1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

1. தீரா திரவியமே! சுடரொளியே!

4. திரவியமே
வெங்கடேசன் இறந்த சமயம் அவரின் சித்தப்பா பெண் மங்கையும்  அவரது கணவர் ராஜுவும் தான் சதாசிவத்திற்கு உதவியாக இருந்தனர். 
ராஜு கொஞ்ச நாள் முன்னே தான் மாரடைப்பால் இறந்துவிட்டார். மங்கைக்கு பண உதவி செய்துக் கொண்டிருந்தார் சதாசிவம் நன்றியை மறக்காமல். 
மங்கையின் பெண் தாரணி வயசுக்கு வந்ததும் சர்வா தான் தாய்மாமன் சீர் செய்தான். மங்கைக்கு சர்வாவை தாரணிக்கு கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் திடீரென சர்வா திருமணம் செய்து வந்து விட்டான்  என்று கேள்விப்பட்டு  கோபத்துடன் சதாசிவம் வீட்டுக்குச் சென்ற மங்கை “இப்ப வசதி வந்ததும் இந்த மங்கை பொண்ணை மறந்தாச்சு இல்ல. நாங்க உங்க வசதிக்கு தகுதியானவங்க இல்லைனு உன் மகன் வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான் சதா. இனிமே நான் இந்த வீட்டுக்கு வரமாட்டேன் உங்ககிட்டயும் பேசமாட்டேன். உன் பையன் எப்படி வாழுறான்னு பார்க்குறேன்” என்று தையா தக்காவென குதித்து சண்டை போட்டுச் சென்றவர்தான் மங்கை.
இப்போது சர்வா மனைவி இல்லாமல் இருப்பது தெரிந்து தன் பெண்ணை இரண்டாம் தாரமாக கொடுப்பதற்கு சதாசிவத்தை பார்க்க வந்துவிட்டார்.
மங்கை பண உதவி செய்யாவிடினும். இறப்பு காரியத்தை முன்நின்ற நடத்த ஆளில்லாமல் இருந்த தருணம் மங்கையும் அவரது கணவரும் உதவி செய்ததை சதாசிவம் மறக்கவில்லை.
மங்கை சதாசிவம் வீட்டுக்கு வந்ததும் “வா மங்கை எப்படி இருக்க. நீ விட்ட சாபம் என் பையன் வாழ்க்கையில் பழிச்சிடுச்சு மங்கை. இப்போ சர்வா பையனோட தனி ஆளா இருக்கான்” என்று கவலைப்பட்டு பேசினார் சதாசிவம்.
“அச்சோ சதா! நான் ஏதோ கோவத்துல பேசிட்டு போயிட்டேன். ஏதோ நம்ம குடும்பம் ஒன்னு சேரணும்னு இருக்கு போல இன்னும் தாரணிக்கு மாப்பிள்ளை அமையல. நம்ம சர்வாக்கு என் பொண்ணை இப்ப கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு கேட்க வந்திருக்கேன். என்ன சொல்ற?” என்றார் சண்டையை மறந்து.
“மங்கை நல்லா யோசிச்சு தானே சர்வாக்கு பொண்ணு கொடுக்க விரும்புற? நாளை பின்ன தாரணி ஏதாவது சர்வா பையன் ஆரவ்வை பார்த்துக்கறதுல குறை வந்துச்சுனா சர்வா வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லக்கூட தயங்க மாட்டான் பார்த்துக்கோ. இரண்டாவது அவன் தாரணி குழந்தை பெத்துக்க கூடாதுனு கண்டிஷன் போட்டிருக்கான். அதையும் முன்கூட்டியே சொல்லிடறேன் என் மேல குறை சொல்லக்கூடாது. அவன் மனசு மாறி குழந்தை பெத்துக்க ஆசை வரவைப்பது தாரணி கையிலதான் இருக்கு மங்கை” என்றார் ஆதங்கமாக சதாசிவம்.
“தாரணி சர்வா மனசை மாத்திடுவா சதா, நீ கவலைப்படாம தாரணிதான் பொண்ணுனு சர்வாகிட்ட பேசு” என்றார் மங்கை .
சர்வாவை மருமகனாகிக்கும் கொள்ளும் சந்தோசத்தில்.
“சரி மங்கை நான் சர்வாகிட்ட பேசுறேன். நீ நைட் இங்கேயே தங்கிட்டு சர்வாகிட்ட கல்யாண விசயம் பேசிட்டு போயேன்” என்றிருந்தார்.
“தாரணி தனியா இருப்பா. நான் வீட்டுக்கு போகணும். நான் போன்ல சர்வா கிட்ட பேசுறேன் சதா” என்று சுப்பையா கொண்டு வந்த காபியை குடித்துவிட்டுச் சென்றார்.
சதாசிவமோ சர்வா தாரணியை ஏற்றுக்கொள்வானா? என்ற யோசனையில் இருந்தவர் சர்வாவுக்கு போன் போட்டார்.
சர்வாவோ வேலையாட்களிடம் அந்த பகுதி எம்.எல்.ஏ வீட்டு விசேஷத்தில் சமைக்கும் மெனுவை பத்தி டிஸ்கஸ் செய்துக் கொண்டிருந்தான்.
“சொல்லுங்க சித்தப்பா” என்றான் சர்வா.
“சர்வா உன் கல்யாண விசயம்” என்று அவர் ஆரம்பிக்க. 
“சித்தப்பா நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன். வீட்டுக்கு வந்ததும் பேசலாம். நான் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட்டாகும் ஸ்கூல் முடியற டைம் ஆச்சு ஆரவ்வை கூட்டிட்டு அஞ்சலியையும் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்க” என்று போனை வைத்துவிட்டான். 
“இந்த பையன் நான் சொல்றதை என்னிக்கு கேட்பானோ தெரியலை” என்று புலம்பிக்கொண்டு ஆரவ்வை கூட்டிவரச் சென்றார் சதாசிவம்.
வினோத் சுப்ரமணியத்தை ஹாஸ்பிட்டல் அழைத்துச் சென்றான். 
சுப்ரமணியனோ “வினோத் எனக்கு எதுக்கு இப்போ செக்கப்? டேப்லட் போட்டதும் வீசிங் நின்னுடுச்சு. சும்மா டாக்டர் பீஸ் தெண்டமா செலவு பண்ணனும். இப்பவும் அதே மாத்திரையைத்தான் எழுதிக்கொடுப்பாரு” என்று சலித்துக்கொண்டு பேசினார்.
“சும்மா பேசாம இருங்கப்பா. அம்மாவைத்தான் என்னால காப்பாத்தி என்கூட வச்சுக்க முடியாம போச்சு. இப்ப எனக்குனு இருக்கறது நீங்க மட்டும் தான். உங்களையாவது நான் பத்திரமா பார்த்துக்கணும்ப்பா” என்று உருக்கமாக பேசிய வினோத்தின் கண்கள் கலங்கியது.
அதற்குள் சுப்ரமணியத்தை டாக்டர் அறைக்குள் போகச் சொன்னார் நர்ஸ்.
சுப்ரமணியத்தை செக் பண்ணிவிட்டு “நேத்து என்ன வேலை செய்தீங்க? டஸ்ட் அலர்ஜி ஆகியிருக்கு” என்றார் அவரது நாடியை செக் பண்ணிக்கொண்டே.
சுப்ரமணியமோ “தீபாவளி வருதுல கொஞ்சம் வீட்ல ஒட்டடை அடிச்சேன் டாக்டர் மூக்குல துணி கட்டிக்கிட்டுதான் அடிச்சேன்” என்று தயங்கியபடி பேசினார்.
“என்ன சுப்ரமணியம் நான் சொல்லியிருக்கேன்ல வீட்ல ஒட்டடை எதுவும் அடிக்கக்கூடாது. நான் சொல்லியும் நீங்க செய்திருக்கீங்க” என்றார் கண்டிக்கும் குரலில்.
வினோத் சுப்ரமணியத்தை முறைத்தான். 
சுப்ரமணியமோ “இனிமேல் இந்த வேலை செய்ய மாட்டேன் டாக்டர்” என்றார்.
“உங்க பையன் காலையிலிருந்து இரண்டு டைம் எனக்கு போன் போட்டு அப்பாவுக்கு ரொம்ப வீசிங் அதிகமாக இருக்குனு பதறி பேசுறாரு. நீங்க அசால்ட்டா பதில் சொல்றீங்க சுப்ரமணி. இனி எந்த வேலையும் செய்யாம இருக்க பாருங்க” என்று அறிவுரை கூறி மாத்திரைகளை எழுதிக்கொடுத்தார்.
“நான் ஆபிஸுக்கு போனதும் இவர் வீட்டுல வேலையை ஆரம்பிச்சுடுறாரு டாக்டர். இனி நான் கவனமாக பார்த்துக்குறேன்” என்ற வினோத் மாத்திரை சீட்டை வாங்கிக்கொண்டு சுப்ரமணியத்தை வெளியே கூட்டி வந்தவன் பார்மஸியில் மருந்து வாங்கிக்கொண்டு காரில் ஏறும் வரை தந்தையிடம் பேசவேயில்லை வினோத்.
“வினோ என்கிட்ட பேசாம இருக்காதப்பா. நான் இனிமே டஸ்ட் கீளின் பண்ண மாட்டேன்” என்றார் பாவமாக முகத்தை வைத்து.
“இனிமேல இதுபோல ஏதாவது கிறுக்குத்தனமா வேலை செய்தீங்க நான் கண்டபடி திட்டிடுவேன்பா. எனக்கு  நீங்க ரொம்பநாள்  என்கூட இருக்கணும். என் பையனை நீங்கதான் வளர்த்துவிடணும்” என்றான் கண்ணீருடன்.
“சரி வினோத்” என்றவர் வினோத்தை அணைத்துக்கொண்டார்.
சுப்ரமணியத்தை வீட்டில் விட்டு ஆபிஸிற்குச் சென்றான் வினோத்.
வினோத் சர்வாவின் அறைக்கு வந்ததும் அவனிடம் எம்.எல்.ஏ வீட்டுச் விசேஷத்திற்கு என்ன என்ன மெனு செய்யணும் என்றும் ஃபுட் குவாலிட்டியா இருப்பது பற்றியும் எத்தனை வகை ஸ்வீட், எத்தனை காரம் வைக்கணும் என்று எழுதி வினோத்திடம் கொடுத்தவன்,
“எம்.எல்.ஏ வீட்டு விசேஷத்தில் நம்ம சாப்பாட்டை சாப்பிட்டு யார் சமையல் கேட்டரிங்னு கேட்கணும். நம்ம குழம்பு டேஸ்ட் அவங்க நாக்குல வீட்டுக்கு போற வரை இருக்கணும். நீதான் வினோத் முன்ன நின்னு பார்த்துக்கணும்” என்று கட்டளை போட்டான் சர்வா.
“ஓ.கே சார் நான் பார்த்துக்குறேன் ஜமாய்ச்சுடலாம்” என்று தம்ஸப் காட்டினான் புன்னகையுடன்.
“வினோத் உன்னை வீட்ல ட்ராப் பண்ணிட்டு போறேன்” என்று எழுந்தவனுக்கு போன் வந்தது. 
“இதோ நான் வந்துடறேன்” என்றவன் “வினோ சீக்கிரம் வா போகலாம்” என்று கார் கீயை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினான். 
வினோத்தும் “என்னாச்சு சார் ஏன் இவ்ளோ பதட்டம்?” என்று காரில் ஏறினான்.
“சொல்றேன்” என்றவனின் கையில் கார் சீறிப் பாய்ந்தது.
காலையில் இன்டர்வியூ அட்டண்ட் செய்து விட்டு போன அமுதினியை கண்காணிக்க சொல்லியிருந்தான் சர்வா தன் ஆட்களிடம். 
அமுதினியை காரில் துரத்துகிறார்கள் என்று சொன்னதும் பறந்து விட்டான் சர்வா. 
சர்வாவிற்கு அவந்திகாவை பார்த்ததும் அவனுக்கு நெஞ்சில் ஏதோ இனம் புரியாத பாச உணர்வு வந்துவிட்டது. 
அமுதினி கீழே விழுந்தவள் அவந்திகாவின் தலை கீழே விழாமல் நெஞ்சில் சாய்த்துக்கொண்டாள். அமுதினியின் பின் மண்டையில் அடிப்பட்டது இரத்தமும் வந்துவிட்டது. வலியும் உயிர் போனது அமுதினிக்கு வலி ஒரு பக்கம் இருந்தாலும் குழந்தையை தடியன்கள் ஏதும் செய்து விடக்கூடாதென பலத்தை திரட்டி எழுந்து நடக்க ஆரம்பித்தாள். 
தடியன்கள் காரை நிறுத்தி வருவதற்குள் நடந்துக் கொண்டிருந்தாள். அவந்திகாவோ பயந்து நடுங்கி அமுதினியின் கழுத்தை கட்டிக்கொண்டது.
அமுதினிக்கு கண்கள் கிறுகிறுவென இருட்டிக்கொண்டு வந்தது. நடக்க முடியாமல் மயங்கி விழுந்தாள். அவந்திகாவும் கீழே விழுந்து முழங்கையில் சரிந்து விட்டு லேசாக இரத்தமும் கசிந்தது. குழந்தையோ மயங்கி கீழே படுத்திருக்கும் அமுதினியின் கன்னத்தை தட்டி தட்டி “அம்மா எழும்புமா அந்த தடியன் வந்துட்டான் நம்மளை கொன்னுடுவாங்க” என்று அழுதது.
இரண்டு தடியன்களும் அமுதினியின் அருகே வந்தவர்கள் “ஏய் குட்டி சாத்தான் உன்னை கடத்துவதற்குள் என் உசிரை வாங்கிட்ட” என்று அவந்திகாவை கையை பிடித்து தூக்கினர்.
“அச்சோ டேய் என்னை விடுங்கடா. என் அம்மாக்கிட்ட நான் போகணும்” என்று கதறியது. 
குழந்தை கதறியது அமுதினியின் காதில் விழுந்தாலும் அவளால் எழும்ப முடியாமல் படுத்துக்கிடந்தாள். இரத்தம் வேறு மண்டையிலிருந்து வழிந்துக் கொண்டிருந்தது.
ஒரு தடியனோ “இந்த குட்டிப்பிசாசை இங்கயே போட்டுடலாமா?” என்று அவந்திகாவின் கழுத்தை பிடிக்க போனான்.
அவந்திகாவோ தடியனின் கையை கடித்து வைத்து அவனிடமிருந்து நழுவி ஓடியது.
“ஏய் ஓடுறியா நீ” என்று இரண்டு தடியன்களும் அவந்திகாவை துரத்தினர்.
அவந்திகாவோ மூச்சு வாங்க ஓடியது. சர்வா அவந்திகா ஓடி வருவதை பார்த்துவிட்டான். 
“வினோ காலையில நம்ம ஆபிஸ் வந்துச்சுல அந்த பாப்பா” என்று பதறியவன் காரை வேகமாக அவந்திகாவின் அருகே ஓட்டிச் சென்றான்.
அவந்திகா தன்மீது கார் ஏறி விடுமோ என்ற பயத்தில் “அம்மாஆஆ” என்று சத்தம் போட்டு மயங்கியது. 
தாய் ஒரு பக்கம் மகள் ஒரு பக்கம் மயங்கிக்கிடந்தனர்.
சர்வா காரிலிருந்து இறங்கும் போதே கையில் தண்ணீர் பாட்டிலுடன்தான் இறங்கி வந்தான்.
அவந்திகா பயத்தில்தான் மயங்கியிருந்து. குழந்தையை மடியில் படுக்க வைத்து தண்ணீர் பாட்டிலை எடுத்து அவந்திகாவின் முகத்தில் தெளித்தான். 
சின்ன குட்டியோ எங்கே அந்த தடியன்கள் கையில் மாட்டி விட்டோமே என்று பயந்து முயல் குட்டி போல கண்ணைத் திறந்து பார்த்தது. 
சர்வா என்று தெரிந்ததும் “அ…அங்கிள் எ…எங்களை காப்பாத்துங்க. எங்க அம்மா அங்க மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க” என்று பயத்துடன் தடுமாறி பேசியது.
“அங்கிள் வந்துட்டேன் பாப்பா உன்னை யாரும் தொட விடமாட்டேன்” என்று நெஞ்சோடு சாய்த்துக்கொண்டான். குழந்தை நெஞ்சுக்கூடு பயத்தில் ஏறி இறங்கியது. முதுகில் தட்டிக்கொடுத்துக்கொண்டே இருந்தான் சர்வா.
தடியன்கள் சர்வாவை பார்த்ததும் “டேய் யாருடா நீங்க? எங்க கிட்ட அந்த பாப்பாவை கொடுத்துடுங்க. இல்லைனா உங்களுக்குத்தான் ஆபத்து” என்று மிரட்டினார்கள்.
“வினோத் நீ அந்த பொண்ணை தூக்கிட்டு வா இவனுங்களுக்கு பாடம் புகட்டுறேன்” என்று சீற்றமாக பேசியவன் “பாப்பா நீ கொஞ்ச நேரம் காருக்குள்ள இரு” என்று அவந்திகாவை காரில் உட்கார வைத்துவிட்டு இரண்டு தடியன்களையும் அடி வெளுத்து வாங்கி விட்டான். இருவரது உதடுகளும் பிய்ந்து தொங்கியது. 
ஒருவனது நெஞ்சில் காலை தூக்கி வைத்து “யாருடா உங்களை குழந்தையை கடத்த சொல்லி அனுப்பினது?” என்று சிங்கமாக கர்ஜித்தான்.
சர்வா அடித்த அடி தாங்காமல் “சார் சார் எங்களை விட்டிருங்க ப்ளீஸ் எங்களுக்கு குழந்தையோட போட்டோவை மட்டும் அனுப்பி கடத்திட்டு வரச்சொன்னாங்க. அது மட்டும்தான் எங்களுக்கு தெரியும்” என கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினான்.
“உங்க போனை கொடுங்கடா” என்று அவர்களிடமிருந்து போனை வாங்கி கொஞ்சம் முன்னே பேசின நம்பருக்கு போன் போட்டான். சுவிட்ச் ஆப் என்றே வந்தது. 
“ச்சே” என்று போனை தூக்கிப்போட்டு உடைத்தான் சர்வா.
அந்த தடியன்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை கேட்டு தெரிந்தவன் “நாளைக்கு நீங்க ரெண்டு  பேரும் என்னை வந்து பார்க்கணும். உங்களை என் ஆளுங்க கண்காணித்துக்கொண்டே தான் இருப்பாங்க. என்கிட்டயிருந்து தப்பிச்சு போகணும்னு நினைச்சீங்க தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை” என்று விரல் நீட்டி மிரட்டியிருந்தான்.
“சார் சார் நாங்க எங்கயும் போக மாட்டோம் கட்டு கட்டா பணம் தந்ததும் ஆசைப்பட்டு குழந்தையை கடத்த நினைச்சோம்” தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஜகா வாங்கினர்.
அமுதினியை வினோத் தூக்கிக்கொண்டு வந்து காரில் படுக்க வைத்தவன் “சார் அந்த பொண்ணுக்கு கான்ஷியஸ் இல்ல சீக்கிரம் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகலாம்” என்றான் பதட்டத்துடன் வினோத்.
மயங்கி கிடக்கும் அமுதினியை பார்த்த அவந்திகா “அம்மா எழுந்திரு. அங்கிள், அம்மா தலையில ரத்தம் வருது” என்று அழுக ஆரம்பித்தது.
அவந்திகாவை தூக்கிக்கொண்ட சர்வாவோ “அம்மாவை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய் ஊசி போட்டோம்னா எழுந்திடுவாங்க குட்டி நீ அழாத” என்று நெற்றியில் முத்தம் கொடுத்தான்.
“வினோ நீ காரை எடு” என்றவன் அமுதினியின் பக்கம் ஏறி உட்கார்ந்தான். 
‘யார் இந்த பெண்ணும் இந்த குழந்தையும் நான் ஏன் இவர்களுக்கு உதவி செய்கிறேன்?’ என்று தெரியாமல் தனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தான் சர்வா.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *