிப்பை காதலை நேசத்தை காட்டும் அந்த கண்கள்??!!!
‘ஸ்ஸ்ஸப்ப்பாஆஆஆ… முடியல டா சாமி! என்ன கண்ணு டா..!!’
என்று அந்த முட்ட கண்களில் விழுந்து அமிழ்ந்து ஆழ்ந்து ரசித்து
முணுமுணுத்தான்.
ஒரு பெண்ணுக்கு கண்கள்தான் எவ்வளவு ஈர்ப்பைத் தருகின்றன.? ஒரு பெண் எப்படி உடல் வாகை தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் அவளின் கண்கள் நன்கு அமைந்து விட்டால் ஒரு ஆணின் பார்வையில் அவள் பேரழகிதான். அவள் மீதான ஒரு ஆணின் உயிர் துடிப்பும் அந்த பேசும் கண்களில் இருந்து தான் துவங்குகிறது.
பெண்ணின் ஒற்றை பார்வை போதும் ஆணின் உயிர் வரை தீண்ட.. அவன் உணர்வுகளை தூண்ட…
பெண்ணவளின் கண்களில் ஆழ்ந்து வீழந்துக் கொண்டே அவளின் கழுத்தைச் சுற்றி வளைத்தவன், அவளின் சதைப் பற்றான கன்னத்தை விரல்களால் அழுத்தியபடி அவளின் முகத்தை இழுத்து வெளிறி தடித்த உதட்டைக் கவ்வினான்!!
அவனின் முத்தத்தில் பெண்மையின் பெருந் தவிப்பில் எழுந்த வெம்மையில் குளிர் குறைந்து சூட்டை உடல் உணரத் தொடங்கியது. கை கால்களில் மெல்லிய நடுக்கம் படர்ந்தது. நெஞ்சத் துடிப்பு அதிர்வென மாறியது. அடி வயிற்றில் அமிலம் தீண்டுவதுபோல உணர்ந்து சட்டென அவனிடமிருந்து விலக முற்பட்டாள்.
ப்ரதியுக்ஷாவிற்கு சட்டென்று மூச்சு சீறி வந்தது. திடுக்கிட்ட மாதிரி அதிர்ந்து பின் மெல்ல அவனின் முத்தத்தில் மிதந்தாள். அவன் முத்தத்தை அவளின் பெண்மை ரசித்தது. அவன் மெல்ல மெல்ல அவள் உதட்டை உறிஞ்சி சுவைக்க… அவள் கிறக்கத்துடன் கண் மூடினாள்.
மூச்சுக் காற்று முகத்தில் அறைய, அவளின் தடித்த கீழிதழைக் கவ்வி இழுத்து மெதுவாக உறிஞ்சிச் சுவைத்தவன், பற்களால் மெல்லக் கடித்தான். சீற்றத்துடன் பெருமூச்சு எழ அவளின் மென்மைகள் குபுக்கென விம்மி அடங்கின. அவனின் கரங்களுக்குள் அடங்கினாள் பாவை!!
சொக்கனின் சொக்குப்பொடி முத்தத்தில் சொக்கினாள் பிரதியுக்ஷா!!
அவளின் இதழ் சுவையுடன் முத்தமிட்டு அமிர்தம் விழுங்கி இதழ்களை பிரித்தான் வர்த்தன். அவளும் படபடத்தபடி மூச்சு வாங்கினாள். மூக்குக்கு கீழேயும் இதழோரங்களிலும் அவனின் எச்சில் ஈரம் படர்ந்திருந்தது.
அவன் கண் பார்த்து நாணிச் சிரித்தபடி உதடுகளையும் வலது கையின் கட்டை விரலால் அழுத்தித் துடைத்தாள். அவன் கொடுத்த முத்தம் அவளின் உள்ளாழம்வரை இனிமையாய் படர்ந்து அவளின் மன இறுக்கத்தை சற்று எளிதாக்க அவனை அணைத்து கொண்டாள், திடீரெனப்பில் தடுமாறி அவன் கீழே விழ….
நச்சென்று தலையில் அடிபட்டவுடன் ஸ்ஸ்ஆஆ என்று தலையை தேய்த்துக் கொண்டவனுக்கு அப்புறம்தான் புரிந்தது இதுவரை கண்டதெல்லாம் பெரும் கனவு என்று!!
‘ஆம்!! நடக்கவே வாய்ப்பில்லாத பெரும் கனவு தான்!’ பெருமூச்சு விட்டபடி எழுந்தான் வர்த்தன்.
