அடி என் மவுனத் தாரகையே
Epilogue
மூன்று வருடங்களுக்குப் பிறகு,
மிக சீரியஸான முகத்துடன் “மது உன்னிடம் பேசவேண்டும்” என்று கடுகடுத்த குரலில் கூறி
மாடிக்குச் சென்று விட்டான் ஆதி..
“என்ன பிரச்சினை மது ஏன் தம்பி இவ்வளவு கோவமா இருக்கான்” என்று வசுவும் பத்மாவும் ஒருங்கே கேட்க,
“எனக்கும் தெரியலையே ஆனா ஏதோ பெரிய பிரச்சனை போல இருக்கு, பேசாம நான் ஒன்னு பண்றேன் நைட்டிபன் எடுத்துட்டே மாடிக்கு போறேன் அவர் சாப்பிட்டதுக்கு அப்புறம் பேசுறேன் , பசங்கள நீங்களே வெச்சுக்கோங்க” என்று அவனைப் பற்றிய யோசனையில் ஒரு ஐடியா கூற, அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரைமணிநேரத்தில் மது அறையினுள் ஆஜர்..
“பரவால்ல பேசணும்னு சொன்ன அடுத்த அஞ்சாவது நிமிஷம் ரூம்ல இருக்கிற பாப்பு” என்று நக்கலாக ஆதி கேட்டான்..
“அது இல்ல மாமா எப்பவுமே கோபம் வந்தா அந்த சூட்டோட சூடா பேசினா சண்டைதான் பெருசாகும் அதான் கொஞ்சம் ஆறப்போட்டு பேசலாம்னு வந்தேன் தப்பா இருந்தா சாரி மன்னிச்சுக்கோங்க மாமா” என்று கெஞ்சலாக கேட்டாள்..
“வந்து சாப்பிடுங்க மாமா அப்புறம் பேசுவோம் பசங்களும் இன்னைக்கு அம்மா கிட்டயும் அத்தை கிட்டயும் தூங்கிடுவாங்க” என்று அவன் கேட்காமலேயே தகவலை அள்ளி வீசினாள் மது..
உணவு உண்டு சற்று தளர்வாக பால்கனியில் அமர்ந்து நட்சத்திரங்களை எண்ணி கொண்டு இருந்தான்..
போச்சுடா ஏதோ பெரிய பிரச்சனை போல இருக்கு இன்னும் முசுட்டு முள்ளம்பன்றியாவே இருக்கானே அப்படி என்ன நடந்துச்சு என்று மண்டையை உடைத்துக் கொண்டிருந்தாள் மது
“இங்க வா மது” என்று ஆதி அழைக்க ஓடிச் சென்று அவன் எதிரில் அமர்ந்தாள்
” சொல்லு மாமா”
“நம்மளோட சொத்துக்களை பத்தி கொஞ்சம் அலசி ஆராய ஆராய வேண்டும்”…
” இப்ப என்ன பிரச்சனை மாமா”??
“ஸ்கூல், காலேஜ் , டிரெய்னிங் சென்டர், அதுபோக டீச்சர் டிரெய்னிங் காலேஜ் இது எல்லாத்தையும் நீ பார்த்துக் கொள்கிறாய்..
“ஆமாம்”
“அதுபோக என்னோடது பரம்பரா, எங்க பிசினஸ், உழவன் வாழ்வு எனும் என்னோட கட்சி இதையெல்லாம் நான் பாத்துக்குறேன் அதுமட்டுமில்லாம மினிஸ்டராக இருக்கேன்…
இப்போ நமக்குப் பின் அனைத்தையும் யாரு பாக்க போறாங்க என்னோட மிகப்பெரிய கேள்வி இதுக்கு பதில் சொல்லு”..
“ஏன் மாமா என்ன ஆச்சு ஏன் இப்படி உளறுகிறாய், உனக்கு ஏதாவது உடம்பு சரி இல்லையா?? நம்ம வாழ்க்கை இன்னும் எவ்வளவு தூரம் இருக்குது, இப்படியெல்லாம் பேசி எனக்கு பயத்தை ஏற்படுத்தாத, உண்மையை சொல்லு என்ன ஆச்சு”??..
மதுவை தன்னருகில் அழைத்தவன் அவள் தோள்மீது கை போட்டபடி, “அது ஒன்னும் இல்லடா குட்டி இப்ப நமக்கு ரெண்டு பசங்க இருக்காங்க ,ஒருத்தன் கிட்ட ஒரு பொறுப்பை கொடுத்தால் கூட மற்றவை எல்லாம் பார்க்கறதுக்கு ஆள் இல்ல டா பாப்பு..
அதனால நான் என்ன யோசிச்சிருக்கேன் என்றால்”…. என்றபடி மதுவை பார்க்க..
அவளுக்கு வேர்த்துக் கொண்டிருந்தது.. பயம் அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது..ஆதிக்கு ஏதோ பெரிய பிரச்சினை என்று முடிவே செய்துவிட்டாள்.. அவள் நடுநடுங்கிப் போய் தொண்டைக்கு மனதிற்கும் பயந்து உருள ஆரம்பித்தது…
“ஒவ்வொரு சொத்துக்கும் ஒரு வாரிசு உருவாக்க நினைக்கிறேன் அதுக்கு நீ எனக்கு கோபரேட் பண்ணனும் சரியா” என்று மிக சீரியஸாக கேட்டான்…
“அடங்கொய்யால டேய் மாமா நீ கொடுத்த பில்டப்பை பார்த்து எல்லோருக்கும் டென்ஷன் ஆயிடுச்சு.. ஆனா நீ இப்படி ஒரு சீனை போட்டு எனக்கு ரூட்டு போடுகிறாய் என்னமோ இப்பத்தான் நாம லவ் பண்ற மாதிரி, இன்னைக்கு நீ சட்னி தாண்டா மாமா என்று அருகில் உள்ள தலையணையை எடுத்து அவனை அடிக்க துவங்க, அவன் அவளிடம் இருந்து தப்பித்து ஓட என இருவரும் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்”..
மதுவை தன்னோடு இறுக்கி அணைத்தபடி” சும்மா ஒரு விளையாட்டு விளையாடிப் பார்த்தேன் அதுக்கு ஏன்டா குட்டி இப்படி பயப்படற” என்று அவள் மூக்கோடு அவன் மூக்கை உரசிய படி கொஞ்சினான்..
“நம்ம பசங்களுக்கும் சண்டை போட ஆள் இல்லாம போர் அடிக்குதாம் ,தம்பி தங்கச்சி இருந்தா அவுங்க ஜாலியா சண்டை போட்டுட்டு உன்கிட்ட பஞ்சாயத்துக்கு வருவாங்களாம், நீயும் பஞ்சாயத்து தலைவரா தீர்ப்பு கொடுக்கலாமில்லடா பட்டு”….
“இன்னும் ஒரு அஞ்சு குழந்தை பெத்துக்கலாம் டா நமக்கும் ஜாலிக்கு ஜாலி,வீடும் கலகலன்னு இருக்கும் என்ன சொல்ற”?? என்று அவள் கண் பார்த்து நகைத்துக் கொண்டே ஆதி கேட்க, அதுக்கென்ன பத்தா பெத்துக்களாமே..என்று கண் சிமிட்ட, ஆதி கட்டை விரலை உயர்த்தி காண்பிக்க,கோபத்திற்கு பதிலாக சிரிப்பும் வெட்கமும் தான் வந்தது மதுவிற்கு..
பின்னர் என்ன ஆதி செயல் வீரனாக மாறி விட்டான்..அன்பும் காதலும் வயது வித்தியாசத்தை பார்த்து வருவதல்ல வயது ஏற ஏற அதன் அளவும் இருவருக்குள்ளும் அதிகமாகிக் கொண்டுதான் இருந்தது..
எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் வீட்டுக்குள் வந்துவிட்டால் அனைத்தையும் வாசலில் செருப்பை கழட்டி வைப்பது போல் வைத்து விடுவர் இருவரும்….
இது எங்கள் வீடு இங்கு அன்பும் பாசமும் எங்களது அடையாளங்கள் என்றுதான் இருவரும் நடந்து கொள்ளுவார்கள்.. அதனாலேயே இருவரின் காதலும் கூடலும் கூட தங்குதடை இல்லாமல் எப்பொழுதும் மலர்ந்து கொண்டே இருக்கும்..
இதுவல்லவோ வாழ்க்கை!!
அடுத்த நாள் காலை
“என்ன மது என்ன ஆச்சு?? என்று இரு பெரிய தலைகளும் மதுவிடம் கிசுகிசுக்க”, என்னவென்று இவளும் கூறுவாள் ஆனால் இது பழகிப் போன விஷயமாதலால் “அது ஒன்னும் இல்ல மா ஏதோ ஆபீஸ் டென்ஷன் அந்த யோசனையிலேயே இருந்திருக்கிறார் அதான் குரல் அந்த மாதிரி இருந்திருக்கு..
அத்தை பசங்களை ஸ்கூலுக்கு ரெடி பண்ணிட்டீங்க தானே”??.. என பேச்சை மாற்றி குழந்தைகளை பார்ப்பதற்கென்று இருவரையும் விரட்டிவிட்டாள்..
குழந்தைங்க கூட பரவால்ல டா சாமி சொன்ன பேச்சைக் கேட்கிறார்கள், அவங்கப்பா இருக்கானே அவன் அட்டகாசம் தான் தாங்க முடியல என்று செல்லமாக மனதில் அவனை வைதாள்..
ஓரிரு மாதங்களுக்குப் பின்…
தாய்மையின் மென்மை மதுவின் முகத்தில் மிளிர்ந்து கொண்டிருந்தது..
ஆம் மது கருவுற்றிருந்தாள்.. ஆதிக்கு சந்தோஷம் தாங்கவில்லை அவனுக்கு மதுவின் மீதான காதலும் கடலளவு பெருகி விட்டது அப்பொழுது…
ஆறாம் மாதம் நடக்கிறது இப்பொழுது,
,
குடியரசுத் தலைவர் அலுவலகத்திலிருந்து மதுவிற்கு அழைப்பு….
“வாழ்த்துக்கள் மேடம்… சிறந்த சமூக சேவகி என்னும் பிரிவில் குடியரசுத் தலைவரின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது இந்த வருடம் உங்களுக்கு வழங்கப்பட உள்ளது..
உங்களது கல்வி சேவைக்காகவும் கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்காக,பெண்கள் குழந்தைகள் முன்னேற்றத்திற்காக, உழைப்பதற்காகவும் வழங்கப்பட இருக்கிறது..
இது பற்றிய பற்றிய முழு தகவல் உங்களுக்கு அலுவலகத்தில் இருந்து பின்னர் வழங்குவார்கள், இன்று இரவு அதிகாரபூர்வமானதகவல் அறிக்கை அனைத்து ஊடக நண்பர்களுக்கும் தெரிவிக்கப்படும்…
மீண்டும் எங்களது வாழ்த்துக்கள் மேடம்” என்று கூறி அவர்கள் போனை வைத்துவிட, காதில் இருந்த போன் நழுவிக் கீழே விழுந்தது கூட தெரியாமல் அப்படியே ஆடாமல் அசையாமல் அதிர்ச்சியின் உச்சத்தில் மது….
இதில் பியூட்டி என்ன தெரியுமா?? மதுவிற்கு முன்னர் ஆதிக்கு தான் முதலில் விஷயம் சென்றது, ஹூர்ரே என்று துள்ளி குதித்து விட்டான் ஆதி….
அவளது வெற்றி இவனுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்தது இதைகொண்டாட வேண்டுமல்லவா அதற்கும் ஏற்பாடு செய்து விட்டு, ஒன்றும் தெரியாதவன் போல வீட்டுக்கு வந்து விட்டான்..
அவன் வந்த பின்தான் மதுவிற்கு அழைப்பு வந்தது..
இப்பொழுது மது அதிர்ச்சி மோடில் இருந்து மகிழ்ச்சி மூடுக்கு ஷிப்ட் ஆக வேண்டுமல்லவா..
காது கிழிந்தது செண்டை மேளம் சத்தத்தினால், மதுவும் நிகழ்விற்கு வந்தாள்..பட்டாசு வெடிக்க அனைவருக்கும் இனிப்பு வழங்கி இந்த மகிழ்ச்சியை கொண்டாடினான் ஆதி…
நாட்டின் மிகப்பெரிய உயரிய விருது இது…
“இதற்கு நான் தகுதியானவளா என்று தெரியவில்லை இதற்கு முழு காரணமும் நீங்கள் தான் மாமா… என்னை முன்னிறுத்தி பின்னின்று அனைத்து வேலைகளையும் நீங்கள் தான் செய்திருக்கிறீர்கள்,ஆனால் பாராட்டு மட்டுமே எனக்கு”..
என்று அனைவர் முன்னிலையிலும் கூறி ஆதி மதுவிற்கு கொடுத்த அந்த மலர்கொத்துக்களை ஆதியின்கையில் கொடுத்து “உங்களைப் போன்ற கணவர் கிடைக்க நான் எத்தனை ஜென்மம் தவம் செய்தேனோ தெரியவில்லை மாமா” என்று உள்ளம் நெகிழ கூறியதோடு அவன் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தாள்..
ஆதியும் பதிலுக்கு அவள் கன்னத்தில் முத்தமிட்டவன் “உன் கடின உழைப்பும் திட்டமிடல்களுமே இந்த வெற்றிக்கு காரணம்..
நான் உதவிதான் செய்தேனே ஒழிய வேறு பெரிதாக எதுவும் செய்யவில்லை இது முழுக்க முழுக்க உன் உழைப்புக்கான பாராட்டு தான் ஏற்றுக் கொள்” என்று கூறி மென்மையாக சிரித்து அவளை தன் கைவளைவிலேயே வைத்துக்கொண்டு வெளியே வந்தான்..
அனைத்து மீடியாக்களும் இவர்கள் வாசலில் குழுமி இருந்தனர்,இருவரையும் ஒருங்கே பார்த்ததில் அனைவருக்கும் கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா என்று எண்ணும்படி மகிழ்ச்சி கொண்டனர்…
“வாழ்த்துக்கள் மேடம் மிகப்பெரிய விருதை இந்த இளம் வயதில் அடைந்திருக்கிறீர்கள் இதற்கு உங்களது கணவரின் பரிந்துரை தான் காரணமா?”?..
“ஆம் கண்டிப்பாக!!!…
என் கணவரின் பரிந்துரை இல்லை எனில் நான் எதையுமே முயற்சி செய்திருக்க மாட்டேன், எதையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்க மாட்டேன்,அவரின் பரிந்துரை இல்லையெனில் நான் பள்ளி, கல்லூரி தொடங்கியிருக்க மாட்டேன்..
எனது அனைத்து செயல்களின் கிரியா ஊக்கியாகவும் மூளையாகவும் செயல்பட்டது என் கணவர்தான்”…
மதுவின் பதிலடிக்கு அங்கிருந்த அனைவரும் கை தட்டி ஆர்ப்பரித்தனர்…
கேட்ட கேள்வியின் விதமோ வேறு ஆனால் அவளது பதில் ஆதியின் மதிப்பை ஒரு படி மேலே உயர்த்தியது…
“சற்று வித்தியாசமானது உங்கள் பள்ளி என்று அனைவரும் கூறுகிறார்கள், மேலும் உங்களது அனைத்து நிறுவனங்கள் பற்றியும் கொஞ்சம் எங்களுக்கு விரிவாக கூற முடியுமா”?? என்று ஒரு நிருபர் கேள்வி..
“நிச்சயமாக சொல்றேன்”
“எங்க ஸ்கூல் ரொம்ப வித்தியாசமானது ஐந்தாம் வகுப்புவரை எழுதுவதற்கு ஹோம்வொர்க் தர மாட்டோம்..புத்தகத்தை மட்டும் நம்பாமல் பிராக்டிகலாக ஒவ்வொன்றையும் அவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்..
எங்களால் இயன்றவரை எதிர்வரும் காலத்தில் குழந்தைகள் நன்கு நல்ல குணங்களை அடிப்படையாய் கொண்டு வர வேண்டும் என்பதற்காக பாடுபடுகிறோம் இதுதான் எங்கள் பள்ளி,உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி.. என்றதோடு இருவரும் உள்ளே சென்றனர்
பின்னிரவு
ஆதியின் அரவணைப்பில் மது….
கூடலுக்கு பின்வரும் சுகம் என்ன என்பதை இந்த அணைப்பில் ஒவ்வொரு முறையும் மது உணர்வாள்..
ஆதியின் அன்பிற்கு அளவே கிடையாது “மதுவின் நெற்றியில் முத்தமிட்டு, டேய் பட்டு பாப்பா என்ன சொல்லுது டா “எனக்கேட்டான்…
“டாக்டர் சிரிக்கிறாங்க மாமா” என்று அவனிடம் கம்ப்ளைன்ட் பண்ணினாள் மது
“எதுக்குடா பாப்பு டாக்டர் சிரிக்கிறாங்க சொல்லு குச்சி எடுத்து அடிச்சுடலாம்” என குழந்தைகளிடம் பேசுவது போல கொஞ்சினான் ஆதி…
“இந்த முறையும் ரெட்டைக் குழந்தை என்று சொன்னாங்க மாமா” எனகூறி வெட்கப்பட்டாள்..
“உனக்கு எப்பவுமே இரட்டை குழந்தைதான் பிறக்குமா உங்க சார் அவ்வளவு பாஸ்ட்டான்னு சொல்லிட்டு சிரிக்கிறாங்க மாமா” என சிணுங்கினாள்..
வாய்விட்டுச் சிரித்தான் ஆதி…
“இதெல்லாம் நம்ம கையிலே இல்லடா பாப்பு கடவுள் நமக்கு அள்ளிக்கொடுக்கிறார் சந்தோஷமா வாங்கிக்கொள்வோம்” என்று அவன் வரிசைப்பற்கள் தெரிய மீண்டும் சிரித்தான்..
இந்த அன்பே இவர்கள் நல்ல இல்லற வாழ்க்கை நடத்துவதற்கு அடித்தளமாக இருந்தது..
மேலும் வெளி உலகிலும் அவர்களின் முன்னேற்றத்திற்கு பெரும் துணையாக அமைந்தது…
இந்த முறை இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்க வீடு மட்டுமல்ல ஊரே ஹாப்பி.. ஒருவனை தவிர..
மீண்டும் சீரியஸ் முகம் கொண்ட ஆதி பெரியதாக யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை..
ஒருவழியாக குழந்தைகளுடன் வீட்டிற்கு வந்து மதுவும் அவளது அன்றாட கடமைகளில் செட்டிலாகி விட, மாதங்கள் உருண்டோடியது…
ஒருநாள் இரவு இருவருக்குமான தனிமையில்ஆதி,” ஏண்டி நான் அப்பப்போ மூஞ்சிய தூக்கி வச்சுட்டிருக்கேனே என்ன ஏதுன்னு கேக்க மாட்டியா”??
“ஏற்கனவே பிறந்த ரெண்டு ரெட்டை வாலுகளையும் இப்ப புதுசா வந்திருக்கிற நாலு வாலுகளையும் சமாளிக்கவே என்னால முடியல, இதுல நீங்க என் பென்சிலை காணோம் என் பேனாவை காணோமுன்னு கோவிச்சுக்கிட்டா நான் என்ன பண்றது”…
“அடியே அடியே என் ஆசை பொண்டாட்டி என்ன இப்படி டேமேஜ் பண்ணுறியே டி நியாயமா இது??…
என் கோபமே வேரடி…
“அப்படி என்ன கோபம் சாமி உங்களுக்கு கொஞ்சம் உங்க மூட்டையை அவுத்து விடுங்க கேப்போம்” என்று சிரிக்காமல் கேலி செய்தாள் மது..
“என் ஆசையை நிறைவேற்றாமல் நீ என்னை ஏமாத்திட்ட, அதனால உன்கிட்டதான் இந்த பஞ்சாயத்து வைக்கணும்னு இப்ப கேக்கறேன்” என ஆதி பூடகமாக பேசினான்..
“ஏமாத்துறாங்க ஏமாத்துறாங்க சும்மா கதை விடாத மாமா விஷயத்தைச் சொல்லு”…
“எனக்கு கண்ணுக்கழகா ரெண்டு பெண் பிள்ளைகள் பிறப்பார்கள் என்று ஆசையாய் இருந்தேன்.. ஆனா நீ ஏமாத்திட்ட அதனால இந்த மிஷன் கம்ப்ளீட் ஆகல எனக்கு பெண் குழந்தை வேண்டும் அவ்வளவுதான்”…
“டேய் மாமா”….. கத்தி விட்டாள் மது..
“உனக்கே நியாயமா இருக்கா இந்த இந்த நாலு குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளவே எனக்கு நாக்கு தள்ளுது.. இருந்து இதில் இன்னொன்னு வேற கேட்கிற நீ….
வேணா ஒன்னும் பண்ணலாம் எனக்கு இந்த முறையும் சுகப்பிரசவம் என்பதால அடுத்த குழந்தை பெற்றுக்கொள்வதற்கு நான் ரெடி”…
“அப்படி சொல்லுடி என் ராஜாத்தி மாமன் இப்பவே ஃபுல் ஃபார்மில் தான் இருக்கேன் ஆரம்பிப்போமா”??
“இரு இரு மாமா நான் இன்னும் முடிக்கல ஆனா ஒரே ஒரு கண்டிஷன், இவங்க நாலு பேரையும் ஒரு மாசம் நீ கம்ப்ளீட்டா பாத்துக்கணும் எந்த காரணத்தை கொண்டும் யாரையும் உதவிக்குக் கூப்பிடக்கூடாது…
சும்மா சும்மா மது பாப்பு ,லட்டு, குட்டிமா, அப்படி இப்படின்னு ஐஸ் வைக்க கூடாது டீல் ஓகேன்னா எனக்கும் ஓகே நான் ரெடி நீ ரெடியா”??
“ஏண்டி எனக்கு ஒரு பொம்பள புள்ள வேணும்னு கேட்ட ஒரு காரணத்துக்காக வேலையெல்லாம் விட்டுட்டு பசங்க பின்னாடி சுத்தச் சொல்றியே நியாயமா இது….
இதுக்கு தாண்டி வீட்டோட ரெண்டு அப்பரெண்டிஸ் இருக்காங்க…
எங்க அம்மா அப்பா எதுக்கு இங்க இருக்கிறதுக்கு அனுமதிச்சேன்னு நினைக்கிற??
நம்ம குழந்தைகளை கண்ணும் கருத்துமா பார்த்துக் கொள்வதற்காக மட்டுமே . இது அவர்களுடைய டியூட்டி குழந்தைகளை பார்க்கிறது…அதனால குழந்தைகளை வளர்ப்பது பற்றியும் பார்த்து கொள்வது பற்றியும் நமக்கு பிரச்சினையில்லை…
உன் கண்டிஷனுக்கு இப்போ பதில் சொல்லியாச்சு பேபி, நாம எப்பவுமே சந்தோஷமா ஜாலியா கொஞ்சிகிட்டு இடிச்சுட்டு புடிச்சிட்டு லவ் பண்ணிட்டு அப்பப்ப ஃபேமிலியா எங்காவது டூர் போயிட்டு வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்”…
“அதில்ல மாமா நான் என்ன சொல்ல வர்றேன்னா”….
” இது நம்ம ரெண்டு பேருக்குமான நேரம், இங்க நம்மள பத்தி மட்டுமே பேசிக்கொண்டும், கொஞ்சிக் கொண்டும் இருக்க வேண்டுமே தவிர வேறு எதுவும் பேசக்கூடாது” கூறியவன் மேற்கொண்ட அவளை பேச விடாது அவளைத் தன்னிலை மறக்கச் செய்தான் தன் காதலினால்..
மிகச்சரியான வார்த்தைகளே கணவன்-மனைவி இருவருக்குமான நேரத்தில் குடும்பச் சண்டைகளை இழுத்து வைத்து பேசியே பல குடும்பங்களில் பிரச்சனைகள் தொடர்கதையாக இருக்கின்றன இதை கொஞ்சம் ட்ரை பண்ணி பார்க்கலாமே…
ஏதேதோ பேசி மதுவை மூளைச்சலவை செய்து விட்டான் ஆதி, தாம்பத்தியத்தில் அனுபவமே அன்பின் ஆழத்தை அதிகரிக்கச் செய்யும், இப்பொழுதும் மது மீண்டும் கருவுற்று இருந்தாள்…
அந்த ஊரிலேயே எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய தம்பதியினர் இவர்கள் மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது அவர்களுக்கு…
எந்த பொது நிகழ்வு என்றாலும் திருமணம் காதுகுத்து போன்ற எந்த விசேஷங்கள் என்றாலும் முதல் மரியாதை இவர்களுக்குத்தான்…
இவர்களும் அதற்கான செலவில் பெரும்பங்கை அள்ளிக் கொடுப்பார்கள்…
இவர்களுக்கு எப்பொழுதும் இரட்டை குழந்தைகள் தான் …பெண் குழந்தைகளை சுகப்பிரசவமாக மது ஈன்றெடுக்க, பெரிய மனது பண்ணி கையோடு குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள சம்மதித்து விட்டான் ஆதி..
இவர்களைப் பொறுத்தவரை வாழ்க்கை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தது அந்த மழையில் இவர்களும் நான்கு நனைந்து கொண்டு இருந்தார்கள்…
ஊரைக்கூட்டி தன் தங்கை குழந்தைகளுக்கு காதுகுத்து வைத்ததோடு மாமன் சீதனமாக அவர்களுக்கு வரிசையாய் நூற்றி ஒரு தட்டு அடுக்கினான்…
ஊரே வாயைப் பிளந்து பார்த்தது.. இப்படி யாரும் சீர்வரிசை இதுவரை செய்ததில்லை இனியும் செய்யப் போவதில்லை என ஊர் மக்கள் அனைவரும் இவர்களை மெச்சி கொண்டனர்..
புரிதல்களும் விட்டுக்கொடுத்தலும் பரந்த மனமும் எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ளும் குணமும் இவர்களை மேன்மேலும் உயர்த்திக் கொண்டிருந்தது…
வாழ்க இக்குடும்பம் வளர்க இவர்களது தொண்டு….
இவர்களைப் போல் நாமும் அனைவரையும் அன்பில் ஆழ்த்துவோம், அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்….
வாழ்க வளமுடன் வளர்க அன்புடன்……
