1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

கோலம்போட்டு முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு சமையல்கட்டுக்குள் வந்தாள் அமுதினி.
சர்வா சமையல்கட்டில் காபி போட்டுக்கொண்டிருந்தான். இவரு என்ன சமையல்கட்டுல இருக்காரு! ஒருநாளும் சமையல்கட்டுல நான் பார்த்ததில்லையே! என்ன அதிசயம் என்று தனக்குள் பேசிக்கொண்டவள் “நான் காபி போட்டுத்தரவா” என்று சர்வாவின் பக்கம் போய் நின்றாள் அமுதினி.
“ம்ம் நான் குக்குடி எனக்கும் காபி போடத்தெரியும். நான் போட்ட காபியை குடிச்சு பாரு” என்று பேசிக்கொண்டு நுரைததுப்ப காபியை டம்ளரில் ஊற்றி அமுதினியிடம் கொடுத்தான் சர்வா
அமுதினிக்கு காபி என்றால் அலாதி ப்ரியம். அவள்வீட்டில் இரண்டு மாடுகள் பாலுக்கென்று கறவைமாட்டை வாங்கி வைத்திருந்தார் அமுதினியின் அப்பா.
காபியை வாங்கிக் ஒரு மிடறு குடித்தவள் அதன் சுவை நாவில் ஒட்டிக்கொண்டது காபியை குடித்துமுடித்தும் கூட அதன் சுவைகுறையாது நாவில் ஒட்டியிருந்தது 
“செம சமையல்காரரே இனிமே தினமும் எனக்கு நீங்களே காபி போட்டுத்தந்தா நல்லாயிருக்கும்” என்று இடுப்பில் கைவைத்துக்கொண்டு கண்ணை சிமிட்டி சிரித்தாள்
“நாம ஒரு அக்ரிமெண்ட் போடுக்கலாமா” என்றான் அவளது தோளில் கையை வைத்தபடி
“என்ன அக்ரிமெண்ட்” என்றாள் கண்ணை உருட்டிக்கொண்டு
“ம்ம் நான் தினமும் காபி போட்டு கொடுத்தா! நீ எனக்கு முத்தம் கொடுக்கணும்! அதுவும் லிப்ல. நான் உன்னை விட்டு விலகும் வரை கொடுப்பியா” என்றான் கிறங்கும் குரலில்
போதுமயா  குக்கு நேத்து நைட்டே முத்தம் கொடுக்குறேனு என் உதட்டை கடிச்சு திண்ணாச்சு. இதோ கொஞ்சம் காயமா இருக்கு பாருங்க. காயம் ஆறும் வரை முத்தம் கொடுக்க விடமாட்டேன் “என்றாள் உதட்டை சுளித்து
“எங்கே இங்க காட்டு நான் காயத்தை பார்க்குறேன்” என்று அமுதினியிடம் நெருங்கி அவளது இதழை இரண்டு விரலால்  பிடித்து “ஆமா என் பல்பட்டு காயம் ஆகிதான் இருக்கு. சாரி காயம் பண்ணின நானே மருந்து போட்டு விடறேன்” என்றவனோ அடுத்த நொடி அவளது கன்னத்தை தாங்கி அவளது வெல்வட் இதழலில் முத்தம் கொடுக்க துவங்கினான். 
அவளுக்கோ சமையல் கட்டில் வைத்து முத்தம் கொடுக்கிறானே யாரும் வந்தால் என்ன நினைப்பார்கள் என்று கணவன் மீது பொய் கோபம் கொண்டாள்.
நீண்ட நெடிய இதழ் முத்தம் அவனுக்கு போதவேயில்லை. அவளது இடுப்புசேலையை விரல்கொண்டு நகட்டி அவனது விரல்கள் பத்து பெண்ணவளின் நாபியில் நர்த்தனம் ஆடியது. கண்சொருகி அவனது இதழ் முத்தத்தையும் அவனது விரல்கள் ஆடும் நாட்டியத்திலும் கிறங்கிப்போய் அவனது முதுகில் கைப்போட்டுக்கொண்டாள்.
இருவரின் மோகத்தை கலைக்கும் வண்ணம் “டாடி, அம்மா” என்று ஆரவ் அவந்திகா இருவரின் குரல் கேட்டு மோக முத்தத்தில் திளைத்துக்கொண்டிருந்தவர்கள் ஆற்று வெள்ளம் வடிந்தது போல அவர்களின் மோகம் நின்று போனது குழந்தைகளின் குரலில்
சட்டென்று இருவரும் பிரிந்து நிற்க அமுதினியோ மூச்சை இழுத்து விட்டுக்கொண்டாள். சர்வாவோ தலையை அழுந்தக்கோதிக்கொண்டு “நான் போட்ட காபி செம டேஸ்ட்டா இருந்துச்சு உன் இதழ் பட்டு” என்று அவளது நெற்றியில் முத்தமிட்டு
ஆரவ் அவந்திகாவும் கண்ணை கசக்கிக்கொண்டு “ம்மா பூஸ்ட்” வேணும் என்றார்கள்.
“ரெண்டு பேரும் பிரஷ் பண்ணிட்டு வந்தாதான் பூஸ்ட் கலக்கித்தருவேன்” என்றாள் அமுதினி ஆர்டர் போடுவதுபோல
“ம்மா எனக்க பசிக்குது” என சிணுங்கியது ஆரவ்
“அம்மா சமையல் பண்ண ஆரம்பிக்குறேன் அப்பா உங்களுக்கு பிரஷ் பண்ணிவிடுவாங்க உங்களுக்கு பசிச்சாலும் ப்ரஷ் பண்ணினாதான் தருவேன்” என்று பிரிட்ஜ்லிருந்து காய்கறிகளை எடுத்துக்கொண்டு குழந்தைகளை பார்க்க அவர்களோ இடுப்பில் கையை வைத்துக்கொண்டு அமுதினியை முறைத்துக்கொண்டிருந்தனர்.
“டாடி பசிக்குது எனக்கு பூஸ்ட் வேணும் அம்மாகிட்ட சொல்லுங்க” என்று முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு பேசியது ஆரவ்
அமுதினியோ சர்வாவை முறைத்துப்பார்த்து “இந்த விசயத்துல செல்லம் கொடுக்காதீங்க எனக்கு கோபம் வந்திடும்” என்று வெங்காயம் வெட்டும் கத்தியை வைத்து மிரட்டினாள் சரவாவை
சர்வாவோ “ஆரவ் அவந்திகா ரெண்டு பேருக்கும் சீக்கிரம் ப்ரஷ் பண்ணிவிடுறேன் வாங்க. ப்ரஷ் பண்ணலைனா பல்லுல பூச்சி வந்துடும்” என்று குழந்தைகளை தூக்கி கொண்டு சென்றான்
அஞ்சலி அறையில் வினோத் நேரமே எழுந்து விட்டான். அஞ்சலியோ ஆழந்த உறக்கத்தில் இருந்தாள். 
‘இராட்சசி தாலி கட்டின புருசனை சோபாவுல படுக்க வைச்சுட்டு இவ மட்டும் மெத்தையில் ஜம்முனு படுத்திருக்கா எங்க வீட்டுக்கு வாடி அப்புறம் இருக்கு உனக்கு கச்சேரி’ என்று அஞ்சலியை மனதில் வறுத்துக்கொண்டியவன் டவலை எடுத்துக்கொண்டு குளிக்கச்சென்றான்.
குளித்து வந்து பார்க்க அப்போது அஞ்சலி உறங்கிக்கொண்டே இருந்தாள் எப்போதும் வினோத்திற்கு குளித்து வந்தவுடன் காபி போட்டு கொடுத்துவிடுவார் சுப்ரமணியம். அவனுக்கோ வெளியே போக தயக்கமாக இருக்க அஞ்சலியை திட்டிக்கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.
சோபாவில் உட்கார்ந்தவன் மொபலை பார்த்துக்கொண்டிருந்தான். அஞ்சலியோ ‘உட்கார்ந்திருக்கட்டுமே இப்ப என்ன ஒண்ணும் தேய்ச்சு போயிடமாட்டாரு’ என்று வேண்டுமென்று
தூங்காமல் கண்ணைமுடிப்படுத்திருந்தாள். 
வினோத்தோ அறைக்குள் அங்கும் இங்கும் நடக்க ஆரம்பித்தான். பாவம் பொழைச்சு போகட்டும் என்று எழுந்த அஞ்சலியோ வினோத் இருக்கிறான் என்று கூட பார்க்காமல் டவலை எடுத்துக்கொண்டு குளிக்கச்சென்று விட்டாள். 
குளித்து விட்டு மஞ்சள் வண்ண சில்க்காட்டன் சேலையில் பூதிதாய் பூத்த மஞ்சள் ஆரவ் போல தலையில் துண்டை கட்டிக்கொண்டு வெளியே வந்தவள் கண்ணாடி முன்னே வந்து நெற்றியில் டிக்கர் பொட்டை வைத்து குங்கும சிமிழில் இருக்கும் குங்குமத்தை எடுத்து உச்சி வகுட்டில் வைத்து பால்கனிக்கு சென்றவள் தலைதுவட்டி கிளிப்போட்டு அடக்கி விட்டு வந்தவள் அப்பவும் வினோத்தை கவனிக்கவேயில்லை. வினோத்திற்கோ பொறுமை போனது
“அஞ்சலி விடிஞ்சு ரொம்ப நேரம் ஆச்சு வெளியோ போலாம் வா” என்று அவளது கையை பிடித்தான்
“ம்ப்ச் என்னை கேட்காம தொடாதீங்க வினோத். என்று எட்டிக்காய் போல கசப்பாக பார்த்தவள், வினோத் அவளது  கையை விட்டதும் “புதுசா கல்யாணம் ஆனவங்க லேட்டாத்தான் அறையை விட்டு போவாங்க அதுக்காகத்தான் நான் எழும்பாம படுத்திருத்தேன் வெளியே போன பிறகு நமக்குள்ள எல்லாம் நடந்த மாதிரி நான் கொஞ்சம் வெட்கப்படுவேன். நீங்க சந்தோசமா இருந்தது போல முகத்தை வைச்சுக்கோங்க” என்று வெடுப்பாக பேசி கதவு திறந்து ஹாலுக்கு சென்றாள்.
“எல்லாம் என் நேரம்டி ஒரு வார்த்தை அதிகம் பேசிட்டேன்டி அதான் நீ அவமானப்படுத்தினாலும் பொறுத்துப்போறேன் அதுக்குனு இதுபோல இன்னொரு முறை பேசினா கன்னம் பழுக்கும் பாரு” என்று அஞ்சலியை கருவிக்கொண்டு அவள் பின்னே சென்றான்.
ஆரவ் அவந்திகா இருவரிடமும் கதை பேசியும் சிரிக்க வைத்தும் அவர்களுக்கு ப்ரஷ் பண்ணிவைத்து, குளிக்க வைத்து இருவரையும் சாப்பிட தூக்கி வந்தான் சர்வா
பூஸ்ட் கலக்கி ரெடியாக வைத்திருந்தாள் அமுதினி
அஞ்சலி சமையல்கட்டுக்குள் வந்ததும் டீ போட ஆரம்பித்தாள். வினோத்திற்கு காபியை விட டீ தான் அதிகம் குடிப்பான் அவன் மீது கோபம் ஒரு பக்கம் இருந்தாலும் அவனுக்கு பிடித்த டீயை போட்டு டம்ளரில் ஊற்றினாள்.
அமுதினியோ இட்லியை அச்சில் ஊத்திக்கொண்டே அஞ்சலியின் முகத்தை ஆராய்ந்தாள். அஞ்சலியோ “அண்ணி எங்களுக்குள்ள எதுவும் நடக்கலை! என்ன காரணும்னு உங்களுக்குத்தெரியும் அண்ணன்கிட்ட எதுவும் எங்களை பத்தி சொல்லி வைக்காதீங்க ப்ளீஸ்” என்று கண்களால் கெஞ்சிவிட்டு வினோத்திற்கு டீயை கொண்டு போக.
“நான் உன்னை பத்தி உன் அண்ணாகிட்ட சொல்லமாட்டேன் அவரா கண்டுபிடிக்கும்படி நீயும் நடந்துக்காத! அதே நேரம் வினோத் அண்ணாவ மன்னிச்சு அவர்கூட வாழப்பாரு” என்று அட்வைஸ் செய்தாள் அமுதினி
“எப்படி அண்ணி முடியும் அவர் பேசினதை வார்த்தை உங்களுக்கு தெரியாது தெரியுமா” என்றவளுக்கு கண்ணீர் நீர் கோர்த்தது.
“அஞ்சலி நான் சொல்றேனு தப்பா நினைக்காதே! உன் அண்ணாக்கு காதல் பிடிக்கலைனு தெரிந்தாலும்  உன் காதலை அண்ணாகிட்ட சொல்லியிருக்கணும் உன்மேலயும் தப்பிருக்குதானே என்றால் குழம்பை  கரண்டியில் கிளரிக்கொண்டே
“ஏன் வினோத் சர்வா அண்ணாகிட்ட எங்க காதல் பத்தி பேசயிருக்காலாம்ல! நான்மட்டும் என் காதலுக்கு ஒத்தையா போராடணுமா என்ன? கொஞ்ச நாள் அவர் பேசினதுக்கு தண்டனை தான் தருவேன் என்று மூக்கு சிவக்க கோபம் கொண்டு பிடிவாதமாய் பேசியவளிடம் அதற்குமேல் அமுதினியால் பேசமுடியவில்லை.
“ம்மா பூஸ்ட்” என்று ஓடிவந்தனர் ஆரவ் அவந்திகா
அஞ்சலியோ “ஹாய் செல்லக்குட்டீஸ் பூஸ்ட் வேணுமா” என்று டீ டம்ளரை டேபிள் மீது வைத்து இருவரையும்  தூக்கி காய் நறுக்கும் போட்டிருக்கும் பெரிய டேபிளில் உட்கார வைத்து அமுதினி போட்டு வைத்திருந்த பூஸ்டை இருவரின் கையிலும் கொடுக்க இருவரும் குடிக்க ஆரம்பித்தனர்.
 
வினோத்திடம் ஆபிஸ் விசயமாக பேசிக்கொண்டிருந்தான் சர்வா.
“வினோத் டீ எடுத்துக்கோங்க” என்று ப்ரியமான புது பொண்டாட்டியை மனைவியை போல சிரித்த முகத்துடன் டீயை நீட்டினாள் அஞ்சலி
‘வினோத் இது நம்ம பொண்டாட்டியா” என்று அஞ்சலியை அப்பாவியாய் பார்த்துவைத்தான்.
தங்கையின் முகத்தில் இருக்கும் சந்தோசத்தை கண்ட சர்வாவோ “அப்பாடா என் தங்கச்சி ஹேப்பியா இருக்கா” என்று நிம்மதி அடைந்தான் 
“தேங்க்ஸ் அஞ்சலி” என்று வினோத்தும்  கண்ணை சிமிட்டி டீ டம்ளரை வாங்கி கொண்டான்
குழந்தைகள் இருவரும் பூஸ்ட் குடித்து ஹாலுக்கு ஓடிவந்தனர்.
அமுதினியோ இடுப்பில் சேலையை தூக்கி சொருகிக்கொண்டு புதுமணத்தம்பதிகளுக்காக பொங்கலும் கேசரியும் மெதுவடை என்று செய்து முடித்திருந்தாள். 
ஆரவ் அவந்திகாவிற்கு யூனிபார்ம் போட்டு விட்டு ரெடிபண்ணி கூட்டிவந்தான் சர்வா
“ரெண்டு பேரும் அங்கிள் ஆன்டி கூட இருங்க நான் டிபன் ரெடியாகிடுச்சானு பார்த்துட்டு வரேன்” என்று சமையல் கட்டுக்கு சென்றான் சர்வா 
சுப்பையா நேற்றிரவு சொந்த ஊரில் பண்டிகை என்று சென்றிருக்க சமையல்கட்டில் ஒத்தை ஆளாய் அனைத்து வேலைகளையும் செய்து முடித்தாள் அமுதினி.
வியர்வைய முந்தானையால் துடைத்து திரும்ப அவளது இடையில் கைபோட்டு இழுத்து அவளது கன்னத்தில் ப்சக்கென்று முத்தமிட்டான்
“அச்சோ என்ன சர்வா எல்லாரும் ஹால் இருக்காங்க இப்படியா முத்தம் கொடுப்பாங்க பசங்க ஓடிவந்தா மானம் போயிடும்” என்று அவன் கொடுத்த ஈர முத்தத்தை துடைத்தாள்.
“ஏ துடைக்காத மறுபடியும் தருவேன்” என்று ஹாலை எட்டிப்பார்த்துவிட்டு அவளது இதழில் அவரசமாக முத்தம் கொடுத்து விலகியவனோ “எனக்கு அழகான பொண்டாட்டி மட்டும் கிடைக்கல நல்ல சமைக்க தெரிஞ்சா பொண்டாட்டியா கிடைச்சிருக்கடி உன் சமையல் வாசம் நம்ம ரூம்க்கு  வருது போ. டீச்சர் பையன் மக்குனு சொல்வாங்க! எங்க சமையல்காரன் பொண்டாட்டி சமைக்க தெரியாது சொல்லிடுவாளோ நினைச்சேன்! என் பொண்டாட்டி சமையல் கைப்பக்குவத்துல நான் இன்னும் உடம்பு போடுவேன் போலயே” என்று அவளின் கன்னத்தில் முத்தம்கொடுத்தான்
அமுதினிக்கோ தன் கணவன் தன்மேல் இத்தனை காதல் பெருக்கோடு இருக்கிறானே என்று அவளது கன்னம் செம்மை பூண்டது.
“எங்க வீட்ல சமையல்க்கு ஆள் கிடையாது நான்தான் சமையல் பண்ணுவேன்” என்றாள் தோளைக்குலுக்கியபடி
“ம்ம் நேத்து நைட் வச்சி தக்காளிச்சட்டி ரொம்ப சூப்பர்டி என்றவன் அவளது கையை பிடித்து இந்த கைக்கு வைர வளையல் செய்து போடணும்” என  அவளுக்கு புகழராம் சூட்டிக்கொண்டு
“ம்மா” என்று குழந்தைகள் சத்தம்போட
“இதோ வரோம் பசங்களா” என்று குரல் குடுத்து இருவரும் சமைத்த உணவுகளை எடுத்து டைனிங் டேபிளில் அடுக்கி வைத்தனர்.
வினோத்திற்கு மனைவியின் பின்னால் சுற்றும் சர்வா புதிதாய் தெரிந்தான். கம்பெனியில் வேலை செய்பவர்களிடம் அதிகாரம் பண்ணுபவன் இன்று பொண்டாட்டியின்  பின்னால் நாய் குட்டி போல சுற்றுவதை ஆச்சரியமாய் பார்த்தான்
குழந்தைகளுக்கு சர்வா உணவை ஊட்ட வினோத்திற்கும் அஞ்சலிக்கும் விருந்து பரிமாறினாள். வினோத் விக்கல் எடுக்க “பார்த்து சாப்பிடுங்க வினோ” என்று செல்லபெயரையும் வைத்து தலையை தட்டி தண்ணீரை எடுத்து வினோத் பக்கம் வைத்தாள் அஞ்சலி.
“உலக மகா நடிப்புடா சாமி” என்று மனதில் பொருமிக்கொண்டு “தேங்க்ஸ் அஞ்சு” என்றவன் தண்ணீரை குடித்து சாப்பிட ஆரம்பித்தான்
சதாசிவமும் சுப்ரமணியமும் கோவிலுக்கு பொடி நடையாகவே சென்று வந்தனர். அவர்களும் சாப்பிட்டு முடிக்க. குழந்தைகளை ஸ்கூலுக்கு கொண்டு விட்டு வந்த சர்வாவோ அஞ்சலிக்கு செய்து வைத்திருந்த நகைகளை பெட்டியில் போட்டு வந்து சதாசிவத்திடம் கொடுத்து அஞ்சலிக்கு கொடுக்க சொன்னான்.
சதாசிவமோ டிவி பார்த்துக்கொண்டிருந்த அஞ்சலியிடம் “மாப்பிள்ளையை கூட்டிட்டு வாடா அஞ்சுமா என்றமும் அவள் பக்கம் உட்கார்ந்திருந்த வினோத்திடம் “அண்ணன் நகை கொடுக்குறாங்க வேண்டாம்னு சொல்லக்கூடாது” என்று கண்களால் மிரட்டி கூட்டிச்சென்றாள்
“நான் ஒண்ணும் சொல்லமாட்டேன்பா நான் வேண்டாம்னு சொன்னா வாங்க விடுவாளா என்ன?” என்று தோளைக்குலுக்கிக்கொண்டு அஞ்சலியின் பக்கம் போய் நின்றான் வினோத்
இரண்டு தாம்பூல தட்டு  நிறைய நகைப் பெட்டிகளை அடுக்கி வைத்திருந்தான் சர்வா.
சதாசிவத்தின் காலில் விழந்து நகைப்பெட்டிகளை வாங்கிக்கொண்டாள் அமுதினி வாய் நிறைய புன்னகையுடன் வினோத் புன்னகை முகத்துடன் நின்று கொண்டான். சிரிக்க வில்லையென்றாலும் அதற்கும் முறைப்பாள் தன் காதல் மனைவி  என சிரித்து வைத்தான்.
மதியம் விருந்து சாப்பிட்டு முடிக்க சிறு நேரம் ஓய்வெடுத்த பிறகு “அஞ்சலி நம்ம வீட்டுக்கு கிளம்பலாமா” என்றதும் எல்லா பெண்களுக்கும் பிறந்த வீட்டை போகும்போது ஏற்படும் மன அழுத்தம் அவளுக்கு வந்தது. கண்களும் கலங்கியது. 
பாசமாய் இருக்கும் சித்தப்பா! சர்வா கண்டிப்புடன் இருந்தாலும் அவள் கேட்டதை உடனே வாங்கிக்கொடுத்துவிடுவான் அன்பாய் இருப்பவன். அத்தை அத்தை என்று தன்னையே சுற்றிவரும் குழந்தைகள். கொஞ்ச நாட்களே தன் வீட்டில் இருந்த அமுதினியும் நண்பியை போல பழகிவிட்டாள். அவளையும் விட்டு பிரியவேண்டுமே என்று அவளுக்கு கவலை வந்தது. 
“இன்னொரு நாள் நாம இங்கேயே இருப்போமா வினோத்” என்றாள் தயக்கமாக. அவளது சண்டையை மறந்து விட்டு கேட்டாள்
வினோத்தோ “நான் கிளம்புறேன் அஞ்சு உனக்கு எத்தனை நாள் இங்க இருக்க விரும்பமோ அத்தனை நாள் இருந்துட்டு வா எனக்கு ஒரு பிரச்னையும் இல்ல. அப்பாவுக்கு ஒரு நைட்டுக்கு மேல இங்க இருக்க முடியாது இங்க வீடு புல்லா ஏசி வச்சிருக்கீங்க அவர் ஒரு நைட் தாக்குபிடிச்சதே பெரிய விசயம்டா” என்று பொறுமையாக கூறிவிட்டு தன் கொண்டு வந்த பேக்கை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தான்
“அப்பா கிளம்பலாமா அஞ்சு இ.இங்க” என்று பேச ஆரம்பிக்க. தன்னுடைய பெட்டியை எடுத்துக்கொண்டு வந்த அஞ்சலியோ 
“நம்ம வீட்டுக்கு போகலாம் வினோ” என்று வினோத்தின் பக்கம் வந்து நின்றாள்
அஞ்சலி அழுதிருக்கிறாள் என்று கண்டுபிடித்துவிட்டார் சதாசிவம். அஞ்சலியின் பக்கம் வர “சித்தப்பா” என்று சதாசிவத்தின் தோளில் சாய்ந்து கொண்டு அழுதாள்
“எதுக்குடா அழற புகுந்த வீட்டுக்கு போகும்போது அழக்கூடாது” என்று அவளது தலையை வாஞ்சiயுடன் தடவிக்கொடுத்தார். 
அஞ்சலியிடம் விசும்பல் மட்டும் வர. சர்வாவோ “அஞ்சு குட்டி எதுக்கு இந்த அழுகாச்சி வினோத் வீட்டிலிருந்து நம்ம வீட்டுக்கு வர ஒரு மணிநேரம்தான் ஆகும் நீ போன் போட்டினா நானும் சித்தப்பாவும் உடனே வந்து நிற்போம்டா அழக்கூடாது” என்று தங்கையின் தோளை தொட “அண்ணா உங்களை எல்லாம் விட்டு பிரிந்து போக கவலையா இருக்கு” என்று சர்வாவை கட்டிக்கொண்டு அழுந்தாள்.
சர்வாவிற்கும் அழுகை வந்தது. ஆனால் கட்டுப்படுத்திக்கொண்டு நின்றான். 
அஞ்சலியாக நிதானம் வந்தவள் “போயிட்டு வரேன் அண்ணி” என்று  அமுதினியை அணைத்துவிடுவிக்க 
“அடுத்த மாசம் நம்ம வீட்டுக்கு வந்தா உடனே போகணும் சொல்லப்போறே நீ” என்று அஞ்சலியின் கன்னத்தில் கிள்ளி கிண்டல் செய்தாள் அமுதினி.
“நான் அப்படியெல்லாம் பேசமாட்டேன் எனக்கு எப்பவும் எண் அண்ணா வீடுதான் பிடிக்கும்” என்றாள் இதழை சுளித்து
வினோத் கையில் பேக்கை வைத்துக்கொண்டு அஞ்சலிக்காக காத்திருந்தான்
“அஞ்சலிமா மாப்பிள்ளை வெயிட்  உனக்காக பண்ணுறாரு பாரு” என்று சதாசிவம் கூற
“இருக்கட்டும் மாமா” என்றான் வினோத் புன்னகையுடன்
“கிளம்புறேன் சித்தப்பா அண்ணா, அண்ணி” என்று திரும்பி பார்த்துக்கொண்டே வாசலுக்கு சென்றாள்
வினோத் காரில் ஏறி உட்கார்ந்தவுடன் பெட்டிகளை எடுத்து சர்வா கார் டிக்கியில் வைத்தான்
சுப்ரமணியம் பின்னால் உட்கார போக “அங்கிள் நீ முன்னால உட்காருங்க, நான் பின்னே உட்காருறேன்” என்று கதவை திறக்க சுப்ரமணியமோ “எனக்கு பின்னால உட்கார வசதியா இருக்கும்டா நீ வினோத் பக்கம் உட்காரு” என்று பின்னே ஏறி உட்கார்ந்தார்.
வினோத் காரை எடுக்க அஞ்சலிக்கு கண்ணீர் மாலையாக சொரிந்தது.
வினோத்திற்கோ அஞ்சலி அழுவது சங்கடமாக இருந்தது. “அழாத அஞ்சலி” என்று கையை பிடித்துக்கொண்டான்.
“ம்ம் தானா கண்ணீர் வருது வினோ” என்று கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.
வினோத் காரை எடுக்க கையசைத்து சென்றாள் அஞ்சலி
சர்வாவோ தங்கச்சியை நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டோம் என்ற நிம்மதியில் பெரும்மூச்சு விட்டுக்கொண்டான்
அஞ்சலி சமையல்கட்டில் பாத்திரங்களை கழுவி வைக்க சென்றுவிட்டாள். சதாசிவம் ரெஸ்ட் எடுக்க சென்றார்.
சர்வாவோ ஆபிஸிலிருந்து போன் வந்தது. “இதோ இன்னும் ஒன் ஹர்ல வந்துடுவேன்” என்றவன் அறைக்குச்சென்று கிளம்பி வந்தவன் சமையல்கட்டுக்கு வந்தான்
அமுதினியோ வேலைகளை முடித்து திரும்ப இறுக்கமாக அணைத்துக்கொண்டு “நைட் ரெடியா இருடி. நேத்து நைட் அவசர அவசரமா எல்லாம் நடந்துருச்சு இன்னிக்கு நிறுத்தி நிதானமா எல்லாம் நடக்கணும்” என்று அவளது நெற்றயில் முத்தம் பதித்தான் சர்வா
“குழந்தைகங்க இருக்காங்க நான் மாட்டேன் போங்க” என்று அவன் மார்பில் தலைசாய்த்தாள்
“அதுக்கு ஐடியா வச்சிருக்கேன் நைட் வந்து சொல்றேன்” என்றவனோ அவளது மென்மையில் முத்தம் கொடுத்து “ரெடியா இரு இரட்டை குழந்தைக்கு தீயாய் வேலை செய்யணும்” என்றான் கண்ணைச்சிமிட்டி
அவன் பேசியது எல்லாம் காதலாக தெரிய “ஐ.லவ்.யு சர்வா” என்று அவனது கன்னத்தில் முத்தம் எக்கி கொடுத்தாள்
“நோ நோ ஐ.லவ்.யு சொல்லதடி இது காதல் இல்லைடி அம்மு நான் புருசன் நீ பொண்டாட்டி அவ்ளோத்தான்” என்றதும் அமுதினிக்கு முகம் வாடிப்போய் விட்டது. 
“நைட் வரேன் அம்மு” என்று அமுதினியின் கன்னம் தட்டிச் சென்றான் 
காதல் இல்லை கட்டிலுக்குமட்டும்தான நான் என்று பேதை உள்ளம் குமைந்து போனது.
சொல்லாது காதலுக்கு மதிப்பில்லை என்று சர்வாவிற்கு எப்போதும் புரியும் என்று தெரியவில்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *