அடி என் மவுனத் தாரகையே
மௌனம் 17
வீட்டிலிருந்து வெளியே வந்த பின்புதான் இனி நாம் என்ன செய்யப் போகிறோம், எங்கு போகப் போகிறோம்??.. என்ற சிந்தனையே மதுவிற்கு வந்தது.. ஏதோ மந்திரித்து விட்ட கோழி போல நின்றுகொண்டிருந்தாள்..
கிரீச்… என்ற சப்தத்துடன் வேகமாக வந்தகார் அவளருகில் நின்றதும் அனிச்சையாய் விலகியவள், யாரது இப்படி பண்றது என்று பார்க்க ஆதி…..
கல்லைப் போன்ற கடின முகத்துடன் செதுக்கி வைத்த சிலை போல எந்த ஒரு எதிர்வினையும் புரியாமல், கண்கள் மட்டும் லேசர் போல மதுவை துளைத்துக்கொண்டிருந்தது..
வியர்த்து தொப்பலாக நனைந்து விட்டாள் மது….
மறுபக்கக்கதவை திறந்துவிட்டவன் அவளைப்பார்க்க… ஏதும் மொழிகளில் பேசாது பார்வையே அவளை வண்டியில் ஏறுமாறு கட்டளையிட ,ஆடு திருடிய கள்வன் போல திருதிருவென விழித்துக் கொண்டிருந்தவள், அமைதியாய் வந்து ஏறிக்கொண்டாள்..
அடுத்த நிமிடம் வண்டி வேகம் பிடித்தது, அவர்களது இல்லத்திற்கு.. தன் பின்னர் வருகிறாளா இல்லையா என்று கூட திரும்பி பார்க்காமல் , நேராக அவர்களது அறைக்கு சென்றான் ஆதி…
அவன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், ஓட்டமும் நடையுமாக பின்னோடு சென்றாள் மது.. சோபாவில் அமர்ந்து இரு கால்களையும் நீட்டி, இருகைகளையும் தலையணை போல் வைத்துக்கொண்டு, விட்டத்தை வெறித்துப்பார்க்க ஆரம்பித்து விட்டான் ஆதி…
என்ன பேசுவது, எப்படி பேசுவது?? என்று புரியாமல் குழம்பித்தவித்த படி கைகளை பிசைந்து கொண்டு அருகிலேயே மது நின்றுகொண்டிருந்தாள்.. ஒரு பெருமூச்சுடன் கண்களை இறுக மூடி திறந்தவன், நன்றாய் அமர்ந்தபடி மதுவின் முகத்தை பார்க்காமல் எங்கோ பார்த்தபடி,
” உட்கார் ” என்று கூறினான் எதிரிலுள்ள இருக்கையை காட்டி..
விக்கித்துவிட்டாள் மது…
தன் மாமாவா எதிரே அமர சொல்வது??… எப்பொழுதும் என் கைக்குள்ளேயே இரு என்று கொஞ்சியவனா இன்று விலக்கி வைப்பது??.. அவ்வளவுதானா நமது நேசம்??… நீயா என்னை தள்ளி வைக்கிறாய் மாமா??…. என்று மறுகினாள்
(லூசு அவனை விட்டுப் பிரியலாம் என்று முடிவு பண்ணி, லெட்டர் எழுதி வைத்து விட்டு வந்ததெல்லாம் நினைப்பில் இல்லை??.. தள்ளி உட்கார சொன்னது குத்த மாம்……. இவளையெல்லாம் வைத்துக்கொண்டு எப்படி குடித்தனம் பண்ண போறான்னு தெரியல.. பாவமடா ஆதி நீ… .)
அவன் இன்னும் கைநீட்டி கொண்டிருக்க, நைந்த மனதுடன் அவன் காட்டிய இடத்தில் அமர்ந்து அவனையே ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்..
எப்பொழுதுமே ஒரு பொருள் நம்முடையது என்னும் பொழுது அதன் மேல் பெரியதாய் கவனம் இருப்பதில்லை… அதுவே கைவிட்டுப் போகும் நிலை வரும் பொழுது, அதனுடைய மதிப்பு பூதாகரமாக உருவெடுக்கும்… அதே நிலைமை தான் இப்போது மதுவிற்கு!!!… இவள் வேண்டாம் என்று முடிவெடுத்த போது எதுவும் உணரவில்லை… இப்பொழுது அவனது சிறு விலகல் கூட தாங்க முடியாத வேதனையை அளிக்கிறது…
இவள் என்ன மாதிரி டிசைன் என்றே புரியல டா சாமி….
உணர்ச்சி துடைத்த முகத்துடன் இப்பொழுதுதான் ஆதி அவளை நேர்ப்பார்வை பார்த்தான்.. உடனேயே இவள் முகத்தில் பல்பு எரிந்தது!!!….
ஏதோ பல காலம் கழித்து இவனை கண்டதுபோல பிரகாசம் …இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. கொஞ்ச நேரம் முன்னர் செய்ய இருந்த வேலைய பாரு… இப்போ எங்கிட்ட குழைந்து நிற்கிறதை பாரு.. என்று மனதில் அவளை திட்டினான்..
இதுக்கெல்லாம் இப்போது இடம் கொடுத்தேன் என்றால், இது போன்ற எண்ணம் திரும்ப உனக்கு வந்தாலும் வரலாம்.. என்றுமே என்னை பிரிய வேண்டும் என்ற எண்ணம் துளிகூட வரக்கூடாது… அதற்கான செயலை இப்பொழுது செய்யாவிடில் காலம் முழுக்க பிரச்சினைதான்…வலிக்காமல் அறுவைசிகிச்சை செய்ய முடியாதல்லவா??.. என்று நினைத்தவன் அதை செயல்படுத்தினான்..
” உனக்கு ஒரு குறும்படம் வைத்திருக்கிறேன் பார் “..…..என்று மூன்றாவது மனிதரிடம் பேசுவதுபோல கூறி, திரையை ஒளிரச் செய்தான்… இப்போ படம் ரொம்ப முக்கியம் பாரு என்று எரிச்சலுடன் மது டிவியை பார்க்க, அங்கு அரங்கேறியது மதுவின் காணொளி….
ஒவ்வொரு நாளும்… இவள் அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு, சோர்ந்துபோய் சோபாவில் வந்து விழுந்து.. கையை, காலைப்பிடித்து விடுவதும்… இடுப்பை பிடித்து வலியில் முனகியது முதல், அன்று என்னவெல்லாம் மாமியாரிடம் வாங்கி கட்டிக்கொண்டாள் என்பதை சிறுபிள்ளை போல… ஆதியின் நிழல்படம் முன்பு, அரிச்சந்திரினி மாதிரி அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்புவித்து ஆறுதல் தேடியது வரை…. ஒவ்வொரு நாள் நிகழ்வும் தெளிவாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது..
நூறு ரூபாய் மேட்டர்தான் அதில் ஹைலைட்!!!…. அதற்கு வசுந்தரா பேசிய பேச்சுக்கள், இவளின் பதில்கள், என்று அழுதுகொண்டே கூறியிருந்தாள் …கடைசியாய் குழந்தையின்மை பிரச்சினை??….. ஏதோ கல்யாணம் ஆகி பதினைந்து வருடம் ஆகிவிட்டது ,இன்னும் குழந்தை இல்லை… என்று வருத்தப்படுபவள் போல இருந்தது அவளது செயல்…
அனைத்தையும் ஆ…வென்று வாயைப்பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் அதை நிறுத்திய பின்பே புரிந்தது, தான் கையும் களவுமாக பிடிபட்டு இருக்கிறோம் என்று…..
இத்தனையும் சிசிடிவி கேமரா வைத்து ரெக்கார்டு பண்ணி இருக்கான், ஏன் நம்மகிட்ட கேக்கல??…. என்ற கேள்வி உதிக்க நாயகனை பார்த்தாள்..
இவள் தலைக்குள் என்ன ஓடுகிறது என்பது கூடவா தெரியாமல் இருப்பான் அவன்??
“இத்தனை நாளா ரெக்கார்டு பண்ணி இருக்கேன்… அப்போ எனக்கு முன்னாடியே தெரிஞ்சு இருக்குது, ஆனா ஏன் உன்கிட்ட எதுவுமே கேட்கல???.. இந்த கேள்வி உன் மண்டையில வண்டு மாதிரி குடைய வேண்டுமே”??…
“ஆமாம் மாமா”…
“உனக்கு அந்த மாதிரி தோணும் போது எனக்கும் அதே மாதிரி ஒரு கேள்வி தோன்றி இருக்கணுமே” .. அவள் விழித்துக்கொண்டு நிற்பதை பார்த்தவன், “அதை யோசிக்கிற அளவுக்கு உனக்குத்தான் அறிவு இல்லையே”…
“ஏன் நம்ம பொண்டாட்டி எதுவுமே நம்மகிட்ட சொல்லவே மாட்டேங்குறா… அந்த அளவு நான் அவளுக்கு மனதளவில் அந்நியமா”?? என்ற கேள்விதான் அது..
இதைக் கேட்டதும் தூக்கிவாரிப் போட, அதிர்ச்சியாய் ஆதியை நோக்கினாள்..
“இதற்கு உங்கிட்ட ஏதாவது பதில் இருந்துச்சுன்னா தாராளமா நீ சொல்லலாம்”.. என்று கால்மேல்கால் போட்டு இரு கைகளையும் கட்டிக்கொண்டு அவளை வெற்றுப்பார்வை பார்த்துக்கொண்டிருந்தான்….
சற்றே நிமிர்ந்து அமர்ந்தவள்,” நான் சொல்றதை நீ எப்படி எடுத்துக்கப்போறேன்னு எனக்கு தெரியல மாமா, உன்கிட்ட எதையும் மறைக்கக்கூடாது என்று நினைக்கிறவ நான்… அதையும் மீறி நான் ஏதும் சொல்லாம இருந்தேனென்றால்…. அதற்க்கு ஒரே காரணம், நாம எல்லாரும் கூட்டு குடும்பமா வாழனும் என்கிற ஒரு சின்ன நப்பாசை தான்….
சின்ன குழந்தைலையே எனக்கு அப்பா இல்லை.. அம்மா மட்டும் தான், தாத்தா பாட்டியோட ஒன்றாய் இருந்தோம் அதுவும் கொஞ்ச நாள்ல ஒன்னும் இல்லாம போயிடுச்சு… நானும் எங்க அம்மாவும் தன்னந்தனியா அனாதைகளை போல ஒவ்வொரு ஊரா சுற்றினோம்….
எத்தனையோ இழிவான குணத்தோடு சுற்றும் ஆண்கள் கிட்ட இருந்து எங்களை காப்பாற்றுவதற்காக எவ்வளவு பாடுபட்டோம் என்பது எங்களுக்கு மட்டும்தான் தெரியும்….பல இரவுகள் தூங்காமல் விழித்திருப்போம்….
‘கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை இல்லை ஒத்துக்கொள்’.. என்று அந்த காலத்திலேயே பெரியவங்க சொல்லி இருக்காங்க.. அது எந்த அளவு உண்மை என எங்கள் வாழ்க்கையில் உணர்ந்தோம்..
என் அம்மாவுக்கு பிளவுஸ் தைக்க தெரியும்.. அது ஒண்ணுதான்ஊரு ஊரா குடிமாறினாலும் எங்களை காப்பாற்றிய கடவுள்.. எங்கம்மா தைப்பாங்க நான் காஜா போடுவேன்.. வெறியா மாடு மாதிரி உழைத்தார்கள்.. அந்தப் பணத்தை வைத்துத்தான் அனைத்து செலவுகளும் செய்வோம்…எந்தவித உதவியும் இல்லாமல்தனியாக இரு பெண்மணிகள் போராடினோம்..
இந்த கஷ்டம் நாளைக்கு என் சந்ததியில் யாருக்குமே வரக்கூடாது என்று நினைத்தேன் மாமா… அதனாலதான் கூட்டு குடும்பமா இருக்கணும்னு ஆசைப்பட்டேன்.. குடும்பத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் கை கொடுத்து மேலே தூக்கி விடனும், அன்பா அனுசரணையாக விட்டுக் கொடுக்கணும், யாருக்கும் போட்டி பொறாமை இருக்கக்கூடாது, நம் முன்னோர்கள் எல்லாம் அப்படித்தான் இருந்தார்கள்..
அதேசமயம் அனுபவ அறிவு அனைவரையும் வழி நடத்தும்.. அனைத்து உறவுகளின் அன்பும், அரவணைப்பும், கண்டிப்பும் நம் குழந்தைகளை நல்ல குணங்களுடன் வளர்வதற்கு உதவும் மாமா…
எந்த உறவுகளும் இல்லாமல் வாழும் வாழ்க்கை நரகம் மாமா…அதனால் தான் உங்கள் அம்மா என்ன கொடுமை படுத்தினாலும் பொறுத்துக்கொண்டேன்.. அவர்களும் பெண்தானே!!.. நெஞ்சில் ஈரம் இருக்கும் தானே, என்றாவது ஒருநாள் அவர்கள் மனது மாறும் என்று காத்திருந்தேன்….
ஆனால் கடைசியாக அவர்கள் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை மாமா”… என்றவள் , இரு கைகளால் கண்களை மூடி கேவிக் கேவி அழ ஆரம்பித்து விட்டாள்…
அவள் அழுவதை பொறுக்கமுடியாமல் தன் கடினத்தை விட்டுவிட்டு, அவளை இறுக அணைத்து தலையை , முதுகை தடவிக்கொடுத்து ஆறுதல் படுத்தினான் ஆதி…
எதற்கும் அவள் அழுகை நின்றபாடில்லை.. இப்பொழுது அன்பிலிருந்து அதிரடிக்கு மாறி மிரட்டினான், ஒரு பலனும் இல்லை..” சரி என் பேச்சுக்கு மரியாதை இல்லை எனும் பொழுது இனிமேல் நான் இங்கு இருப்பதற்கு அவசியமில்லை” என்று கோபப்படுபவன் போல எழுந்து வெளியே செல்ல முயற்சித்தான்..
நிமிடத்தில் அவளது அழுகை கட்டுக்குள் வந்து” போகாதீங்க மாமா”..என அழுகையோடு கெஞ்சினாள்….
“எதுக்குடி இப்படி அழுது தொலைக்கிறாய், சொல்லிட்டு அழு… என்னன்னு தெரியாம நான் மண்டை பிச்சிக்கிட்டு சுத்துறது தெரியலையா??… என்னை பைத்தியக்காரனாக்க பாக்குறியே”.. என்று எரிந்து விழுந்தான்..
மீண்டும் ஒரு மூச்சு அழுதவள், “நமக்கு திருமணமாகி ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டன… இப்பொழுது வரை எந்த ஒரு புழு பூச்சியும் என் வயிற்றில் வரவில்லை..
திருமணமாகி நான்கே மாதத்தில் வசு கர்ப்பம் அடைந்துவிட்டாள்!!… ஆனால் நான் அப்படி ஒரு மகிழ்ச்சியை உங்களுக்கு தருவதற்கு தகுதி இல்லாமல் போய் விட்டேன்.. இதற்கு என்ன பதில் நான் கூறமுடியும் மாமா”???… என்று கேவலுடன் கூறினாள்..
தலையிலடித்துக் கொண்டான் ஆதி….. “லூசாடி நீ???….. பைத்தியம், பைத்தியம்.. கிறுக்கு புடிச்சி திரிகிறாய் நீ. .., ஏண்டி ஆறு மாசம் எல்லாம் ஒரு கணக்கா டீ?? இதுல உனக்கு குழந்தையே பிறக்காது என முடிவு வேற பண்ணி விட்டாய்…. சபாஷ்!!, சூப்பர்.. கேட்கவே காதுக்கு குளிர்ச்சியா இருக்குது.. பெண்களை கைநீட்டி அடிக்க கூடாதுன்னு சொல்றவன் நான் ,நீ பேச பேச எனக்கு அப்படியே ஓங்கி அறையனும் போல இருக்கு.. நீ எல்லாம் படிச்ச பொண்ணா??… அறிவு இருக்கா இல்லையா உனக்கு??… எங்க அடமானம் வெச்சு தொலச்ச டீ?? வடிகட்டின முட்டாள் மாதிரி பேசுற”… என்று ஒரு பிடி பிடித்து விட்டான்..
“இவளுக்கு குழந்தை பிறக்காது என்று எங்கம்மா சொன்னார்களாம்.. அதை வேதவாக்காக எடுத்துட்டு, யாரும் வேண்டாம் என்று தேசாந்திரம் கிளம்பிட்டாளாம்…. எவ்வளவு நெஞ்சு அழுத்தம் உனக்கு… அப்போ என்னை பற்றியோ, நீ இல்லாமல் நான் எப்படி வாழ்வேன் என்பதை பற்றியோ, நீ நினைக்கக்கூட இல்லை அப்படித்தானே”???…
“அப்படியெல்லாம் இல்லை மாமா” என்று
அழுகையோடு கூறியதை தவிர வேறு எந்த பிரதிபலிப்பும் மதுவிடம் இல்லை..
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபம் எல்லை மீறிவிட்டது ஆதிக்கு… தன் கழுத்து டையை சற்று தளர்த்தியபடி ஜன்னலோரம் நின்று தலையைக்கோதியபடி வெற்றுப்பார்வை பார்த்துக்கொண்டிருந்தான் வான் வெளியை….
அவளது அன்பை பூரணமாக உணர்ந்தவன் அவன்.. அதையும் தாண்டி இப்படி நினைத்தாலெனில் இதை எப்படி புரிந்து கொள்வது???
சிறுபிள்ளைத்தனம் போலிருக்கிறது இவளது செய்கை.. கண்டிப்பாக இது இவளது குணம் அல்ல.. என்ன ஆயிற்று இவளுக்கு??… இதுதான் ஆதியின் பிரதான கேள்வி ..
மனதில் சட்டென்று ஒரு எண்ணம் தோன்ற, தனது நண்பரும் பிரபல மனநல மருத்துவருமான கிஷோர் அவர்களுக்கு அழைத்து உடனடியாக பார்க்க வேண்டுமென்று அனுமதி கேட்க, அவரும் வரச்சொல்ல சரி என்று திரும்பி மதுவை பார்த்த பார்வையில், ஆராய்ச்சியும் கோபமும் மட்டுமே இருந்தது..
“வா போகலாம்” என்று வேறெதுவும் பேசாது வேகநடையில் விரைந்து காருக்கு வர ,அமைதியே உருவாய் அவளும் வர.. இருவரும் மருத்துவர் முன்னிலையில் அரைமணிநேரத்தில் அமர்ந்திருந்தனர்..
தனிப்பட்ட முறையில் மதுவிடம் இரண்டு மணி நேரம் பேசியவர், அவளை வெளியே இருக்கச் சொல்லிவிட்டு ஆதியை அழைத்து பேசினார்.
சுருங்கக்கூறின் ,மதுவிற்கு மன அழுத்தம் அதிகமாகி விட்டது.. அவர் தாய் கொடுத்த கொடுமைகளின் விளைவால் ஏற்பட்ட காயங்களின் ஆழ்மனதின் பிரதிபலிப்பு இது… இன்ன காரணம் என்று வரையறுக்க முடியாமல் சிறிதுசிறிதாக வளர்ந்த மனஅழுத்தம் இப்பொழுது ஏதோ ஒரு விஷயத்தில் ஒன்று கூடி விட்டது அது குழந்தை ரூபம் அவ்வளவுதான்….
“மதுவிற்கு தேவை மன அமைதியும் இயற்கையான சூழலும்… சிறிது நாட்கள் இடம்மாறி பாருங்கள்.. தானாகச்சரியாகி விடுவார்கள்.. அவர்களுக்கு தேவை மன அமைதி மட்டுமே, வேறு எதுவும் இல்லை”.. என்று தெளிவாக எடுத்துரைத்தார்..
தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான் ஆதி…. ஒருவழியாக மீண்டும் தங்கள் வீட்டிற்கு வந்தவர்களிடம் பேரமைதி…
என்ன ஆயிற்று இவளுக்கு??.. ஏன் இப்படி மன அமைதி இல்லாமல் தவிக்கிறாள்… எந்த இடத்தில் இவளை கவனிக்க தவறிவிட்டேன்??…
என் அம்மாவை கையும் களவுமாக பிடித்து, வகையாக கேள்வி கேட்க வேண்டும் என்று காத்திருந்தேன்.. கண்முன்னே இவள் கஷ்டப்படுவதை பார்த்தாலும், கையை கட்டிக்கொண்டு சும்மா இருக்க வேண்டிய சூழலை இவள்தானே ஏற்படுத்தினாள்..
இவள் வாயைத் திறந்து சொன்னால் தானே நான் கேள்வி கேட்க முடியும்… அவளே ஏதும் பேசாமல் இருக்கிறாள், நீ எதுக்குடா குதிக்கிறாய் என்று ஒரு கேள்வி என் அம்மா கேட்டால்??? அதற்கு என்னால பதில் சொல்ல முடியுமா???
என்னை மூணாவது மனுஷன் போல இந்த விஷயத்தில் ஒதுக்கி வைத்தாளே இவள்… நியாயமா இதுக்கு நான்தான் கோபப்பட வேண்டும்… லூசு அதுக்கு ஒரு வீணாப்போன விளக்கம் வேற சொல்லுது…. கடவுளே நான் எங்க போய் முட்டிக்கொள்வது….. என்று தலையை தேய்த்துக் கொண்டான்..
தலைவலி பிடுங்கி எடுத்தது… இடையில் வசுந்தராவின் பல மிஸ்டுகால்கள் இருவருக்குமே….மதுவின் போன் ஆதியின் வசம் இருந்தது… அதனால் யாரிடமும் வசுந்தராவால் பேச முடியவில்லை..
இறுதியில் ஒரு முடிவுடன், கீழே சென்று மதுவிற்கு பாலெடுத்து வந்தவன் குடிக்கச் சொல்லி,” இன்று இங்கேயே இருக்கலாம் மேற்கொண்டு என்ன செய்வது என்று நாளை முடிவெடுக்கலாம்.. அமைதியாக தூங்கு”… என்றபடி தன் லேப்டாப்பில் வேலை செய்ய ஆரம்பித்து விட்டான்..
“மாமா என் மேல கோபமா”??….
எப்ப கேக்குரா பார்… அறிவுக்கொழுந்து போ!!.. என்று நினைத்தவன் “என்ன சொல்ல வருகிறாயோ அதை மட்டும் சொல்லு …தேவையில்லாத கேள்வி கேட்காதே”.. என்று கோபமாக பேசினான்.
” ஒரு கொஞ்ச நேரம் உங்க மடியில் படுத்துக்கட்டுமா”?? என்று ஒரு குழந்தையை போல கெஞ்சியவளை ஒதுக்க முடியாமல், கோப போர்வையை கைவிட்டு இருகை நீட்டி அரவணைத்துக்கொண்டான்…
“நான் செய்ய நினைத்தது தப்பு தான் மாமா… உணர்ச்சி மிகுதியில் தப்பு தப்பா நினைத்துவிட்டேன்.. மன்னிக்க மாட்டீர்களா” ??….என்று கண்களில் கண்ணீரும், முகத்தில் ஏக்கமுமாய் வினவினாள்..
அவளின் இந்த மன்றாடலை தாங்கமுடியாத ஆதி, தன்னுடன் இறுக அணைத்து இதழோடு இதழ் பதித்தான்.. இருவருக்குமே இப்பொழுது இது தேவையாகத்தான் இருந்தது..
அனைத்தும் மறந்து இருவரும் முத்தத்தில் ஒன்றினர்…..
உயிர் முத்தம் இது…
இதில் காதலும் இல்லை… காமமும் இல்லை… பெருத்த ஆறுதல் இருந்தது.. மெல்ல மெல்ல உணர்வுகள் தூண்ட மென்மையாய் ஆரம்பித்த செயல் முத்தச்சண்டையாக மாறியது.
இதுவரை தன் கோபத்தை பெரிதும் காட்டாமல் பொறுமையைக் கடைபிடித்து கொண்டிருந்தவன், இப்பொழுது இந்தச்சண்டையில் அதை கட்டினான்..
அவன் கடித்து இழுத்த அவளது உதடுகள் ஆங்காங்கு சிகப்பு பூக்களை சிந்தின… மலர்ந்து விகசித்து இந்த வன்மையை அவளும் ரசித்தாள்…. இவனது தடித்த மீசை முடிகள் கூட அவளது பூனை மீசை முடிகளோடு மல்லுக்கட்டின…. மேலும் முன்னேற வேண்டும் என்று துடித்த அவனது ஆண்மையை உணர்ந்து இவளும் வளைந்து கொடுக்க, சட்டென விலகினான் ஆதி…
“ஏண்டி என்னைவிட்டு போக துணிந்தாய்”?? என்று முரடனாய் அவள் அதரங்களை நாடினான் …”இனிமேல் அந்த எண்ணம் துளி கூட உன் மனதில் வரக்கூடாது”… என்றபடி அவளது உடைகளை ஆங்காங்கு கிழித்தபடி களைந்தான்.. “இனி அப்படி நினைத்தால்”…. என்றவன் அவளது ஆடயில்லா மேனியில்… வெயில் படாத இடங்களில் எல்லாம் வலிக்க கடித்தான்.. வலியில் அவள் துடித்தாலும்.. கண்டுகொள்ளாமல் ,” நான் அடுத்த நிமிடம் உயிரோடு இருக்க மாட்டேன்” என்றதும், மது கண் கலங்க அவனது பேச்சை தடுக்க முயல, சொன்ன நிமிடம் ஜொலித்த அவனது கண்களும்.. முகமும்.. சொன்னதை செய்வேன் என்ற உறுதி செய்து, அவளை ஏதும் பேச விடாமல் நொடியில் அவளது கன்றிய இதழ்களை சிறை செய்து தன் முழு கோவத்தினையும் தன் வேகத்தில் காட்டினான்.. அலறக்கூட முடியாமல் அவன் வேகத்தில் அரை மயக்கத்திற்கு சென்றாள் மது..
அனைத்தும் முடிந்த பின்பு, எதுவும் பேசாமல் தன்னை சுத்தம் செய்து வந்தவன், மதுவின் நெற்றியில் முத்தமிட்டு “நீயும் குளித்துவிட்டு தூங்கு.. எனக்கு சிறிய வேலை இருக்கிறது முடித்து விட்டு வருகிறன்”.. என்றபடி அவளின் பதிலுக்காக காத்திருக்காது விரைந்து சென்று விட்டான்…
அவன் வேகத்தை கண்டு அஞ்சியவள், இப்படி கோவத்தை காட்டினால் எப்படி?? தாங்க முடியவில்லையே…அவனை எவ்வாறு சமாதானப்படுத்துவது???… என்று மலைத்த படி, குளித்து உடை மாற்றி யோசித்த வண்ணமே உறங்கிவிட்டாள்..
காலையில் கண்விழித்த மதுவோ ஆதியின் வீட்டில் இல்லை …. என்ன இது நான் எப்படி இங்கே இருக்கேன்!!… என்று ஆச்சரியத்தில் சுற்றுமுற்றும் பார்த்தபடி அறையிலிருந்து வெளியே வந்தாள்… “மகாராணி தூங்கி எந்திரிச்சாச்சா??… போய் பல்லு விளக்கிட்டு வா காபி குடிக்கலாம்”.. என்ற அதட்டலில் மலர்ந்தவள், ஓடிச்சென்று இறுகக் கட்டிக்கொண்டாள் கண்களில் மீண்டும் அணை திறந்து விட்டது….
