அடி என் மவுனத் தாரகையே…

This entry is part 14 of 23 in the series அடி என் மவுனத் தாரகையே

அடி என் மவுனத் தாரகையே

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

அடி என் மவுனத் தாரகையே…

மௌனம் 15

வசுந்தராவின் இந்த செய்கையை எதிர் பார்க்காத ஆதி, ஒரு நிமிடம் துணுக்குற்றான். ஒருவேளை நடிப்போ??, என்று சந்தேகம் எழுந்ததும், கழுகு பார்வை பார்த்தபடி,அருகில் இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து, இன்னும் கொஞ்சம் நடிப்பை எதிர்பார்க்கிறேன்…. என்று, ரோமியோ ஜூலியட் படத்தில் ஜெயம் ரவி கூறுவது  போன்ற பாவனையில் அமர்ந்திருந்தான்..

 என்ன செய்வது என்று  புரியாமல் வேலு கையைப் பிசைந்து கொண்டிருக்க, சத்தம் கேட்டு ஓடிவந்த  யதுவும் பதறிக்கொண்டிருந்தாள்..முகத்தில் எவ்வளவு தண்ணீர் தெளித்தும்  உணர்வு வராத வசுந்தராவை, அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்புதான் தெரிந்தது, இது அதிர்ச்சியில் வந்த மயக்கம் என்று…

 மருத்துவரிடம் கலந்தாலோசித்ததில் விஷயம் இதுதான்,” அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஏதோ ஒரு செயல் நடந்து இருக்கிறது.. அதை அவர்கள் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்ததால், மூளைக்கும் மனதிற்கும் ஏற்பட்ட  போராட்டத்தின் அழற்சியே இந்த மயக்கம்” என மருத்துவர் தெளிவாக புரியவைத்தார்..

 வசுந்தராவின் ராஜ்ஜியத்தில் முதல் சறுக்கல்… அதுவும் மிக பலமான அடி!!..   மகனைப் பற்றிய கனவுக் கோட்டை தகர்ந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல், போராடிக்கொண்டிருந்ததன் விளைவு தான், இந்த மயக்கம் என்று  தெளிவாக புரிந்து கொண்டான் ஆதி..

 எப்பொழுது வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என கேட்க, கண் விழித்தவுடன் செல்லலாம் பெரிதாக எதுவும் இல்லை என்று மருத்துவமனையில் தெரிவித்தனர்..

வசுவயும் அழைத்துக்கொண்டு  வீட்டிற்கு வரும்பொழுது ,விடியக்காலை ஆகிவிட்டது. முன்னெச்சரிக்கையாக  , மதுவை ஏற்கனவே அனுப்பிவிட்டான் ஆதி… அங்கு மது, வசுவிற்க்கு என்ன ஆயிற்று என்று ,  தூக்கமில்லாமல் தவித்தாள். 

என்னதான் எதிரியைப் போல பாவித்தாலும்.. நிகழ்ச்சியை கேட்டபின் , பத்மாவிற்கு மனதளவில் சற்று வசுந்தராவை நினைத்து பரிதவித்து, அவள் நன்றாக இருக்கட்டும் என்று பிரார்த்தனை செய்தார்… 

காலையில் குறுஞ்செய்தியாக, சாதாரண மயக்கம் தான் என்று   ஆதியிடமிருந்து தகவல் வந்த பின்புதான் , இருவரும் சற்று நிம்மதி அடைந்தனர்..

தங்கள் திருமணத்தினை ஊர் அறிய எப்படி நடத்துவது??..  என்ன செய்யலாம், எப்படி செய்யலாம்??.. என்று அனைத்தையும் கணக்கு போட்டவன், வசுந்தராவின் அடுத்த நடவடிக்கை என்னவென்று தெரிந்துகொள்வதற்காக காத்திருந்தான்..

 

படுத்திருந்த வசுவோ, எவ்வாறு அவளை மணந்தான்???…என் கணக்கு அனைத்தும் பொய்யாகி விட்டதே… நான் ஒன்று நினைக்க, இவன் விடாக்கண்டன் போல் அவளை திருமணம் செய்துகொண்டு விட்டானே …ஒரு தடுக்க முடியாத செயல் என்னை மீறி நடந்து விட்டதே, என்று ஆற்றாமையுடன் மனதில் கொப்பளித்துக் கொண்டிருந்தாள்…

 

எம் மகன்   எதற்கும் துணிந்தவன் தான்.. ஆனால் இந்த  ஆளை மயக்கும் மோகினியும், அவனுக்கு இந்த விஷயத்தில்  ஒத்துப்போவாள் என்று நினைக்கவில்லை.. இங்கு தான் நான் சரிந்து விட்டேன், அவர்கள் எல்லாம், மானம், மரியாதை, ரோசம், கௌரவம்,  என்று பார்க்கும் கூட்டம் ஆச்சே??…எப்படி இப்படி திருட்டு கல்யாணத்துக்கு சம்மதிச்சா??.. என மண்டையை உடைத்துக் கொண்டார்..

இந்த அளவுக்கு தைரியம் இருக்குதா அந்த சிறுக்கிக்கு??…  சரி கவனிச்சுக்கலாம், இப்ப இதுக செஞ்ச வேலை வெளியில் தெரிவதற்கு முன்னர்,  மூடிமறைக்கவில்லை எனில், என்னோட கௌரவம் கேள்விக்குறியாகிவிடும்…. மத்தவங்க முன்னாடி தலைநிமிர்ந்து என்னால நடக்க முடியாது.. உடனடியாக சரி செய்ய வேண்டும், இல்லன்னா ஆதியையும் கைப்பிடிக்குள் கொண்டுவர முடியாத தூரத்துக்கு போயிடுவான்… என்று பலவிதமாக மனதில் கணக்கு போட்டாள்…..

 எப்படியும் ஊர் அறிய கல்யாணமோ, வரவேற்போ ஏதோ ஒன்னு பண்ணி முதல்ல இங்க கூட்டிட்டு வர வழியை பார்க்கலாம். வந்ததுக்கப்புறம், அவளை ஒரு வழி பண்ணி கேவலப்படுத்தி அனுப்ப வேண்டியதுதான்… அப்புறம் கொஞ்ச நாளில் ஆதி தாடியோடு சுத்தினாலும் ,  அதன்பின் நமக்கு பிடித்த மாதிரி ஒரு பொண்ண பாத்து கட்டி வைக்கலாம்.. என்று தப்பு தப்பா கணக்கு போட்டாள் வசு.. கண்ணை விழித்து, அருகில் இருக்கும் தன் கணவரிடம் அடுத்த கட்ட செயலுக்காக ஆதியை அழைத்துவர சொன்னாள்..

அறையில் அனைவரும் அமர்ந்திருக்க….  முதலில் யார் ,என்ன பேசுவது??.. என்று பல நிமிடங்கள் மௌனமாக கழிந்தது..  ஆதியே முதலில் தொடங்கினான், “எதுக்கு கூபிட்டீங்க”??.

“நீ  எதற்காக இப்படி ஒரு காரியம்  செய்தாய்?? எங்கள்மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா”??..

” உங்களிடம்  நம்பிக்கை இருந்ததால் தான் முதலில் கூறினேன், ஆனால் அதை நீங்கள்தான் காப்பாற்றிக் கொள்ளவில்லை.. ஒரு சிறு துரும்பும் கூட நீங்கள் எனக்காக கிள்ளிப் போடவில்லை….. என் திருமணத்திற்காக, எந்த செயலையும் செய்ய முன்வராமல் எதற்காக மௌனம் காத்துக் கொண்டிருந்தீர்கள்??… வருடக் கணக்கில் காக்க வைப்பதாக உத்தேசமா”??? என்று பதில் கேள்வி கேட்டான் ஆதி..

எரிச்சலடைந்த வசு, “நான் எதையுமே செய்யவில்லை என்று உனக்கு தெரியுமா??. திருமணத்திற்கான நகைகளுக்கு ஆர்டர் கொடுத்திருந்தேன் ,புடவைக்கு சொல்லியிருந்தேன், ஜோசியரை கூட நல்ல நாள் பார்த்து இங்கு வரச் சொல்லி இருந்தேன், நீயாக எப்படி இப்படி நினைத்துக் கொள்ளலாம்”??…

“ஓ அப்படியா சரி, நீங்கள் சொல்லுவது போலவே அனைத்தும் ஏற்பாடு செய்ததாக இருக்கட்டும்.. ஏன் என்னிடம் ஒரு சிறு தகவல் கூட  சொல்லவில்லை”??.. என்று கேள்வி கேட்டவனுக்கு பதில் கூறமுடியாமல் கோபத்தைக் கையிலெடுத்தார் வசு..