வறண்டிருக்கும் உதடுகளை நாவால் தடவி ஈரம் செய்து கொண்டான். சில நாட்களாய் அவனைப் படுத்தி எடுக்கும் இந்த ஈர தாப எண்ணங்களையும் உணர்ச்சித் தூண்டல்களையும் அதனால் இன்று காலையில் கண்டு விழித்தெழுந்த கனவையும் ஒரு நொடி அவளிடம் சொல்லி விடலாம் என நினைத்தான் தான்…
ஆனால் அவளின் எதிர்வினை எவ்வாறு இருக்கும் என்று அவனால் உறுதியாக சொல்ல முடியவில்லை!! அமைதியாக உறங்கும் அவன் மனைவி பத்து தலை கொண்ட பிசாசினியாக மாறுவதற்கு வாய்ப்புகள் அநேகம் என்று நினைத்தவன், கனவில் கண்ட அவள் மோகன முகத்தையும் விஷயம் தெரிந்தால் அவள் எடுக்கும் காளி முகத்தினையும் கண்டு சிரித்துக் கொண்டான்.
ஆனால் சட்டென தன்னுணர்வு மீண்டு சொல்ல வேண்டாம் என்று தடுத்தது.
அவள் இதழ்களை கண்ட உடன் தன் உடலில் நடக்கும் அந்த உணர்வுகளை இதழ்களில் நெளியும் சிறு புன்னகையில் மறைத்தான்.
வர்த்தனுக்கு நாட்கள் பழையபடி சென்றது வேலை வேலை என்று!!
மார்த்தாண்டத்திற்கு காலையில் செல்பவன் அதன்பின் தூத்துக்குடியில் அவனது பொழுது வேலையில் மூழ்கி விட… அவ்வப்போது சென்று ஞான சம்பந்தத்தையும் சோனாலியையும் பார்த்து வருவான். அவன் செல்லும் வேளைகளில் காலையில் மனைவியை குழந்தைகளோடு அங்கே வரவழைத்து விடுபவன் வேலை முடியவும் மூவரையும் அழைத்துக் கொண்டு வீடு வருவான்.
பிரதியுக்ஷாவின் பெற்றோர்களை பொறுத்தவரை வர்த்தன் மகளுக்கு மிக சிறந்த தேர்வு என்று எண்ணினார்கள். அவளாக தேர்ந்தெடுத்த வாழ்க்கையோ அவளை குழியில் தள்ள… பெற்றோராய் அவளை அதிலிருந்து மீட்டு ஒரு நல்வாழ்க்கை அமைத்துக் கொடுக்க முடியாமல் மனதால் வருந்தியவர்களுக்கு கடவுளின் வரமாய் கிடைத்தான் வர்த்தன் என்று சொல்ல வேண்டும்!!
அந்த அளவு மகிழ்ச்சியில் இருந்தார்கள்!!
மகளின் முகத்தைக் கொண்டு இவர்கள் இருவரும் வாழ்க்கை துவங்கவில்லை என்று அந்த காதல் தம்பதிகளுக்கு புரிந்தாலும்… வர்த்தனின் முகத்திலிருந்த ‘என் மனைவி என் குழந்தைகள்’ என்ற அந்த தீவிரம் இருவரும் இணையும் நாள் வெகு தூரத்திலே என்றே அவர்களுக்கு புரிய வைக்க… இவர்களும் அதிகம் வந்து மகளை தொந்தரவு கொடுக்காமல் தள்ளியே இருந்தனர்.
பிரதியுக்ஷாவும் அந்த குடும்பத்தோடு பெரிதாக பொருந்திக் கொள்ள முயன்றாள். காலையில் வர்த்தன் கிளம்பும்போதே மனைவியையும் கிளபபி கீழே அழைத்து வந்து, பிள்ளைகளை அம்மா அப்பத்தாவிடம் கொடுப்பான். அப்பத்தா சிரித்த முகத்தோடு வாங்கிக் கொண்டாலும் தேவகியிடம் ஒரு ஒதுக்கமே!!
அதுவும் என் பிள்ளை என்னிடம் எதுவும் மறைத்தது இல்லை என்று அத்தனை கர்வமாய் இருந்தவருக்கு பெரிய அடி விழுந்ததாய் நினைத்தார். அதனால் அவன் கல்யாணத்தில் இருந்தே மகனிடம் ஒரு ஒதுக்கம்!! ஆனால் பேரப்பிள்ளைகளிடம் அதை காட்ட முடியாமல்.. வர்த்தனுக்கு நேர வாங்கிக் கொண்டாலும் பெரிதாக கொஞ்ச மாட்டார். அவன் இல்லை என்றதும் தான் அவரால் இயல்பாக பிள்ளைகளோடு கொஞ்ச முடிந்தது.
அம்மாவின் இந்த ஒதுக்கம் புரிந்தாலும் கூடிய சீக்கிரம் தன்னை புரிந்து கொள்வார்கள் என்று வர்த்தனும் விக்கிரமாதித்தனாய் அம்மாவிடம் தன் பேச்சை தொடர்ந்து கொண்டுதான் இருப்பான். பிள்ளைகள் ஏதும் சேட்டைகள் செய்தால் கூட “பாரு மா உன் பேரனை..” என்று அவரையும் அதற்குள் புகுத்தி அவர் முகத்தில் இருக்கும் அந்த கவலையை கலைந்தாட முயற்சித்தான்.
யசோதாவை கேட்கவே வேண்டாம் இரண்டு பிள்ளைகளின் செயல்களில் விளையாட்டுத்தனங்களில் தன் மகன் ஏதும் தெரிகிறானா என்று முதலில் எதிர்பார்த்தவர், இப்பொழுது தானாகவே “இவன் செய்தது அப்படியே உதய் செய்ற மாதிரியே இல்ல..”
“பாருங்களேன்… அப்படியே உதய் மாதிரியே பிடிவாதம் பண்றான்” என்று அவராகவே இப்போதெல்லாம் நாலு பிட்டை சேர்த்து போட்டுக் கொள்ள ஆரம்பித்தார்.
அதை கண்டு பிரதிக்ஷாவின் முகம் கோபத்தில் கடுகடுக்க… தேவகி அந்த கோபத்தினை கண்டு தப்பாக அர்த்தம் புரிந்து கொண்டார்.
‘யாரோ ஒருவனை மகனுடன் சேர்த்து பேசுவது அவளுக்கு பிடிக்கவில்லை போல’ என்று!!
வர்த்தன் மீதான தேவகியின் கோபமும் வருத்தமும் பிரதியுக்ஷாவுக்கு ஒரு அன்னையாய் புரிந்தது. யசோதாவிடம் காட்டும் பாரா முகத்தை அவரிடம் காட்டாமல் இவளாவே சென்று அவ்வப்போது இரண்டு வார்த்தைகள் பேசுவாள்.
மருமகளின் இந்த சமாதானத்தை புரிந்து கொண்ட தேவகியும் அவளோடு சகஜமாக பேச ஆரம்பித்தார். அவ்வப்போது பெண்களாய் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கோவில் குளம் என்று சென்று வர ஒரு சுமுகமான சூழ்நிலை அங்கே குடும்பத்துக்குள் உருவானது.
அதேநேரம் வர்த்தனின் மனமும் மனைவியோடும் குழந்தைகளோடும் ஒரு இயல்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஏங்கியது. அது என்னவோ பிரதியுக்ஷா அவனிடம் வெகுவாக தள்ளியே இருந்தாள். அவனாக சற்று இலகுவாக அவளிடம் பேசினால் இவள் படபடப் பட்டாசாகவே பதில் தருவாள்.
அன்று இரு குழந்தைகளுக்கும் எண்ணெய் தேய்த்து இரு பாட்டிமார்களும் அப்பத்தாவின் தலைமையில் குளிப்பாட்டி கொண்டிருந்தனர் பின்பக்கம்.
“உஷா.. நீ போய் டிரஸ் எடுத்துட்டு வந்து வைச்சிடு” என்று அப்பத்தா சொல்ல சரி என்று இவள் வேகமாக பின்பக்கமாக மாடி ஏறினாள்.
குழந்தைகளின் சத்தத்தில் “என்ன இவ்வளவு சத்தம் போடறானுங்க?” என்றபடி இப்படி வர்த்தன் பின்பக்கமாக இறங்க… சற்று குறுகிய அந்த மாடிபடியில் இருவரும்…
“ஹ்ம்ம்.. போ…” அவன் ஒதுங்க…
அவனைக் கடக்க அவன் நிற்கும் படியில் அவள் கால் வைக்க.. அவளுக்கே உரிய வாசணை குப்பென அவனைத் தாக்கியது.
அவன் அப்படியே நிற்க…
அவனைக் கடக்க எத்தனிக்கையில்.. அவளது மார்பு பகுதி.. அவன் மீது படும் என நினைத்து அப்படியே நின்றுவிட்டாள்.
”இன்னும் நகருங்க..” என்றாள் அவனை பார்க்காமல்…
அவன் நகர்ந்து பின்னால் சாய்ந்து இரு கைகளையும் கட்டியவாறு நின்று “போ…” என்றான் முகத்தில் மறைத்த குறுஞ்சிரிப்போடு!!
அப்படியும் அவள் மார்பு அவன் மேல் படுமோ என அவள் பயந்த ”இடிச்சிடாம…” என்றாள்.
”உன்னையா..? சும்மா போ..!” என்றான் நக்கலோடு.
“நான் எப்போதோ திட்டுனதை மனசுல வெச்சு.. ஒரு தள்ளு.. தள்ளி விட்டுட்டீங்கனா..?” அவள் கடந்து போவதாகக் காணோம். அவனோடு வம்பிழுத்தாள்.
அவன் சுவற்றுடன் ஒட்டி “அந்த பயம் எல்லாம் பேசும்போது இருக்கணும்!! தைரியமா போ.. ஏன்னா நான் ரொம்ப நல்லவன்..” என்றான் அவள் புறம் குனிந்து கிசுகிசுப்பான ஹஸ்கி வாய்ஸில்…
அவள் உடம்பைக் குறுக்கி மெல்ல கால்களை அவன் நிற்கும் படியில் எடுத்து வைக்க.. அந்த கடைசி நொடியில்தான்.. அவன் மனதில் கள்ளச் சாத்தான்.. காதல் சாத்தான்.. புகுந்தது, அவளை தீண்ட.. அவளிடம் சீண்ட…!!
எல்லாம் அவளே கொடுத்த ஐடியா தான். அவன் சட்டென ஒரு காலை மடக்க அவன் முழங்கால்.. அவளது தொடைப்பகுதியில் இடித்தது.!
அவள் சட்டென தடுமாறினாள்.
‘ஆஆவ்வ்வ்..’ என அவள் தடுமாறி அவன் கையைப் பிடிக்க..
கிடைத்த வாய்ப்பை வலுவாக பற்றிக் கொண்டவனோ, சரலென அவளைத் தன் மேல் இழுத்து விட்டான்.
பார்ப்பதற்கு எதிர்பாராத விபத்து போன்றதுதான் இந்தச் சம்பவம். ஆனால் அவன் திட்டமிட்டே செய்தது.!
அவளுக்கு வேறுவழி இல்லை. !
அவன் நெஞ்சில்.. அவளது மென்மைகள் அழுந்த விழுந்தாள்.
அவள் சுதாரித்துக்கொண்டு விலகும் முன்.. அவன் உதடுகள்.. அவளது உதடுகளை முத்தமிட்டு விலகியது மின்னல் வெட்டியது போலவே…
”பாத்து.. பாத்து..” என்றான் வெகு அக்கறையாக…
அவள் தான் திணறிவிட்டாள். இப்போது என்ன நடந்தது என்று அவளுக்கு தெரியவில்லை.
அவன் கையைப் பிடித்து..
”ராஸ்கல்…” என்றாள் கோபத்தோடு!!
அவள் கையை அவன் இறுக்கியவன்
”ஸ்வீட் ராஸ்கல்!! மெதுவா போ மா…” என்றான் கண அக்கறையாக…
“நான் ஒழுங்கா தான் போனேன். நீ தான் ஏதோ பண்ணுன..? ராஸ்கல்!! இதுல.. கிஸ்ஸு வேற..? பொறுக்கி..!!” அவனை அடிக்க இன்னொரு கையை ஓங்கினாள்.
அவனோ அவளது கோபத்தை ரசித்து சிரித்தவாறு, அவளது ஓங்கிய கையைப் பிடித்தான்.
”ஐயோ பிரதி.. எதுவுமே நானா வேணும்னே பண்ணல..”
“ச்சீ.. விடு..” கையை உதறினாள்.
“விட்டுடவா… சரி!” சட்டென அவள் கையை விட.. அவள் சாய, இடுப்பில் கை கொடுத்து அவனை அள்ளிக் கொண்டான் ஒற்றை கையால்…
”யேய்… என்ன பண்ற..?” அவள் நகர்ந்து அடுத்த படியில் கால் வைக்க… அவனோ அவளது மெல்லிய இடையில் ஒரு கிள்ளு கிள்ளினான், கீழிருந்து அவன் கையை நீட்டி.. அவள் அதிர்ந்து பார்க்க…
அவள் இடுப்பை பிடித்து ஒரு அழுத்து அழுத்தியவன்,
”ஐ லைக் யூ.. ங்க…” என்றான் கொஞ்சலாக!!
சட்டென அவன் கையைத் தட்டிவிட்டவள் அவனைத் திட்டிக்கொண்டே மேலே ஓடிப் போய்விட்டாள்.
அவள் மறையும் வரை பார்த்திருந்தவன், விசிலடித்தவாறு குதித்துக் குதித்துக் கீழே இறங்கினான் முகம் கொள்ளா புன்னகையோடு!!
தேடல்… தொடரும்…!!
