1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!
இளங்காலைப் பொழுதினில் சேவல் கொக்கரக்கோவென்று கூவியது. இறைதேடி பறவைகள் இறக்கை விரித்து சிறகடித்து பறக்கத் தொடங்கியது. வண்டு இனங்கள் எல்லாம் பூவை தேடி ரீங்காரமாய் தேன் எடுக்க புறப்பட்டது. குயிலினங்கள் இசைக் கச்சேரி நடத்த வட்டக் கதிரவன் முகம் மலர்ந்தான். எங்கும் வெண்மையாய் படர்ந்திருந்த மார்கழிப் பனி விலகி சூரியனின் கதிர் பட்டு தாமரை மொட்டு மெல்ல மலர விடிந்தது அதிகாலை பொழுது புலர்ந்து அந்த பெரிய பங்களாவின் ஜன்னலின் வழியே ஒளிகதிர் திரசாசனம் செய்யும் சர்வேஷின் முகத்தின் மீது பட உறக்கத்திலிருந்தவன் கண்களை மெல்லத் திறந்தான். 
தன் நெஞ்சில் படுத்துக்கொண்டிருக்கும்  ஆறு வயதான குழந்தை ஆரவ் இதழ் விரித்துக் கொண்டு உறங்குவதைப் பார்த்தான். இறுக்கமாக இருக்கும் அவனது இதழ் விரித்து புன்னகைத்துக் கொண்டவன் காற்றில் ஆடும் ஆரவ்வின் முடியை விரலால் ஒதுக்கிவிட்டு அவனது நெற்றியில் முத்தமிட்டான். 
ஆரவ் இரவு தன் தாத்தா சதாசிவம் உடன் உறங்குபவன் விடிந்து பார்த்தால் சர்வேஷின் மார்பில்தான் படுத்திருப்பான். இது அன்றாட அவனின் வழக்கம். ஆரவ்வின்  தூக்கம் கலையாதவாறு படுக்கையில் படுக்க வைத்து உடற்பயிற்சி செய்ய எழுந்தான்.
ஆரவ்வோ ஆழ்ந்த உறக்கத்திலும் “டாடி என் கூடவே படுத்துக்கோ” என்று சிணுங்கி சர்வேஷின் கழுத்தில் கைப்போட்டுக்கொண்டான். 
“இருக்கேன்டா செல்லம்” என்றவனோ அவனது கையை மெதுவாக தன் கழுத்திலிருந்து எடுத்து பக்கமிருந்த தலையணை மீது வைத்து தட்டிக்கொடுத்தான். 
ஆரவ் உறங்கியதும் புரண்டு விழாமல் இருக்க தலையணையை அடுக்கி வைத்து விட்டு உடற்பயிற்சி அறைக்குள் சென்றான். 
சர்வேஷ் உடற்பயிற்சி அறையிலிருந்தவாறே கேமராவின் வழியே உறங்கும் ஆரவ்வை பார்த்துக்கொண்டான். அவனுக்கு உடற்பயிற்சியும் தியானமும் அவனது அன்றாட வழக்கம். இரவு 12 மணிக்கு வந்து படுத்தாலும் சூரியனுக்கு முன்பே எழும் பழக்கம் உள்ளவன் நம் கதையின் நாயகன் சர்வேஷ். அவன் வயது 34. ஆனால் 27 வயதான தோற்றத்தை கொண்டவனாகத்தான் தெரியும். உடம்பை ஃபிட்டாக வைத்திருப்பான்.
சிரசானத்திலிருந்து காலை மடக்கி தரையை நோக்கி வந்து கால் பாதங்களில் கை முட்டியை அழுத்தி தலையை உயர்த்தி எழுந்து மண்டியிட்டு உட்கார்ந்தவன் சவானத்தில் படுத்துக்கொண்டான். ஐந்து நிமிடம் படுத்திருந்தவன் எழுந்து டவலை எடுத்து வியர்த்திருந்த முகத்தை துடைத்து விட்டு கேமராவில் கட்டிலில் படுத்து உறங்கிக்கொண்டிருக்கும் பாலகன் ஆரவ்வின் மீது பார்வையை பதித்தவன் அவன் உறங்குவதை உறுதிப்படுத்திவிட்டு குளித்துவிட்டு வெளியே டவலோடு வந்தவன் தலை முடியை ஜெல் போட்டு அடக்கி டீசர்ட் ட்ராக்பேண்ட் போட்டு மணியை பார்த்தான் ஆறாகியிருந்தது.
ஆரவ்விற்கு தூக்கம் கலைந்திருந்தது. ஸ்கூல் போகணுமே என்று புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். அவனது செயலை கண்டு குறுநகை பூண்ட சர்வேஷ் அவனருகே சென்று அவன் மீது போர்த்தியிருந்த போர்வையை எடுத்துவிட்டு “மை ஸ்வீட் பாய் நீங்க தூங்கலைனு டாடிக்கு தெரியும் எழும்புங்க” என்று அவனது கன்னத்தில் தன் மீசையை கொண்டு உரசி கூச செய்தான்.
குட்டி வாண்டுக்கோ தந்தையின் மீசை குறுகுறுப்பு சிரிப்பை மூட்டியது. தன் குட்டி இமைகளை மெல்ல திறந்து கண்ணைக் கசக்கிக்கொண்டு “குட்மார்னிங் டாடி எனக்கு இன்னிக்கு ஸ்கூல் லீவ் நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன்” என்று போர்வையை போர்த்திக்கொண்டு போர்வைக்குள் கோலிக்குண்டு கண்களை உருட்டி முழித்துக்கொண்டு சிரித்துக்கொண்டது.
“டேய் பிராடு பயலே எழும்புடா. இன்னிக்கு ஸ்கூல் லீவுனு யாருடா சொன்னாங்க உனக்கு?” என்று அவன் மீதிருந்த போர்வையை எடுத்து குண்டுக்கட்டாக ஆரவ்வை தூக்கிக்கொண்டு குளியலறைக்குள் சென்றவன் இறக்கிவிட்டு பிரஷ் பண்ணிவிட்டு அவனது சட்டையை கழட்ட பட்டனில் கையை வைத்தான்.
“நோ டாடி நான் ஸ்கூல்க்கு போகல. மேக்ஸ் ரீட்டா மிஸ் என்னைய திட்டிட்டாங்க” என இதழ் பிதுக்கினான் ஆரவ்.
புருவம் சுருக்கிய சர்வேஷ் “என் மகனை   மிரட்டினாங்களா யாருடா அந்த மிஸ். அவங்களை என்கிட்ட யாருனு அடையாளம் காட்டு நான் ஸ்கூலுக்கு வந்து கேட்குறேன்” என்று பேச்சுக் கொடுத்துக கொண்டே ஆரவ்வின் சட்டையை கழட்டி வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றிக்குளிக்க வைத்து டவலோடு சேர்த்து தூக்கிக்கொண்டு வந்தான். 
ஆரவ்வை  குழந்தையிலிருந்து குளிக்க வைப்பது சர்வேஷ்தான் வேலை விசயமாக வெளிநாடுச் சென்றுவிட்டால் ஆரவ்வை குளிக்க வைக்க வீட்டில் உள்ளவருக்கு தண்ணி காட்டுவான் ஆரவ். 
சர்வேஷ் அதிகம் வெளிநாடுச் செல்ல மாட்டான் அவனது தொழில் சமையல் காண்ட்ராக்ட். மகாலட்சுமி சமையல் காண்ட்ராக்ட் தன் தாயின் பெயரில் தொடங்கிய பிஸ்னஸ் இன்று பல குடும்பங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறான் சர்வேஷ். தொழிலில் நேர்மையானவன். பொய் பேசுவது அவனுக்கு பிடிக்காது. பொய் பேசுவது தெரிந்தால் அந்த நொடியே அவர்களை வேலையை விட்டு தூக்கிவிடும் கருப்பழகன் ஆறடி ஆண்மகன் அவன். டீரிம் செய்த தாடியும் மீசையும் கருப்பழகு கண்ணனாய் மின்னுபவன் சர்வேஷ். 
ஆரவ்வை புறப்பட வைத்துக்கொண்டிருந்தான். வீட்டில் வேலை செய்யும் சுப்பையா கையில் பாலுடன் வந்தவர் சர்வாவின் அறைக்கு வெளியே நின்று “சார் தம்பிக்கு பால் கொண்டு வந்திருக்கேன்” என கதவை தட்டினார்.
“வாங்க சுப்பையா” என்றான் கணீர் குரலில் சர்வா.
அறைக்குள் வந்த சுப்பையா புறப்பட்டு நின்ற ஆரவ்வை பார்த்து “அடடே குட்டி சார் புறப்பட்டாச்சா! பால் குடிச்சிட்டு கீழ வாங்க. உங்களுக்கு பிடிச்ச பூரி உருளை கிழங்கு மசால் செஞ்சு வச்சிருக்கேன் சாப்பிடலாம்” என்று பாசமாய் பேசியவர் அவனது உயரத்திற்கு குனிந்து பாலை நீட்டினார்.
சர்வாவோ “சுப்பையா நீங்க போய் டிபன் எடுத்து வைங்க! ஆரவ்வை பால் குடிக்க வைச்சு கூட்டிட்டு வரேன்” என்றவன் “சித்தப்பா கோவிலுக்கு போய்ட்டு வந்துட்டாரா?” என்று கேட்டுக்கொண்டே டேபிளில் வைத்திருந்த பாலை கையில் எடுத்தான்.
“இன்னும் அவர் வரலைங்க தம்பி சார்” என்று கிளம்பி விட்டார்.
கீழே பூரி ரெடியா இருக்கு என்று தெரிந்தவுடன் “டாடி எனக்கு பால் வேணாம்” என்று கண்ணைச் சுருக்கினான் ஆரவ்.
“நோ! பால் குடிக்கணும் அப்பத்தான் நீங்க அப்பாவை போல பிக் பாயா ஆக முடியும்” என்று கண்ணைச் சிமிட்டி அவனுக்கு பாலை புகட்டினான். ஆரவ்விடம் எப்படி பேசினால் அவனை வளைக்க முடியும் என்று தெரிந்து வைத்திருக்கும் மந்திரக்காரன் சர்வா.
பாலை குடித்து விட்டு அவனது ஆம்சை தொட்டுக்காட்டி “டாடி இதோ உங்க குண்டு கை மாதிரி எனக்கு வருமா?” என்று கண்ணை உருட்டிக்கேட்டான்.
“ம்ம் நீ பெரியவன் ஆனதும் என்னை போல ஆம்ஸ் வரும்” என்று அவனது கன்னக்குழி தெரிய சிரித்தான். 
“டாடி நீ என்கிட்ட மட்டும் சிரிச்சு பேசுற. ஆனா வெளியே போனதும் எல்லார்கிட்டயும் கோபமா பேசுறியே! ஏன்?” என்று தாடையில் கையை வைத்து கேட்டது அழகாய் தன் மழலை மொழியில்.
“ஆரவ் ஸ்கூல்க்கு டைம் ஆச்சு வா” என்று குழந்தை கேட்ட கேள்விக்கு பதில் பேசாது ஆரவ்வை தூக்கிக்கொண்டு கீழேச் சென்றவன் ஹாலில் உட்கார்ந்து ஆரவ்வின் டைரியை எடுத்து சைன் பண்ணியவன் டைரியில் அப்பாவை கூட்டிட்டு வரவும் என்று எழுதியிருந்ததை படித்து விட்டு ஆரவ்வை பார்க்க அவனோ டைனிங் டேபிளுக்கு ஓடிச்சென்றுவிட்டான். அங்கே நின்றால் தந்தையிடம் திட்டு வாங்க வேண்டுமே என்று எச்சரிக்கையாய் ஓடிவிட்டான் ஆரவ்.
டைரியில் சைன் போட்டு விட்டு டைரியை ஆரவ்வின் ஸ்கூல் பேக்கில் வைத்து விட்டு நிமிர்ந்தான். அங்கே நெற்றியில் திருநீறு பட்டையோடு நின்றிருந்தார் சர்வேஷின் சித்தப்பா சதாசிவம்.
அவர் தன்னிடம் என்ன பேசப்போகிறார் என்பதை தெரிந்துக் கொண்ட சர்வாவோ “கோவிலுக்கு போயிட்டு வந்தாச்சா சித்தப்பா? வாங்க சாப்பிடலாம்” என்று பேசிக்கொண்டேச் சென்றான்.
“சர்வா ஒரு நிமிசம் நில்லு ப்பா” என்றவர் அவன் முன்னே போய் நின்று “உனக்கு ஒரு ஜாதகம் பொருந்தி வந்திருக்கு கோவில் குருக்களுக்கு தெரிந்த பொண்ணாம் நாளைக்கே பொண்ணு பார்க்க வரச்சொல்லியிருக்காங்கப்பா. நான் உன்கிட்ட ஒரு வார்த்தை கலந்து பேசிட்டு சொல்றேன்னு சொல்லியிருக்கேன்” என்று அவனது பதிலுக்காய் காத்திருந்தார் சதாசிவம்.
“என் கண்டிஷனுக்கு பொண்ணு வீட்டுக்காரவங்க சம்மதிச்சாங்கனா எனக்கு கல்யாணத்துக்கு ஓ.கேதான்” என்று தோளை குலுக்கிக்கொண்டுச் சென்றான் சர்வா.
“ஆமா நீ போடுற கண்டிஷனுக்கு எந்த தகப்பனும் பொண்ணுத் தர மாட்டாங்கடா” என்று புலம்பிக்கொண்டேச் சென்றார் சதாசிவம். 
சர்வா போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா? யாருமே ஒப்புக்கொள்ளாத கண்டிஷன் போட்டிருந்தான். தன்னை கல்யாணம் பண்ணும் பெண் குழந்தை பெறக்கூடாது என்று எந்த தகப்பனும் ஏற்றுக்கொள்ளாத கண்டிஷனை போட்டிருந்தான். அப்படியே பெண் கிடைத்தாலும் சர்வா ஏதாவது சாக்கு போக்கு சொல்லி கல்யாணத்தை நிறுத்திவிடுவான். 
இப்போது சர்வாவிற்கு வயதும் 34 வயது ஆகிவிட்டது. “இனி எங்க போய் உனக்கு பொண்ணு தேடுவேன்டா. எங்கண்ணா சாகும் போது என் பசங்கள உன் பசங்களா பர்த்துக்கணும்னு சத்தியம் வாங்கிட்டு அவரு நிம்மதியா போய் சேர்ந்துட்டாரு இப்போ நான்தான் கஷ்டப்படுறேன்” என்று முணுமுணுத்துக்கொண்டு டேபிளில் சாப்பிட அமர்ந்தார். 
சதாசிவம் முணுமுணுப்பது சர்வாவின் காதில் விழுந்தாழும் சட்டை செய்யாது ஆரவ்விற்கு பூரியை ஊட்ட ஆரம்பித்தான். குழந்தைக்கு தாய் வேண்டியதில்லை தந்தையே போதும் என்றிருந்தான் சர்வா. 
ஆனால் சதாசிவமோ அவனுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைத்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பொண்ணு பார்த்துக்கொண்டேயிருக்கிறார் ஆறு வருடமாக. 
சர்வாவோ சித்தப்பாவின் மனதை நோகடிக்க கூடாதென கல்யாணத்திற்கு நொண்டிக்காரணம் சொல்லி வரும் வரன்களை எல்லாம் தட்டிக்கழித்துக்கொண்டிருந்தான். 
“ஆஆ ஸ்ஸ் டாடி குழம்பு காரம் தண்ணி வேணும்” நாக்கை நீட்டினான் ஆரவ்.
சர்வா ஒருவாய் சாப்பிட்டு பார்க்க கொஞ்சம் காரம் அதிகமாக இருந்தது.
“சுப்பையா இங்க வாங்க” என்று பெருங்குரலெடுத்து கூப்பிட்டான்.
சுப்பையாவோ அவன் குரலில் பயந்து “தம்பி சார்” என்று சர்வாவின் முன்னே கையை கட்டிக்கொண்டு நின்றார்.
“எத்தனை முறை சொல்லியிருக்கேன் குழம்பு காரமா வைக்காதீங்கனு இவ்ளோ காரம் போட்டா குழந்தை எப்படி சாப்பிடுவான். நாளையிலிருந்து குழம்பு காரமா இருந்துச்சுனா. அடுத்தநாள் உங்களுக்கு கிச்சன்ல வேலை கிடையாது. வேற ஏதாவது வேலை செய்யுங்க” என்று கார சாரமாக திட்ட ஆரம்பித்துவிட்டான் சர்வா.
ஆரவ்வோ தன்னால் தான் சுப்பையா திட்டு வாங்குகிறார் என்று வருத்தப்பட்டு சுப்பையாவை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தவனோ “டாடி சுப்பபையா தாத்தாவை திட்டாதீங்க. இன்னிக்கு நான் பூரிக்கு சர்க்கரை தொட்டு சாப்பிடுறேன்” என்றான் ஆரவ்.
“இனிப்பு சாப்பிடக்கூடாது ஆரவ். ஒன் மினிட் இரு வரேன்” என்றவன் சமையலறைக்குள் நுழைந்து பெரிய வெங்காயம் ஒன்றை எடுத்து கட் செய்து அடுப்பை பற்ற வைத்தவன் காரம் இல்லாமல் குருமா வைத்து தட்டில் ஊற்றி எடுத்துச் சென்று ஆரவ்விற்கு ஊட்டியவன் “இப்போ காரமா இருக்கா?” என்றான் மென்சிரிப்புடன்.
“இல்லை” என்று கண்ணைச்சிமிட்டினான் ஆரவ். 
“இதுக்குதான் சர்வா உன்னை கல்யாணம் பண்ணச்சொல்லுறேன்” என்றார் சதாசிவம். 
சர்வாவோ சதாசிவத்தை ஒரு பார்வை பார்த்தவன் திரும்பி விட்டான். 
சதாசிவம் அவன் பார்வையில் அமைதியாகி விட்டார்.
வெங்கடேசன், மகாலஷ்மி  பரம்பரை பணக்காரர்கள் கிடையாது. வெங்கடேசன் கல்யாண வீடுகளுக்கு சமையல் செய்துக் கொடுத்து நாளடையில் மகாலஷ்மி கேட்டரிங் சர்வீஸ் ஆரம்பித்திருந்தார். அரசியல் வட்டார பெரும்புள்ளிகளின் விசேஷத்திற்கு சமையல் செய்துக் கொடுத்தார். அவர்களது சமையல் மக்களுக்கு பிடித்து போக வெங்கடேசனுக்கு பெரிய அளவில் சமையல் பிஸ்னஸ் வளர்ந்து விட்டது. 
வெங்கடேசன் தம்பதியருக்கு சர்வா பிறந்து 10 வருடம் கழித்து அஞ்சலி பிறந்தாள். சதாசிவம் அண்ணனுக்கு பிஸ்னஸில் உதவியாக இருந்தார். நன்றாக தொழில் வளர்ந்துக் கொண்டிருந்த சமயம் யார் கொள்ளிக்கண் பட்டதோ கல்யாண மண்டபத்தில் சமையல் வேலைகளை கவனிக்கச் சென்ற வெங்கடேசனும் மகாலஷ்மியும் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்தில் இந்த உலகத்தை விட்டுச் சென்றுவிட்டனர். 
வெங்கடேசன் மூச்சை நிறுத்தும் முன்பு சதாசிவத்திடம் “என் பசங்களை பார்த்துக்கோ சதா”  என்று சொல்லியவர் மூச்சு நின்று விட்டது. அப்போது சர்வாவிற்கு வயது 15. அஞ்சலி சிறு பெண். சதாசிவம் கல்யாணம் செய்துக் கொண்டால் அண்ணன் குழந்தைகளை பார்க்க முடியாதென கல்யாணம் செய்துக் கொள்ளாமலே இருந்து விட்டார். நாற்பதைந்து வயதாகியும் கல்யாணம் செய்யாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.
சர்வா சதாசிவம் என்ன திட்டி பேசினாலும் அவரிடம் மட்டும் கோபமாக பேசமாட்டான். தன் குடும்பத்துக்காக அவரது வாழ்க்கையை தியாகம் செய்தவரை எதிர்த்து நின்று பேச அவன் மனம் இடம் கொடுக்கவில்லை.
அஞ்சலி இப்போது காலேஜில் லெக்சரராக வோர்க் பண்ணிக்கொண்டிருக்கிறாள்.
“ஹாய் சித்தப்பா குட்மார்னிங், குட்மார்னிங் அண்ணா, குட்மார்னிங் குட்டி வாண்டு” என்று சாப்பிட அமர்ந்தாள் அஞ்சலி. 
2. தீரா திரவியமே! சுடரொளியே!
தாய் மஹாலஷ்மியை போல நல்ல சிவந்த நிறம் கொண்ட ஐந்தரை அடி அழகு பெண் அவள்.
“குட்மார்னிங் ஆன்ட்டி” என்று கன்னத்தில் குழி விழச் சிரித்த ஆரவ்வோ “என்ன ஆன்ட்டி இன்னிக்கு ரொம்ப ஓவர் மேக்கப்பா இருக்கு?” என்று சாப்பாட்டை அதக்கிக்கொண்டே கேட்டான். 
அஞ்சலியோ “உன் பையன் என்னை எப்படியெல்லாம் கேள்வி கேட்குறான் பாரு” என்று சர்வாவை  பார்த்தாள்.
“குட்டி கேட்குறான்ல பதில் சொல்லு அஞ்சுமா” என்றான் இதழ்கடை சிரிப்போடு. அண்ணன் சிரிப்பதே அத்தி பூத்தாற் போலத்தான் என்று பெரும்மூச்சு விட்ட அஞ்சலியோ “இன்னிக்கு எங்க காலேஜ்ல டிபார்ட்மெண்ட் ஃபங்ஷன் இருக்குடா தங்கம். அதான் புது சேரி கொஞ்சமா மேக்கப் போட்டிருக்கேன்” என்று சிரித்தாள்.
“ஓஓ!” என்று தலையாட்டியது அந்த சின்ன வாண்டு.
சர்வா ஆரவ்விற்கு ஊட்டி முடித்து வாயை துடைத்து விட்டு தானும் பூரியை சாப்பிட்டு முடித்தவன் ஆரவ்வை தூக்கிக்கொண்டு போனவன் சோபாவில் உட்கார வைத்து டிவியை ஆன் செய்து போகோ சேனலை  போட்டு “டாடி ரெடியாகி வந்துடறேன் வெயிட் பண்ணு ராஜா” என்று ஆரவ்வின் நெற்றியில் முத்தமிட்டுச் சென்றான்.
அறைக்குச் சென்றவனோ க்ரே ப்ளேசர் பிளாக் பேண்ட் அணிந்து கையில் பிளாட்டினம் காப்பை போட்டு முறுக்கி விட்டு படிக்கட்டில் வேகமாக இறங்க அவனது வேகத்திற்கு ஏற்ப தலை முடியும் அசைந்தது. 
ஆரவ்வோ “மை டாடி ஹேன்ட்சம்” என்று வாய் திறந்து பார்த்துக்கொண்டிருந்தான்.
“ஸ்கூலுக்கு கிளம்பலாமா ராஜா?” என தன்னையே கண்ணைச்சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கும் ஆரவ்வை தூக்கினான் சர்வா.
சர்வாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்து “நீ ஹேன்ட்சம்பா” என்று கிளுக்கி சிரித்தது. 
“நீயும் தான் டா ராஜா” என்று ஆரவ்வின் நெற்றியில் முட்டினான் சர்வா. 
“அப்பாவும் மகனும் கொஞ்சினதும் போதும் என்னையும் காலேஜ்ல டிராப் பண்ணிடுங்க அண்ணா” என்று சர்வா முன்னே வந்து நின்றாள் அஞ்சலி.
“ஏன் உன் ஸ்கூட்டிக்கு என்னாச்சு? கார்ல வரேன்னு சொல்ற” என்று நெற்றியை சுருக்கி கேள்வியாக பார்த்தான்.
“ஸ்கூட்டி சர்வீஸுக்கு விட்டிருக்கேன். ஏன் அப்பா மகனுக்கு நடுவுல நான் வரக்கூடாதா?” என்று கண்ணைச்சுருக்கி கேட்டாள் அஞ்சலி.
“அஞ்சலிமா புது ஆபிஸ் ஓபன் பண்ணியிருக்கோம்ல இன்னிக்கு இன்டர்வியூ வச்சிருக்கேன்டா. நீ நம்ம டிரைவரை கூட்டிட்டு கார்ல போயிடேன்” என்றான் சர்வா கையில் வாட்சைப்பார்த்துக்கொண்டே. சர்வா பன்க்சுவாலிட்டி கீப்அப் செய்பவன். 
“சரி அண்ணா நான் கிளம்புறேன். பை ஆரவ்” என்று சொல்லிவிட்டு அஞ்சலி பேக்கை மாட்டிக்கொண்டு வெளியே காருக்கு அருகே வந்து பார்த்தாள். 
காரில் டிரைவர் இல்லாமல் இருக்க ‘இந்த டிரைவர் அண்ணா எங்கே போனாரு?’ என்று சுற்றி பார்த்தாள். 
கேட்டின் அருகே நின்றிருந்த செக்யூரிட்டி ஓடி வந்து “அம்மா டிரைவர் இப்போதான் வெளியே போனாரு நான் போன் பண்ணி வரச்சொல்லட்டுமா?” என்றார் செக்யூரிட்டி.
“இல்ல பரவால்ல அண்ணா ட்ரைவரை கூப்பிட வேணாம்” என்றதும் செக்யூரிட்டி கிளம்பி விட்டார்.
“எனக்கு காலேஜ் டைம் ஆச்சே!” என்று டென்ஷன் ஆனவளோ சர்வாவின் கார் முன்னால் வந்து நின்றாள்.
“என்னடா டிரைவர் இல்லையா? சரி வா வந்து கார்ல ஏறு” என்று சொல்லிக்கொண்டிருக்க. 
சரியாக சர்வாவின் பி.ஏ வும் அவனது நண்பனுமான வினோத் பைக்கில் வந்து நின்றான்.
“அஞ்சுமா உன்னை வினோத்தை கொண்டு போய் விடச்சொல்லுறேன் நீ காலேஜ் சரியான டைம்க்கு போயிடலாம்” என்று கூறியவன் வினோத் சர்வாவின் கார் அருகே வந்ததும்
 “வினோத் இப்ப உனக்கு வேலையிருக்கா? அஞ்சலியை காலேஜ்ல விடணும். அவளுக்கு காலேஜ்க்கு டைம் ஆச்சு” என்று வினோத்தை பார்த்தான்.
வினோத்தோ அஞ்சலியை பார்த்தான். 
அவளோ “இவன் கூட போறதுக்கு நான் நடந்தே போயிடலாம்” என்று உதடசைத்தாள்.
அவள் உதடசைவதை பார்த்தவனோ “சர்வா இன்னிக்கு இன்டர்வியூ இருக்கு. உன்னை கூட்டிட்டு போகத்தான் நான் வந்தேன்” என்றான் அஞ்சலியை முறைத்து பார்த்தவாறு.
வினோத் தன்னை முறைப்பதை கண்டவளோ “கண்ணை நோண்டிடுவேன்டா” என்று முணுமுணுத்து இதழை சுளித்தாள்.
“இப்ப நான் சொல்றேன் அஞ்சலியை காலேஜ்ல கொண்டு போய் விட்டுட்டு நம்ம நியூ ஆபிஸுக்கு வந்து சேரு” என்றவனோ காரை எடுத்திருந்தான்.
“பை அங்கிள்! பை ஆன்ட்டி!” என்று இருவருக்கும் கையசைத்தான் ஆரவ்.
வினோத்தோ ஆரவ்விற்கு கையசைத்து விட்டு திரும்ப அஞ்சலியோ முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு டிரைவர் சீட் பக்கம் காரில் ஏறினாள் அஞ்சலி.
இவளுக்கு கொழுப்பு அதிகம்தான் என்று தலையை உலுக்கிக்கொண்டவன் காரில் ஏறியவன் அஞ்சலியின் பக்கம் திரும்பாமல் காரை ஓட்டினான்.
“ம்க்கும்” என்று தொண்டையை செருமினாள் அஞ்சலி. 
வினோத்தோ எங்கேயோ மழை பெய்யுது என்று அவள் புறம் திரும்பாமல் காரை ஒட்டிக்கொண்டிருந்தான்.
காலேஜ்க்கு பக்கமாக சென்றதும் “வினோத் காரை நிறுத்துங்க நான் பேசணும்” என்றாள் கோவமாக…
வினோத் காரை நிறுத்தாமல் ஓட்டிக்கொண்டிருந்தான். 
“டேய் காரை நிறுத்துடா” என்று வினோத்தின் கையை பிடித்துக்கொண்டாள் அஞ்சலி.
“ஹேய் பைத்தியம் கையை விடுடி, இப்படியா கார் ஓட்டும் போது டிஸ்டர்ப் பண்ணுவ? இன்னேரம் அந்த பைக்காரன் மேல மோதியிருப்பேன். உனக்கு என்னதான் வேணும்டி?” என்றான் முறைப்புடன்.
“எனக்கு நீதான் வேணும். நான் உன்னை லவ் பண்ணுறேன்னு சொல்லிட்டேன். இதுக்குமேல உன்கிட்ட எப்படி நான் என் லவ்வை சொல்றதுனு தெரியல வினோத். ஐ லவ் யூ” என்றவளோ அவன் எதிர்பார்க்கா வண்ணம் அவனது இதழில் தன் இதழை பதித்து விட்டாள்.
அஞ்சலி இப்படி அதிரடி முத்தம் கொடுப்பாள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை  வினோத். அவன் ஒன்றும் முற்றும் துறந்த முனிவன் கிடையாதே! ஒரு பெண் தானாக வந்து முத்தம் கொடுக்கும் போது தன்னிலை இழப்பது சகஜம் தானே. ஆனால் வினோத்தோ சுதாரித்து அவளை தன்னிடமிருந்து பிரித்து அஞ்சலியின் கன்னத்தில் பளாரென்று அறைவிட்டான்.
கண்கள் கலங்கியது அஞ்சலிக்கு. 
“ஏன் டா என்னை அடிச்ச?” என்று உதடுகள் நடுங்க கேட்டாள்.
“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்காடி? உன் அண்ணனுக்கு லவ்னாலே பிடிக்காதுனு தெரிஞ்சிருந்தும் நீ என்னை லவ் பண்ணுறேனு சொல்ற. நானும் என் நண்பனின் தங்கச்சி உன்னை எதுவும் சொல்லக்கூடாதுனு பார்த்தா. இப்படி வெட்கமே இல்லாம ஒரு பையனுக்கு முத்தம் கொடுக்கற. நீயெல்லாம் ஒரு பொண்ணாடி?” என்று அவளை மட்டம் தட்டி பேசினான் வேண்டுமென்றே.
“ஆமாண்டா நான் பொண்ணுதான் ஏன் உனக்கு தெரியாதா? நான் முத்தம் கொடுத்தப்ப உன்னை உரசித்தானே கொடுத்தேன். நான் ஒண்ணும் ரோட்டுல போறவனுக்கு முத்தம் கொடுக்கல. உன்னை உயிருக்குயிராய் லவ் பண்ணுறேன் வினோத். இதோ இப்பவும் இன்னொரு முத்தம் கொடுப்பேன்” என்றவளோ அவனது கன்னத்திலும் முத்தம் கொடுத்து.
“இப்பவும் என்னை அடி நான் வாங்கிப்பேன். ஆனா உன்னை லவ் பண்ணாம என்னால இருக்க முடியாதுடா” என்றவளோ காரிலிருந்து இறங்கி நடந்தாள்.
“அச்சோ இந்த பைத்தியக்காரிக்கு நான் என்னனு சொல்லி புரிய வைப்பேன். இவன் அண்ணனை நினைச்சா எனக்கு பயந்து வருது. இவளுக்கு கொஞ்சம் கூட பயம் இல்லையே! முத்தம் எல்லாம் கொடுக்கறாளே” என புலம்பியவனோ கதவை திறந்து நடந்துச் சென்றுக் கொண்டிருந்த அஞ்சலியின் கையை பிடித்து இழுத்து வந்து காருக்குள் போட்டான்.
“ஏன் டா என்னை மறுபடியும் காருக்குள்ள கூட்டிட்டு வந்த? உனக்குதான் என்னை பிடிக்கலையே. நான் நடந்து போவேன். இல்ல பறந்து போறேன் உனக்கென்ன கஷ்டம்?”  என்று மூக்கை உறிஞ்சினாள் அஞ்சலி.
“ஹேய் உன் அண்ணன் சொன்னதுக்காகத்தான் நான் உன்னை கூட்டிட்டு வந்தேன். நான் உன் அண்ணனுக்கு துரோகம் பண்ண மாட்டேன். ஒழுங்கா காதல் கீதல்னு புலம்பாம பேசாம வாயை பொத்திக்கிட்டு வா. இல்ல இன்னொரு கன்னமும் பழுத்திடும் ஜாக்கிரதை” என்று கோபமாக பேசியவன் காரை எடுத்திருந்தான் வினோத்.
“ஆத்தாடி என்ன பொண்ணு இவ! சர்வாவை மிஞ்சிருவா போலையே ஸப்பா கண்ணைக்கட்டுது போ” என்று புலம்பிக்கொண்டு காரை ஓட்டினான்.
காலேஜ் வந்ததும் அஞ்சலி இறங்காமல் இருக்க “என்ன அஞ்சலி காலேஜ்க்கு போகலையா வீட்ல கொண்டு போய் விடட்டுமா?” என்றான் மிரட்டலாக.
வினோத்தை திரும்பி பார்த்தவள் “நான் உன்னை காதல் செய்துட்டே இருப்பேன்டா” என்று அவன் கன்னத்தில் எட்டி முத்தமிட்டு அவன் “ஏய்” என்று கையை ஓங்குவதற்குள் கதவை திறந்து ஓடிவிட்டாள் அஞ்சலி.
“அச்சோ! இந்த சர்வா பையன் என்னை ஒருநாள் தோளை உரிச்சு உப்புக்கண்டம் போட போறான்” என்று சோகமாக பேசியவன் தலையில் கையை வைத்துக்கொண்டான்.
சர்வா ஆரவ்வை ஸ்கூலுக்குள் கூட்டிச்சென்றவன் அவனது கிளாஸ் மிஸ் இருக்கும் இடத்திற்குச் சென்றான்.
“வாங்க சார் உட்காருங்க” என்று அந்த டீச்சர் எதிரே இருந்த நாற்காலியில் அமரச்சொன்னாள்.
சர்வாவும் நாற்காலியில் உட்கார்ந்தான். ஆரவ்வோ நல்ல பையனை போல டீச்சர் முன்னே கையை கட்டி நின்றான்.
“டீச்சரோ உங்க பையன் படிப்பில படு சுட்டி. ஆனா பிஹேவியர்ல ஒர்ஸ்டா இருக்கான். நேத்து இரண்டு பொண்ணுங்க சடையை ஒண்ணா சேர்த்து கட்டி விட்டிருக்கான். அந்த பொண்ணுங்க எழுந்தப்ப கீழே விழுந்து ஒரே அழுகை. உங்க பையன் வாயில கையை வச்சு சிரிச்சுக்கிட்டு இருக்கான். அதான் ஒரு அடியும் போட்டேன்” என்று ஆரவ்வை பார்த்து முறைத்தாள் அந்த டீச்சர்.
ஆரவ் டீச்சர் திட்டினதை மட்டுமே சொன்னவன் டீச்சர் அடித்ததை சொல்லாமல் இருந்தான்.
சர்வாவோ “என்ன மிஸ் என் பையன் சின்ன பொடியன் அவன் மீது நீங்க குற்றம் சொல்லக்கூடாது. குழந்தைகளை அடிக்க கூடாது. நீங்க அடிச்சிருக்கீங்க. அவன் பொண்ணுங்க சடையை கட்டி வைக்கும் போது நீங்க என்ன பண்ணிட்டுருந்தீங்க? நீங்க குழந்தைகளை கவனிக்கத்தானே நாங்க பீஸ் கட்டுறோம்” என்றான் நெற்றியை விரலால் தேய்த்துக்கொண்டே கோப குரலில்.
டீச்சர் பேச வாயெடுக்கும் முன் “மிஸ் நான் பிரின்ஸ்பல் கிட்ட பேசுறேன். என் பையனை தேவையில்லாம திட்டி அடிச்சிருக்கீங்கனு சொல்லப்போறேன்” என்று வேகமாக எழுந்தான்.
இதென்ன வம்பாபோச்சு என்று அதிர்ந்த அந்த டீச்சரும் “சார் சார் பிரின்ஸ்பல் கிட்ட போக வேணாம். நான் இனிமேல் உங்க பையன் மேல கவனமாய் இருக்கேன்” என்றார் கெஞ்சலாக.
“டாடி என் மேலயும் தப்பிருக்கு டீச்சர் பாவம்” என்றான் அவனது மிஸ் திட்டுவாங்குவது கண்டு பரிதாபப்பட்டு.
“ம்ம் இந்த தடவை மன்னிச்சு விடறேன். என் பையன் தப்பு செய்தா என்கிட்ட சொல்லுங்க. நான் அவனை கண்டிக்குறேன்” என்று சொல்லிக்கொண்டிருந்தான்.
ஆரவ் சடையை கட்டிவிட்ட அவனது கிளாஸ் பொடிசுகள் அங்கே வந்தனர். 
“டாடி நான் இந்த பொண்ணுங்க சடையைத்தான் கட்டிவிட்டேன்” என்று தலையை குனிந்துக் கொண்டான் ஆரவ்.
“சாரி கேளு ஆரவ்” என்று அதட்டினான் சர்வா.
அந்த பெண் பொடிசுகளும் ஆரவ் முன்னே வந்து நின்றது. 
“சாரி கேர்ள்ஸ்” என்று மன்னிப்பு கேட்டான் ஆரவ்.
“பரவாலடா ஆரவ். வா விளையாட போகலாம்” என்று ஆரவ்வின் கையை பிடித்து கூப்பிட்டனர் பெண் பொடிசுகள்.
ஆரவ் சர்வாவை பார்க்க “போ ராஜா
” என்றவன் இதழ் விரித்தான்.
“பை டாடி” என்று சந்தோசமாக விளையாட ஓடினான் ஆரவ்.
ஆரவ் சென்றதும் “மிஸ் இனிமே என் பையனை அடிக்காதீங்க. அவன் நீங்க அடிச்சதா என்கிட்ட சொல்லவில்லை. ஆனா அவனுக்கு குளிச்சு விடும் போது அவன் முதுகுல நீங்க அடிச்ச இடம் சிவந்து போயிருந்துச்சு. அவன் சின்ன பையன் பொறுமையா சொல்லிக்கொடுங்க மிஸ்” என்று எச்சரித்துவிட்டு கிளம்பினான் சர்வா.
“வினோத் எங்க இருக்க? ஆபிஸ் கிளம்பி வாடா” என்று போனை வைத்திருந்தான் சர்வா.
பஸ் ஸ்டாண்டில் கையில் ஆறு வயது பெண் குழந்தையுடன் இறங்கினாள் அமுதினி.
தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றிப்பார்த்துக்கொண்டே வந்தவளிடம் “அம்மா பசிக்குது” என்ற அவந்திகாவின் குரலில் குனிந்து பார்த்தாள்.
அவந்திகா வயிற்றை பிடித்துக்கொண்டு அமுதினியை பார்த்தது.
“அம்மு குட்டிக்கு பசிக்குதா இதோ சாப்பிடலாம்” என்று ஒரு ஹோட்டலுக்குள் கூட்டிச்சென்று இட்லியை வாங்கி ஊட்டினாள். 
அவளும் பசிக்கு இரண்டு இட்லியை சாப்பிட்டு முடித்து விட்டு டேபிளிலிருந்து பேப்பரை கையில் எடுத்துப்பார்த்தாள்.
அதில் மஹாலக்ஷ்மி கேட்டரிங் சர்வீஸில் அக்கௌண்ட்ஸ் முடித்த பெண்கள் வேலைக்கு தேவை என்றும் கம்பெனி இருக்கும் அட்ரஸும் போட்டிருந்ததை படித்து பார்த்தவள் முகம் பளிச்சென்றானது. 
எங்கே வேலை தேட வேண்டுமோ என்று அச்சப்பட்டுக்கொண்டிருந்தவளுக்கு கடவுள் வழி காட்டி விட்டார். 
தன் வாழ்க்கை பயணம் மாறப்போகும் என்று தெரியாமல் மஹாலக்ஷ்மி சமையல் கேட்டரிங் கம்பெனிக்கு போகிறாள் அமுதினி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *