அடி என் மவுனத் தாரகையே
மெளனம் 10
மனித பிறப்பிலேயே, மிகவும் நுணுக்கமான உணர்வு.. உள்ள
ஒரு உறவு கணவன்-மனைவி இடையே உள்ள பந்தம்…
ஒரு பெண் தன் கணவனிடம் மட்டுமே,
தாயாய், சேயாய், தாரம், தோழி,
என அனைத்து குணங்களோடும் வாழ்கிறாள்..
அதே போல் ஒத்த குணவானாய் ஒரு கணவன் கிடைத்தால்..
இருவருக்கும் இடையே மட்டும் நடக்கும் பரிபாஷைகள்..மனதிற்குள் பொக்கிஷம் போல்.. பதித்துக் கொள்ள வேண்டியவை!!
அது முத்தம் ஆனாலும் சரி.. மொத்தமாக
அள்ளிக் கொடுக்கும் நிகழ்வாக இருந்தாலும் சரி.. மனதளவில் அப்படி ஒரு அன்யோன்யமான, இந்த இளம்சிட்டுக்களின்… கெஞ்சலும்.. கொஞ்சல்களும்.. நடந்தசமயத்தில் தான், வசுந்தரா அங்கு வந்ததது…
தனது இல்லத்தில் நடந்த விஷயங்களினால், நண்பர்கள் மத்தியில்
மிகவும் அவமானமாக உணர்ந்து, மிகுந்தகோபத்தில், ஆதி வீட்டிற்க்கு வந்த வசு..அங்குஇருவரையும் ஒன்று சேர்த்து, இப்படி ஒரு கோலத்தில்
பார்க்கவும்.. அவருக்கு மது ஒரு ஆள் மயக்கியாக தெரிய, அப்படியே
ஹை பிட்ச் இல் அழைத்தார்..
திரு விளையாடல் படத்தில், நடிகர் திலகம்.. நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே.. என்றுபாடுவார் இல்லையா, அதற்கு முன் எப்படி அகிலமே தன் இயக்கத்தை நிறுத்தி இருந்ததோ..
அதேபோல் இங்கு மதுவும்.. தன் அனைத்து புலன்களின்இயக்கத்தையும் மறந்து, அப்படியே உறைந்து நின்றாள்…
மிக மிக சங்கடமான சூழல் இது..
நம் கலாச்சாரத்தில், பெற்றவர்கள் முன் பிள்ளைகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் வயதுக்கு ஏற்றது போல நடைமுறையிலேயே,
வாய் மொழியாகவோ அல்லது செயல்களின் மூலமோ,கதைகளின் மூலமோ
நமக்கு வாழ்வியல் அறிவுறுத்தப்படுகிறது..
இயற்கையிலேயே மிக மிக ஒழுக்கமான
சுபாவம் கொண்ட மது இசூழலை எப்படி எதிர்கொள்வது
என்று திணறிக்கொண்டிருந்தாள்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ,
ஆதி மட்டும் மிகவும் சாதாரண மாக
ஆராய்ச்சி பார்வையுடன்மெதுவாக எழுந்து அமார்ந்தவன்,
மதுவிடம்,”அந்த தண்ணி கூஜா கொஞ்சம் எடு பாப்பு”..
என்றதும் தான், மது சிலைக்கு உயிர் வந்தது..
வெட்கத்தால் முகம் கன்றி… நிமிடத்தில் நகர்ந்தவள்..
பாதி தண்ணீரை குடித்து சற்றே தன்னுணர்விற்கு வந்தாள்…
வசுந்தராவின் நிமிர்ந்து பார்ப்பதற்கு சங்கோஜமாக உணர்ந்தாள்..
குனிந்த தலை நிமிராமல் ஆதியிடம் மீதியை கொடுத்தவள்..
என்ன செய்வது என்று புரியாமல் விழித்தபடி,
பூச்சாடியின் அருகில் சென்று நின்று கொண்டாள்..
இதைக்கண்ட வசுந்தராவிற்க்கு எரிச்சல் மேலோங்கியது..
நான் பாட்டுக்கு கழுதை மாதிரி கத்திக்கொண்டிருக்கிறேன்,
இவள் என்னடான்னா மரம் மாதிரி நிக்கிறா.. ஒன்னுமே நடக்காத மாதிரி என் மகன்,
தண்ணி எடுத்துட்டு வா, என்று சாவதானமாக சொல்கிறான்.. இவளும் எடுத்து குடிச்சிட்டு, பொறுமையாய் அவனுக்கும் கொண்டுபோய் கொடுக்கிறாள்..
என்ன நடக்குது இங்க!! நான் பேசறது இவங்க ரெண்டு பேர் காதுல விழுதா இல்லையா?? என்ற பெரிய சந்தேகம் வசுவிற்கு வந்துவிட்டது..