” எல்லாவற்றையும் உங்ககிட்ட சொல்லணும்னு அவசியம் இல்லை.. ஏற்பாடு பண்ண சொன்னா அதோடு ஒதுங்கி  நிற்க வேண்டும்.. எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் உன்ன்கிட்ட தகவல் சொல்லி இருப்பேன் ,அதுக்குள்ள நீ அவசரப்பட்டு விட்டாய்., இப்ப என்னை கேள்வி மேல கேள்வி கேட்கிறாய்.. நீ செஞ்ச காரியம் தப்புனு உனக்கு புரியல, ஆனா அதுக்கு நான் தான் காரணம் என்று,  நீ என் மேலேயே குற்றம் சொல்ற??.. இது மட்டும் ஒரு நல்ல பையன் செய்யும் காரியமா”??… என்று கோபமாக கத்தினார்…

“நான் நல்ல பையன் என்று உங்க கிட்ட வந்து சொன்னேனா”??.. என இளக்காரமாக கேட்டான் ஆதி..   

இவள் புள்ளியில் வந்தால், அவன் இணுக்கில் வருகிறான்.. பேசி இவனிடம் ஜெயிக்க முடியாது, என்று தன் பாணியை மாற்றி…” சரி அடுத்து என்ன செய்வதாக உத்தேசம் செய்திருக்கிறாய்” ??..

“நீங்கள் செய்யும் செயலை பொறுத்து எனது முடிவு மாறுபடும்”.. என்று பந்தை அவர் பக்கம் திருப்பினான்..

“இரண்டு நாள் அவகாசம் கொடுக்க முடியுமா”??..

” எதற்கு”??

“உனக்கு  திருமணமும் வரவேற்பும் ஏற்பாடு செய்கிறேன்”!!.. 


“எங்கு ஏற்பாடு செய்கிறீர்கள்”??


” ஏன் இங்கு டெல்லியில் தான்”…


” இல்லை.. திருமணம் நம் குலதெய்வகோவிலில் நடக்க வேண்டும், நம் ஊரிலும் ஒரு வரவேற்பு நடக்க வேண்டும் ,அதன்பின்னர் வேண்டுமானால் இங்கே டெல்லியில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று கட்டளையாக கூறினான்..


 இவன் சொல்வதையெல்லாம் கேட்டு ஆடும்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டோமே, என்று மனதில் நொந்து கொண்டாள் வசுந்தரா… “சரி நீ சொல்லும்படியே செய்கிறேன், இன்று மாலையே எல்லாரும் ஊருக்கு போறதுக்கு ரெடியாகுங்க” என்றபடி அயர்வில் கண்மூடிப்  படுக்கப்போவது போல போக்குக் காட்டினார்…


” உங்களுக்கு கொடுத்த கடைசி  வாய்ப்பினை நீங்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை,  இந்த நிமிடம் வரை, நான் பொறுமையாகத்தான் இருக்கிறேன்.. இப்ப சொன்ன சொல்லிலிருந்து ஏதாவது ஒரு செயல் நடக்காமல் போனாலோ, அல்லது ஏதேனும் மாறினாலோ, நான் மனிதனாக இருக்க மாட்டேன் ஜாக்கிரதை”!!.. என்று அடிக்குரலில் மிரட்டும் தொனியில் சற்று அழுத்தமாக கூறியவன், அடுத்த நிமிடம் கிளம்பி விட்டான்.


 மகன் கூறியதைக் கேட்ட  வேலு,” இப்போது என்ன செய்யப் போகிறாய் வசுந்தரா??.. இரண்டே நாட்கள்தான் உனக்கு இருக்கின்றன”.. என கேட்டார்..


” அது ஒரு பெரிய விஷயம் இல்லை, இங்கு அனைத்து வேலைகளையும் என் தோழி ஆஷாவிடம் கூறிவிட்டால் செய்துவிடுவாள், ஊரில் கோவில் தர்மகர்த்தாவிடம் சொன்னால் அனைத்து ஏற்பாடுகளும் செய்து விடுவர் …பணம் மட்டும் தான் இங்கு பிரதான தேவை ..அது நம்மிடம் ஏராளமாக இருக்கிறது, பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்”.. என்று கர்வமாக கூறி செருக்குடன் கணவனை பார்த்தாள்…   தர்மகர்த்தாவிடம் என்னென்ன கூறவேண்டும் என வேலுவிற்கு கட்டளையிட்டு, தங்குமிடம் முதற்கொண்டு அனைத்தையும் ஏற்பாடு செய்துவிட்டார்.. 


அனைவரும் டெல்லியிலிருந்து கோவைக்கு  பயணப்பட்டனர். விமான நிலையத்திலேயே வந்து, இன்முகம்  கொண்டு வரவேற்றனர் கோவில் நிர்வாகிகள்.. அனைவரும் தங்களது கிராமமான பொம்மணம்பாளையத்திற்கு பயணப்பட்டனர்.. மருதமலை  அடிவாரத்திற்கு மிக அருகில் உள்ளது இந்த கிராமம்.. சுற்றிலும் வயல்வெளிகளும், வழிநெடுகிலும் எங்கும் பசுமையான மரங்களும்,  நெருங்கி இல்லாது ஆங்காங்கு வீடுகளும், வீட்டுடன் கூடிய சிறு சிறு தோட்டங்களும், வெள்ளை உள்ளங்களை கொண்ட மக்களைக் தன்னகத்தே கொண்ட ஊர் அது…. 


குலதெய்வத்திற்கு அருகிலேயே குடியிருப்பு வேண்டும் என்று, இங்கு வந்து தன் பரம்பரையை   வேரூன்றி இருந்தார் இவர்களின் முப்பாட்டனார்….. அப்படியே தலைமுறை தலைமுறையாக , வழித்தோன்றல்களும் அதை உருக்குலைக்காமல் காத்துக்கொண்டு வருகின்றனர்…


பல நாட்கள் கழித்து தன் தாய் மண்ணை மிதித்த உணர்ச்சி மிகுதியில் பத்மா… கண்கள் கலங்க, தன் பிறந்த வீட்டை உணர்வுப்பூர்வமாய் பார்த்தவரது நினைவடுக்குகளில் எந்த இடத்தில் தன்னை இழிவுபடுத்தி,  இந்த ஊரைவிட்டு செல்வதற்கான சூழலை ஏற்படுத்தினார்களோ… அதே வீட்டில் அவர்களே, ஊர் மக்கள், பெரியவர்கள் என அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஆரவாரத்துடனும் மரியாதையாக அழைக்கும் நிகழ்வை ஏற்படுத்தித்  தந்ததை என்னவென்று சொல்வது….


இதற்கு முழு முதற் காரணமான, மகன் போன்ற மருமகனுக்கு!!.. என்ன செய்தால் தகும் என்று, அக்கணம் உவகையுடன் ஆதியை பார்த்தாள்.. எதேச்சையாக பார்த்த ஆதி ,உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்த பத்மாவை புரிந்துகொண்டு, மலர்ந்த புன்னகையுடன்  கண்களை மூடித் திறந்தான்..


மதுவோ ,சிறு குழந்தையில் ஓடித்திரிந்த வீடு, தன் வாழ்வில் பல முக்கிய நிகழ்வுகளை கண்ட வீடு.. தன்  நினைவுகளில் நீங்கா இடம் பெற்ற ஒரு வஸ்து… இன்று அதே இல்லத்திற்கு பேரிளம் பெண்ணாய், மங்கலநாண் சூடிக்கொள்ள  தன்னை முன்பு தூற்றியவர்கள் முன்பு, விருட்சமாய் வளர்ந்துவந்து நிற்கின்றாள்….


 இந்த மாற்றத்திற்கு காரணமானவனை,  கண்களில் காதல் பொங்க பார்த்தாள்.. 

வந்ததிலிருந்து அவளது ஒவ்வொரு முக பாவனைகளையும், தன்னுள் படம் பிடித்துக் கொண்டிருந்தான் ஆதி..  ஆகவே அவளது காதல் பார்வையும் இவனது கனிவு பார்வையும் ஒரே கோட்டில் மோதிக்கொண்டது… 


தன் இரு புருவங்களை ஏற்றி இறக்கி, ஒற்றைக் கண்ணை சிமிட்டி, “கனவுலகத்தில் இருந்து இன்னும் கீழே வரவில்லையா”??.. என்று குறு நகையுடன், தலையை  இடம் வலமாய் ஆட்டியவாறு கேட்டான்.. புன்னகையை மட்டும் பதிலாக சிந்தியவள், வெட்கத்தில் பதிலுருக்க இயலாது உள்ளே சென்று விட்டாள்.. 


ஒவ்வொருவரின் மனநிலையும் அங்கு வெவ்வேறாக இருந்தது..   வசுவிற்கு, எவளை வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டுப் போனோமோ ,அவளையே அதே  இடத்திலேயே திருமணம் செய்து,தன் வீட்டிற்கு அழைத்து கொண்டு போக வேண்டிய கட்டாயம் வந்து விட்டது..  என்பதை அவமானமாக உணர்ந்து அதை வன்மமாக மாற்றிக் கொண்டிருந்தாள்.. 


வேலு தன் பால்ய சினேகிதர்களை பார்த்த சந்தோஷத்தில் அளவளாவிக் கொண்டிருந்தார்.. யதுவிற்கு எல்லாமே  புதியது, இந்த இடம் மிகவும் பிடித்திருக்க இயற்கையை ரசித்தபடி அண்ணியிடம் ஒட்டிக்கொண்டாள்.. பல எண்ணக்கலவைகளின் சங்கமமாக அந்த வீடு சலசலத்துக் கொண்டிருந்தது..

சீதா கல்யாண வைபோகமே… ராமா கல்யாண வைபோகமே… என்று ஊரே மெச்சும் வண்ணம், இந்த இளம் ஜோடிகளின் திருமணம் நிறைவேறியது..


 (எத்தனை தடவை தாண்டா கல்யாணம் பண்ணுவீங்க???… உங்களுக்கு இது கொஞ்சம்கூட ஓவரா தெரியலையா???.. கணக்குப்படி இது மூன்றாவது தடவை!!!! உங்க அட்டூழியத்திற்கு அளவே இல்லையா???  ஆதி லைட்டா முறைச்சிங் மீ பம்மிங்…)


ஆழ்ந்த யோசனையில் வசு… முதலில் தாயையும் மகளையும் பிரிக்கவேண்டும், ஒரே இடத்தில் வைத்து இருப்பது நம்முடைய திட்டத்திற்கு சரிவராது.. என்று நினைத்த வசுந்தரா, பத்மாவை இங்கு கோவையிலேயே இருத்தி வைக்க ஏற்பாடு செய்தார்..


 அதன்படி அவரின் அம்பு வேலு..  சுபநிகழ்ச்சிக்குப்பின், மற்ற உறவினர்கள்  மற்றும் ஊரார் முன்னிலையில், “ஏன் பத்மா இப்போ பொண்ணையும் கட்டிக் கொடுத்தாச்சு, இனி நீ தனியா தானே இருக்க வேண்டும்??  அங்க மொழி தெரியாத ஊரில் அல்லாடனும் …அதுக்கு பேசாம இங்க நம்ம சொந்த வீட்டை பாக்கறதுக்கு ஆள் இல்லாம பூட்டி கிடக்கு , அதுமட்டுமில்லாம   நம்ம நிலத்தை குத்தகைக்கு தான் விட்டு வச்சிருக்கோம் அதையும் பார்த்துக்கொண்டு, இங்கேயே இருக்கலாம் இல்ல ??..எங்களுக்கும் மகிழ்ச்சியா இருக்கும்,   பிறந்து வளர்ந்த ஊரிலேயே நம் மக்களுடன் வாழ்வது உனக்கும் ஒரு பாதுகாப்பாக இருக்கும் என்ன சொல்ற”??


 “ஆமா நியாயமாகத்தான் வேலு சொல்லுது, ஏந்தாயி நீ அங்க போய் ஒண்டியா தான கஷ்டப்படபோற…இத்தனை நாளா பட்டது போதாதா ???..இனி இங்கேயே எங்களோட ஒன்னும்மன்னா  இரேன்” என்று பத்மாவின் சின்னாத்தா பேச, 


ஒவ்வொருவராக தங்களது கருத்துக்களை முன்வைத்த வண்ணம் பத்மாவை அங்கேயே நிறுத்திவைக்க முடிவு செய்துவிட்டனர்… பத்மாவுக்கும் உள்ளுர ஆசைதான்… எங்கு சுற்றினாலும் அவரவர்களுக்கு பிறந்த ஊர் என்றுமே சிறப்பு தான்.. அங்கு வாழ முடியாமல் தானே வெளியேறினார்கள், மீண்டும் அதே ஊரில் மரியாதையுடன் வந்து தங்கச்சொல்லி ஊரே கேட்கும்பொழுது, கிடைக்கும் வாய்ப்பை  விடுவதற்கு மனது வரவில்லை.. மதுவை பார்த்துக்கொள்ள மாப்பிள்ளை இருக்கிறார், அப்பப்போ இங்கே வந்து போகட்டும். என்று மனதில் நினைத்துக்கொண்டு, தானும் இருப்பதற்கு சம்மதித்தார்….


 நீ என்னடா கண்ணு சொல்ற?.. என்று மதுவிடம்  அனைவரும் கேட்டார்கள்


மதுவிற்கும் மகிழ்ச்சியே!!.. தாய் தன்னந்தனியாக வீட்டில் இருப்பது,   ஏதோ ஜெயிலில் அடைத்து வைப்பது போல இருக்கிறது.. என்று அடிக்கடி காதில் விழுந்த வார்த்தைகள் தானே… எனவே தான் பழகிய சுற்றத்தாருடன், இனிமேலாவது மகிழ்ச்சியுடன் இருக்கட்டும் என்று, அவளும் மகிழ்வுடனே தாய்க்கு தன் சம்மதத்தை தெரிவித்தாள்..


ஆதிக்கும் இதில் உடன்பாடு இருந்தது ஏனெனில், இனிமேல் தன் தாய் எப்படி நடந்து கொள்வார் என்று தெரியாது… அவர் செயல் சூழ்நிலைக்கு தக்கவாறு மாறிக்கொண்டிருக்கும் இருக்கும்போது, அருகிலேயே இருந்தால் பத்மாவையும் சேர்த்து சமாளிக்க வேண்டியிருக்கும்.. அதற்கு சற்று தொலைவில் இருந்தால் ,அந்த வேலையாவது மிச்சமாகும் என்று அவனது கணக்கு… எனவே அவனும் சரி என்று தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினான்.. ஒருவழியாக அனைவரின் ஒப்புதலோடு, பத்மாவின்  ஜாகை இப்பொழுது கோவை வசமானது… 


அன்று இரவு அவர்களது  பூர்வீக இல்லத்திலேயே இளம் ஜோடிகளுக்கு சாந்திமுகூர்த்த ஏற்பாடுகள் ஆரம்பமாயின… எந்தவித அலட்டலும் இல்லாமல் இருவரும் இருக்க, இதுதான் படித்த பிள்ளைகளுக்கு அடையாளம்… எவ்வளவு அறிவு முதிர்ச்சியுடன் நடந்துகொள்கிறார்கள் என்று அனைவரும் பெருமை பேசிக் கொண்டிருந்தனர் …


.(இந்த இரண்டு   கள்ளப்பட்சிகளுக்குத்  தானே தெரியும், இவர்களுக்குள் என்ன நடந்தது என்று…  சரியான அமுக்குனிங்க இரண்டுமே… ஒன்னும் தெரியாதது போல  கள்ளாட்டம் ஆடிக்கொண்டிருந்தன.)


ஒருவழியாக  எதிர்பார்த்த அந்த இரவு நேரம் வர, பலவித அறிவுரைகளுடன் கையில் பால் சொம்பு ஏந்தி, மது பதுமையாய் சயன அறைக்குள் நுழைந்தாள்..உள்ளே சென்று கதவை தாளிட்டு ஆதியை  பார்க்க ,அவனும் மதுவை பார்த்து கையை கட்டிக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான் இவளுக்கும் சிரிப்புதான் வந்தது.. 


எவ்வளவு பெரிய விஷயத்தை யாருக்கும் தெரியாமல் நடத்தியிருக்கிறோம், என்கின்ற கள்ளச் சிரிப்பு தான் அது… நல்லவேளை அவசரகதியில் அவன் திருமணத்தை முடித்து விட்டான்… இல்லையெனில் வசுந்தராவின் குணத்திற்கு இழுத்தடித்திருந்தாள்  எனில், ரெண்டு பேரும் வசமாக சிக்கி இருப்பார்கள்… இவர்கள் நல்ல நேரம் சுலபமாக தப்பித்து விட்டார்கள் அதற்குத்தான் இந்த சிரிப்பு……  


“உணவை  வீணடிக்கக்கூடாது மாமா, எனக்கு பாலே புடிக்காது, நீயே எல்லாத்தையும் குடிச்சிடு”.. என்றவாறு தன் அலங்காரங்களை களைய ஆரம்பித்தாள்.. அவனுக்குத் தேவை இப்பொழுது மது மட்டுமே , பால் அல்ல.. 


அதை சற்று ஓரமாக வைத்தவன், அவளை  பின்னிருந்து இறுக்கி அணைத்தபடி, “ஒரு குழந்தைக்கு பிடிச்ச சாக்லேட்டை கண்ணுல காமிச்சு, ஒரு வாய் கடிச்சு சாப்பிட சொல்லிட்டு, அப்புறம் அதை கண்முன்னேயே ஒளித்து வைத்தால்,  அந்த குழந்தைக்கு எப்படி இருக்கும்.??…. 


 அப்படி ஒரு நிலையில் என்னை கொண்ட வந்து நிறுத்தி இருக்கடி நீ…  சும்மா இருந்தவனை உசுப்பேத்தி விட்டு, மூணு நாளா நான் பட்டபாடு இருக்கே, எனக்கு நீ வேணும் வேணும்னு உடம்பில் ஒவ்வொரு அணுவும் துடிக்குது, ஆனா கைக்கெட்டும் தூரத்தில் நீ இருந்தாலும் உன்னை அணைக்க முடியாமல் தவித்தேன்….மனுசனை அநியாயத்துக்கு   சோதனை செய்துவிட்டாயடி…. இதுக்கெல்லாம் சேர்த்து வெச்சு உனக்கு தண்டனை கொடுக்க வேண்டாமா”??.. என்று அவளது செவ்விதழ்களை காதலுடன் ஆட்கொண்டான் செந்தூரன்…..( இதற்கு அப்புறம் என்ன என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள் உங்களிடமே விட்டு விடுகிறேன்).


திருமண அலைச்சல் காரணமாக அனைவரும் மெதுவாக ஏழுமணி வாக்கில்  எழுந்துகொள்ள, இன்னும் புதுமண தம்பதியினர் வெளியே வரவில்லை என்று கிசுகிசுத்துக் கொண்டே, அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்தனர். அவர்கள் அறையில் ஒரு கண்ணும், தன் மொபைலில் ஒரு கண்ணுமாக வசுந்தரா கூடத்தில் அமர்ந்திருந்தாள்.. அனைவருக்கும் காலை தேநீர் வர ஒன்றாக அமர்ந்து அருந்திக் கொண்டிருந்தனர்… 

 

 ட்ராக் பேண்ட்டும் டி-ஷர்ட்டுமாய் ஆதியும் ,சல்வார் கமிஸ் போட்ட மதுவும்  வாசல் வழியாக வியர்வை பூத்த படி வந்தனர்… அனைவரின் அதிர்ச்சி முகமும், ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தபடி பார்த்துக்கொண்டிருந்தது.. யோசனையாய் வசுந்தரா இருவரையும்  பார்த்தார்..


” என்ன எல்லாரும் இப்படி பாக்கறீங்க?”?..    சாவகாசமாக பிரம்பு நாற்காலியில் அமர்ந்தபடி கேட்டான் ஆதி..


” ஏண்டா பேராண்டி, உங்களுக்கு நேற்றுதான் முதல் ராத்திரி, காலைல மெதுவா எந்திரிச்சு வருவீங்கன்னு  பார்த்தா, கோழி கூப்பிடவே எந்திரிச்சு, ஊரை சுத்த்திட்டு வர்றீங்க.. இதுக்கு வேற எப்படி பாப்பாங்க”??… என்று தன் சந்தேகத்தை சின்ன அப்பத்தா  கேட்டார்…


” நான் காலையில எப்பவுமே அஞ்சு மணிக்கு எந்திரிச்சு பழக்கம் ஆத்தா,  எந்திரிச்சு பார்த்த யாருமே எந்திரிக்கல. மது எந்திரிச்சுட்டா, சரி வா நாம்  தோட்டம் வரைக்கும் போகலாம் என்று இருவரும் போய் வந்தோம். இதுக்கு எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி உங்களுக்கு??.. போங்க போய் வேலையை பாருங்க… , மது காபி கொண்டுவா”

 என்றபடி மொபைலை பார்க்க ஆரம்பித்துவிட்டான்..


இவங்க  ரெண்டு பேருக்குள்ளே ஏதாவது நடந்ததா, நடக்கலையா??.. என்று  இப்பொழுது தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் வசுவிற்கு ஏற்பட்டுவிட்டது.. எப்படி கேட்பது??.. நேரடியாக கேட்கலாமா?? அது நல்லா இருக்காது. அந்த அளவுக்கு நாம் யார்கிட்டயுமே    உறவாக பழகவில்லையே ,என்ன செய்யலாம் என்று யோசித்தவுடன் நினைவு வந்தவள் நம்ம டம்மி பீஸ் கனகா… 


உடனேயே கனகாவை அழைத்து, எப்படியாவது விசாரித்துக் கொண்டு வா என்று ஆணையிட.. முதல் தகவல் மதுவிடம் சென்றது.. “அக்கா இப்படி கேட்டுட்டு வர சொல்லி  இருக்காங்க கண்ணு என்ன சொல்றது”??.. என்று பவ்யமாக கேட்டபடி நின்றிருந்தவளை பார்த்தாள் மது..


 “ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க பதில் சொல்றேன்”.. என்றுவிட்டு ஆதி இடம் விஷயத்தைக் கூறினாள்.


” நினைத்தேன் எங்கம்மா இப்படி தான் வருவாங்கன்னு.. சித்தி கிட்ட சொல்லு, நான் போய்  ஜாடைமாடையாக கேட்டேன் அக்கா, இப்படி எல்லாம் வந்து கேட்கிறீர்களே உங்களுக்கு வெட்கமா இல்லையான்னு மது என்னை ரொம்ப திட்டி, போய் உங்க வேலையை பாருங்கன்னு சொல்லிட்டு போயிருச்சு.. என்று  போய் சொல்ல சொல்லு.. என்ன பதில் சொல்றாங்கன்னு வந்து சொல்லட்டும் ,அதுக்கு அப்புறம் பாத்துக்கலாம்”.. என்று ஆதி கூறினான்..


“உங்க அம்மாவுக்கு சர்ப்ரைஸ்சே பிடிக்காது, உனக்கு சர்ப்ரைஸ் வைக்காமல் இருக்க பிடிக்காது.. நல்லா அம்மா பையன் டா சாமி”.. என்று ஆதியை திட்டுவது போல கொஞ்சிவிட்டு, அதை அப்படியே செய்தாள் ஆதியின்  கொஞ்சும் பைங்கிளி…


ஒருவழியாக தில்லியிலும் வரவேற்பு முடித்துக்கொண்டு, தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர்  காதல் தம்பதியினர்.. பத்மாவின் உடைமைகள் அனைத்தையும், பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்சிடம் பொறுப்பைக் கொடுத்து பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்துவிட… எந்த வேலையும் இல்லாமல் ,வீட்டில் பகல் பொழுதை  நெட்டித்தள்ளிக்கொண்டிருந்த மதுவிற்கு, முதல் அதிர்ச்சி வைத்தியம் வசுந்தராவால் வழங்கப்பட்டது..


அம்…மா…… என்ற படி, படியில் உருண்டு வந்து , தலை  கை கால்களில், அடி சிராய்ப்பு என்று, உடலெங்கும் காயங்களுடன், மயங்கிக்கிடந்தாள் மது……..


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *